நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விமோசனம்!.


விலக்கப்பட்ட
கனியை உண்டதால்
விஸ்வரூபமெடுத்து
விரிந்து பரந்தது
மனிதயினம்!

விலகப்பட்டதால்
உருவானதாலோ என்னவோ!
விலகியே நிற்கிறது இன்னமும்
விதண்டா வாதங்களால்
மனிதமனம்!

அன்று  உண்டகனிக்கு
விதிவிலக்கு கொடுத்து
விமோசனம் பெற்று

இன்று அக்கனியை உண்பதால்
ஆரோக்கியமாகிறது
மனித உடல்!

ஆனால்!!!

உண்டதினால் ஏற்பட்ட
உஷ்ணத்தின் உச்சம்போல்
உள்ளங்களில் உஷ்ணத்தையடக்கி
உலகுக்காக குளிர்ச்சியாய் வேஷமிடும்

மனித மனங்கள் மட்டும்
விமோசனமே யில்லாததுபோல்
வேறுபட்டே நிற்கிறது
.
விலக்கப்பட்ட கனிக்கு
கிடைத்த விமோசனம்போல்
கிடைக்குமா?
மனித மனதுக்கும்!!.

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

14 கருத்துகள்:

 1. Wishing you healthy life.
  விலக்கப்பட்ட கனியை உண்டதால் விஸ்வரூபமெடுத்து விறிந்து பரந்தது மனிதயினம் விலகப்பட்டதால் உருவானதாலோ என்னவோ! விலகியே நிற்கிறது இன்னமும் விதண்டா வாதங்களால் மனிதமனம்.
  ஆழ் மனதிலிருந்து வரும் அற்புதமான கவிதை.உண்மை ,உண்மையைத் தவிர மற்றதில்லை. கவிதைக்குரிய கலப்படமில்லை.கவிதையானாலும் உண்மையே கொடுப்பேன் மறக்காமல் மார்க்கமும் கலந்து மனதினை தெளிவு படுத்தும் பண்பாடு கண்டு வியக்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. அக்கா நலமா?// உண்டதினால் ஏற்பட்ட
  உஷ்ணத்தின் உச்சம்போல்
  உள்ளங்களில் உஷ்ணத்தையடக்கி
  உலகுக்காக குளிர்ச்சியாய் வேஷமிடும்

  மனித மனங்கள் மட்டும்
  விமோச்சனமே யில்லாததுபோல்
  வேறுபட்டே நிற்கிறது// வழக்கம் போல் வரிகள் அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
 3. //விலகப்பட்டதால்
  உருவானதாலோ என்னவோ!
  விலகியே நிற்கிறது இன்னமும்
  விதண்டா வாதங்களால்
  மனித மனம்//

  அக்கா கவிதை மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. துபைல இருந்தப்பதான்
  கவிதைல
  கருத்துப் பிழையும்
  எழுத்துப் பிழையும் இருந்தது...!

  இங்கே வந்துமாமாமாமா...........?

  தமிழகத்திற்கு
  தஞ்சை தரணிக்கு வந்துமா....?

  ///மனித மனங்கள் மட்டும்
  விமோச்சனமேயில்லாததுபோல்
  வேறுபட்டே நிற்கிறது///

  இந்த வரிகள் நல்லாத்தான் இருக்கு....!

  இந்த கவிதை பற்றி
  ஹா... ஹா... ஹா...!
  எங்கே வந்து...
  எதப் பத்தி பேசறீங்க...! எழுதுறீங்க...!

  காமெடி பண்றீங்களோன்னு நனச்சேன்...!

  பதிலளிநீக்கு
 5. நல்லதை நல்லவிதமாகச் சொல்லும் கவிதை. பாராட்டுக்கள்.vgk

  பதிலளிநீக்கு
 6. வழக்கம் போல் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. உண்டதினால் ஏற்பட்ட
  உஷ்ணத்தின் உச்சம்போல்
  உள்ளங்களில் உஷ்ணத்தையடக்கி
  உலகுக்காக குளிர்ச்சியாய் வேஷமிடும்

  மனித மனங்கள் மட்டும்
  விமோசனமே யில்லாததுபோல்
  வேறுபட்டே நிற்கிறது//

  arumai arumai. miha azakiya sollaadal ullaththil uurredukkum vaarththaikal.

  vaazththukal mallikka

  பதிலளிநீக்கு
 8. nidurali கூறியது...//

  கலப்படமில்லாமல் கவிதைபடைக்க எண்ணங்களை எனக்குள் புகுத்தி அதனை வெளிப்படுத்தச்செய்யும் படைத்தவனுக்கே புகழனைத்தும் அன்புத்தந்தையின் அன்பான கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் நல்லபடியாக இருக்கிறோம் தங்கை ஃபாயிஜாவே.. குட்டிஸுகளெல்லாம் எப்படியிருக்காங்க. தங்களீன் கருத்துகளூக்கு நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 10. பிளாகர் சே.குமார் கூறியது...

  //விலகப்பட்டதால்
  உருவானதாலோ என்னவோ!
  விலகியே நிற்கிறது இன்னமும்
  விதண்டா வாதங்களால்
  மனித மனம்//

  அக்கா கவிதை மிகவும் அருமை.//

  வாங்க குமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 11. // காஞ்சி முரளி கூறியது.//

  வாங்கப்பு வாங்க. அங்க உள்ள அதே மலிக்காத்தானே இங்கேயும். இங்குமட்டுமென்ன புதுசாவா பிறந்துள்ளோம்.

  கருத்துப்பிழையும் எழுத்துபிழையும் மலிக்காவுக்கு சகஜமப்பா அப்படிங்கிறீங்க. ஹா ஹா.


  ரொம்ப நன்றிங்க சகோ சுட்டிக்காட்டியமைக்கு.. தமிழ்பாண்ட் வேலைசெய்யாமல் இருந்த அன்று இக்கவிதை எழுதியது. [இருந்திருந்தாலுமட்டும்] அதான் அப்புடி. சரி சரி ஒத்துகிறேன் தப்புதான்..

  மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 12. //பிளாகர் வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  நல்லதை நல்லவிதமாகச் சொல்லும் கவிதை. பாராட்டுக்கள்.vgk//

  மிக்க நன்றிங்க அய்யா..

  பதிலளிநீக்கு
 13. ஆயிஷா அபுல் கூறியது... //

  வாங்க ஆயிஷா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. arumai arumai. miha azakiya sollaadal ullaththil uurredukkum vaarththaikal.

  vaazththukal mallikka//


  வாங்க சசி.வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது