நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுதந்திரக் கிளிகள்.

முக்காட்டிட்டே
முடக்கப்படுகிறார்களென
முணுமுணுக்கும் சிலபேர்கள்
சிறகொடித்து கூண்டுகிளியாய்
சிறையில் வைத்துள்ளதாய்
சித்தரிக்கும் பலபேர்கள்.

முழுவதுமாய் மூடியிருப்பது
உடலையே தவிரை
உள்ளத்தையல்ல!
அதை செயல்படுத்தும்
மூளையையுமல்லவென-

முன்னேறிக் காட்டுகிறது
முக்காடிட்டபடியே
முன்னுக்கு வந்தும்
முழங்கால் கட்டாமல்
முகம் நிமிர்த்தி நின்றும்

சுதந்திரம் பறிக்கப்பட்ட
கூண்டுக் கிளிகளென
கூக்குரலெழுப்படுகிறது
கோடிட்டுக் காட்டப்படுகிறது
உண்மையறியாமல்

சுதந்திரம் கொடுக்கப்பட்ட கிளிகளாய்
சிறகை விறித்து பறக்கிறதே தவிர
கிளிகளையொன்றும் சிறகையொடித்து
சிறைப்படுத்தி வைக்கப்படமில்லை

கூண்டுக்கிளிகளாய் பறப்பதிலும்
கிளிகளுக்கொன்றும் பாரமில்லை
ஏனெனில்! சிலபல பார்வைகளில்
சினேகமுமில்லை   சத்தியமுமில்லை

பலங்காலத்து நாகரீகம்போல்
பின் நவீனத்திலும் ஆடைகளற்றும்
அரைகுறையாய் திரியும் மக்களிடையே
அகிலத்தை அறிவோடு வலம்வந்து
அசிங்கத்தை அவமதிக்கும்
இதேக் கூண்டுகிளிகளாய்
கூண்டுக்கிளியென்றபோதும்
யாருக்குமிங்கே அடிமையில்லை
சுதந்திரமாய் உலகத்தில்
சுற்றித்திறிய தடையேதுமில்லை

குறைக்கூறி கூக்குரல்
எழுப்பத் தேவையில்லை -மார்க்க
கோட்பாடுகளை குறைச்சொல்வதில்
சிறிதளவும் நியாயமில்லை

பர்தாஅணிவதில் தவறேதுமில்லை
இதனால் பாதகங்கள் எவருக்குமில்லை
பசுந்தோல் போர்த்திய புலிக்கும்
பச்சோந்திப் பார்வைக்கும் விருந்தாக
இப்பாவைகளுக்கு விருப்பமில்லை

மறையோன் சொல்லாத ஒன்றை
மனிதனுக்காக செய்யவேண்டுமென்ற
அவசியமுமில்லை
மாண்புடையோன் சொன்னசொல்லை
மறுத்திட மனதுக்கும் அனுமதியில்லை

கூண்டுக்கிளிகளாய்
இருப்பதில் சிறிதளவிலும்
வருத்தமுமில்லை
இறைவாக்கை மீறிட
எள்ளளவும் விருப்பமுமில்லை
இவ்வுலம் மட்டுமே
வாழ்க்கையுமில்லை

இதைத்தாண்டியும்
வாழ்க்கை உண்டென்பதே உண்மை
இதையறிந்து நடந்தால்
வசந்தமாய் கிடைத்திடும் நன்மை...

டிஸ்கி// ஆங்காங்கே உண்மை புரியாமல் எழுத்துக்கள்தானே  என வாரிக்கொட்டப்படுகிறது. நோகடிக்கும் வார்த்தைகள்.
தவறுதலாய் சிதறிய சோற்றை அள்ளிவிடலாம் ஆனால் வேண்டுமென்றே
தாறுமாறாய் சிந்தும் சொல்லை அள்ள முடியாது.
மல்லுக்கு நின்று மனதை நோகடிக்கும் சொல்லுக்கு மன்னிப்புதர மனம்மறுக்கும் சந்தர்ப்பதை யாரும் உருவாக்கிக்கொள்ளவேண்டாம்.

இந்தக்கவிதைக்கூட யாரையும் நோகடிக்கவல்ல.
உண்மை என்னவென்று சிலரேனும் விளங்கிக்கொள்வார்களென்றுதான்.
இதில் கருத்துக்கள்கூட யாரும் கடினவார்த்தைகள்கொண்டு கருத்திடவேண்டாம் பிறர்மனம் நோகும்படி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

55 கருத்துகள்:

  1. பயங்கர கோபம் போலிருக்கு...!

    கவிதை
    வரிகளின்
    வார்த்தைகளில்
    செக்கச் செவேலென
    எரிமலையின் குழம்பாய்
    கொந்தளித்து கொப்பளிக்கிறது கோபம்...!

    யார்மீது இந்த கோபம்....?

    Please... Cooldown... Malikka..!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  2. காஞ்சி முரளி கூறியது...
    பயங்கர கோபம் போலிருக்கு...!

    கவிதை
    வரிகளின்
    வார்த்தைகளில்
    செக்கச் செவேலென
    எரிமலையின் குழம்பாய்
    கொந்தளித்து கொப்பளிக்கிறது கோபம்...!

    யார்மீது இந்த கோபம்....?

    Please... Cooldown... Malikka..!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...//

    யார் மீதும் கோபமில்லை சகோதரா!
    நிச்சியமாக!
    சில மனிதர்கள் எழுத்துச்சுதந்திரம் இருப்பதால் எதையும் எழுதலாம் என்றநோக்கில். மனங்களையும் மத கோட்பாடுகளையும் நோகடிக்கிறார்கள்.

    பதிலுக்கு நோகடிக்கவல்ல இந்த எழுத்து மன உணர்வுகளை புரியவைப்பதற்க்கே! கேட்கலாம் நீங்க ஏன் செவிடனுக்கு சங்கென.
    ஊதவேண்டிய நேரத்தில் ஊதினால் உதடு அசைவதிலாவது புரிந்துகொள்ளமாட்டார்களா எதுக்கு ஊதுகிறோமென்று என்ற நப்பாசைதான்..

    மீண்டும் சொல்கிறேன் சகோதரா கோபம் என்ற சொல்லுக்கு இங்கே இடமேயில்லை..

    பதிலளிநீக்கு
  3. புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை .. புரியாதவர்களுக்கு இது உதவும்.. புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்களுக்கு எதுவும் உபயோகம் இல்லை...

    பதிலளிநீக்கு
  4. LK கூறியது...
    புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை .. புரியாதவர்களுக்கு இது உதவும்.. புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்களுக்கு எதுவும் உபயோகம் இல்லை.//

    மிக மிகச்சரியே இக்கருத்து கார்த்திக்.
    நீங்கள் சொல்வது சரி ஆயினும்
    தெளிவான உணர்வுகளை தெரியவைக்க ஒரு சந்தர்ப்பமாய் இக்கவிதை.

    புரிய முயற்ச்சிக்காதவர்களுக்கும் புரியவைக்க சிறுமுயற்ச்சி.. அவ்வளவுதான்
    தோழமையே.

    பதிலளிநீக்கு
  5. மிகச்சரியாக சொன்னீர்கள் மலிக்கா..

    மனங்களை புன் படுத்தும் நோக்கில் எழுதுபவர்களுக்கு எங்கே புரியப்போகிறது.. மதத்தின் புனிதமும் மத கோட்பாடுகளும்..

    பதிலளிநீக்கு
  6. //தெளிவான உணர்வுகளை தெரியவைக்க ஒரு சந்தர்ப்பமாய் இக்கவிதை//

    சரிதான் :))

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. //இதில் கருத்துக்கள்கூட யாரும் கடினவார்த்தைகள்கொண்டு கருத்திடவேண்டாம் பிறர்மனம் நோகும்படி//

    இதுதான் மனிதம்..
    இதுதான் நாகரீகம்.. புரிந்துகொள்ளட்டும் புரியாதவர்கள்..

    பதிலளிநீக்கு
  8. @@@LK சொன்னது…//புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை .. புரியாதவர்களுக்கு இது உதவும்.. புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்களுக்கு எதுவும் உபயோகம் இல்லை...//


    டிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    அதே போல
    தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.

    பதிலளிநீக்கு
  9. தோழர் மலிக்காவிர்க்கு வணக்கம்...!

    ஒரு பிடி பிடிச்சிட்டீங்க எல்லாத்தையும்...!

    புரிஞ்சவங்க அமைதியாவாங்க இனி...!

    பதிலளிநீக்கு
  10. வாவ்...நீங்களும் பர்தா அணிந்த புரட்சி & புதுமையான பெண் என்பதை நீருபித்து வீட்டீர்கள்..WE ARE SO PROUD OF YOU MALLIKA.என்ன என்ன வார்த்தைகள்...அப்பப்பா...இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தும் மதம் என்ற தவறான அபிப்பிராயத்தை இந்த கவிதை மூலம் கிழித்து எறி(ரி)ந்துவிடீர்கள்..இந்த கவிதை படிக்கும் போது எற்ப்பட்ட உண்ர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  11. அவர்கள் நம்பும் கொள்கை கோட்பாடுகளை எவ்வாறு வேண்டுமானாலும் அவர்கள் தெரிவிக்கட்டும் தெளிவுபடுத்தட்டும்.. அதில் எங்களுக்கு பிரச்சினையே இல்லை.. ஆனால் ஏன் அடுத்தவர் மதத்தையும் வேதத்தையும் தூதரையும் அசிங்கமாக பேசவேண்டும்.. அதுதான் அவர்கள் கற்ற நாகரீகமா..? அதுதான் அவர்கள் கற்ற மனிதமா...? அதுதான் மனிதனை நல்வழிப்படுத்தும் அழகா..? அதுதான் அவர்களின் கோட்பாடா..?

    பதிலளிநீக்கு
  12. இதைவிட தெளிவாக எப்படி புரியவைக்க முடியும் ?

    வாழ்த்துக்கள் சகோ

    (காட்டுக்கிறது) = காட்டு்கிறது - திருத்திக்கொள்ளவும்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. Riyas கூறியது...
    மிகச்சரியாக சொன்னீர்கள் மலிக்கா..

    மனங்களை புன் படுத்தும் நோக்கில் எழுதுபவர்களுக்கு எங்கே புரியப்போகிறது.. மதத்தின் புனிதமும் மத கோட்பாடுகளும்.//

    புரிகிறதோ இல்லையோ.மன உணர்வுகள் தெளிவாக உள்ளதென்பதை தெளிவாக்க வேண்டியது கடமை.

    பதிலளிநீக்கு
  14. LK கூறியது...
    //தெளிவான உணர்வுகளை தெரியவைக்க ஒரு சந்தர்ப்பமாய் இக்கவிதை//

    சரிதான் :))

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்களுக்கு மிக்க சந்தோஷம் கார்த்திக். மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. Riyas கூறியது...
    //இதில் கருத்துக்கள்கூட யாரும் கடினவார்த்தைகள்கொண்டு கருத்திடவேண்டாம் பிறர்மனம் நோகும்படி//

    இதுதான் மனிதம்..
    இதுதான் நாகரீகம்.. புரிந்துகொள்ளட்டும் புரியாதவர்கள்../

    நம்மையறிமால்கூட பிறக்கு நோவினைதந்துவிடக்கூடதென்பதில் கவனம் வேண்டுமல்லவா.

    மிக்க நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  16. ஜெய்லானி கூறியது...
    @@@LK சொன்னது…//புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை .. புரியாதவர்களுக்கு இது உதவும்.. புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்களுக்கு எதுவும் உபயோகம் இல்லை...//


    டிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    அதே போல
    தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது./

    எழுப்புவிட சிறு முயற்ச்சியாவது செய்யலாமேன்னுதான் அண்ணாத்தே!

    பதிலளிநீக்கு
  17. லெமூரியன்... கூறியது...
    தோழர் மலிக்காவிர்க்கு வணக்கம்...!

    ஒரு பிடி பிடிச்சிட்டீங்க எல்லாத்தையும்...!

    புரிஞ்சவங்க அமைதியாவாங்க இனி...!/

    தோழரே! மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  18. Yasir கூறியது...
    வாவ்...நீங்களும் பர்தா அணிந்த புரட்சி & புதுமையான பெண் என்பதை நீருபித்து வீட்டீர்கள்..WE ARE SO PROUD OF YOU MALLIKA.என்ன என்ன வார்த்தைகள்...அப்பப்பா...இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தும் மதம் என்ற தவறான அபிப்பிராயத்தை இந்த கவிதை மூலம் கிழித்து எறி(ரி)ந்துவிடீர்கள்..இந்த கவிதை படிக்கும் போது எற்ப்பட்ட உண்ர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..வாழ்த்துக்கள் சகோதரி.//

    காக்கா. புரட்ச்சிக்கோ புதுமைக்கோ இதை எழுதவில்லை! புனித உணர்வுகளையும் கோட்பாடுகளையும் தெளிவாக விளங்கிக்கொள்ளாமலிருப்பவர்களுக்கு.

    பர்தா என்பது சாத்தானின் போர்வையல்ல
    சன்மார்க்கத்தின் சத்தியப்போர்வையென விளக்கம் தரத்தான் இக்கவிதைவரிகள்.

    அடிமைபடுத்தப்படுகிறதென அறியாதவர்கள் சொல்வதால் அது உண்மையாகிவிடாது.
    உண்மை ஒருபோதும்
    ஊமையாகியும் விடாது.

    பதிலளிநீக்கு
  19. விஜய் கூறியது...
    இதைவிட தெளிவாக எப்படி புரியவைக்க முடியும் ?

    வாழ்த்துக்கள் சகோ.//

    மிகுந்த மகிழ்ச்சி சகோதரா!
    புரிந்துகொண்டால்போதும்
    புண்ணியம் பெற்றுவிடும் புனிதபூமி

    //(காட்டுக்கிறது) = காட்டு்கிறது - திருத்திக்கொள்ளவும்

    விஜய்.//

    திருத்திவிட்டேன் சகோ. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. க‌விதை வ‌டிவில் உங்க‌ள் விள‌க்க‌ம் அருமை.... தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌ய‌ண‌ம்...

    பதிலளிநீக்கு
  21. மிக அருமை , பிரமாதம், உண்மையாக சொல்கிறேன்... அருமை சகோதரி ... வாழ்த்துக்கள் , இன்னும் இதுபோன்ற நல்லினக்கமுள்ள பதிவுகள் படைக்க உங்களுக்காக இறைவனை இறைஞ்சுகிறேன்..

    பதிலளிநீக்கு
  22. //குறைக்கூறி கூக்குரல்
    எழுப்பத் தேவையில்லை -மார்க்க
    கோட்பாடுகளை குறைச்சொல்வதில்
    சிறிதளவும் நியாயமில்லை.//

    நல்லாச்சொல்லியிருக்கேம்மா.
    பிறரை குறைச்சொல்லும்முன் நம்மை முதலில் உணரவேண்டும் என்னம் இல்லாததால்தான் இவ்விதகுறைகளெல்லாம் கட்டவில்கப்படுகிறது.

    உன் விளக்கக்கவிதையை ஏற்கிறேன்

    பதிலளிநீக்கு
  23. நாடோடி கூறியது...
    க‌விதை வ‌டிவில் உங்க‌ள் விள‌க்க‌ம் அருமை.... தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌ய‌ண‌ம்....//

    மிக்க நன்றி ஸ்டீபன். நல்வழிப்பயணத்தை தொடர ஆசிகளும் ஆதரவுகள் என்றென்றும் வேண்டும்..




    /மங்குனி அமைச்சர் கூறியது...
    good one/

    நன்றி அமைச்சரே!

    பதிலளிநீக்கு
  24. M. Azard (ADrockz) கூறியது...
    மிக அருமை , பிரமாதம், உண்மையாக சொல்கிறேன்... அருமை சகோதரி ... வாழ்த்துக்கள் , இன்னும் இதுபோன்ற நல்லினக்கமுள்ள பதிவுகள் படைக்க உங்களுக்காக இறைவனை இறைஞ்சுகிறேன்.//

    வாங்க சகோதரா! தாங்களின் வருகைக்கும் அனபாக கருத்துக்கும்.
    இறையிடம் கேட்க்கும் துஆக்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சிகலந்த நன்றி.

    இறைவனின் துணையோடு நல்லினக்கனம் தொடரும் அன்போடு..

    பதிலளிநீக்கு
  25. முத்தையா கூறியது...
    //குறைக்கூறி கூக்குரல்
    எழுப்பத் தேவையில்லை -மார்க்க
    கோட்பாடுகளை குறைச்சொல்வதில்
    சிறிதளவும் நியாயமில்லை.//

    நல்லாச்சொல்லியிருக்கேம்மா.
    பிறரை குறைச்சொல்லும்முன் நம்மை முதலில் உணரவேண்டும் என்னம் இல்லாததால்தான் இவ்விதகுறைகளெல்லாம் கட்டவில்கப்படுகிறது.

    உன் விளக்கக்கவிதையை ஏற்கிறேன்.//

    வாங்க முத்தையா சார் எப்படியிருக்கீங்க!
    நம் எண்ணங்களில் பிரதிபளிப்பே நம் வாழ்க்கை
    எண்ணுவது சிறந்ததாக இருப்பின்
    ஏற்றமுடன் அனைத்தும் நடக்கும்.

    தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  26. சில மனிதர்கள் எழுத்துச்சுதந்திரம் இருப்பதால் எதையும் எழுதலாம் என்றநோக்கில். மனங்களையும் மத கோட்பாடுகளையும் நோகடிக்கிறார்கள்

    இவர்கள் நாளை அல்லாஹு அக்பர் என்று சொல்லி முதல் வரிசையில் நின்று தொழுவார்கள்

    பதிலளிநீக்கு
  27. //முழுவதுமாய் மூடியிருப்பது
    உடலையே தவிரை
    உள்ளத்தையல்ல!
    அதை செயல்படுத்தும்
    மூளையையுமல்லவென-//

    இது "நச்" வாழ்த்துகள் மலிக்கா அக்கா

    பதிலளிநீக்கு
  28. அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்கா

    ஒவ்வொரு வரியிலும் உண்மை பளிச்!!! பளிச்!!!

    தொடரட்டும் நெத்தியடி வரிகள்

    பதிலளிநீக்கு
  29. shahulhameed கூறியது...
    சில மனிதர்கள் எழுத்துச்சுதந்திரம் இருப்பதால் எதையும் எழுதலாம் என்றநோக்கில். மனங்களையும் மத கோட்பாடுகளையும் நோகடிக்கிறார்கள்

    இவர்கள் நாளை அல்லாஹு அக்பர் என்று சொல்லி முதல் வரிசையில் நின்று தொழுவார்கள்.//

    இன்ஷாஅல்லாஹ் இறைவன் நாடுவான்..

    பதிலளிநீக்கு
  30. ராஜவம்சம் கூறியது...
    சத்தியமான உண்மைகள் நன்றி.//

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  31. seemangani கூறியது...
    //முழுவதுமாய் மூடியிருப்பது
    உடலையே தவிரை
    உள்ளத்தையல்ல!
    அதை செயல்படுத்தும்
    மூளையையுமல்லவென-//

    இது "நச்" வாழ்த்துகள் மலிக்கா அக்கா.//

    மிக்க நன்றி கனி..




    பெயரில்லா கூறியது...
    அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்கா

    ஒவ்வொரு வரியிலும் உண்மை பளிச்!!! பளிச்!!!

    தொடரட்டும் நெத்தியடி வரிகள்.//

    வ அலைக்குமுஸ்ஸலாம் .
    வருகைக்கும் கருதுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  32. சே.குமார் கூறியது...
    மிகச்சரியாக சொன்னீர்கள்.//

    மிக்க நன்றி குமார்..

    பதிலளிநீக்கு
  33. மலிக்கா கவிதை நல்லா இருக்கு அருமையான வரிகள் சரியா சொல்லி இருக்கீங்க , குறை கூறுபவர்கள் கூறி கொண்டு தான் இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  34. //குறைக்கூறி கூக்குரல்
    எழுப்பத் தேவையில்லை -மார்க்க
    கோட்பாடுகளை குறைச்சொல்வதில்
    சிறிதளவும் நியாயமில்லை//


    கேள்விகளுக்கு உட்படாத விசயம் என்று
    உலகிலே எதுவும் இல்லை சகோதரி

    கருத்து மோதல்களில் நாகரீகம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது
    ஏற்கத்தக்கது..

    ஒருவர் நம்பும் கருத்து தவறு என மற்றவர் நினைத்தால் அதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் உரிமை
    அவருக்கு உள்ளது..

    பதிலளிநீக்கு
  35. தமிழ் வெங்கட் கூறியது...
    //குறைக்கூறி கூக்குரல்
    எழுப்பத் தேவையில்லை -மார்க்க
    கோட்பாடுகளை குறைச்சொல்வதில்
    சிறிதளவும் நியாயமில்லை//


    கேள்விகளுக்கு உட்படாத விசயம் என்று
    உலகிலே எதுவும் இல்லை சகோதரி

    கருத்து மோதல்களில் நாகரீகம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது
    ஏற்கத்தக்கது..

    ஒருவர் நம்பும் கருத்து தவறு என மற்றவர் நினைத்தால் அதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் உரிமை
    அவருக்கு உள்ளது.

    ஆதரத்தோடு நிருப்பித்தால் அதையும் இல்லையென மறுப்போரிடமும் அந்த ஆதாரத்தையே இல்லையென்போரிடம் எப்படிச்சொல்வது சகோதரா!

    உடலைமறைக்க நினைப்பது குற்றமா?
    பிறரை தன்உடலாலும் உள்ளத்தாலும் பாவத்தின்பக்கம் இழுக்காமல் இருப்பது பாவமா? சகோதரா!

    அதிலும் கோட்பாடுகளை யாரும் யார்மீதும் திணிக்கமுடியாது அது அவரவராக ஏற்றுக்கொண்டால்தான் உண்மையானவைகளை அறிந்துகொண்டால் தானாகவே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும்.
    தன்னைதான் பாதுகாத்துக்கொள்வதில்
    தவறில்லையே!

    மீன்குஞ்சுக்கு யாரும் நீந்தக்கற்றுக்கொடுப்பதுமில்லை.
    அது நீருக்குள் மூழ்கும்போது மூச்சடைத்து இறந்துவிடுவதுமில்லை அதுபோன்றுதான்.சகோதரா இதுவும்.

    யாரும் யாரையும் கட்டாயப்படுதுவதில்லை. அடிமையாகவும் வைத்திருக்கவில்லை
    என்பதை வலியுருத்ததான் இக்கவிதையே!

    தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்குமிக்க நன்றி சகோதரா!

    பதிலளிநீக்கு
  36. /சாருஸ்ரீராஜ் கூறியது...
    மலிக்கா கவிதை நல்லா இருக்கு அருமையான வரிகள் சரியா சொல்லி இருக்கீங்க , குறை கூறுபவர்கள் கூறி கொண்டு தான் இருப்பார்கள்.//

    சாரூக்கா தாங்களைப்போல் அக்காதங்கையாக அனைவரும் சகோதரதுவத்தோடு இருந்தால் இக்குறைகளேயிருக்க வாய்ப்பில்லையக்கா. ஆனால் அதைசெய்ய சிலருக்கு மனமில்லை எல்லாவகையினரிடத்திடமும்.

    மிக்க நன்றி சாரூக்கா.

    பதிலளிநீக்கு
  37. பர்தாஅணிவதில் தவறேதுமில்லை
    இதனால் பாதகங்கள் எவருக்குமில்லை
    பசுந்தோல் போர்த்திய புலிக்கும்
    பச்சோந்திப் பார்வைக்கும் விருந்தாக
    "இப்பாவைகளுக்கு விருப்பமில்லை.
    நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறீர்கள்
    இதை படித்தாலாவது புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி."

    ஆழமான அதே நேரத்தில் அழுத்தமான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  38. மிக சரியாக சொன்னீர்கள் அம்மா..!!!

    "எங்கும் எதிலும் பெண்களை கவர்ச்சியாகவும்...ஒரு வியாபார யுக்தியுடன் மறைவான கருத்தை மையப்படுதிபாற்கும் இந்த கேடுகெட்ட சூழ்நிலையைதான் இப்போதைய பெண்கள் பெருமையாக நினைக்கிறார்களோ ??? ... இதை புரிந்து ஏற்றுக்கொள்கிறார்களா??? ,,இல்லை புரிந்தும் புரியாதது போல் நடிகிரார்கள என்பது கேள்விக்குறி...?????!!!

    ஆனால் இதுபோன்று அல்லாமல் பெண்களுக்கு கண்ணியத்தையும் ,உரிமையையும் , சுதந்திரத்தையும் கொடுக்கும் புனிதமான மார்க்கம் எது என்பதை உணர்ந்து .. நீங்கள் அனைவரும் ( பெண் சமுதாயம்) பெருமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...!!

    அல்லாமல் ..தேவையற்ற விவாதங்களுக்கு அவசியமில்லை....!!!!"

    இக்கவிதையில் நீங்கள் சொல்ல நினைப்பது கண்டிப்பாக புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்....
    புரியாதவர்களுக்கு மீண்டும் முயற்சி செய்வோம்...

    ((( என்னுடைய கருத்தை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை - புண் பட்ட மனமாய் எழதுகிறேன் )))

    என்னுடைய கருத்தை இங்கு பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பளித்த அம்மாக்கு மிக்க நன்றி...!!


    இப்படிக்கு
    உங்களை போல் ஒருவன்..!!!

    பதிலளிநீக்கு
  39. மிக சரியாக சொன்னீர்கள் அம்மா..!!!

    "எங்கும் எதிலும் பெண்களை கவர்ச்சியாகவும்...ஒரு வியாபார யுக்தியுடன் மறைவான கருத்தை மையப்படுதிபாற்கும் இந்த கேடுகெட்ட சூழ்நிலையைதான் இப்போதைய பெண்கள் பெருமையாக நினைக்கிறார்களோ ??? ... இதை புரிந்து ஏற்றுக்கொள்கிறார்களா??? ,,இல்லை புரிந்தும் புரியாதது போல் நடிகிரார்கள என்பது கேள்விக்குறி...?????!!!

    ஆனால் இதுபோன்று அல்லாமல் பெண்களுக்கு கண்ணியத்தையும் ,உரிமையையும் , சுதந்திரத்தையும் கொடுக்கும் புனிதமான மார்க்கம் எது என்பதை உணர்ந்து .. நீங்கள் அனைவரும் ( பெண் சமுதாயம்) பெருமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...!!

    அல்லாமல் ..தேவையற்ற விவாதங்களுக்கு அவசியமில்லை....!!!!"

    இக்கவிதையில் நீங்கள் சொல்ல நினைப்பது கண்டிப்பாக புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்....
    புரியாதவர்களுக்கு மீண்டும் முயற்சி செய்வோம்...

    ((( என்னுடைய கருத்தை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை - புண் பட்ட மனமாய் எழதுகிறேன் )))

    என்னுடைய கருத்தை இங்கு பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பளித்த அம்மாக்கு மிக்க நன்றி...!!


    இப்படிக்கு
    உங்களை போல் ஒருவன்..!!!

    பதிலளிநீக்கு
  40. abul bazar/அபுல் பசர் கூறியது...
    பர்தாஅணிவதில் தவறேதுமில்லை
    இதனால் பாதகங்கள் எவருக்குமில்லை
    பசுந்தோல் போர்த்திய புலிக்கும்
    பச்சோந்திப் பார்வைக்கும் விருந்தாக
    "இப்பாவைகளுக்கு விருப்பமில்லை.
    நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறீர்கள்
    இதை படித்தாலாவது புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி."

    ஆழமான அதே நேரத்தில் அழுத்தமான கவிதை.
    வாழ்த்துக்கள்.//


    மிக்க நன்றி சகோதரர் அவர்களே தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  41. newborn கூறியது...
    மிக சரியாக சொன்னீர்கள் அம்மா..!!!

    "எங்கும் எதிலும் பெண்களை கவர்ச்சியாகவும்...ஒரு வியாபார யுக்தியுடன் மறைவான கருத்தை மையப்படுதிபாற்கும் இந்த கேடுகெட்ட சூழ்நிலையைதான் இப்போதைய பெண்கள் பெருமையாக நினைக்கிறார்களோ ??? ... இதை புரிந்து ஏற்றுக்கொள்கிறார்களா??? ,,இல்லை புரிந்தும் புரியாதது போல் நடிகிரார்கள என்பது கேள்விக்குறி...?????!!!

    ஆனால் இதுபோன்று அல்லாமல் பெண்களுக்கு கண்ணியத்தையும் ,உரிமையையும் , சுதந்திரத்தையும் கொடுக்கும் புனிதமான மார்க்கம் எது என்பதை உணர்ந்து .. நீங்கள் அனைவரும் ( பெண் சமுதாயம்) பெருமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...!!

    அல்லாமல் ..தேவையற்ற விவாதங்களுக்கு அவசியமில்லை....!!!!"

    இக்கவிதையில் நீங்கள் சொல்ல நினைப்பது கண்டிப்பாக புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்....
    புரியாதவர்களுக்கு மீண்டும் முயற்சி செய்வோம்...

    ((( என்னுடைய கருத்தை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை - புண் பட்ட மனமாய் எழதுகிறேன் )))

    என்னுடைய கருத்தை இங்கு பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பளித்த அம்மாக்கு மிக்க நன்றி...!!


    இப்படிக்கு
    உங்களை போல் ஒருவன்..!!!//

    தாங்களின் வருகைக்கும் உணர்வுமிக்க [உண்மையான]கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் தீமையிலிருந்து பாதுகாத்து நன்மையின்பக்கமே நம்முகங்களையும். மனங்களையும். திருப்புவானாக!

    பதிலளிநீக்கு
  42. அஸ்ஸலாமு அலைக்கும்

    *மறையோன் சொல்லாத ஒன்றை
    மனிதனுக்காக செய்யவேண்டுமென்ற
    அவசியமுமில்லை
    மாண்புடையோன் சொன்னசொல்லை
    மறுத்திட மனதுக்கும் அனுமதியில்லை

    வரிகளில் ஏக இறைவனின் அச்சமும் எம்பெருமானார் (ஸல் )அவர்கள்
    நமக்கு போதித்த இறைவழியையும் சொல்லிய விதம் மிக அருமை
    மல்லிகாவுக்கு என் வாழ்த்துக்கள் ................

    பதிலளிநீக்கு
  43. எனது மனகுமுறல்களை கொட்டுவது போல் இருக்கிறது இக்கவிதை.

    "முழுவதுமாய் மூடியிருப்பது
    உடலையே தவிரை
    உள்ளத்தையல்ல!
    அதை செயல்படுத்தும்
    மூளையையுமல்லவென"

    உடலை மறைக்கும் ஆடையின் அவசியத்தை சொல்லும் நேரத்தில் அது எங்களை செயல்பட விடமால் தடுக்க வில்லை என்று இந்த வரிகல் சொல்லுகிறது.

    இதற்கு நிங்களும் தான் உதாரணம் சகோதரி.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  44. கவிதை மிக அருமை மலிக்கா..

    நீங்கள் ஏற்கனவே பலரால் காயபப்ட்டிருப்பதாய் தெரிகிறது..


    நான் வேறு காயப்படுத்திவிட்டேன் போல என் இடுகை மூலம்..

    என் நோக்கம் அதுவல்ல..

    நான் பெற்ற சுதந்திரம் அவர்களுக்கு இல்லையே என்ற கவலை..

    அல்லது தலைக்கு மட்டுமாவது முக்காடிடலாம் என்ற எண்ணம் உண்டு... சில கிளைமேட் காரணங்களாலும் சொல்கிறேன்..அவர்கள் படுவது எனக்கு அவஸ்தையாக தெரிந்தது..


    மற்றபடி இறை கட்டளையை நீங்களே மனமுவந்து ஏற்கும்போது எதுவுமே ஒரு பொருட்டல்ல என்று ஆணித்தரமாக நானும் நம்புகிறேன்...

    ஒருவரின் நம்பிக்கையை சிதைப்பதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்.. அவரவர் விருப்பம்

    [பலங்காலத்து நாகரீகம்போல்
    பின் நவீனத்திலும் ஆடைகளற்றும்
    அரைகுறையாய் திரியும் மக்களிடையே
    அகிலத்தை அறிவோடு வலம்வந்து
    அசிங்கத்தை அவமதிக்கும்
    இதேக் கூண்டுகிளிகளாய்]

    இது கொஞ்சம் வருத்தம் தந்தது சகோதரி..

    அரைகுறையாய் திருவது என்றாலும் ஒரு பெண்ணை அவள் சார்ந்த சூழலில் அவளால் தற்காத்துக்கொள்ள முடியுமானால் அவள் நிர்வாணமாய் கூட இருக்கலாம் என்பது என் கருத்து..

    இங்கே நான் வாழும் நாட்டில் கடற்கறையிலோ ஏன் எம் வீட்டு நீச்சல் குளத்திலோ 90% அரைகுறையாய் வந்தாலும் யாரும் திரும்பி கூட பார்ப்பதேயில்லை என்பதே நிஜம்..

    பதிலளிநீக்கு
  45. //புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை .. புரியாதவர்களுக்கு இது உதவும்.. புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்களுக்கு எதுவும் உபயோகம் இல்லை...//

    எல்.கே அழகாக சொல்லி இருக்கிறார்


    உஙக்ள் கோபத்தை , கவிதை வடிவில் வடித்து அனைவருக்கும் புரிய வைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  46. அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி. வார்தைகளில் உள்ள உண்மை,பெண்மை, நன்மை,இஸ்லாத்தைபற்றிய பெருமை.இப்படி வாய்மை கலந்த வார்தைகள்.அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிக்கட்டும்.அல்லாஹ் உங்களுக்கும்,குடும்பத்துக்கும் பரகத்தையும்,அவனுடைய ரஹ்மத்தையும் அருளட்டும்.அத்துணை வார்த்தையும் நிதர்சந்தின் நாக்கும்,வாக்கும்.வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  47. 100% தரம்
    100% நயம்
    100% நிஜம்
    100% வீரம்
    100% தீரம்
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,,,,,,,ஆனால் என்ன சொல்லவேண்டும் என் நெஜமாகவே தெரியவில்லை!. சகோதரி! உங்கள் கவிதையைப் பற்றி, எனக்கு எப்படி சுருக்கி எழுதுவது என்ற குழப்பம் மேலோங்கி நிற்கிறது!!... வழக்கமாக
    சடசடவென புறப்படும் எனது வார்த்தைகள் உங்கள் வரிகளை ஆதங்கத்தை படித்ததன் காரணமாய் பயந்து நடுங்கி இதற்கு பின்னூட்டம் இட மறுத்து இடறுகிறது. ஆம்! நான் இங்கே எந்த வார்த்தையை பயன்படுத்தினாலும் அது சூரியன் முன் அகல் விளக்குத்தான்.. எனக்கு வார்த்தைகள் கிடைக்கமல் முயன்று முயன்று தோற்றுப்போனதால், எப்போதும் சொல்கிற வார்த்தையையே சொல்லிவிடுகிறேன். மிக்க அருமை சகோதரி!!!...

    பதிலளிநீக்கு
  48. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

    அன்பு சகோதரி அவர்களுக்கு,

    சொல்லுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

    இந்த ஹிஜாப் குறித்த விளக்கங்களை சொல்லிக்கொண்டே தான் இருக்கவேண்டி இருக்கின்றது. இருப்பினும் ஆண்கள் நாங்கள் வாதிப்பதை விட முஸ்லிம் சகோதரிகள் இதனை கையிலெடுத்து கொள்ளலாமே என்று சமயங்களில் ஆதங்கப்பட்டதுண்டு.

    ஆனால் சமீப காலமாக நான் உணர்ந்து கொண்ட விஷயம், நான் தான் இதுபோன்ற பதிவுகளை கவனிக்காமல் இருந்திருக்கின்றேன், சகோதரிகள் இது குறித்து சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

    தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று மனஅமைதியுடன் வாழ ஏக இறைவனை பிரார்த்திக்கின்றேன்....

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    பதிலளிநீக்கு
  49. கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் உயிர் இருக்கிறது
    அடிமன ஆதங்கம் உண்மையாக வெளிவரும்போது தனிக்கை செய்யப்படாத ஆளுமை வெளிப்படும் என்பார்கள் இந்த கவிதையில் உங்களுடைய ஆளுமை வெளிப்படுகிறது

    நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  50. சாட்டையடி கவிதை சகோ... உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  51. மறையோன் சொல்லாத ஒன்றை
    மனிதனுக்காக செய்யவேண்டுமென்ற
    அவசியமுமில்லை
    மாண்புடையோன் சொன்னசொல்லை
    மறுத்திட மனதுக்கும் அனுமதியில்லை

    இந்தவரிகள் தான் இந்த கவிதைக்கு ஹைலைட்! மிகச் சிறப்பான கவிதை! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

    புரிய வேண்டியவர்களுக்கு புரிந்த விசயம்தான். சீண்டுவதற்காக அல்லவா கூப்பாடு போடுகிறார்கள்!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  52. இன்னுமின்னும் எழுத தூண்டும் வகையில் கருத்துகள் தந்த அனைத்து சகோதரர்களுக்கும் எனது நன்றிகள்..

    எனது எழுத்துகளுக்கு துணை இறைவன் தூண்டுகோல் மச்சான்(கணவர்) ஊக்கம் உங்களைப்போன்ற அனைத்து சகோதர சகோதரிகள் மற்றும் தோழமைகள். இதற்காக எந்நாளும் எந்நேரமும் இறைவனை நேசிக்கிறேன் இன்பம் பெறுகிறேன் இன்னல்கலைக்கிறேன் கலைக்கிறேன்.

    எல்லாம் அறிந்தவன் இறைவனே அவனுக்கே புகழனைத்தும்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது