தொடர்.. . பச்சபுள்ள தொடர்ந்து பேசுமா மூச்சுவாங்குமுள்ள அதேன். சரி சரி என்னை முறைக்காம படிச்சிட்டு போங்க..
அந்த அசம்பாவிதம் நடக்கயிருந்ததை இறைவன் தடுத்துவிட்டான் நீர்வீழ்ச்சியின் தாகம் தீர்த்துவிட்டு அனைவரும் மேலே ஏறுவதற்கு திரும்பிகொண்டிருந்த வேளையில் செங்குத்தாக இருக்கும் மலையின்
அடியிலிருந்து பலசாலியான ஆணகள்மட்டும் ஏறிகொண்டிருந்தார்கள் நாங்கள் எவ்வழிவந்தமோ அதே 2 கிலோமீட்டருக்கு திரும்பிபோய்தான் ஏறவேண்டுமென்று போய்கொண்டிருந்தோம்
எங்களோடு வந்த ஆண்களின் சிலர்மட்டும் அந்த செங்குத்தான பாதையின்பக்கம் ஏறிகொண்டிருக்க திடீரென்று மரூஃப் ஏறிவிட்டான் கண்மூடி திறப்பதற்க்குள் சர சரவென மலையின் பாதியளவு போனதும் போய்சேரும் வழியைவிட்டு வேறுபாதையில் அவன்மட்டும் நின்றபடி மம்மின்னு சத்தம். கீழே நின்ற எங்களுக்கு சப்தநாடியும் அடங்கியதுபோல் நீ ஏம்மாபோனாய் என்று சொல்லிகொண்டிருக்கும்போதே மேல்மலைகளிலிருந்து கடகடவென கற்கள் உருண்டுவர ஆரம்பித்து மரூஃப்பின் நெற்றியைநோக்கிவர கீழிருந்து நாங்கள் சத்தமிடுகிறோம் தலையை அப்புறமாக சாய்த்துகொள் ஜாக்கிரை ஜாக்கிரதையாக பிடித்துக்கொள்என்று அலறுகிறோம் நாங்கள் அதிகம் அலறினால் எங்கேபயந்துவிடுவானோ என்று. பார்த்து ஏறு பார்த்து இந்த பக்கமாகவா என்று அவன் மேலேயேறி வந்தடைவதற்குள் எங்கள் உயிர் எங்களிடமில்லை அதன்பின்னே சென்ற எங்கள் ஆண்களும் மேலேறியபின்புதான் எங்களுக்கு மீண்டும் உயிர்வந்ததுபோல் ஆனது.
இச்சூழலிலும் காப்பவன் இறைவன் என்பதை கண்முன்னே உணரவைத்தான் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..
ஜூலை.
கொழுந்துவிட்டு எரிந்த பாலையில். சார்ஜா பகுதியில் கரண்டு கட்டாகி எங்களை கானலில் குளிக்கவைத்து அல்லல்படுத்தி காரிலேயே ஒருநாள் இரவு கிடந்த அவதிப்பட்டது.
ஜூலை 10 ந்தேதி என்கவிதை அமெரிக்காவில் தோழி விஜியால் வாசிக்கப்பட்டு கவிஞர் தாமரை கைகளால் சர்பிக்கெட் வாங்கியது
.ஜெய்லானி அண்ணாத்தேயின் பொற்கரங்களால் விருதுவாங்கியது
அன்றே எனது 200வது பதிவுகுழந்தையை ஈன்றது [நீரோடையில் மட்டும்]
ஜூலை 30 ந் தேதி நான் மட்டும் போவதாக இருந்த பயணம் 3.30 பிளைட் 2 மணிக்கு சொல்கிறேன் குழந்தைகளையும் அழைத்து செல்கிறேன் என்று
எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியிலும் என் மச்சான் என் குழந்தைகளுக்காக டிக்கெட்எடுத்து தந்து அவசர அவசரமாக ஏர் இந்தியா பிளைட்டைபிடிக்க ஓடியது
4.மணிநேரம் பயணதிற்குபின் இந்தியா வந்திறங்கினால். பழைய ஃபாமை கொடுத்துவிட்டோம் இந்த புது ஃபாமை நிரப்பிதந்துவிட்டுபோங்களென்று
வந்த அனைவரையும் அங்கே 2 மணிநேரம் நிற்கவைத்து .அதனால் அங்கு வந்தவர்கள் கோபமாகி கத்த.என்னதான் ஆனாலும் அவர்கள் செய்த தவறை ஏற்றுக்கொள்ளமறுத்து ஃபாமை ஃபுல் செய்துகொடுத்த பின்புதான் வெளியில்விட்ட கொடுமை. அப்பாடா என்று என் தாய்நாட்டின் மண்ணைமிதித்ததும் தனிதெம்பு வந்ததென அம்மாதம் கடந்தது.
ஆகஸ்ட்.
என் ஊரிலுள்ள சொந்தங்களனைத்தையும் கண்டு களித்தது எங்கள் வீட்டுற்கு சகோ காஞ்சிமுரளியும். அண்ணியும். மருமகளும் வந்தது
முதன்முதலாக அவர்களை கண்டபோது சகோதரதுவத்தின் பாசத்தை உணர்ந்தது.பல நல்ல உள்ளங்களை சந்திக்க வாய்ப்புகிடைத்தது.
பலவருடங்களுக்குபின் நோன்பின் முதல் 10.என் தாய் தங்கை .மற்றும் என் உறவுகளோடு கூட இருந்தது. மரணத்தருவாய் ஒன்றை நேரில் கண்டது. மீண்டும் பாலைவனம் வந்து சேர திருச்சி ஏற்போட்டுக்கு வந்தால் [ஏர் இந்தியா விமானத்தில் முதல் தடவையாக]அங்கு அவர்கள் செய்த செயல்கள் சே என்றானது இனி அந்த பிளைட் பக்கமே தலைவைத்துபடுக்கூடாதென்ற அளவுக்கு அலைச்சலை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்தது. வந்த மறுநாள் பக்கத்து பில்டிங்கிலிருக்கும் பெண்மணி எப்போதும் பார்த்துக்கொண்டால் பேசிகொள்ளும் பழக்கம்.எனக்கு முதல் வாரம் அதே பிளைட்டில் வந்தாங்கலாம் அவங்களும் அவங்க குடும்பத்தையும். எங்களை திருச்சி விமானநிலையத்தில் படுத்திய அதே சம்பவத்தை சொல்லி அவர்களை படுத்திய பாட்டில் பிளைக்குட்டுள் வந்தமர்ந்து பார்க்கும்போது கையிலிந்த 2 பவுன் கைச்செயின் மிஸ்சிங்காம் என்னத்தச்சொல்ல,நாங்கள் சொன்னதைபோலவே இனிமே............அப்படின்னு சொல்லிச் சென்றார்கள். அப்புறம் சுதந்திரதின அன்றுதான் எங்களின் சுதந்திரதிற்கு நாள்குறிக்கப்பட்டது அதாவது நிச்சயதார்தம்.அந்தநாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே அப்படியாக என அம்மாதம் கழிந்தது.
செப்டம்பர்
ஆகா அருமையான தருணம் நோன்புப்பெருநாள். சார்ஜாவின் பெருநாள் திடல் மக்காவின் ஒருபகுதி மக்களைகொண்டதாக காட்சிதந்தது கண்களையும் மனதையும் குளுர்வித்து சாந்தியடைச்செய்தது,
அடுத்த நாள் அல் அயின் சென்று ஆட்டம் போட்டுக்கொண்டே ஆசியாக்காவிற்கு போன்செய்து வரச்சொல்ல்லாமுனு போட்டா அக்கா வேறு இடத்தில் இருப்பதாக சொன்னார்கள்.[கூப்பிட்டதும் பயந்துட்டாங்கபோல இன்னக்கி நம்மள தாளிக்கபோறா மலிக்கான்னு ஹா ஹா யாரும் இதபோய் ஆசியாக்காவிடம் சொல்லிறாதீங்கப்பு] அன்றிரவு 3.30 அங்கே குப்பைகளுக்குள் குச்சியை வைத்து தேடி பிளாஸ்டிக் டின் பேப்பரென தனித்தனியே எடுத்துகொண்டிருந்ததையும் அங்கிருக்கும் அர்ஜெண்ட் பாத்ரூம்களை கிளீன் செய்துகொண்டிருப்பதையும் கண்டபோது நாடுவிட்டு நாடுவந்து தன் நாட்டில் செய்யவெக்கப்படும் சிலபல செயல்களைக்கூட வெளிநாட்டில் செய்யகூடிய சூழல் உருவாகிவிடுகிறதேயென எழுந்த எண்ணம் மனவருத்ததை தந்தது.
முதன் முதலில் நானாக மூவிமேக்கரில் கவிதை வடித்ததுயென அம்மாதம் கடந்தது.
.அக்டோபர்
பேஷ்புக்கில் நான் எழுதிய கவிதை ”வாய்பும் வியப்பும்” முதலிடத்தை பெற்றது. நிறைய முறை சென்றிருந்தாலும் சிலயிடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும் அதுபோல் அபுதாபி பெரிய பள்ளிக்கு சென்று அந்தபள்ளியின் அழகை கண்டு மகிழ்ந்து. அங்கிருந்து ஹுசைனம்மாவிற்கு போன்செய்துபேசியது.அப்படியே அங்கிருக்கும் பீச்சிற்கு சென்று மீன் சுட்டு சாப்பிட்டது. என அம்மாதம் கடந்தது.
நவம்பர்
எல்லாம் வழக்கம்போல் நடந்துகொண்டிருந்தது. ஹஜ் பெருநாள் ஒரு புதிய வரவின் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம். எதிர்பாராமல் எங்க ஊர்பசங்களும்[அதிரை] எல்லாம் ஒன்றாக வர ரொம்ப சந்தோஷமாக இருந்தது.என் அன்புமகன் முதல் முதலில் கவிதையொன்று எழுதியமாதம் இது.
சார்ஜா வந்து பழக்கமானவங்க அபி. அவங்க்கூட பேசிக்கிட்டு இருந்தபோது அவங்க சொல்லிய ஒருவிசயம் அதர்ச்சியை தந்தது அவங்க மார்கெட் போய்வரும்போது பின்னாலேயே ஒரு ஆள் வந்தானாம். நீங்க தமிழா என்று கேட்க .இவங்க சும்மாவே வர பிந்தொடர்ந்து வந்து அக்கா நீங்க தமிழா என்று மீண்டும் கேட்க எதுக்குன்னு தெரியலையேன்னு ஆமான்னு இவங்க சொல்ல கூடவே வந்திருக்கான் என் பெயர் கார்த்திக் அப்படியிப்படின்னு சொல்லிகிட்டே வந்தவன் லிப்ட்கிட்டே வந்ததும் ஒருவருமில்லையென அறிந்துகொண்டு பின்புறமாக ஒரு தட்டு தட்டியிருகான். இவங்களுக்கு கோவம் வந்தது.டேயின்னு முறைத்துவிட்டு [ ஒரே அறை கன்னம் தெறிப்பதுபோல் விட்டிருக்கலாமுல்ல ]பயந்துகொண்டு படியேறி முதல் மாடிக்குபோய். அங்கிருந்து லிப்ட் பிடித்து 9 ப்ளோருக்கு போயிருக்காங்க. இதை சொல்லிவிட்டு சொல்றாங்க மல்லி உங்களுக்கெல்லாம் பிரச்சனையில்லபா அப்படின்னு சொல்லிட்டு கலங்கிட்டாங்க எந்த அர்த்ததில் சொன்னாங்கன்னு தெரியலை நான் சொன்னேன் இனி இதுபோல் யாரும் வந்தா. நின்னு என்னான்னு கேட்டுபேச்சி சரியில்லையா ஓங்கி ஒன்னுவிடுங்க இல்லையின்னா அக்கம் பக்கம் சொல்லுங்க.தனியாபோவதை முடிந்தவரை தவிர்த்துடுங்கன்னு ஏதோ நமக்கு தெரிந்ததை சொன்னேன் ஆனாலும் நம்ம தமிழ் சிலர் பசங்க இப்படி இங்கேயும் திரியிறாங்கபோல. என்ன கொடும்மடாயிது நாடுவிட்டு நாடுபோனாலும் பேய்குணம் மாறாதுன்னுல இருக்கு அப்படின்னு இந்தமதம் கடந்தது..
டிசம்பர்
நேசனல்டே அன்று முஸ்ரிக் பார்க் இமானின் 25 வது ஆண்டுவிழா அங்கே கொண்டாடினாங்க நாங்களும் கலந்துகொண்டு. பெண்கள் குழந்தைகளுக்குன்னு தனிதனியே போடிகல் வச்சாங்க அதில் ஒருபோட்டியில் நான் பொருபேற்க என்னோடு 4 பேர் கலந்துகொண்டு முதலாவதாக வந்தோம். வைத்தபோட்டியில் கலக்ஷன் செய்யவேண்டிய பொருளில் மூக்குதியும் ஒன்னு ஆத்தி என் மூக்கு போயே போச்சி அதை கலட்டி மாட்டுவதற்குள் வலிதாங்கல. அங்கே நடந்த மற்றொரு போட்டியில் மரூஃப் மூன்றாவதாக வந்தார். நல்ல கலகலப்பு. நல்ல சாப்பாடு. நீண்ட சந்திக்காத சில தோழிகள் அங்கே சந்தித்துயென நன்றாக அன்றைய பொழுதுபோனது.
இந்த வருடத்தை மறக்கமுடியாத மறக்கூடாத பேரதர்ச்சியாக ஒரு சம்பவமும் நடந்து அதனால் வருத்தங்கள் வேதனைகள். என எங்கள் குடும்பத்தின் மனங்களை வாட்டியது . மனிதவாழ்வே சோதனைகுட்படுத்தப்பட்ட்து அதை வென்றெடுக்க வேண்டியே இம்மண்ணில் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை இதுபோன்ற தருணங்களின் உணர்வதோடு மனதைரியதையும் வலுபெறச்செய்துகொள்ளவேண்டும் என்று மனதை தேற்றிகொண்டு. புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இறைவனின் கிருபையால்.இனி அனைத்தும் நன்மையாகவே நடக்கும். நடக்குமென்ற நம்பிக்கையோடு உங்களனைவரின் பிராத்தனைகளையும். துஆக்களையும் வேண்டிவளாக.என் மனகுறிப்பேட்டை முடித்துகொள்கிறேன்.
தொடருக்கே தொடரும்போட்டு ரொம்ப படுத்திவிட்டேன். சரி சரி எல்லாத்திலும் ஒரு மாற்றம் வேண்டாமா அதான் இதிலும்..
இதை யாருப்பு அடுத்ததா தொடர்வது. இதுவரை எழுதாதவங்க இதை எழுதுங்கன்னு ஆவலோடு அழைக்கிறேன். என்னது ஆவலா பின்னே அடுத்தவங்க டைரின்னா சும்மாவா..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.
வித்தியாசமாக எதையும் செய்வதில், நீங்கள் சமத்து தான்!
பதிலளிநீக்குhai.. naan 1st...
பதிலளிநீக்குillaiyaa...?
Arumaiya thirumbi parththirukkinga akka... romba nalla irukku.
பதிலளிநீக்குஅழகாய் விவரித்திறுக்கீங்கமலிக்கா.
பதிலளிநீக்குதுன்பங்கள் நிலையில்லாதாது அதை உறுதிகொண்டமனதால் தாங்குவது சிலர்தான் அதில் நீங்களும் ஒருவராக இருப்பதுகண்டு ஆனந்தம் .தைரியமென்பதை ஊக்குவிக்கும் தாங்கள்ப்போன்ற வர்களால் எங்களும் தைரியம் வருகிரது..
பொன்னா ஆண்டாக சிறப்பாக மையட்டும் வாழ்த்துக்கள்..
////எங்கள் வீட்டுற்கு சகோ காஞ்சிமுரளியும். அண்ணியும். மருமகளும் வந்தது
பதிலளிநீக்குமுதன்முதலாக அவர்களை கண்டபோது சகோதரதுவத்தின் பாசத்தை உணர்ந்தது.////
ஹை...
எங்கபேரும் உங்க "டைரி"யிலையா"....!
நன்றி...! நன்றி...! நன்றி...!
////இந்த வருடத்தை மறக்கமுடியாத மறக்கூடாத பேரதர்ச்சியாக ஒரு சம்பவமும் நடந்து அதனால் வருத்தங்கள் வேதனைகள். என எங்கள் குடும்பத்தின் மனங்களை வாட்டியது////
விரைவில்
வருத்தங்களும்...
வேதனைகளும்
விலகி...!
இனி....
இன்பமும்... மகிழ்ச்சியும்...
என்றும் நிலவிட வாழ்த்துகிறேன்...!
[கூப்பிட்டதும் பயந்துட்டாங்கபோல இன்னக்கி நம்மள தாளிக்கபோறா மலிக்கான்னு ஹா ஹா யாரும் இதபோய் ஆசியாக்காவிடம் சொல்லிறாதீங்கப்பு]
பதிலளிநீக்குமலிக்கா,லொள்ளூ தானே?வாங்கன்னு அழைச்சால் ஒரு கூட்டமாக வந்திருக்கோம்னு ,இன்னொரு முறை வாறோம்னு பவ்யமாக சொல்லிட்டு....
இனி அந்தப்பக்கம் வந்தா தானே இருக்கு.
நல்லா சொல்லி இருகிங்க
பதிலளிநீக்குதெளிந்த நீரோடை போல இருக்கு உங்க டைரி
பதிலளிநீக்குவித்தியாசமாக எதையும் செய்வதில், நீங்கள் சமத்து தான்//100 சதவீதம் உண்மைக்கா நீங்க சொன்னது.
பதிலளிநீக்குஅசத்தல் மலிக்கா
அனைத்திலும் அசத்துறீங்க. நல்ல நியாப சக்திதான் உங்களுக்கு.. வாழ்த்துக்கள் புதுவருடத்தில் அனைத்தும் நன்மையாகும்..
தியாகராஜன்.M A
மிக அருமையான பகிர்வு மலிக்கா.
பதிலளிநீக்குரொம்ப நல்லாச்சொல்லியிருகிங்க மல்லி. மனக்குறிப்பேடு மிக அருமை.ஒவ்வொன்றும் நேரில் பார்த்ததுபோலிருந்தது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சந்தோஷம் பொங்கட்டும்..
மிக அருமைகண்ணு. என்னமா எழுதியிருக்கே. அனைத்திம் சந்தோஷத்தை தந்து இருதியில் கஷ்டமாகிவிட்டது. இனி உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் கவலைப்படாதே.
பதிலளிநீக்குகடவுள் கைவிடமாட்டார்.உன் நம்பிக்கை வீணகாது..
கருத்துக்களை பகிர்ந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
பதிலளிநீக்குஇனி அந்தப்பக்கம் வந்தா தானே இருக்கு.//
பதிலளிநீக்குமீண்டும் வருவோமுல்ல வந்து உங்களுக்கு போன் செய்வோமுல்ல.
ஆசிக்காவிடம் அடிமட்டும் வாங்கமாட்டோமுல்ல..ஹை ஹை
Chitra கூறியது...
பதிலளிநீக்குவித்தியாசமாக எதையும் செய்வதில், நீங்கள் சமத்து தான்!.//
அப்பாடி சித்ராக்கா சொல்லிட்டாக நன் சமத்துன்னு. ரொம்ப தேங்ஸ்கா
ஹை...
பதிலளிநீக்குஎங்கபேரும் உங்க "டைரி"யிலையா"....!
நன்றி...! நன்றி...! நன்றி...!//
நாந்தான் சொல்லிட்டேனுல்ல
மறக்க நினைக்காதவைகள் நினைத்தாலும் மறக்காதவைகள் அப்படின்னு..
அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}
பதிலளிநீக்குநல்லாச்சொல்லியிருகிங்க.வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டின் டைரிக்குறிப்பு அருமை..
பதிலளிநீக்குஎன்னை சுட்ட ஒரு விஷயம்.தங்களின் அண்டை வீட்டாருக்கு,நடந்த பாலியல் அத்துமீறல்..அவர் அவனை அந்த இடத்திலேயே நிறுத்தீருக்கவேண்டும்.அவன் பிந்தொடர அனுமதித்திருக்க கூடாது.என்னன்னு கேக்கும் போதே வாய்ஸ் தளராம தயங்காம நருக்குன்னு பேசனும்.அப்ரம் அடுத்த வார்த்த அவன் பேச இருக்காது.எது ஒன்னுன்னாலும் ஒடனே போலீஸ்க்கு தகவல் தரனும்.முதலில் தைரியமாக எதிர்கொள்ள பழகனும்.அவர்களின் நிலையை உணரமுடிகிறது.
அவர்களுக்கு தாங்கள் சொன்ன அறிவுறையும் பயனுள்ளவை..
/மல்லி உங்களுக்கெல்லாம் பிரச்சனையில்லபா/
அவர் பெண்களுக்கு இந்த நாடு எத்துனை பாதுகாப்பு அளிக்கிறது என்பதை உணராமல் சொல்லி இருக்கலாம்,அப்பாதுகாப்பு முஸ்லீம்களுக்கு மட்டுமானது என எண்ணி இருக்கலாம்..அதனால் தான் நீங்கள் முஸ்லீம்கள் உங்களுக்கு இந்த பிரச்ச்னை இல்லைன்னு சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
மற்றபடி நல்ல நினைவுக்குறிப்புகள்
அன்புடன்
ரஜின்
/மல்லி உங்களுக்கெல்லாம் பிரச்சனையில்லபா/
பதிலளிநீக்குஅவர் பெண்களுக்கு இந்த நாடு எத்துனை பாதுகாப்பு அளிக்கிறது என்பதை உணராமல் சொல்லி இருக்கலாம்,அப்பாதுகாப்பு முஸ்லீம்களுக்கு மட்டுமானது என எண்ணி இருக்கலாம்..அதனால் தான் நீங்கள் முஸ்லீம்கள் உங்களுக்கு இந்த பிரச்ச்னை இல்லைன்னு சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.//
அந்த அர்த்தமல்ல சகோ முஸ்லீம்களுக்குமட்டுமல்ல பாதுகாப்பு இந்நாட்டில் அனைவருக்கும் தான் என்பதை உணர்ந்தவர்தான். அதேபோல் மறுமுறையும் நடக்க. பேசிக்கொண்டிருப்பதுபோல் கணவருக்கு போன் செய்து அவர்கள் போலீஸ் போன்செய்யதுகூடவே வந்துவிட. அவனைபோலீஸிடம் வழியனுப்பிவைத்துட்டுதான்
வந்தார்களாம்.தைரியம் இருக்கு பெண்களுக்கு ஆனால் அதை சடனாக செய்ய தயக்கம்.பயம்.அவ்வளவுதான்
//மல்லி உங்களுக்கெல்லாம் பிரச்சனையில்லபா//
சில சமயம்பேசும்போது இதேவார்தைகள் சொல்வார்கள் முன்தினம் என்னப்பாயிது அடிக்கடி இதைசொல்கிறீகள் என்றதற்கு நீங்க பர்தாபோடுவதைதான்ப்பா அப்படிசொல்கிறேன் நிறைய விசயங்களில் அது உங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது என்று என்னிடம் சொல்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
ஆயிஷா அபுல் கூறியது...
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}
நல்லாச்சொல்லியிருகிங்க.வாழ்த்துக்கள்//
அலைக்குமுஸ்ஸலாம் சகோதரி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
ஐயையோ நான் படிக்கவேயில்லை..:))
பதிலளிநீக்கு//நீங்க பர்தாபோடுவதைதான்ப்பா அப்படிசொல்கிறேன் நிறைய விசயங்களில் அது உங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது //
பதிலளிநீக்குநிறைய பேரு எங்கிட்டையும் இதை சொல்லியுள்ளார்கள். பெருமையாவே இருக்கும் இல்லையா ;)
நல்லா புரட்டியிருக்கீங்க
மலிக்கா, நல்லா இருக்கு உங்கள் பதிவு. நான் எப்போதும் ஆண்களின் கண்களைப் பார்த்து தான் பேசுவேன்.
பதிலளிநீக்குஓஒ விட்ட மீதி இங்கேயே
பதிலளிநீக்குஎல்லாம் நன்மைக்கே, இறைவன் நாடினால் ஒரு நொடியில் சந்தோஷம் நிலவும் கவலை வேண்டாம் தோழி