நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்திப்போமா! சென்னையில்.


அன்பு உள்ளங்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு.
சந்திக்கலாமா! சென்னையில், ஆவலாக இருக்கிறேன் வாருங்கள்
”எங்கே”   ”எப்போது” 
முதலில் இதைபடித்துவிட்டு கடைசிபக்கத்துக்கு வாருங்களேன் சொல்கிறேன்.

சமையல் அட்டகாசம் ஜலீலாக்காவை தெரியாதவர்கள் யாருமிருக்கமுடியாதுன்னு நினைக்கிறேன்.
அவர்கள் சென்ற 2 வாரங்களுக்கு முன்  ஊருக்கு சென்றுள்ளார்கள். ”எங்கே” ”வேறெங்கே சென்னைக்குதான்” அவர்களின் தங்கை மகள் திருமணத்திற்காக சென்றுள்ளார்கள்,திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

இன்னொறு முக்கிய செய்தி நல்லதை ஏற்றுக்கொள்வதுபோல் சில சங்கடங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதாய் அவர்களின் தந்தைக்கு காலில் ஆப்ரேஷன் செய்துள்ளர்களாம்.வயது ஆக ஆக உடலில் பலகோளாறுகள் ஏற்படுவதும் அதனோடு போராடுவதுமே வாழ்க்கையாகிவிட்டது. எவ்வளவோ மருத்துவசதிகள் வந்தபோதும் மனச்சங்கடத்தைபோக்க மருந்துகளில்லையே! ஆறுதல்கள்தரும் வார்த்தைகளைதவிர.அவர்களின் தந்தை நல்லபடியாக குணமாவும், உடல் ஆரோக்கியத்துடன் வாழவும்,எல்லாம் வல்ல இறைவனிடம் அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்.ஆப்ரேஷன் முடிந்து இன்றோடு நான்காம் நாள் ஆகிறது, நான் அடிக்கடி அக்கவிடம் போனில் தொடர்புகொள்கிறேன்.

அப்புறம் இன்னொரு விசயம். இம்மாத இறுதிக்குள் [31]ஜலீலாக்கா துபை வந்துவிடுவார்கள், அதனால் அவர்களை சந்திக்க நினைக்கும் பதிவர்கள் நாளை மாலை 5-9 மணிவரை  சந்திக்கலாம். ”எங்கே”
’அவங்க கடையில்தான்’ ’கடையெங்கேயிருக்கு’    ”இதோ இங்கேதான்”


Chennai plaza
ideal shop for ladies garments,fancy items, hand bags,
food wear,cosmetics,kids wear etc.
stockists in all types of burkha, abaya,scarf, sahal,dupatta,hijab,etc.

Chennai plaza
No.277/30,Pycrofts Road, ist Floor,[opp:shopa],Thiruvallikkeni ,Chnenni-600 005.

phone: 044 4556 6787
E-mail:Chnenniplazaik@gmail.com


இது மொய்தீன் பாய் போன் நம்பர் 7845367954
மொய்தீன் பாய் அவர்களிடம் ஜலிக்காவைபற்றி தொடர்புகொள்ளலாம்.
இது கபீர்அவர்களின் போன் நம்பர் 9677288721. இவர்களையும் தொடர்புகொள்ளலாம்.

இருங்க இருங்க. இன்னொரு முக்கியமான செய்தி சொல்லமறந்துட்டேனே!
இதேமுகவரியில், இதேகடையில், எனது கவிதை தொகுப்பான உணர்வுகளின் ஓசை கவிதை புத்தகமும் கிடைக்கும். வாங்கிப்படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிப்பீர்கள் என்று எதிர்பார்கிறேன். ஜலிக்காவின் ஏற்பாடுதான் இது. பதிவர்கள் சந்திப்பில் நானும் இருப்பேனுல்ல கவிதை தொகுப்பாய் எப்புடி .

மணிமேகலை வெளியீடு
புத்தகத்தின் விலை 55: ரூ

 என் முதல் கவிதை  தொகுப்பு இது. இதில் வரும் வருவாயை சில நல்லவைகளுக்காக கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். நாமும் ஒன்றும் பெரும் வசதி வாய்ப்புகள் நிறைந்தவர்கள் அல்ல, ஆனபோதும்  நம் எழுத்துக்களால் சில ஆன்மாக்களாவது பயனடையட்டுமே என்ற எண்ணம்தான்.
 மீண்டும் சொல்கிறேன் வாங்கிபடித்துவிட்டு தங்களின் அன்பான கருத்துக்களை பகிருங்கள்.குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.அப்பதான் அடுத்த தொகுப்பு போட இன்னும் ஊக்கம் வரும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

25 கருத்துகள்:

  1. ஜலீலா அக்காவிடம் மீண்டும் பேசும் போது, அவரின் தந்தைக்கான பிரார்த்தனைகளை தெரிவித்து விடுங்கள். அவர்கள் குடும்ப நலனுக்காக ஜெபிக்கிறோம்.
    பதிவர் சந்திப்பில் பங்கெடுக்க இயலாதே என்று இருக்கிறது... ம்ம்ம்ம்....

    பதிலளிநீக்கு
  2. நாளைக்கா ??? இன்னிக்கு வெச்சிருக்கலாம் ?:(

    பதிலளிநீக்கு
  3. மலிக்கா, இதெல்லாம் ஓவர்...நான் கோவையில் இருக்கிறேன். நாளை சந்திக்கணும் என்றால் எப்படி முடியும்? ஒரு மாதத்திற்கு முன்பே இதை தெரிவித்திருக்கலாம் அல்லவா? அதிலும் நீங்கள் வரமாட்டீர்கள்..என்னப்பா இது கொடுமை...

    பதிலளிநீக்கு
  4. Chitra கூறியது...

    ஜலீலா அக்காவிடம் மீண்டும் பேசும் போது, அவரின் தந்தைக்கான பிரார்த்தனைகளை தெரிவித்து விடுங்கள். அவர்கள் குடும்ப நலனுக்காக ஜெபிக்கிறோம்.//

    தெரிவித்து விடுகிறேன் சித்ரா தாங்களின் நல்மனதிற்க்கு வாழ்த்துக்கள்
    //பதிவர் சந்திப்பில் பங்கெடுக்க இயலாதே என்று இருக்கிறது... ம்ம்ம்ம்....//

    எனக்கும்தான் இருந்தாலும் அக்காவின் கண்களை பார்த்துக்கொள்வேன் யார்யாரை பார்த்தார்களென்று..

    மிக்க நன்றி சித்ரா [க்கா]

    பதிலளிநீக்கு
  5. //எல் கே கூறியது...

    நாளைக்கா ??? இன்னிக்கு வெச்சிருக்கலாம் ?:(//

    இன்னைக்கா. முடியுமான்னு தெரியலையே கார்த்தி. ஏன்னா ஹாஸ்பிட்டலில் இருக்காங்க தந்தைக்கு துணையாக. ஒருவேளை கடைக்கு மாலைக்குமேல் வரலாம்.

    பதிலளிநீக்கு
  6. அவரின் தந்தைக்கான பிரார்த்தனைகளை தெரிவித்து விடுங்கள்

    i am at present in chennai
    if possible i will come today

    r.v.saravanan

    பதிலளிநீக்கு
  7. ஐயகோ.! ஆண்டவா.! நாளைக்கு பாக்.,-இந்தியா மேட்ச்.. ஆபிஸ்ல முக்கியமா வெளிய போக சொன்னதை கூட உடம்பு சரியில்லனு சொல்லி லீவு போட்டிருக்கேன்.!! நாளைக்கு முடிக்காததையும் சேத்து ஒருவாரத்து பயங்கர வேலையிருக்கும்னு சொல்லியும் பரவாலனு சொல்லி வந்தேனே.!! இப்ப போயி இப்படியெல்லாம் மீட்டிங் வச்சா எனக்கு எப்படி மேட்ச் பாக்க தோணும்.??

    பதிலளிநீக்கு
  8. ஜலீலா அக்காள் தந்தை குணமைடைய பிறார்த்திக்கின்றேன்.

    ஓ..சென்னை ஃப்ளாசா அவர்கள் கடைதானா !!!

    இன்ஷா அல்லாஹ் மே 16 அல்லது 18ல் சென்று பார்க்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  9. ////நாமும் ஒன்றும் பெரும் வசதி வாய்ப்புகள் நிறைந்தவர்கள் அல்ல,////

    இவங்களுக்கு வசதி இல்லையாமா...?

    எவ்ளோ பெரியயயயயயயயயயயய பொய்?

    காரு வைச்சுருக்கிற இவங்களுக்கு வசதி இல்லையாமா...?

    நாங்கதான் நேர்லயே பாத்தோமே...!
    நீங்க பரம ஏழையின்னு...!

    பரம ஏழைங்களா...

    வர்ட்டா...
    பரம எழையிங்களே....!

    பதிலளிநீக்கு
  10. சகோதரியின் தந்தை விரைவில் குணமடைய வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கலக்கப் போறீங்க. கலாய்க்கப் போறீங்க. Enjoy. நான் உங்களுக்கு அருகில் இல்லையே என்று வருத்தப்படுகிறேன். உங்க ஊரிலை இருந்தா நாமளும் வருவமில்ல.

    பதிலளிநீக்கு
  12. ஜலீலா அக்காவிடம் மீண்டும் பேசும் போது, அவரின் தந்தைக்கான பிரார்த்தனைகளை தெரிவித்து விடுங்கள். அவர்கள் குடும்ப நலனுக்காக ஜெபிக்கிறோம்.
    பதிவர் சந்திப்பில் பங்கெடுக்க இயலாதே என்று இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  13. ஜலீலாக்காவின் தந்தை உடல்நலம் தேற இறைவன் அருள்புரியட்டும்.

    பதிவர் சந்திப்பா, நடத்துங்க, நடத்துங்க.. ஹூம்..

    நேத்துதான் நாஸியா மெயில்பண்ணி, நாம பாத்து ஒரு வருஷம் ஆகுதே, அடுத்து எப்பன்னு கேட்டாங்க. நான்கூட, அமீரகப் பதிவர் சந்திப்பு பத்திதான் பதிவோன்னு ஆசயா...

    ஆனாலும், நீங்க பெரிய ஆளுதான்.. ஷார்ஜாவுல இருந்துகிட்டே சென்னையில பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்றீங்க.. ம்.. :-))))

    பதிலளிநீக்கு
  14. நாளைக்கா ??? இன்னிக்கு வெச்சிருக்கலாம் ?:(

    29 மார்ச், 2011 8:50 am
    நீக்கு
    பிளாகர் SANTHOSHI கூறியது...

    மலிக்கா, இதெல்லாம் ஓவர்...நான் கோவையில் இருக்கிறேன். நாளை சந்திக்கணும் என்றால் எப்படி முடியும்? ஒரு மாதத்திற்கு முன்பே இதை தெரிவித்திருக்கலாம் அல்லவா? அதிலும் நீங்கள் வரமாட்டீர்கள்..என்னப்பா இது கொடுமை...//

    வாங்க பிரேமாக்கா எப்படி இருக்கீங்க சந்தோஷ் சிவன் எப்படியிருக்கான். திடீரென்று தான் அக்கா சொன்னார்கள் அதான் இந்த ஏற்பாடுக்கா.. இம்முறை விடும் லீவில் ஊருக்கு வருவேன் அப்போது நிச்சயம் பார்ப்போம் அக்கா. சரியா. மிக்க நன்றிக்கா.. கொடுமையை கொன்றுவிடுவோம் சரிதானே..

    பதிலளிநீக்கு
  15. / r.v.saravanan கூறியது...

    அவரின் தந்தைக்கான பிரார்த்தனைகளை தெரிவித்து விடுங்கள்.. தெரிவித்துவிடுகிறேன்

    i am at present in chennai
    if possible i will come today

    r.v.saravanan//

    அப்படியா..

    மிக்க நன்றி சரவணன் கருத்துக்கும் பிராத்தனைக்கும்..

    //அமுதா கிருஷ்ணா கூறியது...

    சந்திக்க முயல்கிறேன்.//
    முயன்றால் முடியாததுண்டோ. சந்தித்துவிட்டு வந்து சொல்லுங்க அமுதாக்கா..

    பதிலளிநீக்கு
  16. சந்திக்க முயல்கிறேன்.

    29 மார்ச், 2011 11:28 am
    நீக்கு
    பிளாகர் தம்பி கூர்மதியன் கூறியது...

    ஐயகோ.! ஆண்டவா.! நாளைக்கு பாக்.,-இந்தியா மேட்ச்.. ஆபிஸ்ல முக்கியமா வெளிய போக சொன்னதை கூட உடம்பு சரியில்லனு சொல்லி லீவு போட்டிருக்கேன்.!! நாளைக்கு முடிக்காததையும் சேத்து ஒருவாரத்து பயங்கர வேலையிருக்கும்னு சொல்லியும் பரவாலனு சொல்லி வந்தேனே.!! இப்ப போயி இப்படியெல்லாம் மீட்டிங் வச்சா எனக்கு எப்படி மேட்ச் பாக்க தோணும்.??//

    அதுசரி இப்படியெல்லாம் சொல்லியா லீவ்வாங்குவது மீட்டிங்க் செய்துட்டு மேட்ச் பார்க்கலாமே அப்படின்னு நான் சொல்லலை..

    ம்ம் ம்ம் நடக்கட்டும்..நடக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  17. //அந்நியன் 2 கூறியது...

    ஜலீலா அக்காள் தந்தை குணமைடைய பிறார்த்திக்கின்றேன்.

    ஓ..சென்னை ஃப்ளாசா அவர்கள் கடைதானா !!!

    இன்ஷா அல்லாஹ் மே 16 அல்லது 18ல் சென்று பார்க்கிறேன்.//

    பிராத்தனைக்கு நன்றி அய்யூஃப். அவங்க கடைதான்..

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  18. ஜலீலா அக்காள் தந்தை குணமைடைய பிறார்த்திக்கின்றேன்.

    ஓ..சென்னை ஃப்ளாசா அவர்கள் கடைதானா !!!

    இன்ஷா அல்லாஹ் மே 16 அல்லது 18ல் சென்று பார்க்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    29 மார்ச், 2011 8:52 pm
    நீக்கு
    பிளாகர் காஞ்சி முரளி கூறியது...

    ////நாமும் ஒன்றும் பெரும் வசதி வாய்ப்புகள் நிறைந்தவர்கள் அல்ல,////

    இவங்களுக்கு வசதி இல்லையாமா...?

    எவ்ளோ பெரியயயயயயயயயயயய பொய்?

    காரு வைச்சுருக்கிற இவங்களுக்கு வசதி இல்லையாமா...?

    நாங்கதான் நேர்லயே பாத்தோமே...!
    நீங்க பரம ஏழையின்னு...!

    பரம ஏழைங்களா...

    வர்ட்டா...
    பரம எழையிங்களே....!//

    உண்மையச்சொன்னா யார் ஒத்துக்கொள்வது அதுக்காக நான் டாட்டா பிர்லா அம்பானி அப்படின்னின்னு பொய்யா சொல்லமுடியும்.. உள்ளதை சொன்ன நல்லதுகே காலமில்லீங்கோ..

    ஹலோ காரு வச்சிருக்கிறவங்லெல்லாம் பணக்காரங்கள் அப்படின்னு ஆரு சொன்னது

    பதிலளிநீக்கு
  19. ///இளம் தூயவன் கூறியது...

    சகோதரியின் தந்தை விரைவில் குணமடைய வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்//

    தெரிவித்து விடுகிறேன். பேசிக்கொள்ளுங்க சகோ. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  20. // நிரூபன் கூறியது...

    எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கலக்கப் போறீங்க. கலாய்க்கப் போறீங்க. Enjoy. நான் உங்களுக்கு அருகில் இல்லையே என்று வருத்தப்படுகிறேன். உங்க ஊரிலை இருந்தா நாமளும் வருவமில்ல.//

    எனக்கும் வருத்தம்தான் என்னசெய்ய ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் அப்படின்னு வாழ்க்கை ஓடுது.. விரைவில் தாயகம் வருவோம் அப்போது அனைவரும் சந்திக்கலாம் இறைவன் நாடினால்..

    மிக்க நன்றி நிரூபன்..

    பதிலளிநீக்கு
  21. //இப்படிக்கு ஊடகத்தான் கூறியது...

    ஜலீலா அக்காவிடம் மீண்டும் பேசும் போது, அவரின் தந்தைக்கான பிரார்த்தனைகளை தெரிவித்து விடுங்கள். அவர்கள் குடும்ப நலனுக்காக ஜெபிக்கிறோம்.//

    ரொம்ப சந்தோஷம் சகோ தெரிவித்து விடுகிறேன்.
    //பதிவர் சந்திப்பில் பங்கெடுக்க இயலாதே என்று இருக்கிறது...//

    இயலும் நேரத்தில் சந்திக்கலாம் சகோ. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  22. //ஹுஸைனம்மா கூறியது...

    ஜலீலாக்காவின் தந்தை உடல்நலம் தேற இறைவன் அருள்புரியட்டும்.//

    ஆமீன்

    //பதிவர் சந்திப்பா, நடத்துங்க, நடத்துங்க.. ஹூம்..

    நேத்துதான் நாஸியா மெயில்பண்ணி, நாம பாத்து ஒரு வருஷம் ஆகுதே, அடுத்து எப்பன்னு கேட்டாங்க. நான்கூட, அமீரகப் பதிவர் சந்திப்பு பத்திதான் பதிவோன்னு ஆசயா...//

    விரைவில் அதுக்கும் ஏற்பாடு செய்துருவோமா..புரிய வரவுகளையும் பார்கலாமுல்ல..

    //ஆனாலும், நீங்க பெரிய ஆளுதான்.. ஷார்ஜாவுல இருந்துகிட்டே சென்னையில பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்றீங்க.. ம்.. :-))))//

    ஏன் ஹுசைன்னம்மா ஏன் என்னபோய் பாவம் பச்சகொயந்த. ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோமேன்னுதான்.

    எல்லாம் உங்ககிட்ட கத்துகின்னதுதான். எம்மாம்பெரிய ஆளுநீங்க உங்களக்காட்டிலுமா:}

    பதிலளிநீக்கு
  23. புக் மார்க் வச்சுதான் வந்தேன் ..ரீடரில் வரவில்லை ..

    ஜலீலாக்காவின் தந்தை விரைவில் குணமடைய வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  24. எனக்காக பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி மலிக்கா

    என் தந்தைக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது