அம்மாவிற்கே!
கவனமாக கரு சுமந்து
கருவறைக்குள் சுவாசம்தந்து
கண்ணயராது விழித்திருந்து
கரைந்தது தேகம்
குழந்தையைக்காண
வளரும்போது வாசல்பார்த்து
வராதபோது மனம் பதபதைத்து
வறுமையையும் பொறுத்திருந்து
வலிகளையும் ஏற்றது உள்ளம்
குழந்தைக்காக
அழகாய் வளர்த்த பிள்ளை
அடுக்கடுகாய் கொடுத்தது தொல்லை
அன்னையின் மனவேதனை
அறிந்தும் செய்தது சோதனை
அதனால் கிடைத்தது
அன்னைக்கு திண்ணை
அன்றுசுமையிலும் சுகம் கண்டாள்
அன்னை
இன்றுசுகத்திலும் சுமையாய் கருதினான்
இளம்பிள்ளை
அம்மாவிற்கே இந்நிலை
அப்படியானால் -இனி
அவன்
எதிர்காலம் எந்நிலை???
அம்மா.
அன்பின் அஸ்திவாரம்
ஆனந்தத்தின் ஆணிவேர்
இன்பத்தின் நிழற்கொடை
ஈகையின் உதாரணம்
உண்மையின் உறைவிடம்
ஊஞ்சலின் தாலாட்டு
எதார்த்தத்தின் நிதர்சனம்
ஏகன் தந்த ஏஞ்சல் வரம்
ஐம்பூதங்களின் அடக்கம்
ஒற்றைப்பூவில் உலகவாசம்
ஓர் உறவில் ஒட்டுமொத்தநேசம்.
இப்படி
அனைத்திலும் அவளே
அவளில்லையேல் எனக்கேது
நிழல் பூமியிலே!
டிஸ்கி// அம்மாவைப்பற்றி கவிதை எழுதத்தலைப்பு முகநூலில்.[facebook]
அம்மாவே ஒருகவிதை அதை எப்படி வார்த்தையில் எழுதுவது ஆனபோதும்,எழுத்துக்களால் இயன்றவரை.
அனைவரும் அம்மாவை போற்றும்போது அதில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகதான் மாற்றுக்கருத்தோடு ஒரு கவிதை.
கண்கூடாக பார்க்கும் விசயங்களை சற்று மனதயக்கத்துடன் எழுத்துக்களால் கவிதையென்ற பெயரில்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
கவிதை ஒவ்வொரு வரியும் நிதர்சனமான உண்மை. எத்தனை சொன்னாலும் அன்னைக்கு இனை இவ்வுலகில் யாருமில்லை.
பதிலளிநீக்குஇரண்டுமே அருமையாய் இருக்கிறது!!
பதிலளிநீக்கு//அனைவரும் அம்மாவை போற்றும்போது அதில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகதான் மாற்றுக்கருத்தோடு ஒரு கவிதை.
பதிலளிநீக்குகண்கூடாக பார்க்கும் விசயங்களை சற்று மனதயக்கத்துடன் எழுத்துக்களால் கவிதையென்ற பெயரில்..//
பெற்றவளை போற்றாதவர்கள் மனிதனே இல்லை. பத்து மாத கஷ்டத்துக்கு விலை இருக்க முடியுமா ? ”உன் அன்னையின் காலடியில் சுவர்கம் உள்ளது ” இந்த ஒரு ஹதிஸ் போதுமே!!!
//அம்மாவிற்கே இந்நிலை
பதிலளிநீக்குஅப்படியானால் -இனி
அவன்
எதிர்காலம் எந்நிலை???///
இத சொல்லித்தான் தெரியனுமா ,
அருமையான கவிதைகள்
//அழகாய் வளர்த்த பிள்ளை
பதிலளிநீக்குஅடுக்கடுகாய் கொடுத்தது தொல்லை//
ரசித்த வரி.. அருமை..
இரண்டும் அருமையான கவிதகைள்
பதிலளிநீக்குநண்பரே
//அன்பின் அஸ்திவாரம்
பதிலளிநீக்குஆனந்தத்தின் ஆணிவேர்
இன்பத்தின் நிலற்குடை
ஈகையின் உதாரணம்
உண்மையின் உறைவிடம்
ஊஞ்சலின் தாலாட்டு
எதார்த்தத்தின் நிதர்சனம்
ஏகன் தந்த ஏஞ்சல் வரம்
ஐபூதங்களின் அடக்கம்
ஒற்றைப்பூவில் உலகவாசம்
ஓர் உறவில் ஒட்டுமொத்தநேசம்.//
உயிர் எழுத்துகளை வைத்து
உயிர் கொடுத்தவளுக்கு வடித்த
உங்கள் கவிதை
உயிர் உள்ளவரை எங்கள் நெஞ்சில் இருக்கும்..
பெத்தவளை மறந்தால் அவன் செத்தவனே!
சரியா சொன்னீங்க,
பதிலளிநீக்குஅம்மா என்பதே கவிதை தான், முழுதாக புரிந்துவிடமுடியாத ஆனால் இரசிக்கக்கூடிய கவிதை
ஒவ்வொரு வரியிலும் தாய்ப்பாசம் தெரிகிறது. அருமையான கவிதை மலிக்கா.
பதிலளிநீக்குஅம்மாவின் கேள்விக்கு பதில் விரைவில் அவன் மகன் வாயிலாக அறிவான்..
பதிலளிநீக்குமல்லிக்கா இரண்டுமே அம்மாவின் வார்த்தைகளாய் அன்போடு அறிவோடு.அருமை.
பதிலளிநீக்கு////கவனமாக கரு சுமந்து.. கரைந்தது தேகம்.. குழந்தையைக்காண///
பதிலளிநீக்குகருவில் தொடங்கி... குழந்தை வரை.. பத்து மாதங்கள்...
தன் சேயை...
சுகமான சுமையாய் சுமந்த...
ஓர் தாயே.. தாய் மட்டுமே அறிவாள்... உணர்வாள்..
அதை அறிந்ததாலும்... உணர்ந்ததாலும்
மேற்சொன்ன வரிகள்.. வைர வரிகளாய்...
////வளரும்போது வாசல்பார்த்து.... வலிகளையும் ஏற்றது உள்ளம்////
ஓர் தாயின் வளர்ப்பு.. எதிர்ப்பார்ப்பு... தவிப்பு.. பதைபதைப்பு...
இவ்வரிகளில் ஓர் தாயின் பரிதவிப்பு பட்டவர்த்தனமாய் தெரிகிறது...
ஓஹோ...! நீங்களும் இப்படித்தான் பதைபதைப்புடனா...?
///அழகாய் வளர்த்த பிள்ளை...கிடைத்தது அன்னைக்கு திண்ணை/////
பாராட்டி.. சீராட்டி.. வளர்த்த அன்னைக்கு.. திண்ணையாவது கொடுத்தானே... அதுக்கே சந்தோஷப்படணும்...
///சுமையிலும் சுகம் கண்டாள்.... சுகத்திலும் சுமையாய் கருதினான்///
இவ்விரு வரிகளில் சுமையையும்... சுகத்தையும் மாற்றிமாற்றிப்போட்டு கலக்கிடீங்க...
///அம்மாவிற்கே இந்நிலை.... அவன் எதிர்காலம் எந்நிலை???///
நல்ல கேள்வி...
அடுத்து... "அம்மா..."
அஸ்திவாரம்.. ஆணிவேர்..... நிலற்குடை.... உறைவிடம்.... தாலாட்டு.... நிதர்சனம்... வரம்.... அடக்கம்.... உலகவாசம்... ஒட்டுமொத்தநேசம்.. இப்படி அம்மாவின் நற்குணங்களை... இயல்பை.. சொல்லி இறுதியில்
///இப்படி அனைத்திலும் அவளே.... அவளில்லையேல் எனக்கேது நிழல் பூமியிலே!//// என சொல்லி "அன்னைக்கு ஓர் கவிதாஞ்சலி" செலுத்திவிட்டீர்...
அதோடு... டிஸ்கியில் அம்மாவே ஒரு கவிதை.... அதை எப்படி வார்த்தையில் எழுதுவது...////
கவிதைக்கு ஓர் கவிதையா...? என கேள்வியும் நீங்களே... பதிலும் நீங்களே... ok...
ஆனால்... ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டீர்கள்...
இக்'கவியரசி'யெனும் கவிதையை படைத்ததும்... வடித்ததும்...
உங்கள் "அன்பு அம்மாவே"...
இறுதியாய்...
"கவனமாக கரு சுமந்து"...
"வலிகளையும் ஏற்றது உள்ளம்"...
"அன்று சுமையிலும் சுகம் கண்டாள்"..
"இன்று சுகத்திலும் சுமையாய் கருதினான்" என்ற வைரவரிகள் மூலம் சிறந்த கவிதையை வடித்துள்ளீர்கள்...
ஒட்டுமொத்தமாய்..
மனதை மகிழவைக்கும்... நெஞ்சை நெகிழவைக்கும்... என்றும் நினைவில் வைக்கும் இந்த "அம்மாவிற்கே! அம்மா" கவிதை
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
நட்புடன்..
காஞ்சி முரளி....
அம்மாவிற்கு அகரக்கவிதை அழகு
பதிலளிநீக்குவிஜய்
இரண்டு கவிதையும் அருமை.
பதிலளிநீக்கு//ஒர் உறவில் ஒட்டு மொத்த தேசம்//
ஆம்,ஆம்.
ஒவ்வொரு வார்த்தைகளும் நல்லாயிருக்கு
பதிலளிநீக்குரொம்ப அழகா,அருமையாக இருக்கு உங்கள் கவிதை...
பதிலளிநீக்குதலைபை மாற்றி விட்டேன்..
இன்றைக்கு விருந்தாமே?
இரண்டும் சூப்பர்
பதிலளிநீக்குஆனால் தலைப்புக்கு
பொருந்துவது இரண்டாவதுதான்
என்று என்னுகிறேன்
//அன்றுசுமையிலும் சுகம் கண்டாள்
பதிலளிநீக்குஅன்னை
இன்றுசுகத்திலும் சுமையாய் கருதினான்
இளம்பிள்ளை//
அழகான ஆழமான வரிகள்....
மலிக்காக்கா,
பதிலளிநீக்குஅம்மா குறித்த கவிதைகள் அருமை.
நல்லா இருக்கு உங்கள் வரிகளில் அழகும் அன்பும் குடிகொண்டு..!
முகப்புத்தகத்தில் எப்படி கவிதையை போஸ்ட் செய்வது? முடிந்தால் எனக்கு Kumar006@gmail.com முகவரிக்கு mail அனுப்பவும்.
நன்றி.
Malikka akka,
பதிலளிநீக்குAmmaavirku kavidhaigal nenjam negizum kavidhaikal.Akka mothers day vaaraththil arumaiyaana kavidhaigalai ammaavirkaaga arppaniththu irukkireerkal.Thanks.
என் கவிதைகளூக்கு தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் தந்துவரும்
பதிலளிநீக்குஎனதன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
தனித்தனியே பதில்கள் போடமுடியாமைக்கு வருந்துகிறேன்.
தொடர்ந்த்து உங்கள் அனைவரின் ஆதரவும் ஊக்கமும் கருத்துக்களாய் எனக்கு என்னாலும் வேண்டும்.
என்றும்
அன்புடன் மலிக்கா