நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆத்மார்த்தமாய்....


மண்டபம் நிரம்பி வழிய
மணக்கோலத்தில் செல்லமகள்
மார்போடு அணைத்ததும்
படபடவென துடித்த நெஞ்சம்
பாசத்தால் பரிதவித்து
புதுவித மன
பாரத்தால் துடித்தது

மழலையான வயதினிலே-என்
மடிசுமந்த முத்துமகள்
மழலையாகி மங்கையாகி
மாலைசூடி மணக்கோலம் பூண்டு
மருகிக்கொண்டே
மறுவீடு செல்லும் நேரம்

சுமந்த மடி சுருங்கி கதற
சுணங்கி சுணக்கி இதயம் நொருங்க
சுரந்து சுரந்து விழிகள் கலங்க
குருதி மொத்தம் நரம்பில் உறைய
குரலும் நடுங்கி உதறி உடைய
சொல்லயியலாச் தாயின்துயரம்
சொல்லில் வடிக்கத் தெரியாத்
சேயின் நிலையும்

மகளாகத் தூளியாடி
சினேகிதியாய் துயர்கள் நீக்கி
உறவாடிய உயிர்கள் இரண்டு
உருகியபடியே
விட்டுப் பிரிந்த பொழுது
புழுங்கித் தவித்தது
கரு சுமந்த மடியும்
பால் சுரந்த மாரும்
பாசத்தை சுமந்த மனதும்

தோழியாக இருந்தமகள்
தோள்சாய்ந்து கிடந்தமகள்
கண்ணுக்குள்ளே காத்தமகள்
கணவனோடு கைகோர்த்தாள்
இணைந்த கைகள்போல
இதயங்கள் இணைந்து இனிக்க
காலந்தோறும் கண்கலங்காது
கஷ்டமேதும் நெருங்காது
காக்கவேண்டும் வல்ல நாயன்

அன்பும் அறணும் அவள்பேணி
அனைவரும் புகழ மகள்வாழ
அன்னை நெஞ்சம் உருகியபடி
அகிலம் காக்கும்  இறைவனை
ஆத்மார்த்தமாய் வேண்டுகிறேன்..........

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

29 கருத்துகள்:

  1. என்னுடைய அன்பான துஆக்கள்.
    ரொம்ப அருமை உங்கள் உணர்வுகளில் ஓசை இங்கு தெரிகிறது

    பதிலளிநீக்கு
  2. அன்புத்தாயின் அருமையான உணர்வுகள் வெகு அழகாகச் சொல்லப்பட்டுள்ளன, ஒவ்வொரு வரிகளிலும். பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் மணமக்களுக்கும் பாராட்டுக்கள் உருக்கமான கவிதைக்கும்.

    பதிலளிநீக்கு
  4. உங்களுடைய மகளுக்கு வாழ்த்துகள்...

    கவிதை ரொம்ப அருமையாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  5. அக்கா சும்மா சொல்லக்கூடாது பின்னிட்டீங்க உணர்வுகளை வேறுயாராலும் இப்படி வெளிப்படுத்த முடியாது. கொடுத்துவைத்தவள் உங்கள்
    முத்துமகள்.

    ஆக எங் மாமியார் ஆகிட்டீங்க ஆனாலும் இவ்ளோ சின்ன வயசில் சரி சரி. அடுத்தது நாங்களும் வராமுல்ல..

    எனக்கு இப்படியெல்லாம் வராதுக்கா எழுத. கண்ணீரே வந்துவிட்டது. வாழ்வாங்கு வாழட்டும் அன்புமகள் குறைகள் இல்லாமல் எந்நாளும்..

    வாழ்த்துகளும் பாராட்டுகளும் சொல்லிடுங்கக்கா..

    பதிலளிநீக்கு
  6. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒரு தாயின் உணர்வுகளை அழகான கவிதையில் வெளிபடுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அல்லாஹ் அவனுடைய அருட்கொடைகளையும்...நோய் நொடியற்ற நீண்ட நிம்மதியான வாழ்க்கையும் மணமக்களுக்கு தந்தருள்வானக..ஆமீன்..தாயின் உணர்வுகளை அருமை வடித்து இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் உங்களுக்கும்,மணமக்களுக்கும்

    பதிலளிநீக்கு
  8. ஒரு தாயின் உணர்வுகளை வெகு அழகாக சொல்லியிருக்கீங்க மல்லிகா...

    பதிலளிநீக்கு
  9. எல்லாம் வல்ல அல்லாஹ் புதுமணத் தம்பதியர்களுக்கு எல்லா வளமும் தந்தருள அன்புடன் வாழ்த்துகின்றேன்.
    ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த திருமணத்தை விட சிறந்தது எதுவுமில்லை - நபிமொழி.
    அல்லாஹ் தம்பதியர்களுக்கு பரகத் செய்வானாக !
    நல்ல விசயங்களில் தம்பதிகள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!
    மேலும் அபிவிருத்தி செய்வானாக ! ஆமீன் .
    அனைத்து தாய்களுக்கும் வரும் உணர்வினை தாங்கள் கவிதை வடிவில் தந்து மன மகிழ்வினை மற்றவர் மனதிலும் பதிய வைத்து ஆனந்தக் கண்ணீர் வர வழி செய்யும் ஆற்றலை அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ளான் .
    நேரில் வர முடியாமல் இங்கிருந்து வாழ்த்துகின்றேன்

    பதிலளிநீக்கு
  10. வாழ்க மணமக்கள்.

    வாழ்க...வாழ்கவே...வாழ்க...வாழ்கவே... வாழ்க...வாழ்க...வாழ்க. மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க...வாழ்க.

    பதிலளிநீக்கு
  11. மு.இராஜேந்திரன்19 செப்டம்பர், 2011 அன்று 8:07 PM

    உணர்வுகளின் ஓசை என நீங்கள் முதல் கவிதை தொகுப்புக்கு தலைப்பிட்டபோதே உணர்ந்தேன் உங்கள் உணர்வுகளை. நீடூரலி அவர்கள் சொன்னதுபோல் உங்களுக்கு கடவுள் கொடுத்த ஆற்றல் உள்ளது.இது அனைவருக்கும் கிடைக்காது.

    தாய்மையின் அன்புபாசம்நேசம் அனைத்தும் கலந்து மிக அருமையான கவிதையாய் இல்லை இல்லை உணர்வுகளாய் உலாவ விட்டுயிருக்கீங்க.மல்லி. கிரேட் ஆஃப்த மல்லி.

    பதிலளிநீக்கு
  12. ஜின்னாஹ் வாப்பா19 செப்டம்பர், 2011 அன்று 8:35 PM

    மணமங்கள வாழ்த்து

    புத்தம் புதுவாழ்க்கை பெற்றுவிட்டாள் செல்லமகள்
    மெத்த மகிழ்வெமக்கும் வாழ்த்துகின்றோம் - சித்தம்
    மகிழ்வாய்நீ மாதாநின் மன்னவனாம் பாரூக்
    அகம்நிறைந்தார் சொல்வேண்டு மோ.

    பிஞ்சு வயதில்நீ பிள்ளைக்குத் தாயானாய்
    கொஞ்சுமொழி கேட்டே குதுகலித்தாய் - அஞ்சாதே
    பாட்டியா யாகும் பொறுப்பும் அதிவிரைவில்
    கூட்டுவான் கோனிறைவன் கொள்.

    கைக்குள் இருந்தகிளி கைகடந்து போகவில்லை
    பொய்க்காள் உனதுமகள் பாசமிகு - தாய்க்குப்
    பிறந்தவள்நற் தாதைக்கும் சேயாவாள் முன்நான்
    அறிந்ததுதான் அஞ்சேல் மகிழ்.

    படைத்தவனாம் அல்லாஹ் புகழுக்குச் சொந்தன்
    கொடையருள்வான் செல்விக்குக் குன்றா - மடைதிறந்த
    வெள்ளம்போல் செல்வம் வழங்கவவன் தாழ்பணிந்தேன்
    வள்ளல்கோன் வாழி மகள்.

    அன்புடன்
    ஜின்னாஹ் வாப்பா

    பதிலளிநீக்கு
  13. புதுமணத் தம்பதிகளுக்கு எமது வாழ்த்துகள். அல்லாஹ் அவ்விருவரையும் சிறந்து முறையில் இணைத்து நீடூழி வாழ வைப்பானாக.

    தங்களுக்கும் எம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. பொதுவா பொண்ணு கலயாணம் பண்ணிப்போறதை அப்பா வாயால சொல்லக் கேட்டு/ எழுத்தாலப் பாத்துத்தான் பழக்கம். முதல்முறை அம்மாவின் உணர்ச்சிகள் வார்த்தைகளில்!!

    பதிலளிநீக்கு
  15. அன்பு சகோதரி,
    ஒரு பெண் மகவைப் பெற்று
    சீராட்டிப் பாராட்டி வளர்த்து
    தவளையின் வாழ்வைப்போல
    அடுத்த வாழ்விற்கு அவர் அடியெடுத்து
    வைக்கையில் ஒரு பெற்ற மனம் என்னென்ன நினைத்து
    குமுறுமோ அதை அப்படியே வடித்திருக்கிறீர்கள்.
    மனம் நெகிழ்ந்தது.

    வாழிய நின் தாய்மை.

    என்றென்றும் எல்லாப் புகழும் வளமும் கிடைத்து
    வாழ்வாங்கு வாழ் உங்கள் மகளுக்கு
    இறைவன் அருள்புரிவானாக.

    பதிலளிநீக்கு
  16. அன்பு சகோதரி,
    இன்று வலைச்சரத்தில் உங்களை, உங்கள் படைப்பை அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.

    இணைப்பு...

    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. மகளுக்கு.
    மகளானவளையும்...!

    மகள் வடிவில்
    தாயானவளையும்...!

    பிரிவது என்பது

    சோகத்திலேயே
    மிகப்பெரிய சோகம்...!

    அப்பிரிவினை...
    அச்சோகத்தை.....
    எழுத்து வடிவில் கண்டபோது...
    வியந்து போனேன்...!

    உணர்வுகளையும்....!
    உணர்ச்சிகளையும்....!
    உணரத்தான் முடியுமே தவிர...!

    வாயால்
    வார்த்தைகளாகவே
    வடிக்க முடியாது....! அப்படி...
    வார்த்தையில்
    வடிக்கமுடியாததை....!
    வார்த்தையாய்....!
    வரிகளாய்.... அதுவும் கவிதை
    வரிகளாய்.....
    வடித்திருப்பதற்க்கு...

    "I will proud of you... and
    Salute your those poet lines...!"
    மற்றும்
    என் மனார்ந்த வாழ்த்துக்கள்...!

    அதிலும்...
    இப்பதிவின் தலைப்புக்கேற்ற கவிதை...!
    அதுவும் "ஆத்மார்த்தமான" கவிதை....!

    நட்புடன்...!
    காஞ்சி முரளி....!

    பதிலளிநீக்கு
  20. எனதருமை என்புள்ளங்களுக்கு. என் உணர்வுகளின் ஓசைக்கு செவிசாய்த்து தங்களின் உணவுர்களை இங்கே கருத்துக்களாய் அள்ளிதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நிறைய எழுத வேண்டும் எழுதின் வாயிலாக உங்களோடு பேசவேண்டும்.ஆனால் தற்போது நேரம் அதிகம் கிடைக்கப்பெறாததால் சமயம் கிடைக்கும்போது நிச்சயம் வந்து உங்களோடு பேசி மகிழ்வேன்.. எனது படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்த்து உள்ளங்களுக்கும் மீண்டும் எனது நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  22. அன்பு சகோதரி,
    ஒரு பெண் மகவைப் பெற்று
    சீராட்டிப் பாராட்டி வளர்த்து
    தவளையின் வாழ்வைப்போல
    அடுத்த வாழ்விற்கு அவர் அடியெடுத்து
    வைக்கையில் ஒரு பெற்ற மனம் என்னென்ன நினைத்து
    குமுறுமோ அதை அப்படியே வடித்திருக்கிறீர்கள்.
    மனம் நெகிழ்ந்தது.

    வாழிய நின் தாய்மை.

    என்றென்றும் எல்லாப் புகழும் வளமும் கிடைத்து
    வாழ்வாங்கு வாழ் உங்கள் மகளுக்கு
    இறைவன் அருள்புரிவானாக.

    20 செப்டெம்ப்ர், 2011 11:58 am
    நீக்கு
    பிளாகர் மகேந்திரன் கூறியது...

    அன்பு சகோதரி,
    இன்று வலைச்சரத்தில் உங்களை, உங்கள் படைப்பை அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.

    இணைப்பு...

    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_20.html//

    அன்புச்சகோதரருக்கு என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு எனது இதயமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. தாய்மை அழகிய கவிதையாய்...
    திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி
    மகளின் மனகோலம் கனடு மற்றில்லா மகிழ்ச்சி தோழி, மகளின் மனவாழ்வு மனநிறைந்த நன்நாள்களாய் மலர மறையளித்த வல்லோன்னை
    மனம்நிறைந்து வேண்டுகிறேன்
    தோழி கவிதை அருமை ஒரு தாயின் உணர்வை அப்படியே பாதித்துயுள்ளிர்கள்

    பதிலளிநீக்கு
  25. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி
    மகளின் மனகோலம் கனடு மற்றில்லா மகிழ்ச்சி தோழி, மகளின் மனவாழ்வு மனநிறைந்த நன்நாள்களாய் மலர மறையளித்த வல்லோன்னை
    மனம்நிறைந்து வேண்டுகிறேன்
    தோழி கவிதை அருமை ஒரு தாயின் உணர்வை அப்படியே பாதித்துயுள்ளிர்கள்

    பதிலளிநீக்கு
  26. ///ஹுஸைனம்மா சொன்னது…

    பொதுவா பொண்ணு கலயாணம் பண்ணிப்போறதை அப்பா வாயால சொல்லக் கேட்டு/ எழுத்தாலப் பாத்துத்தான் பழக்கம். முதல்முறை அம்மாவின் உணர்ச்சிகள் வார்த்தைகளில்!! ////

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
    வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.... :-))

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துகளையும் துஆக்களையும் வழங்கிய நல்நெஞ்சங்களுக்கு என் இதயமார்ந்த நன்றிகள்.. இறைவனின் சாந்தியும் அருளும் நம் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்கட்டும்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது