நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வெற்றி யாருக்கு![கவிதைப்போட்டி]

நன்றி கூகிள்
இந்த சின்ன விருதை கவிஞர்கள் அனைவரும் அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

கவிஞிகள்.
அன்னு----
ஆசியா உமர்-----
நிலாமதி-----
அமைச்சாரல்---
மலிக்கா---

கவிஞர்கள்.
கார்த்திக்-------
காஞ்சி முரளி-----
ராஜராஜசோழன்-----
அக்பர்-----
ரியாஸ்-----
ஸ்டார்ஜன் -----
விஜய்------
இர்ஷாத்---
வெறும்பய----
ஜெய்லானி----
பார்த்தீபன்--
சீமாங்கனி---
நிஜாம் நியூஸ்--
நியோ---
மங்குனி---
நாடோடி---
தஞ்சை வாசன்---
திகழ்----

அன்பான கவிஞர்களே! கவிஞிகளே!

முதலில் தாங்கள் அனைவருக்கும் என் மனம்நிறைந்த
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
கவிதைப்போட்டியென்றவுடன் கலந்துகொண்டு தங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் கொட்டிக்கலக்கி
தாங்களின் அன்பான கவிகளை அழகாய் அருமையாய், தந்துள்ளீர்கள்.. ஒவ்வொருத்தருக்குள்ளும் கவிஞன் எனும் கற்பனை சிற்பி சிந்தனைகளை செதுக்கிக்கொண்டுதான் இருக்கிறான். அதை வெளிப்படுத்தும் தருணம் கிடைத்தால்,மிகஅழகியமுறையில் செதுக்கி சிற்பமாக்கி விடுவான் என்பதற்கு சான்றே இக்கவிதைப்போட்டி.

இதில் யாரும் யாருக்குக்கும் சலைத்தவர்கள் இல்லை. ஏனெனில் அவரவர் அவரவரின் சிந்தனைக்கு தகுந்தவாறு தன் சிந்தனைகளை கற்பனைக்குள் கலந்து படைத்துள்ளார்கள். இதில் முதலிடம் இரண்டாமிடம் என்றுசொல்லி அவர்களின் சிந்தனைகளை சிதைத்துவிட விரு[ம்ப]ப்பமில்லை.

ஆகையால் அனைவரும் கவிஞர்களே! ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் தன்மனவோட்டத்தை பதிவுசெய்துள்ளீர்கள். அதற்க்கே முதலில் பாராட்டவேண்டும்.பாராட்டுக்கள்.
யாரும் பிறக்கும்போதே இன்னதுவாகத்தான் பிறப்பதில்லை. வளரும் சூழ்நிலைகளும். வளர்க்கப்படும் சூழ்நிலைகளும்தான் அவர்களை இன்ன இன்னதுக்கென்று ஆக்கிவிடுகிறது, ஆக்கப்படுகிறது, இது கவிதைக்குமட்டுமல்லை அனைத்துக்கும்தான்.

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட விசயம் ஒருசிலருக்கு மட்டுமே கவிதை வருவதல்ல, ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் சிந்தனைக்குதந்தவாறு எழுதமுடியும். பதிவுசெய்யமுடியும். [இதில் நான்கூட சும்மா ஜுஜிபிதான் என்று.].

ஆகவே உங்களுக்குள் இருக்கும் திறமைகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது வெளிப்படுத்த தவறவேண்டாம். அது எதுவென்றபோதும் உங்களால் முடியும் என்று எதை நினைக்கிறீர்களோ அதை சாத்தியப்படுத்த முயலுங்கள்..
வெற்றி நிச்சயம்.

/சரி சரி யார் யார் பிஸ்கோத்துக்கு ஆசைப்பட்டதோ அவங்களெல்லாம் வரிசையாக நின்னு சண்டைபோடாம ஒவ்வொன்றாக எடுத்துக்கோங்க./

டிஸ்கி// என் ஒவ்வொரு பதிவின் கீழும். உங்கள் கவிதைகளை ஒவ்வொன்றாக பதிப்பேன்..

இதோ என் கவிதென்னும் கிறுக்களும்


ஆதாம் ஏவாள்

காரிருள் சூழ்ந்த இவ்வுலகம்
கனிமரத்தின் புண்ணியத்தோடு
ஆதாம் ஏவாளின் வருகையால்
விடிவு பெற்றெதென்பதை
உணர்த்தவே

ஒவ்வொரு இரவும்
உலாவரும் நிலா இருள்மீது
ஒளிவீசி இவ்வுலக்கிற்க்கு
உணர்த்துகிறது-அதை
வண்ண வானம் விளக்குகிறது.
......................................................................
ஒளியான காதல்
பசுமை நிறைந்த நம் காதல்
பிரிந்த சோகத்தில்
பச்சைமரம்
கருப்பானதே தவிர
கறுகிவிடவில்லை-அதை

உறுதிப்படுத்த இந்தநிலா
உலாவரும் வேளையில்
ஒளி விசீயபோது
இருள் சூழ்ந்த நேரத்திலும்
வண்ண வானத்தில்-நம்

இதயங்களின் சங்கமத்தை
இதமாய் காட்டியது-நம்
உண்மைக் காதலை
உலகுக்கே உணர்தியது..

ஏதோ நம்மால முடிந்தது

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

43 கருத்துகள்:

  1. LK கூறியது...
    ippadi mudichiteengale.//

    ஏன் கார்த்திக் முடிவு சரியில்லையா?

    பதிலளிநீக்கு
  2. //ராசராசசோழன் கூறியது...
    அப்பா... தப்பிச்சாச்சு//

    என்னா ஒரு சந்தோஷம் சோழரே!.

    கார்த்திக் இங்க பாருங்க சந்தோஷத்தை..

    பதிலளிநீக்கு
  3. LK கூறியது...
    thanks for the award.//

    மிக்க நன்றி கார்த்திக் வீட்டுல மாட்டிவிடுங்க [பிளாக் வீட்டுல]..

    பதிலளிநீக்கு
  4. நல்ல தீர்ப்பு

    வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகளுக்கு

    விருது மாட்டிட்டேன்

    நன்றி சகோதரி

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. நமக்கெல்லாம் ஆணியே புடுங்கதேரியாது, ஹி ஹி கவிதை எழுதுவதை சொன்னேன்

    பதிலளிநீக்கு
  6. நன்று

    -----------------------

    நல்ல வேளை ‘ஹல்வா’ கொடுக்கலை

    மாமா பிஸ்கோத்து ...

    ----------------------

    மாதம் ஒரு முறை இப்படி செய்ங்க

    பதிலளிநீக்கு
  7. விருதும் பிஸ்கோத்தும் அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  8. விருதுக்கும்...
    விருந்துக்கும்... (பிஸ்கட்)
    நன்றி...! நன்றி...!! நன்றி...!!!


    ///இதயங்களின் சங்கமத்தை
    இதமாய் காட்டியது-நம்
    உண்மைக் காதலை
    உலகுக்கே உணர்தியது..///

    சென்ற பதிவில் சொன்னதைத்தான்.... தாங்கள் வடித்துள்ள இந்த கவிதைகளுக்கான கருத்துரை....

    ரீப்பீட்டு....

    /////மலிக்காயெனும் 'புலி'யை நினைத்து...
    காஞ்சி முரளியெனும் 'பூனை' சூடு போட்டுக்கொண்டுள்ளது....///

    ////எல்லாரும் கவியரசி...கவிதாயினி... கவிஞர் மலிக்கா ஆக முடியுமா.!////

    இது உண்மையாயிடுச்சா...!

    மீண்டும் நன்றி...!


    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  9. //மிக்க நன்றி கார்த்திக் வீட்டுல மாட்டிவிடுங்க //

    maatiachu..

    mudivu varutham illa. summa

    பதிலளிநீக்கு
  10. மாலிக்கா ய‌க்கோ நான் வ‌ர்ற‌துக்குள்ள‌ ந‌ட்ஸ் போட்ட‌ பிஸ்க‌ட் காலியாயிடுச்சி.... என‌க்கு அதுதான் வேணும்.....ம்ம்ம்ம்ம்ம்ம்....

    விருதுக்கு ரெம்ப‌ ந‌ன்றி... இப்ப‌வே மாட்டிடுறேன்..

    பதிலளிநீக்கு
  11. உங்க கவிதைக்கு முன்ன நிக்க முடியுமா ?.....!!உங்கள் கவிதை சூப்பர்..

    கழுவுர நீருல நழுவுர மீன் மாதிரி சும்மா நழுவிட்டீங்க ...யாருடையது நல்லா இருக்குன்னு சொல்லாமலே!!!

    விருது யார் யார்ருக்குன்னு பேர் போடாம போட்டா எப்படி எடுக்க முடியும் (( ஆமா...நீங்க தந்தா மட்டும் என்ன ? !! தராட்டியும் நா அதை சுட்டுடுவேனே !!! ஹி..ஹி...))

    பதிலளிநீக்கு
  12. நா வரதுகுள்ள பிஸ்கெட் காலி...அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  13. ஒன்னு ரெண்டு பேரு வருவாங்கனு நெனச்சேன்...கூட்டத்தை பாருங்க...
    அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..

    பதிலளிநீக்கு
  14. //மாலிக்கா ய‌க்கோ நான் வ‌ர்ற‌துக்குள்ள‌ ந‌ட்ஸ் போட்ட‌ பிஸ்க‌ட் காலியாயிடுச்சி.... என‌க்கு அதுதான் வேணும்.....ம்ம்ம்ம்ம்ம்ம்.... //

    ரிப்பீட்டு.

    விருதுக்கு நன்றி. அசத்துங்க.

    பதிலளிநீக்கு
  15. என்னது பிஸ்கோத் காலியாச்சா/. அப்ப [ம]அமைச்சரைப்பிடிங்கோ அவங்க கூலிப்படை அச்சோ. ஒற்றர்கள்தான் அள்ளிக்கிட்டு போயிருப்பாங்கோ. அங்கேபோய் மேல் முறையிடு கொடுங்கோ.
    நானும் கூடவருகிறேன்..

    பதிலளிநீக்கு
  16. ஜெய்லானி கூறியது...
    உங்க கவிதைக்கு முன்ன நிக்க முடியுமா ?.....!!உங்கள் கவிதை சூப்பர்..//

    இதெல்லாம் சும்மா ரீல்விடக்கூடாது அண்ணாத்தே!

    //கழுவுர நீருல நழுவுர மீன் மாதிரி சும்மா நழுவிட்டீங்க ...யாருடையது நல்லா இருக்குன்னு சொல்லாமலே!!!//

    அதெல்லாம் இல்லையண்ணாத்தே. யார்மனசும் நோகக்கூடாது அதுமட்டுமில்லை அந்தளக்கெல்லாம் நமக்கு தகுதி பத்தாதுங்கோ..

    //விருது யார் யார்ருக்குன்னு பேர் போடாம போட்டா எப்படி எடுக்க முடியும் (( ஆமா...நீங்க தந்தா மட்டும் என்ன ? !! தராட்டியும் நா அதை சுட்டுடுவேனே !!! ஹி..ஹி...))//

    இப்ப போட்டுட்டோமுள்ள..
    மாட்டியாச்சா இதோ வாரேன்ன்..

    மிக்க நன்றி அண்ணாத்தே..

    பதிலளிநீக்கு
  17. விஜய் கூறியது...
    நல்ல தீர்ப்பு

    வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகளுக்கு

    விருது மாட்டிட்டேன்

    நன்றி சகோதரி

    விஜய்.//

    மிக்க நன்றி சகோதரர் அவர்களே! வாழ்த்துக்கும் இந்த சகோதரியின் விருதை ஏற்றுக்கொண்டமைக்கும்..

    பதிலளிநீக்கு
  18. காஞ்சி முரளி கூறியது...
    விருதுக்கும்...
    விருந்துக்கும்... (பிஸ்கட்)
    நன்றி...! நன்றி...!! நன்றி...!!!


    ///இதயங்களின் சங்கமத்தை
    இதமாய் காட்டியது-நம்
    உண்மைக் காதலை
    உலகுக்கே உணர்தியது..///

    சென்ற பதிவில் சொன்னதைத்தான்.... தாங்கள் வடித்துள்ள இந்த கவிதைகளுக்கான கருத்துரை....

    ரீப்பீட்டு....

    /////மலிக்காயெனும் 'புலி'யை நினைத்து...
    காஞ்சி முரளியெனும் 'பூனை' சூடு போட்டுக்கொண்டுள்ளது....///

    ////எல்லாரும் கவியரசி...கவிதாயினி... கவிஞர் மலிக்கா ஆக முடியுமா.!////

    இது உண்மையாயிடுச்சா...!

    மீண்டும் நன்றி...!


    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    ஏன் ஏன் சகோதரா! இப்படியெல்லாம்.
    நான் புலியெல்லாமில்லை. பாவம் பச்சக்கொழந்தை.
    இப்பத்தான் தத்திதாவாப்பாக்குது. கவிதையெனும் காட்டாற்றில் இப்போதுதான் சிறு விரல்வைத்துப் விளையாடிபார்க்குது.
    இதபோய் கால்வைத்து கலக்கிய புலியாக்கிட்டீகளே!

    உங்கள் கவிதைகு முன்னால் இதெல்லாம் மிக சாதாரணம். நான் யோசித்து எழுதுபவள். ஆனால் பதிவுபோட்டு சில நிமிடங்களில் இப்படியொரு அழகான ஆழமான கவிதையை தந்த நீங்களெங்கே நான் எங்கே!

    ஆகவே பூனையின்பலம் புலிக்கு பத்தாது..

    தாங்களின் கருதாளமிக்க கவிதைக்கும்.
    அன்பான கருதுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  19. அபுஅஃப்ஸர் கூறியது...
    நமக்கெல்லாம் ஆணியே புடுங்கதேரியாது, ஹி ஹி கவிதை எழுதுவதை சொன்னேன்..//

    உங்கபிளாக்கில் எழுதுவதற்க்கு பெயர் என்னவாம்...

    பதிலளிநீக்கு
  20. நட்புடன் ஜமால் கூறியது...
    நன்று

    -----------------------

    நல்ல வேளை ‘ஹல்வா’ கொடுக்கலை

    மாமா பிஸ்கோத்து ...//

    அதெல்லாம் நாங்க கொடுத்துப்பழக்கமில்லை காக்கா. கேட்டதையே கொடுதுட்டோம்..

    அதுசரி அதென்ன மாமா பிஸ்கோத்து.

    ----------------------

    மாதம் ஒரு முறை இப்படி//

    நிச்சயமாக அந்த ஒரு குறிக்கோளோடுதான் இதை ஆரம்பித்தேன். இன்ஷா அல்லாஹ் இடையிடையே. மாற்றல்கள் நிகழும் கவிதைப்படைப்பில்..

    பதிலளிநீக்கு
  21. உங்க கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு தோழி...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  22. இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவேண்டும்.. ஹி..ஹி..

    எனக்கு ஒரு பிஸ்கட் போதாது..

    அட பிஸ்கட் போச்சே..

    பதிலளிநீக்கு
  23. ///இப்ப போட்டுட்டோமுள்ள..
    மாட்டியாச்சா இதோ வாரேன்ன்..///

    ஆஹா...கவிபேரரசி வாயால கவிஞர் பட்டமா .
    இப்பவே குளிரடிக்குதே !!!
    உடல் நடு நடுங்குதே !!!
    பல் தந்தியடிக்குதே !!!
    மனசு சிலிர்க்குதே !!!
    உச்சந்தலையில்
    நிச்சயம்
    எலுமிச்சம் !!!
    பட்டத்தை மாட்டாத வரையில்!!!

    பதிலளிநீக்கு
  24. அழகான புது விருதுக்கு நன்றி மலிக்கா அக்கா...அனைவருக்கும் வாழ்த்துகள்... ஆஹா அக்கா பிஸ்கோத்து இல்லையா!!?? அப்போ மச்சான் (முந்திரி)பிஸ்கோத்து...

    பதிலளிநீக்கு
  25. அன்பு மலிக்கா...
    தங்களோட பிஸ் கோத்துகளுக்கும் விருதிற்கும் மிக்க நன்றி !
    தனி பதிவு போட்டு மாட்டிண்டேன் !
    http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_13.html
    ரொம்ப சந்தோசம் !
    அப்புறம் ...
    உங்களோட கவிதை ...
    கவிதாயினி னா சும்மாவா ...?
    அடுத்த சல்மா ?
    சல்மாவையும் தாண்டி போக வாழ்த்துக்கள் தோழர் !

    பதிலளிநீக்கு
  26. asiya omar கூறியது...
    விருதும் பிஸ்கோத்தும் அருமை.நன்றி//

    மிக்க நன்றி ஆசியாக்கா..

    பதிலளிநீக்கு
  27. மலிக்கா என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் கவிஞர் கவிஞர் தான். நாங்கெலெல்லாம் ஞாயிற்றுக்கிழமை சமைப்பவர்களைப் போன்றவர்கள். விருதுக்கு நன்றி ( நம்ம கவிதையையும் அல்லது கவிதையாக ஏற்றுக்கொண்டதற்கு)

    பதிலளிநீக்கு
  28. நல்லா குடுத்தீங்களே பிஸ்கோத்து!!!!!

    பதிலளிநீக்கு
  29. வெற்றி பெற்றவர்களுக்கு இனிப்பு வழங்கியதாக கேள்வி

    ஆனால்
    பிஸ்கட் புதுமுயற்ச்சி மல்லிக்கா

    விருது கொடுத்து கலக்கியிருக்கிங்க
    விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    தோழர் ராசராசசோழன்
    பரிட்ச்சை முடிந்த சந்தோசத்தைபோல
    பெருமூச்சுவிட்டிருக்கார்

    கவிதை வரிகள் அருமை மல்லிக்கா
    ஆனாலும் நீங்க சொல்ல வந்ததை மிகவும் தெளிவாக வெற்றி எல்லாருக்கும் சொந்தம் தோல்விகளே இல்லை

    சிறியவருத்தம்
    இருக்கத்தான் செய்யிது கலந்துகொள்ளவில்லையென நினைக்கும் போது

    பதிலளிநீக்கு
  30. ////அடுத்த சல்மா ?
    சல்மாவையும் தாண்டி போக வாழ்த்துக்கள்/////

    நியோ.....
    யாரது சல்மா...?

    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  31. அன்பு மலிக்கா !
    என்னோட தளத்துக்கே வந்து உங்க வாழ்த்துக்கள தெரிவிச்சதுக்கு மிக்க நன்றிகள் !
    உங்க ஊக்குவிப்பாலா கஷ்டப்படப் போறது என்னோட தோழர்ஸ் தான் ...
    நானும் அப்பப்போ கவுத எழுதப் போறேன் ...
    நன்றி தோழர் !

    பதிலளிநீக்கு
  32. மிகவும் நன்றி மாலிக்கா......விருது தந்து கெளரவிததுக்கு ..

    பதிலளிநீக்கு
  33. //ராசராசசோழன் கூறியது...
    ஒன்னு ரெண்டு பேரு வருவாங்கனு நெனச்சேன்...கூட்டத்தை பாருங்க...
    அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..//

    அதேதான் நானும் சோழா. நீங்களாவது கைமண் அளவு கற்றுள்ளீர்கள். ஆனா நான் அதுகூட இல்லையே!!!!!!!!!!

    பலே கில்லாடிகளுக்குமத்தியில்[உங்களையும் சேர்த்துதான்]. பாவம் பச்சபுள்ளை [நாந்தான்] விழிபிதுங்கி நிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  34. LK கூறியது...
    //மிக்க நன்றி கார்த்திக் வீட்டுல மாட்டிவிடுங்க //

    maatiachu..

    mudivu varutham illa. summa//

    அதானே பாத்தேன்.. நன்றி கார்த்திக்




    //நாடோடி கூறியது...
    மாலிக்கா ய‌க்கோ நான் வ‌ர்ற‌துக்குள்ள‌ ந‌ட்ஸ் போட்ட‌ பிஸ்க‌ட் காலியாயிடுச்சி.... என‌க்கு அதுதான் வேணும்.....ம்ம்ம்ம்ம்ம்ம்.... //

    அதுக்கெல்லாம் அழலாமா. கவலைவிடுங்க. அடுதாப்புல பாக்கெட்டோட தருகிறேன் போதுமா..

    //விருதுக்கு ரெம்ப‌ ந‌ன்றி... இப்ப‌வே மாட்டிடுறேன்..//

    ரொம்ப நன்றிமா..

    பதிலளிநீக்கு
  35. கவிஞர்கள் , கவிஞிகள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் . விருது வழங்கிய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  36. விருதுக்கு நன்றி மலிக்கா. வந்ததுக்கு அந்த பிஸ்கட்டை தட்டோட எடுத்துக்கிறேன் :-))))

    பதிலளிநீக்கு
  37. நேசமித்ரன் கூறியது...
    பாராட்டுக்கள்

    மிக்க நன்றி தாங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்..நேசமித்திரன் அவர்களே..

    //

    கமலேஷ் கூறியது...
    உங்க கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு தோழி...

    வாழ்த்துக்கள்..
    //

    ரொம்ப நன்றி தோழா..

    பதிலளிநீக்கு
  38. ரொம்ப நன்றி விருதுக்கும்...
    விருந்துக்கும்...

    பதிலளிநீக்கு
  39. வாழ்த்துக்கள்..

    http://ujiladevi.blogspot.com

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது