நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிம்மதியென்னும் வெளிச்சத்தில்.


கடந்தவைகளில்
கசப்பானவைகளை கடத்திவிடு
மனதைவிட்டு வெகு தூரம்

நடந்தவைகளில்
கெட்டதைதவிர நினைத்துக்கொண்டிரு
நெஞ்சின் ஒரு ஓரம்

நாட்களில் ஏதுமில்லை
நல்ல நாள்
கெட்ட நாளென்று

நேரத்தில் ஏதுமில்லை
நல்ல நேரம்
கெட்ட நேரமென்று

எல்லா நாட்களும்
நல்ல நாட்களே!
என்றெண்ணும் மனமிருந்தால்

எல்லா நேரமும்
நல்ல நேரமே!
என்றெண்ணும் தெளிவிருந்தால்

எந்நாளும் பொன்னாளே
எந்நேரம் பொன்னேரமே

விடியும் ஒவ்வொரு பொழுதிலும்
வெளிச்சமுண்டாகி
இருளகற்றுவதுபோல்

இப்பிரபஞ்சத்திலுள்ள
இதயங்களனைத்தும்
புதிதாய் பிறக்கும்

ஒவ்வொரு பொழுதும்
நிலவு ததும்பும் 
நீரோடையாகட்டும்
 
நாளும் பொழுதும்
நிம்மதியென்னும் வெளிச்சத்தில்
நீராடட்டும்...

டிஸ்கி// வீண்விரயமானகும் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்த்து.எந்நாளும் மனம் மகிழ்ச்சியில்  திழைக்கவும்.  நிம்மதிகள் தழைக்கவும்.நாடு நலம் பெறவும். நல்லவர்கள் பெருகவும். வறுமைகள் நீங்கவும். வருமானம் செழிக்கவும்.  மனமுருகி இறைவனிடம் வேண்டுங்கள்.
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

26 கருத்துகள்:

  1. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. எழுச்சியூட்டும் பதிவாக புத்தாண்டு சிறப்புப் பதிவை
    தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டு புது முகப்பு வரைவும் கவியும் நன்று.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  4. புத்தாண்டு வாழ்த்துகள் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  5. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  6. எந்நாளும் பொன்னாளே
    எந்நேரம் பொன்னேரமே


    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. I would like to say
    to each and everyone of you.
    For the impact you had in my life
    Specially for those who sent me email,
    To those who need friends,
    May you meet someone who will also
    enrich your life.

    To those who need life,
    May you find God.
    You have enriched my year!!

    In the name of Allah The most Gracious The most Merciful!
    Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
    Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.
    http://seasonsali.blogspot.com/2011/12/bye-bye-2011-welcome-2012.html

    பதிலளிநீக்கு
  8. எல்லோரும்...
    எல்லாமும்
    இவ்வாண்டு அளவோடு பெற்று...!
    நலமோடும்...!
    வளமோடும்....! வாழ்க...! என்ற
    வாழ்த்துக்களுடன்....

    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்...!

    "என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"....!

    பதிலளிநீக்கு
  9. //மகேந்திரன் கூறியது...

    பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

    அன்பான கருதுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ..

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  10. Ramani கூறியது...

    எழுச்சியூட்டும் பதிவாக புத்தாண்டு சிறப்புப் பதிவை
    தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

    அன்பான கருதுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா..

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரவாணி கூறியது...

    புத்தாண்டு புது முகப்பு வரைவும் கவியும் நன்று.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !//

    வாங்க ராணி.தங்களின் அன்பான கருதுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  12. ராமலக்ஷ்மி கூறியது...

    புத்தாண்டு வாழ்த்துகள் மலிக்கா.//

    வாங்க மேடம்

    //asiya omar கூறியது...

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மலிக்கா.//
    \
    வாங்கக்கா.
    தங்களின் அன்பான கருதுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  13. //Lakshmi கூறியது...

    எந்நாளும் பொன்னாளே
    எந்நேரம் பொன்னேரமே


    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//

    வாங்கம்மா.
    தங்களின் அன்பான கருதுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  14. // nidurali கூறியது...//

    வாங்க வாப்பா.
    அருமையான கருத்துகள் வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  15. காஞ்சி முரளி கூறியது...

    எல்லோரும்...
    எல்லாமும்
    இவ்வாண்டு அளவோடு பெற்று...!
    நலமோடும்...!
    வளமோடும்....! வாழ்க...! என்ற
    வாழ்த்துக்களுடன்....

    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்...!

    "என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"....!//

    வாங்க சகோ
    அன்பான கருத்துகளுக்குநெஞ்சார்ந்த நன்றிகள் ..

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  16. அருமையானக் கவிதை இது அற்புதத்தை கருக் கொண்டதால்!
    அழகியக் கவிதை இது அறிவை பிரசவித்ததால்!
    மகாகவியின் சிந்தனை மகத்துவமான படிப்பினை...
    அருமை! அருமை!! அருமை!!! சகோதிரி...

    பதிலளிநீக்கு
  17. ''..கடந்தவைகளில்
    கசப்பானவைகளை கடத்திவிடு ..''

    போன்ற நல்ல கருத்துக்களுடை வரிகள் இனிய புத்தாண்டுடன் நிறைவான வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும். இங்கு பல தடவை வந்து கருத்துகளிட்டேன். இரு கரங்களும் சேர்ந்து தட்டினாற் தானே இனிய இசை எழும்!!!.... மௌனமாகி விட்டேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  18. அருமையான பொருளைக் கொண்ட கவிதையை தந்தமைக்கு வாழ்த்துகள்.கருத்தில் நல்லது கெட்டது இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தில் நல்ல நாள் கெட்ட நாள் கிடையாது. மூட நம்பிகையை விடுத்து அனைத்தும் இறைவன் நாட்டப் படிதான் நடக்கும் என்ற நம்பிகயுடன் நமது செயலில் ஈடுபட வேண்டும், "Tie your camel first, then put your trust in Allah" (At-Tirmidhi) அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். அதி காலை fazar தொழுபவருக்கு அனைத்தும் நல்ல நாட்களே .
    அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். (ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன.

    அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி)
    நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.

    பதிலளிநீக்கு
  19. தமிழ் விரும்பி கூறியது...

    அருமையானக் கவிதை இது அற்புதத்தை கருக் கொண்டதால்!
    அழகியக் கவிதை இது அறிவை பிரசவித்ததால்!
    மகாகவியின் சிந்தனை மகத்துவமான படிப்பினை...
    அருமை! அருமை!! அருமை!!! சகோதிரி...//

    வாங்க தமிழ்விரும்பி. உங்களின் தமிழ்விரும்பி பெயர்தான் என்னை உங்கள்தளத்திற்கு வரவழைத்தது.

    எந்தளதிற்க்கு வந்தமைக்கும்.
    என் கவிதையை உணர்ந்து அதன் கருத்துகளை அழகிய கருத்துகளால் கருதிட்டமைக்கும். நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  20. kavithai (kovaikkavi) கூறியது...

    ''..கடந்தவைகளில்
    கசப்பானவைகளை கடத்திவிடு ..''

    போன்ற நல்ல கருத்துக்களுடை வரிகள் இனிய புத்தாண்டுடன் நிறைவான வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும். இங்கு பல தடவை வந்து கருத்துகளிட்டேன். இரு கரங்களும் சேர்ந்து தட்டினாற் தானே இனிய இசை எழும்!!!.... மௌனமாகி விட்டேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com//
    வாங்க சகோதரி தங்களின் அன்பான கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இனி இருகைதட்டி ஓசை எழுப்புவோம்...

    உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  21. nidurali கூறியது...

    அருமையான பொருளைக் கொண்ட கவிதையை தந்தமைக்கு வாழ்த்துகள்.//


    மிக்க சந்தோஷம் வாப்பா

    //கருத்தில் நல்லது கெட்டது இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தில் நல்ல நாள் கெட்ட நாள் கிடையாது. மூட நம்பிகையை விடுத்து அனைத்தும் இறைவன் நாட்டப் படிதான் நடக்கும் என்ற நம்பிகயுடன் நமது செயலில் ஈடுபட வேண்டும், "//

    உண்மைதான்
    எந்நாளும் பொன்னாளே
    எந்நேரமும் பொன்னேரமே!

    பதிலளிநீக்கு
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :-)

    பதிலளிநீக்கு
  23. கடைசியா ஒரு ஆளு

    கருத்துரை போட்டிருக்காரே..?

    யாரு அவிங்க...!

    எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே..! அவர் பேர கேள்விப்பட்ட மாதிரி இருக்கே...!

    பதிலளிநீக்கு
  24. //கடைசியா ஒரு ஆளு

    கருத்துரை போட்டிருக்காரே..?

    யாரு அவிங்க...!

    எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே..! அவர் பேர கேள்விப்பட்ட மாதிரி இருக்கே...! //


    ஆமாங்க பார்த்தாலே பயமா இருக்கு கூடவே யானையும் தெரியுதே அவ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  25. அன்பு வாழ்த்துகள் மல்லிக்கா.கவிதை எப்போதும் உங்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது தோழி !

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது