நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காவலெதுக்கு?!

                                                                          நன்றி கூகுள்
                                                                             
காவகாக்கும் வேலியே!- பயிரை
காவந்து செய்யலடி
காத்தில்போன மானத்துக்கு
காலங்கடந்தும் ஈனமடி!

வனத்த காவ செய்துவிட்டு
இனத்த காக்க மறந்துருச்சி
வயசும் முத்தி கிழடாச்சி-இப்பதான்
வழக்குக்கு வழி வந்திருக்கு!

என்ன வந்து என்ன செய்ய
எல்லாங் கடந்து நாளாச்சி
போன மானம் போயாச்சி
புழுங்கி  மனம் பாழாச்சி!

வேலியே! பயிரை மேஞ்சாக்கா
வேறெதுக்கு!  காவ பயிர்களுக்கு?
சட்டமே சேட்ட செஞ்சாக்கா
சரிவருமோ சாதா மனுசாளுக்கு!

குத்தம் செஞ்சா தண்டனயெல்லாம்
ஒடனே கொடுக்க மாட்டாகன்னு
குத்தத்துக்கு மேல குத்தமாக
ஒசத்திகிட்டே போறாக!

செஞ்ச குத்தத்துக்கு தண்டன வாரப்ப
செயலெழந்தும் போறாக-சிலர்
செத்தும் மடிஞ்சும் போறாக-அவங்க
செஞ்ச பாவம் - மத்தவாளுக்கு சுமையாக

காவலுக்கு ஒரு வேண்டுதலு-இனி
காக்கவேண்டும்  உயிர் மானங்கள
உயிர் மானங்கள காப்பதுதான்
உத்தமான உங்க பணி

மனசாட்சியோட உடையணிந்து
மக்கள காக்க[கும்] பணிக்கு வாங்க!
மக்கள காக்[கும்]க பணிக்கு வாங்க
மத்த மக்களையும் உங்களப்போல எண்ணி .......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

12 கருத்துகள்:

 1. ///வேலியே! பயிரை மேஞ்சாக்கா
  வேறெதுக்கு! காவ பயிர்களுக்கு?
  சட்டமே சேட்ட செஞ்சாக்கா
  சரிவருமோ சாதா மனுசாளுக்கு!///

  சரியா கேட்டீங்க சகோதரி...
  வெளியே பயிரை மேய்வதற்காகவா
  காவல் இங்கே....
  சட்டங்கள் இங்கே சாமானியரை
  சந்திக்கு இழுப்பதற்கு அல்ல
  சந்ததிகள் வளர்ப்பதற்கு...

  பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 2. கிராமியப்பாடல் மாதிரி அழகாகவும் அர்த்தமாகவும் எழுதியிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 3. செஞ்ச குத்தத்துக்கு தண்டன வாரப்ப
  செயலெழந்தும் போறாக-சிலர்
  செத்தும் மடிஞ்சும் போறாக-அவங்க
  செஞ்ச பாவம் - மத்தவாளுக்கு சுமையாக//உண்யான உண்மைங்க. வழக்காடியே எங்கள் வாழ்க்கை தொலைந்துபோனதை நினைச்சாலே மனம் வெறுத்துப்போச்சிங்க. எங்களபோல உள்ளவங்களுக்கு யாரும் இல்லை அப்ப கேட்க இப்பன்னா சும்மாவிடமாட்டோம். பழைய நினைவுகளை சுமக்க வச்சிட்டீங்க. உங்க கவிதையில் நிறைய உண்மைகள் இருக்குங்க எல்லாக்கவிதைகளையும் அப்ப அப்ப படிச்சிக்கொண்டே வருகிறேன். தொடர்ந்து எழுதுங்க..ஆல்த பெஸ்ட்..

  பதிலளிநீக்கு
 4. இப்படிக்கு அவனைப்போல் ஒருவன்..30 செப்டம்பர், 2011 அன்று முற்பகல் 10:56

  //காவலுக்கு ஒரு வேண்டுதலு-இனி
  காக்கவேண்டும் உயிர் மானங்கள
  உயிர் மானங்கள காப்பதுதான்
  உத்தமான உங்க பணி//

  நீங்க என்னத்த வேண்டினாலும் அவங்களைபோல உள்ளவங்களை திருத்தவே முடியாதுங்க.

  பதிலளிநீக்கு
 5. //மனசாட்சியோட உடையணிந்து
  மக்கள காக்க[கும்] பணிக்கு வாங்க!
  மக்கள காக்[கும்]க பணிக்கு வாங்க
  மத்த மக்களையும் உங்களப்போல எண்ணி ....... //

  நியாயமான நல்லதொரு வேண்டுகோள்.

  தமிழ்மணம் : 4 vgk

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. நல்ல ஒரு கிராமியப் பாடல் கவிதை...!
  இது மலிக்காவால் மட்டுமே...!

  நல்ல
  கருத்தும்
  எழுத்தும் பொதிந்த
  நாட்டுப்புறக் கவிதை....!

  இதத்தான் அந்த காலத்திலேயே
  பட்டுக்கோட்டையார் பாடலாய் எழுதினார்...!

  "மனுச மனுச சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே....இது
  மாறுவதெப்போ... தீருவதெப்போ... நம்மக்கவல....!"
  அப்படீன்னு...!

  வாழ்த்துக்களுடன்
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 8. அன்பு அக்காவினுடைய அருமையான கவிதை.. மிகவும் அர்த்தம் பொதிந்த காலத்திற்கேற்ற தேவையானதொரு கவிதை... கிராமிய பாடல் சாயலில் நல்லா செய்திருக்கீங்க.. வாழ்துக்கள்..

  //காவலுக்கு ஒரு வேண்டுதலு-இனி
  காக்கவேண்டும் உயிர் மானங்கள
  உயிர் மானங்கள காப்பதுதான்
  உத்தமான உங்க பணி//
  ஆமா அவங்க எங்க மாறுவது.. அய்யோ.. அய்யோ

  பதிலளிநீக்கு
 9. என்னத்தச் சொல்ல? இதெல்லாம் கேள்விப்படும்போது அவங்கமேல பயம் இன்னும் கூடுது.

  ஆனா, இந்தச் சம்பவத்துல காவல் துறை மட்டுமில்ல, வருவாய்த்துறை, வனத்துறைன்னு எல்லாம் கூட்டணிபோட்டு ஒரு அரசாங்கமாவுல்ல வெள்ளாண்டுருக்காங்க!! :-(((((((

  பதிலளிநீக்கு
 10. அன்பு நிறைந்த சகோதர சகோதரிகளின் அன்பான மற்றும் உணர்வான கருத்துப்பரிமாற்றங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தாங்கள் அனைவரின் கருத்துகளும் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது. அன்பானவர்களுக்கு மீண்டும் எனது அன்பான நன்றிகள்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது