நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆண்டவனில்லை.


நீரென்றும் நிலமென்றும் 
நிமிர்ந்து எரியும் நெருப்பென்றும்

கடலென்றும் காற்றென்றும்
கறுத்து வெளுக்கும் கார்மேகமென்றும்
 
மழையென்றும் மலையென்றும்
மண்ணில் விளையும் பயிரென்றும்

எறும்பென்றும் பறவையென்றும்
எங்கும் தெரியும் வானமென்றும்

பொன்னென்றும் பொருளென்றும்
பூமியில் பூக்கும் பூவென்றும்

காடென்றும் மேடென்றும்
கண்ணில் காணும் காட்சியென்றும்

உயிரென்றும் உடலென்றும்
ஊர்ந்து ஓடும் உதிரமென்றும்

அழுகையென்றும் சிரிப்பென்றும்
ஆழ்ந்து உணரும் அறிவென்றும்

உலகநாள் துவக்கத்திலிருந்து
இன்றுவரை

இனியும்
இறுதிநாள்வரை

ஒவ்வொன்றின் மீதும் 
சக்திபெற்று

அணு அணுவாய்  
சிந்தித்து செயலாற்றும் அரசனே!

நீ ஆண்டவனில்லை

”ஆள்பவன்”
அகிலத்தை ஆள்பவன்

”இறப்பில்லாதவன்”
எல்லாம் வல்ல இறைவன்.   

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

32 கருத்துகள்:

  1. ஆஹா.. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
    மிகச் சிறந்த கவிதை இதுதான்.மாணிக்கவாசகரின்
    " வானாகி மண்ணாகி..என்ற பாடலைப் போல
    எங்கும் நீக்கமற நின்றவன் இறைவன்
    நின்றவன் மட்டும் அல்ல என்றும் நிற்கிறவன்
    என்கிற கருத்தில் ஆண்டவன் மட்டும் அல்ல
    என்றும் ஆளுபவன் எனச் சொல்லி முடித்திருப்பது
    மிக மிக அருமை.மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ப்தை அழகான கவிதையில் சொல்லியிருக்கிரீர்கள் மலிக்கா, வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. //அகிலத்தை ஆள்பவன்//
    அண்ட சராசரங்களையும்
    தன் பராக்கிரமத்தால்
    ஆள்பவனைப் பற்றி எழுதி - எங்கள்
    மனதை கவிதையால்
    ஆள்கிறீகள் சகோதரி

    ஆண்டவனை - எல்லாம்
    ஆனவனை - நம்மை
    ஆள்பவனை
    அழகாய்
    துதித்த விதம்
    தூய்மை

    பதிலளிநீக்கு
  4. உண்மை...!
    உண்மை....!
    உண்மை..........!

    கவிதை நல்லாத்தான் இருக்கு....!

    பதிலளிநீக்கு
  5. இறைவனே ஆள்பவன்.
    அதில் சந்தேகமே இல்லை.
    நல்ல கவிதை.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அழுகையென்றும் சிரிப்பென்றும்
    ஆழ்ந்து உணரும் அறிவென்றும்.

    உணர்ந்து உணர்ந்து எழுதும் திறன் உங்களுக்கு. இறைவன் என்பதே சிறந்த பதம். இறைவனை நேசிக்கும் உங்களுக்கு எல்லாமே நலம்..

    நட்புடன்
    தமிழ்மகன்..

    பதிலளிநீக்கு
  7. இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை தலைப்பைக் கண்டு தயங்கிய மனம் சிலிர்க்க சிலவரிகள் சொன்னீர்கள். உள்ளத்தில் தெய்வம் உறைந்திருந்ததனால்
    உங்கள் கவிதைவரிகளும் கண்சிமிட்டியதே!!!...
    வாழ்த்துக்கள் சகோதரி.......

    பதிலளிநீக்கு
  9. மல்லிக்கா...கடவுள் நம்பிக்கை இன்னும் இறுக்கமாகிறது உங்கள் வார்த்தைக் கோர்வையில் !

    பதிலளிநீக்கு
  10. ஆண்டவனே ஆள்பவன்
    அருமையான விளக்க கவிதை
    ரொம்ப நல்லா இருக்கு கவிதாயனி ..

    பதிலளிநீக்கு
  11. iraivanai unarntthu ezuthiya varikal.

    arumai arumai..

    பதிலளிநீக்கு
  12. Ramani கூறியது...

    ஆஹா.. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
    மிகச் சிறந்த கவிதை இதுதான்.மாணிக்கவாசகரின்
    " வானாகி மண்ணாகி..என்ற பாடலைப் போல
    எங்கும் நீக்கமற நின்றவன் இறைவன்
    நின்றவன் மட்டும் அல்ல என்றும் நிற்கிறவன்
    என்கிற கருத்தில் ஆண்டவன் மட்டும் அல்ல
    என்றும் ஆளுபவன் எனச் சொல்லி முடித்திருப்பது
    மிக மிக அருமை.மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    ஆண்டுகொண்டிருப்பவனை ஆண்டவன் ஆண்டு முடித்தவன் என சொல்வது எப்படி சரியாகும். அதனால்தான் இதை எழுதத்தூண்டியது. ரொம்ப சந்தோஷம் தங்களின் அன்பான கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  13. RAMVI கூறியது...

    இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ப்தை அழகான கவிதையில் சொல்லியிருக்கிரீர்கள் மலிக்கா, வாழ்த்துக்கள்.//

    வாங்க ராம்வி. தங்களின் அழகானகருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  14. A.R.ராஜகோபாலன் கூறியது...

    //அகிலத்தை ஆள்பவன்//
    அண்ட சராசரங்களையும்
    தன் பராக்கிரமத்தால்
    ஆள்பவனைப் பற்றி எழுதி - எங்கள்
    மனதை கவிதையால்
    ஆள்கிறீகள் சகோதரி.

    ஆண்டவனை - எல்லாம்
    ஆனவனை - நம்மை
    ஆள்பவனை
    அழகாய்
    துதித்த விதம்
    தூய்மை//


    எங்கும் நிறைந்த வல்லோனை நினைப்பதும் துதிப்பதும்தானே நமது முதல் கடமை.

    அண்ணாவின் அன்பிற்க்கு அன்பார்ந்த மகிழ்ச்சி. மிக்க நன்றிண்ணா..

    பதிலளிநீக்கு
  15. vidivelli கூறியது...

    aththanaiyum supper...
    arumai..
    valththukkal..//

    நன்றிங்க விடிவெள்ளி..

    காஞ்சி முரளி கூறியது...

    ஹையாஆஆஆஆஆஆஆஆஆஅ...!//

    அச்சோ என்னாச்சி சகோ என்னாச்சி..

    பதிலளிநீக்கு
  16. காஞ்சி முரளி கூறியது...

    உண்மை...!
    உண்மை....!
    உண்மை..........!//

    நன்றி நன்றி நன்றி..

    கவிதை நல்லாத்தான் இருக்கு..//

    ஏன் இந்த இழுவெ.

    சகோக்கு இப்பெல்லாம் நேரமேயில்லை ரொம்ப பிஸி. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  17. மிக அருமையான கவிதை மல்லி.
    உங்களுக்கு சொல்லவா வேணும் இறைவனைப்பற்றி எழுத. நீங்கதான் நேசிப்பவராச்சே..

    இன்னும் ந்ரம்ப எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    இறைவனே ஆள்பவன்.
    அதில் சந்தேகமே இல்லை.
    நல்ல கவிதை.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.//

    அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா....

    // தமிழ்மகன் கூறியது...

    அழுகையென்றும் சிரிப்பென்றும்
    ஆழ்ந்து உணரும் அறிவென்றும்.

    உணர்ந்து உணர்ந்து எழுதும் திறன் உங்களுக்கு. இறைவன் என்பதே சிறந்த பதம். இறைவனை நேசிக்கும் உங்களுக்கு எல்லாமே நலம்..

    நட்புடன்
    தமிழ்மகன்..//

    ரொம்ப சந்தோஷம் தமிழ்மகன் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    //இராஜராஜேஸ்வரி கூறியது...

    இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  19. அம்பாளடியாள் கூறியது...

    அருமையான கவிதை தலைப்பைக் கண்டு தயங்கிய மனம் சிலிர்க்க சிலவரிகள் சொன்னீர்கள். உள்ளத்தில் தெய்வம் உறைந்திருந்ததனால்
    உங்கள் கவிதைவரிகளும் கண்சிமிட்டியதே!!!...
    வாழ்த்துக்கள் சகோதரி....//

    வாங்க சகோதரி. தலைப்பை வைக்கும்போது நானும் யோசித்தேன் அதன்பின்புதான் அதுதான் சரியென வைத்துவிட்டேன்..

    இறைவனை நேசிக்க நேசிக்க எல்லாம் அருகில் வருவதுபோல் உணர்வு ஏற்படும். சோதனைகள் வரும்போதுக்கூட எல்லாம் நன்மைக்கே என மனம் சாந்திக்கொள்ளும்..

    சகோ நீங்க போன பதிவில் மனவலிதீர மருந்து கேட்டீர்கள்.

    மருந்து வேரெங்குமிலை நம்மிடமே உள்ளது. இது அனுபவம். எதுவும் நடக்கவேண்டிய நேரத்தில் நடந்தே தீரும் அதற்காக கவலைப்பட்டு ஆவப்போவது ஒன்றுமில்லை. இறைவனிடம் இறைஞ்சிவேண்டுங்கள். நிச்சயம் அனைத்தும் நன்மையாக நடக்கும்..

    ரொம்ப நன்றி

    பதிலளிநீக்கு
  20. இறைவனை நன்கு உணர்ந்த உங்களின் கவிதை அருமை.

    இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இக் கவிதை படித்தால் இறை நம்பிக்கை பெறுவார்கள்.

    இறைவனை நேசிப்பவர்கள் இன்பம் அடைவார்கள் நிச்சியம்.

    பதிலளிநீக்கு
  21. பொருமையும் சகிப்புத் தன்மையும் இருக்கிறவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் வெல்வார்கள்.

    உண்மை கவி எழுதி.
    நண்மை கிடைக்கும் என்ற நப்பாசையில்.
    பண்மை பல எழுதி.
    வெண்மையாக படைத்த விதம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. ஹேமா கூறியது...

    மல்லிக்கா...கடவுள் நம்பிக்கை இன்னும் இறுக்கமாகிறது உங்கள் வார்த்தைக் கோர்வையில் !//

    இறுக்கமாக இறுக்கமாக இறைவனிடம் நெறுக்கம் ஏற்படும் தோழி. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  23. S Maharajan கூறியது...

    ஆண்டவனே ஆள்பவன்
    அருமையான விளக்க கவிதை
    ரொம்ப நல்லா இருக்கு கவிதாயனி ..//

    அடடா வாங்க மகா. திருமண வாழ்க்கை எப்படிபோகுது அண்ணி எப்படி இருக்காங்க.. கேட்டதாக சொல்லுங்க.. மிக்க நன்றி மகராசன்.

    //சே.குமார் கூறியது...

    கவிதை நல்லா இருக்கு.//

    மிக்க நன்றி குமார்

    // kuna கூறியது...

    iraivanai unarntthu ezuthiya varikal.

    arumai arumai..//

    ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி குணா..

    பதிலளிநீக்கு
  24. ஷாஜி கூறியது...

    மிக அருமையான கவிதை மல்லி.
    உங்களுக்கு சொல்லவா வேணும் இறைவனைப்பற்றி எழுத. நீங்கதான் நேசிப்பவராச்சே..

    இன்னும் ந்ரம்ப எழுதுங்கள்.////

    வாங்க ஷாஜி. தங்களுடைய அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  25. //கோமதி அரசு கூறியது...

    இறைவனை நன்கு உணர்ந்த உங்களின் கவிதை அருமை.

    இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இக் கவிதை படித்தால் இறை நம்பிக்கை பெறுவார்கள்.

    இறைவனை நேசிப்பவர்கள் இன்பம் அடைவார்கள் நிச்சியம்.//

    வாங்க சகோ தங்களுடைய அன்பான கருத்துக்கு மனதுக்கு நிறைவைதருகிறது. இறைவனை நேசிக்க நேசிக்க இன்பங்கள் நம்மையறியாமல் மேலோங்கி நிற்கிறது. தங்களின் நேசமிந்த கருதுக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  26. //அந்நியன் 2 கூறியது...

    பொருமையும் சகிப்புத் தன்மையும் இருக்கிறவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் வெல்வார்கள்.

    உண்மை கவி எழுதி.
    நண்மை கிடைக்கும் என்ற நப்பாசையில்.
    பண்மை பல எழுதி.
    வெண்மையாக படைத்த விதம் அருமை.
    வாழ்த்துக்கள்.//

    நம்முடைய ஒவ்வொரு செயலும் நன்மைகள் நோக்கியே இருக்கவேண்டும் என்ற செயல்களை இறைவன் நன்மையாகவேயாக்கிதருவானாக.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான கவிக்கு.மிக்க நன்றி அய்யூப்..

    பதிலளிநீக்கு
  27. ஆஹா.. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
    மிகச் சிறந்த கவிதை இதுதான்.

    very correct version it is. super.
    How are u and your family?.

    பதிலளிநீக்கு
  28. மலிக்கா தங்களின் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  29. இறைநேசக் காதலில் விளையும் சத்திய வார்த்தைகள்...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது