நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அட எல்லாம் உங்களாலதான்..

 இது காவியத்திலகம் தந்தை. ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்களின் தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியீட்டு விழாவில் என் எழுத்துக்கள் மூலம் என்னையும் கெளரவப்படுத்தும் விதமாக சகோதரர். சங்கமம் தொலைகாட்சி நிறுவனர். திரு கலையன் ரபீக் அழைத்தபோது அதை சற்றும் எதிர்பார்க்காத எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   சிறுகதை எழுத்தாளர் தந்தை சேக் சிந்தா மதார் அவர்கள் கையால் பரிசு வழங்கப்பட்டது. சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

பதிவுலகம் இப்படியெல்லாம் கூட செய்யுமா? என்ன செய்யுமா? இதோ செய்திருக்கே! கீழேயிருக்கும் விருதுகள் நம்ம நீரோடைக்காக வழங்கிய விருதுகள்..ஹா ஹா என்னமோ ஏதோன்னு நினைச்சீங்களா! என்னா ஒரு பில்டப்பு..

நம் எழுத்தை மேலும் மெருகேற்றிக்கொள்ளவும். நம்முள் எழும் எண்ணங்களுக்கு ஊக்கம் கொடுத்து இன்னும் பல நல்ல கருத்துகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கொடுக்கப்படும் இதுபோன்ற விருதுகள் வரவேற்கப்படவேண்டியவைகள்..
இது நம்ம அப்சரா இல்லம் அப்சரா அவர்கள் தந்த விருது


இது நம்ம இனிய இல்லம் ”சினேகிதி” ஃபாயிஜா வழங்கிய விருது.
 இது நம்ம சமையல் அட்டகாசம். ஜலீலாக்கா கொடுத்த விருது.

சரி சரி இதோட நிறுத்திக்கிவோம். அப்புறமால மத்தவைகளை பகிர்ந்துகலாம்.விருதுகளை வழங்கிய பேரன்பு நிறைந்த மனங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

அட  என் எழுத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகட்டும் விருதுகளாகட்டும் பரிசுகளாகட்டும் அனைத்தும் உங்களால்தான்.அதனால் இங்கு வருகைதரும் அனைவருக்கும்.மற்றும் நெஞ்சார வாழ்த்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்ன இவ்வளவு பில்டப்பு கொடுத்துபுட்டு  நீ யாருக்கும் கொடுக்கலையான்னு கேட்கிறீங்களா ம்ஹூம் இதெல்லாம் எனக்கு மட்டும்தான்.ஒத்தவங்க தந்தத மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடாதுன்னு எங்கவீட்டு எலி சொன்னுச்சி. அதனால நாங்களே தயார் செய்து புது விருது வழங்குவோம் கூடியவிரைவில்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

15 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் மலிக்கா
  இன்னும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. (வழக்கம்போல) வாழ்த்துகள் மலிக்கா!! ;-))))

  பதிலளிநீக்கு
 3. HEARTY CONGRATULATIONS.
  மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  //ஒத்தவங்க தந்தத மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடாதுன்னு எங்கவீட்டு எலி சொன்னுச்சி.//

  கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கு!

  //அதனால நாங்களே தயார் செய்து புது விருது வழங்குவோம் கூடியவிரைவில்..//

  இதுவும் கரெக்ட் தான். வாழ்க! வளர்க!! மேலும் மேலும் சிறக்க அன்பான வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 5. கருத்துகளையும் வாழ்த்துகளையும் வழங்க்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பான மலர்கொத்துக்களோடு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

  என்றும்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள்!
  வாழ்த்துக்கள்!
  வாழ்த்துக்கள்!

  இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள்.
  நீ யாருக்கும் கொடுக்கலையான்னு கேட்கிறீங்களா!
  உண்மை . நான் விதி விலக்கு.
  ஒளி தரும் விளக்கு தேவை உங்களிடம் ஒரு பரிசு கவிதையுடன். பெண் என்றால் பாசம், பரிவு , தாய்மை இறக்கம் இன்னும் பல. பின் ஏன் தயக்கம் பரிசு தர . எல்லா பொருளும் இறைவன் தந்தது . அதிலும் அறிவு பொதுவுடைமை . கொடுத்து மகிழுங்கள்.

  பதிலளிநீக்கு
 8. Assalamuallikum
  Please visit
  அன்புடன் மலிக்காவும் கவிதையும்
  http://nidurseasons.blogspot.com/2011/05/blog-post_26.html
  Jazakallah Khayran
  JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an islamic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness. ...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது