நல்லவர்கள் போர்வையில்
தீயவர்களின் ஆட்டம்
நல்லவைகளைக் கூட
கெட்டவைகளாக்கும்
சுயநலத்தின் பார்வையில்
வசதியுள்ளோரின் நட்பு
தூய்மையின் சின்னம்
வசதியற்றோரின் நட்பு
அசிங்கத்தின் அங்கம்
தாயிமைக்கு ஈடாகும் நட்பையும்
தரம் பிரித்து தவறாக்கிப் பேசும்
துன்பப்படும்போது என்னெவென்று
கேட்காத உறவுகள்
தோள்கொடுப்போரையும் சேர்த்து
தூற்றிப் பேசும்போது
உள்ளம் உருத்தாத சுயநலவா[வியா]திகள்
கெட்டவர்களெல்லாம்
நல்லவர்களாகிறார்கள்
இது நாகரிக காலத்தின் சாபம்
நல்லவர்கள்கூட
கெட்டவர்களாக்கப் படுகிறார்கள்
இதுதான் நல்லவர்களுக்கு
கிடைக்கப்படும் லாபம்
படைத்தவனுக்கு பயந்தவர்
கைவிடப்படுவதில்லை
படைப்பினங்களுக்கு பயப்படவேண்டிய
கட்டாயமில்லை
தூற்றியவர்கள் ஒருநாள்
போற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
கெட்டவர்களெல்லாம்
பதிலளிநீக்குநல்லவர்களாகிறார்கள்
இது நாகரிக காலத்தின் சாபம்
நல்லவர்கள்கூட
கெட்டவர்களாக்கப் படுகிறார்கள்//
இத புரிந்துக்கொள்ள நீங்க ரொம்ப லேட்டு மலிக்கா. நாங்களெல்லாம் எப்பவோ பார்த்தாச்சி.. இது தான்மட்டும் நலமோடு வாழவிரும்பும் உலகமாக மறி வெகு காலமாகிவிட்டது. அதிலும் குறிபாக சொந்தங்கள் நம்மை மட்டம்தட்ட காத்திருக்கும் மனிதராட்ஷங்கள்.
மனதில் ரணங்களோ வார்த்தைகளில் வலி தெரிகிறது. இதுதான் மலிக்கா உலகம்.இதுபோன்றவர்களால்தான் நாங்கள் தூரதேசத்தில் மனம் கசங்கிபோய் பலவருடங்கள் சொந்தங்களை இழந்து கிடந்தோம். இதோ கை நிறைய பணம் எல்லாம் மறந்த மனிதர்களாய் எங்கலைச்சுற்றி சொந்தங்கள் புடை சூழ இன்று நாங்கள்...
தூற்றியவர்கள் ஒருநாள்
பதிலளிநீக்குபோற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...//
காயம் ஆறிவிடும் வடு?????????.
நல்லவரிகளில் கவிதை. வாழ்த்துசொல்கிறேன் வலியோடு
1975 தில் எனக்கு நடந்த நிகழ்ச்சி. மன்னித்துவிட்டதாக சொன்னேன் ஆனால் இன்றும் மறக்கமுடியவில்லை.
பதிலளிநீக்குவடுவாக மாறிவிடும் சில காயங்கள் மறக்கப்படுவதில்லை மலிக்கா. உன் வரிகளை நான் எழுதியதாக நினைத்துப் படித்தேன் அருமைமா.
கவிதை எழுதுவதென்பது ஒரு வரம் அதை நீ உணர்வுகளைக்கொண்டு எழுதுவதில் கைதேர்ந்தவளாக இருக்கிறாய். கடவுளின் அருள் என்றும் உனக்கு துணைவரும்..
நல்லவர்கள் போர்வையில்
பதிலளிநீக்குதீயவர்களின் ஆட்டம்
நல்லவைகளைக் கூட
கெட்டவைகளாக்கும்
unmai vatikal
vaalthukal...malikka..
Vetha. Elangathilakam.
Denmark.
//படைத்தவனுக்கு பயந்தவர்
பதிலளிநீக்குகைவிடப்படுவதில்லை
படைப்பினங்களுக்கு பயப்படவேண்டிய
கட்டாயமில்லை//
அருமை.வாழ்த்துக்கள்.
//இத புரிந்துக்கொள்ள நீங்க ரொம்ப லேட்டு மலிக்கா.//
பதிலளிநீக்குநானும் அதைதான் சொல்லவந்தேன்.
கவிதை எழுதுவதில் கில்லாடியாக இருந்தாலும் மனதளவில் குழந்தையாக இருக்கீங்கக்கா. வெளியுலகதையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. இல்லையின்னா உங்களையே இல்லையின்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க ஹா ஹா..
நான் உங்க சிஸ்யன் ஆனா
என்பெயர் மட்டும் குரு..
இத புரிந்துக்கொள்ள நீங்க ரொம்ப லேட்டு மலிக்கா. நாங்களெல்லாம் எப்பவோ பார்த்தாச்சி.. இது தான்மட்டும் நலமோடு வாழவிரும்பும் உலகமாக மறி வெகு காலமாகிவிட்டது. அதிலும் குறிபாக சொந்தங்கள் நம்மை மட்டம்தட்ட காத்திருக்கும் மனிதராட்ஷங்கள்.
பதிலளிநீக்குமனதில் ரணங்களோ வார்த்தைகளில் வலி தெரிகிறது. இதுதான் மலிக்கா உலகம்.இதுபோன்றவர்களால்தான் நாங்கள் தூரதேசத்தில் மனம் கசங்கிபோய் பலவருடங்கள் சொந்தங்களை இழந்து கிடந்தோம். இதோ கை நிறைய பணம் எல்லாம் மறந்த மனிதர்களாய் எங்கலைச்சுற்றி சொந்தங்கள் புடை சூழ இன்று நாங்கள்...//
ஓ அப்படியா நாந்தான் லேட்டா. அனுபவசாலிகள் சொல்லும்போது அது சரியாகதானிருக்கும்.
மோசமான உலகமுன்னு உலகத்துமேல பழியபோட்டு ஈசியா தப்பிதுவிடுகிறோம் இல்லையா. மோசம் செய்வது உலகமில்லை. அதில் வாழ்ம் மனிதர்கள். அதுவும் ஆறறிவு படைத மனிதர்கள். அவர்களின் நியாயம் மட்டுதான் உயர்வு. மற்றவர்களின் நியாயம் மட்டம்.இப்படி எண்ணுபவர்களை என்ன செய்ய இறைவன் இருக்கிறான் அனைத்தையும் அறிந்தவனாக அதனால் நல்லதயைம் கெட்டதையும் அவனே அறிவான் அதர்கான் கூலிகளை நிச்சயம் தருவான்..
மிக்க நன்றி தேடுபவன். நல்ல பெயர்தான் நல்லவர்களையாக தேடுறீங்களோ?..
///தூற்றியவர்கள் ஒருநாள்
பதிலளிநீக்குபோற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...// உண்மை தான்
அன்புடன் மலிக்கா...
பதிலளிநீக்குஉங்க புது டிஷைன்(இப்பத்தான் பார்க்கிறேன்:)) சூப்பராக இருக்கு, எனக்குப் பிடித்த கலர்.
கவிதை கலக்கல்.
முதலாவதாக போட்டிருக்கும் படம்தான், உள்ளே வரமுன், திரும்பி ஓட வைக்குது, உற்று உற்றுப் பார்த்தேன் முகமூடி எனத் தெரிஞ்சுதா.... அப்பாடா என வந்திட்டேன் உள்ளே!!!!!.
இதான் உலகம்
பதிலளிநீக்குதூற்றியது மன்னிக்கப்படும்
பதிலளிநீக்குஆனால் மறக்கப்படுவதில்லை
கவிதையின் முத்தாய்ப்பு வரிகளை
விட்டு விலக எனக்கு வெகு நேரம் ஆனது
உண்ர்வுபூர்ணமான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்லி இருப்பது எத்தனை உண்மை ? இன்று நல்லவர்களுக்கு இடமில்லை அதுதான் யதார்த்தம்
பதிலளிநீக்குவேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
// சுஜி கூறியது...
பதிலளிநீக்குதூற்றியவர்கள் ஒருநாள்
போற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...//
காயம் ஆறிவிடும் வடு?????????.
நல்லவரிகளில் கவிதை. வாழ்த்துசொல்கிறேன் வலியோடு//
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. அப்படிங்கிறீர்களா. உண்மைதான் சுஜி.நன்றிமா..
// சிவகாமி கூறியது...
பதிலளிநீக்கு1975 தில் எனக்கு நடந்த நிகழ்ச்சி. மன்னித்துவிட்டதாக சொன்னேன் ஆனால் இன்றும் மறக்கமுடியவில்லை.
வடுவாக மாறிவிடும் சில காயங்கள் மறக்கப்படுவதில்லை மலிக்கா. உன் வரிகளை நான் எழுதியதாக நினைத்துப் படித்தேன் அருமைமா.
கவிதை எழுதுவதென்பது ஒரு வரம் அதை நீ உணர்வுகளைக்கொண்டு எழுதுவதில் கைதேர்ந்தவளாக இருக்கிறாய். கடவுளின் அருள் என்றும் உனக்கு துணைவரும்..//
அதென்னவோ பலநேரம் மனிதர்களில் அனேகம் பேரின் நிலை இப்படித்தான்மா.. வடுக்கள் மறைவதில்லை. அதனால் அது மறக்கப்படுவதில்லை.
நீங்கள்தான் எழுதினீர்கள் என் மனதில் புகுந்து.
தங்களின் வாழ்த்தும் ஆசியும் என்றும் கிடைக்க இறைவன் அருளட்டும்..மிக்க நன்றிமா..
// vettha. கூறியது...
பதிலளிநீக்குநல்லவர்கள் போர்வையில்
தீயவர்களின் ஆட்டம்
நல்லவைகளைக் கூட
கெட்டவைகளாக்கும்
unmai vatikal
vaalthukal...malikka..
Vetha. Elangathilakam.
Denmark.//
வாங்க வாங்க மேடம். தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துகளுகும் மிக்க நன்றி.தொடர்ந்து வாருங்கள்.ஊக்கம் தாருங்கள்..
//தூற்றியவர்கள் ஒருநாள்
பதிலளிநீக்குபோற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...//
வலிகள் நிறைந்த வரிகள்...
இந்த அனுபவம் எனக்கும் உண்டு..
////தாயிமைக்கு ஈடாகும் நட்பையும்
பதிலளிநீக்குதரம் பிரித்து தவறாக்கிப் பேசும்///
////துன்பப்படும்போது என்னெவென்று
கேட்காத உறவுகள்
தோள்கொடுப்போரையும் சேர்த்து
தூற்றிப் பேசும்போது
உள்ளம் உருத்தாத சுயநலவா[வியாதிகள்/////
இந்த வரிகள் அற்புதம்....!
அருமை....! excellent....!
hearly congrarts youuuuuuuuuuuuuuuuuuuuuuuu.....!