நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒலிவடிவில் என்கவிதைகள் [இணைய தமிழ் ரேடியோவில்]

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

உங்கள் அனைவருக்கும் தெரிந்ததிருக்கும் என் முதல் கவிதைதொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” வெளியானது. அது வெளியானதிற்கு பின்பு கற்றறிந்தவர்களும். கவிமேதைகளும். நல்லுள்ளம் நிறைந்தவர்களும். என்னை வாழ்த்தியும், என் எழுத்துக்களைபற்றி பாராட்டியும் நிறைய மெயில்வழி கடிதங்கள் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சியும் புகழும் இறைவன் ஒருவனையே சேரும்.

அப்படி வந்த மெயிலில்  சந்தோஷசெய்தியையும் சுமந்துவந்த மெயில்தான். சாத்தாங்குளம்  பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்.மற்றும். திரு.அப்துல் ஜப்பார் அவர்களிடமிருந்து வந்த அந்த மெயிலைகண்டதும் மனம் சந்தோஷபட்டதுடன் உடனே சஜதாவிலும் விழுந்தேன் இறைவனுக்கு நன்றி சொல்லி,

இறைவன் தந்த இந்த உலகவாழ்க்கையில். மனம் நிறைந்த மணவாழ்க்கை, முத்தான குழந்தைகள். பாசம் மிகுந்த குடும்பத்தார்கள். என எல்லாத்தையும் தந்த இறைவன். எனக்குள் எழும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அதையும் உலகறிசெய்ய வாய்ப்பளித்துள்ளானே இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும் நிறைவு. இப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைதந்த இறைவனை அனுதினமும்   நேசிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

 ”அப்படி என்ன எழுதியிருந்தார்கள்  என்று கேட்கிறீர்களா?” இதோ அவர்கள் எழுதிய அன்பான  கடிதத்தலிருந்து சிலவற்றை  இங்கே உங்கள் பார்வைக்கு

அன்புள்ள ‘பேத்தி’
அஸ்ஸலாமு அலைக்கும்,
.உங்களின் படைப்பான “ உணர்வுகளின் ஓசை” என் கைகளில் கிடைத்தது.
நேற்று உங்கள் நூலை வாசித்தேன். பாசாங்குகள் இல்லாத பாணி. எளிய-இனியநடை. சொல்லும் முறையில் ஒரு துல்லியம். உணர்வுகளின் வெளிப்பாட்டில் ஓர் அடர்த்தி.அதன் வடிவமைப்பில் ஒரு நேர்த்தி. புலம் பெயர்ந்தும் - கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் வாழும் என் இனப் பெண் ஒருத்தி இவ்வளவு கெட்டிக்காரியா...?-----வியந்து போனேன். One time wonder - ஆக நின்று விடாமல் இனியும் பல நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்பது என்னுடைய ஆசை - ஆசி. வாழ்க....வளர்க...தொடர்க...!

இன்ஷா அல்லாஹ் நான் தாயகம் திரும்பியதும் உங்களின் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து ஒலிபரப்புச் செய்ய எண்ணியுள்ளேன். உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பையும் சலாத்தையும் தெரிவியுங்கள்.
வஸ்ஸலாம். ஹுதா ஹஃபிஸ் -
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

அவர்கள் சொன்னதுபோல் இதோ இன்று என் கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் http://worldtamilnews.com/ இணைதளத்தில்,
திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் கம்பீரக்குரலால் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
அவர்களில் கம்பீரக்குரலால் வாசிக்கப்படுவதை கேட்டு, என் உடலும் உள்ளமும் சிலிர்கிறதுது . இன்னும் அடுத்தடுத்து இடையிடையில் மற்ற தேர்வுக் கவிகளும் வாசிக்கப்படுமாம்
அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். முடிந்தால் அங்கிருக்கும் ஃபீட் பேக்கில் என் கவிதைகளைபற்றி உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்..

எத்தனையோ கவிபடைப்போர்களுக்கிடையில் என்னுடைய கவிதைகளையும்படித்துவிட்டு அதனை பாராட்டி கடிதம் எழுதியதோடில்லாமல், தான் சொன்னதையும் சொன்னபடி நிறைவேற்றிய ”அப்பா” அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்து இன்னும் என்னைபோன்ற வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதோடு .

என்கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/ இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான சாத்தாங்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களுக்கும் எங்களின்   அன்புநிறைந்த நன்றிகளை பாசத்தோடு சொல்லிக்கொள்கிறோம் ..

இன்ஷா அல்லாஹ் இன்னும் இதோன்று நல்லுள்ளங்களின் வெளிப்பாடுகளை இடையிடையே வெளியிடுவேன்.

என் மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் தாங்கள் அனைவருக்கும் பங்குண்டு.
அன்பாலும் பாசத்தாலும் ஊக்கமென்னும் கருத்துக்களாலும் தாங்கள் அனைவரும் என்னை தூண்டிக்கொண்டிருக்கிறீகள். இன்னும் பல நல்ல ஆக்கங்களை தருவதற்கு தூண்டுகோல் இருக்கவேண்டுமெனவும். இறைவனிடம் வேண்டும் உங்களின் பிராத்தனைகளில் எங்களுக்கும் சேர்த்து வேண்டும்படியும் கேட்டுகொள்கிறேன்...


என்றும் உங்கள் அன்பில் வாழநினைக்கும்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

17 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்.. கேட்டுகொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. இந்த நிறைவு எப்பொழுதும் இருக்க நிலைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உறவே..

    வித்யாசாகர்

    பதிலளிநீக்கு
  3. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே நம் நேசத்திற்க்குறியவர்கள் சந்தோஷப்படும் தருனம் தான்.

    மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. படிப்பதைவிட கேட்பதும் மிக அருமை.

    அப்துல் ஜப்பார் அவர்களின் குரலும் மிக அருமை.

    வாழ்த்துக்கள்..

    தொடர்ந்து எழுதுங்கள், எழுத்துக்களால் நல்லவைகளை சாதிக்கமுடியும் என்பதை நிரூபித்தவராச்சே நீங்கள்.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப சந்தோசமாக இருக்கு மலிக்கா அக்கா...உங்களுடைய புகழ் மென்மேலும் உயர இறைவனிடன் வேண்டி கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. அஸ்ஸலாமு அலைக்கும். கவிஞரே! செய்தியை படிக்கும் போதே இனிமையாக இருக்கு. இனிமையை இனியவர் குரலில் கேட்டால் மிக மிக இனிமைதான். சாத்தான் குளத்திலிருந்து வந்த நல்லவர்,வல்லவர் சகோ.அப்துல் ஜப்பார். இவரின் குரலுக்கும்,வார்தைக்குக்கும் எல்லோரும் கிளீன் போல்ட் ஆனவர்கள் நாம். அதுவும் கவிதாயினியின் கவிதை குயிலின் கழுத்தில் குலுசு கட்டி கேட்டது போலல்லவா மிகவும் இனிமையாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதைகளைக் கேட்டேன், மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  8. நடாசிவா தமிழ்க்கிறுக்கன்19 மார்ச், 2011 அன்று PM 5:13

    கவி நீரோடையின் சலசலப்பு தொடர வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  9. // தம்பி கூர்மதியன் கூறியது...

    வாழ்த்துக்கள்.. கேட்டுகொண்டிருக்கிறேன்..//

    வாங்க தம்பி கூர்மதியான். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  10. // வித்யாசாகரின் எழுத்துப் பயணம் கூறியது...

    இந்த நிறைவு எப்பொழுதும் இருக்க நிலைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உறவே..

    வித்யாசாகர்.//

    ஆமீன். அன்பின் உறவே.தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வித்யாசாகர்..

    //எல் கே கூறியது...

    வாழ்த்துக்கள்..//
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்திக்..

    பதிலளிநீக்கு
  11. // ராஜவம்சம் கூறியது...

    சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே நம் நேசத்திற்க்குறியவர்கள் சந்தோஷப்படும் தருனம் தான்.

    மிக்க மகிழ்ச்சி.//
    நேசம் நிறைந்த கருத்துக்கள் இதைவிடவேண்டுமா ஒரு மகிழ்ச்சி.. மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  12. //தாஜுதீன் கூறியது...

    படிப்பதைவிட கேட்பதும் மிக அருமை.

    அப்துல் ஜப்பார் அவர்களின் குரலும் மிக அருமை.

    வாழ்த்துக்கள்..

    தொடர்ந்து எழுதுங்கள், எழுத்துக்களால் நல்லவைகளை சாதிக்கமுடியும் என்பதை நிரூபித்தவராச்சே நீங்கள்.//


    உண்மைதான் அவர்களின் குரல் மிக அருமையாக கம்பீரமாக இருக்கிறது.

    மிகுந்த மகிழ்ச்சி சகோதரர் அவர்களே தங்களின் வருகைக்கும் மனநிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  13. // GEETHA ACHAL கூறியது...

    ரொம்ப சந்தோசமாக இருக்கு மலிக்கா அக்கா...உங்களுடைய புகழ் மென்மேலும் உயர இறைவனிடன் வேண்டி கொள்கிறேன்..//

    வாங்க கீதா.
    தாங்களின் வருகைக்கும் நெஞ்சார்ந்த வேண்டுதலுக்கும் மனமார்ந்த நன்றிகள் ..

    பதிலளிநீக்கு
  14. // crown கூறியது...

    அஸ்ஸலாமு அலைக்கும். கவிஞரே! செய்தியை படிக்கும் போதே இனிமையாக இருக்கு. இனிமையை இனியவர் குரலில் கேட்டால் மிக மிக இனிமைதான். சாத்தான் குளத்திலிருந்து வந்த நல்லவர்,வல்லவர் சகோ.அப்துல் ஜப்பார். இவரின் குரலுக்கும்,வார்தைக்குக்கும் எல்லோரும் கிளீன் போல்ட் ஆனவர்கள் நாம். அதுவும் கவிதாயினியின் கவிதை குயிலின் கழுத்தில் கொலுசு கட்டி கேட்டது போலல்லவா மிகவும் இனிமையாக இருக்கும்.வாழ்த்துக்கள்.//

    ஆமாம் அவர்களின் குரலில் கவிதைகள் இனிமையாகதானிருக்கிறது. ஈர்க்கும் குரல் வார்தைகள் படிக்கும் தோரணையில் நெஞ்சில் பதிந்துவிடுவதுபோல்..

    மிக்க மகிழ்ச்சி சகோதங்களின் அன்பார்ந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. // DrPKandaswamyPhD கூறியது...

    கவிதைகளைக் கேட்டேன், மகிழ்ந்தேன்.//

    மிகுந்த சந்தோஷம் டாக்டர். மிக்க நன்றி..



    // நடாசிவா தமிழ்க்கிறுக்கன் கூறியது...

    கவி நீரோடையின் சலசலப்பு தொடர வாழ்த்துக்கள் !!//

    வாங்க சார்.
    தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  16. நல்லாத்தான் இருக்கு...

    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள்...!! அதோட ஒலி வடிவத்தை இங்கேயே வைத்தால் கேட்பதுக்கு எளியதாக இருக்குமே...!!

    ஓரிரு நாட்கள் போனால் அங்கே லிங்க் கிடைக்காதே..!! சிலருக்கு அந்த லிங்கும் திறக்கா விட்டால் என்னை மாதிரி ஆட்களுக்கு அதை கேட்க முடியாமலும் போகலாம் தானே ...!!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது