நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விழி வழியே ஒளி!

நன்றி கூகிள்
இரவுநேர வானம்
இருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்

விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்

விழிமூடிய நீ
விருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது விண்மீன்கள்

விடிவது தெரியாமலே! -என்
விழிகள் ஒளிர்வது அறியாமலே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

57 கருத்துகள்:

  1. nice.

    //விழகாமல்//

    விலகாமல்..?



    http://vaarththai.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. வடையும்... எனக்குத்தான்...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  3. //விழிமூடிய நீ
    விருட்டென்று எழுந்து
    வானம் பார்த்து
    விழியசைத்ததும்
    வியந்தது வின்மீன்கள்//

    arumai

    பதிலளிநீக்கு
  4. "இ"... "வி"... என்ற
    இவ்விரு எழுத்திலேயே....
    எதுகைமோனையுடன் ஓர் அழகிய கவிதை....

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  5. காஞ்சி முரளி கூறியது...
    ஹய்.... நான்தான் 1st ....
    கரீட்டா....//

    கரகீட்ட்டூடுடுடுடுடுடூடுதான்




    காஞ்சி முரளி கூறியது...
    வடையும்... எனக்குத்தான்...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    வடையும் சட்னியும். உங்களுக்குதன் சகோதரா..

    பதிலளிநீக்கு
  6. ///இரவுநேர வானம்.... இருளை அகற்ற.... இரகசியமாய்
    இரவல்கேட்டது என்விழிகளை... இன்முகத்தோடு தந்தேன்///

    மிக ரம்மியமான வரிகள்...

    ///விடிய விடிய... விழித்திருந்தது வானத்தில்
    வின்மீன்களோடு என்விழிகள்- நீ... விழிமூடும்வரை உனை
    விட்டு விலகாமல்...///

    கற்பனையின் உச்சத்தின் வரிகள்...

    அழகான ....
    அருமையான கவிதை.....

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  7. வாவ்...அருமையாக செதுக்கிய கவிதை..வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  8. " விடிய விடிய
    விழித்திருந்தது வானத்தில்
    விண்மீன்களோடு என்விழிகள்- நீ
    விழிமூடும்வரை உனை
    விட்டு விலகாமல்.."

    கவிதை வரிகள் அழகோவியம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ப‌ட‌மும் அழ‌கு... அத‌ற்கேற்ற‌ க‌விதையும் அழ‌கு.. வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான வரிகள் ..

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    என்ன ஒரு அழகான கற்பனை உங்களுக்கு கற்பனை கரைபுரண்டுதான் ஓடுது அதுக்குதான் நீரோடையினு பெயர் வைத்தீங்களோ
    பெயருக்கேற்றமாதரி அசத்துறீங்க மல்லி..

    பதிலளிநீக்கு
  12. திடீர் வெளிச்சம்..
    பகலிரவு தெரியாமல்
    விழிக்கி(ன்)ரேன்
    என்ன ஆச்சு
    மனம் குழம்புதே..!!
    ஓ ..கவியரசியின்
    கடைக்கண் பார்வையை
    கவிதையில் கொடுத்ததால்
    தானா இந்நிலை..!!

    பதிலளிநீக்கு
  13. soundr கூறியது...
    nice.

    //விழகாமல்//

    விலகாமல்..?



    http://vaarththai.wordpress.com//

    மிக்க நன்றி செளந்தர்..



    /LK கூறியது...
    //விழிமூடிய நீ
    விருட்டென்று எழுந்து
    வானம் பார்த்து
    விழியசைத்ததும்
    வியந்தது வின்மீன்கள்//

    arumai//


    மிக்க நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  14. வெறும்பய கூறியது...
    அருமையான வரிகள் ..

    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்சி
    ----ம்பய..




    காஞ்சி முரளி கூறியது...
    "இ"... "வி"... என்ற
    இவ்விரு எழுத்திலேயே....
    எதுகைமோனையுடன் ஓர் அழகிய கவிதை....

    நட்புடன்...
    காஞ்சி முரளி.//

    எதுகையோடு எழுதினால் கவி நன்றாக வருவதாய் ஒரு நினைப்பு அதே அடிக்கடி இந்த எதுகை..

    மிக்க மகிழ்ச்சி சகோதரா..

    பதிலளிநீக்கு
  15. காஞ்சி முரளி கூறியது...
    ///இரவுநேர வானம்.... இருளை அகற்ற.... இரகசியமாய்
    இரவல்கேட்டது என்விழிகளை... இன்முகத்தோடு தந்தேன்///

    மிக ரம்மியமான வரிகள்...

    ///விடிய விடிய... விழித்திருந்தது வானத்தில்
    வின்மீன்களோடு என்விழிகள்- நீ... விழிமூடும்வரை உனை
    விட்டு விலகாமல்...///

    கற்பனையின் உச்சத்தின் வரிகள்...

    அழகான ....
    அருமையான கவிதை.....

    நட்புடன்..
    காஞ்சி முரளி....//

    வரிக்கு வரி கருத்ளிக்கும் சகோதரா! தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  16. Yasir கூறியது...
    வாவ்...அருமையாக செதுக்கிய கவிதை..வாழ்த்துக்கள் மலிக்கா//.


    மிக்க நன்றி யாசிர் காக்கா

    பதிலளிநீக்கு
  17. நாடோடி கூறியது...
    ப‌ட‌மும் அழ‌கு... அத‌ற்கேற்ற‌ க‌விதையும் அழ‌கு.. வாழ்த்துக்க‌ள்..//

    தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்டீபன்..

    பதிலளிநீக்கு
  18. abul bazar/அபுல் பசர் கூறியது...
    " விடிய விடிய
    விழித்திருந்தது வானத்தில்
    விண்மீன்களோடு என்விழிகள்- நீ
    விழிமூடும்வரை உனை
    விட்டு விலகாமல்.."

    கவிதை வரிகள் அழகோவியம்.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  19. சித்தி. கூறியது...
    வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    என்ன ஒரு அழகான கற்பனை உங்களுக்கு கற்பனை கரைபுரண்டுதான் ஓடுது அதுக்குதான் நீரோடையினு பெயர் வைத்தீங்களோ
    பெயருக்கேற்றமாதரி அசத்துறீங்க மல்லி..//

    கற்பனை கண்ணுக்கெட்டிய தூரம்வரையிருக்கு ஆனாலும் வரையரைக்குள் வகுத்து வார்தைகள் கோர்க்கவேண்டும்,..

    மிக்க நன்றி சித்திமா..

    பதிலளிநீக்கு
  20. அமைதிச்சாரல் கூறியது...
    அருமையாக இருக்கிறது மலிக்கா.//

    ரொம்ப மகிழ்ச்சி சாரல்..


    சே.குமார் கூறியது...
    அருமையான வரிகள் ..

    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி குமார்..

    பதிலளிநீக்கு
  21. ஜெய்லானி கூறியது...
    திடீர் வெளிச்சம்..
    பகலிரவு தெரியாமல்
    விழிக்கி(ன்)ரேன்
    என்ன ஆச்சு
    மனம் குழம்புதே..!!
    ஓ ..கவியரசியின்
    கடைக்கண் பார்வையை
    கவிதையில் கொடுத்ததால்
    தானா இந்நிலை..!!//


    அண்ணாத்தே கவியில் வர வர கலக்குறீங்க, ம்ம் பாத்துப்பு உங்களோடவெல்லாம் போட்டிபோட முடியாதுங்கோ நான் பாவம் சொட்டூண்டு புள்ள..


    ஜெய்லானி கூறியது...
    கவிதை சூப்பருங்கோ..!!!.//

    ரொம்ப நன்றிங்கோ அண்ணாத்தே

    பதிலளிநீக்கு
  22. //விடிய விடிய
    விழித்திருந்தது வானத்தில்
    விண்மீன்களோடு என்விழிகள்///

    தூங்காம வானத்த பார்த்துட்டு இருந்தீங்களா ..??

    கவிதை அருமை ..!!!

    பதிலளிநீக்கு
  23. மோனைல கவிதைய முழுக அடிச்சிடீன்களா? இல்ல கவிதைல மோனைய முழுக அடிச்சிடீன்களான்னு குழப்பமா இருக்கு. கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  24. @@@அன்புடன் மலிக்கா--//அண்ணாத்தே கவியில் வர வர கலக்குறீங்க, ம்ம் பாத்துப்பு உங்களோடவெல்லாம் போட்டிபோட முடியாதுங்கோ நான் பாவம் சொட்டூண்டு புள்ள..//


    இப்பிடியெல்லாம் சொன்னா
    நான் அழுதுடுவேன்..
    அவ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  25. ஜெய்லானி கூறியது...
    @@@அன்புடன் மலிக்கா--//அண்ணாத்தே கவியில் வர வர கலக்குறீங்க, ம்ம் பாத்துப்பு உங்களோடவெல்லாம் போட்டிபோட முடியாதுங்கோ நான் பாவம் சொட்டூண்டு புள்ள..//


    இப்பிடியெல்லாம் சொன்னா
    நான் அழுதுடுவேன்..
    அவ்வ்வ்வ்வ்.//

    அதுசரி அழுறதுன்னா ஹூம் ஹூம் அப்படித்தானே அழுவாங்க அதென்ன
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழுறீங்க.

    அப்புறம் வடிவேலு அழுவாச்சின்னு சொல்லிடப்போறாங்க..

    பதிலளிநீக்கு
  26. வேணா....! இதோட நிறுத்திக்குவோம்...!

    இன்னும் ஆரம்பிக்கவே இல்ல...! அதுக்குள்ள எங்க நிறுத்திகறது...!

    பதிலளிநீக்கு
  27. விடிய விடிய
    விழித்திருந்தது வானத்தில்
    விண்மீன்களோடு என்விழிகள்- நீ
    விழிமூடும்வரை உனை
    விட்டு விலகாமல்.//

    vezuththu vaangkuriingka superrrrrrrrrrrrrrrrrr

    பதிலளிநீக்கு
  28. விழியை
    விண்ணுக்கு கடத்திய
    விசித்திர கவிதை
    அழகு..

    மலிக்கா அக்கா வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  29. ப.செல்வக்குமார் கூறியது...
    //விடிய விடிய
    விழித்திருந்தது வானத்தில்
    விண்மீன்களோடு என்விழிகள்///

    தூங்காம வானத்த பார்த்துட்டு இருந்தீங்களா ..??

    கவிதை அருமை .//

    வாங்க செல்வா.

    விழிய அங்க கொடுத்துட்டு நாம எங்கே தூங்குறது அதேன் வானத்தையே பாத்துண்டு இருந்தேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  30. வழிப்போக்கன் கூறியது...
    மோனைல கவிதைய முழுக அடிச்சிடீன்களா? இல்ல கவிதைல மோனைய முழுக அடிச்சிடீன்களான்னு குழப்பமா இருக்கு. கவிதை அருமை..//


    குழம்பிட்டேளா. அப்ப இது கன்பாமா கவிதைதான். அதுவும் என்னோட கவிதைதான்..

    மிக்க நன்றி வழிப்போக்கன் போகிறபோக்கில் இனி அடிக்கடி எட்டிபார்த்து குழம்பிட்டுபோங்க!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  31. காஞ்சி முரளி கூறியது...
    வேணா....! இதோட நிறுத்திக்குவோம்...!

    இன்னும் ஆரம்பிக்கவே இல்ல...! அதுக்குள்ள எங்க நிறுத்திகறது...!//

    நிறுத்துரதாவது. தொடரூஊஊஊஊஊஉம் போடாமாயிருக்கோமே அதுவரைக்கும் சந்தோஷப்படனும்.ஹி ஹி ஹி



    // rafeek கூறியது...
    விடிய விடிய
    விழித்திருந்தது வானத்தில்
    விண்மீன்களோடு என்விழிகள்- நீ
    விழிமூடும்வரை உனை
    விட்டு விலகாமல்.//

    vezuththu vaangkuriingka superrrrrrrrrrrrrrrrrr/

    தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  32. seemangani கூறியது...
    விழியை
    விண்ணுக்கு கடத்திய
    விசித்திர கவிதை
    அழகு..

    மலிக்கா அக்கா வாழ்த்துகள்.../

    எத எதையோ கடத்துறாங்களேன்னு விண்ணும் விழியை கடத்திறிச்சிங்கப்பு..

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கனி...

    பதிலளிநீக்கு
  33. இளம் தூயவன் கூறியது...
    மிக்க அருமை//

    மிக்க நன்றி தூயவன்..

    பதிலளிநீக்கு
  34. விழிமூடிய நீ
    விருட்டென்று எழுந்து
    வானம் பார்த்து
    விழியசைத்ததும்
    வியந்தது விண்மீன்கள்///

    ரசித்த வரி மலிக்கா.. நல்லாயிருக்குங்க..

    பதிலளிநீக்கு
  35. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  36. விழிக்கும் வின்னுக்கும் சம்பந்த படுத்தி அழகான கவிதை.கவிதைக்கு எற்ற அருமையான படம்.

    பதிலளிநீக்கு
  37. கவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப

    பதிலளிநீக்கு
  38. விழியே விண்மீன் வழியே நீ எழுதிய கவி என் விழிகளுக்கு விருந்தானதே!

    மிக மிக அருமையான கவிபடைத்த ஒளியே உனக்கு என் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  39. //இரவுநேர வானம்
    இருளை அகற்ற
    இரகசியமாய்
    இரவல்கேட்டது என்விழிகளை
    இன்முகத்தோடு தந்தேன்//

    மிகவும் பிடித்த வரிகள்...

    பதிலளிநீக்கு
  40. அஹமது இர்ஷாத் கூறியது...
    விழிமூடிய நீ
    விருட்டென்று எழுந்து
    வானம் பார்த்து
    விழியசைத்ததும்
    வியந்தது விண்மீன்கள்///

    ரசித்த வரி மலிக்கா.. நல்லாயிருக்குங்க....//

    ரசித்தமைக்கு மிக்க நன்றி இர்ஷாத்..

    பதிலளிநீக்கு
  41. mkr கூறியது...
    விழிக்கும் வின்னுக்கும் சம்பந்த படுத்தி அழகான கவிதை.கவிதைக்கு எற்ற அருமையான படம்.//

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி சகோதரரே!

    இயற்கை கூறியது...
    அருமையாக இருக்கிறது மலிக்
    வாழ்த்துகள்..
    .//

    மிக்க நன்றி இயற்கை..

    பதிலளிநீக்கு
  42. shahulhameed கூறியது...
    கவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
    .//

    மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.

    அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..

    பதிலளிநீக்கு
  43. வான்மேகம் கூறியது...
    விழியே விண்மீன் வழியே நீ எழுதிய கவி என் விழிகளுக்கு விருந்தானதே!

    மிக மிக அருமையான கவிபடைத்த ஒளியே உனக்கு என் வாழ்த்துக்கள்.//

    வாங்க வாங்க வான்மேகம்.

    வருகைக்கும் ஒளிபடைத்த கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  44. சந்ரு கூறியது...
    //இரவுநேர வானம்
    இருளை அகற்ற
    இரகசியமாய்
    இரவல்கேட்டது என்விழிகளை
    இன்முகத்தோடு தந்தேன்//

    மிகவும் பிடித்த வரிகள்.//

    வாங்க சந்து. தங்களின் வருகைக்கும் .
    பிடித்து படித்தமைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  45. shahulhameed கூறியது...
    கவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
    .//

    மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.

    அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..


    க என்றால் கவிதை ப என்றால் படம் photo

    பதிலளிநீக்கு
  46. shahulhameed கூறியது...
    கவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
    .//

    மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.

    அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..


    க என்றால் கவிதை ப என்றால் படம் photo

    பதிலளிநீக்கு
  47. மலிக்கா ராத்தா,
    கருத்திடாமல் தினந்தோறும் உங்களுடைய தளத்திற்கு வந்து செல்கின்ற வாசகன் நான். உங்களுடைய கவிதைகள் மிக அருமை.
    என்னைப்போன்ற வாசகர்களோடு உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்....!!!!

    பதிலளிநீக்கு
  48. shahulhameed சொன்னது…
    shahulhameed கூறியது...
    கவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
    .//

    மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.

    அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..


    க என்றால் கவிதை ப என்றால் படம் photo.//

    அது தெரிந்துதான் எழுத்தை விரயம் செய்யாமல். சேக்குறீங்களான்னு எழுத்தெனர்ஜியான்னு கேட்டேன்.

    நன்றி காக்கா

    பதிலளிநீக்கு
  49. அபூ ஜாசிம் கூறியது...
    மலிக்கா ராத்தா,
    கருத்திடாமல் தினந்தோறும் உங்களுடைய தளத்திற்கு வந்து செல்கின்ற வாசகன் நான். உங்களுடைய கவிதைகள் மிக அருமை.
    என்னைப்போன்ற வாசகர்களோடு உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்....!!!!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜாசீம் தொடர்ந்து வருகையும் கருத்தும் தாருங்கள்..

    பதிலளிநீக்கு
  50. //இரவுநேர வானம்
    இருளை அகற்ற
    இரகசியமாய்
    இரவல்கேட்டது என்விழிகளை
    இன்முகத்தோடு தந்தேன்//

    அட ..இது தெரியாம போச்சே ......தமிழ் நாட்டுல ஒரு வருசமா பவர் கட் problem .......இந்த information யை நம்ம மின் வெட்டு துறை அமைச்சருக்கு நான் சொல்லறேன் ....................

    பதிலளிநீக்கு
  51. ரசனை செறிவுமிக்க வரிகள் மலிக்கா...

    ம்ம்ம்ம்....அருமை

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது