நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்

மரகத பெண்பூவே!
மஞ்சம் தந்த மாமயிலே
தாய் மடித்தேடி வந்த
மஞ்சள் நிலவே
தாய் தந்தையின்
தாரகை மலரே

தேகங்கள்
மையம் கொண்டிட
தேவதையாய் வந்தவளே!
தேன்சிந்தி நின்றவளே!

நீ
பிறந்த பொன்தினம்
பாரெங்கும்
பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி
எங்கள் காதினில் வந்து
அவை ஒலித்ததடி

நீ
வளர்ந்த ஒவ்வொரு நாளும்
வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி
எங்கள்
வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி

வண்ணமயிலே
நீ வாழ்ந்திடு
பல ஆண்டுகாலம்
உன் வாழ்க்கை முழுதும்
சிறந்து விளங்கட்டும்
ஆனந்த விழாக்கோலம்

அன்பு மகளே!
அடுத்தவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது எங்கள்
ஆருயிர் நெஞ்சம்

அன்போடு நீ,,
கிள்ளிக்கொடுத்தால் போதும்
அதுபோதும்
எங்களுக்கு எப்போதும்

இதயங்கள் இணைந்ததால்
இனியசாரல் அடிக்குதடி
உன்னால் -எங்கள்
இதயக்கூட்டுக்குள்
எண்ணங்களெல்லாம்
இனிக்குதடி.........

டிஸ்கி// இந்த கவிதை என் அன்பான நட்பின்
மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.
இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

  1. இந்த கவிதை என் அன்பான நட்பின்
    மகளுடைய பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.
    இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..



    .....அருமை.
    ...... வாழ்த்துக்கள்.
    ...... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அடுதவர் ஆயிரம்கோடி
    அள்ளிக்கொடுத்தாலும்
    அடங்காது எங்கள்
    ஆருயிர் நெஞ்சம்..

    mika mika arumaipaa ungkaLukku engkiruwthuthaan varuthoo
    super super super..

    பதிலளிநீக்கு
  3. அழகாய் வடித்த உங்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்களும் உங்கள் நன்பர்மகளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்..

    கவிதை கலக்கல்

    பதிலளிநீக்கு
  4. //அடுதவர் ஆயிரம்கோடி
    அள்ளிக்கொடுத்தாலும்
    அடங்காது எங்கள்
    ஆருயிர் நெஞ்சம்

    அன்போடு நீ,,
    கிள்ளிக்கொடுத்தால் போதும்
    அதுபோதும்
    எங்களுக்கு எப்போதும்//

    அன்பான வார்த்தைகளில் வரைந்த அழகான கவிதை ரசித்து இரண்டு முறை படித்து இன்புற்றேன்...எண்ணங்கள் மட்டும் இல்லை உங்கள் எழுத்துக்களும் இனிக்குது...வாழ்த்துகள்..மலிக்(கா)

    பதிலளிநீக்கு
  5. //அன்பு மகளே!
    அடுதவர் ஆயிரம்கோடி
    அள்ளிக்கொடுத்தாலும்
    அடங்காது எங்கள்
    ஆருயிர் நெஞ்சம்

    அன்போடு நீ,,
    கிள்ளிக்கொடுத்தால் போதும்
    அதுபோதும்
    எங்களுக்கு எப்போதும்//

    நெகிழ்ச்சியான வரிகள்

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான தாலாட்டு கவிதை.

    அன்பான நட்பின்
    மகளுடைய பிறந்தநாள் எப்பன்னு சொல்லலியே !!

    ஒருவேளை இன்னைக்கி இருந்தால் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. எப்படியும் முதல் வடை கிடைக்காது, பாக்கலாம்...

    பதிலளிநீக்கு
  8. கவிதையும் சூப்பர், கண்சிமிட்டும் சிட்டும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  9. பிறந்த நாள் கொண்டாடுபவர்க்கும்,
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌...

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12 மே, 2010 அன்று 8:20 AM

    //அன்பு மகளே!
    அடுதவர் ஆயிரம்கோடி
    அள்ளிக்கொடுத்தாலும்
    அடங்காது எங்கள்
    ஆருயிர் நெஞ்சம்
    அன்போடு நீ,,
    கிள்ளிக்கொடுத்தால் போதும்
    அதுபோதும்
    எங்களுக்கு எப்போதும்//

    மனதை அல்லும் வரிகள்..
    ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  12. சந்தோஷி மகா12 மே, 2010 அன்று 12:27 PM

    நீ
    பிறந்த பொன்தினம்
    பாரெங்கும்
    பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி
    எங்கள் காதினில் வந்து
    அவை ஒலித்ததடி//

    மல்லி சூப்பர் உனக்கும் அந்த பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்

    நூராண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. சாரதாவிஜயன்12 மே, 2010 அன்று 6:38 PM

    வாழட்டும் பல்லாண்டு வளமோடு நூறாண்டு
    தாய்தந்தை பெயர்சொல்ல
    தரணியில் புகழோடு.

    அன்புமலிக்கா உன்னால்தானிப்படி யெழுத முடியும் நல்ல உள்ளம்மடிம்மா உனக்கு..

    உடல்நிலை எப்படியுள்ளது,
    கவனமாக பார்த்துக்கொள்.

    அன்பு அம்மா
    சாரதா விஜயன்

    பதிலளிநீக்கு
  14. அழகான கவிதை..

    பிறந்தநாளைக்கு இதைவிட வேறு என்ன பரிசு ஈடாகும்
    உங்கள் கவிதையே தினமும்
    வாழ்த்தும்..

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை மல்லி. நானும் சொல்லிக்கிறேன் வாழ்த்துக்களை.

    பதிலளிநீக்கு
  16. அருமை.
    வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்!

    இப்போது உடம்பு எப்படியக்கா இருக்கிறது? நலம்தானே..?

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் என் அன்புகலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

    உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள். அந்த குழந்தைக்கும் அதைனைபெற்றடுத்த பெற்றோக்கும் பெருமை சேர்க்கட்டும்..

    அன்புடன் மலிக்கா..

    பதிலளிநீக்கு
  18. //ஒருவேளை இன்னைக்கி இருந்தால் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்//

    எப்போதிருந்தாளும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தானே ஜெய்லானிஅண்ணாத்தே!
    உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்காக எந்நாளும் பிறந்த நாளே! அக்குழந்தைக்கு..

    //இப்போது உடம்பு எப்படியக்கா இருக்கிறது? நலம்தானே//

    இறைவனின் உதவியால் நலமாகிவிட்டது குமார்.
    தாங்களின் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  19. முதலில்...
    வடிக்க வார்த்தைகளே இல்லை...

    காரணம்...

    என் கவிதை வரிகளில் சொல்ல வேண்டுமானால்...

    "எனக்கு
    இருக்கை
    இங்கில்லை...
    இன்பவானில் சஞ்சரித்துவிட்டேன்....

    இன்னும் அந்த 'இன்பவானில்' இருந்து கீழிறங்கவில்லை.....


    இக்கவிதையின் தலைப்பிலேயே...
    அதாவது "இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்"ளிலேயே கருத்துரைக்கான கரு.... மறைவாய் சூல் கொண்டுள்ளது...

    அது...

    'சாரல்' என்பதே குளிர்ச்சியானது... மகிழ்ச்சியானது...

    அதிலும் 'இதயத்தின்' சாரல் என்பது... வார்த்தைகளில் வடிக்க முடியாத... உணர்தலுக்கு மட்டுமே உரிய ஓர் "மகிழ்ச்சியின் உச்சம்"..

    அந்த 'இதயத்தின் சாரலில்'... அதாவது 'மகிழ்ச்சியின் உச்ச'த்தில்.... 'இனிக்கும் எண்ணங்கள்'... என்றால்...

    எண்ணங்கள் என்றாலே... 'எப்போதுமே இனித்துகொண்டிருக்கும் நினைவலைகள்தான்'...

    இவற்றில் 'இனிக்கும் எண்ணங்கள்' என்றால்.....

    நீங்களே புரிந்துகொள்ளுங்கள்... இந்த.. "இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்" எவ்வளவு இனிமையானவை என்று...


    என்ன கற்பனை...
    என்ன வரிகள்..
    வியப்புக்குள்ளாக்கிய வார்த்தைகள்... சில வரிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன் மலிக்கா..

    ////தேகங்கள்... மையம் கொண்டிட... தேவதையாய் வந்தவளே!"///
    ///நீ... பிறந்த பொன்தினம்.... பாரெங்கும்... பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி///
    ///நீ வளர்ந்த ஒவ்வொரு நாளும்.... வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி.... வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி../////
    ///அன்பு மகளே! .... அடுத்தவர் ஆயிரம்கோடி.... அள்ளிக்கொடுத்தாலும்.... அடங்காது எங்கள் ஆருயிர் நெஞ்சம்////
    ////அன்போடு நீ,,.... கிள்ளிக்கொடுத்தால் போதும்.... அதுபோதும்.... எங்களுக்கு எப்போதும்////
    ///உன்னால் - எங்கள் இதயக்கூட்டுக்குள்.... எண்ணங்களெல்லாம் இனிக்குதடி.........////

    சில வைரவரிகளை மட்டுமே சுட்டிக்காட்டியுளேன்...
    மீதமுள்ள வரிகளும் அற்புதம்... இடமின்மையின் காரணமாய் சுட்டிக்காட்டமுடியவில்லை...


    இறுதியாய்...

    டிஸ்கியில் // இந்த கவிதை என் அன்பான நட்பின் மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.////

    'வாழ்த்து' என்பதே
    உள்மனதில்...
    உள்ளத்தின் உள்ளிருந்து எழும் உணர்வுகளின் வார்த்தை வடிவம்தான்..

    சிலர்... ஏன்...? பலர் நினைகின்றனர்...

    வாழ்துக்கலென்பது .... அட்டைகளிலும்...
    வண்ணவண்ண காகிதம் சுற்றிய பரிசுப் பொருளென்றும்...
    உதட்டில் மட்டுமே உருவாகிய வார்த்தைகள் என்று...


    உணர்வுகளால்
    உந்தப்பட்டு...
    உள்ளத்தின்
    உதடுகளால்...
    உச்சரிக்கப்படும்
    உயிரனைய
    வார்த்தைகளால்
    வடித்தவைதான்
    "வாழ்த்துக்கள்" எனப்படுபவை...

    அப்படிப்பட்ட வாழ்த்துக்கள்தான் இது...

    வார்த்தைகளின் அன்பின்... நட்பின்... வலிமையை பாருங்கள்...

    அதுவும் ஓர் "அன்பான நட்பின் மகள்".....

    இதுவும் "அன்புடன் மலிக்கா"வால் மட்டுமே... இந்த அழகான... அர்த்தமுள்ள... அன்பின் நட்புக்கு... ஓர் மாபெரும் "அங்கீகாரம்" அளிக்க இயலும்...


    கவியரசி மலிக்காவுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...


    நட்புடன்..
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது