நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் மனசு

[facebook. கவிதைகள்.]

                                                              /நன்றி கூகுள்/

என்னிடமில்லை -நான்
என்று உனைக்கண்டேனோ-அன்றே
என்மனசு எனையறியாமல்
உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக்குள் சென்று
உறைந்துவிட்டது

இனி

என் மனசுக்கென்று
எதுமில்லை
எல்லாம் உன்வசமே
என்னில் நீயாய்
உன்னுள் நானாய்
உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
உயிருக்குள் உதிரமாய் ஓடியது

என்மனசும் உன்னிலும்
உன்மனதும் என்னிலும்...

டிஸ்கி// என்மனசு அல்லது என் மனது. தலைப்புக்கு கவிதை எழுதச்சொன்னார்கள். நாம ரெண்டையும் இணைச்சு எழுதியிருக்கோம்
சரியா?. சும்மா சொல்லிட்டுப்போங்க எப்புடி இருக்குன்னு. சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

31 கருத்துகள்:

  1. //என்னில் நீயாய்
    உன்னுள் நானாய்
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது//

    இந்த வரிகள்தான் மிக மிக அருமை . சீக்கிரம் சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்
    அருமையா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  2. படமும் கவிதையும் அருமை. பாராட்டுக்கள்! கவிதை முகத்தில் கலக்குறீங்க.....

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள், உள்ளத்தை தொட்ட வரிகள். வாழ்த்துக்கள்! நன்றிகள்!

    நாள் தோறும் www.tamilsworld.net என்ற இணயத் தளத்தைப் பார்க்கவும். உங்கள் ஆக்கங்களை பிரசுரிக்க விரும்பினால் tamilsworld@hotmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

    நன்றியுடன்

    சிவா

    பதிலளிநீக்கு
  4. //என் மனசுக்கென்று
    எதுமில்லை
    எல்லாம் உன்வசமே
    என்னில் நீயாய்
    உன்னுள் நானாய்
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது//

    அருமையான வரிகள்
    இதை படித்தவுடன்
    "செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
    அன்புடன் இந்த நெஞ்சங்கள்(மலிக்கா
    & மலிக்கா மச்சான்)
    கலந்து இருகின்றனவே.
    இப்படி தாங்க எனக்கு சொல்ல தோணியது.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் கவிதை...!
    அதிலும் 'உள்மனதோடு உறைந்து விட்டது உன்மனசு ' என்ற "மனசும்"

    அதோடு..

    'ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து.. உயிராய்.. உதிரமாய்.. " "மனதும்"....

    சிறந்த.. சிறிய.. அர்த்தங்கள் பொதிந்த கவிதை(கள்)...

    பாராட்டுக்குரிய வரிகளடங்கிய அழகான கவிதைகள்..

    நட்புடன்..
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....

    பதிலளிநீக்கு
  7. சிகரதை நோக்கி நடை ஆரம்பிச்சிருச்சி !!! விரைவில் அதை தொட வாழ்த்து மற்றும் துவாக்கள்.

    பதிலளிநீக்கு
  8. //உன்மனதோடு இணைந்து
    உள்ளத்துக்குள் சென்று
    உறைந்துவிட்டது//

    டீப் ஃபிரீஜ் அருமையான வர்னனை. படிக்கும் போதே ஜில்லுன்னு இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. ரெம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌..

    பதிலளிநீக்கு
  10. உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது

    என்மனசும் உன்னிலும்
    உன்மனதும் என்னிலும்...

    யாருக்கு? காதலர்களுக்கு சரியா?

    பதிலளிநீக்கு
  11. என் மனசுக்கென்று
    எதுமில்லை
    எல்லாம் உன்வசமே
    என்னில் நீயாய்
    உன்னுள் நானாய்
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது]]


    இது ரொம்ப இரசிச்சது ...

    பதிலளிநீக்கு
  12. மனதின் பரிமாணம் பலவிதம்,அதில் இதுவும் ஒரு விதம்.விரைவில் சிகரத்தின் உச்சியை அடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. ////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்///

    இப்பத்தான் பார்க்குறேன்.....

    முதலில்
    மணல்மேடு...
    குன்று....
    மலை.....
    மகாமலை.....
    பின்புதான்..... சிகரம்...!
    ஓகே.. சிகரத்த எட்டிப்பார்தாச்சு....!

    அடுத்து...
    வானமே எல்லையா....!

    அப்புறம்...
    விண்ணைத் தாண்டியா..? மலிக்கா...!

    வாழ்த்துக்கள்... சகோதரி...
    காஞ்சி முரளி......

    பதிலளிநீக்கு
  14. ////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்///

    இப்பத்தான் பார்க்குறேன்.....

    முதலில்
    மணல்மேடு...
    குன்று....
    மலை.....
    மகாமலை.....
    பின்புதான்..... சிகரம்...!
    ஓகே.. சிகரத்த எட்டிப்பார்தாச்சு....!

    அடுத்து...
    வானமே எல்லையா....!

    அப்புறம்...
    விண்ணைத் தாண்டியா..? மலிக்கா...!

    வாழ்த்துக்கள்... சகோதரி...
    காஞ்சி முரளி......

    பதிலளிநீக்கு
  15. அருமையான வரிகள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. //என்மனசு எனையறியாமல்
    உன்மனதோடு இணைந்து
    உள்ளத்துக்குள் சென்று
    உறைந்துவிட்டது//

    மிக ரசித்தவரிகள் அழகு அக்கா...\
    சிகரத்தை தொட்டுவிட துடிக்கும் அக்காக்கு தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  17. மனசோடு பதியும் வரிகள் மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப நல்லாயிருக்கு...

    கவிதையும் போட்டோவும்...

    கலக்குங்க அக்கா.

    பதிலளிநீக்கு
  19. //என்னில் நீயாய்
    உன்னுள் நானாய்
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது//


    ம்ம்...ஓடியது கவிதை!!

    பதிலளிநீக்கு
  20. என்னில் நீயாய்
    உன்னுள் நானாய்
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது//

    இந்த வரிகள்தான் மிக மிக அருமை . சீக்கிரம் சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்
    அருமையா இருக்குங்க.//

    அன்பான கருத்துக்கும் பாசமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி கார்த்திக்..




    //Chitra கூறியது...
    படமும் கவிதையும் அருமை. பாராட்டுக்கள்! கவிதை முகத்தில் கலக்குறீங்க.....//

    பாராட்டியதில் மகிழ்ந்தது மனது. எல்லாம் உங்களைபோன்றோரின் பாரட்டும் வாழ்த்தும்தான் சித்ராமேடம்.

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  21. அருமையான வரிகள், உள்ளத்தை தொட்ட வரிகள். வாழ்த்துக்கள்! நன்றிகள்!

    நாள் தோறும் www.tamilsworld.net என்ற இணயத் தளத்தைப் பார்க்கவும். உங்கள் ஆக்கங்களை பிரசுரிக்க விரும்பினால் tamilsworld@hotmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

    நன்றியுடன்

    சிவா..//

    வாங்க சிவா வாங்க உங்க அருமையான கருத்துக்கு மிக்க நன்றி.

    நிச்சயம் வந்து பார்க்கிறேன் சிவா.. கொஞ்சம் வேலைபழு நீங்கியதும்.படைப்புகளும் தர முயற்சிக்கிறேன்.




    S Maharajan கூறியது...
    //என் மனசுக்கென்று
    எதுமில்லை
    எல்லாம் உன்வசமே
    என்னில் நீயாய்
    உன்னுள் நானாய்
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது//

    அருமையான வரிகள்
    இதை படித்தவுடன்
    "செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
    அன்புடன் இந்த நெஞ்சங்கள்(மலிக்கா
    & மலிக்கா மச்சான்)
    கலந்து இருகின்றனவே.
    இப்படி தாங்க எனக்கு சொல்ல தோணியது.//

    அதே அதே அதேதான் .அவுகளை நினைத்துதானே எழுதினேன் மகராஜன்.

    மகிழ்ச்சிகலந்த நன்றி மகா

    பதிலளிநீக்கு
  22. காஞ்சி முரளி கூறியது...
    சூப்பர் கவிதை...!
    அதிலும் 'உள்மனதோடு உறைந்து விட்டது உன்மனசு ' என்ற "மனசும்"

    அதோடு..

    'ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து.. உயிராய்.. உதிரமாய்.. " "மனதும்"....

    சிறந்த.. சிறிய.. அர்த்தங்கள் பொதிந்த கவிதை(கள்)...

    பாராட்டுக்குரிய வரிகளடங்கிய அழகான கவிதைகள்..

    நட்புடன்..
    காஞ்சி முரளி....

    பாராட்டுக்கலைகூட படிப்படியாக சொல்லும் விதமே அழகுதான் முரளி.
    ஒருமனிதனுக்கு மிகவும் அவசியம் சிறு தூண்டுதல் அதை பெற்றமனிதன்
    அதிர்ஸ்டசாலியே அந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள்தான்.

    இத்தனை நட்புகளின் வாயிலாக அது கிடைக்கும்போது களிமண்கூட கோபுரமாக உதவும்..

    மிக்க நன்றி முரளி..



    Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    கவிதை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....

    அட்டகாசம் அருமையாக அருமையை
    அள்ளி வழங்கிட்டீங்க அதனால்தான் நீங்க ஷேக் கோ

    பதிலளிநீக்கு
  23. ஜெய்லானி கூறியது...
    சிகரதை நோக்கி நடை ஆரம்பிச்சிருச்சி !!! விரைவில் அதை தொட வாழ்த்து மற்றும் துவாக்கள்.//

    சிகரத்தை நோக்கிய பயணமே அண்ணாக்களின் தூண்டுதலின் பேரில்தான் ஆகையால் எவ்வெற்றிப்பெற்றாலும் அவ்வெற்றியில் அனைவருக்கும் பங்குண்டு.

    வாழ்த்துக்கும் துஆக்களுக்கும் மிகுந்த சந்தோஷம் ஜெய்லானி..




    ஜெய்லானி கூறியது...
    //உன்மனதோடு இணைந்து
    உள்ளத்துக்குள் சென்று
    உறைந்துவிட்டது//

    டீப் ஃபிரீஜ் அருமையான வர்னனை. படிக்கும் போதே ஜில்லுன்னு இருக்கு.//

    மச்சானல்லவா அதான் உறைஞ்சிபோயிட்டாக அண்ணாத்தே!


    //நாடோடி கூறியது...
    ரெம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌..//

    மிக்க நன்றி ஸ்டீபன்

    பதிலளிநீக்கு
  24. "மனசு" நன்றாய் ஒட்டிக்கொள்கிறது.

    பதிலளிநீக்கு
  25. என்னிடமில்லை -நான்
    என்று உனைக்கண்டேனோ-அன்றே
    என்மனசு எனையறியாமல்
    உன்மனதோடு இணைந்து
    உள்ளத்துக்குள் சென்று
    உறைந்துவிட்டது

    மனசுன்னு சொன்னா
    இப்புடியிம் எழுதலாமா நல்லாருக்கு மலிக்கா........

    பதிலளிநீக்கு
  26. malar கூறியது...
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது

    என்மனசும் உன்னிலும்
    உன்மனதும் என்னிலும்...

    யாருக்கு? காதலர்களுக்கு சரியா?//

    காதலர்களுக்கா ஏன் கணவருக்காக இருக்கக்கூடாதா? இது என் கணவரான காதலனுக்காக. எப்புடி மலர்..




    நட்புடன் ஜமால் கூறியது...
    என் மனசுக்கென்று
    எதுமில்லை
    எல்லாம் உன்வசமே
    என்னில் நீயாய்
    உன்னுள் நானாய்
    உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
    உயிருக்குள் உதிரமாய் ஓடியது]]


    இது ரொம்ப இரசிச்சது ...//

    மிக்க மகிழ்ச்சி ஜமால்காக்கா..

    பதிலளிநீக்கு
  27. asiya omar கூறியது...
    மனதின் பரிமாணம் பலவிதம்,அதில் இதுவும் ஒரு விதம்.விரைவில் சிகரத்தின் உச்சியை அடைய வாழ்த்துக்கள்.

    ஆமாம் ஆசியாக்கா
    வாழ்த்துக்களுக்க்கு மிக்க நன்றிக்கா..


    /காஞ்சி முரளி கூறியது...
    ////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்///

    இப்பத்தான் பார்க்குறேன்.....

    முதலில்
    மணல்மேடு...
    குன்று....
    மலை.....
    மகாமலை.....
    பின்புதான்..... சிகரம்...!
    ஓகே.. சிகரத்த எட்டிப்பார்தாச்சு....!//

    இப்பதான் எட்டி எட்டி பார்க்கமுயற்சிக்கிறேன் முரளி.
    தொட்டுவிடலாமுன்னு எண்ணம் வைத்துவிட்டால் அதோடு இறைவனின் நாட்டமும் சேர்ந்திருந்தால். அப்புறம் அப்பீலேது..இல்லையா முரளி

    //அடுத்து...
    வானமே எல்லையா....!

    அப்புறம்...
    விண்ணைத் தாண்டியா..? மலிக்கா...!

    வாழ்த்துக்கள்... சகோதரி...
    காஞ்சி முரளி......

    சகோதரா தங்களின் வாழ்வான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  28. அக்பர் கூறியது...
    மிக அருமை மலிக்கா.//


    மிக்க நன்றி அக்பர்..


    //Mohamed G கூறியது...
    அருமையான வரிகள், வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முகம்மத்


    ராஜவம்சம் கூறியது...
    பிரசண்ட் சிஸ்டர்

    ஆக உள்ளேன் டீச்சர் அப்படியா!

    பதிலளிநீக்கு
  29. //என்மனசு எனையறியாமல்
    உன்மனதோடு இணைந்து
    உள்ளத்துக்குள் சென்று
    உறைந்துவிட்டது//

    மிக ரசித்தவரிகள் அழகு அக்கா...\
    சிகரத்தை தொட்டுவிட துடிக்கும் அக்காக்கு தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..//

    என் அன்பான தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.




    /ஹேமா கூறியது...
    மனசோடு பதியும் வரிகள் மல்லிக்கா.

    மிக்க நன்றி தோழி


    /சே.குமார் கூறியது...
    ரொம்ப நல்லாயிருக்கு...//

    மிக்க நன்றி குமார்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது