மலைகளெல்லாம்
மலர்களைப்போல் உதிர்ந்து
நீரெல்லாம் நெருப்பாக வழிந்தோட!
வீசும் காற்று விசமாக!
பூக்களெல்லாம் புல்லுருவியாக!
நெஞ்சமெங்கும் வஞ்கமாகி
புன்னகையெல்லாம் போர்க்களமாக!
இப்படியான காலம்
இதோ! இதோ! கண்ணேதிரே
கலக்கத்தை ஏற்படுத்தி
காலச்சக்கரத்தை
வேகமாய் சுழற்றியபடி
நம் கண்முன்னே!
அப்புறம் பார்ப்போமென்று சொல்லி
அந்நொடி மறையும் அழிவும்
எண்ணி முடிக்கும் நொடிக்குள்
எல்லாம் நடந்துமுடியும்.
வாழும்காலம் எங்கே!
வறழும் காலம் எங்கே!
விதிவிட்ட வழியென்று
விரக்திகொள்ளும்.
சக்கரம் சுழவதுபோல்
சுழண்டு ஓடும் காலம்
சல்லடையில் மாட்டிக்கொண்டு
சின்னாபின்னாமாகும்.
யாரும் எதிர்பாரா வேளையில்
யுகங்களெல்லாம் நிமிடங்களாகி
பூகம்பப்பிடியில் உயிர்கள் உறைந்து
பூமிக்கடியில் புதையும்.
சற்றும் நினைத்திறா பொழுதில்
சலாரென எழும் அலைகள்
சுனாமியென்ற பெயரில் உடல்களை
சுக்குநூறாக்கி கிடத்தும்.
வழியும் கண்ணீரைத் துடைக்க
விரல்கள் வருமென்றிருந்தால்
வெள்ளம் வற்றாது
விழியில் நீர் பெருக்கெடுக்கும்.
காலச்சக்கரம் சுழல்கிறது
காலங்கள் வேகமாய் கரைகிறது
அனாச்சாரங்கள் அத்துமீறி
ஆழ்கடலையும் அதிர வைக்கிறது
விரைந்தோடும் காலச்சக்கரத்தோடு
வாழ்க்கையை ஓட்டத் தெரியாமல்
மனிதயினம்!
திக்கற்று தவிக்கிறது
தஞ்சம்புக இடம் தேடித் துடிக்கிறது..
இக்கவிதை அமீரக தமிழ்தேர் மாத இதழ் காலச்சக்கரம் எனும் தலைபிற்காக எழுதியது. இதை அனுப்பியதும் திரு காவிரிமைந்தன் அவர்கள். உடன் அனுப்பிய கருத்துக்கள் கீழே உள்ளவைகள்..
காலச்சக்கரத்தின் பதிவுகள் ... என்னவென்று
கவிதைச்சரம் தொடுத்து நீரும் தந்தீர்!
ஆழிப்பேரலையின் அட்டகாசத்தால்
அடங்கிப்போகுதே மானுட இனமும்தான்!
நீரினில் இப்படி உலகின் பாகங்கள்...
மூழ்கிப் போவது தொடர்கதையாவது மாறாதா?
நடப்பைக்கூட நம்கவிதையில் பதிவது
எழுத்துப்பணியை ஏற்றவர் செயலன்றோ?
அதையும் முறையாய் கவிதையில்தந்த
திறத்தையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்!
அன்புடன்,
காவிரிமைந்தன்.
மிக்க நன்றி சகோதரர் காவிரிமைந்தன் அவர்களே..
மிக்க நன்றி சகோதரர் காவிரிமைந்தன் அவர்களே..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அருமை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
பதிலளிநீக்குஅருமையா இருக்கு மல்லி
பதிலளிநீக்குநிகழ்கால நிதர்சனத்தை கவியிலே கொண்டுவந்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குமிக அருமையான தெளிவான வரிகள் உண்மை நிலைமை அப்படியே கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்கள் அக்கா..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..