நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பதிவுலகில் நான் கற்றதும்! பெற்றதும்!...


இந்த பதிவுலகில் வந்த கொஞ்சகாலத்தில் அதாவது 9.மாதத்தில்அதில் 3, மாதம் வெளியுலகம் அறியாமலே. 6 மாதங்களாகத்தான் இந்தபதிவுலகத்தில் நன்கறியப்பட்ட எனக்குகிடைத்த வரவேற்பு [எனது மூன்று தளங்களுக்குமே] என்னை சில சமயம் மெய்மறக்கச்செய்திருக்கிறது.மகிழ்வடைச்செய்கிறது.


இதில் நிறைய கற்றுக்கொண்டேன் கற்றுக்கொள்கிறேன்.

இங்கு தோழமைகளாகட்டும். உறவுகளாகட்டும்.நட்பான உறவுகளாகட்டும். உறவுக்குள் வந்த நட்பாகட்டும் அனைத்தும் அனைத்தும் ஆனந்தத்தைதான் தந்தது.


இங்கு முகம் தெரியாத முகவரியறியாத மனங்களை மாசுகளற்று பார்க்கிறேன்.
தங்கள் எண்ணங்களை என் எண்ணங்களுக்குள் எடுத்தூற்றும் ஊற்றுக்களாய் நினைக்கிறேன்.

பதிவுலகில் எனக்கு கிடைத்தமுதல் விருது சாரூக்கா தந்தது அவர்களின் முதல் விருது என்னை ஊக்கப்படுத்தி மேடையில் காவியத் திலகத்தின் கைகளில் விருதுவாங்கும் அளவுக்கு கொண்டு சென்றது. அடுத்து மேனகா சத்தியா விருது வழங்கும்போது என்னை மறப்பதேயில்லை.

அடுத்து ஜலிலாக்கா இவர்களை தமிழ்குடும்பத்திலேயே அறிமுகம்  அவர்களின் விருது. அடுத்து ஜெய்லானி அப்பால நான்கொடுத்த மலர்விருதை இப்பால எனக்கே கொடுத்தது.

அடுத்து சைவக்கொத்துப்பரோட்டா. என்மூலம் என்மச்சானுக்கு ராஜகிரீடம் தந்தது.
மீண்டும் ஜெய்லானி தானே சொந்தமாக வைரவிருது செய்துதந்து வாசலில் மாட்டச்சொன்னது.  ஸாதிக்காக்கா தந்த வைரக்கிரீடம்.
மகராஜன் தந்த ராஜகீரீடம். சசிகுமார்தந்த ராஜகீரீடம் விருது என

விருதுமழையால் உள்ளம் நனைந்து ஊற்றெடுக்கிறது நல்லெண்ணங்களும்
நல் சிந்தனைகளும் வளமிகுந்த கற்பனைகளும். விருதுகள் என்பது ஊக்கம்கொடுக்கும் உற்சாக டானிக். எண்ணங்களை தூண்டி,
இருளகற்றும் தீபம்.
ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது. நான் பதிவுலகில் பாசத்தையும் அன்பையும் நட்பையும் அளவில்லாமல் அடைந்துள்ளேன் என்றால் அது மிகையாகாது.
என்னை இதுவரை முகம் பார்த்திராத பெரியவர்கள், என்னை தன் குழந்தையாகவே தத்தெடுத்துக்கொண்டதுதான் பெரியபாக்கியம்.
மகளே என்றழைத்து எனக்கு ஊக்கம்தந்து இன்னும் முன்னேறிவா என்ற வார்தைகளின்மூலம் ஊக்குவிக்கும் தாய்களையும்,  தந்தைகளையும் ,நேரில் ஒருமுறையேனும் பார்த்தேயாகவேண்டும்
என்ற எண்ணம் என்னுள்.
அதேபோன்று நட்புகளாக. என் உடன்பிறவா சகோதர சகோதரிகளாக.
உற்ற தோழிகளாக. நிறைய நிறைய. அவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலும் என்னுள்ளே! மிகுதியாய்..
எழுத்துப்பணிக்கென்று வந்துவிட்டோம் அதில் இடரில்லாமல் செல்லவெண்டுமென்பதே எனது எண்ணம்..

சில தளங்களின் அடுத்தவர்மனத்தை காயப்படுத்துவற்காகவே சிலவிசமிகளின் போக்குகள்.
அவரவர் தளமென்னும்போதும் பிறர் மனதை புண்படுத்தும் என்று தெரிந்தும். அடுத்தவர்மீது புழுதிகளைவாரியிறைப்பது காற்றில்பறந்துவந்து தன்மீதும் படியும், தன்கண்களில் விழுந்து உறுத்தும், என்ற எண்ணங்களில்லாமல் நடப்பது வேதனைக்குரியவிச[ய]ம்.


நல்லவைகளை எடுத்துச்சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியுமில்லை.எல்லாம் அறிந்தவளுமில்லை. இருந்தபோதும்.
வாழ்க்கை கொஞ்சகாலம்,வாழும் காலம்வரை நன்மைகளின்பக்கமே நம் நட்புகளும். உறவுகளும். நம் பந்தங்களும் செல்லவேண்டும் என்பது என் ஆவல்!
அதற்காக என்னாலானவைகளை எடுத்துசொல்கிறேன் ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள்வசமே!

என்றும்
உங்களின் அன்பென்னும் ஆதரவையும்.
ஆதரவென்னும் கருத்துக்களையும்.
கருத்துக்களென்னும் ஊக்கத்தையும்.
ஊக்கங்களென்னும் விருதுகளையும்.
விருதுகளென்னும்
உங்களின் ஆத்மார்த்தமான அன்பையும் வேண்டும்
என்றென்றும் உங்களில் ஒருத்தியாய் உலாவர
விரும்பும்
உள்ளமாய் நான் நான் நான்...


பதிவர்களாக பவனிவரும்
பசுமை மனங்கள்
பாசத்தை பகிர்ந்தளிக்கும்
பண்புள்ள குணங்கள்

உலாவரும் வேளையில்
உற்சாகம்தரும் கருத்துக்கள்-இன்னும்
ஊற்றாய் ஊறிவா! ஊரறியவா -என
ஊக்கம்தரும் விருதுகள்.

முகமறியா முகவரிகள்
முல்லைப்பூவின் மணவிரியல்கள்
மாசுகளற்ற பரிமாற்றங்கள்
மனத்தேடல்களின் நினைவோட்டங்கள்

பதிவுலகில் பெற்றதெல்லாம்
பசுமரத்தானிகள் பல படிப்பினைகள்
பாருலகில் உள்ளதெல்லாம்-ஒன்றுகூடி
பங்குபோட்டுக்கொள்ளும் மனக்குறைகள்

புனிதபூமி சுழல்வதிலே
புண்ணியங்களில் பலவகைகள்
பதிவுலகின் சுழற்சியிலே
பண்படாதவைகளும் சிலவகைகள்

நல்லவைகள் எடுத்துக்கொண்டு
தீயவைகளை புறம்தள்ளுங்கள்
நடந்தேறட்டும் நாள்தோறும்
நமக்கான
நன்மையான காரியங்கள் ...

டிஸ்கி// அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால்  அனுதினமும் வந்து ஊக்கம்தரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும்.
பார்வையிட்டு செல்லும் பண்பர்களுக்கும். என் அன்பான அன்பைத்தருவேன் எந்நாளும் இறைவன் உதவியால்!!!!!!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

74 கருத்துகள்:

 1. ///நல்லவைகள் எடுத்துக்கொண்டு
  தீயவைகளை புறம்தள்ளுங்கள்
  நடந்தேரட்டும் நாள்தோறும்
  நமக்கான
  நன்மையான காரியங்கள் ...///


  .... very nice.

  Congratulations for all these prestigious awards that you have received in the short-period of time. :-)

  பதிலளிநீக்கு
 2. க‌ற்ற‌த‌ற்கும் பெற்ற‌த‌ற்கும் வாழ்த்துக்க‌ள்!!!!!!!... வாழ்த்துக்க‌ள்!!!!!.... தொட‌ருங்க‌ள்.... தொட‌ருங்க‌ள்...

  பதிலளிநீக்கு
 3. congrats malikka. u have got so many good hearts as friends. as you said there will be good things and bad things in all places. we cant do much about that. Le us use the good things and avoid bad things.

  Todarnthu eluthungal. neengalum palarai ookkpaaduthugireergal. todarattum ungal pani

  பதிலளிநீக்கு
 4. அழகான வெளிப்பாடு..வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. அழகான் வெளிப்பாடு...வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 6. //அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.//

  அவ்வ்வ்வ்வ்........அப்போ எனக்கு விருது கிடையாதா..?!

  வட போச்சே....

  பதிலளிநீக்கு
 7. விருதுகளுக்கும், உங்களின் நல்ல
  உள்ளத்திற்கும் வாழ்த்துக்கள், தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. //அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.//

  no no no we wont accept this

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்க‌ள்!!! வாழ்த்துக்க‌ள்
  வாழ்த்துக்க‌ள்!!! வாழ்த்துக்க‌ள்
  வாழ்த்துக்க‌ள்!!!வாழ்த்துக்க‌ள்
  வாழ்த்துக்க‌ள்!!!வாழ்த்துக்க‌ள்

  பதிலளிநீக்கு
 10. //அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.//

  அவ்வ்வ்வ்வ்........அப்போ எனக்கு விருது கிடையாதா..?!

  வட போச்சே....

  பதிலளிநீக்கு
 11. மிகத்தெளிவான கருத்துகள் தெளிக்கப்பட்ட இடுகை.

  எனக்கு வலையுலகத்தில் உங்களை மாதிரியான அன்பான சகோதரிகள் கிடைக்கப்பெற்றது பூர்வ ஜென்ம புண்ணியமே.

  தாங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

  விஜய்

  பதிலளிநீக்கு
 12. விருதால மனிசனுக்கு பெருமையா ? இல்ல மனிசனால விருதுக்கு கவுரவமா ?.

  உங்களால விருதுக்குதாங்க பெருமை. நான் இங்க இருக்கேன்னு. தொடர்ந்து கலக்குங்க.. அசத்துங்க..

  ஆடதெரியாதவனுக்கு எல்லாம் கலைமாமணி கிடைக்கிற காலம் இது )

  வாழ்த்த ( ஊக்குவிக்க )நல்ல மணங்களே போதும் .

  பதிலளிநீக்கு
 13. ஹி...ஹி... வெள்ளை காக்காவை ஆட்டைய போட்டது மாதிரி இந்த கண்னு சிமிட்டுற குருவியையும் ஒரு நாளைக்கு போட்டுட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 14. //இந்த பதிவுலகில் வந்த கொஞ்சகாலத்தில்[9மாதத்தில்] எனக்குகிடைத்த வரவேற்ப்பு [எனது மூன்று தளங்களுக்கும் நல்லவரவேற்பு] என்னை சில சமயம் மெய்மறக்கச்செய்திருக்கிறது.மகிழ்வடைச்செய்கிறது.//

  கொஞ்சநாள்தானா நான் என்ன்வோ இரண்டு மூன்றுவடங்களய் இருக்கீங்க நாமாதான் மிஸ்பண்ணிட்டொம் என்று நினைத்தேன். அப்படா 9 மாதம்தானா ரொம்ப ஆச்சரியமாக இருக்குங்க.

  எல்லாத்திறமைகளும் உங்களிடமிருக்கு.
  உங்கள் திறமைகள் உங்களுக்கே தெரியலை. மிக அதிஷ்டசாலி உங்ககுடும்பம்.

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் முன்னேற என் அட்வான்ஸ் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  என்று உங்கள் நட்புகாக
  அன்புச்சாமி..

  பதிலளிநீக்கு
 15. என் வாழ்த்துக்கள்...

  புரியவில்லையா...!

  நான் 25163 வாசகனாய்... விமர்சகனாய்... தங்கள் வலைதளத்திற்க்குள்...

  025163 visiters entered in your bloog...

  my hearty Congradulations...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 16. //நல்லவைகளை எடுத்துச்சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியுமில்லை.எல்லாம் அறிந்தவளுமில்லை.//

  இந்த எண்ணமும் இறைவன் மேல் நீங்கள் வைத்துள்ள பற்றும் தான் காரணம் என்பேன் நான்.
  அது எப்படிங்க அவ்வளவு விளக்கம் கொடுத்து விட்டு அதுக்கு ஒரு கவிதையும் சொல்லுரிங்க.

  விளக்கத்துக்கு கவிதையா!
  கவிதைக்கு விளக்கமா!

  ஆதலால் இன்று முதல்
  "கவி திலகம்" என்ற பட்டத்தையும் பெருவிராக...

  பதிலளிநீக்கு
 17. இன்னும் பெற வாழ்த்துக்கள் தோழி.அவ்வளவு திறமைகளும் உங்களிடம் இருக்கிறதே !

  பதிலளிநீக்கு
 18. திறைமைக்கு கொடுத்த பரிசுகள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. //இதில் நிறைய கற்றுக்கொண்டேன் கற்றுக்கொள்கிறேன்.//

  உண்மைதான் மலிக்கா!!

  மென்மேலும் வளர வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!!

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துகள்!

  [[நல்லவைகள் எடுத்துக்கொண்டு
  தீயவைகளை புறம்தள்ளுங்கள்]]

  அருமை.

  பதிலளிநீக்கு
 21. சீ போங்க.... உங்க குருவியை நிறுத்த சொல்லுங்க எனக்கு வெக்கமா இருக்கு....

  பதிலளிநீக்கு
 22. அவரவர் தளமென்னும்போதும் பிறர் மனதை புண்படுத்தும் என்று தெரிந்தும். அடுத்தவர்மீது புழுதிகளைவாரியிறைப்பது காற்றில்பறந்துவந்து தன்மீதும் படியும், தன்கண்களில் விழுந்து உறுத்தும், என்ற எண்ணங்களில்லாமல் நடப்பது வேதனைக்குரியவிச[ய]ம்.

  ///

  நான் நன்றி சொல்ல விரும்புவதில்லை ஆசிரியர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 23. மலிக்கா...வாழ்த்துக்கள் உங்கள் விருதுகளுக்கு....பாராட்டுகள் உங்கள் திறமைக்கு...
  சந்தோஷங்கள் நீங்கள் என் இடுகைக்கு வந்தமைக்கு...
  தொடரட்டும் உங்களின் பயணம்...அதில் நாங்கள் வருவோம் சக பயணிகளாய்...

  ப்ரியமுடன் பாரதி பரணி

  பதிலளிநீக்கு
 24. ஆஹா நான் லேட்டா வந்து புட்டேனே
  வாழ்த்துகக்ள், மலிக்கா>

  நீங்க பிலாக் ஆரம்பிக்கும் போது என்னிடம் பேசனும் என்ற போது அப்பொது தொடர்பு இல்லாததால் எப்படி பதில் சொல்வது என்று முடியாமல் தவித்து கொண்டு இருந்தென்,
  ஆனால் இவ்வளவு சீக்கிரம் மலைகக் வைக்கும் பத்வுகளும், விருதுகளும், பாராட்டுகக்லும், மாஷா அல்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே. இன்னும் மேன் மேலும்விருதுகள் பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. Akkaa ungalai paarkkumboodhu oru bottle sodavum ponnaadaiyum porthanum ;)

  Jokes apart, very happy for you sister! Way to go! :)

  பதிலளிநீக்கு
 26. மழையாய் பொழியட்டும்
  உங்கள் எண்னங்கள்..
  இப்பூமி நிச்சயம்
  ஓர் நாள்
  செழிப்பாகலாம்...

  வாழ்த்துக்கள்
  பதிவுலகிற்கு நான் கைக்குழந்தை இப்போதான் உங்கள் பதிவை முதலில்
  பார்த்தேன் பார்த்ததும்
  பிந்தொடர்ந்து விட்டேன்...

  Riyas

  பதிலளிநீக்கு
 27. ///நல்லவைகள் எடுத்துக்கொண்டு
  தீயவைகளை புறம்தள்ளுங்கள்
  நடந்தேரட்டும் நாள்தோறும்
  நமக்கான
  நன்மையான காரியங்கள் ...///

  மேலும் சிறப்பாய் சாதிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...மலிக்கா அக்கா....

  பதிலளிநீக்கு
 28. கவிஞர் மலிக்கா, வாழ்த்துக்கள்!
  தொடருங்கள்!!

  பதிலளிநீக்கு
 29. 9 மாதம் தானா என்பதை விடவும் அதற்க்கான பிரயாசங்கள்,அர்பணிப்பு, கடந்து வந்த பாதைகள்,கற்று கொண்ட பாடங்கள்,இவைகள் தான் முதலில் கண்ணில் தெரிகின்றன..மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 30. Chitra கூறியது...
  ///நல்லவைகள் எடுத்துக்கொண்டு
  தீயவைகளை புறம்தள்ளுங்கள்
  நடந்தேரட்டும் நாள்தோறும்
  நமக்கான
  நன்மையான காரியங்கள் ...///


  .... very nice.

  Congratulations for all these prestigious awards that you have received in the short-period of time. :-)
  //

  எனது தளத்துக்கு தொடர்ந்துவந்து கருத்துறைகள்வழங்கி ஊக்கப்படுத்தும் தோழியான மேடம் சித்ரா தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 31. கோவி.கண்ணன் கூறியது...
  நல்வாழ்த்துகள்..//

  வாங்க கோவி. தங்களின் வருகை நல்வரவாகட்டும்..
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துக்கள்.......oru murai visit seithu paarkkavum

  http://yournight-srdhrn.blogspot.com/

  Nandri

  பதிலளிநீக்கு
 33. ELLAAM SARI,
  UNGKALUKKU ORU NALLA VISAYAM SOLREN ATHAI PTHIVU SEYTHU, PATHIVULAKUKK SOLLUNGA...
  GULF'LA IRUNTHU VELAYILLAAMA THIRUMPUM MALAYAALIKALUKKU KERALA ARASULOAN KODUTTHU UTHAVUKIRATHAAM. CANCEL ADICCHA PASPORT COPY MAATHRAM KODUTTHAA POTHUMAAM. ATHAIP POLA TAMILAKA ARASUM SEYYALAAMTHAANE?
  VIYAABAARAMO, ETHAAVATHU THOZILO SEYTHU PILATTHU KOLVAARKAL ALLAVAA?
  ITHI UNGA PATHIVULA PODUNGA PUNNIYAMAA POKUM.
  MANO,
  BAHRAIN.

  பதிலளிநீக்கு
 34. //அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைக//
  அப்ப கண்டிப்பா எனக்கு இல்லை

  பதிலளிநீக்கு
 35. நாடோடி கூறியது...
  க‌ற்ற‌த‌ற்கும் பெற்ற‌த‌ற்கும் வாழ்த்துக்க‌ள்!!!!!!!... வாழ்த்துக்க‌ள்!!!!!.... தொட‌ருங்க‌ள்.... தொட‌ருங்க‌ள்...//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்டீபன்...

  பதிலளிநீக்கு
 36. நாடோடி கூறியது...
  க‌ற்ற‌த‌ற்கும் பெற்ற‌த‌ற்கும் வாழ்த்துக்க‌ள்!!!!!!!... வாழ்த்துக்க‌ள்!!!!!.... தொட‌ருங்க‌ள்.... தொட‌ருங்க‌ள்...//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்டீபன்...

  பதிலளிநீக்கு
 37. LK கூறியது...
  congrats malikka. u have got so many good hearts as friends. as you said there will be good things and bad things in all places. we cant do much about that. Le us use the good things and avoid bad things.

  Todarnthu eluthungal. neengalum palarai ookkpaaduthugireergal. todarattum ungal pani..//

  நிச்சியமாக தொடர்வேன் இறைவனின் உதவியால் கார்த்திக்.
  தாங்களைப்போன்றோரின் ஊக்கம் கருத்துக்கலாக வெளிப்படும்போது. இன்னும் சிறப்பாய் செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிறது.

  மிக்க நன்றி கார்த்திக்..

  பதிலளிநீக்கு
 38. கண்ணகி கூறியது...
  அழகான வெளிப்பாடு..வாழ்த்துக்கள்...

  கண்ணகி கூறியது...
  அழகான் வெளிப்பாடு...வாழ்த்துக்கள்..//


  வாழ்த்துக்களுக்கும் வருக்கைக்கும் மிக்க நன்றி கண்ணகி..

  பதிலளிநீக்கு
 39. அன்புடன் அருணா கூறியது...
  அடடா!இவ்வ்ளோ விருதுகளா? பூங்கொத்து!//

  அடடே வாங்க பூங்கொத்து அருணா.
  வருக்கைக்கும் பூங்கொத்துக்கும் மிக்க மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 40. கண்ணா.. கூறியது...
  //அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.//

  அவ்வ்வ்வ்வ்........அப்போ எனக்கு விருது கிடையாதா..?!

  வட போச்சே....//

  அழாதீங்க கண்ணா. வடை எங்கும் போகலை. விருதுதானே அழாதீங்க அழாம
  நல்லபிள்ளையாயிருந்தா.
  தருவோமுல்ல...

  பதிலளிநீக்கு
 41. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  விருதுகளுக்கும், உங்களின் நல்ல
  உள்ளத்திற்கும் வாழ்த்துக்கள், தொடருங்கள்/

  தொடர்வருகையால் ஊக்கம்தரும் பலரில் நீங்களும் ஒருவர். மிக்க மகிழ்ச்சி சை கொ ப.
  நல்லௌள்ளங்களின் வருகையால் நீரோடை நிரம்பிவழியட்டும்...

  மிக்க நன்றிமா..

  பதிலளிநீக்கு
 42. முதலில்...

  தாங்கள் இதுவரை....
  ஓர் வலைத்தளக் கவிஞராய் பெற்ற வெற்றிகளுக்கும்... விருதுகளுக்கும்... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  தாங்கள் 9 மாதத்திற்குமுன் "நீரோடை"யை துவக்கியதாக கூறியிருக்கிருறீர்கள்.... சற்றேரக்குறைய 6 மாதமாய்... நவம்பரிலிருந்து தங்கள் வலைதளத்திற்கு ஓர் வாசகனாய்... விமர்சகனாய் வந்து செல்லும் நான்...

  இந்த குறுகிய காலத்திற்குள் ஓர் தங்கள் கவித்திறன்.. ஓர் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மறுக்கமுடியாத உண்மை... தங்கள் முதல் கவிதைக்கும்... கடைசியாய் வடித்த "கலாச்சாரம் காலடியில்" கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளை கண்டு வியக்கிறேன்... இப்போதெல்லாம் தங்கள் கவிதையில் எதுகைமோனையுடன்.... புதியபுதிய வார்த்தைகள்... எப்படி இப்படி என அனைவரும் வியக்கும் வண்ணம் அழகான... அது காதல் கவிதையோ... சமுதாய ஆதங்கக் கவிதையோ... சமூக, கலாச்சார சீரழிவுக் கவிதையோ.. எக்கவிதை என்றாலும் அதில் தங்கள் தனி முத்திரையும்... கவி வண்ணமும் மிளிர்வதை கண்டு வியந்து போகிறேன்...

  அதனால்தான் நேற்றே நான் குறிப்பிட்டதுபோல் 25,000 வாசகர் இந்த குறுகிய காலத்தில்...
  பிரம்மாண்டமான வளர்ச்சி....
  இதனை அப்படியே தொடரவும்... மென்மேலும் வளர்ந்திட, இன்னும் பலப்பல வெற்றிகளைப் பெற்றிட என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...

  அடுத்து...
  ///நல்லவைகளை எடுத்துச்சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியுமில்லை.எல்லாம் அறிந்தவளுமில்லை.////

  இது கொஞ்சம்........ இல்லையில்லை... ரொம்ப அதிகமான...... ஓவராத் தெரியலையா..?

  நீங்க சொன்னா... அத நாங்க நம்பனுமில்ல..?

  ஏங்க...! அவையடக்கதிற்கும் ஒரு எல்லை இருக்கு....!

  நாங்க சிட்டி, செங்கல்பட்டு, நார்தார்காடு, சவுத்தார்க்காடு, எப்.எம்.எஸ்... எல்லாம் பார்த்துட்டுத்தான் வந்திருக்கோமுங்கோ... (வடிவேலு)

  any have...
  மீண்டும்...
  தங்கள் கவித்திறன் மென்மேலும் வளர்ந்து.... மென்மேலும் வளர.. பற்ப்பல சிறந்த விருதுகளை "அன்புடன் மலிக்கா" பெற்றிட...
  வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 43. வாழ்த்துக்கள் மலிக்கா .... இது தான் உங்கள் கிட்ட பிடித்த விசயம் பலகுவதற்கு எளிமையான , தலை கனம் சிறிதும் இல்லாமல் ..என்னை தங்கள் சகோதிரியாக பாவித்து அக்கா என்று உரிமையுடன் கூப்பிடுவது . உங்களை சந்திக்க தான் முடியவில்லை , நீங்கள் மேன் மேலும் பல விருதுகள் குவிக்க இந்த சகோதிரியில் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 44. வாழ்த்துக்கள் மலிக்கா .... இது தான் உங்கள் கிட்ட பிடித்த விசயம் பலகுவதற்கு எளிமையான , தலை கனம் சிறிதும் இல்லாமல் ..என்னை தங்கள் சகோதிரியாக பாவித்து அக்கா என்று உரிமையுடன் கூப்பிடுவது . உங்களை சந்திக்க தான் முடியவில்லை , நீங்கள் மேன் மேலும் பல விருதுகள் குவிக்க இந்த சகோதிரியில் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 45. இன்னும் நீங்கள் பல சிறப்பான படைப்புகளை எழுதி அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடிக்க என் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 46. அஹமது இர்ஷாத் கூறியது...
  வாழ்த்துக்கள்....

  மிக்க நன்றி இர்ஷாத்..


  ராமலக்ஷ்மி கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா.

  கவிதை அருமை.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராமுமேடம்..

  பதிலளிநீக்கு
 47. LK கூறியது...
  //அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.//

  no no no we wont accept this//

  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது கார்த்தி. விரைவில் விருது வரும்தேடி..
  /தமிழ் சங்கமி கூறியது...
  வாழ்த்துக்க‌ள்!!! வாழ்த்துக்க‌ள்
  வாழ்த்துக்க‌ள்!!! வாழ்த்துக்க‌ள்
  வாழ்த்துக்க‌ள்!!!வாழ்த்துக்க‌ள்
  வாழ்த்துக்க‌ள்!!!வாழ்த்துக்க‌ள்/

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
  தமிழ் சங்கமி..

  பதிலளிநீக்கு
 48. SUFFIX கூறியது...
  All the best!!//


  மிக்க நன்றி
  ஷபியண்ணா..


  //பெயரில்லா கூறியது...
  //இந்த பதிவுலகில் வந்த கொஞ்சகாலத்தில்[9மாதத்தில்] எனக்குகிடைத்த வரவேற்ப்பு [எனது மூன்று தளங்களுக்கும் நல்லவரவேற்பு] என்னை சில சமயம் மெய்மறக்கச்செய்திருக்கிறது.மகிழ்வடைச்செய்கிறது.//

  கொஞ்சநாள்தானா நான் என்ன்வோ இரண்டு மூன்றுவடங்களய் இருக்கீங்க நாமாதான் மிஸ்பண்ணிட்டொம் என்று நினைத்தேன். அப்படா 9 மாதம்தானா ரொம்ப ஆச்சரியமாக இருக்குங்க.

  எல்லாத்திறமைகளும் உங்களிடமிருக்கு.
  உங்கள் திறமைகள் உங்களுக்கே தெரியலை. மிக அதிஷ்டசாலி உங்ககுடும்பம்.

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் முன்னேற என் அட்வான்ஸ் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  என்று உங்கள் நட்புகாக
  அன்புச்சாமி..//

  நட்பான அன்புசாமி
  தாங்களின் அன்பான கருத்துக்களுக்கு என்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
  என் தளத்துக்கு பார்வையிடுவதோடு கருத்துக்களைபகிர்ந்துக்கொள்ளும் தாங்களைப்போன்றவர்களின் உள்ளத்துக்கு மிக்க நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 49. SUFFIX கூறியது...
  All the best!!//


  மிக்க நன்றி
  ஷபியண்ணா..


  //பெயரில்லா கூறியது...
  //இந்த பதிவுலகில் வந்த கொஞ்சகாலத்தில்[9மாதத்தில்] எனக்குகிடைத்த வரவேற்ப்பு [எனது மூன்று தளங்களுக்கும் நல்லவரவேற்பு] என்னை சில சமயம் மெய்மறக்கச்செய்திருக்கிறது.மகிழ்வடைச்செய்கிறது.//

  கொஞ்சநாள்தானா நான் என்ன்வோ இரண்டு மூன்றுவடங்களய் இருக்கீங்க நாமாதான் மிஸ்பண்ணிட்டொம் என்று நினைத்தேன். அப்படா 9 மாதம்தானா ரொம்ப ஆச்சரியமாக இருக்குங்க.

  எல்லாத்திறமைகளும் உங்களிடமிருக்கு.
  உங்கள் திறமைகள் உங்களுக்கே தெரியலை. மிக அதிஷ்டசாலி உங்ககுடும்பம்.

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் முன்னேற என் அட்வான்ஸ் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  என்று உங்கள் நட்புகாக
  அன்புச்சாமி..//

  நட்பான அன்புசாமி
  தாங்களின் அன்பான கருத்துக்களுக்கு என்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
  என் தளத்துக்கு பார்வையிடுவதோடு கருத்துக்களைபகிர்ந்துக்கொள்ளும் தாங்களைப்போன்றவர்களின் உள்ளத்துக்கு மிக்க நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 50. எந்த ஒரு வேளை செய்தாலும்
  மனதுக்கு ஒரு திருப்திவேண்டும்
  நம் சரியாகதான் செய்திள்ளோம்
  என்று அப்போதுதான் சந்தோஸமாக
  இருக்கும்

  அந்த சந்தோஸத்தை இறைவன் உங்களுக்கு அளித்துள்ளான்

  அல்ஹம்துலில்லாஹ்

  பதிலளிநீக்கு
 51. வந்தமைக்கும் நன்றி,
  வாழ்த்தியமைக்கும் நன்றி .

  பதிலளிநீக்கு
 52. விஜய் கூறியது...
  மிகத்தெளிவான கருத்துகள் தெளிக்கப்பட்ட இடுகை.

  எனக்கு வலையுலகத்தில் உங்களை மாதிரியான அன்பான சகோதரிகள் கிடைக்கப்பெற்றது பூர்வ ஜென்ம புண்ணியமே.

  தாங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

  விஜய்..//

  அன்புச்சகோதரரே; தாங்களைப்போன்ற சகோதரகளின் ஊக்கவுமும் அன்புதான் என்னை இந்த அளவு எழுத்ததூண்டுகிறது.

  இதுபோன்ற சகோதரத்துவம் கிடைக்க நான் தான் கொடுத்துவைத்திருக்கவேண்டும்..

  தாங்களின் வேண்டுதலுக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி விஜயண்ணா..

  //ஜெய்லானி கூறியது...
  விருதால மனிசனுக்கு பெருமையா ? இல்ல மனிசனால விருதுக்கு கவுரவமா ?.//

  உங்களால விருதுக்குதாங்க பெருமை. நான் இங்க இருக்கேன்னு. தொடர்ந்து கலக்குங்க.. அசத்துங்க..//


  எல்லாம் தாங்களைப்போன்ற அண்ணாத்தேக்களின் துஆக்கள்தான்

  இன்னும் ஊக்கம் ஊக்கம் தாருங்கள் அண்ணா..

  //ஆடதெரியாதவனுக்கு எல்லாம் கலைமாமணி கிடைக்கிற காலம் இது )//

  அப்ப எனக்கு விருதுகள் தந்தது சரியா இல்லையா

  //வாழ்த்த ( ஊக்குவிக்க )நல்ல மணங்களே போதும் .////

  வாழ்த்துக்களுக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 53. /ஜெய்லானி கூறியது...
  ஹி...ஹி... வெள்ளை காக்காவை ஆட்டைய போட்டது மாதிரி இந்த கண்னு சிமிட்டுற குருவியையும் ஒரு நாளைக்கு போட்டுட வேண்டியதுதான்.//

  ஆகா கண்ணு சிமிட்டி கூப்பிடுச்சா.
  சுடும்போது பாத்து சுடுங்க குருவிக்கு வலிக்கும்..

  பதிலளிநீக்கு
 54. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
  நல்வாழ்த்துகள்.

  மிக்க நன்றி ஷேக்..
  //காஞ்சி முரளி கூறியது...
  என் வாழ்த்துக்கள்...

  புரியவில்லையா...!

  நான் 25163 வாசகனாய்... விமர்சகனாய்... தங்கள் வலைதளத்திற்க்குள்...

  025163 visiters entered in your bloog...

  my hearty Congradulations...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....//

  வாழ்த்துக்களுக்கும்.
  நான் 25163 வாசகனாய்... விமர்சகனாய்... தொடர்வாசகராய் வந்து ஊக்கமும் ஆக்கமான கருத்துக்களும்
  மிக்க நன்றி நன்றி நன்றி..

  பதிலளிநீக்கு
 55. மலிக்காக்கா வாழ்த்துக்கள்.நீங்கள் வாங்கிய விருதுகளுக்கும் இனி வாங்க விருக்கும் விருதுகளுக்கும்.

  பதிலளிநீக்கு
 56. S Maharajan கூறியது...
  //நல்லவைகளை எடுத்துச்சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியுமில்லை.எல்லாம் அறிந்தவளுமில்லை.//

  இந்த எண்ணமும் இறைவன் மேல் நீங்கள் வைத்துள்ள பற்றும் தான் காரணம் என்பேன் நான்.
  அது எப்படிங்க அவ்வளவு விளக்கம் கொடுத்து விட்டு அதுக்கு ஒரு கவிதையும் சொல்லுரிங்க.

  விளக்கத்துக்கு கவிதையா!
  கவிதைக்கு விளக்கமா!

  ஆதலால் இன்று முதல்
  "கவி திலகம்" என்ற பட்டத்தையும் பெருவிராக...//

  மகராஜன் தங்களின் அன்புக்கும் அன்பான பட்டத்துக்கும் மிக்க நன்றி. தொடர்வருகையளித்து ஊக்கப்படுத்தும் தாங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல பல..  /
  மின்மினி கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா.../

  மிக்க நன்றி மின்மினி..
  / ஹரீகா கூறியது...
  நல் வாழ்த்துக்கள் அக்கா!!!/

  மிக்க நன்றி ஹரீகா..

  27 ஏப்ரல், 2010 12:21 pm

  பதிலளிநீக்கு
 57. ஹேமா கூறியது...
  இன்னும் பெற வாழ்த்துக்கள் தோழி.அவ்வளவு திறமைகளும் உங்களிடம் இருக்கிறதே !//

  மிக்க நன்றி ஹேமாதோழி. தோழிகளின் ஊக்கம் தானே அனைத்தையும் செய்துபார்க்கத்தூண்டும் தூண்டுகோலாய் இருக்கிறது. மிக்க நன்றி தோழி..
  சசிகுமார் கூறியது...
  திறைமைக்கு கொடுத்த பரிசுகள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள..//

  மிக்க நன்றி சசி தாங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 58. ஹுஸைனம்மா கூறியது...
  //இதில் நிறைய கற்றுக்கொண்டேன் கற்றுக்கொள்கிறேன்.//

  உண்மைதான் மலிக்கா!!

  மென்மேலும் வளர வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!!//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹுஸைனம்மா..
  //நட்புடன் ஜமால் கூறியது...
  வாழ்த்துகள்!

  [[நல்லவைகள் எடுத்துக்கொண்டு
  தீயவைகளை புறம்தள்ளுங்கள்]]

  அருமை.//

  மிக்க நன்றி ஜமால்காக்கா..
  //செ.சரவணக்குமார் கூறியது...
  வாழ்த்துக்கள் சகோதரி.//

  மிக்க நன்றி சகோதரர் அவர்களே..

  பதிலளிநீக்கு
 59. malar கூறியது...
  சீ போங்க.... உங்க குருவியை நிறுத்த சொல்லுங்க எனக்கு வெக்கமா இருக்கு....

  அப்படியெல்லாம் வெக்கப்படக்கூடாது மலர் அப்புறம் குருவி வெக்கப்படும்..


  //வெறும்பய கூறியது...
  அவரவர் தளமென்னும்போதும் பிறர் மனதை புண்படுத்தும் என்று தெரிந்தும். அடுத்தவர்மீது புழுதிகளைவாரியிறைப்பது காற்றில்பறந்துவந்து தன்மீதும் படியும், தன்கண்களில் விழுந்து உறுத்தும், என்ற எண்ணங்களில்லாமல் நடப்பது வேதனைக்குரியவிச[ய]ம்.

  ///

  நான் நன்றி சொல்ல விரும்புவதில்லை ஆசிரியர்களுக்கு.//

  வருகைக்கு மிக்க நன்றி
  கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 60. பாரதி பரணி கூறியது...
  மலிக்கா...வாழ்த்துக்கள் உங்கள் விருதுகளுக்கு....பாராட்டுகள் உங்கள் திறமைக்கு...
  சந்தோஷங்கள் நீங்கள் என் இடுகைக்கு வந்தமைக்கு...
  தொடரட்டும் உங்களின் பயணம்...அதில் நாங்கள் வருவோம் சக பயணிகளாய்...

  ப்ரியமுடன் பாரதி பரணி//

  வாங்க பாரதி. தாங்களின் வருகைக்கும். அன்பான வாழ்த்துக்களுக்கும். அழகான கருத்துக்கும் மிக்க நன்றி..  //Jaleela கூறியது...
  ஆஹா நான் லேட்டா வந்து புட்டேனே
  வாழ்த்துகக்ள், மலிக்கா>

  நீங்க பிலாக் ஆரம்பிக்கும் போது என்னிடம் பேசனும் என்ற போது அப்பொது தொடர்பு இல்லாததால் எப்படி பதில் சொல்வது என்று முடியாமல் தவித்து கொண்டு இருந்தென்,
  ஆனால் இவ்வளவு சீக்கிரம் மலைகக் வைக்கும் பத்வுகளும், விருதுகளும், பாராட்டுகக்லும், மாஷா அல்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே. இன்னும் மேன் மேலும்விருதுகள் பெற வாழ்த்துக்கள்//

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்கக்கா. தாங்களைபோன்ற அக்ககாக்களின் ஆசிர்வாதம். எப்போதும் வேணும். மிக்க நன்றிக்கா


  நாஸியா கூறியது...
  Akkaa ungalai paarkkumboodhu oru bottle sodavum ponnaadaiyum porthanum ;)

  Jokes apart, very happy for you sister! Way to go! :)//

  மிக்க நன்றி நாஸியா. அதுசரி சோடாவும் தரல பன்னாடை அச்சோ பொன்னாடையும் தரல..

  பதிலளிநீக்கு
 61. Riyas கூறியது...
  மழையாய் பொழியட்டும்
  உங்கள் எண்னங்கள்..
  இப்பூமி நிச்சயம்
  ஓர் நாள்
  செழிப்பாகலாம்...

  வாழ்த்துக்கள்
  பதிவுலகிற்கு நான் கைக்குழந்தை இப்போதான் உங்கள் பதிவை முதலில்
  பார்த்தேன் பார்த்ததும்
  பிந்தொடர்ந்து விட்டேன்...

  Riyas//

  வாங்க ரியாஸ். வந்தமைக்கு கருத்துக்கள் தந்தமைக்கும் பின் தொடர்ந்தமைக்கும் மிக்க நன்றி நன்றி..
  seemangani கூறியது...
  ///நல்லவைகள் எடுத்துக்கொண்டு
  தீயவைகளை புறம்தள்ளுங்கள்
  நடந்தேரட்டும் நாள்தோறும்
  நமக்கான
  நன்மையான காரியங்கள் ...///

  மேலும் சிறப்பாய் சாதிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...மலிக்கா அக்கா....
  //

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கனி..

  பதிலளிநீக்கு
 62. NIZAMUDEEN கூறியது...
  கவிஞர் மலிக்கா, வாழ்த்துக்கள்!
  தொடருங்கள்!!

  27 ஏப்ரல், 2010 9:01 pm


  ப்ரின்ஸ் கூறியது...
  9 மாதம் தானா என்பதை விடவும் அதற்க்கான பிரயாசங்கள்,அர்பணிப்பு, கடந்து வந்த பாதைகள்,கற்று கொண்ட பாடங்கள்,இவைகள் தான் முதலில் கண்ணில் தெரிகின்றன..மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !!!//

  வாங்க ப்ரின்ஸ். வந்தமைக்கும் அழகான கருத்துக்கள் தந்தமைக்கும் பின் தொடர்ந்தமைக்கும் மிக்க நன்றி நன்றி.மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 63. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 64. காஞ்சி முரளி கூறியது...
  முதலில்...

  தாங்கள் இதுவரை....
  ஓர் வலைத்தளக் கவிஞராய் பெற்ற வெற்றிகளுக்கும்... விருதுகளுக்கும்... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....//

  வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

  /தாங்கள் 9 மாதத்திற்குமுன் "நீரோடை"யை துவக்கியதாக கூறியிருக்கிருறீர்கள்.... சற்றேரக்குறைய 6 மாதமாய்... நவம்பரிலிருந்து தங்கள் வலைதளத்திற்கு ஓர் வாசகனாய்... விமர்சகனாய் வந்து செல்லும் நான்...

  இந்த குறுகிய காலத்திற்குள் ஓர் தங்கள் கவித்திறன்.. ஓர் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மறுக்கமுடியாத உண்மை... தங்கள் முதல் கவிதைக்கும்... கடைசியாய் வடித்த "கலாச்சாரம் காலடியில்" கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளை கண்டு வியக்கிறேன்... இப்போதெல்லாம் தங்கள் கவிதையில் எதுகைமோனையுடன்.... புதியபுதிய வார்த்தைகள்... எப்படி இப்படி என அனைவரும் வியக்கும் வண்ணம் அழகான... அது காதல் கவிதையோ... சமுதாய ஆதங்கக் கவிதையோ... சமூக, கலாச்சார சீரழிவுக் கவிதையோ.. எக்கவிதை என்றாலும் அதில் தங்கள் தனி முத்திரையும்... கவி வண்ணமும் மிளிர்வதை கண்டு வியந்து போகிறேன்... //

  இந்த 9 மாதத்திலும் 6 மாதமாகத்தான் முரளி நானும் வெளியுலக்கிற்கு அறிமுகமாகியிருக்கிறேன்.என்னுடைய இந்த வளர்ச்சிக்கும் கவிதையின் முத்திரைக்கும் தாங்களைப்போன்ற நட்பான அன்பான உள்ளங்கள்தான் காரணம் காரணம். இதை அழுத்திச்சொல்வேன்.
  எனக்குள் இருக்கும் எண்ணங்களை உங்கள் அனைவரின்முன் சமர்ப்பிக்கிறேன் அதிலிருக்கும் கருத்துக்களை தாங்கள் ஏற்றுக்கொண்டு என்னை ஊக்கப்படுத்தும் கருத்துக்களே இவைகளுக்கும் முக்கிய காரணம்..

  //அதனால்தான் நேற்றே நான் குறிப்பிட்டதுபோல் 25,000 வாசகர் இந்த குறுகிய காலத்தில்...
  பிரம்மாண்டமான வளர்ச்சி....
  இதனை அப்படியே தொடரவும்... மென்மேலும் வளர்ந்திட, இன்னும் பலப்பல வெற்றிகளைப் பெற்றிட என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...//

  நிச்சயமாக இறைவன் துணையுடன் நல்லவகளின் பக்கமே என்னை நிலைநிறுத்திக்கொள்ளவும். நல் வளர்ச்சியினை தக்கவைத்துக்கொள்ளவும் முயற்ச்சிக்கிறேன்.

  /அடுத்து...
  ///நல்லவைகளை எடுத்துச்சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியுமில்லை.எல்லாம் அறிந்தவளுமில்லை.////

  இது கொஞ்சம்........ இல்லையில்லை... ரொம்ப அதிகமான...... ஓவராத் தெரியலையா..?//

  அப்படியா நெசமா தெரியலையே முரளி.

  //நீங்க சொன்னா... அத நாங்க நம்பனுமில்ல..?/

  இத நம்பனும் நம்பித்தான் ஆகோனும்..

  //ஏங்க...! அவையடக்கதிற்கும் ஒரு எல்லை இருக்கு....!//

  அவயடைக்கத்திற்கும் எல்லையுண்டா. இன்னும் நிறைய நிறைய கத்துக்க இருக்கு ..


  //நாங்க சிட்டி, செங்கல்பட்டு, நார்தார்காடு, சவுத்தார்க்காடு, எப்.எம்.எஸ்... எல்லாம் பார்த்துட்டுத்தான் வந்திருக்கோமுங்கோ... (வடிவேலு)//

  இதெல்லாம் என்ன முரளி இதில் எதுமே எனக்குத்தெரியாது. பெரியவா சொல்லும்போது சிறியவா அடக்கத்தோடு கேட்டுக்கிறேன்..


  //any have...
  மீண்டும்...
  தங்கள் கவித்திறன் மென்மேலும் வளர்ந்து.... மென்மேலும் வளர.. பற்ப்பல சிறந்த விருதுகளை "அன்புடன் மலிக்கா" பெற்றிட...
  வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  தொடர்ந்த கருத்துகளும். அதன் விரிவாக்கங்களும்.பிறருக்கு புரியும் வகையிலான தெளிவான எண்ணங்களும்.தாங்களிடம் இருக்கு.
  அதை எனக்கு கருத்துக்களின்மூலம் ஊக்கமும் ஆக்கமும் தந்து.என் ஒவ்வொரு படைப்பிலும் எழுத்துபிழைகளை திருத்தி நட்பான ஆசிரியராகவும் இருந்து மென்மேலும் என் வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும்.

  நட்பான முரளிக்கு என் மனமார்ந்த
  நன்றி நன்றி நன்றி.நன்றி நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 65. //நல்லவைகள் எடுத்துக்கொண்டு
  தீயவைகளை புறம்தள்ளுங்கள்
  நடந்தேறட்டும் நாள்தோறும்
  நமக்கான
  நன்மையான காரியங்கள் ..//

  சூப்பர்ங்க.. இன்னும் பல வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது