நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாதுமாகி…...

அனைத்து அன்னையர்க்கும்
[அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
 என்மனமார்ந்த
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!



அன்னையவள் மடிதனிலே
                              அகிலமதை கண்டேன்
அதையுணர்ந்த போதினிலே 
                    மனம் மகிழ்ந்து கொண்டேன்
நான் பிறக்கும் வேளைதனில்
                       வேதனைகள் கொண்டாள்
நாள்தோறும் எனக்காக
                       கண்விழித்து நின்றாள்

தாயவளாள் மட்டுமே -
                தன்னிகரற்ற அன்பைத் தரமுடியும்
தந்தையின் அன்பினையும்
                        சேர்த்து தர இயலும்
அகிலத்தை காட்டிடவே
                        அன்னையவள் வந்தாள்
அனுதினமும் நினைதிடவே
                       அன்னையென ஆனாள்
அன்னையவள் நெஞ்சினிலே
                       அன்பொழுகக் கண்டேன்
அணைத்து எனை நிற்கயிலே
                      அசையாது நின்றேன்
நான் வளரும் வேளைதனில்
                       வேலியாய் நின்றாள்
நம்பிக்கை ஊட்டியே
                    எனைக் காத்துக் கொண்டாள்

காயங்கள் நான்படவே
                           ரணமாகிப் போனாள்
கண்ணுக்குள் எனைத்தாங்கி
                   கலங்காமல் பார்த்தாள்
காலங்கள் கடந்திடவே
                     நான் தாயாகிப் போனேன்
கண்ணிமைக்காமல் அப்போதும்
                      எனைப்பார்த்துக்கொண்டாள்
அன்னையவள் காலடியில்
                        சொர்க்கமதை உணர்ந்தேன்
அதையுணர்ந்த போதினிலே
                       அகிலத்தை மறந்தேன்
யாதுமாகி  எனக்காக
                      தன் வாழ்க்கை வாழ்ந்தாள்
சேயாகி நானுமதை
                    உணர்ந்திடவே வைத்தாள்

தாயாக  எனைத்தாங்கி
                  செய்தஅத்  தனையும்
தள்ளாட்டம் வரும்
                வயதில் முடியாமல் போகும்
சேயாக நானிருந்த போதும் –
              செய்வேன் பணிவிடைகள் அத்தனையும்
தாயாகி நானும்....

டிஸ்கி// ராகத்தோடு படியுங்கள் ரம்மியமாய் இருக்கும்.
ஒருவார உடல் இன்னல்களுக்கு பின் புத்துயிர்தந்தது அன்னையை நினைத்து எழுதிய கவிதை..
இன்று ஒருநாள் போதுமா? அன்னையை வாழ்த்த!
வாழும் காலம்தோறும் மறந்திடாத பாசம் அன்னையின் அன்பானநேசம் மட்டுமே!
அது சரி தந்தையர்கள் தினம் எப்போது?//

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

33 கருத்துகள்:

  1. உங்க‌ளுக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்...

    பதிலளிநீக்கு
  2. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //தாயாக எனைத்தாங்கி செய்தஅத் தனையும்
    தள்ளாட்டம் வரும் வயதில் முடியாமல் போகும்
    சேயாக நானிருந்த போதும் –
    செய்வேன் பணிவிடைகள் அத்தனையும்
    தாயாகி நானும்....///

    ந‌ல்ல‌ வ‌ரிக‌ள்.. இதைதான் எதிர்பார்க்கிறேன்.. இந்த‌ கொண்டாட்ட‌ங்க‌ளில் ப‌ல‌னாய் ஒரு சில‌ முதியோர் இல்ல‌ங்க‌ள் மூடினாலும் ச‌ந்தோச‌மே..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள்.



    //அது சரி தந்தையர்கள் தினம் எப்போது //

    பல நாடுகளிலும் பல தேதிகளில் கொண்டாடப்படுகின்றது.ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகின்றது.

    அம்மா தினமோ,அப்பா தினமோ...இதிலெல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா தினமும் அன்னையர் தினமே :)

    பதிலளிநீக்கு
  5. //அனைத்து அன்னையர்க்கும்
    [அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
    என்மனமார்ந்த
    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!//

    மலீக்காக்காஆஆஆஆஆ அடுத்த மாசம் மூனாம் தேதி தந்தையர் தினம் வருது. அப்ப அன்னையரையும் சேத்துக்கோங்க மறக்காம.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பாட்டு நடையில் ஒரு கவிதை. எல்லா வரிகளும் அருமை

    பெற்று வளர்த்த தாய்க்கு ஒரு நாள் மட்டுமா ?. ....எலேய் முதல்ல சொம்ப எடுத்து வையில..கூட்ல பஞ்சாயத்த...கூப்பிடுல நாட்டான்மைய....

    பதிலளிநீக்கு
  7. கவிதை நல்லா இருக்கு, எல்லா தினமும் எல்லோருக்கும்!!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் அன்னையர்
    தின நல்வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  9. முதலில்...
    தங்களுக்கும்...
    வலைதள நண்பர்களுக்கும்...
    "அன்னையர்தின வாழ்த்துக்கள்"

    ///அனைத்து அன்னையர்க்கும் [அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
    என்மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்//

    that's மலிக்கா... இதுக்கே ஓர் சபாஷ்....!

    ///தள்ளாட்டம் வரும் வயதில் முடியாமல் போகும்
    சேயாக நானிருந்த போதும் – செய்வேன் பணிவிடைகள்
    அத்தனையும் தாயாகி நானும் ///

    மேற்சொன்ன வரிகள் நடைமுறையில் நடக்குமானால்...

    "முதியோர் இல்லங்கள்
    முளைக்காமல் இருக்கும்...

    இருக்கும் - முதியோர்
    இல்லங்களெல்லாம்....
    இல்லாமல் மறைந்தே போகும்....

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  10. கவிஞர் ஆக இருந்த நீங்கள் பாடலாசிரியராகிவிட்டீர்...
    இன்னும் என்னனென்ன...?

    ம்....ம்.. நடக்கட்டும்..

    ராகத்துடன் பாடலில் ஓர் கவிதை..
    பாடலும் சூப்பர்...
    வரிகளும் சூப்பர்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி......

    பதிலளிநீக்கு
  11. அன்னையர் தின வாழ்த்துக்கள்.
    கவிதை அருமை...

    ஒவ்வொரு தாயும்
    இறந்தே பிறக்கிறால்
    ஒவ்வோர் பிரசவத்தின்
    போதும்..
    தாய்மை நிச்சயம் போற்றப்படவேண்டியதே....

    ரியாஸ்

    பதிலளிநீக்கு
  12. எல்லா அன்னையரையும் நினைக்க வைத்திருக்கிறீர்கள் மல்லிக்கா.
    வரிகள் அத்தனையும்
    உண்மையின் உணர்வு.

    எனக்குப் பாடத் தெரிலப்பா.

    உங்களுக்கும் கூட வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  13. அன்னையவள் காலடியில்
    சொர்க்கமதை உணர்ந்தேன்]]


    நெகிழ்வான உண்மை.

    தின(மும்) வாழ்த்துகள் அன்னையர்கட்கு

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் தோழி . இப்பொழுது உங்களின் உடல் நிலை எப்படி இருக்கிறது ?.
    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய இயலும் .
    முதலில் உங்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் . மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை. அன்னையர் தின வாழ்த்துக்கள் மலிக்கா.

    உடல் நலம் கவனியுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  16. ஆஹா...அருமை அக்கா சும்மா படிச்சேன் சூப்பரா இருந்துச்சு...
    ராகத்தோட படிசேன் ரம்யமா இருந்துச்சு...வார்த்தைகள் இல்லாததால் வாழ்த்துக்களை விட்டு செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  17. அன்னையர்தின வாழ்த்துகள்

    மலிக்கா

    வார்த்தைகள் ஏதும் வரவில்லை
    நான் மவுனமாய் நிற்கிறேன்....

    அருமை.....

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப அருமையான கவிதை. கவிதை உங்களிடம் நீரூற்று தான்.

    பதிலளிநீக்கு
  19. நல்லாயிருக்குங்க

    தாய்மையின் சிறப்பு எவ்வளவு சொன்னாலும் சொல்லுக்கு மதிப்பில்லை

    பதிலளிநீக்கு
  20. நல்ல அர்த்தமுள்ள கவிதை

    அன்னையர் தின வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  21. உங்கள் கவிதைக்கு , தலை வணங்குகிறேன் , அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  22. நெகிழ்வான கவிதை.வாழ்த்துக்கள் மலிக்கா.இப்போது உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது?

    உங்களுக்கு அனுப்பிய மறுமொழி தவறுதலாய் மகளிர் சக்திக்கு போய்விட்டது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  23. அன்னையின் உயர்வுகளை,
    உரக்கச் சொன்னது,
    இக்கவிதை!

    பதிலளிநீக்கு
  24. நாடோடி கூறியது...
    //தாயாக எனைத்தாங்கி செய்தஅத் தனையும்
    தள்ளாட்டம் வரும் வயதில் முடியாமல் போகும்
    சேயாக நானிருந்த போதும் –
    செய்வேன் பணிவிடைகள் அத்தனையும்
    தாயாகி நானும்....///

    ந‌ல்ல‌ வ‌ரிக‌ள்.. இதைதான் எதிர்பார்க்கிறேன்.. இந்த‌ கொண்டாட்ட‌ங்க‌ளில் ப‌ல‌னாய் ஒரு சில‌ முதியோர் இல்ல‌ங்க‌ள் மூடினாலும் ச‌ந்தோச‌மே!

    தாய்மை மதிக்கத்தெரியாததின் விளைவே முதியோர் இல்லைங்களில் தாய்மார்களின் தவிப்புகள்.

    நன்றி ஸ்டீபன்.

    பதிலளிநீக்கு
  25. S Maharajan கூறியது...
    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
    //

    மிக்க நன்றி மகராஜன்.



    நாடோடி கூறியது...
    உங்க‌ளுக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்...//

    மிக்க நன்றி ஸ்டீபன்

    9 மே, 2010 8:35 am

    பதிலளிநீக்கு
  26. எம்.எம்.அப்துல்லா கூறியது...
    வாழ்த்துகள்.



    //அது சரி தந்தையர்கள் தினம் எப்போது //

    பல நாடுகளிலும் பல தேதிகளில் கொண்டாடப்படுகின்றது.ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகின்றது.

    அம்மா தினமோ,அப்பா தினமோ...இதிலெல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா தினமும் அன்னையர் தினமே :)

    கண்டிப்பாக எல்லாதினம்மும் அன்னையர்தினமே. ஆனால் அதையும் சிலருக்கு ஞாபகப்படுத்தப்படும் காலமாய்போய்விட்டதையெண்ணி வருந்துகிறேன்.

    மிக்க நன்றி அப்துல்லாஹ்.


    ஜெய்லானி கூறியது...
    //அனைத்து அன்னையர்க்கும்
    [அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
    என்மனமார்ந்த
    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!//

    மலீக்காக்காஆஆஆஆஆ அடுத்த மாசம் மூனாம் தேதி தந்தையர் தினம் வருது. அப்ப அன்னையரையும் சேத்துக்கோங்க மறக்காம.//

    சேத்துப்போம் எப்போதும் சேத்துப்போம்.

    பதிலளிநீக்கு
  27. ஜெய்லானி கூறியது...
    நல்ல பாட்டு நடையில் ஒரு கவிதை. எல்லா வரிகளும் அருமை

    பெற்று வளர்த்த தாய்க்கு ஒரு நாள் மட்டுமா ?. ....எலேய் முதல்ல சொம்ப எடுத்து வையில..கூட்ல பஞ்சாயத்த...கூப்பிடுல நாட்டான்மைய....//

    எலே யாருலே அது நாட்டமைக்கு சொல்லுலே இது மறந்தவகளுக்கு மட்டுந்தேன்னு..

    மிக்க நன்றிங்கண்ணா




    SUFFIX கூறியது...
    கவிதை நல்லா இருக்கு, எல்லா தினமும் எல்லோருக்கும்..//

    பாதியோட நிக்குதேண்ணா.
    மிக்க நன்றி ஷபியண்ணா..

    பதிலளிநீக்கு
  28. Chitra கூறியது...
    HAPPY MOTHER'S DAY!//

    தேங்ஸ் சித்ராமேடம்.


    அண்ணாமலை..!! கூறியது...
    அனைவருக்கும் அன்னையர்
    தின நல்வாழ்த்துகள்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாமலை..

    பதிலளிநீக்கு
  29. காஞ்சி முரளி கூறியது...
    முதலில்...
    தங்களுக்கும்...
    வலைதள நண்பர்களுக்கும்...
    "அன்னையர்தின வாழ்த்துக்கள்"

    ///அனைத்து அன்னையர்க்கும் [அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
    என்மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்//

    that's மலிக்கா... இதுக்கே ஓர் சபாஷ்....!//

    சபாஷை பெற்றுக்கொண்டேன்.

    ///தள்ளாட்டம் வரும் வயதில் முடியாமல் போகும்
    சேயாக நானிருந்த போதும் – செய்வேன் பணிவிடைகள்
    அத்தனையும் தாயாகி நானும் ///

    மேற்சொன்ன வரிகள் நடைமுறையில் நடக்குமானால்...

    "முதியோர் இல்லங்கள்
    முளைக்காமல் இருக்கும்...

    இருக்கும் - முதியோர்
    இல்லங்களெல்லாம்....
    இல்லாமல் மறைந்தே போகும்....

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    நிச்சியமாக முரளி. அவரவர்களுக்கு அந்தந்த நிலை ஏற்படுமாயின் அவர்கள் இப்படி செய்வார்களா?
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அதுவும் நிச்சயமே!

    மிக்க நன்றி முரளி..


    //காஞ்சி முரளி கூறியது...
    கவிஞர் ஆக இருந்த நீங்கள் பாடலாசிரியராகிவிட்டீர்...
    இன்னும் என்னனென்ன...?

    ம்....ம்.. நடக்கட்டும்..

    ராகத்துடன் பாடலில் ஓர் கவிதை..
    பாடலும் சூப்பர்...
    வரிகளும் சூப்பர்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி......//

    ஏதோ எனக்குள் எழுவதை
    இங்கு கொட்டுகிறேன்.
    அதை ஏற்றுக்கொண்டு எனக்கு ஊக்கம்தரும் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லைமட்டும் தருவது போதுமானதாக இல்லை.
    இருந்தாலும் வேறுவழியில்லை

    ஆதலால் நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  30. Riyas கூறியது...
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.
    கவிதை அருமை...

    ஒவ்வொரு தாயும்
    இறந்தே பிறக்கிறால்
    ஒவ்வோர் பிரசவத்தின்
    போதும்..
    தாய்மை நிச்சயம் போற்றப்படவேண்டியதே....

    ரியாஸ்//

    அதையுணர்ந்தால் போதும் ரியாஸ்.
    பிள்ளைகள்.

    மிக்க நன்றி ரியாஸ்



    /ஹேமா கூறியது...
    எல்லா அன்னையரையும் நினைக்க வைத்திருக்கிறீர்கள் மல்லிக்கா.
    வரிகள் அத்தனையும்
    உண்மையின் உணர்வு.

    எனக்குப் பாடத் தெரிலப்பா.

    உங்களுக்கும் கூட வாழ்த்துக்கள்..

    அதனாலென்ன தோழி. உங்களுக்காக நான் பாடுகிறேன். ஆனா மெதுவாதான் பாடுவேன் இல்லையின்னா அல்லாரும் ஓடிடுவாங்க..

    மிக்க நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  31. நட்புடன் ஜமால் கூறியது...
    அன்னையவள் காலடியில்
    சொர்க்கமதை உணர்ந்தேன்]]


    நெகிழ்வான உண்மை.

    தின(மும்) வாழ்த்துகள் அன்னையர்கட்கு

    மிகுந்த மகிழ்ச்சி ஜமால்காக்கா.


    //♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    வாழ்த்துக்கள் தோழி . இப்பொழுது உங்களின் உடல் நிலை எப்படி இருக்கிறது ?.
    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய இயலும் .
    முதலில் உங்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் . மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி !//

    நட்பான பாசத்துக்கு மிக்க மகிழ்ச்சி பனித்துளி.

    பனிதுளிபோன்ற பாசம் அன்னையுடையது அதை அடைந்தோருக்கு அருளே!

    மிக்க நன்றி சங்கர் அன்பான கருத்துக்கும் அக்கரைக்கும்.

    9 மே, 2010 7:08 pm

    பதிலளிநீக்கு
  32. ராமலக்ஷ்மி கூறியது...
    அருமையான கவிதை. அன்னையர் தின வாழ்த்துக்கள் மலிக்கா.

    உடல் நலம் கவனியுங்கள்:)!

    மிக்க மகிழ்ச்சி ராமுமேடம்.
    மிக்க நன்றிமா


    //seemangani கூறியது...
    ஆஹா...அருமை அக்கா சும்மா படிச்சேன் சூப்பரா இருந்துச்சு...
    ராகத்தோட படிசேன் ரம்யமா இருந்துச்சு...வார்த்தைகள் இல்லாததால் வாழ்த்துக்களை விட்டு செல்கிறேன்...

    வாழ்த்துக்களை அன்போடு ஏற்றுக்கொண்டேன் கனி.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது