நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கோடையும் வாடையும்..

கோடை குழந்தைகளுக்கு
கொண்டாட்டம்-அதன்
வெயிலோ தருமே
திண்டாட்டம்

கோடை விரும்புவது
குறைந்த உடை
வாடை தேடுவது
நிறைந்த போர்வை

வாடை உடம்புக்கு
கொண்டாட்டம்-அதன்
குளிரோ நரம்புக்கு
திண்டாட்டம்

கோடைவெயில் தேடும்
குளுகுளுப்பு
வாடைகாற்று நாடும்
கதகதப்பு

கோடையின் மனைவி வாடை
வாடையின் கணவன் கோடை

”ஆகமொத்தத்தில்”

இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
இருவரும் தனித்தனியே வந்தால்
நமக்கு எதிரணி.
 
டிஸ்கி// இக்கவிதை தமிழ்தேரில் கோடையும் வாடையும் தலைப்பில் வெளியான என்கவிதைதான்.
ரொம்ப நாளாச்சி வெளியாகி.
 
 
 
 
 
 
 
 
 
இப்படத்திற்க்கு கவிதைஎழுதவேண்டும் என சொல்லி இப்பதிவை பப்ளிஸ்பண்ணிய மிக கொஞ்ச நேரத்தில்  இப்படியொரு அழகிய கவிதையை நமக்குதந்த  சகோதரர் காஞ்சி முரளியவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..
 
காதலியே...
ஓர் நிலாக்காலத்தில்....

இந்த
இயற்கையின் நிலவொளியில்
இணை மரங்களுக்கிடையில்...
இணையாய் நீயும் நானும்.... அது
நினைவுகளின் தேக்கமாய்... இன்றும்
நிழலாய் என் நெஞ்சில்...

இந்த
நிலாக்கரையில்...
இடம்மாறிய - நம்
இதயங்களின் சங்கமம்...
இன்னும் - என்
இதயத்தில் நினைவலைகளாய்...
இன்றும் என் நெஞ்சில்...

அன்று..
என் இதயத்திற்கு பதிலாக
உன் நினைவுகளை
தந்துவிட்டு பறந்துவிட்டாய்...
என்னை வதைப்பதாய் நினைத்து -
உன்னையே
நீ வதைத்துக் கொள்கிறாய்...

என்
நினைவுகளின்
நிஷ்டையிலிருந்து கலைத்துவிட்டு...
நீ
நிம்மதியை தேடுவது...
நிரம்பாத குடத்தின் நீர் போலத்தான்...

இன்றும்
இவ்விடம் எனக்கோர்
தாஜ்மகால்தான்...

ஆனால்... உனக்கு...!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

29 கருத்துகள்:

  1. //கோடையின் மனைவி வாடை
    வாடையின் கணவன் கோடை//

    100%%

    பதிலளிநீக்கு
  2. LK கூறியது...
    //கோடையின் மனைவி வாடை
    வாடையின் கணவன் கோடை//

    100%%
    //

    நிஜம்தானா கார்த்திக் ஒரு 99 பிரசண்ட் கூட இல்லையா 100/100 தானா? [சும்மா சும்மா]

    பதிலளிநீக்கு
  3. கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தாளத்தோடு பாடலாம் போல் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. நல்லா இருக்கு மலிக்கா .....

    கோடையின் மனைவி வாடை
    வாடையின் கணவன் கோடை
    சூப்பர்...

    பதிலளிநீக்கு
  6. முரளி சாருக்கு வாழ்த்துக்கள்!

    உங்கள் கவிதை நல்லா இருக்குங்க..... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. //இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
    இருவரும் தனித்தனியே வந்தால்
    நமக்கு எதிரணி.//

    சேர்ந்து வந்தால் உலக முடிவு தாங்க .. அதனால் தனிதனியாவே வரட்டும்..

    பதிலளிநீக்கு
  8. கோடை வாடை இரண்டையுமே ஒரு சேர வடித்த கவிதை அழகு..

    பதிலளிநீக்கு
  9. முதலில்...
    எனது
    'கிறுக்கல்களையும்'
    கவிதையென.....
    அங்கீகரித்து...
    அரங்கேற்றிய...
    'அன்புடன் மலிக்கா'வுக்கு...
    நன்றிகள்...! நன்றிகள்...! நன்றிகள்...!

    ('அழகிய கவிதை'யென தாங்கள் சொல்லியுள்ளதால்...
    யாராவது கல்லெறியாமல்...
    அதாவது சொல்லாலெரியாமல் இருந்தால் சரி...!)

    தங்கள் "கோடையும்... வாடையும்..." கவிதை...
    தலைப்பு முதல் முடிவு வரை...
    'எதுகை மோனை'யின் ராஜ்யம்தான்... ஆதிக்கம்தான்...

    கொண்டாட்டமும்... திண்டாட்டமும் -
    குறைந்த... நிறைந்த -
    உடம்புக்கு.. நரம்புக்கு -
    குளுகுளுப்பு... கதகதப்பு -
    கூட்டணி... எதிரணி........ யப்பப்பா...!

    இறுதியாய்...
    "கோடையின் மனைவி வாடை..
    வாடையின் கணவன் கோடை...." என்ற வரிகள்... superb...!

    நட்புடன்...
    நன்றிகளுடன்...
    காஞ்சி முரளி.....

    பதிலளிநீக்கு
  10. கோடை, வாடை விள‌க்க‌ம் அருமை...

    முரளி சாருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. உங்க வலைப்பூ மாதிரியே கவிதையும்
    அருமை

    பதிலளிநீக்கு
  12. உங்க வலைப்பூ மாதிரியே கவிதையும்
    அருமை

    பதிலளிநீக்கு
  13. //இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
    இருவரும் தனித்தனியே வந்தால்
    நமக்கு எதிரணி//

    எப்பவாவது கூட்டணி அமைச்சுக்கிட்டு வருவாங்க பாருங்க.. ஹைய்யோ... அதை மசாலா டீயோட கொண்டாடலாம் :-))

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள்...சூப்பப்ர் கவிதை....

    பதிலளிநீக்கு
  15. //கோடையின் மனைவி வாடை
    வாடையின் கணவன் கோடை//

    ஒ...இதுதான் காரணமா...நல்ல இருக்கு மல்லி கா....

    பதிலளிநீக்கு
  16. mika azakaay irukku kavithaikaL.

    kanjsi murali sarin kavithai super
    vazththukkal...

    பதிலளிநீக்கு
  17. ஆனந்த் சவுதி19 ஜூன், 2010 அன்று 1:07 PM

    கவிதைகள் பிரமாதம் கோடைக்கேற்ற வாடை..

    அத்தோடு காஞ்சி முரளியின் கவிதை கலக்கல்.

    மலிக்கா உங்களின் தூண்டுதல் அனைவரையும் கவிஎழுத ஆர்வத்தை உண்டாக்கிறது,

    நானும் எழுதுவா.

    கவியே மல்லி-நீ
    கவிஎழுத்தக்
    கற்றுக்கொடுத்தாய் சொல்லி
    கம்பன்வீட்டு தரியும்
    கவிபாடுமாம் -இங்க
    கருதுரைக்கவந்த நானும் கவிபாடுகிறேன் எப்புடீஈஈஈஈஈ ஹி ஹி நல்லாயிருக்கா..

    பதிலளிநீக்கு
  18. //கோடையின் மனைவி வாடை
    வாடையின் கணவன் கோடை

    ”ஆகமொத்தத்தில்”

    இருவரும் ஒரே கூட்டனி//

    இதைத்தான் குடும்ப அரசியல் என்பதா மலிக்கா????

    பதிலளிநீக்கு
  19. வாடை கோடை
    பஞ்சமில்லா வார்த்தைகள்
    உங்களாள மட்டும் எப்படி முடியிது
    மல்லிக்கா
    கலக்கியிருக்கிங்க...

    பதிலளிநீக்கு
  20. காஞ்சி முரளிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    KAVITHAI SUPER.//

    மிக்க நன்றி பனித்துளி.


    sarusriraj கூறியது...
    நல்லா இருக்கு மலிக்கா .....

    கோடையின் மனைவி வாடை
    வாடையின் கணவன் கோடை
    சூப்பர்...//

    ரொம்ப சந்தோஷம் சாருக்கா..

    பதிலளிநீக்கு
  22. அருண் பிரசாத் கூறியது...
    கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    வாங்க அருண். வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ராசராசசோழன் கூறியது...
    தாளத்தோடு பாடலாம் போல் இருக்கிறது...

    பாடுங்க பாடுங்க.மிக்க நன்றி சோழன்.


    Chitra கூறியது...
    முரளி சாருக்கு வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துக்கு மிக்க நன்றி சித்ராமேடம்

    உங்கள் கவிதை நல்லா இருக்குங்க..... பாராட்டுக்கள்!//

    பாராட்டுக்கும் நன்றி.. அதுசரி அதென்ன மூக்குக்கண்ணாடியா தலைகண்ணாடியா. ஹி ஹி[பிரொஃபைல்]

    பதிலளிநீக்கு
  24. ஜெய்லானி கூறியது...
    //இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
    இருவரும் தனித்தனியே வந்தால்
    நமக்கு எதிரணி.//

    சேர்ந்து வந்தால் உலக முடிவு தாங்க .. அதனால் தனிதனியாவே வரட்டும்..//

    அப்பப்பவந்துதான் மிரட்டுதுல்ல..வரட்டும் வரட்டும்..



    ஜெய்லானி கூறியது...
    கோடை வாடை இரண்டையுமே ஒரு சேர வடித்த கவிதை அழகு..//

    அழகுக்கு அருமையான நன்றி..அண்ணாத்தே...

    பதிலளிநீக்கு
  25. வாடையின் தாக்கம் அதிகமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  26. ரொம்ப அருமையான (வாடை )கவிதை

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது