நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிர்கள் எழுதிய உயிர்க்கவிதை.

இதயங்கள் இணைந்ததில்
இரத்த சம்பந்தம் உருவானது
ஈருயிர் சங்கமித்ததில்
ஓருயிர் உதயமானது.

இன்று எனது அன்புசெல்லத்தின் 12.வது பிறந்தநாள்.இறைவனின் சாந்தியும் அருளும். அவனுக்கு என்றென்றும் குறைவில்லாமல் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை இருகரமேந்திக் கேட்கிறோம்
.
நான்தாங்கோ மரூஃப்
சிங்கத்தின் வாயிலேயே கைவைத்து  சிறை பிடிச்சிட்டாறாம்.
என் தங்கை மகள்.பக்கத்தில் நம்ம ஹீரோ.இறக்கத்தில் அண்ணன் மகள்.மூவரும் சேர்ந்து, கல்ஃபா டேனலையும் விலைக்கு வாங்க வந்திருக்காங்களோ!

ஹயாத் ஐஸ்கேட்டிங்கில்,ஸ்கேட்டிங் செய்ய  களத்தில் குதிச்சிட்டாரோ!
ஸ்கை துபையில[எமிரேயிட் மாலில் ] ஆத்திக்காவும் மரூஃபும்.
ஐஸ் விண்வெளியை சுத்திப்பார்க்கப் போறாங்களாம் ..
ஆகா கெளம்பிடாருய்யா கெளம்பிட்டாரு. குதிரையிலேறி நாட்டை வென்றெடுக்க போறாரோ.
ஆத்திக்கா. மரூஃப்.  ஜிஹான் மூவரும் வீட்டில் நடத்தும் வெவ்வெ வெவே!

பாலைவன மணலையும் [பிளாட்]பங்குபோட.பைக்கிலேறி
புறப்பட்டு விட்டாரோ!
ஹை உயிருள்ள இரு சித்திரங்களுக்கு  நடுவில்.ஒருஉயிரற்ற சிற்பம் நிற்கிறதே!.
250.300. அடி ஆழத்திலிருக்கும் மலையில் இறங்கிவிட்டு மீண்டும் மலையேறுகிறாரே சாதனை செய்யப்போகிறாரோ!
கடல் நீரைகண்டதும் உற்சாகம் ஊற்றெடுக்க கானம் பாடுகிறாரோ!
இளவரசனும் இளவரசியும். ஒட்டக ஊர்கோளம் போறாங்களோ!
கோல்டுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு  குளிர குளிர ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்களோ!.
அல் அயில் சுடுதண்ணீர் வாய்காலில்.சுடுதண்ணீர் சுள்ளென்று சுட்டுவிட முகத்தை சுளிக்கிறாரோ!

மதினத்துல் ஜிமேராவில் நின்றுகொண்டு  மாடல்போஸ் கொடுக்கிறார்களோ!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

26 கருத்துகள்:

 1. வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.....

  பதிலளிநீக்கு
 2. Super ...Super... Super.... photos!

  வலைச்சரத்தில், என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிங்க... சிறப்பாக ஆசிரியப் பொறுப்பு ஏற்று செய்தீங்க... பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.....

  பதிலளிநீக்கு
 4. நட்ச்சதிரமே !
  என் முத்துசரமே !
  நோயின்றி,நொடியின்றி !
  பிறர் கண் இன்றி !
  நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று !
  ஈன்ற தாயையும் ஈடில்லா தந்தையையும் !
  உன் இரு கண்போல் காப்பாய் என எண்ணி !
  வாழ்த்துகிறேன் !

  மருமகனே..உந்தன்,பெற்றோரை.. என்றும்,கண்ணின், மணி போல..காக்கணும் !
  அவர் உம்மை, காப்பது போன்று... நாளை அதை எண்ணித்தான் பாக்கணும் !
  நீர் வாழ்கவே....நிதம் நான் துதி பாடவே, சந்தோசம் என்றும்.... நிலைக்கனும் !
  பல்லாண்டு காலம் வாழ்க !

  பதிலளிநீக்கு
 5. மருமகன் மஃரூஃப் அவர்களுக்கு என்னென்றும் அல்லாஹ் பரக்கத்தையும், ரஹ்மத்தையும் வாரி வாரி வழங்குவானாக, சிறந்த அறிவாற்றலும், சீரிய நெறியும், இணையிலா கல்வியும், ஈடில்லா ஞானத்தையும், நேரிய ஒழுக்கத்தையும், நிறைவான மனதையும் பெற்று உலகில் தலை சிறந்த மனிதன் என பெயர் பெறுவாராக என்று துவா செய்தவனாக., என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

  --------------
  காஜா மைதீன்

  பதிலளிநீக்கு
 6. மல்லிக்கா...நீங்கள் எழுதிய கவிதைகளுக்குள் எனக்குப் பிடித்ததும் அழகான கவிதையும் இந்தப் பதிவுக் கவிதைதான்.மனம் நிறைந்த வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 7. பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்..
  படங்கள் அனைத்தும் அருமை...
  அதற்கு தகுந்த தலைப்புகளும் நச்

  பதிலளிநீக்கு
 8. உங்கள்
  உயிரில் கலந்த
  உறவுக்கு... (மரூப்)

  என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
 9. இனிய பிறந்த நல்வாழ்த்துகள்.

  வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்.

  கேக் எங்கே:-)

  பதிலளிநீக்கு
 10. மகனுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 11. இனிப்பு இருக்கும்னு வந்தா இனிக்க இனிக்க இத்தனை படங்களா...வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 12. ஆஹா..லேட்டா வந்ததுல பிரியாணி ப்போச்சே...!!!((எப்போ முதல்ல வந்திருக்கேன் இப்ப வர ))

  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.....

  போட்டோக்கள் அருமை கூடவே அதன் கமெண்டுக்களும் பொருத்தம் ..

  //சிங்கத்தின் வாயிலேயே கைவைத்து சிறை பிடிச்சிட்டாறாம்.//

  ஆசையை தீர்த்து வைப்பது எனது பொறுப்பு ஹா..ஹா...!! :-))

  பதிலளிநீக்கு
 13. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

  என் மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சரத்தில், என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. மரூஃப்க்கு இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்..

  அழகான படங்கள் போட்டு கலக்கிட்டிங்க...குட்டிஸ் சூப்பர்ப்...அதற்கு கீழே நீங்கள் எழுதியுள்ள வர்ணனை அருமை...

  பதிலளிநீக்கு
 15. அன்பின் உள்ளங்களே! தாங்களின் அனைவரின் வருகைகளுக்கும். மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் பிராத்தனைகளுக்கும்.என் நெஞ்ச்சார்ந்த நன்றிகள்.

  என் அன்புசெல்லத்திற்கு இத்துனை நல்லுள்ளங்களின் நல்வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தைனைகள் கிடைத்ததை நினைத்து மனம்முழுவதும் சந்தோஷமாக உணர்கிறேன் .. உங்கள் அன்புக்கு எந்நாளும் என் நன்றிகள்..

  என்றும் உங்கள்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 16. உங்கள் அன்பு செல்லத்திற்கு, என்றும் ஏக இறைவன் துணை நிற்க்கட்டும்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது