நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விசித்திர இயந்திரம்.

கண்ணுக்குள் குடிகொண்டு
காணும் காட்சியாவும்
நீயாகிப் போனாய்-எனைவிட்டு
நீங்காமலே

நினைவுகளை சுமந்துக்கொண்டு
நிலாவின் வெளிச்சத்தில்
நித்திரையின்றித் தவித்தேன்

நான்போகும் வழியெங்கும் -உன்
நிழலில் பிம்பம் எனைத்தொடர்ந்து
நீந்திவர
நீயாகவேயானேன் நான்

எனையும் உனையும்
இணைத்தது எதுவென
என்மனதிடம் கேள்விகேட்டால்
எதுகை மோனையோடு
எகத்தாளமாய் பதிலளிக்கிறது

இதுகூட தெரியா ஏமாளியா நீ
கோடையில்லாமல் எரியும்போதும்
வாடையில்லாமல் குளிரும்போதும்
தெரியவில்லையா!
இது அதுதானென

ஆணானப்பட்ட ஆட்களே இதனால்
ஆடிநிற்கும்போது
அடிப்பெண்ணே நீமட்டுமென்ன
விதிவிலக்கா?

விரட்டாமல் மூச்சுவாங்கி
விழாமல் அடிவாங்கி
விளக்கம் தெரியாமல்
விழித்து நிற்கவைக்கும் வினோதம்

அதுதானுனக்கு அவஸ்தையாய்
அதிசயமாய் தெரியும் விசித்திரம்
அதுதான் காதலென்னும்.
அன்பை இயக்கும் இயந்திரம்..

டிஸ்கி//கடல்கடந்து வந்து கானகத்தில் தங்கி மீண்டும் கடல்கடந்து
தாயகம் சென்று திரும்பிவரும்வரையில். கவிதைகள் வந்துகொண்டிருக்கும்.அதற்கு கருத்துக்களென்னும் ஊக்கம் தந்துகொண்டிருங்கள்.
வந்ததும் உற்சாக பதிலளிக்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

27 கருத்துகள்:

 1. நிஜமோ நிஜம் மலிக்கா
  வார்த்தை பிரயோகம் சூப்பர்
  வரவர கவிதைகள் ரொம்ப கலைக்கட்டுதுங்கோ. ரொம்ப அருமையாக எழுதுறீங்கோ.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. எப்புடி மல்லி இப்புடியெல்லாம் என்னாமா எழுதுறீங்கப்பா அசந்துபோகிறேன் உங்கள் கவிதைகளைக் கண்டு சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  இன்னும் முன்னறே வாழ்த்தும் பிராத்தனையும்..

  என்றும் நண்பன்
  ரமேஷ்

  பதிலளிநீக்கு
 3. அழகாயிருக்குங்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள், எல்லோரையும் விசாரித்ததாக சொல்லவும்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை.. மேலும் சிறப்பாகட்டும்.

  பதிலளிநீக்கு
 6. என்னமப் போங்க...!
  என்னத்த சொல்றது...!
  ஏதுன்னு சொல்றது...!
  கவிதை முழுதுமே அழகு...

  அதிலும்...

  ////நினைவுகளை சுமந்துக்கொண்டு
  நிலாவின் வெளிச்சத்தில்
  நித்திரையின்றித் தவித்தேன்////

  என்னதிது...!
  என்ன வரிங்க...
  இந்த மேற்வரிகளை முணுமுணுத்து பார்த்தாலே தெரியும்...

  இந்த மலிக்காவின் வரிகளுக்கே ஓர் கவிதை...
  "கண்களால் கண்டு
  உதட்டினால் உச்சரிக்கப்பட்டு
  உள்ளத்தை உலுக்கி
  உயிரில் கரைந்த வரிகள்...."

  ///விரட்டாமல் மூச்சுவாங்கி
  விழாமல் அடிவாங்கி
  விளக்கம் தெரியாமல்
  விழித்து நிற்கவைக்கும் வினோதம்///

  இதெல்லாம் எப்படி...?

  any have...

  அருமையான... அழகான... கவிதை...

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 7. கவிதை எப்பவும்போலத்தான் மல்லிக்கா.பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.சுகமா போய்ட்டு வாங்க.இன்னும் கவிதைகள் அள்ளி வரப்போறீங்க !

  பதிலளிநீக்கு
 8. //விரட்டாமல் மூச்சுவாங்கி
  விழாமல் அடிவாங்கி
  விளக்கம் தெரியாமல்
  விழித்து நிற்க்கவைக்கும் வினோதம்//


  வினோதம் தந்த வித்தக கவியே பயணம் இனிமையாய் அமையட்டும்...சொந்தங்களுக்கு சலாம் சொல்லவும்...மலிக்(கா)

  பதிலளிநீக்கு
 9. சூப்பர் கவிதை..

  பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. உங்களின் வார்த்தைகள் எங்களை மயக்கும் மந்திரங்களாய்...

  உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்...

  பொறுமை வந்து பதிலளிங்க....

  பதிலளிநீக்கு
 11. காத‌ல் இய‌ந்திர‌ம் ம‌னித‌னை இய‌க்கும் இய‌ந்திர‌ம்..

  பதிலளிநீக்கு
 12. சும்மா வெளுத்து வாங்குறீங்கப்பூ. கவிதையினா அது மல்லிகவிதைதான் அப்படிங்கிறமாதரி ஹூம். நானும் இருக்கேனே வெட்டி திண்ணமேணியா.

  சூஊஊஊஊஊஉப்பர் கவிதை மலிக்கா
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. ஏண்டா மங்கு இத படிச்சு புருஞ்சிக்கவே உனக்கு பத்து நிமிஷம் ஆகுதே , இது மாத்ரிஎல்லாம் எப்படா நீ எழுதப்போற ????

  பதிலளிநீக்கு
 14. பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

  உங்களின் வார்த்தைகள் எங்களை மயக்கும் மந்திரங்களாய்...நிஜம் மலிக்கா

  பதிலளிநீக்கு
 15. இன்று...
  தாங்கள் மேற்கொள்ளும்
  தமிழக பயணம்...

  ******************************
  இனிய பயணமாய்..
  மகிழ்ச்சி பயணமாய் அமைய
  இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...
  ******************************

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 16. இனிய பயணத்திற்கு அன்பின் வாழ்த்துக்கள் தோழர் !

  பதிலளிநீக்கு
 17. அழகாயிருக்குங்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. கவிதை நன்றாக உள்ளது. உங்கள் பயணம் நலமுடன் சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
  அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

  http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 20. அதுதாங்க காதல்...


  நல்ல வரிகள் மலிக்கா...

  ஒருமாதம் சரியான வேலை இந்த பக்கமே வரமுடியல இப்பதான் கொங்ஞம் விடுதலை ஆனேன் அதான் வந்துட்டேன்

  பதிலளிநீக்கு
 21. தமிழின் முதல் மகளிர் திரட்டி.
  மகளிர் கடல்
  அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. அருமையான கவிதை , பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 23. அன்புள்ள மலிக்கா அக்கா.. நலம் நலமறிய ஆவல்..

  உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  http://mindsofmini.blogspot.com/2010/08/blog-post_09.html

  பதிலளிநீக்கு
 24. இதுகூட தெரியா ஏமாளியா நீ
  கோடையில்லாமல் எரியும்போதும்
  வாடையில்லாமல் குளிரும்போதும்
  தெரியவில்லையா!
  இது அதுதானென.

  ஏங்க்கா......ஒண்ணுமே புரியிலியே ?

  ஒருவேளை நான் ஏமாளியா இருப்பேனோ?

  மத்தப்படி கவிதை ரொம்ப அருமை பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது