உருவமில்லாச் சோகம்
உள்ளத்தின் வழியே உதிரத்தில்
ஊடுருவிச் சென்று -நிம்மதியை
உதிர்க்கப் பார்த்து
வாடி உதிரும் வருத்தம்
வகை வகையாய்
வரிசைப் படுத்தி
வஞ்சையில்லாமல் வதைத்து
ஊரறியா மனஉளைச்சல்
உள்ளுக்குள் உருகியோடி
உடலை வாட்டி
உயிரை உலரவிட்டு உதிர்த்து
தன்னம்பிக்கையை தளரச்செய்ய
தாரை தாரையாய் –தாடையைத்
தடவி தவிக்க வைத்து
சொட்டு சொட்டாய்
பட்டுக் கன்னம் வழியே
உதட்டை உரசிசென்று
உப்புக் கரிப்பால்
உள்ளத்தை சிதைக்கப் பார்த்து
கசியும் மவுனமாய்
கரையும் கண்ணீர்-மன
கஷ்டத்தை கடைந்தெடுத்து- பின்
மெல்ல மெல்ல மனதை தேற்ற
கரைந்த கண்ணீரே ஆறுதலும் தருகிறது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
கஷ்டத்தின் மருந்து கண்ணீர் தாங்க...
பதிலளிநீக்குஉள்ளத்தை உருக்கும் சோகம் உனக்கேனோ?
பதிலளிநீக்குஉள்ளத்தை கசக்கி கண் ணீர்கசிதல்
சரிதானோ?
தன் நம்பிக்கைதனை தளரச்செய்தல்
முறைதானோ?
தன் சோகந்தனையும் சுகமாய் கொள்ள
மறந்ததேனோ?
சோகம் வந்தால் வாழ்வே சுமையென
புலம்பலாமோ?
சோதிக்கும் இறைவன் மகிழ்ச்சியை நிறைப்பான் மறக்கலாமோ?
என்றைக்கும் அன்பு அக்காவின் கண்ணீர் துடைக்கும் கை
தம்பி-காஜா மைதீன்
நல்ல கவிதைங்க ....
பதிலளிநீக்குவரிகள் அருமையா இருக்குங்க //
Sorry...!
பதிலளிநீக்கு"ரொம்ப நல்ல கவிதை..!"
"ரொம்ப அருமையான வரிகள்..!"
"ரொம்ப அற்புதமான கவிதை..!" என நான் சொல்லமாட்டேன்...!
காரணம்..?
பதிலளிநீக்குஅப்படி சொன்னால்....
உங்கள் "கண்ணீர்"...
எனக்கு "பன்னீர்" என.... நான் எண்ணியதாகிவிடும்...!
விடியலுக்கில்லை தூரம்...!
விடியும் மனதில் இன்னும் ஏன்? பாரம்..." என்ற
ஆபாவாணனின் வரிகள்தான் தங்களின் இந்த "கண்ணீரால்" கவிதைக்கு என் கருத்து..! பதில் ..!
ஸலாம் சகோ மலிக்கா.
பதிலளிநீக்குநல்ல கவி..
கஷ்டத்தின் போது நாம் எழுதும் கவிதையும் நம் மனதிற்கு மருந்துதான்..
அன்புடன்
ரஜின்
//கசியும் மவுனமாய்
பதிலளிநீக்குகரையும் கண்ணீர்-மன
கஷ்டத்தை கடைந்தெடுத்து- பின்
மெல்ல மெல்ல மனதை தேற்ற
கரைந்த கண்ணீரே ஆறுதலும் தருகிறது..//
நல்ல வரிகள் அருமை.
சோதனைகள் நங்கூரம் எனில் அது முடிவல்ல சகோதரி, மற்றொரு பயணத்திற்கான இளைப்பாரல் மட்டுமே!
பதிலளிநீக்குதுயரத்த்தைக்கூட தெளிவாய்விளக்கும் உன்கவிதை.
பதிலளிநீக்குகலங்காதே கடவுள் துணையிருப்பார்.
நீ அவரைதானே அனைத்திற்கும் நம்புகிறாய் அவர் காப்பாத்துவார்..
வரிகள் அருமை.நல்ல கவிதை.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. விசாரித்து அனுப்பிய செய்தி கிடைத்தது நான் நலம் நீங்கள் மற்றும் குடும்பத்தினர் நலம் கான விழைகிறேன்.
பதிலளிநீக்குகண்ணத்து வாய்கால்வழி வழிந்தோடும் கண்ணீர்
எண்ணத்தில் வந்து உட்கார்ந்த
கவலையை அடித்துச் செல்லும்
பின் வண்ண மலர்தான் மந்தோட்டத்தில் பூத்திடுமே!
இங்கு கண்ணிரீரே வடிகாலாய்
மாறியது அதிசயமே!
//சொட்டு சொட்டாய்
பதிலளிநீக்குபட்டுக் கன்னம் வழியே
உதட்டை உரசிசென்று
உப்புக் கரிப்பால்
உள்ளத்தை சிதைக்கப் பார்த்த//
கண்ணீர்
அருமையான வரிகள் கவி அவர்களே
என்ன சொல்றதுன்னே புரியல...
பதிலளிநீக்குகண்ணீர் காவியம் :-(
கண்ணீர் காவியம்.
பதிலளிநீக்குAnputan malikkaa,
பதிலளிநீக்குThank you for visiting my blog and post.This laptop does not have tamil software.Hence I write in thanglish.
" URUVAMILLAA SOKAM,
VAATI UTHIRUM VARUTHTHAM,
OORARIYAA MANA ULAICHCHAL,
UPPU SAPPILLAATHATHANRO.?
ARINTHUM KANNEERIL
KALANGKUTHAL AENO.?
AZHAATHAE ANPU MALIKKAA
IRAIVAN AASI ENRUM UNDU."
எதனால் கண்ணீர் மலீக்கா..
பதிலளிநீக்குஹலோ..!
பதிலளிநீக்குஹல்லோ....!
முதல்ல பாட்ட மாத்துங்க....!
கவலை வேண்டாம்
பதிலளிநீக்கு, இதுவும் கடந்து போகும்.
எல்லாம் நன்மைக்கே
கலாநேசன் கூறியது...
பதிலளிநீக்குகஷ்டத்தின் மருந்து கண்ணீர் தாங்க...//
உண்மைதான் கலா..
என்றைக்கும் அன்பு அக்காவின் கண்ணீர் துடைக்கும் கை
பதிலளிநீக்குதம்பி-காஜா மைதீன்//
தம்பியுடையா[ன்]ள் படைக்கு அஞ்சா[ன்]ள் இறைவனின் நாடியபடி அனைத்தும் நல்லதகநடக்கட்ட்டும்..
மிகுந்த சந்தோஷம் தம்பி..
அரசன் கூறியது...
பதிலளிநீக்குநல்ல கவிதைங்க ....
வரிகள் அருமையா இருக்குங்க //
ரொம்ப சந்தோஷம் அரசன் மிக்க நன்றி.
//காஞ்சி முரளி கூறியது...
Sorry...!
"ரொம்ப நல்ல கவிதை..!"
"ரொம்ப அருமையான வரிகள்..!"
"ரொம்ப அற்புதமான கவிதை..!" என நான் சொல்லமாட்டேன்.//
தெரியும் சகோ எதற்கு சொல்லமாட்டீர்களென்று
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குகாரணம்..?
அப்படி சொன்னால்....
உங்கள் "கண்ணீர்"...
எனக்கு "பன்னீர்" என.... நான் எண்ணியதாகிவிடும்...!
விடியலுக்கில்லை தூரம்...!
விடியும் மனதில் இன்னும் ஏன்? பாரம்..." என்ற
ஆபாவாணனின் வரிகள்தான் தங்களின் இந்த "கண்ணீரால்" கவிதைக்கு என் கருத்து..! பதில் ..!//
விடியலுக்காக காத்திருக்கும் வானமாய் நாங்களும். நிச்சயம் விடியுமென்ற நம்பிக்கையில்
நன்றி சகோ..
RAZIN ABDUL RAHMAN கூறியது...
பதிலளிநீக்குஸலாம் சகோ மலிக்கா.
நல்ல கவி..
கஷ்டத்தின் போது நாம் எழுதும் கவிதையும் நம் மனதிற்கு மருந்துதான்..
அன்புடன்
ரஜின்//
வ அலைக்குமுஸ்ஸலாம் ராஜி.
அதேதான் நம் எண்ணங்களை கவிதையால் வடித்த இறைவனுக்கே புகழனைத்தும்..
இளம் தூயவன் கூறியது...
பதிலளிநீக்கு//கசியும் மவுனமாய்
கரையும் கண்ணீர்-மன
கஷ்டத்தை கடைந்தெடுத்து- பின்
மெல்ல மெல்ல மனதை தேற்ற
கரைந்த கண்ணீரே ஆறுதலும் தருகிறது..//
நல்ல வரிகள் அருமை.//
மிக்க நன்றி இளம்தூயவன்..
sabeer கூறியது...
பதிலளிநீக்குசோதனைகள் நங்கூரம் எனில் அது முடிவல்ல சகோதரி, மற்றொரு பயணத்திற்கான இளைப்பாரல் மட்டுமே!//
நிச்சயமாக இளைப்பாறும் சமயமாகத்தான் கருதுகிறோம். மீண்டும் களைக்க களைக்க வாழவேண்டுமல்லவா.
மிக்க நன்றி சகோ..
//சிவகாமி கூறியது...
துயரத்த்தைக்கூட தெளிவாய்விளக்கும் உன்கவிதை.
கலங்காதே கடவுள் துணையிருப்பார்.
நீ அவரைதானே அனைத்திற்கும் நம்புகிறாய் அவர் காப்பாத்துவார்..//
தாய்போல் பாசத்தை பகிரும் தாங்களைபோன்றவர்கள் இருக்கும்போது பாரம்கூட லேசாகிறது. மிக்க நன்றிமா
ஆயிஷா கூறியது...
பதிலளிநீக்குவரிகள் அருமை.நல்ல கவிதை.//
மிக்க நன்றி ஆயிஷா..
//crown கூறியது...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. விசாரித்து அனுப்பிய செய்தி கிடைத்தது நான் நலம் நீங்கள் மற்றும் குடும்பத்தினர் நலம் கான விழைகிறேன்.
கண்ணத்து வாய்கால்வழி வழிந்தோடும் கண்ணீர்
எண்ணத்தில் வந்து உட்கார்ந்த
கவலையை அடித்துச் செல்லும்
பின் வண்ண மலர்தான் மந்தோட்டத்தில் பூத்திடுமே!
இங்கு கண்ணிரீரே வடிகாலாய்
மாறியது அதிசயமே!//
கண்ணீரே வடிக்காலாய் மாற்றியமைத்துக்கொள்வது அவரவர் மனதைபொறுத்துதான் சகோ.
அன்புக்கு மிக்க நன்றி..
S Maharajan கூறியது...
பதிலளிநீக்கு//சொட்டு சொட்டாய்
பட்டுக் கன்னம் வழியே
உதட்டை உரசிசென்று
உப்புக் கரிப்பால்
உள்ளத்தை சிதைக்கப் பார்த்த//
கண்ணீர்
அருமையான வரிகள் கவி அவர்களே//
மிக்க நன்றி மகராஜன்..
//ஜெய்லானி கூறியது...
என்ன சொல்றதுன்னே புரியல...
கண்ணீர் காவியம் //
கண்ணீர் காவியம்
எழுதவேண்டிய நேரம்..
//தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
பதிலளிநீக்குஎதனால் கண்ணீர் மலீக்கா..//
காலத்தின் சூழல்ச்சியில் சோகமிருப்பதால் அக்கா இந்த கண்ணீர்
சே.குமார் கூறியது...
கண்ணீர் காவியம்
//
அதேதான் குமார்..
G.M Balasubramaniam கூறியது...
பதிலளிநீக்குAnputan malikkaa,
Thank you for visiting my blog and post.This laptop does not have tamil software.Hence I write in thanglish.
" URUVAMILLAA SOKAM,
VAATI UTHIRUM VARUTHTHAM,
OORARIYAA MANA ULAICHCHAL,
UPPU SAPPILLAATHATHANRO.?
ARINTHUM KANNEERIL
KALANGKUTHAL AENO.?
AZHAATHAE ANPU MALIKKAA
IRAIVAN AASI ENRUM UNDU."
வாங்க வாங்க சார் தாங்களின் வருக்கும் அன்புமிகுந்த கருத்துக்கும் என்மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து வாருங்கள்..
Jaleela Kamal கூறியது...
பதிலளிநீக்குகவலை வேண்டாம்
, இதுவும் கடந்து போகும்.
எல்லாம் நன்மைக்கே.//
கடந்துப்போக இறைவனை வேண்டுங்களக்கா.