இது நமக்கு புதுசு.[எனக்குள் நான்]
என்ன கவிதையைக் காணோமேன்னு பாக்குறீகளா. இதோ இந்த பொட்டிய கிளிக் பண்ணுங்க வரும்.
எல்லாரும் புதுசு புதுசா யோசிக்கிறார்களே! நீமட்டும் ஏண்டி மல்லி மக்காவேயிருக்கேன்னு மண்டைக்குள் ஒரே சலசலப்பு.
நாமெயென்ன பட்டப்படிப்பா படிச்சிகிறோம். ஏதோ அறிஞ்சதவச்சி இப்படி சும்மா பிலிமுகாட்டிக்கீனுகீறோம்.
நமெக்கென்ன தெரியும், இருந்தாலும் முயற்சிப்போமேன்னுதான்
இத செய்தேனுங்க!
நல்லாயிருக்குதான்னு கொஞ்சம் கிளிக் செய்துபார்த்து கருத்துசொல்லுங்க மக்கா. கிளிக் கிய பிறகு நல்லாயின்னா என்ன செய்வதாம். ஆங் அதை சொல்லிப்புடுங்க மக்கா. அப்பதானே அடுத்த கட்டத்துக்கு இல்லயில்ல இந்தகட்டத்தையே சரிசெய்யலாமுல்ல.
என்ன அடுத்தகட்டம் போகலாமா? இல்லை இதையே சரிசெய்யனுமா?இல்லை வழக்கம்போலதான் எழுதனுமா? எதுன்னாலும் சொல்லுங்கப்பு..
அப்பால இதான் அதுக்குள்ள இருகிற கவிதைகள்.
உன் உச்சி முகர்கையில்
என் நாசியின் வழியே
உட்செல்லும் உன்சுவாசம்
எனக்குளிருக்கும்
உயிரை குளிரச் செய்கிறது
உன் ஸ்பரிசத்தால்.
மலரைவிட இந்த
மழலையழகு-பூத்துசிரிக்கும்
மழலை கண்டு
பூரித்து விரிகிறது
தன்னிதழசைத்து
மெல்லிய புன்னகையால்.
தேனெடுக்க வண்டாய்
தன் காதலன்
சுற்றுவது கண்டு
தேன்மொழியால் தேன் தடவி
தன்னிதழை வைத்தாள்
சொக்கத்தங்கம் இதழ்களிலே
சொட்டுகின்ற தேனைக்கண்டு
சுற்றிவரும் வண்டினமாய்
சொக்கிபோய் நின்றான்
நீந்திச் செல்லும்
நிலவொளியே வா வா
உன்னொளியால்
என்னுறக்கம் களைத்துவிட்டு
நீ மட்டும் நிம்மதியாய்
நீலவானில் நீந்துவது சரியா
உன்னொளிக்குள்
ஒளிந்துவிளையாடவேண்டும்
வா வா
அடியே!
அழகிய மலரே
நீ, நீரில்
ஆடிபாடுவது கண்டு
எனக்குள் காய்ச்சலடிக்கிறது
நீருக்குள் நானும் வந்துவிடவா
நீயும் நானும் சேர்ந்தாடி
என் காய்ச்சல் தனிக்க.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்த்துக்கள் மல்லி. உனக்குள் என்ன திறமைகள் அதைக்கண்டு திகைக்கிறேன் வியக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னும் என்ன என்ன செய்யப்போகிறாய் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் மிகவும் அழகாய் தொகுத்துள்ளாய்.
வாழ்த்துக்கள் தோழியே.
நட்புடன் எனக்குள் நீ..
மலிக்கா, slides கொஞ்சம் வேகமா போகுது... படிக்க முடியல
பதிலளிநீக்குவாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர் போங்க அசத்தீட்டீங்க மலிக்கா
பதிலளிநீக்குவரவ்ர எங்கோபோறீங்கப்பூ. நாங்களெல்லாம் படித்து என்ன செய்ய பின்னூட்டம்போடத்தான் முடியுது.
அசத்துறீப்பா.
பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..
Simply Superb! அடுத்த கட்டத்துக்கு, பதிவுலகம் போய் கொண்டு இருப்பது தெரிகிறது. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஎக்கா, மலிக்கா... திறந்த வாயை மூடல நான் இன்னும்.. உங்கத் திறமைகளைப் பாத்து வியந்துபோய் நிற்கிறேன் மலிக்கா. கவிதைகளோடு மட்டும் நிறுத்தி விடாமல், தொடர்ந்து புதிதுபுதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கண்டு வியக்கிறேன் மலிக்கா. மனமார்ந்த வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குஅப்புறம், கவிஞர்லருந்து பிரமோஷனாகி, டைரடக்கர்... சே.. டைரக்டர், தயாரிப்பாளர்லாம் ஆகிட்டீங்க... ம்ம்.. பெரிய ஆள் இப்போ!! அடுத்து என்ன மெகா பட்ஜட்ல தயாரிப்பா? யார் விஜயா ரஜினியா ஈரோ?
கவிதையத் தனியே கீழே இன்னொரு முறை கொடுத்தால் நிதானமா வாசிக்க வசதியா இருக்கும் மலிக்கா..
பதிலளிநீக்குs
பதிலளிநீக்குநல்ல இருக்குது
பதிலளிநீக்குமாத்தி தான் யோசித்து இருகிறீங்கள்
ஒத்துகொள்கிறோம்
அக்கா புதிய முயற்சிக்கு எனது வாழ்த்தூக்கள் அக்கா.. எனக்கு ஓப்பன் ஆகவே டைம் எடுக்குதே
பதிலளிநீக்குவேகத்தை குறைத்தால் படிக்க வசதியாய் இருக்கும். மற்றப்படி மிக அருமையான முயற்சி.,. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபடம்: "கவிதை"
பதிலளிநீக்குஆக்கமும்&எழுத்தும்: கவிதாயனி மலிக்கா
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ஏனுங்க...
பதிலளிநீக்குமலிக்கா மேடம்...
இந்த படம் எந்த தியேட்டரில் ரிலீசாகி இருக்கு...
கதை... திரைக்கதை... வசனம்... இசை.. பாடல்... படத்தொகுப்பு... கலை... டைரெக் ஷன்... யாருங்கோ...!
சந்தோஷிமகாதேவன் கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மல்லி. உனக்குள் என்ன திறமைகள் அதைக்கண்டு திகைக்கிறேன் வியக்கிறேன்.
இன்னும் என்ன என்ன செய்யப்போகிறாய் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் மிகவும் அழகாய் தொகுத்துள்ளாய்.
வாழ்த்துக்கள் தோழியே.
நட்புடன் எனக்குள் நீ../
என்ன சந்தோஷி எப்படி இருக்கீங்க. அஸ்வின்குட்டி நலமா.
ரொம்ப சந்தோஷம் தாங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.. மிக்கநன்றிம்மா..
வினோ கூறியது...
மலிக்கா, slides கொஞ்சம் வேகமா போகுது... படிக்க முடியல
//
அச்சோ படிக்கமுடியலையா.
ரொம்ப நேரம் கஷ்டப்பட்டு தரவிறக்கினேன் பிளாக்கரில்.
மீண்டும் சரிசெய்து வெளியிடுகிறேன் வினோ. மிக்க நன்றி தெரிவிதமைக்கு..
மலிக்கா, slides கொஞ்சம் வேகமா போகுது... படிக்க முடியல
பதிலளிநீக்கு22 செப்டெம்ப்ர், 2010 9:18 pm
முத்தையா.. கூறியது...
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர் போங்க அசத்தீட்டீங்க மலிக்கா
வரவ்ர எங்கோபோறீங்கப்பூ. நாங்களெல்லாம் படித்து என்ன செய்ய பின்னூட்டம்போடத்தான் முடியுது.
அசத்துறீப்பா.
பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..
வாங்க முத்தையா.
தாங்களில் பெரிய வாவ்வுக்கும் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி அடிக்கடி காணாப்போயிடுறீங்க.
செல்வி எங்கே அம்மாவீட்டிலா. நலமாக உள்ளார்களா..
//Chitra கூறியது...
Simply Superb! அடுத்த கட்டத்துக்கு, பதிவுலகம் போய் கொண்டு இருப்பது தெரிகிறது. பாராட்டுக்கள்.//
பாராட்டுக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஆக அடுத்தகட்டம் போகலாமுங்குறீங்க.
அப்படியா சித்து..
ஹுஸைனம்மா கூறியது...
பதிலளிநீக்குஎக்கா, மலிக்கா... திறந்த வாயை மூடல நான் இன்னும்.. உங்கத் திறமைகளைப் பாத்து வியந்துபோய் நிற்கிறேன் மலிக்கா. கவிதைகளோடு மட்டும் நிறுத்தி விடாமல், தொடர்ந்து புதிதுபுதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கண்டு வியக்கிறேன் மலிக்கா. மனமார்ந்த வாழ்த்துகள்!!
அப்புறம், கவிஞர்லருந்து பிரமோஷனாகி, டைரடக்கர்... சே.. டைரக்டர், தயாரிப்பாளர்லாம் ஆகிட்டீங்க... ம்ம்.. பெரிய ஆள் இப்போ!! அடுத்து என்ன மெகா பட்ஜட்ல தயாரிப்பா? யார் விஜயா ரஜினியா ஈரோ?
மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹுசைனம்மா.
அதுசரி வாயை திறந்தேவா வச்சிகிறீங்க பாத்துப்பூ பாக்கு வெத்தல போட்டுடபோறாங்க உங்கமச்சான்.
அதென்ன பெரிய ஆள் ஏற்கனவே நான் வளர்ந்தவ இதில் இன்னனும் வளந்தா வீட்டில்நிலைக்கதவு இடிக்கும். ஹா ஹா
அப்புறம்.இவாளை வச்சியெல்லாம் படமெடுக்க ஆளுக இருக்காக.
அதனால அடுத்த டைரக்சனுல புதுமுகங்களா போடலாமுன்னு யோசிக்கிறேன் நடிக்கபோறது மூன்று பேர்.
அதந்தபடத்துக்கு பேர்கூட திரிஃப்ளவர்ஸ். ஜலீலாக்கா. ஹுசைன்னமா. மலிக்கா. எப்புடி..
நன்றி நன்றி மகிழ்ச்சிகலந்த நன்றி ஹுசைன்னமா
"வீடியோவில் கவிதை" நல்லா தெரியுது சகோதரி..!
பதிலளிநீக்குநிதானமாய்.. கவிதை வரிகளை படித்துவிட்டு கருத்துரை போடுகிறேன்...
ஹுஸைனம்மா கூறியது...
பதிலளிநீக்குகவிதையத் தனியே கீழே இன்னொரு முறை கொடுத்தால் நிதானமா வாசிக்க வசதியா இருக்கும் மலிக்கா..//
இதோ இப்பவே கொடுத்துவிடுகிறேன் ஹுசைனம்மா.
சகோதரி உங்கள் திறமைக்கு ஏடு கொடுக்க முடியமால் ச்லைடு வேகமாக ஒடுவது போல் இருக்கிறது.இந்த முயற்சிக்கு பின்னால் உங்Kஅல் உழைப்பு தெரிகிறது.அதில் கற்க வேண்டும் என்ற ஆவலும் தெரிகிறது.கவிதை பத்தி சொல்லனுமாக்கும்.அருமை
பதிலளிநீக்குஜடியா ஓகே...ஆனா...அந்த வீடியோவில் எழுத்துக்களுடன்....கவிதை வாசிக்கும் குரலும் வந்தால் நல்லா இருக்கும்....கவிரசியாரே
பதிலளிநீக்கு////மல்லி மக்காவேயிருக்கேன்னு////
பதிலளிநீக்குமுதல்ல...!
பொய் சொல்றத நிறுத்துங்க...!
உங்களுக்கு ஏதும் தெரியாதுன்னு... நீங்க சொன்னா.. நாங்க நம்பணும்..!
நான் நாலாம் வகுப்புதான் படிச்சிருக்கேன்னும்...!
computer knowledge கிடையாதென்னும்....! ஏன்னா... பொய்..!
நீங்க பொய் சொல்றீகன்னு நான் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கேன்...! நீங்க இல்லன்னு சொல்லிட்டிருகீங்க...!
அதை நான் இன்று உறுதி செய்துவிட்டேன்...!
இன்னைக்கு என் ஆபிசுக்கு ஓர் computer hardware and software eng. வந்தார்... அவரிடம் இப்பதிவினை காட்டினேன்.. அவர் சொன்னது... "சான்சே இல்ல... இவங்க படிக்கில சொல்றதும்.. அதைப்போலவே.. கம்ப்யூட்டர் knowledge இல்லன்னு சொல்றதும் பொய்... எனக்கே தெரியில... இவங்க இந்த வீடியோவில் எந்தந்த softwareல பண்ணியிருக்காங்கன்னு... நீங்க நம்பாதீங்க சார்... அவங்க பொய் சொல்றாங்க...! தெரியாதவங்க இவ்வளவு தெளிவா செய்யமுடியாது...
ஒண்ணு அவங்களுக்கு தெரியலன்னா யாராவது செய்து கொடுத்திருக்கணும்... அதுவும் இந்த வீடியோ முடிவில் வரும் names எப்படி பண்ணியிருக்காங்கன்னு தெரியில... மூவி மாதிரி ஓடிட்டே இருக்கு... இவங்க படிக்காதவங்க சொல்றாங்க அதையும் நம்பமுடியல... கம்ப்யூட்டர் knowledge இல்லன்னு சொல்றதும் நம்ப முடியல.."ன்னு சொன்னார்...
அதானால... இனி ////மல்லி மக்காவேயிருக்கேன்னு/// சொல்லி எங்கள ஏமாத்த முடியாது... நான் 1997ல் இருந்து கம்ப்யூட்டர் யூஸ் பண்ணிட்டிருக்கேன்... ஓகே...!
anyhave...
"எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி" இந்த "வீடியோ கவிதை"...
மிகமிக... அற்புதம்.. அருமை இந்த "வீடியோ கவிதை"...!
படங்களும்...
அதற்கேற்ற கவிதை வரிகளும்...
மிக மிக அருமை...!
நட்புடன்...
காஞ்சி முரளி....
கண்கள் குளமாகுதம்மா என்
பதிலளிநீக்குகண்மணியான தங்கையின்
”படமும் பாடமும்” செய்த காட்சி
திடமுடன் வெல்வாய் நானே சாட்சி
LK கூறியது...
பதிலளிநீக்குவேகத்தை குறைத்தால் படிக்க வசதியாய் இருக்கும். மற்றப்படி மிக அருமையான முயற்சி.,. வாழ்த்துக்கள்.//
அடுத்தமுறை சரியாக செதுவிடுகிறேன் சரிசெய்ததை மீண்டும் பிளாக்கில் ஏற்றமுடியவில்லை கார்த்தி.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
//S Maharajan கூறியது...
படம்: "கவிதை"
ஆக்கமும்&எழுத்தும்: கவிதாயனி மலிக்கா
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகராஜன்..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஏனுங்க...
மலிக்கா மேடம்...
இந்த படம் எந்த தியேட்டரில் ரிலீசாகி இருக்கு...//
இது இந்த நீரோடையில் தான் முரளிசார்..
//கதை... திரைக்கதை... வசனம்... இசை.. பாடல்... படத்தொகுப்பு... கலை... டைரெக் ஷன்... யாருங்கோ...!
//
அல்லாமே நாமதாங்கோ. சந்தேகமே வேண்டாமுங்கோ..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்கு"வீடியோவில் கவிதை" நல்லா தெரியுது சகோதரி..!
நிதானமாய்.. கவிதை வரிகளை படித்துவிட்டு கருத்துரை போடுகிறேன்...//
தெரியுதா? சிலருக்கு தெரியலை சிலருக்கு வேகமா ஓடுது. என்னானே புரியலையே..
mkr கூறியது...
பதிலளிநீக்குசகோதரி உங்கள் திறமைக்கு ஏடு கொடுக்க முடியமால் ச்லைடு வேகமாக ஒடுவது போல் இருக்கிறது.இந்த முயற்சிக்கு பின்னால் உங்Kஅல் உழைப்பு தெரிகிறது.அதில் கற்க வேண்டும் என்ற ஆவலும் தெரிகிறது.கவிதை பத்தி சொல்லனுமாக்கும்.அருமை//
அப்படியா சகோ இனி கரைக்ட்டா செய்ய முயற்சிக்கிறேன். ரொம்ப நன்றி சகோ..
//Yasir கூறியது...
ஜடியா ஓகே...ஆனா...அந்த வீடியோவில் எழுத்துக்களுடன்....கவிதை வாசிக்கும் குரலும் வந்தால் நல்லா இருக்கும்....கவிரசியாரே.//
அதைதான் அடுத்தக்கட்டமாக செய்யலாமென நினைத்திருந்தேன் சொல்லிட்டீங்க. இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடினால் அதையும் செய்வேன்..
நன்றி காக்கா
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்கு////மல்லி மக்காவேயிருக்கேன்னு////
முதல்ல...!
பொய் சொல்றத நிறுத்துங்க...!//
உங்களுக்கு ஏதும் தெரியாதுன்னு... நீங்க சொன்னா.. நாங்க நம்பணும்..!
நான் நாலாம் வகுப்புதான் படிச்சிருக்கேன்னும்...!
computer knowledge கிடையாதென்னும்....! ஏன்னா... பொய்..! //
நீங்க பொய் சொல்றீகன்னு நான் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கேன்...! நீங்க இல்லன்னு சொல்லிட்டிருகீங்க...!//
அச்சோ நான் பொய் சொல்லமாட்டேன் சகோ அது உங்களுக்கும் தெரியும்.பின்ன ஏனிப்புடி..
அதை நான் இன்று உறுதி செய்துவிட்டேன்...!
இன்னைக்கு என் ஆபிசுக்கு ஓர் computer hardware and software eng. வந்தார்... அவரிடம் இப்பதிவினை காட்டினேன்.. அவர் சொன்னது... "சான்சே இல்ல... இவங்க படிக்கில சொல்றதும்.. அதைப்போலவே.. கம்ப்யூட்டர் knowledge இல்லன்னு சொல்றதும் பொய்... எனக்கே தெரியில... இவங்க இந்த வீடியோவில் எந்தந்த softwareல பண்ணியிருக்காங்கன்னு... நீங்க நம்பாதீங்க சார்... அவங்க பொய் சொல்றாங்க...! தெரியாதவங்க இவ்வளவு தெளிவா செய்யமுடியாது...
ஒண்ணு அவங்களுக்கு தெரியலன்னா யாராவது செய்து கொடுத்திருக்கணும்... அதுவும் இந்த வீடியோ முடிவில் வரும் names எப்படி பண்ணியிருக்காங்கன்னு தெரியில... மூவி மாதிரி ஓடிட்டே இருக்கு... இவங்க படிக்காதவங்க சொல்றாங்க அதையும் நம்பமுடியல... கம்ப்யூட்டர் knowledge இல்லன்னு சொல்றதும் நம்ப முடியல.."ன்னு சொன்னார்...//
சத்தியமா கம்பியூட்டர் நாலேஜெல்லாம் கிடையாதுங்கோ ஏதோ கவிதைகிறுக்கமட்டும் தங்லீஸில் டைப்பிங் செய்றேன் அதுவும் தமிழ்குடும்பத்தில் கத்துகிட்டதுதான் அவ்வளவுதான்.
அப்புறம் இதில் வந்து ஆங்காங்கே பிளாக்குகளுக்குபோறோமா அதில் டிசைன் டிசைனா பாக்குறோமா நாமும் செய்தாலென்ன அப்படின்னு இத செய்துபார்ததுதான்
//அதானால... இனி ////மல்லி மக்காவேயிருக்கேன்னு/// சொல்லி எங்கள ஏமாத்த முடியாது... நான் 1997ல் இருந்து கம்ப்யூட்டர் யூஸ் பண்ணிட்டிருக்கேன்... ஓகே...!//
உண்மையச்சொன்னா இந்த உலகத்தில யாரு நம்புறா..
//anyhave...
"எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி" இந்த "வீடியோ கவிதை"...
மிகமிக... அற்புதம்.. அருமை இந்த "வீடியோ கவிதை"...!
படங்களும்...
அதற்கேற்ற கவிதை வரிகளும்...
மிக மிக அருமை...!
நட்புடன்...
காஞ்சி முரளி....
//
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
என்னை அறிவாளி அப்படி சொன்னதுக்கல்ல.[ஹைய்யா] வாழ்த்தியமைகும் அருமையான கருத்துக்கும். மகிழ்ச்சி கலந்த நன்றி..
சகோ..
என் அன்பு மகளே! அறியாது அறியாது எனச்சொல்லி அனைத்தையும் அறிந்துவைத்துள்ளாய்.
பதிலளிநீக்குஉன் திறமைகள் கண்டு திகைக்கிறேன்.
உன்னால் பெற்றோருக்கு பெருமையோ இல்லையோ. உன்னை மகளாய் அடைந்தமைக்கு எங்களுகு பெருமை..
கண்ணு. இன்னும் பாலுவுக்கு சரியாகவில்லை. அப்பாவும் சக்தியும்.
இன்னும் இரண்டு மாததில் வந்திடுவாங்க.
உன் மற்றும் பிள்ளைகள் மச்சான் அனைவரின் நலத்துக்கு கடவுளிடம் வேண்டுகிறேன்.
ஏன் நான் அனுப்பும் மெயில் ரிட்டன் வருது..
என் அன்பு மகளே! அறியாது அறியாது எனச்சொல்லி அனைத்தையும் அறிந்துவைத்துள்ளாய்.
பதிலளிநீக்குஉன் திறமைகள் கண்டு திகைக்கிறேன்.
உன்னால் பெற்றோருக்கு பெருமையோ இல்லையோ. உன்னை மகளாய் அடைந்தமைக்கு எங்களுகு பெருமை..
கண்ணு. இன்னும் பாலுவுக்கு சரியாகவில்லை. அப்பாவும் சக்தியும்.
இன்னும் இரண்டு மாததில் வந்திடுவாங்க.
உன் மற்றும் பிள்ளைகள் மச்சான் அனைவரின் நலத்துக்கு கடவுளிடம் வேண்டுகிறேன்.
ஏன் நான் அனுப்பும் மெயில் ரிட்டன் வருது..
உன் உச்சி முகர்கையில்
பதிலளிநீக்குஎன் நாசியின் வழியே
உட்செல்லும் உன்சுவாசம்
எனக்குளிருக்கும்
உயிரை குளிரச் செய்கிறது
உன் ஸ்பரிசத்தால்.//
என் முதல் குழந்தையை கையில் ஏந்திய பொழுததில் எனக்குள் தோன்றிய உணர்வை படம் எடுத்தது போல் உள்ளன வார்த்தைகள் :') அருமை....!!