நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடக்கம்..


டுக்கவா தொடுக்கவா எண்ணம்
தொடங்கவா அடங்கவா துன்பம்
நினைக்கவா மறக்கவா நெஞ்சம்
அதட்டவா ஆட்டவா சோகம்

நீ சரியா நான் சரியா உருவம்
நீ பிழையா நான் பிழையா ஆர்வம்
நீ முறையா நான் முறையா பருவம்
நீ முதலா நான் முதலா மரணம்

சிலிர்த்திடவா சிணுங்கிடவா தேகம்
சீண்டிடவா சினந்திடவா மோகம்
லந்திடவா கரைந்திடவா மர்மம்
களைந்திடவா கலைத்திடவா கோபம்

நீ என்ன நான் என்ன வாதம்
நீ பெரிதா நான் பெரிதா கர்வம்
நீ முன்னே நான் முன்னே காலம்
நீ பின்னே நான் பின்னே நேரம்

வைகளெல்லா
பிறப்புக்குள்ளுமே அடக்கம்
வையெல்லா
அவயங்களுக்குள்ளுமிது கடங்கும்
வைகளை
உணர்ந்து நடந்தால் போதும்
இவைதானே
றைவன் மனிதர்க்கு வகுத்த பாடம் ....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

28 கருத்துகள்:

  1. ஹை... நான் 1st டா...
    இல்லைன்னாலும் பரவாயில்லை...

    "வா".... "யா"...என்ற வார்த்தைகளைலும் முடியும்...
    புதுமையான...
    அருமையான கவிதை...!

    பதிலளிநீக்கு
  2. நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ..

    பதிலளிநீக்கு
  3. அருமையா இருக்குங்க கவி வரிகள் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை!
    ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  5. அனைத்தையும் அடக்கிவிட்டாய் அற்புதமாய் எங்களையும் கவிஞராயாக்கிவிடுவாய் வெகுவிரவில் என்று நினைக்கிறேன்.

    என்னமாய் எழுதுகிறாய் வாழ்த்துக்கள்மா.

    அன்புடன்
    சக்தி

    பதிலளிநீக்கு
  6. ******* தங்கள் கவிதையிலிருந்து வார்த்தைகள் சுட்டது ******

    தீய "எண்ணம்" களினால் "துன்பம்"...!
    மறக்க வேண்டியத்தை "நெஞ்சம்" மறக்காததால் "சோகம்"....!

    "உருவம்" அருவமில்லாக் கடவுளை நேரில் காண "ஆர்வம்"...!
    "பருவம்" மாறிமாறி முதிர்வில் "மரணம்"...!

    "தேகம்" வாட்டும் "மோகம்"....!
    அம்மோகத்தின் மூலம் "மர்மம்"... அதனைக் காணாததால் நம்மீதே "கோபம்"...!

    மனதினுள் வீண்"வாதம்" நுழைந்ததால் உனக்குள்ளே ஓங்கிவளரும் "கர்வம்"....!
    "காலம்""நேரம்" கண்டு கவனித்து நடந்தால்...

    நன்மைக்குள் உன் வாழ்க்கை "அடக்கம்"...
    மாறி...அடங்காமல் நடந்தால் தீமைகளுக்குள் உன் வாழ்வு "அடங்கும்"...!

    "போதும்" எனும் மனமே "இறைவன் மனிதர்க்கு வகுத்த பாடம்"....!

    கவிஞர் மலிக்கா...

    தாங்கள் இன்று நீரோடையில் வெளியிட்ட "அடக்கம்" கவிதையில் அடங்கியுள்ள வார்த்தைகளைக் கொண்டே ("அடக்கம்") ஓர் கிறுக்கல்கள்...!

    அப்படியே காப்பி பண்ணிட்டோமுள்ள... நாங்க...!

    எப்பிடி..!

    பதிலளிநீக்கு
  7. அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந்த படைப்பும் வைரக்கல். இதில் அவயங்களுக்குள்ளுமிது கடங்கும் என்பது விளக்கவில்லையே சகோதரி வார்த்தை தொடரை சரிபாருங்கள் சரிதான் என்றால் கொஞ்சம் விளக்குங்கள்

    பதிலளிநீக்கு
  8. அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந்த படைப்பும் வைரக்கல். இதில் அவயங்களுக்குள்ளுமிது கடங்கும் என்பது விளக்கவில்லையே சகோதரி வார்த்தை தொடரை சரிபாருங்கள் சரிதான் என்றால் கொஞ்சம் விளக்குங்கள்

    பதிலளிநீக்கு
  9. ஸலாம் சகோ.
    தங்களின் கவிதை பிரம்மிப்பை உண்டாக்குவதை தவிர்க்க முடியவில்லை.

    சிறப்பான வரிகள் அவை கொண்டுள்ள செய்திகளோ அருமை..

    எதுகை மோனை என்று சொல்வதா..என்னவென்று விளங்கவில்லை..

    மொத்தத்தில் கவிஞர் மலிக்காவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..

    அல்லாஹ் உங்களின் அறிவை விசாலமாக்க போதுமானவன்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  10. மிக் அழகான வர்ணனை மலிக்கா. ராஜின் சொல்வதைபோல் பிரம்பிப்பை ஏற்படுகிறது. மிக நேர்த்திய் வடிக்கும் விதம் அருமை எல்லாருக்கும் வாய்பதில்லை இதுபோன்றொரு வரம்

    கலக்குங்க அசத்துங்க கடவுளீன் அருளால்.

    கடவுளை மிகவும் விரும்புவராக தெரிகிறீர்கள் பேஸ்புக்கில் பார்த்தேன் இங்கேயும்தான்..

    நேசத்தோடு

    கார்த்திக்கேயன்.

    பதிலளிநீக்கு
  11. எல்லா ம் மும் அருமை

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. நல்ல வரிகள் வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

    பதிலளிநீக்கு
  13. இவைகளெல்லா
    பிறப்புக்குள்ளுமே அடக்கம்
    இவையெல்லா
    அவயங்களுக்குள்ளுமிது கடங்கும்
    /உண்மைதான் மலிக்கா

    காஜா அவயங்களென்றால் உடல் மற்றும் மனமென்று நினைகிறேன். சரிதானே மலிக்கா..

    கவிதை அருமை எதுகைமோனை உன்னிடத்தில் மிக சிறப்பாய் விளையாடுது..

    பதிலளிநீக்கு
  14. ஆமினாசுபைர்9 ஜனவரி, 2011 அன்று 6:52 AM

    நீரோடையில் அனைத்தும் அருமையா இருக்குங்க மல்லி..

    பதிலளிநீக்கு
  15. காஞ்சி முரளி கூறியது...
    ஹை... நான் 1st டா...
    இல்லைன்னாலும் பரவாயில்லை...

    "வா".... "யா"...என்ற வார்த்தைகளைலும் முடியும்...
    புதுமையான...
    அருமையான கவிதை...!//

    நான் ரொம்ப நாளாச்சி கருதுக்களுக்கு பதிலிட்டு சகோ.

    ரொம்ப சந்தோஷம் சகோ முதல் ஆளாக வந்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  16. அரசன் கூறியது...
    அருமையா இருக்குங்க கவி வரிகள் அனைத்தும் அருமை//

    வாங்க அரசன் வருகைக்கும் கருதுக்கும் இத்தளத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி .

    //அந்நியன் 2 கூறியது...
    நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ..
    //

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அய்யூப்..

    பதிலளிநீக்கு
  17. sakthistudycentre.blogspot.com கூறியது...
    அருமையான கவிதை!
    ரொம்ப நல்லா இருக்கு/

    வாங்க sakthistudycentre தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..




    //சக்தி கூறியது...
    அனைத்தையும் அடக்கிவிட்டாய் அற்புதமாய் எங்களையும் கவிஞராயாக்கிவிடுவாய் வெகுவிரவில் என்று நினைக்கிறேன்.

    என்னமாய் எழுதுகிறாய் வாழ்த்துக்கள்மா.

    அன்புடன்
    சக்தி//

    வாங்க சக்தி தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  18. காஞ்சி முரளி கூறியது...
    ******* தங்கள் கவிதையிலிருந்து வார்த்தைகள் சுட்டது ******

    தீய "எண்ணம்" களினால் "துன்பம்"...!
    மறக்க வேண்டியத்தை "நெஞ்சம்" மறக்காததால் "சோகம்"....!

    "உருவம்" அருவமில்லாக் கடவுளை நேரில் காண "ஆர்வம்"...!
    "பருவம்" மாறிமாறி முதிர்வில் "மரணம்"...!

    "தேகம்" வாட்டும் "மோகம்"....!
    அம்மோகத்தின் மூலம் "மர்மம்"... அதனைக் காணாததால் நம்மீதே "கோபம்"...!

    மனதினுள் வீண்"வாதம்" நுழைந்ததால் உனக்குள்ளே ஓங்கிவளரும் "கர்வம்"....!
    "காலம்""நேரம்" கண்டு கவனித்து நடந்தால்...

    நன்மைக்குள் உன் வாழ்க்கை "அடக்கம்"...
    மாறி...அடங்காமல் நடந்தால் தீமைகளுக்குள் உன் வாழ்வு "அடங்கும்"...!

    "போதும்" எனும் மனமே "இறைவன் மனிதர்க்கு வகுத்த பாடம்"....!

    கவிஞர் மலிக்கா...

    தாங்கள் இன்று நீரோடையில் வெளியிட்ட "அடக்கம்" கவிதையில் அடங்கியுள்ள வார்த்தைகளைக் கொண்டே ("அடக்கம்") ஓர் கிறுக்கல்கள்...!

    அப்படியே காப்பி பண்ணிட்டோமுள்ள... நாங்க...!

    எப்பிடி..!

    /அப்படிப்போடு அசத்திட்டீங்க சகோ
    அதான் ஏர்கனவே சொல்லிட்டேனா கவிதை ஞானிகிட்டயெல்லாம் நான் போட்டிபோடமுடியுமா. நான் கத்துகுட்டிதான் இன்னும் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு கவிதை பாதையில்.

    ரொம்ப ரொம்ப அருமை சகோ கவிதையின் மொழி பெயர்ப்பு.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  19. isaianban கூறியது...
    அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந்த படைப்பும் வைரக்கல். இதில் அவயங்களுக்குள்ளுமிது கடங்கும் என்பது விளக்கவில்லையே சகோதரி வார்த்தை தொடரை சரிபாருங்கள் சரிதான் என்றால் கொஞ்சம் விளக்குங்கள்.//

    வாங்க சகோதரர் அவர்களே தாங்களின் வரவுக்கு மகிழ்ச்சி
    அவயங்கள் என்றால் நாம் அதாவது உடலும் உயிரும் சேர்ந்த அங்கம். இது எங்கபக்கமுள்ள வழக்குமொழி
    சகோ. வேறு அர்தங்களுண்டா என்பது தெரியாது..

    மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  20. RAZIN ABDUL RAHMAN கூறியது...
    ஸலாம் சகோ.
    தங்களின் கவிதை பிரம்மிப்பை உண்டாக்குவதை தவிர்க்க முடியவில்லை.

    சிறப்பான வரிகள் அவை கொண்டுள்ள செய்திகளோ அருமை..

    எதுகை மோனை என்று சொல்வதா..என்னவென்று விளங்கவில்லை..

    மொத்தத்தில் கவிஞர் மலிக்காவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..

    அல்லாஹ் உங்களின் அறிவை விசாலமாக்க போதுமானவன்..

    அன்புடன்
    ரஜின்.//

    வாங்க ராஜின் வருகைக்கும் அழகான அன்பான கருதுக்களுக்கு மிகுந்தமகிழ்ச்சி மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  21. வெறும்பய கூறியது...
    அருமையான கவிதை!//

    மிக்க நன்றி சகோ

    //கார்த்திகேயன் கூறியது...
    மிக் அழகான வர்ணனை மலிக்கா. ராஜின் சொல்வதைபோல் பிரம்பிப்பை ஏற்படுகிறது. மிக நேர்த்திய் வடிக்கும் விதம் அருமை எல்லாருக்கும் வாய்பதில்லை இதுபோன்றொரு வரம்

    கலக்குங்க அசத்துங்க கடவுளீன் அருளால்.

    கடவுளை மிகவும் விரும்புவராக தெரிகிறீர்கள் பேஸ்புக்கில் பார்த்தேன் இங்கேயும்தான்..

    நேசத்தோடு

    கார்த்திக்கேயன்.//

    வாங்க கார்திக்கேயன். உங்கள் வரவுக்கு நன்றி.
    இறைவனின் அடிமையல்லவா நான் அவனின் வசமல்லவா நான்
    அதனால் அவனை நேசிக்கிறேன் அவனையே சுவாசிக்கிறேன்..

    அன்பான கருதுக்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. விஜய் கூறியது...
    எல்லா ம் மும் அருமை

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்//

    வாங்க சகோ நலமா?

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி


    /ம.தி.சுதா கூறியது...
    நல்ல வரிகள் வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்//

    வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் சகோதரா..

    பதிலளிநீக்கு
  23. ////அப்படிப்போடு அசத்திட்டீங்க சகோ.. அதான் ஏர்கனவே சொல்லிட்டேனா கவிதை ஞானிகிட்டயெல்லாம் நான் போட்டிபோடமுடியுமா. நான் கத்துகுட்டிதான் இன்னும் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு கவிதை பாதையில்.../////

    என்னடா... commentக்கு பதில் போட்டு ரொம்ப நாளேச்சுன்னு பார்த்தா...! சந்தோஷப்பட்டா...!

    இப்படியா..........!

    ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணக்கட்டுதே...!
    முடியலடா சாமி...!

    பதிலளிநீக்கு
  24. கவிதையில் வார்த்தை ஜாலம் ஆஹா...

    பதிலளிநீக்கு
  25. நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. மிக அருமையான கவிதை மலிக்கா. தமிழ்குறிஞ்சியில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது