நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

போங்கப்பா நீங்களும் உங்க ஓட்டும்.



என்ன இப்படி சொல்றேனு பார்க்கிறீங்களா! ஆமாப்பா பலயிடங்களில் பலரின் ஆதங்கப் பதிவைப் பார்த்தேன். சிறந்த எழுதுக்களுக்கு மதிப்பில்லாததுபோல் அங்கே கருத்துக்களோ ஓட்டுக்களோ பதிவாவதில்லை. ஆங்காங்கே ஓடி ஓடி பலருக்கு கருதிட்டால் சிலர் போய் கருத்திடுகிறார்கள் என்ற ஆதங்கமும். பதிவுலகில் தங்களுக்குள் தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்குள் மட்டுமே ஓட்டையும் கருத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மையாவும் இருக்கலாம்.

தன் உணர்வுகளையும். சோகம் சந்தோஷம் குடும்பம் நட்பு. என அனைத்தையும் பகிருமிடமாக பதிவுலகமிருப்பதால் இங்கும் ஓர் பலத்த எதிர்பார்ப்பு இருகிறது.நம் எண்ணங்களுக்கு கருத்துக்கள். மற்றும் ஓட்டுக்கள் மூலம் அங்கீகரிக்கபட்ட வேண்டுமென நினைக்கிறோம். அது தவறில்லை. ஆனால் ஓட்டும் கருத்தும் மட்டுமே அதை தீர்மானிப்பதில்லை என்பதையும் உணரவேண்டும்.அப்படிப்பார்தால் பலபலருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவேயில்லை.நேரம்கிடைதால் பட்டியலிடப்பார்கிறேன்.

கூகில் மூலம் நிறைய தளங்களுக்கு சென்றுள்ளேன். அப்பப்பா என்ன அருமையான கவிதைகள்.மற்றும் படைப்புகள் பலயிடங்களில் கொட்டிக்கிடக்கிறது தெரியுமா? ஆனால் அங்கே ஓட்டுபெட்டியும் கருத்துப்பெட்டியும் காலியாகவேயிருக்கின்றன. சிலதுகளில் ஒன்றிரண்டு கருத்தும் ஓட்டும் உள்ளன. அதற்காக அதெல்லாம் நன்றாகவேயில்லை அவைகளெல்லாம் படைப்புகளேயில்லையென ஆகுமா?

ஓட்டும் கருத்தும்   படைப்பவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்காகதானே. இவைகள் மட்டுமே படைப்பாளர்களை உருக்குவாக்குவதில்லை.
அதையுணர்ந்து படைப்பவர்கள் தங்கள் படைப்புகளை தொடருங்கள்.ஒரே ஒருவருடைய கருத்தும்கூட நம் படைப்பவைகளுக்கு பலத்தை தரலாம். அல்லது கருத்துக்களோ ஓட்டுக்களோ இல்லையென்றாலும் என்றாவது நம் எழுத்துகள் பிறரைச் சென்றடையும் என்று நம்பிக்கையோடு எழுதுங்கள்.

ஓட்டுகளும்.கருத்துகள் குவியும் அனைத்தும் நல்லபடைப்புகள்தான் என்பதல்ல. ஓட்டுகளும் கருத்துகளே இல்லாத படைப்புகளும் நன்றாக இல்லையென்றும் அர்த்தமல்ல.ஆகவே. படைப்புகள் நம் எண்ணத்தில் உருவாகி நம் எழுதுகளில் உயிர் பெறுகிறது.அதை இப்பூமியில் உலாவவிடுங்கள் நிச்சயம் அது வளர்ந்து ஆளாகி சிலரையாவது சென்றடைந்து நமக்கு சிறப்பைத் தேடித்தரும்..

முடிந்தவரை அனைவருக்கும் நமது ஊக்கனமென்னும் கருத்துக்களை தரமுயல்வோம்.

என்னங்கப்பு நான் சொல்வது சரிதானே?.......................

டிஸ்கி// அதிகபட்சம் எல்லார் பதிவிலும். வந்துபோகும் வாசிக்கும் பெருமக்களே வாசித்துவிட்டு மறக்கம ஓட்டையும் போட்டுவிட்டுபோங்கன்னு இங்கேயும் ஓட்டுகேட்கும் மக்கள். ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

28 கருத்துகள்:

  1. பதிவுலகின் யதார்த்த அரசியலைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் போன்று தான் என் அனுபவமும், பல தளங்களில் காத்திரமான படைப்புக்கள் இருந்தும் பதிவர்கள் சென்று படிப்பதில்லை....
    அல்லது அவர்களைக் கண்டு கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  2. இங்கு குழுவாக இயங்குகிறார்கள் என்பது உண்மைதான். முடிந்தவரை நான் படிக்கும் தளங்களில் என் கருது இருக்கும். சில நேரம் நேரமின்மையால் கருத்து இடாமல் ஓட்டு மட்டும் போடுவதும் உண்டு .

    இந்தப் பிரச்சனை எதுவும் வேண்டாம் என்றுதான் நான் என் தலத்தில் இருந்து (பாகீரதி ) ஓட்டு பட்டைகளை நீக்கி விட்டேன்.

    எனது நண்பர் ஒருவர் இதை சொல்லுவார்
    "ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
    அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்"

    எத்தனை உண்மை இது

    பதிலளிநீக்கு
  3. நிரூபன் கூறியது...
    பதிவுலகின் யதார்த்த அரசியலைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் போன்று தான் என் அனுபவமும், பல தளங்களில் காத்திரமான படைப்புக்கள் இருந்தும் பதிவர்கள் சென்று படிப்பதில்லை....
    அல்லது அவர்களைக் கண்டு கொள்வதில்லை
    //

    ஆமாம் நிரூபன் இங்கும் அரசியாலாகிவிட்டதோ என எண்ணம் தோன்றும் அளவுக்கு வந்துவிட்டது.

    காத்திரமான படைப்புகளைகண்டு. அதில் சிலரின் ஆதங்கங்களையும் கண்டபிந்தான் இப்பதிவே நிரூபன். நாமெல்லாம் என்ன எழுதிக் கிழிக்கிறோம் என்று எண்ணும் அளவிற்க்கு சிலரின் படைப்புகள். நிச்சயம் அவர்களின் படைப்புகளை ஊக்குவிக்கவேண்டுமென நினைத்து கருதிடுவதோடு தனிமடலும் எழுதுவேன்..

    மிக்க நன்றி நிரூபன்.

    பதிலளிநீக்கு
  4. //எல் கே கூறியது...
    இங்கு குழுவாக இயங்குகிறார்கள் என்பது உண்மைதான். முடிந்தவரை நான் படிக்கும் தளங்களில் என் கருது இருக்கும். சில நேரம் நேரமின்மையால் கருத்து இடாமல் ஓட்டு மட்டும் போடுவதும் உண்டு .//


    உங்கள் கருத்தை அனைத்திடங்களிலும் பார்க்கிறேன் கார்த்திக் பாராட்டுகள்.

    //இந்தப் பிரச்சனை எதுவும் வேண்டாம் என்றுதான் நான் என் தலத்தில் இருந்து (பாகீரதி ) ஓட்டு பட்டைகளை நீக்கி விட்டேன். //

    ஆகா இது நல்ல ஐடியாவா இருக்கே நானும் செய்திடலாமே..

    //எனது நண்பர் ஒருவர் இதை சொல்லுவார்
    "ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
    அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்"

    எத்தனை உண்மை இது//

    உண்மையோ உண்மை கார்த்திக்.
    ஓட்டும் கருத்தும் நிரம்புகையில் ஆகா என சந்தோஷம் படும் மனம் அது சற்றுகுறையும்போது நாம் சரியாக எழுதவில்லையோ என் சங்கடத்தை உருவாக்கும் நிலையை ஏற்படுத்துவதை தவிர்க்கவேண்டும்..

    நன்றி கார்த்திக் கருத்துக்களை பகிர்ந்ததில்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே,
    நாம் எழுதுவது விமர்சிக்க்கப் படுவது ஒரு மகிழ்ச்சியை(?) தருவது உண்மைதான்.ஓட்டு என்பதை பெரிதாக நினைக்க‌ அவசியமில்லை என்பது என் கருத்து.நான் பிடித்த பதிவுகளை விமர்சிப்பதும் சில சமயம் வாக்களிப்பதும் உண்டு,
    நனறி

    பதிலளிநீக்கு
  6. ஒரு நாளில், பல நூறு பதிவுகள் எழுதப்படுகின்றன. அத்தனையும் வாசித்து உற்சாகப்படுத்துவது யாருக்கும் இயலாத காரியம். நான் வாசிக்கும் பதிவுகளுக்கு மட்டும் தான் , வோட்டும் பின்னூட்டமும் இட முயல்கிறேன். வேலைப்பளு காரணமாக சனி - ஞாயிறு - சில சமயம், வெள்ளி கிழமைகளில் கூட பதிவுகள் பக்கம் வர இயலாது. அங்கீகாரத்துக்கு மட்டுமே பதிவுகள் எழுதுவதை விட, ஆத்ம திருப்திக்காக பதிவுகள் எழுதும் போது, இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பது அனுபவத்தில் உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சரியான கருத்துக்கள்.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  8. சார்வாகன் கூறியது...
    வணக்கம் நண்பரே,
    நாம் எழுதுவது விமர்சிக்க்கப் படுவது ஒரு மகிழ்ச்சியை(?) தருவது உண்மைதான்.ஓட்டு என்பதை பெரிதாக நினைக்க‌ அவசியமில்லை என்பது என் கருத்து.நான் பிடித்த பதிவுகளை விமர்சிப்பதும் சில சமயம் வாக்களிப்பதும் உண்டு,
    நன்றி//

    வாங்க நண்பரே.
    அதைதான் நானும் சொல்கிறேன் ஓட்டால்தான் படைப்புகள் அங்கீகரிக்கபடுகிறது என்பதை விட்டுவிட்டு ஆத்மார்தமாக அதம திருப்திக்காக எழுதினால் அது பெரும் சிறப்பு. தங்களின் வருகைக்கும் அன்பான கருதிற்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  9. Chitra கூறியது...
    ஒரு நாளில், பல நூறு பதிவுகள் எழுதப்படுகின்றன. அத்தனையும் வாசித்து உற்சாகப்படுத்துவது யாருக்கும் இயலாத காரியம். //

    அது சரிதான் வேலைவெட்டியில்லாத என்னைபோன்றோருக்கூட இயலாத காரியம்தான். இருந்தாலும் நமக்கு யாருடைய பதிவையாவது படிக்க கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கலூக்காக சிறு கருத்து பதிவதில் அவர்கலுக்கும் ஒரு மகிழ்ச்சி நமக்கும் ஒரு திருப்தி.

    //நான் வாசிக்கும் பதிவுகளுக்கு மட்டும் தான் , வோட்டும் பின்னூட்டமும் இட முயல்கிறேன். வேலைப்பளு காரணமாக சனி - ஞாயிறு - சில சமயம், வெள்ளி கிழமைகளில் கூட பதிவுகள் பக்கம் வர இயலாது. //


    சித்துக்கா அதை நீங்க சொல்லவேண்டியதேயில்லை எங்கு நோக்கினும் தங்களின் சிரித்தமுகம் பிரகாசிப்பதை பார்த்துள்ளேன் வாழ்க வளமுடன்..

    //அங்கீகாரத்துக்கு மட்டுமே பதிவுகள் எழுதுவதை விட, ஆத்ம திருப்திக்காக பதிவுகள் எழுதும் போது, இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பது அனுபவத்தில் உணர்கிறேன்.//

    நிச்சயமாக ஆத்ம திருப்திக்காக எழுதுவதில் ஒரு அலாதியின்பம்.
    கருத்துக்காகவோ ஓட்டுக்காகவோ எழுதுவதைவிட அதில் திருப்தி அதிகம்.

    இனியபாதையில் http://fmalikka.blogspot.com என்ற என் வக்கு நீரோடை கலைச்சாரல். இரண்டிலும் வருகைதருவதுபோல் யாரும் அங்கு வருவதில்லை அதற்காக நான் ஒருபோதும் சிறிதும் வருந்தியதில்லை. அது என் ஆன்மாவுக்காக.


    அழகாக விளக்கமளித்த சித்ரா [க்கா]வுக்கு பாரட்டோடு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  10. Amudhavan கூறியது...
    சரியான கருத்துக்கள்.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

    வாங்க அமுதவன் சார்.
    தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  11. சலாம் தோழி! என்ன.. தலைப்பே ரொம்ப சலித்துக் கொண்டு ஆரம்பிச்சிருக்கீங்க? :))

    நீங்க சொல்வது உண்மைதான் மலிக்கா. நம் பதிவைப் படிப்பவர்கள் கருத்துக்களை நம்முடன் பகிர்கிறார்களோ, இல்லையோ நம்முடைய கருத்துக்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்தால் சரி என்றுதான் நானும் எழுதுகிறேன். அதனால் எந்த பாதிப்பும் மனதில் ஏற்பட்டதில்லை. அதேசமயம் நமக்காக நேரம் ஒதுக்கி வந்து கருத்து சொல்லும்போது நிச்சயம் சந்தோஷமாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. நேரமில்லாமல் எத்தனையோ பதிவுகளைப் படிக்க இயலாமல் போனாலும், சில தளங்கள் ஓபன் ஆவது ரொம்ப ஸ்லோவாக இருப்பதாலேயே என் கருத்துக்களைப் பதிய முடியாமல் போகிறது மலிக்கா. உங்கள் தளத்துக்கும் அதுபோல் பலமுறை வந்து (இதே காரணத்தால்) கருத்து சொல்ல முடியாமல் திரும்பியிருக்கிறேன் :(

    ஓட்டு என்பது நம் பதிவுகளைப் பார்க்காத மற்ற மக்களிடம் அதை எடுத்துச் செல்வதற்காகவே! அது 2 ஓட்டாக இருந்தாலும் சரிதான், சேரக்கூடியவை தன்னால் போய்ச்சேரும். நாம் கவலைப்பட வேண்டியதில்லை :) இப்படிதான் நானும் போய்க்கொண்டிருக்கிறேன், எந்த சஞ்சலமும் இல்லாமல் :-)

    பதிலளிநீக்கு
  12. எங்கே தேடுவேன்....!
    எங்கே தேடுவேன்........!
    புகழை...! ஓட்டை...!
    எங்கே தேடுவேன்...! என்றில்லாமால்
    எந்த ஓர் நபரின் மனதையும் புண்படுத்தமால்... எழுதுகிற கருத்துக்கள்... கவிதைகள்... என்றும் சிரஞ்சீவிதான்....! அதற்கு ஒட்டு விழாவிட்டாலும் அது என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்...!

    ஆனால்... இந்த வலையுலகத்தினை சிலர் தங்கள் மன அரிப்புக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும்போதுதான் இந்தப்பக்கமே தலைவைத்து படுக்கக் கூடாது என்ற எண்ணம் உதயமாகிறது....! இதில் நல்லோரின் சிறந்த பதிவுகளும் அடிபடுகின்றன...!

    தனிமனித தாக்குதல்.. நியாயமில்லா.. நேர்மையற்ற... கருத்துக்கள்... தாங்கள் சொல்வதுதான் சரியான கருத்து என்ற ஆணவக் கருத்து... தான் வெளிநாட்டில் அடிமையாய் வாழும்போதே... தன் தாய்நாட்டையே கேலி..நக்கல்..நையாண்டி செய்தல்..! போன்ற கருத்து திணித்தலை விட்டொழித்து... கருத்து திணித்தல் இல்லாமல் எல்லோரும் ஏற்கும் கருத்தினை சொன்னால் இந்த வலையுலகமே மகிழ உலகம் ஆகும்...!

    ஆனா....!
    போயும்... போயும்... நீங்களாவது ஒட்டுபட்டைய நீக்கிறதாவது....
    காமடி பண்றீங்களா கவிஞர் மலிக்காவே...!

    பதிலளிநீக்கு
  13. உண்மைதான் மலீக்கா..நிறைய பதிவர்களின் படைப்பு அற்புதமாக இருக்கிறது , ஓட்டுப்பட்டையும் கருத்துரைகளும் இல்லாமல்..:)

    பதிலளிநீக்கு
  14. ஒரே ஒருவருடைய கருத்து கூட நமக்கு ஊக்கம் தரலாம்
    மிகச் சரியான வார்த்தை
    நம் பதிவை மிகச் சரியாக படித்துள்ளார்கள் என்பது மட்டும்
    விளங்கும்படியாக ஒரு வார்த்தை மட்டும் இருந்தால் போதும் சரியா?
    இவ்வளவு எழுதி ஒட்டுபோடாமல் போனால் சாமி நிச்சயம்
    கண்ணைக் குத்தும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. அன்பின் மலிக்கா நீங்கள் தொட்ட தலைப்பு....உண்மையில் சிலர் கவிதையில் எந்த சாரமுமே இருக்காது. ஒரு சதத்திற்கும் பெறுமதி இருக்காது. 23- பதினெட்டு என்று கருத்திருக்கும். அது அவரது குழு மக்கள் தான் அதே பெயர்கள் தான். நான் பல தடவை யோசித்ததுண்டு எதைக் கண்டு இப்படி கருத்திட்டுள்ளனர் என்று. இது தான் இன்று கருத்திடும் நிலையாக நான் கண்டு கொண்டுள்ளேன். நண்பர் என்று கருத்திடுவது. 4 வரிக்கு 40 கருத்திருக்கும். கொஞ்சம் எல்லோரும் யோசித்தால் நல்லது. உங்கள் கருத்திற்கு வாழ்த்துகள் மலிக்கா.--vetha. elangathilakam.
    Denmark.

    பதிலளிநீக்கு
  16. ஸ்மா கூறியது...

    சலாம் தோழி! என்ன.. தலைப்பே ரொம்ப சலித்துக் கொண்டு ஆரம்பிச்சிருக்கீங்க? :))//

    அப்படியல்லதோழி. நிறைய தளங்களில் தங்கள் ஆதங்கங்களைகண்டுதான் இப்பதிவே!

    //நீங்க சொல்வது உண்மைதான் மலிக்கா. நம் பதிவைப் படிப்பவர்கள் கருத்துக்களை நம்முடன் பகிர்கிறார்களோ, இல்லையோ நம்முடைய கருத்துக்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்தால் சரி என்றுதான் நானும் எழுதுகிறேன்.//


    அப்படிதான் நானும் நம்முடையது சிலரையாவது சென்றால்போதும்.

    // அதனால் எந்த பாதிப்பும் மனதில் ஏற்பட்டதில்லை. அதேசமயம் நமக்காக நேரம் ஒதுக்கி வந்து கருத்து சொல்லும்போது நிச்சயம் சந்தோஷமாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. நேரமில்லாமல் எத்தனையோ பதிவுகளைப் படிக்க இயலாமல் போனாலும், சில தளங்கள் ஓபன் ஆவது ரொம்ப ஸ்லோவாக இருப்பதாலேயே என் கருத்துக்களைப் பதிய முடியாமல் போகிறது மலிக்கா. உங்கள் தளத்துக்கும் அதுபோல் பலமுறை வந்து (இதே காரணத்தால்) கருத்து சொல்ல முடியாமல் திரும்பியிருக்கிறேன் :(//

    ஆகா அப்படியா.கொஞ்சகாலமாக என்னுடை தளங்களில் முலகவனம் செலுத்தமுடிவதில்லை தோழி. முதலில் குடும்பம் அதன் நிர்வாகம் நம்தலையில் இருப்பதால் அதை சரியாக கொண்டு சென்றால்தானே மற்றவைகளில் ஈடுபடுவது சுலபமாகும். இன்னும் கொஞ்சகாலம் அப்படிதான் போகுமென நினைக்கிறேன்..மன்னியுங்கள் தோழி ர்ம்ப சந்தோஷமாக தாங்கள் வந்துபோவது. ஓப்பனாகும் நேரத்தில் கருத்திடுங்கள்.

    //ஓட்டு என்பது நம் பதிவுகளைப் பார்க்காத மற்ற மக்களிடம் அதை எடுத்துச் செல்வதற்காகவே! அது 2 ஓட்டாக இருந்தாலும் சரிதான், சேரக்கூடியவை தன்னால் போய்ச்சேரும். நாம் கவலைப்பட வேண்டியதில்லை :) இப்படிதான் நானும் போய்க்கொண்டிருக்கிறேன், எந்த சஞ்சலமும் இல்லாமல் :-)//

    நிச்சயமாக ஓட்டைவைத்து தீர்மானிக்கவேண்டாம் எனத்தான் சொல்கிறேன். ஆத்மதிருப்திக்காகவும். நமக்கு தெரிந்தவைகளையும் இப்படிதளங்களில் வெளியிடமுடிகிறதே எனவும் சந்தோஷமாகவே நானும் எழுதுகிறேன்.. மிக்க நன்றி தோழி தங்களின் அழகிய விளக்கங்களுக்கு. மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  17. //காஞ்சி முரளி கூறியது...

    எங்கே தேடுவேன்....!
    எங்கே தேடுவேன்........!
    புகழை...! ஓட்டை...!
    எங்கே தேடுவேன்...! என்றில்லாமால்
    எந்த ஓர் நபரின் மனதையும் புண்படுத்தமால்... எழுதுகிற கருத்துக்கள்... கவிதைகள்... என்றும் சிரஞ்சீவிதான்....! அதற்கு ஒட்டு விழாவிட்டாலும் அது என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்...!

    ஆனால்... இந்த வலையுலகத்தினை சிலர் தங்கள் மன அரிப்புக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும்போதுதான் இந்தப்பக்கமே தலைவைத்து படுக்கக் கூடாது என்ற எண்ணம் உதயமாகிறது....! இதில் நல்லோரின் சிறந்த பதிவுகளும் அடிபடுகின்றன...!

    தனிமனித தாக்குதல்.. நியாயமில்லா.. நேர்மையற்ற... கருத்துக்கள்... தாங்கள் சொல்வதுதான் சரியான கருத்து என்ற ஆணவக் கருத்து... தான் வெளிநாட்டில் அடிமையாய் வாழும்போதே... தன் தாய்நாட்டையே கேலி..நக்கல்..நையாண்டி செய்தல்..! போன்ற கருத்து திணித்தலை விட்டொழித்து... கருத்து திணித்தல் இல்லாமல் எல்லோரும் ஏற்கும் கருத்தினை சொன்னால் இந்த வலையுலகமே மகிழ உலகம் ஆகும்...!//

    சகோ தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே! அதையுணர்ந்து இவ்வலையுலகம் நடந்தேறினால் மகிழ்வாகவும் ஆரோக்கியமாகதாகவும் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை..

    //ஆனா....!
    போயும்... போயும்... நீங்களாவது ஒட்டுபட்டைய நீக்கிறதாவது....
    காமடி பண்றீங்களா கவிஞர் மலிக்காவே...//


    ஹலோ ஹலோ அப்படியெல்லாம் சொல்லபுடாது ஓக்கே. கூடியவிரைவில் பரிசீலனை செய்யப்படும். வேறு டெம்பிளேட் மாற்றும்போது பாருங்கள்.. அப்ப என்ன் அ செய்வீங்க அப்ப என்ன செய்வீங்க.. ஹி ஹி ஹி

    அறிவுரைகள் வழகிய அருமையான கருத்துகளை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  18. தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...

    உண்மைதான் மலீக்கா..நிறைய பதிவர்களின் படைப்பு அற்புதமாக இருக்கிறது , ஓட்டுப்பட்டையும் கருத்துரைகளும் இல்லாமல்..:)//

    ஆமாக்கா அதான் இந்த ஆதங்கப்பதிவே. மிக்க நன்றிக்கா,,

    பதிலளிநீக்கு
  19. /Ramani கூறியது...

    ஒரே ஒருவருடைய கருத்து கூட நமக்கு ஊக்கம் தரலாம்
    மிகச் சரியான வார்த்தை
    நம் பதிவை மிகச் சரியாக படித்துள்ளார்கள் என்பது மட்டும்
    விளங்கும்படியாக ஒரு வார்த்தை மட்டும் இருந்தால் போதும் சரியா?
    இவ்வளவு எழுதி ஒட்டுபோடாமல் போனால் சாமி நிச்சயம்
    கண்ணைக் குத்தும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    அதேதான் ஒருவார்தையானாலும் அது திருவார்த்தையாக எடுத்துக்கொள்ளலாம்.

    சாமி கண்ணை குத்தியிருக்குமே! ஹி ஹி ஹி

    அன்பான கருத்துகளுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  20. //kavithai கூறியது...

    அன்பின் மலிக்கா நீங்கள் தொட்ட தலைப்பு....உண்மையில் சிலர் கவிதையில் எந்த சாரமுமே இருக்காது. ஒரு சதத்திற்கும் பெறுமதி இருக்காது. 23- பதினெட்டு என்று கருத்திருக்கும். அது அவரது குழு மக்கள் தான் அதே பெயர்கள் தான். நான் பல தடவை யோசித்ததுண்டு எதைக் கண்டு இப்படி கருத்திட்டுள்ளனர் என்று. இது தான் இன்று கருத்திடும் நிலையாக நான் கண்டு கொண்டுள்ளேன். நண்பர் என்று கருத்திடுவது. 4 வரிக்கு 40 கருத்திருக்கும். கொஞ்சம் எல்லோரும் யோசித்தால் நல்லது. உங்கள் கருத்திற்கு வாழ்த்துகள் மலிக்கா.--vetha. elangathilakam.
    Denmark.//

    வாங்க மேடம். தாங்கள் சொல்வது சரியே! குழுவாகவோ அல்லது அவர்களுக்குள்ளே அதுபோல் செய்துகொள்கிறார்களோன்னு தோன்றுவதுபோலிருக்கும்..

    யோசிக்கதான் என்னையும்சேர்த்து இதை எழுதியுள்ளேன்..

    மிக்க நன்றிமேடம் தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருதிற்கும்..மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  21. எங்கே நான் போட்ட கமெண்ட் கானும்


    நான் நினச்சத தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க , போங்கப்பா நீங்களும் உங்கள் ஓட்டும்

    எல்லாம் அரசியல் மயம்

    பதிலளிநீக்கு
  22. Jaleela Kamal கூறியது...
    எங்கே நான் போட்ட கமெண்ட் கானும்.//

    என்னது கருதுபோட்டீங்களா யக்கோவ் எனக்கு வரலையே வந்திருந்தா பப்ளிஷ் கொடுத்திருப்பேனே.

    எங்கோ என்னமோ சதி நடந்திருக்கு.. ஹி ஹி


    //நான் நினச்சத தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க , போங்கப்பா நீங்களும் உங்கள் ஓட்டும்

    எல்லாம் அரசியல் மயம்.//

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. ஆனால் பதிவுலகில். இதெல்லாம் வேண்டாமப்பா. அப்படிங்கிறேனாம்.. ஹா ஹா.

    நம் எல்லாருடைய கருத்தும் இதுவாகவே உள்ளது. இனியாவது அப்படி நடக்காமல் பர்த்துக்கொள்வோம்.. சரிதானேக்கா..

    பதிலளிநீக்கு
  23. புத்திசாலித்தனமான டைட்டில்.. நல்ல உள்ளடக்கம் உள்ள பதிவு.

    தினமும் சராசரி 400 பதிவுகள் வருது.. இதில் மொய்க்கு மொய் சிஸ்டம் ஃபாலோ பண்றாங்க.. அதை தப்புன்னும் சொல்ல முடியாது.. சரின்னும் சொல்ல முடியாது,. அவங்கவங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்றாங்க.. ஆனா சரக்கு உள்ள ஆள் நிலைச்சு நிற்பான்.. அது திண்ணம். ஆனா லேட் ஆகலாம்.

    பதிலளிநீக்கு
  24. >>thamizmanam

    No Such Post



    உங்க பிளாக்ல 10 பேர் கமெண்ட் போட்டிருக்காங்க. ஆனா தமிழ்மணத்துல 4 ஓட்டு தான். ஏன்னு பார்த்தா தமிழ்மணத்துல ஏதோ ஃபால்ட். ஆனா பார்க்கறவங்க ஓட்டு கம்மினு நினைப்பாங்க.. மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்க்..

    பதிலளிநீக்கு
  25. அங்கீகாரத்துக்கு மட்டுமே பதிவுகள் எழுதுவதை விட, ஆத்ம திருப்திக்காக பதிவுகள் எழுதும் போது, இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பது அனுபவத்தில் உணர்கிறேன். //i agreed..

    பதிலளிநீக்கு
  26. //சி.பி.செந்தில்குமார் கூறியது...

    புத்திசாலித்தனமான டைட்டில்.. நல்ல உள்ளடக்கம் உள்ள பதிவு.//

    ஹை நெசமாவா! நன்றிங்கோ.

    // தினமும் சராசரி 400 பதிவுகள் வருது.. இதில் மொய்க்கு மொய் சிஸ்டம் ஃபாலோ பண்றாங்க..//

    உணையோ உண்மை..

    //அதை தப்புன்னும் சொல்ல முடியாது.. சரின்னும் சொல்ல முடியாது,. அவங்கவங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்றாங்க.. ஆனா சரக்கு உள்ள ஆள் நிலைச்சு நிற்பான்.. அது திண்ணம். ஆனா லேட் ஆகலாம்.//

    இதுவும் சரிதான். லேட்டானாலும் லேட்டஸ்டா ஆகட்டும் என நம்புவோம்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. // சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>thamizmanam

    No Such Post
    உங்க பிளாக்ல 10 பேர் கமெண்ட் போட்டிருக்காங்க. ஆனா தமிழ்மணத்துல 4 ஓட்டு தான். ஏன்னு பார்த்தா தமிழ்மணத்துல ஏதோ ஃபால்ட். ஆனா பார்க்கறவங்க ஓட்டு கம்மினு நினைப்பாங்க.. மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்க்..///

    தமிழ்மணத்துல எப்போதும் அப்படிதான்.ஓட்டுபோட யாருக்கும் மனசில்லையோ அல்லது அங்கு பால்ட்டோ பால்ட்டோ. யாருக்கு தெரியும்.. அது சரி யார் அந்த ”மிஸ்” ஹி ஹி..

    பதிலளிநீக்கு
  28. //குணசேகரன்... கூறியது...

    அங்கீகாரத்துக்கு மட்டுமே பதிவுகள் எழுதுவதை விட, ஆத்ம திருப்திக்காக பதிவுகள் எழுதும் போது, இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பது அனுபவத்தில் உணர்கிறேன். //i agreed..//

    உண்மைதான் குணா
    ஆத்மா திருப்திக்காக எழுதுவதில் ஓர் திருப்திதான்.. மிக்க நன்றி தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது