நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கள்ள உள்ளம்.



குயிலின் கூட்டில்
கள்ளத்தனமாய்
கருநாகம் குடியேறி
குடிலை கலைக்க நினைக்கிறது

வீதியில் செல்வோரை 
வேசியென வாய்கூசாமல் ஏசி
வேடதாரிகளாய்
வெளிவேசம் போட்டுத் திரிகிறது

கழிசடையெல்லாம்
சாக்கடையில் ஓடாமல்
கள்ள உள்ளம் கொண்ட மனதுக்குள்
கரைபுரண்டு ஓடுகிறது

வாழை வீழ்ந்தாலும்
தன் வம்சம் தளைக்க 
தன் வாழையடியை
விட்டுச்செல்கிறது

”ஆனால்”

பச்சோந்திகளாகும் மனங்கள்
தன் வாழ்க்கையை நிறம் மாற்றி
தன் வம்சத்தின் வாழ்வுக்கும்
பழிச்சாயம் பூசுகிறது.


அற்பங்களுக்கு ஆசைப்பட்டு
அடுத்தவர் வாழ்வையும் கெடுத்து
தட்டுக் கெட்டு தடுமாறி
தன் வாழ்வை
தானே சூன்யமாக்கிக் கொள்கிறது

மாற்றாளின் கணவனை
மயக்கும் மனைவியாய்!
மாற்றானின் மனைவிக்கு
மயங்கும் கணவனாய்!..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

17 கருத்துகள்:

  1. கோபத்தின் உக்கிரம்
    வரிகளில்...!
    வரிகளின் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது...!
    எடுத்துக்காட்டு... //கழிசடையெல்லாம் சாக்கடையில் ஓடாமல் கள்ள உள்ளம் கொண்ட மனதுக்குள்கரைபுரண்டு ஓடுகிறது///


    ஏதோ ஓர் நிகழ்வு...!
    உள்ளுணர்வை
    உலுக்கியதால்
    உருவான
    "உக்கிரத்தின் உச்ச வரிகள்"...!

    cooldown..! கவிஞரே...!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் உணர்ச்சிக் கொப்பளிப்புடன் கூடிய அருமையான கவிதை.

    [7/11/2011 முதல் 13/11/2011 வரை தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக ஆக்கியுள்ளார்கள். தினமும் காலை 11 மணிக்கு ஒரு புதிய வெளியீடும், மதியம் 3 மீள் பதிவுகளும் வெளியிட்டு வருகிறேன். முடிந்தால் வாருங்கள்]

    gopu1949.blogspot.com

    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post.html

    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_7307.html


    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  3. தனிமனித ஒழுக்கமும்,கட்டுப்பாடும்
    தன்னிடத்திலிருந்து
    தகர்ந்து போனதால்...!
    தகர்க்கப்பட்டாதால்...!

    தான்தோன்றித்தனமாய் நடந்து
    தானும் சிதைந்து...!
    தன் சமூகத்தையும் சிதைத்து...!
    "பாவப் பிண்டமாய்" உலவும்
    உயிரழந்த உடல்கள்...!

    பதிலளிநீக்கு
  4. அற்பங்களுக்கு ஆசைப்பட்டு
    அடுத்தவர் வாழ்வையும் கெடுத்து
    தட்டுக் கெட்டு தடுமாறி
    தன் வாழ்வை
    தானே சூன்யமாக்கிக் கொள்கிறது//சாட்டையடி வரிகள்!

    பதிலளிநீக்கு
  5. //ஏதோ ஓர் நிகழ்வு...!
    உள்ளுணர்வை
    உலுக்கியதால்
    உருவான
    "உக்கிரத்தின் உச்ச வரிகள்"...!

    cooldown..! கவிஞரே...!//

    வாங்க புலவரே வாங்க. கூல் டவுன் ஆகதான் நினைக்கிறது ஆனாலிந்த உலக நடப்புகள் பல டவுனிலும் டவுனாகிக்கொண்டே போவதால் கூல் ஏனோ டவுனாக மறுகிறது.

    அச்சோ அச்சச்சோ இது மாய உலகமல்ல மனிதர்கள் பல மலிந்த உலகம்.

    பதிலளிநீக்கு
  6. VANJOOR கூறியது...

    இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

    கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.//

    இறைவன் நாடினால் அனைத்தும் வெற்றியாகும்..

    பதிலளிநீக்கு
  7. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    மிகவும் உணர்ச்சிக் கொப்பளிப்புடன் கூடிய அருமையான கவிதை.

    [7/11/2011 முதல் 13/11/2011 வரை தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக ஆக்கியுள்ளார்கள். தினமும் காலை 11 மணிக்கு ஒரு புதிய வெளியீடும், மதியம் 3 மீள் பதிவுகளும் வெளியிட்டு வருகிறேன். முடிந்தால் வாருங்கள்]//

    வாங்க அய்யா. முதலில் தாங்கள் நட்சத்திரப்பதிவராக ஆனதற்க்கு வாழ்த்துகள்.. தங்களின் தொடர் வருமையும் கருத்துகளும் ஊக்கமடைச்செய்கின்றன. நேரம்கிடைகும்போது நிச்சயம் வருகிறேன் அசத்துங்க உங்க நடையில்.

    பதிலளிநீக்கு
  8. அன்பு சகோதரிக்கு ...சமூகத்தின் மீதுள்ள கோபம் ...எழுத்துக்கள் ...உங்கள் வசப்பட்டு ..கவிதையாய் !
    தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டு இருக்கும் போது ..அதில் கழிவு நீரை கலந்து ..சாக்கடையாய் மாற்றுபவர்கள் நம் பூமியில் ஏராளம் ஏராளம் ..!

    அழகு தங்கையே ...!

    பதிலளிநீக்கு
  9. காஞ்சி முரளி கூறியது...

    தனிமனித ஒழுக்கமும்,கட்டுப்பாடும்
    தன்னிடத்திலிருந்து
    தகர்ந்து போனதால்...!
    தகர்க்கப்பட்டாதால்...!

    தான்தோன்றித்தனமாய் நடந்து
    தானும் சிதைந்து...!
    தன் சமூகத்தையும் சிதைத்து...!
    "பாவப் பிண்டமாய்" உலவும்
    உயிரழந்த உடல்கள்...!//

    அருமையான் அகருதுகள் அடங்கிய கவிதை சகோ.

    தனிமனித ஒழுக்கம் அதெல்லாம் தகர்ந்துபோய்விடுமோ என்ற
    அச்சம் அடிநெஞ்சுக்குள்
    அமிலத்தை சுரக்கவைக்கிறது..

    பதிலளிநீக்கு
  10. ஸாதிகா கூறியது...

    அற்பங்களுக்கு ஆசைப்பட்டு
    அடுத்தவர் வாழ்வையும் கெடுத்து
    தட்டுக் கெட்டு தடுமாறி
    தன் வாழ்வை
    தானே சூன்யமாக்கிக் கொள்கிறது//சாட்டையடி வரிகள்!//

    வாங்கக்கா நலமா? நாம சாட்டையடி கொடுத்தாலும் சவுக்கடி கொடுத்தாலும் சொரணையற்ற உள்ளத்துக்கு சூடுகள்கூட வலிக்காதுக்கா..

    பதிலளிநீக்கு
  11. ஒப்பிலான் பாலு கூறியது...

    அன்பு சகோதரிக்கு ...சமூகத்தின் மீதுள்ள கோபம் ...எழுத்துக்கள் ...உங்கள் வசப்பட்டு ..கவிதையாய் !
    தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டு இருக்கும் போது ..அதில் கழிவு நீரை கலந்து ..சாக்கடையாய் மாற்றுபவர்கள் நம் பூமியில் ஏராளம் ஏராளம் ..!

    அழகு தங்கையே ...!//

    வாங்க பாலுண்ணா வாங்க என் எண்ண ஓடைக்குள் நீராட வந்தமைக்கு மகிழ்ச்சி.

    சமூகத்தின் மீது சாயங்கள் பூசி சந்தனத்தைக்கூட சகதியாய்
    மாற்றநினைக்கும் மனங்களும் ஏராளம். சாக்கடையக்கூட சந்தனமென நினைக்கும் மனங்கள் தாராளம்.

    தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா...

    பதிலளிநீக்கு
  12. உணர்ச்சிக் கொப்பளிப்புடன் கூடிய அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  13. உறவுகளின் உன்னதம் தெரியாத
    புல்லுருவிகளின் கள்ள உள்ளத்தை
    கூறு போட்டு நடை பாதையில்
    கிடக்கும் கிழிந்து போன கந்தல் துணிக்கு சமம் என்று
    துச்சமாக்கி விட்டீர்கள்...
    வார்த்தைகளின் வேகம்...
    அப்பப்பா ...
    கவியை படித்து முடித்ததும்..
    மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி வேகம்
    இப்படி யாரையாவது கண்டால்
    கொளுத்தி விடனும் என்று...

    நன்று நன்று..
    நன்று சகோதரி..

    பதிலளிநீக்கு
  14. M .இராஜேந்திரன்10 நவம்பர், 2011 அன்று AM 10:53

    கழிசடையெல்லாம்
    சாக்கடையில் ஓடாமல்
    கள்ள உள்ளம் கொண்ட மனதுக்குள்
    கரைபுரண்டு ஓடுகிறது//

    அப்பப்பா வார்த்தைகளின் நெருப்பு இப்படியாப்படவர் நெஞ்சை சுட்டுப்பொசுக்கும்.
    கள்ளம் உள்ளம் கொண்டமனங்கள் ஏரளம் பெருகிவருகிறது. காலத்தின் கோலமோ யார் செய்த சாபமோ.

    கவிதையை இன்னும் கொஞ்சம் நீண்டி கள்ளமனதுக்கு சூடுவச்சிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.

    இருந்தாலும் மிக அருமை.வாழ்த்துகள்,,

    இப்பவெல்லாம் வேசிகளே அடுதவர்களை வேசி எனசொவது ஈசியாகிவிட்டதுங்க .அதன் பேஷனாம்..

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை .
    உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை அருவியில் நீராடி உள்ளம் உவகையடைந்தேன். காவியம் படைக்கும் கவிதை.
    சிந்தனையின் சிறப்பு மனதை நெகிழ வைக்கும் ஆற்றல் கொண்டது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது