நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வைர-முத்து



மண்ணுக்குள் கிடைக்கும் வைரம்
சிப்பிக்குள் கிடைக்கும் முத்து
இவையிரண்டும் இணைந்து அதிசயமாய்
பெண்ணுக்குள்
உருவானது உயிராய்-அது
பேனா பிடித்து எழுதியது
முத்தமிழையும் கலந்த கவிதையாய்

கரிசல்காட்டு மண்ணையும்
கஞ்சி சுமந்த பெண்ணையும்
கல்லூரி கதையையும்
காதல் நெகிழ்வையும்
கவிக்குள் அடக்கும் திறன்
கவிப்பேரரசு என்ற
கருப்பு வைரம்

சங்கத்தமிழும் சிந்துபாடும்
சமுத்திர நதியும் சிணுங்கியோடும்
தங்குதடையின்றி
தண்ணீராய் வந்துவிழும்
தமிழ் வார்த்தைகளின் சரளம்
தங்கத்தமிழனாய்
தாய்மண்ணில் ஊர்வலம்

முத்தமிழும் கலந்த தமிழ்வித்து
தமிழ்தாய் பெற்றடுத்த வைரமுத்து..




டிஸ்கி//  இவர்கள் தமிழ்பேசும்போதும் கவிதை வாசிக்கும்போதும். ஏனோ கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோன்றும்.
தமிழுக்கு அத்தனை ஒரு ஈர்ப்பு, தமிழர்களை மட்டுமல்ல மற்ற மொழிக்காரர்களுடன் உடனே ஒட்டிக்கொள்வதும் தமிழ்மொழிதான்.அன்னைத்தமிழை அடுத்தவர் அழகாய் பேசும்போதும் அதை
அணு அணுவாய் ரசிப்பதில் ஓர் அலாதி இன்பம்தான்..//
 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

26 கருத்துகள்:

  1. சபாஷ்!! கவிஞர் பற்றிய கவிதாயினியின், கவிதை
    அழகு!!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள்...

    இப்போதுதான்... நினைத்தேன்...

    நான் சொல்ல வந்தேன்...
    நீங்கள் செய்துகாட்டி விட்டீர்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  3. கரிசல்காட்டு மண்ணையும்
    கஞ்சி சுமந்த பெண்ணையும்

    சங்கத்தமிழும் சிந்துபாடும்
    சமுத்திர நதியும் சிணுங்கியோடும்

    தாய்மண்ணில் ஊர்வலமா? அல்லது ஊர்வளமா?

    அருமையான வரிகள். கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் அவ‌ருடைய‌ பேச்சு... நானும் பிர‌மித்து இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. அட
    ஒரு
    கவிதை
    இன்னொரு
    கவிதையை
    வர்ணிக்கிறதே!!!

    ஒரு கவிதை காவியமாகிறது.

    பதிலளிநீக்கு
  6. இந்த மண்ணின் மைந்தனின்... கறுப்பு வைரத்தின்... கவிஞனின்..
    பேரருவீயாய்.. நீர்வீழ்ச்சியாய் வந்து விழும் கவிதை வரிகளிலான சொற்பொழிவினை இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கும் முன்பே... அதாவது 1985லேயே.. கல்லூரி விழாவில் கேட்டு ரசித்தவன்...

    அன்றோ எட்டத்தில்......
    இன்றோ கிட்டத்தில்...!

    எனினும்...

    ///கரிசல்காட்டு மண்ணையும்... கஞ்சி சுமந்த பெண்ணையும்.... கல்லூரி கதையையும்... காதல் நெகிழ்வையும்...
    கவிக்குள் அடக்கும் திறன்... கவிப்பேரரசு என்ற கருப்பு வைரம்////
    ///சங்கத்தமிழும் சிந்துபாடும்... சமுத்திர நதியும் சிணுங்கியோடும்.... தங்குதடையின்றி... தண்ணீராய் வந்துவிழும்... தமிழ் வார்த்தைகளின் சரளம்.... தங்கத்தமிழனாய்///

    என்ற இந்த வரிகள்... superb..!

    அது சரி...! "கவிதைக்கே கவிதையா..?"

    விவேக் காமெடியில்...

    பார்த்தீபன் : 'ஒரு கவிதையே.. கவிதையை... கவிதையாய் வடித்திருக்கிறது.."

    விவேக் : அடேடே... நோட் பண்ணுங்கப்பா..! நோட் பண்ணுங்கப்பா..!

    நட்புடன்.. .
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  7. அருவிபோலக் குளிர்ச்சியோடு கொட்டும் தமிழ்.
    அருமையாயிருக்கு மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  8. நான் வியந்து பார்க்கும் முதலாவது அதிசயம் கவிஞர் வைரமுத்து அந்த கவி நிலாவின் அருகே இருந்து கண்சிமிட்டாமல் ரசிக்கும் கோடி நச்சதிரங்களில் நானும் ஒருவன்...

    அவருக்கு மல்லி அக்கா-வின் இந்த அழகு பாமாலை அழகோ அழகு....

    நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா...

    பதிலளிநீக்கு
  9. கவிதைக்கே கவிதையா?
    அசத்துங்க...

    பதிலளிநீக்கு
  10. see this
    http://seasonsnidur.wordpress.com/2009/12/31/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  11. மிக அருமை.... அருமை... அருமை... அருமை.. முடிந்தால் வைரமுத்துவுக்கு இத்னை அனுப்புங்களேன்...

    பதிலளிநீக்கு
  12. வைரமுத்துவின் கவிதையும்,பேச்சு நயமும் தமிழுக்கு அழகு!

    இடிப்பாரில்லாத அரசனுக்கு புலவனாய் இருப்பதும் தமிழுக்கு அழுக்கு.

    பதிலளிநீக்கு
  13. திருச்சி சையது16 மே, 2010 அன்று 10:16 PM

    கவியரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு தமிழச்சி பிரியத்தோடு தன்னிடமிருந்த வைரத்தையும், முத்தையும் கொண்டு கோர்த்த அழகிய மாலை இது!

    வாழ்த்துக்களுடன்...
    திருச்சி சையது.

    பதிலளிநீக்கு
  14. திருமதி. சாபிரா சையது.16 மே, 2010 அன்று 10:19 PM

    ஒரு
    கவிதை
    இன்னொரு
    கவிதையை
    வர்ணிக்கிறதே!!!

    ஒரு கவிதை காவியமாகிறது.


    - ஜெய்லானியின் கவிதை ரசிக்க வைத்தது! ரொம்ம்ம்ப நன்னாயிருக்கு...

    திருமதி. சாபிரா சையது.

    பதிலளிநீக்கு
  15. அருமையான வரிகள். கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. இவர்கள் தமிழ்பேசும்போதும் கவிதை வாசிக்கும்போதும். ஏனோ கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோன்றும்.
    தமிழுக்கு அத்தனை ஒரு ஈர்ப்பு,
    //////////

    ஆமாம்

    பதிலளிநீக்கு
  17. வைரமுத்து பாணியிலேயே எழுதி அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
    http://jaganathank.blogspot.com/2010/05/blog-post.html
    இது ​வைரமுத்து பற்றி நான் எழுதிய பதிவு - தங்கள் கவனத்துக்கு.

    பதிலளிநீக்கு
  18. ஆஹா நான் லேட்டா வந்துட்டேனே!
    என்ன ஆச்சர்யம்!
    வைரத்தை பற்றி
    தங்கம் வர்ணிகிறதே!

    பதிலளிநீக்கு
  19. வைரத்தை பற்றி
    தங்கம் வர்ணிகிறதே!

    Super Maha(Vimarsana)rajaa!

    - Shamir

    பதிலளிநீக்கு
  20. அருமை இன்ரு தங்கம் நாலைய் வைரம் வாழ்க இன்னும் வழறட்டும்

    பதிலளிநீக்கு
  21. உங்களுக்கு "நன்றி விருது" கொடுத்துள்ளேன், வந்து பெற்று
    கொள்ளவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  22. கவிப்பேரரசைவை பற்றி எனக்குள்தோன்றிய எண்ணமே கவிதையாய் வந்துவிட்டது.

    அவர்களின் கவிதைக்கு முன்னே என்னையெல்லாம் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது.

    என்னையும் மதித்து என்கவிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்துவரும் என் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவள்.

    அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது