தந்தையின் தவிப்பு!
நன்றி கூகிள்
எனது
அன்பு மகனே
அன்னையைமட்டும்
அணைத்துகொள்கிறாய்
இந்த தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்!
ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத் தந்தைக்கும்
பங்குண்டல்லவா!
சிலஇடங்களிலும்
சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் -உன்
சிந்தையிலும் தவறாகவே
சித்தரிக்கபடுகிறது!
சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா?
அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்!
அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான் என்னால்
பொறுக்க முடிவதில்லை
விரோதியல்லடா உன் தந்தை
உன்னை
இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக் கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு
தன்
உடலை உருக்கி
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நான்
மகனே!
நீ உயிர்வாழ
உன் அன்னை
தன் உதிரத்தைப்
பாலாக்கித் தந்தாள்
நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா?
இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,,,,,,,,,,அறிவாயா?
டிஸ்கி// இது நான் முன்பே எழுதியகவிதை. மீண்டும் பதிவுசெய்கிறேன் ஏனெனில் தந்தையர் தினத்திலாவது சில தவப்புதல்வர்கள் தந்தையை அறிந்துகொள்ளட்டும் என்ற நப்பாசைதான்.
எல்லாதினமும் அன்னைதந்தை தினம்தான் ஆனால் அதையும் மறந்தவர்களுக்கு நினைவுபடுத்தவே இதுபோல் கொண்டாடுகிறார்களோ ? ஏனெனில் சிலர்தான் தாய்தந்தையரின் தியாகங்களை மறந்து பாரமாக நினைத்து, அச்சோ இல்லையில்லை பேஷனாக நினைத்து அதாவது வயதாகிவிட்டால் மூலையில் தள்ளப்படுவதுதானே வாடிக்கை ஆனால் இதுகொஞ்சம் டீசண்ட் முதியோர் இல்லங்களில் இதேபோன்ற மற்றவர்களுடன் தனிமைப்படுத்திவிடுவது.
இது முதியவர்களுக்குதான் பாதுகாப்பாம்.
இன்று அவர்கள் நாளை??????????
இப்படத்திற்கு கவிதை எழுதிய ராசராசசோழன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பட்டம் அறுந்து
போனாலும்
அது காதல் பட்டம்
பால் நில ஒளியில்
அது
சுமந்து செல்கிறது...
உன்னோடு நான் இருந்த
கடைசி சில
நிமிடங்களை ..
கண்ணே!
இங்கே பார்...
நிலவுக்கு ஆதரவாய்
செஞ்சுடர்...
தலை சாய்த்து
கொஞ்சி நிற்கும்
மர நிழல்கள்...
அதற்கு ஆதரவாய்
மலை முகடு...
என்
நினைவலைகள்
வானில்
மேக மூட்டமாய்...
நீ
மட்டும்
இங்கு இல்லை
உன்
சுவடுகள்
எங்கும் எதிலும்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!
/என்னை நான்
பதிலளிநீக்குமெழுகாக்கிக் கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு //
அருமை
/பாசமில்லை என்றாகுமா?
பதிலளிநீக்குஅன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்!//
உண்மைதாங்க
உங்களுக்கு எடிபஸ் சிண்ட்ரோம், எலக்ட்ரோ சிண்ட்ரோம் பற்றி தெரியும்தானே....
பதிலளிநீக்கு//ஷர்புதீன் கூறியது...
பதிலளிநீக்குஉங்களுக்கு எடிபஸ் சிண்ட்ரோம், எலக்ட்ரோ சிண்ட்ரோம் பற்றி தெரியும்தானே//
அதெல்லாம் சத்தியமா தெரியாதுங்கோண்ணா. அதுசரி அப்படின்னா என்னா. நீங்க கேட்டதுக்கும் என் கவிதைக்கும் சம்பந்தம் உண்டா என்னான்னு தெரியலையே.
//விரோதியல்லடா உன் தந்தை//
பதிலளிநீக்குபச்ச கறியின் வாசம் இங்கேயும் வீசுது...
//இன்று அவர்கள் நாளை??????????//
அதே தான்... நீங்க சொல்ல வந்தது தான்...
தந்தையர் தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகவிதை நல்லாருக்கு.
பதிலளிநீக்கு"உன்னை
பதிலளிநீக்குஇவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக் கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு"
உண்மையான் வார்த்தைகள்.
வாழ்த்துக்கள்.
அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதந்தையர் தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//நான்
பதிலளிநீக்குஉனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா?//
arumai...!!
http://www.grandprofile.com/Myspace_Comments/Holiday_Comments/Fathers_Day_Holiday_Comments/images/Happy-Fathers-Day-8.gif
பதிலளிநீக்குமச்சானுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவிஜய்
நல்லாயிருக்கு மல்லிக்கா
பதிலளிநீக்குஎல்லா தந்தையர்களுக்கும்
தந்தையர் தின வாழ்த்துக்கள்
தந்தை உள்ளம் கொண்ட அத்தனை தந்தையர்களுக்குமே வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதந்தையர் தின வாழ்த்துக்கள் தோழி...மீள் பதிவு கவிதையும் மிக நன்றாக இருக்கிறது....தொடருங்கள்....
பதிலளிநீக்குஎனக்கு ரொம்ப பிடித்த பதிவு...
பதிலளிநீக்குகாரணம்...
எனக்கு தாயாய்....நண்பனாய்... தோழனாய்...தனயனாய்..ஆசானாய்...வழிகாட்டியாய்... மாலுமியாய்... அனைத்துமாய் இருந்தவர் என் தந்தை... அவர் நினைவை போற்றுவதால்...
அடிக்கவேண்டிய நேரத்தில் அடித்து...
அணைக்கவேண்டிய நேரத்தில் அணைத்து...
புத்திசொல்லவேண்டிய நேரத்தில்...
உலகவியல்.... வாழ்வியல் பாடத்தை..... தன் அனுபவத்தின் மூலம் தான் பெற்றதை... எடுத்துரைக்கவேண்டிய நேரத்தில் எடுத்துரைத்து.. இன்று ஓர் மனிதமுள்ள மனிதனாய்.... நான் நடமாடிட காரணம் என் தந்தை...
அவரைப் போற்றி புகழ் பாடும் நாள் என்பதால்.... எனக்கு இந்த நாள் மிகவும் பிடித்த நாள்... அதனால் இப்பதிவு ரொம்ப பிடித்த பதிவு...
////உன்னை... இவ்வுலகத்திற்கு.... வெளிச்சமாய் காட்ட....
என்னை நான் மெழுகாக்கிக் கொண்டேன்.....
உருகுவதற்காக வருந்தாது மெழுகு...
தன் உடலை உருக்கி.... ஒளியை மிளிரவைக்கும் அதுபோல்தான் நான்////
//// நான்... உனக்காக என் உயிரையே.... உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா? என் உணர்வுகளைப் புரிவாயா?////
எல்லா மகன்களும் உணரவேண்டிய வரிகள்... அருமையான வரிகள்..
மெழுகின்.... உயிரின்......
உவமானங்களும்... உவமேயங்களும்... அற்புதம்...
கவிதையின் வரிகள் அனைத்தும் அருமை...
நல்ல கவிதை...
தாங்கள் மச்சானுக்கும்...
தந்தையர்க்கும்...
தந்தையாகப்போவர்களுக்கும்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!
நட்புடன்...
காஞ்சி முரளி....
//நான்
பதிலளிநீக்குஉனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா?// சூப்பர்.,
எல்லா அப்பாக்களும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
கவிதாயினி கவிதையில் கருணை தந்தையின் கவி அழகு...
தந்தையாய் கேட்கிறேன்..
பதிலளிநீக்குLK கூறியது...
பதிலளிநீக்கு/பாசமில்லை என்றாகுமா?
அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்!//
உண்மைதாங்க
20 ஜூன், 2010 8:28 am
LK கூறியது...
/என்னை நான்
மெழுகாக்கிக் கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு //
அருமை
மிக்க நன்றி கார்த்திக்..
நாடோடி கூறியது...
பதிலளிநீக்கு//விரோதியல்லடா உன் தந்தை//
பச்ச கறியின் வாசம் இங்கேயும் வீசுது...
//இன்று அவர்கள் நாளை??????????//
அதே தான்... நீங்க சொல்ல வந்தது தான்...//
முற்பகல்செய்யின் பிற்பகல் விழையும்
சரிதானே. நன்றி ஸ்டீபன்
அஹமது இர்ஷாத் கூறியது...
தந்தையர் தின வாழ்த்துக்கள்.//
நன்றி இர்ஷாத்
அமைதிச்சாரல் கூறியது...
பதிலளிநீக்குகவிதை நல்லாருக்கு
//
மிக்க நன்றி சாரல்..
abul bazar/அபுல் பசர் கூறியது...
பதிலளிநீக்கு"உன்னை
இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக் கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு"
உண்மையான் வார்த்தைகள்.
வாழ்த்துக்கள்.
//
வாங்க அபுல். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
asiya omar கூறியது...
அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ஆசியாக்கா..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குதந்தையர் தின வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி அண்ணாதே
Kousalya கூறியது...
//நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா?//
arumai...!!//
மிக்க நன்றி கெளசல்யா
//ப்ரியமுடன்...வசந்த் கூறியது...
http://www.grandprofile.com/Myspace_Comments/Holiday_Comments/Fathers_Day_Holiday_Comments/images/Happy-Fathers-Day-8.gif//
வாங்க சகோ மிக்க நன்றி
/விஜய் கூறியது...
மச்சானுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்
விஜய்/
மிக்க நன்றி சகோதரா..
செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்குநல்லாயிருக்கு மல்லிக்கா
எல்லா தந்தையர்களுக்கும்
தந்தையர் தின வாழ்த்துக்கள்.//
ரொம்ப சந்தோஷம் செந்தில் மிக்க நன்றி.
ஹேமா கூறியது...
தந்தை உள்ளம் கொண்ட அத்தனை தந்தையர்களுக்குமே வாழ்த்துகள்./
மிக்க நன்றி தோழி
//கமலேஷ் கூறியது...
தந்தையர் தின வாழ்த்துக்கள் தோழி...மீள் பதிவு கவிதையும் மிக நன்றாக இருக்கிறது....தொடருங்கள்..../
மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி தோழா..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஎனக்கு ரொம்ப பிடித்த பதிவு...
காரணம்...
//எனக்கு தாயாய்....நண்பனாய்... தோழனாய்...தனயனாய்..ஆசானாய்...வழிகாட்டியாய்... மாலுமியாய்... அனைத்துமாய் இருந்தவர் என் தந்தை... அவர் நினைவை போற்றுவதால்...
அடிக்கவேண்டிய நேரத்தில் அடித்து...
அணைக்கவேண்டிய நேரத்தில் அணைத்து...
புத்திசொல்லவேண்டிய நேரத்தில்...
உலகவியல்.... வாழ்வியல் பாடத்தை..... தன் அனுபவத்தின் மூலம் தான் பெற்றதை... எடுத்துரைக்கவேண்டிய நேரத்தில் எடுத்துரைத்து..//
இதற்கெல்லாம் நான் கொடுத்துவைக்கவில்லையே சகோதரா
எங்களுக்கு எல்லாமெ எங்கள் தாய்தான்.
தந்தையின் பாசத்தை அடிக்கடி உணர்த்துவது என் அன்பான மச்சான்தான். தாயைப்போன்ற அரவணை தந்தையைபோன்ற அனுசரணை. எல்லாமாய்..
//இன்று ஓர் மனிதமுள்ள மனிதனாய்.... நான் நடமாடிட காரணம் என் தந்தை...
அவரைப் போற்றி புகழ் பாடும் நாள் என்பதால்.... எனக்கு இந்த நாள் மிகவும் பிடித்த நாள்... அதனால் இப்பதிவு ரொம்ப பிடித்த பதிவு...//
தாங்கள் அன்பான தந்தைக்கும். தந்தையான தாங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
////உன்னை... இவ்வுலகத்திற்கு.... வெளிச்சமாய் காட்ட....
என்னை நான் மெழுகாக்கிக் கொண்டேன்.....
உருகுவதற்காக வருந்தாது மெழுகு...
தன் உடலை உருக்கி.... ஒளியை மிளிரவைக்கும் அதுபோல்தான் நான்////
//// நான்... உனக்காக என் உயிரையே.... உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா? என் உணர்வுகளைப் புரிவாயா?////
எல்லா மகன்களும் உணரவேண்டிய வரிகள்... அருமையான வரிகள்..
மெழுகின்.... உயிரின்......
உவமானங்களும்... உவமேயங்களும்... அற்புதம்...
கவிதையின் வரிகள் அனைத்தும் அருமை...
நல்ல கவிதை...
தாங்கள் மச்சானுக்கும்...
தந்தையர்க்கும்...
தந்தையாகப்போவர்களுக்கும்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!
நட்புடன்...
காஞ்சி முரளி..../
ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகோதரரே.
தாங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஎனக்கு ரொம்ப பிடித்த பதிவு...
காரணம்...
//எனக்கு தாயாய்....நண்பனாய்... தோழனாய்...தனயனாய்..ஆசானாய்...வழிகாட்டியாய்... மாலுமியாய்... அனைத்துமாய் இருந்தவர் என் தந்தை... அவர் நினைவை போற்றுவதால்...
அடிக்கவேண்டிய நேரத்தில் அடித்து...
அணைக்கவேண்டிய நேரத்தில் அணைத்து...
புத்திசொல்லவேண்டிய நேரத்தில்...
உலகவியல்.... வாழ்வியல் பாடத்தை..... தன் அனுபவத்தின் மூலம் தான் பெற்றதை... எடுத்துரைக்கவேண்டிய நேரத்தில் எடுத்துரைத்து..//
இதற்கெல்லாம் நான் கொடுத்துவைக்கவில்லையே சகோதரா
எங்களுக்கு எல்லாமெ எங்கள் தாய்தான்.
தந்தையின் பாசத்தை அடிக்கடி உணர்த்துவது என் அன்பான மச்சான்தான். தாயைப்போன்ற அரவணை தந்தையைபோன்ற அனுசரணை. எல்லாமாய்..
//இன்று ஓர் மனிதமுள்ள மனிதனாய்.... நான் நடமாடிட காரணம் என் தந்தை...
அவரைப் போற்றி புகழ் பாடும் நாள் என்பதால்.... எனக்கு இந்த நாள் மிகவும் பிடித்த நாள்... அதனால் இப்பதிவு ரொம்ப பிடித்த பதிவு...//
தாங்கள் அன்பான தந்தைக்கும். தந்தையான தாங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
////உன்னை... இவ்வுலகத்திற்கு.... வெளிச்சமாய் காட்ட....
என்னை நான் மெழுகாக்கிக் கொண்டேன்.....
உருகுவதற்காக வருந்தாது மெழுகு...
தன் உடலை உருக்கி.... ஒளியை மிளிரவைக்கும் அதுபோல்தான் நான்////
//// நான்... உனக்காக என் உயிரையே.... உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா? என் உணர்வுகளைப் புரிவாயா?////
எல்லா மகன்களும் உணரவேண்டிய வரிகள்... அருமையான வரிகள்..
மெழுகின்.... உயிரின்......
உவமானங்களும்... உவமேயங்களும்... அற்புதம்...
கவிதையின் வரிகள் அனைத்தும் அருமை...
நல்ல கவிதை...
தாங்கள் மச்சானுக்கும்...
தந்தையர்க்கும்...
தந்தையாகப்போவர்களுக்கும்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!
நட்புடன்...
காஞ்சி முரளி..../
ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகோதரரே.
தாங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..
Riyas கூறியது...
பதிலளிநீக்கு//நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா?// சூப்பர்.,
மிக்க நன்றி ரியாஸ்
//seemangani கூறியது...
எல்லா அப்பாக்களும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
கவிதாயினி கவிதையில் கருணை தந்தையின் கவி அழகு...//
வாங்க கனி தாங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..
தாராபுரத்தான் கூறியது...
பதிலளிநீக்குதந்தையாய் கேட்கிறேன்..//
காதில் விழுந்திருக்கும் தாங்கள் கேட்டது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
தந்தையர் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎப்ப எழுதினால் என்ன எப்போதும் உங்கள் கவிதை உயிரோட்டமாய் இருக்கும்.
சொல்லி உள்ள விஷியஙகல் அனைத்தும் அருமை
//அதை புரியாத நீ
பதிலளிநீக்குஎன்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான் என்னால்
பொறுக்க முடிவதில்லை
விரோதியல்லடா உன் தந்தை//
தந்தை இல்லாத நேரத்தில் ஒருவேளை தாய் அவரது photo வை காட்டி பூச்சாண்டி என்று பயம் காட்டி இருப்பார்களோ என்னவோ ?
வாழ்த்துக்களுக்கு நன்றி , (நானும் தந்தை தானுங்கோ ) நானும் என் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்
பதிலளிநீக்கு" உருகுவதற்காக
பதிலளிநீக்குவருந்தாது மெழுகு "
ஆமாம் தோழர் ...
நாம் ஒளிர்வதில் இருக்கின்றது
தியாகியின் காயங்கள் ஆறும் ரகசியம்!
உங்கள் கவிதையில் எனது தந்தையின் தவிப்பை கேட்டேன் !
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html
மீண்டுமா???????????????????
பதிலளிநீக்குபரவாயில்லை...
அனைவருக்கும்
என்
“தந்தையர் தின வாழ்த்துக்கள்”