நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!
மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!
இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!
இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே!

[மீண்டும் மீண்டும்]
ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும்
அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்!
ஆதி அந்தம் அனைத்தும் படைத்து பாது காப்பவன்
அணுவுமெங்கும்  அசையாது அவன் துணையு மின்றியும்!

[மீண்டும் மீண்டும்]
இறைவன் சொன்ன வாக்குகளை பற்றிப்பிடிக்கவே
இருதயத்தின் குருதி முழுதும் எழுச்சி பெருகுதே!
இன்னல் இன்பம் இரண்டுங்கொண்டு  வாழ்ந்தபோதிலும்
இடைவிடாது இறையை என்றும் வணங்க வேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
ஈகையென்னும் கொடைகொடுத்து ஏற்றம் காணவே
இரக்கமென்னும் இனியகுணம் நமக்கு வேண்டுமே!
உதவும் மனம் உள்ளிருந்து ஊற்றெடுக்கவே
ஏழை எளியோரை அன்புகொண்டு அணைக்கவேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
உயிரிருக்கும் வரைக்கும் எந்தன் உடலும் துடிக்குமே
அந்த ஒருவனையே நினைக்கச்சொல்லி உயிரும் உருகுமே!
உலகம் அழியும் நாள்வரைக்கும் உயிர்கள் தழைக்குமே
அந்த உயிர்களனைத்தும் அவனிடத்தில் திரும்பச் செல்லுமே!

[மீண்டும் மீண்டும்]
இம்மை வாழ்வில் நாமும் செய்த செயல்கள் யாவுமே
இறுதி நாளில் நேரெதிரில் நிறுத்தப் படுமே!
இனிய மார்க்கம் தந்த எங்கள் இறுதி நபியையும்-எங்கள்
இதயங்களும் கண்களும்தான் காணத் துடிக்குமே!

[மீண்டும் மீண்டும்]
அண்ணல்நபி தரிசனத்தை இம்மை மறுமையில்
அடைந்திடவே ஆவல் கொண்டு உள்ளம் ஏங்குதே!
அகிலம் படைத்து அனைத்தும் படைத்து காக்கும் இறைவனே
அந்த ஆவல்களை நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!

தரவும் வேண்டுமே!  
நிச்சயம் தரவும் வேண்டுமே!
நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

16 கருத்துகள்:

 1. அன்புடையீர்,

  அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
  .
  இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
  அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

  பதிலளிநீக்கு
 2. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் ஆவல்
  மிக அழகாய் வெளிப்பட்டிருக்கு உங்கள் தேடல்.

  ஒவ்வொருவரியும் மிகச்சிறப்பு வாழ்த்துகள்

  அது சரி நீங்கள் ஆன்மீகவாதியா?

  பதிலளிநீக்கு
 3. இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
  இதை விட உலகில் வேறென்ன வேண்டும். பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 4. மிக அருமை.உங்கள் அனைவருக்கும் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 5. புனித ஹஜ் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 6. மிக அருமை மலிக்கா
  என் நெஞ்சமௌம் மக்கா மதினாவை மறுபடி ்காண ஏங்கிகொண்டுதான் இருக்கு/துஆ செய்யுங்கள்
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 7. Dear Malikka, My heartiest Huj Perunal wishes. I really enjoyed your poetry. (Sorry, tamil fonts not working today. So, i can't express my correct feelings in english. I will visit later)

  பதிலளிநீக்கு
 8. அருமையான அழகான பாடல்.

  புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

  vgk

  பதிலளிநீக்கு
 9. தரவும் வேண்டுமே!
  நிச்சயம் தரவும் வேண்டுமே!
  நிறைவேற்றித் தரவும் வேண்டுமே///

  ஆமீன் ஆமீன்..!

  பதிலளிநீக்கு
 10. "சிந்தனை செய்து நல்லடியார்களிடம் ஆலோசனை கேட்டுப் பணிபுரிபவன் முழுமனிதன்".... என ஒவ்வொரு மனிதனும் நல்மனிதனாக வாழ வழிகூறும் நபிகள்பெருமான் "எண்ணங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். சில எண்ணங்கள் கெட்டவையாக இருக்கலாம். ஆதலால் பிறருடைய குற்றங்களை தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்தநிலை அடைவதற்காக பிறரை தாழ்த்திவிடாதீர்கள். பிறர்மீது பொறாமை கொள்ளாதீர்கள்" என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

  என் இஸ்லாமிய நண்பர்களுக்கு...
  "தியாகத் திருநாள்" எனும் "பக்ரீத் நாள்" வாழ்த்துக்கள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 11. எனது தளத்திற்க்கு வருகைபுரிந்ததோடு எனது பதிவுகளை பார்வையிட்டு அதற்கான கருத்துரைகளையும் வழங்கிய அன்பு நெஞ்சகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. பாலமுருகன். கூறியது...

  மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் ஆவல்
  மிக அழகாய் வெளிப்பட்டிருக்கு உங்கள் தேடல்.

  ஒவ்வொருவரியும் மிகச்சிறப்பு வாழ்த்துகள்

  அது சரி நீங்கள் ஆன்மீகவாதியா?//

  ஆன்மீகம் நமது ஒவ்வருக்குள்ளும் நரம்புகளில் குருதிபோல் ஓடிக்கொண்டிருக்கும். அதுபோல் எனக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது இறைவனை நேசிக்கச்சொல்லும் ஆன்மீகம்.

  பதிலளிநீக்கு
 13. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


  **** ஆதாமின்டே மகன் அபு *****


  .

  பதிலளிநீக்கு
 14. அன்புடன் மலிக்கா கவிதையோடு கலந்த ராகம்.
  Please visit
  http://nidurseasons.blogspot.com/2011/11/blog-post_4176.html

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது