நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொசு[ங்]க்காதே!


பெண்ணுக்கு பெண்ணே
பேரெதிரியாகுமோ!
பொல்லாத பொறாமையால்
பூமியே புதைந்து போகுமோ!

பொருமைக் கடலென்றும்!
பூமித் தாயென்றும்!
சாந்த சொரூபமென்றும்!
சர்வமே நீயென்றும்!

சொல்லிச் சொல்லியே
சாந்தமான நீ
சர்வதிகாரியாகிறாயோ!-பிறரை
சந்தியில் நிறுத்தப்போகிறாயோ!

வீசுதடி விசக்காற்று-உன்
வார்த்தைகளில் வீரியத்தில்
குத்திக்காட்டல் வழியாக!
குடும்பம் குலைக்கும் கருவியாக!
வழியசென்று வம்பிழுக்கும்
வரைமுறையற்ற பேச்சாக!

உள்ளம் கொல்லும் விசக்காற்று
வளைத்து வளைத்து வீசுதடி!
ஊதலில்லாமல் பரவிப் பரவி
உலகையே அழிக்க நினைக்குதடி!

உன்னிணத்தை எப்போதும்
எண்ணனுமோ எதிரியாக
எண்ணிவிட்டு இருந்திடுமோ
உன்னுள்ளம் அமைதியாக!
பொல்லாத பெண்மையாக
பூமியில் வாழனுமா?
பூவோடு நாரும் சேர்ந்து
பொழுதுக்கும் மணக்கனுமா?

பொசுங்காதே பொறாமையில்
பொசுக்காதே பிறைரை தீயில்...

டிஸ்கி// இதை அப்படியே ஆணினத்துக்கும்[அதாவது ஆண்பாலுக்கும்] மாற்றிக்கொள்ளலாம். 
நாங்களெல்லாம் நல்லபிள்ளைங்கப்பா அப்படியெல்லாம் சொன்னா யாரும் நம்பமாட்டாங்கப்பா ஹா ஹா]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

 1. ஹாஹா நல்லவரிகள் விசக்காற்று நெடி அதீதமாக இல்லாவிட்டாலும்.... கந்தகக்காற்றுபோல் ஒரு நெடி..

  ஆமா அதென்ன ஆண்பாலுக்கும் ஹாஹா இது தான் லொல்லு ஃபாக்டரி-யா?

  அஃதெல்லாம் முடியாது இது பெண்பாலுக்குத்தான்..! ஹாஹா நல்ல கவிதை...!

  வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 2. உன்னிணத்தை எப்போதும்
  எண்ணனுமோ எதியாக
  எண்ணிவிட்டு இருந்திடுமோ
  உன்னுள்ளம் அமைதியாக!

  -மிக அருமையான வரிகள். மாமனார் மருமகன் சண்டை எங்காவது கேள்விப் பட்டிருக்கீங்களா... நாங்கல்லாம் நல்லவிங்கல்ல... எங்களுக்கு இது இல்ல... நல்ல கவிதை சிஸ்...

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள் அக்கா..
  ஆமா அதெப்படி இத ஆண்பாலுக்கு பொருத்த முடியும். இது 100% பெண்களுக்குதான் பெண்களுக்குத்தான். ஆண்கள் ஆண்களை ஆண் இனத்தை எதிரியா பார்க்கிறார்களா.? அடக்கி ஆளனும்ன்னு நெனைக்கிறாங்களா. இல்லைல பெண்கள்தானே அப்படி இருக்காங்க எகா-- வரதட்சணை. (ஹிஹிஹி எப்படி போட்டோம் லாக்கு, இப்ப சொல்லுங்க இது பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும்)

  பதிலளிநீக்கு
 4. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  பதிலளிநீக்கு
 5. உள்ளம் கொல்லும் விசக்காற்று
  வளைத்து வளைத்து வீசுதடி!
  ஊதலில்லாமல் பரவிப் பரவி
  உலகையே அழிக்க நினைக்குதடி!//

  suuppar
  ellaam ungkalaal varum vinaikalthaan engkaLaal summa ithellaam varaathungkoo..

  aanaalum kavithai pinniddiingka.pennaaka irunthukondu pennukkee paadamaa adi thuul

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது