நன்றிகூகிள்
எப்பப்பாரு நானேதானே கவிதையின்னு ஏதாவது ஒன்ன கிறுக்கிட்டு இருக்கேன். ஒரு மாறுதலுக்கு. இன்று நீங்க
நான் கொடுத்துள்ள போட்டோவுக்கு கவிதையை எழுதுங்களேன்.
வரிகள் கணக்கில்லை
வார்த்தைகள் முக்கியம்.
யார் இதற்கு பொருத்தமாக எழுதுறாங்களோ அவுங்களுக்கு அவுங்களுக்கு. அது பின்னர் அறிவிக்கப்படும்.
எங்கே ஆராம்பிங்கோ பார்க்கலாம் ம்ம்
கலைகட்டட்டும் கவிதை அரங்கம்.
தகதகவென ஜொலிக்கட்டும்
உங்கள் எண்ணச் சுரங்கம்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!
ஹை.... நாந்தான் 1stடோ....
பதிலளிநீக்குகாஞ்சி முரளி...
பப்ளிஸ் பண்ணிடு திரும்புறேன் உங்க கருத்து மகிழ்ச்சி முரளி..
பதிலளிநீக்குவாங்க கவிஞரே! வந்து உங்க கவிதைகளை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக்குங்க..
நான்தான் முதல் வாசகன்... விமர்சகனோ...!
பதிலளிநீக்குகாஞ்சி முரளி...
ஓகே ஓகே..
பதிலளிநீக்குகவிதைதான் வேணுமா? நான் கவிதை எழுதுனா கட்டுரை மாதிரி இருக்குமே..... சரி, இப்படி ஓரமா இருந்து கைத்தட்டுறேன்.....
பதிலளிநீக்குபௌர்ணமியை பழிக்கும்
பதிலளிநீக்குமுகமுடையவளே ..
இரண்டாய் இருந்த நம்
இதயம் மணத்தால்
ஒன்றாகியது..
நம் காதலின் தூய்மை
நிலவின் வெண்மையிலும்
தூய்மையானது ..
அஹமது இர்ஷாத் கூறியது...
பதிலளிநீக்குஓகே ஓகே...//
என்ன ஓகே ஓகே. வந்து கவிதைசொல்லுங்க. இர்ஷாத்..
Chitra கூறியது...
பதிலளிநீக்குகவிதைதான் வேணுமா? நான் கவிதை எழுதுனா கட்டுரை மாதிரி இருக்குமே..... சரி, இப்படி ஓரமா இருந்து கைத்தட்டுறேன்.//
அப்படியெல்லாம் சொல்லலாமாசித்ராமேடம். நீங்க கட்டுரையென்ன கதையே சொன்னாலும் கவிதைமாதரிதான் இருக்கும் சிரிப்புக்கரசியே வந்து சில வரிகள் சொல்லும்..
பட்டம் அறுந்து
பதிலளிநீக்குபோனாலும்
அது காதல் பட்டம்
பால் நில ஒளியில்
அது
சுமந்து செல்கிறது...
உன்னோடு நான் இருந்த
கடைசி சில
நிமிடங்களை...
-----எப்படி..
மலிக்கா....
பதிலளிநீக்குஇதோ என் கிறுக்கல்கள்....
(கவிதைன்னா கல்லெறிவாங்க )
காதலியே...
ஓர் நிலாக்காலத்தில்....
இந்த
இயற்கையின் நிலவொளியில்
இணை மரங்களுக்கிடையில்...
இணையாய் நீயும் நானும்.... அது
நினைவுகளின் தேக்கமாய்... இன்றும்
நிழலாய் என் நெஞ்சில்...
இந்த
நிலாக்கரையில்...
இடம்மாறிய - நம்
இதயங்களின் சங்கமம்...
இன்னும் - என்
இதயத்தில் நினைவலைகளாய்...
இன்றும் என் நெஞ்சில்...
அன்று..
என் இதயத்திற்கு பதிலாக
உன் நினைவுகளை தந்துவிட்டு பறந்துவிட்டாய்...
என்னை வதைப்பதாய் நினைத்து - உன்னையே
நீ வதைத்துக் கொள்கிறாய்...
என்
நினைவுகளின்
நிஷ்டையிலிருந்து கலைத்துவிட்டு...
நீ
நிம்மதியை தேடுவது...
நிரம்பாத குடத்தின் நீர் போலத்தான்...
இன்றும்
இவ்விடம் எனக்கோர்
தாஜ்மகால்தான்...
ஆனால்... உனக்கு...!
நட்புடன்...
காஞ்சி முரளி....
திடீர்னு சொன்னீகளா... என் சிந்தனையை சிறிது கிளறிவிட்டு... கிறுக்கல்களாய்... (வசனக் கவிதையாய்) கிறுக்கியுள்ளேன்...
தவறுகள்... பிழைகள் இருந்தால் மன்னிப்பீராக...!
"புலியை (மலிக்கா) நினைத்து இந்த பூனை (காஞ்சி முரளி) சூடு... கோடுகளாய் போட்டுக்கொண்டுள்ளது...
எல்லாரும் கவியரசி...கவிதாயினி... கவிஞர் மலிக்கா ஆகா முடியுமா.!
என்ன சொல்ல என்ன சொல்ல கவிஞர்களே கவிஞர்களே. கவியின்னு நான் கிறுயதெல்லாம் கவிதையல்ல. இதோ இதோ இங்கே நீங்க கொட்டும் கவிமழைக்குள் நான் கரைந்துபோகிறேன்.
பதிலளிநீக்குஇன்னும் இன்னும் வந்துகொட்டட்டும் கவிப்பெரும்மழை.
மீண்டும் வருவேன்..
மரக் காதல்
பதிலளிநீக்கு==========
நீ அமுதை பொழிகிறாய்
நான் அன்பை பொழிகிறேன்
இந்த நேரத்தில்
செங்கதிரோனுக்கு
இங்கு என்ன வேலை?
நீ ஓடி விடாதே நில்.
=======
இது தேறுமா மலிக்கா.
கண்ணே!
பதிலளிநீக்குஇங்கே பார்...
நிலவுக்கு ஆதரவாய்
செஞ்சுடர்...
தலை சாய்த்து
கொஞ்சி நிற்கும்
மர நிழல்கள்...
அதற்கு ஆதரவாய்
மலை முகடு...
என்
நினைவலைகள்
வானில்
மேக மூட்டமாய்...
நீ
மட்டும்
இங்கு இல்லை
உன்
சுவடுகள்
எங்கும் எதிலும்...
ஏ.. நிலவே
பதிலளிநீக்குபூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.
துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்..!
ஒருமுறை பார்க்க தோன்றும்
பதிலளிநீக்குநிலவொளியில் உன் முகம்
அடிக்கடி பார்க்கத் தூண்டும்
போட்டி உனக்கும் நிலாவுக்கும்
ஜெயிப்பது நீயாக இருந்தால்
என் ஓட்டு உனக்குதான் அன்பே..
பிடிச்சிருக்கு அவளை மட்டும்
விரல் கோர்த்து வீதியில்
உலா வருவேன் கூட நீயும்..
######################
பதிலளிநீக்குநேற்று காதலில் தோற்று
மனதை வைத்தோம் பூட்டி
இன்று வானில் சிறகடித்து
நிலவுக்கே போட்டி..
######################
:)ஏதோ என்னால் இயன்றது...
நிலவை நினைத்து
பதிலளிநீக்குமேக மையூற்றி
நட்சத்திர காதல் கிறுக்கல்கள்
விஜய்
இந்த விஷப் பரிட்சைக்கு நான் வரவில்லை.... மீ எஸ்கேப்.
பதிலளிநீக்குellarum kalakareenga
பதிலளிநீக்குmalikka ,eppa result
வெள்ளை
பதிலளிநீக்குஉடுத்திய இளம் விதவை
தூக்கம் தொலைத்த பழைய காதல்
நினைவுகளுடன்
தற்கொலைக்கு தயாராக...
எதோ என்னால் முடிந்தது..
பதிலளிநீக்குஏ நிலவே பூரண நிலஒளி என்று
பதிலளிநீக்குஆணவப்படாதே !!
என்னவளின் இதயம் என்னருகில் இருக்க
தனிமரமாய் இல்லாமல் அருகருகே இருக்க
ஒரு நாள் நீ கானாமல் போகலாம் வெண்ணிலா..
ஆனால் என் கண்ணிலா , காதலாய் என் பெண்ணிலா எப்போதும் என் மணதில் ...
ஹா....ஹா.....
கேட்டதும் பார்... உன் வெண் முகத்திலும் கவலை கருப்பு ரேகைகள்..
எப்படியும் நீ தனிதான்
மலீகாக்காவ் ஏதோ கிறுக்கிட்டேன். அதுக்காக கொயந்தைக்கு பாதி பிஸ்கெட்டாவது பரிசா குடுத்திடுங்க ...
பதிலளிநீக்குநம் காதலை
பதிலளிநீக்குமுழு நிலவுடன்
ஒப்பிடுகிறார்கள்,
ஆம் நம் இருவரின்
இதயமும் நிலவின்
அருகில் !!!!!!!!
எங்களுக்கும் கவிதை எழுத
வாய்ப்பளித்த மலிக்கா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம்.
க.பார்த்திபன்
சிங்கப்பூர்
கவிஞர் ஜெய்லானி....
பதிலளிநீக்குசூப்பெரப்பு...!
ஜெய்லானிக்கு பாதி பிஸ்கட்னா.....
எனக்கும் பாதி...!
காஞ்சி முரளி...
அம்மாடியோ ஒற்றைப்படத்துக்கு எத்தனை எத்தனை கற்பனை.
பதிலளிநீக்குகார்த்திக் உடனே சொல்லிவிட்டால் சுவாரசியமிருக்காதல்லவா. இன்னும் கொஞ்சம் பொறுப்போம்.
இன்னும் கவிஞர்களின் கற்பனைகள் எப்படியெல்லாம் போகுதுன்னு பார்ப்போம்.
///கவிஞர் ஜெய்லானி...///
பதிலளிநீக்குஇப்பிடியெல்லாம் வெறுப்பேத்தினா
அப்புறம் என் பிளாக்கில கவித
போட ஆரம்பிச்சிடுவேன் ஜாக்கிரத..
பாதி பிஸ்கட் டீல் ஓக்கே!!!
என்ன அண்ணாதேயும். சகோதரரும். பிஸ்கோத் கேக்குறீங்க.
பதிலளிநீக்குபார்ப்போம் பாதியா. இல்லை முழுவதுமான்னு. ஆனா ஒன்னு ..சரி அப்பறமா சொல்கிறேன்..
//பார்ப்போம் பாதியா. இல்லை முழுவதுமான்னு. ஆனா ஒன்னு ..சரி அப்பறமா சொல்கிறேன்..//
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தொலை தூரம் இருக்கும்
பதிலளிநீக்குஎன் இனிய நிலாவே ..
உனை எண்ணி விடும்பெருமூச்சுக்க்ளால்
என் இதயம் ஆவியாகி பூவுலகம் நோக்கி செல்கிறது .
இதனால் தானோ பூவுலகம் வெப்பமாகிறதாம்
வாராய் என் நிலா தண்ணொளி வீசி என் வசம் வந்து விடு ..
என் பெருமூச்சுக்கள் குறையும் ,பூவுலகம் மகிழும்..
மானிடர் எல்லோரும் மகிழ்வுறவே ...இனிய நிலா
பொழிந்து விடு ...உன் அன்பை ..சம்மதத்தை சொல்லிவிடு ..
குறிப்பு ....இது கவிதையா எனக்கு தெரியலை
அக்கா naan kavithaiyodu varukiren...
பதிலளிநீக்குஅடி!!
பதிலளிநீக்குபுத்தி கெட்டவளே புரிந்துகொள்; பக்கத்தில் வா!!
பகல் இல்லை- இது
பால் நிலாவின் பனி ஓளி -நாம் புகுந்து பிறந்த புது வீட்டு பூமியின் அடி வயிற்றில் அடுப்பெரிக்க ஆரம்பித்து விட்டான்
ஆதவன்!!!
அடம் பிடிக்காமல்
அருகே வா!!!
விடிவதற்குள்-நம்
பச்சை குழந்தைகளை
பரிசளிப்போம்
பூமிக்கு...
-சீமான்கனி
புவி வெப்பமாதலை தடுக்க மனிதனால்தான் முடியாது இவர்களாவது ஒரே இரவில் உற்பத்தி செய்யட்டும் மரங்கள் என்னும் மந்திர போர்வையை ...
பதிலளிநீக்குஏதோ...என் கற்பனைக்கு எட்டியது...
படமே ஒரு கவிதையாய் இருக்கிறதே! இதற்கு மேலும் வாசகங்கள் வேறு வேண்டுமோ?
பதிலளிநீக்குஇரவில் தான் என்னால் எளிமையாய் சுவாசிக்க முடிகிறது..,
பதிலளிநீக்குபுவிவெப்பமயமாதலால் பூக்கள் கூட பூப்பதில்லை..
உன்னைக் கண்ட பிறகு தான் கவிதைகள் எழுதுகிறேன்..
எதுவரை?
நாளைக்கு இந்த இடத்தில் மஞ்சல் நிறமடித்த கற்கள் முளைத்து
இந்த இடம் மனையாக மாற்றப்பட்டு என்னையும் சேர்த்து வெட்டி எறியும் வரை...!
எப்படி மலிக்கா??
நிலா உதிக்கும் ஆளற்ற வீதியில்
பதிலளிநீக்குயாருக்காகவும்
நான் காத்துக் கொண்டிருக்கவில்லை ...
ஆனால்
இதை சொல்லும் போது
உன் ஞாபகம் வருவதைத்தான்
என்னால் தவிர்க்க முடிய வில்லை ...
இன்று
உலகிற்கே பௌர்ணமி ...
எனக்கு என்னவென்று
நீயே சொல் !
புத்தனை பயின்றும்
சில கோடி ஆசைகளினின்று
விடுபட முடியவில்லை ...
நின்னை சரணடைந்தேன் ...
ஆசைகளனைத்தும் அகன்றன ...
எஞ்சியிருக்கும் பேராசை நீ !
நான் நாத்திகன் தான்
என்றாலும்
ஆதாம் ஏவாள் கதையையெல்லாம்
நம்பத்தான் வேண்டியிருக்கிறது ...
காதலே பாம்பு !
பாம்பு தீண்டி தீண்டி
உயிர்த்தெழுந்து நிற்கிறேன் நான் !
நம்மிருவர் இலைகளும் கிளைகளும்
தொட இயலாது போனால் என்ன ?
தொலைவிலிருந்தால் தாம் என்ன ?
வேர்களாய் இணைந்திருப்போம் !
மழையில் நனைந்திருக்கிறேன்
பல முறை ...
ஒரு முறையும் உணர்ந்ததில்லை மழையை ...
ஒன்றும் பெய்யவில்லை இன்று
ஆனாலும்
உணர்கிறேன் மழையை ...
காதல் மழை
நிலவு குடை பிடித்துக் கொண்டு !
(ஆஹா...அன்னு, இந்த மாதிரி சான்ஸெல்லாம் உடவே கூடாது, களத்துல எறங்கிடு!! ): மனசாட்சி
பதிலளிநீக்குமேகங்களற்ற பின்னிரவிலும்
உன் நினைவுகள் கூட்டமாய் என்
மனவானில் துரத்திடும்...
அடர் பனியின் நடுவிலும்
நிலவாய் உன் முகம்
நொடியில் ஜொலித்திடும்...
கால் போன திசையில் கானகத்தை
கடந்தே போகிறேன்
சருகாய் எங்கேனும்
நீ எனை
எதிர்கொள்வாய் என...
(ஹை...அப்ப எனக்கு முழு பிஸ்கட் பாக்கெட்டே கிடைக்கும்னு நினைக்கிறேன்...ஜெய்லானி பாய், அஸ்கு புஸ்கு..!!)
அன்பு மலிக்கா ...
பதிலளிநீக்குகவுத பிடிக்கலேன்னா கிழிச்சு போட்டுடுங்க ....
புலிகள் இருக்கிற பதிவு காட்டில் தான் சில பூனைகளும் வாழுது ...
மன்னிச்சு விட்டுடுங்க ....
எங்கிருகிராய் என்னவளே
பதிலளிநீக்குமறதி
எனும்
மனித
நோய்
என்னில் உள்ள
உன் நினைவுகளை
அழிக்க பார்க்கிறது
.....
......
.....
ஆம்
இப்பொழுது
என்னிடம்
உன் நினைவுகள் மட்டுமே
உள்ளது
அதை கொஞ்சம்
புதுபித்து
விட்டு போ ....
உன் நிழலில்!!
பதிலளிநீக்குநானும் என்னவளும்
கைகோர்த்து ஜோடியாய்
கலைந்து விடாதே!
என் கனவையும் கலைத்து விடாதே!
ஜெய்லானிக்கும் முரளிக்கும் மிஸ் ஆன நமக்கு பிஸ்கோத்து.. எப்படி?
உன் நிழலில்!!
பதிலளிநீக்குநானும் என்னவளும்
கைகோர்த்து ஜோடியாய்
கலைந்து விடாதே!
என் கனவையும் கலைத்து விடாதே!
ஜெய்லானிக்கும் முரளிக்கும் மிஸ் ஆன நமக்கு பிஸ்கோத்து.. எப்படி?
உன் நிழலில்!!
பதிலளிநீக்குநானும் என்னவளும்
கைகோர்த்து ஜோடியாய்
கலைந்து விடாதே!
என் கனவையும் கலைத்து விடாதே!
ஜெய்லானிக்கும் முரளிக்கும் மிஸ் ஆன நமக்கு பிஸ்கோத்து.. எப்படி?
நிலவே!
பதிலளிநீக்குஇருளென்றால் எனக்கு பயம்
உனைமட்டும் நான் ரசித்து
கொண்டே இருப்பதனாலோ
இன்றுவரை உணரவில்லை
என்வாழ்வில்..
அம்மாடி என் கண்ணை என்னாலேயே நம்பமுடியலையே! கவிஞர்களின் வரவு இன்னும் தொடரனும்...
பதிலளிநீக்குமீண்டும் வருகிறேன்
@@@காஞ்சி முரளி....
பதிலளிநீக்கு@@@அன்னு
@@@நாடோடி
அடப்பாவமே !! அரை பிஸ்கெட்டுக்கும் போட்டியா ((ஜெய்லானீஈஈஈ உன் நெலம இப்பிடியா ஆவனும் )) ? !!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நாட்டம....!
பதிலளிநீக்குதீர்ப்ப சீக்கிரம் சொல்லு...!
போதும்... போதும்...
இதோட... நிறுத்திக்குவோம்....!
இன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்லைன்னு நீங்க சொன்னா....
நாங்க நம்பணுமாக்கும்...!
ஜெய்லானி எங்கிருந்தாலும் உடனே புறப்பட்டு வா...!
பதிலளிநீக்குநம்ம... பாதி பிஸ்கேட்டுக்கே...
பங்கு போட வந்துட்டங்கையா....! வந்துட்டங்கையா....!
- காஞ்சி முரளி...
நிலவே
பதிலளிநீக்குவிண்ணிலே
உனக்கு போட்டியாய்
மானிடரின் வான வேடிக்கை
மண்ணிலே
உன்னொளியோ தினம் வாடிக்கை.
மென்னொளி தாலாட்டில்
கண்மூடிய கவின்மரங்கள்
விழிக்குமே
செழிக்கும் கதிரவனின்
உதயத்தில்...
--ஆசியா உமர்.
வானோடையில் நிலாக்கா
நீரோடையில் மலிக்கா
-இதுக்கு பிஸ்கோத்து நிச்சயம்.
அப்புறம் ஹலோ எச்சூச்மி , ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா சாரி , அது டைபிங் மிஸ்டேக் , எப்ப முடிவ சொல்லுவிக ???
பதிலளிநீக்குநிறைய கவிதைகள் படிக்க முடியுது
பதிலளிநீக்குமுயற்சிக்கு பாராட்டுகள்
அனைவருக்கும் வாழ்த்துகள்
இன்று வெள்ளிகிழமை அதனால மல்லி கவர்மெண்டு ரெண்டு நாள் விடுப்பு எடுப்பதால் தீர்ப்பு திங்களன்று ஒத்திக்கவைக்கப்படுகிறது.. ஆடர் ஆடர் ஆடர்...
பதிலளிநீக்குரெண்டு நாளுன்னா இடையில் ஞாயிறு எங்கேன்னெல்லாம் கேக்ககூடாது ஓகே...........
இதப் பார்ரா....! மங்குனியமைச்சர.....!
பதிலளிநீக்கு////மறதி எனும் மனித நோய் என்னில் உள்ள உன் நினைவுகளை அழிக்க பார்க்கிறது
ஆம்... இப்பொழுது என்னிடம்
உன் நினைவுகள் மட்டுமேஉள்ளது
அதை கொஞ்சம் புதுபித்து விட்டு போ.... ////
மலிக்காவின் 'நீரோடை'யில் கவிதை நீ படைத்ததால்...
இன்றுமுதல் நீ
கழுதை.. சே... "கவிதையமைச்சர்" என்றெல்லோராலும் அன்போடு போற்றப்படுவாய்....
வாழ்க... கவியமைச்சர் மங்குனி... வாழ்க... வாழ்க....!
மலிக்கா மேடம்....
பதிலளிநீக்குசெல்லாது...... செல்லாது....
தீர்ப்ப..... இன்றே சொல்லணும்...
இப்பவே சொல்லனுங்கோ...!
யக்கோவ் , மலீக்காக்காவ் !! பாதி பிஸ்கோத்துக்கும் ஆள் வருது..ம்..ஆசை....அப்ப நிராசைதான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்குகிறுக்கல்
பதிலளிநீக்கு...............
நில(ம)வரம்
..............
அனுதினமும்
அனலைக் கக்கும்
ஆதவன்...
அதன் இடையே
அயராது உழைக்கும்
அவனுக்கோ
ஆறுதல்...
மாலையில்
மனையில் காணும்
மனைவியும்
மக்களும் தான்
நிலவில் தண்ணீர் இருக்கிறதாம்
பதிலளிநீக்குவிஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
நிலவைப்பெண்ணென்று
யார் சொன்னது!!
அதுவும் ஆணாகத்தான்
இருக்க வேண்டும்.
'ஜொள்ளு வடிக்கிறதே!!
உனைப்பார்த்து'
என்றான் அவன்.
இல்லையில்லை;
அதுவும் என் போல் பெண்தான்;
சொந்தமாய் ஒளிவீச
திறனில்லாமல்,
சூரியக்கணவனை
சார்ந்திருக்க வேண்டியிருக்கும் பச்சாதாபத்தால்,
வடித்த கண்ணீர்தான் அது,
என்றாள் அவள்:
வாதம் வலுப்பதை பார்த்துக்கொண்டே;
இருவருக்கும் சாட்சியாய்,
மேகமுக்காட்டுக்குள்,
நகைத்தது, பால் நிலா...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோமில்ல... ஆமா, தீர்ப்பு திங்கள்கிழமைதானே?...
நிறைய பேர் கலக்குறாங்க.
பதிலளிநீக்குஇந்த படத்திற்கு நான் ஏற்கனவே எழுதிய கவிதை ஒன்று பொருத்தமாக இருக்கும் என்று நன்புகிறேன். படித்துச் சொல்லுங்கள்
http://somayanam.blogspot.com/2010/05/blog-post_29.html
ஆஹ்ஹா போட்டி முடிந்து போச்சா
பதிலளிநீக்கு( என்னவோகவிதை எழுதி கிளிக்கிற மாதிரி வந்து கேட்டுட்டேன் என்று நினைக்கிறீஙக்ளா?)
அட நான் எழிதினா அது சமையல் குறிப்ப படிப்பது போல் ஆகிடும் பா.
இங்கு எழிதிய அனைத்து கவிஞர், கவிஞினிகளுக்கு பாராட்டுக்கள்.
அடடா மிஸ் பண்ணிட்டனே மலிக்கா.... உங்க ப்ளாக் பக்கம் ஒரு வாரமா வராததுக்கு தண்டனை...ஹும்... ஆன படத்த பாத்தா கவிதை எழுத தோணுது.... சூப்பர்....ஆசைக்கு நானும் ஒரு நாலு வரி எழுதிக்கிறேனே....
பதிலளிநீக்கு*****************************
வானவீதியில் காதல்மொழி
வரைந்து வைத்தேனடா
மேகம் கலையும்முன்னே
மீட்டுவிடு என்னையும்கூட!!!
******************************
எட்டாத உயரத்தில்
எழுதிவைத்த கடிதம்
நிலவு களவாடும்முன்
நீவந்து வென்றுவிடு!!!
***********************************
வைகறை வரும்முன்
வானவெளி பல்லக்கில்
வருவான் ராஜகுமாரனென
விழிமூடா நிலவுப்பெண்!!!
***********************************
போதும் போதும் நிறுத்துன்னு நீங்க கத்தறது கேக்குது... ஒகே ஒகே stopped ..... நன்றி
(இதே கவிதைய... எனக்கு இந்த விருதை ஷேர் பண்ணிகிட்ட LK வுக்கும் அனுப்பிடறேன்...Thanks)
அப்பப்பா கவிதை மழையின்னு சொல்ல கேள்வி அதிங்கேயும் பொழியும்போது மகிழ்ச்சி மழையில் நான் நனைந்துகொண்டிருக்கேன்..
பதிலளிநீக்குஎன் அழைப்பைக்கூட ஏற்று இத்தனை பேர் வந்து கவிதை எழுதிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி,,,
அன்புடன் மலிக்கா