நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ]

மாதம் புனித மாதம்- புதிதாய்
பிறக்கும் ஒவ்வொரு வருடம்

அறம் நல்லறம் கொண்டுவரும்
நோன்பு என்னும் புனித விரதம்

அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம்
இறைவனின் சன்னிதானம் அடையப்பெறும் மாதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட புனிதமான மாதம்

சங்கைமிகு லைலத்துல் கத்ர்
[ஆயிரம் மாதங்களைவிட
சிறந்த இரவு] வந்து இறங்கும் மாதம்
தீங்குசெய்யும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம்

இறைவனிடம் கேட்டதும் கிடைக்கபடும் மாதம்
இறைச்செய்தி இறக்கப்பட்ட இன்பமான மாதம்
தக்வா என்னும் இறையச்சத்தின் பயிர்ச்சிக்கான மாதம்

சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம்
நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதம்

விடிய விடிய வணக்கங்கள் செய்யப்படும் மாதம்
விடிந்தபின் விரதங்கள் போற்றப்படும் மாதம்

திக்ருகளும் தஸ்பீஹ்களும் ஓதப்படும் மாதம்
தீமைகளை விட்டுவிட்டு தவிர்ந்திருக்கும் மாதம்

நன்மைகளை செய்து நல்லருள் பெறும் மாதம்
நன்மை ஒன்றுக்கு பத்து என பெருக்கித்தரும் மாதம்

ஜக்காத் என்னும் கொடைகள் கொடுக்கப்படும் மாதம்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரிவழங்கும் மாதம்

மலையளவு தவறுகளும்- மனமுருகி
கேட்கும்போது மன்னித்தருளும் மாதம்

இறையச்சத்தால் செய்யப்படும் நன்மைக்கேற்ப
முன்செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் மாதம்.

நோன்பு இது நோன்பு –இதை
நோற்போருக்கு கிடைக்கும் மான்பு

சிறு அரும்பும் விரும்பி வைக்கும்
அருமையான நோன்பு

நீக்கும் இது நீக்கும்
மனித உடலின்- நோயினை நீக்கும்

போக்கும் இது போக்கும்
மனித மனதின்- மாசுவைப் போக்கும்

கொடுக்கும் இது கொடுக்கும்
புதிய சக்தியை இதுகொடுக்கும்

செழிக்கும் அருள் செழிக்கும்
மனித வாழ்வில் அருள் செழிக்கும்

புனித மாதத்தில்;
தீமைகளைவிட்டு விலகியிருங்கள்

நன்மைகளின் பக்கம் திரும்பியிருங்கள்
இறையச்சம்கொண்டு இறையருளை பெற்றிடுங்கள்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

30 கருத்துகள்:

  1. இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையா எழுதியிருக்கீங்க...


    அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல படைப்பு பாராடுக்கள்

    வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  4. புனித ரமலான் மாதத்தின் சிறப்புகளை
    கவித்துவத்தில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோதரி.
    இந்த புனித மிக்க மாதத்தை எல்லோரும் சிறப்போடு
    கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
  5. ரமலானின் கவிதை அழகாகவும் மற்றும் பல அர்த்தங்களையும் கொண்டு உள்ளது. இறைவன் உங்களுக்கு பல தக்வாக்களை தருவானாக.
    குறிப்பு: ஆண்டவன் என்கின்ற பொருள், எனக்கு ஆட்சி செய்து முடித்தவனை குறிப்பிடுவதாக கருதுகின்றேன், என்றும் ஆட்சி செய்து கொண்டு இருப்பவனை அவ்வாறு குறிப்பிடலாமா?

    பதிலளிநீக்கு
  6. அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்கா! அருமையா இருக்குமா. இதையும் பாருங்கள்.

    http://payanikkumpaathai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. நோன்பின் மாண்புகளை,
    கவிதையில் மேன்மையுடன்
    தந்துள்ளீர்கள். அருமை!

    பதிலளிநீக்கு
  8. புனித ரமலான் மாத துவக்கமும்
    நோன்பின் துவக்கமும்...
    நோன்பை கடைபிடித்துவரும் தங்களுக்கும்... மச்சானுக்கும்... தங்கள் குழந்தைகளுக்கும்... தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொறு வரியும் பொருளாள் அழகாக.
    வாழ்த்துக்கள் நம் சொந்தங்கள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. நோன்பு வைக்காத எனது நண்பனொருவனுக்கு உங்கள் கவிதையை அனுப்பி வைத்தேன் சற்று முன். நன்றி!

    பதிலளிநீக்கு
  11. Ramadan Kareem to you dear sister and may Allah grant you all the joy and spiritual lift you wish for from this blessed month.
    RAMADAN KAREEM
    Assalamuallikum. May Allah keep us on the right path, and accept our fasting and prayers. We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors. Jazakkallahu khairan Mohamed Ali jinnah

    பதிலளிநீக்கு
  12. க‌விதையில் ர‌ம‌லானின் மாண்பை சொல்லிவிட்டீர்க‌ள்.. உங்க‌ளுக்கும் குடும்ப‌த்திற்கும் இனிய‌ ர‌ம‌லான் வாழ்த்துக்க‌ள்..

    பதிலளிநீக்கு
  13. புனித ரமலான் மாதத்தின் சிறப்புகளை
    கவித்துவத்தில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் மலிக்கா கா...
    ரமலான் கரீம் ...

    பதிலளிநீக்கு
  14. மல்லி ரமலான் மாதத்தின் சிறப்புகளை அழகாக எழுதி இருக்கீங்க. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்கும் ரமலான் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. நல்ல இருக்குங்க . பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  16. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் அன்புகலந்த நன்றி நன்றி நன்றி..

    அனைவருக்கும் என் அன்பான ரமலான் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  17. பகலெலாம் பசித்து
    இரவெலாம் விழித்து
    அகமெலாம் நிறைந்து
    அல்லாஹ்வைத் துதித்து
    முகமத்(ஸல்) உம்மத்து
    முழு மாதம் நோன்பு பிடித்து
    அகமும் முகமும்
    அமல்களால் அலங்கரித்து
    இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
    ரகசிய அறிவும் பெற்று தரும்
    ரமளானே வருகவே...!!!
    பசித்தவரின் பசியினை
    பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில்
    வசித்திடும் ஷைத்தானை
    வதைத்திட வைத்திடும் உண்ணாமை
    குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
    குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
    திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
    திண்ணமாய் கிட்டும் சுவனம்
    பாவம் தடுத்திடும்
    பாதுகாப்பு கேடயம்;
    கோபம் வென்றிடும்
    குணத்தின் பாடம்
    அல்லாஹ்வுக்காகவே நோன்பு;
    அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு
    அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
    அல்லாஹ்வே தருவான் மாட்சி
    முப்பது நாட்களை மூன்றாய் வகுத்து
    முப்பதின் முதல் பத்தில் ரஹ்மத்து;
    முப்பதின் இரண்டாம் பத்தில் மக்பிரத்து;
    முப்பதின் மூன்றாம் பத்தில் நஜாத்து;
    தப்பாது வேண்டிட வேண்டியே
    தகை சான்றோர் வேண்டினரே
    வானில் இருந்த இறைவேதம்
    வஹியின் வழியாக
    தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
    திருவதனம் மொழிய வந்த மாதம்
    ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
    ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
    போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
    புனிதமிகு ரமளானின் வரவு...!!!
    ஈகைத் திருநாளாம்
    ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
    வாகைத்தரும் பித்ரா தர்மம்
    வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே
    "கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

    குறிப்பு: தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அரபி பதங்கள்: அதன் பொருள்
    இதோ:
    உம்மத்து= சமுதாயம்
    அமல் = செயல்
    மஹ்ஷர்= மறுமை தீர்ப்பு நாளின் பெருவெளி மைதானம்
    ரஹ்மத்து= இறையருள்
    மக்பிரத்து= இறைமன்னிப்பு
    நஜாத்து= நரக விடுதலை
    வஹி= வானவர் ஜிப்ராயில்(அலை)மூலம் இறைத் தூது
    பித்ரா= ஏழைகட்கு ஈந்துவக்கும் தானிய தர்மம் (அதனாற்றான் இந்த நோன்பு
    பெருநாளை "ஈதுல் பித்ர்" (ஈகைத் திருநாள்) என்பர்

    பதிலளிநீக்கு
  18. எல்லோருக்கும் ரமலான் கரீம்.. ரமலான் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. அன்பு சகோதரிக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    புனித ரமலான் நல் வாழ்த்துக்கள் சகோதரிக்கும் , சகோதரியின் குடும்பத்திற்கும் மற்றும் நம் அனைவர்களுக்கும் உண்டாகட்டுமாக.

    சகோதரியின் விடுமுறை நாட்கள் ஊரிலே அல்லாஹ் கிருபையால் சந்தோசமாக கழிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

    "புண்ணியம் தேடும் புனித மாதம்" என்ற சிறந்த கவிதை இந்த தளத்திலே வர இறைவன் நாடினான் போலும்! அல்லாஹுவுக்கே எல்லாப்
    புகழும்.

    சகோதரி, இந்த மாதம் அருள் வழங்கும் மாதம் இதை தவற விட்டால் காத்திருக்க வேண்டும் இன்னும் பதினோரு மாதங்கள். அதுவரை யார்,யார் உயிருடன் இருப்போம் என்று யாருக்கும் தெரியாது.

    நாம் சில விசயங்களை நன்மை என்று உலகத்தை மையமாக கொண்டு எடை போட்டு செய்கிறோம். ஆனால் அது மார்க்கப்படி தவறு
    என்பதை நாம் யாரும் உணர்வது இல்லை.

    அது தவறு என்பதை உணரைச்செய்யும் விதமாக சில,பல கவிதை கட்டுரைகளை சகோதரி எழுதினால் மக்கள் விழிப்புணர்வு பெற வாய்ப்பாக இருக்கும்.

    மார்க்க ஞானத்தையும் , மறுமை பயத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தந்து, இந்த புனிதமான மாதத்திலே உலகாதாய விசயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுமைக்கான நன்மைகளை அதிகமதிகம்
    பெற நன்மையான காரியங்களில் ஈடுபடுத்தி நம்மையெல்லாம் சொர்க்கத்துக்குடையவர்களாக்கி வைப்பானாகவும் ஆமீன்.

    வஸ்ஸலாம்

    அன்புடன், சகோதரன் "மஹ்மூது".

    பதிலளிநீக்கு
  20. இறைவன் நம் அனைவருக்கும் நல்பாக்கியத்தை வழங்குவானாக


    கவிதை மிக மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  21. ரமலான் வாழ்த்துக்கள்.. தோழி.

    பதிலளிநீக்கு
  22. அஸ்ஸலாமு அழைக்கும்.
    புனித ரமலானை பற்றி சிறப்பாக
    எழுதி உள்ளீர்கள். நானும் புதிதாக
    வலைபூ தொடங்கி உள்ளேன்.
    என் வலைபூ முகவரி
    iniyavasantham.blogspot.com

    பதிலளிநீக்கு
  23. Ramadhan Kareem.

    Mikka Malla Kavithai.

    சிறு அரும்பும் விரும்பி வைக்கும்
    அருமையான நோன்பு

    நீக்கும் இது நீக்கும்
    மனித உடலின்- நோயினை நீக்கும்

    போக்கும் இது போக்கும்
    மனித மனதின்- மாசுவைப் போக்கும்

    கொடுக்கும் இது கொடுக்கும்
    புதிய சக்தியை இதுகொடுக்கும்

    செழிக்கும் அருள் செழிக்கும்
    மனித வாழ்வில் அருள் செழிக்கும்


    Kulanthaikalukkum intha paadalai sollikoduthal avarkal manathil Ramalain arumai bathiyum manacil.

    பதிலளிநீக்கு
  24. மாதம் புனித மாதம்.. இறையருள் பெருகிடும் மாதம்.

    சுழலும் ஒவ்வொரு வருடமும்.

    இப்புனித ரமலானை நோக்கித்தான்.

    அகமும் நமது சுகமும் ஒளிர செய்யும் மாதம் .

    அறம் செய்து தீமையை ஒலிக்கசொல்லும் மாதம் .

    புறம் பேசுபவர்கள் புரிந்து கொள்ளும் மாதம்.

    அல்லாஹ்வின் அருட்கொடைகளை வாரி வழங்கும் மாதம் .

    அர்ஷின் நிழலை நாம் நெருங்குவதற்கு ஏதுவான மாதம்.

    புனித குரான் புவியோருக்கு வழங்கப் பட்ட மாதம்.

    லைலத்துல் கத்ர் என்னும் நள்ளிரவிலே .

    அழுது கண்ணீர் வடிக்கச் சொல்லும் மாதம்.

    இப்லிஷின் சேட்டைகளை முடக்கி வைக்கும் மாதம்

    பாவங்கள் போக்கி... நியாங்கள் பெருகிட வைக்கும் மாதம்.

    வஹி என்னும் இறை செய்தி கணிந்திலங்கிய மாதம்.

    வானவர் கோணாம் ஜிப்ரிலூ(அலை) அதிகம் நபியை கண்ட மாதம்.


    தக்வா என்னும் இறையச்சத்தை எடுத்துரைக்கும் மாதம்

    சுவர்க்கத்தின் நறுமணங்கள் தென்றலாய் வீசும் மாதம்.

    தீய நரகத்தின் வாயல்கள் அடைக்கப் படும் மாதம்.

    காலம் கரைந்தது தெரியாமல் இறையை வணங்கப் படும் மாதம்.

    நோன்புகளை கட்டாயப் படுத்தும் இம்மாதம்.

    நோன்பு நோர்ப்பவர்களை கண்ணிய படுத்தும் பிரமாதம்.



    திக்ருகளும் தஸ்பீஹ்களும் அதிகமா ஓதப் படும் மாதம்.

    பொல்லாத் தீமைகளை விளக்கி வைக்கும் மாதம்

    நன்மையை ஏவி தீமையை ஒடுக்கச் சொல்லும் மாதம்.

    மென்மையாய் நாவைப் பேணி.. கண்ணியமாய் வாழச் சொல்லும் மாதம்.

    இல்லாதவர்களுக்கு வாரி வழங்கச் சொல்லும் மாதம்.

    ஏழை எளிய மக்கள் "ஜக்காத்தை" பெறுவதற்கு எதிர் பார்க்கும் மாதம்.


    மலையளவு தவறுகள் செய்த போதிலும்..அழுது கேட்க்கும் நம் துவாவில்

    பாவங்கள் பனித்துளியாய் கரைந்து போக வைப்பது இந்த மாதம்.


    ஒன்னுக்கு பத்து என்ற நன்மையை பெருக்கித் தரும் மாதம்.

    இறைச்சத்தால் நாம் கேட்கப் படும் துஆ கப்லாக்கித் தரும் மாதம்.

    முன் செய்த பாவங்களை மன்னிக்க போராடும் இம்மாதம்.

    பய பக்த்தியோடு தொழுபவருக்கு சொர்க்க வாசலுக்கு தூக்கிச் செல்லும் மாதம் .

    கவிக் கலைஞ்சியம் சகோதிரிக்கு வாழ்த்துக்கள் !!

    ஆயிரம் உமது கவிதைகள் என் கண்ணில் காணலை கொண்டு வந்ததது.


    காணாக் கிடைக்கா வார்த்தைகள், உமது படைப்புகள் போற்றி வைக்கக் கூடிய பொக்கிசங்கள்.

    நானோ கவிதையை தேடியலையும் ஒரு பாமரன் .

    இந்த இணைப்பை ( நீரோடை) எனக்கு அறிமுக படுத்தியவனுக்கு நன்றிபல.

    முழங்கட்டும் உமது பனி, நம் சமுதாயம் நெறியில்.

    பதிலளிநீக்கு
  25. மாதம் புனித மாதம்.. இறையருள் பெருகிடும் மாதம்.

    சுழலும் ஒவ்வொரு வருடமும்.

    இப்புனித ரமலானை நோக்கித்தான்.

    அகமும் நமது சுகமும் ஒளிர செய்யும் மாதம் .

    அறம் செய்து தீமையை ஒலிக்கசொல்லும் மாதம் .

    புறம் பேசுபவர்கள் புரிந்து கொள்ளும் மாதம்.

    அல்லாஹ்வின் அருட்கொடைகளை வாரி வழங்கும் மாதம் .

    அர்ஷின் நிழலை நாம் நெருங்குவதற்கு ஏதுவான மாதம்.

    புனித குரான் புவியோருக்கு வழங்கப் பட்ட மாதம்.

    லைலத்துல் கத்ர் என்னும் நள்ளிரவிலே .

    அழுது கண்ணீர் வடிக்கச் சொல்லும் மாதம்.

    இப்லிஷின் சேட்டைகளை முடக்கி வைக்கும் மாதம்

    பாவங்கள் போக்கி... நியாயங்கள் பெருகிட வைக்கும் மாதம்.

    வஹி என்னும் இறை செய்தி கணிந்திலங்கிய மாதம்.

    வானவர் கோணாம் ஜிப்ரிலூ(அலை) அதிகம் நபியை கண்ட மாதம்.


    தக்வா என்னும் இறையச்சத்தை எடுத்துரைக்கும் மாதம்

    சுவர்க்கத்தின் நறுமணங்கள் தென்றலாய் வீசும் மாதம்.

    தீய நரகத்தின் வாயல்கள் அடைக்கப் படும் மாதம்.

    காலம் கரைந்தது தெரியாமல் இறையை வணங்கப் படும் மாதம்.

    நோன்புகளை கட்டாயப் படுத்தும் இம்மாதம்.

    நோன்பு நோர்ப்பவர்களை கண்ணிய படுத்தும் பிரமாதம்.



    திக்ருகளும் தஸ்பீஹ்களும் அதிகமா ஓதப் படும் மாதம்.

    பொல்லாத் தீமைகளை விலக்கி வைக்கும் மாதம்

    நன்மையை ஏவி தீமையை ஒடுக்கச் சொல்லும் மாதம்.

    மென்மையாய் நாவைப் பேணி.. கண்ணியமாய் வாழச் சொல்லும் மாதம்.

    இல்லாதவர்களுக்கு வாரி வழங்கச் சொல்லும் மாதம்.

    ஏழை எழிய மக்கள் "ஜக்காத்தை" பெறுவதற்கு எதிர் பார்க்கும் மாதம்.


    மலையளவு தவறுகள் செய்த போதிலும்..அழுது கேட்க்கும் நம் துவாவில்

    பாவங்கள் பனித்துளியாய் கரைந்து போக வைப்பது இந்த மாதம்.


    ஒன்னுக்கு பத்து என்ற நன்மையை பெருக்கித் தரும் மாதம்.

    இறையச்சத்தால் நாம் கேட்கப் படும் "துஆ" கப்லாக்கித் தரும் மாதம்.

    முன் செய்த பாவங்களை மன்னிக்க போராடும் இம்மாதம்.

    பய பக்த்தியோடு தொழுபவருக்கு சொர்க்க வாசலுக்கு தூக்கிச் செல்லும் மாதம் .

    கவிஞானம் கிடைக்கப் பெறுபவர் ஒரு சிலரே (பெண்களில் )

    அதில் நீயும் ஒருவர்.

    உமது தளத்தில் கவிச்சோலை .

    காணக்கிடைத்ததில் நான் எழுதினேன் ஓலை.

    கணீர்..கணீரென இலக்கியங்கள்.

    கல் நெஞ்சம் படைத்தவரும் நெகில்வர் உம் கவி திறனை கண்டு .

    வாழ்த்துக்கள் கவியரசே.

    வாழிய ..வாழியவே ..நீவிர் குடும்பத்தோடு நீன்டாண்டு வாழ்கவே.

    பதிலளிநீக்கு
  26. ரமலானின் சிறப்புகளை அழகுற சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது