நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடி ஆத்தி!



அத்த வித்தேன் இத்த வித்தேன்
தேரலையேக் காசு
அத்தனையும் பாலப்போச்சே
மிஞ்சலையே நோட்டு

நஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும்
நாதியத்த பொலப்பு
மாரடிச்சி மாரடிச்சி
மண்ட வீங்கிப்போச்சே!

அடுக்கடுக்கா பன்னவச்சி
அள்ளுறாங்க காசு
அதப்பாத்து பாத்து கெடந்துயிங்கே
அடிச்சிக்கிடுதே மனசு!

பன்னுமேல எள்ளபோட்டு
மேலும் கீழும் வச்சி
அடுக்கடுக்கா அதுகுள்ளேயே
அரச்சக்கறி பச்சகீரயும் வச்சி

அதுமேல வெண்ணயின்னு
ஏதோ ஒன்னத் தடவி
அத துண்ணும்போது விக்கிடாம
டின்னில் காக்கித் தண்ணி

விக்கிறாக வெதவெதமா
வெளிநாட்டு ஆளு
அத வாங்கித் துண்ண
வரிசையில நிக்கிறாக
நம்மஊரு ஆளு

அதபாத்த எனக்கு ஒரு
யோசனையும் தோன
நானும் இப்போ மாறிக்கின்னேன்
நாட்டு நடப்புக்கூட

ஆயா சுட்ட பன்னெடுத்து
அடுக்கடுக்கா வச்சி
அதுகுள்ளே எனக்குத்தெரிஞ்ச
அத்த இத்த வச்சி
அப்படியே வித்துப்புடுவேன்
ஆயா பெத்த பொண்ணு

துண்ணுகிட்டே இருக்கையிலே
விக்கலெடுத்துச்சின்னா
நம்மகிட்டயிருக்குதுல்ல
நாளுமாசம் முந்தி புடிச்சி
அடச்ச வெச்ச
ஊத்து தண்ணி டின்னு...

டிஸ்கி//இந்த போட்டோ மெயிலில் வந்ததுங்கோ
அதபாத்த ஏன் மண்டைக்குள்ள இந்த பாட்டு ஓடிச்சிங்கோ
அதேன் அத இங்கே வந்து  கிறுக்கிப்புட்டோமுங்கோ எப்புடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

22 கருத்துகள்:

  1. உங்களது கவிதைகள் அனைத்தும் படித்தேன். அனைத்தும் அருமை.

    இந்தக் கவிதை மிக அருமை.

    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. கவிதை சூப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கச்லக்கல்

    பதிலளிநீக்கு
  3. //அதுமேல வெண்ணயின்னு
    ஏதோ ஒன்னத் தடவி
    அத துண்ணும்போது விக்கிடாம
    டின்னில்
    காக்கித் தண்ணியும் வச்சி//

    நல்லாயிருக்கு:)!

    பதிலளிநீக்கு
  4. படத்துக்கேத்த கவிதை.பேர்கரும் கோலாவும் கிராமத்துப் பாட்டியிடம் !

    பதிலளிநீக்கு
  5. ஏற்கெனவே நான் கண்டு வியந்த போட்டோ...
    தற்போது அந்த போட்டோவிற்கு ஏற்ற விதத்தில் தங்கள் கவிதை...
    இல்ல.. இல்ல... ஓர் நாட்டுப்புறப்பாட்டு...

    அருமை...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  6. இது கவிதையா..?? பாட்டா...? ரெண்டுக்கும் ஒத்து வருதே..!!!

    பதிலளிநீக்கு
  7. பன்னப் பத்தி கவிஎழுதி கொன்னுட்டீங்க போங்க...

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்து வளம் மிக்க கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. பன்னை பாடிய மலிக்கா அக்காவின் நாட்டுப்பண் வரிகளை அதனையும் அழகு...வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  10. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌...

    பதிலளிநீக்கு
  11. ஆயா சுட்ட பன்னு 2+ ஊத்து தண்ணி டின்னு 1 பார்சல்.

    பதிலளிநீக்கு
  12. ஜெய்லானி அண்ணாத்தே ரெண்டுநாளா வந்து வந்து போகிறேன் உங்க பிளாக்கிற்க்கு ஏன்னு தெரியலை திறக்கவேமாட்டேங்குது அப்படியே திறந்தாலும் 10. 15. டேப் ஓப்பனாகிவிடுகிறது. விருத எடுக்கமுடியலையே..

    அதுக்குதான் தங்க மகள் விருதுன்னு கொடுத்திருக்கனும்..

    பதிலளிநீக்கு
  13. கவிதை அருமை...படமும் கலக்கல்...

    பதிலளிநீக்கு
  14. காலத்துக்கு ஏற்ற கவிதை வரிகள் பாராடுக்கள். கிராமத்து நடையில் இருக்கிறது இன்னும் சுவை.

    பதிலளிநீக்கு
  15. ம்ம்ம்ம் மல்லிக்கா
    நிழல்படம் சூப்பர் அதுக்குமேல உங்கள் வரிகள்

    பதிலளிநீக்கு
  16. //அன்புடன் மலிக்கா சொன்னது…

    ஜெய்லானி அண்ணாத்தே ரெண்டுநாளா வந்து வந்து போகிறேன் உங்க பிளாக்கிற்க்கு ஏன்னு தெரியலை திறக்கவேமாட்டேங்குது அப்படியே திறந்தாலும் 10. 15. டேப் ஓப்பனாகிவிடுகிறது. விருத எடுக்கமுடியலையே.//


    ஏன்..? எனக்கு சரியா திறக்குதே..!!பதிவிடுவதுக்கு முதல் நாள் மாலை 5 லிருந்து இரவு 3 மணி வரை நெட் பயங்கர ஸ்லோவா இருந்துச்சி. எந்த பேஜும் திறக்கல. மறு நாள் சரியாச்சி.

    பதிலளிநீக்கு
  17. PHOTO இது என்ன மாட்டுக்கு புல்லுக்கட்டு கொண்டுபோறமாதிரி இருக்குது ( பசுமாட்டுக இல்லே எருமை மாட்டுக என்பது தான் தெரியவில்லை )

    பதிலளிநீக்கு
  18. நல்ல ஒரு ஆக்கம் இந்த அப்பு (ஜாகிர்) சொன்ன ஆப்பு விசயத்தில் நிறைய பேர் ஆப்பு அசைத்த குரங்க தான் இருக்கங்க

    பதிலளிநீக்கு
  19. அன்போடும் கிண்டலோடும் கலகலோடும் கருத்துக்கள் தந்த அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகலந்த நன்றி.

    ஆயா சுட்டபன்னையும். ஊத்தண்ணியையும் கேட்டவாளுக்கு பார்சலில் வந்துகொண்டிருக்கிறது என மெதுவாகச் சொல்லிக்கொள்கிறேன்.[சத்தமாச்சொன்னா அல்லாருக்கும் சுடமுடியாதுல்ல அதுக்குத்தேன்]

    மீண்டும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது