நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னாலே! உன்னாலே!.

chez



யிரம் பேர் அமர்ந்திருந்தபோதும்
அருகில் நீயில்லாததால்
ஆளவரமற்றிருப்பது போன்று
அடிமனதிலொரு உணர்வு

ன இறுக்கத்தை மண்டியிட வைத்து
மயிலிறகாய் மனதினை வருடும்
வித்தையைக்கற்ற உன்
வார்த்தைகளின் வலிமை

சொட்ட சொட்ட -உன்
நினைவுகளால் நனைந்தபோதும்
செப்படி வித்தையாய்
நீருக்குள்  நனையாமலே நான்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

28 கருத்துகள்:

  1. மனதின் ரகசியங்கள் என்று தலைப்பிடலாமோ...

    நன்றாக இருந்தது கவிதை.

    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  2. //அந்நியன் 2 கூறியது...
    மனதின் ரகசியங்கள் என்று தலைப்பிடலாமோ...

    நன்றாக இருந்தது கவிதை.

    வாழ்த்துக்கள் !//

    இடலாம்தான் ஆனால்! அந்த மனதினுள் இத்தனையும் நிகழ்வது யாரால் அதேன் இந்த தலைப்பு, சரிதானே அய்யூப்.

    மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அப்புறம் இண்டிலியில் இணைத்தமைக்கும்..

    பதிலளிநீக்கு
  3. //அந்நியன் 2 கூறியது...
    மனதின் ரகசியங்கள் என்று தலைப்பிடலாமோ...

    நன்றாக இருந்தது கவிதை.

    வாழ்த்துக்கள் !//

    இடலாம்தான் ஆனால்! அந்த மனதினுள் இத்தனையும் நிகழ்வது யாரால் அதேன் இந்த தலைப்பு, சரிதானே அய்யூப்.

    மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அப்புறம் இண்டிலியில் இணைத்தமைக்கும்..

    பதிலளிநீக்கு
  4. ஜெ.ஜெ கூறியது...
    கவிதைகள் அருமை.//

    வாங்க ஜெ ஜெ.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  5. //ஆயிரம் பேர் அமர்ந்திருந்தபோதும்
    அருகில் நீயில்லாததால்
    ஆளவரமற்றிருப்பது போன்று
    அடிமனதிலொரு உணர்வு//

    என்ன? கவிதாயனி சார் ஊருக்கு
    போய் இருக்காபுள்ளையா?

    பதிலளிநீக்கு
  6. S Maharajan கூறியது...
    //ஆயிரம் பேர் அமர்ந்திருந்தபோதும்
    அருகில் நீயில்லாததால்
    ஆளவரமற்றிருப்பது போன்று
    அடிமனதிலொரு உணர்வு//

    என்ன? கவிதாயனி சார் ஊருக்கு
    போய் இருக்காபுள்ளையா?//

    வாங்க மகா.
    ஹா ஹா. ஊருக்கல்ல மகா
    வேலைக்குத்தான் போயிருக்காங்க.
    அவுக வராதுக்குள்ளதான் இந்த புலம்பல் ஹி ஹி..

    பதிலளிநீக்கு
  7. என்னென்னவோ...
    புதுசுபுதுசாப் பண்ணிட்டு...!
    நாங்க எதுனா கேட்டா...
    நான் "பச்சப்புள்ள" "செகப்புபுள்ள" "ரோஸ்புள்ள" அப்படீன்னு "டகுல்திலகமாய்" இருக்கீங்க...!

    நமேக்கேன் இந்த பொல்லாப்பு...!
    வந்தோமா...! படிச்சோமா...! கருத்தை பதிவிட்டோமான்னு போய்கிட்டே இருக்கணும்...!

    நல்லாத்தான் இருக்கு...
    கவிதைவரிகளும்...!
    கவிதைக்கேற்ற படங்களும்...!

    குறிப்பு : இந்த நீரோடை புதிய வடிவம் அழகாய்த்தான் இருக்கு...! அழகால் ஆபத்து இருப்பதைப் போல... நீரோடை loadஆக ரொம்ப நேரம் ஆகுதுங்க மேடம்...! ஒருவேள என்னக்கு மட்டுமா? தெரியல...! அதோடு இந்த கருப்பு கலரால இருக்குமோ? கொஞ்சம் பாருங்க மேடம்...!

    பதிலளிநீக்கு
  8. காஞ்சி முரளி கூறியது...
    என்னென்னவோ...
    புதுசுபுதுசாப் பண்ணிட்டு...!
    நாங்க எதுனா கேட்டா...
    நான் "பச்சப்புள்ள" "செகப்புபுள்ள" "ரோஸ்புள்ள" அப்படீன்னு "டகுல்திலகமாய்" இருக்கீங்க...!//

    சும்மாசிக்கும் செய்வதெல்லாம் நெசமாயிடுமா. ஏதோ அப்பால இப்பாலபோயி.அத்த இத்த செய்றேன் அதுதான்சகோஇது வேற பெரிசா ஒன்னும் செய்திடல் பாவம் பச்சபுள்ளைக்கு இதுகுமேல மேளை வேலை செய்யலை..

    //நமேக்கேன் இந்த பொல்லாப்பு...!
    வந்தோமா...! படிச்சோமா...! கருத்தை பதிவிட்டோமான்னு போய்கிட்டே இருக்கணும்...!//

    அப்படியெல்லாம் சொன்னா எப்புடி.

    பதிலளிநீக்கு
  9. நல்லாத்தான் இருக்கு...
    கவிதைவரிகளும்...!
    கவிதைக்கேற்ற படங்களும்...!

    குறிப்பு : இந்த நீரோடை புதிய வடிவம் அழகாய்த்தான் இருக்கு...! அழகால் ஆபத்து இருப்பதைப் போல... நீரோடை loadஆக ரொம்ப நேரம் ஆகுதுங்க மேடம்...! ஒருவேள என்னக்கு மட்டுமா? தெரியல...! அதோடு இந்த கருப்பு கலரால இருக்குமோ? கொஞ்சம் பாருங்க மேடம்...!//

    அப்படியா. கருப்பிலிருந்தா படங்கள் சோக்க தெரியுமுன்னு. பக்கத்துவீட்டு முனியம்மா சொல்லிச்சி அதேன்..

    கேஜெட்டுகள் அதிகம் சேர்தாலும் அப்படியாகும்போல கொஞ்சம் ஓவராத்தான் போறேன் கம்மிபன்னிகிறேன் ஆசையாரைவிட்டது கண்டதும் சுட்டு இங்குவந்து பரிமாறிவிடுகிறேன். இனி கவனாமாக இருப்போமுல்ல..

    ரொம்பாஆஆஆஆஅ நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  10. நக்கலு...!

    வடிவேல் பாஷைல சொல்லனும்னா...!
    "எலேய்...! வேணுண்டா...! உனக்கு இன்னமும் வேணுண்டா...!

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் கவிதைய எழுதுவீங்களா அல்லது செதுக்குவீங்களா..அப்ப்பா என்ன அருமையான வார்த்தைகள்....அழகான கவிதை...வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  12. நீருக்குள்ளும் நனையாமல் உன் நினைவே போர்வையாய் என்னை
    சுற்றி இருப்பதால் நான் நனைந்தாலும் நீரில் நனையாமல் உன் இத வெப்பம் சுழ்ந்தவளாக இருக்கிறேன்.
    அந்த மித வெப்பத்தின் அனைப்பினால் என் இதயமும் இதமாய் இயங்க,
    மருபடியும்,மருபடியும்
    உன் நினைவுகளின் உஸ்னத்தால்
    என் மேனி நனைந்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. காஞ்சி முரளி கூறியது...
    நக்கலு...!//

    அப்படின்னா என்னா சகோ. பாத்தேளா இதுக்கூட அறியா பச்சபுள்ளைய எப்படியெல்லாம் சொல்லுதீக.

    //வடிவேல் பாஷைல சொல்லனும்னா...!
    "எலேய்...! வேணுண்டா...! உனக்கு இன்னமும் வேணுண்டா...!//

    என்ன வேணும். வேனா பஸ்ஸா காரா? சொல்லா பல்லிமுட்டாய்கூட அதையும் அனுப்புவோமுல்ல..

    பதிலளிநீக்கு
  14. //Yasir கூறியது...
    நீங்கள் கவிதைய எழுதுவீங்களா அல்லது செதுக்குவீங்களா..அப்ப்பா என்ன அருமையான வார்த்தைகள்....அழகான கவிதை...வாழ்த்துக்கள் சகோதரி.//

    சிறகடிக்கும் எண்ணங்களை சிறைபடுத்த விருப்பமில்லாமல். இங்கே சிதறவிடுவதுமட்டும்தான் காக்கா நமக்குத்தெரியும் .

    ரொம்ப சந்தோஷம் காக்கா வருகைக்கும் அன்பான கருதுக்களுக்கும்..மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. crown கூறியது...
    நீருக்குள்ளும் நனையாமல் உன் நினைவே போர்வையாய் என்னை
    சுற்றி இருப்பதால் நான் நனைந்தாலும் நீரில் நனையாமல் உன் இத வெப்பம் சுழ்ந்தவளாக இருக்கிறேன்.
    அந்த மித வெப்பத்தின் அனைப்பினால் என் இதயமும் இதமாய் இயங்க,
    மருபடியும்,மருபடியும்
    உன் நினைவுகளின் உஸ்னத்தால்
    என் மேனி நனைந்து கொண்டிருக்கிறது.//

    ஆகா ஆகா. கவிதைமழை பொழிகிறதே..

    அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  16. அருமையாக தந்து இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  17. //மன இறுக்கத்தை மண்டியிட வைத்து
    மயிலிறகாய் மனதினை வருடும்
    வித்தையைக்கற்ற உன்
    வார்த்தைகளின் வலிமை//

    நல்ல வரிகள் .

    பதிலளிநீக்கு
  18. அனுபவம் புதுமை அதை அறியும் வரை
    மனதின் வலிமை அதை புரியும் வரை
    இதழின் இனிமை அதை ருசிக்கும் வரை
    செவியின் செம்மை அதை கேட்கும் வரை..

    சொல்லுங்க சொல்லுங்க கேட்டுகிட்டே இருக்கேன் :-)))

    பதிலளிநீக்கு
  19. கவிதையும் தலைப்பும் சூப்பர் :-))

    பதிலளிநீக்கு
  20. கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. அருமையாக வடித்தள்ளீர்கள் நன்றிகள்....


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

    பதிலளிநீக்கு
  22. ///அனுபவம் புதுமை அதை அறியும் வரை
    மனதின் வலிமை அதை புரியும் வரை
    இதழின் இனிமை அதை ருசிக்கும் வரை
    செவியின் செம்மை அதை கேட்கும் வரை..///

    கவிஞர் ஜெய்லானி வாழ்க...! வாழ்க...! வாழ்க...!

    பதிலளிநீக்கு
  23. HI FRND UR VERSES ARE NICE SPECIALLY **UNALE UNALE*1ST VERSE IS REALLY FENTASTIC BY SWEETBARATHI KINDLY VISIT MY BLOG http://cutepoetries-barathi.blogspot.com/ is my blog kindly visit & reply if anyone poem touches ur heart.....

    பதிலளிநீக்கு
  24. hi frnd ur verses are nice especially **unale unale**verse is so lovely...kindly visit my blog http://cutepoetries-barathi.blogspot.com/ & reply if any1 poem touches ur heart...by sweetbarathi

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது