கலாச்சாரம் காலடியில்!
நாகரீகமது நாகரீகமது -வீர
நடைபோடும் காலம் –நவ
நாகரீகமது முற்றிப்போயிட
நாற்றமெடுக்கும் கோலம்!
நான்கு சுவற்றுக்குள்
நடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்!
தமிழ்நாட்டுக்கென்றும்
தமிழருக்கென்றும் தனிமரியாதை –அதன்
தரம்கெடுப்பதுபோல் தட்டுத்தடுமாறுதே
தறுதலைகளின் மோகம்!
தான்தோன்றித்தனத்தால்
தட்டுகெட்டதால் மோகம் கூடிப்போக
தண்டவாள ரயிலின் ஓட்டதிலும்
தன்னை நோக்கிய கூட்டநடுவினிலும்
காமம் எல்லைமீற!
பதினெட்டு தாண்டாத
பச்சிளம் வயது பாவை-அது
செய்ததே அத்தனைபேர் மத்தியில்
அசிங்கமான வேலை -யார் நோக்கினும்
எனக்கென்ன கவலை
என்று திரியும் -இதுபோன்ற
மாந்தர்களின் நிலை
கண்கள்கூசிட மனமும் வெறுத்திட
காட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!
படிக்கும் வயதிலே பால்யதவறுகள்
செய்யத்துடிக்கும் பருவம்
இதை இவர்களின்
பெற்றோர்கள் முன்னால்
செய்துகாட்டினால்
பொருத்திடுமா நெஞ்சம்!
மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்
மேம்பட நினைக்க-இங்கே
மோசமானதே மேலைநாட்டைவிட
மேதாவிகளின் போக்கே!
வாழ நினைக்குமா வரையரையோடு
வரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்
வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...
என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.
இன்றை நவநாகரீக உலகத்தில் வயது வந்த
சில பிள்ளைகளின் ஆட்டங்கள் எல்லைமிறீப்போகின்றன
அது எதுவரையில் என்றால்,
ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும் தன் அத்துமீறும் ஆசைக்கு இடங்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர் திலகங்களாய் உலா வருகிறது இன்றைய சிலமாந்தர் [அவ] நிலாக்கள். கேட்டால் ஃபேஷனாம்.
இதை கண்ணால் கண்ட என் நண்பரின் கட்டுரையை படித்ததும் அதிர்ந்துபோய் நம்மினமா!பெண்ணினமா! இப்படியெல்லாம் நடக்கிறது என மனம்குமுறி எழுதிய வரிகளே உங்கள் முன் கவிதையாக.. என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.. குறைகளனைத்தும் கேடுகெட்ட மனிதர்களிடம் மட்டுமே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது போன்று பல இடங்களில் நடக்கின்றன. இதை உணர வேண்டிய நபர்கள் உணர்வரா? சில காலம் முன்பு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த ஒரு விவாதத்தின் பொழுது இவ்வாறு பொது இடங்களில் நடப்பது தவறு இல்லை என்று நிறைய பேர் பேசினார்கள் .:(
பதிலளிநீக்குஉங்கள் கோபம் உங்கள் வரிகளில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது
கண்கள்கூசிட மனமும் வெறுத்திட
பதிலளிநீக்குகாட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!//
நானும் நிறைய இடங்களில் இதுபோல் பார்த்திருக்கேன்மா. இதுகளை யார்சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள்.
இப்போதெல்லாம் இதற்க்கு ஊக்கம் கொடுப்பதுபோல் தாய் தந்தையேரே சிறியவய்திலிருந்தே மார்டன் டிரஸ் மார்டன் வாழ்க்கையினு தயராக்கி சீரழிக்கிறாங்க.
என்னச்சொல்ல கண்றாவிய. வாத்தியாரா இருந்தும் பிரம்பிருந்தும் அடிக்கமுடியாத சூழ்நிலை இதுபோன்ற ஜென்மங்களை.
எனக்கும் கோபம் இதைபோல் தெறிக்கிறது நீங்க எழுத்தீட்டிங்கம்மா சபாஷ் சபாஷ் சபாஷ்..
//வாழ நினைக்குமா வரையரையோடு
பதிலளிநீக்குவரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்//
தெரியலையே!
உங்க ரௌத்திரத்தை கவிதையில்
பார்த்தேன்.
படங்கள் சூப்பர்!! உங்களுக்கெல்லாம் மட்டும் எப்படித்தான் இப்படி சழ்கு படங்கள் கிடைக்குதோ!!
பதிலளிநீக்குகவிதை - எப்பவும்போல!!
ம்ம்.....புரிய வேண்டியவர்களுக்கு
பதிலளிநீக்குபுரிந்தால் சரி.
கோபம் நியாயமே!
பதிலளிநீக்குஇன்னும் இன்னும் சீரழிவை நோக்கியே செல்கிறது கலாச்சரம் என்ற பேரிலும் ...
சரியான கேள்விகள்!
பதிலளிநீக்குநம்மவர் கலாச்சாரத்தை மேலை நாட்டார் போற்ற முனைய..
நம்மவர்கள் அவர்களைப் பின்தொடர முற்படுவது வேதனைக்குரியது!
இது போன்று பல இடங்களில் நடக்கின்றன. இதை உணர வேண்டிய நபர்கள் உணர்வரா? சில காலம் முன்பு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த ஒரு விவாதத்தின் பொழுது இவ்வாறு பொது இடங்களில் நடப்பது தவறு இல்லை என்று நிறைய பேர் பேசினார்கள் .:(
பதிலளிநீக்குஉங்கள் கோபம் உங்கள் வரிகளில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது.//
இதையேதான் நானும் சொல்கிறேன்.
உலகம் போகிரபோக்கில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..
மிக அழகாய் கருத்தாய் எழுதியிருக்கீங்க.
///நாகரீகமது முற்றிப்போயிட நாற்றமெடுக்கும் கோலம்!///
பதிலளிநீக்கு'நாகரீகம்' என்ற
பொய்முகங்களை
முகமூடியாய்
முகத்தில் அணிந்துகொண்டு
உலாவரும்
உன்மத்தர்கள்...
இதுவா... நம் முன்னோர்கள் கற்றுத்தந்த நாகரீகம்...
ஒழுக்கமுடன் வாழ்வதற்கு பெயர்தான் 'நாகரீகம்'...
///நான்கு சுவற்றுக்குள்..... நடக்கவேண்டிய... நடப்புகளெல்லாம்... நாலு கால்களைவிட மோசமாக... நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்!///
மிருகமாய் இருந்த மனிதன்.. கற்கால, உலோகக்கால, இதிகாசக்காலம் என பலப்பல நாகரிகக் காலங்களைக் கடந்து... பரிபூரண மனிதனானான்...... நாகரீகத்தின் விளைவால். உள்ளத்தாலும், உடலாலும் மனிதனாய் வாழ்ந்தான்...
இன்றோ... சிலதுகளால் [என்னைப் பொறுத்த வரையில் மனிதர்களாய் மதிப்பதில்லை... அதனால்தான் சிலர் என்று சொல்லமால் "சிலதுகள்" என்கிறேன்] மீண்டும் மிருகமாய்... மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறோமா என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளனர்...
///தமிழ்நாட்டுகென்றும்.... தமிழருக்கென்றும் தனிமரியாதை – அதன்.... தரம்கெடுப்பதுபோல் தட்டுத்தடுமாறுதே.... தறுதலைகளின் மோகம்!///
///தான்தோன்றித்தனத்தால்... தட்டுகெட்டதால் மோகம் கூடிப்போக... தண்டவாள ரயிலின் ஓட்டதிலும்.... தன்னை நோக்கிய கூட்டநடுவினிலும்... காமம் எல்லைமீற!///
///பதினெட்டு தாண்டாத... பச்சிளம் வயது பாவை-அது... செய்ததே அத்தனைபேர் மத்தியில்.... அசிங்கமான வேலை -யார் நோக்கினும்... எனக்கென்ன கவலை.... என்று திரியும் -இதுபோன்ற.... மாந்தர்களின் நிலை////
இங்கே வந்து பாருங்கள்... உலகத்திற்கே பண்பாட்டையும், நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் கற்றுத்தந்த 'தமிழினம்'... இன்றோ தரம் தாழ்ந்து.. தறிக்கெட்டு.. வார்த்தைகளால் வடிக்கமுடியாத அலங்கோலங்களை...நித்தமும்... நித்தமும்... நாளொரு மேனியும்... பொழுதொரு வண்ணமுமாய்... இங்கே வந்து பாருங்கள்...
இச்சமுதாயச் சீரழிவை... கலாச்சாரச் சீர்கேட்டினை...
என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...
"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...
சாலைகளில்...
பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு
சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....
காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."
கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்....
இதுபோன்ற 'சிலதுகளின்' நடவடிக்கையினால் தமிழ்ச் சமுதாயத்தின் பேரும், புகழும், பெருமையும் "கப்பலேறிப்போகிறது"......
sorry ...!
தொடரும்....
PART - II
பதிலளிநீக்கு//கண்கள்கூசிட மனமும் வெறுத்திட... காட்சிகளின் அவலம்.... அதை சொல்லக் கூசிட... வார்த்தை தடுத்தும்... தெறிக்கிறதே கோபம்!///
//படிக்கும் வயதிலே பால்யதவறுகள்... செய்யத்துடிக்கும் பருவம்.........பொருத்திடுமா நெஞ்சம்!/////
இதுபோன்ற 'சிலதுகளின்' நடவடிக்கையினால் பீச்சுக்கோ, பார்க்குக்கோ, தியேட்டருக்கோ இது போன்ற பொதுஇடங்களுக்கு குடும்பத்துடன் செல்லமுடியாத சூழ்நிலை... நாங்கள் வருவதை பார்த்து... எழுவதுகூட கிடையாது... ஏதோ ஜந்துக்களைப் போல நம்மை ஏளனமாய் பார்த்து, அவர்கள் வேலையை தொடர்வார்கள்... அப்போது நினைத்துக் கொள்வேன்.. இவர்களுக்கு இந்த ஜனநாயக நாடு ஒத்துவராது... அரபி நாடுகளைப்போல கொடூரச் சட்டங்கள் கொண்டுவந்தால்தான் திருந்துவார்கள் என எனக்குள்ளே எண்ணிக்கொள்வேன்...
'ஜொள்ளுமன்னர்கள்'... இது அவர்களின் தனிமனித சுதந்திரம் என்று சொல்லலாம்... சமுதாயத்தின்மீது அக்கறை.. ஏன்..! தன் வீட்டின்மீது அக்கறை உள்ள எந்த ஓர் 'மனிதன்' என்பவன் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டான்...
// மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்... மேம்பட நினைக்க-இங்கே... மோசமானதே மேலநாட்டைவிட... மேதாவிகளின் போக்கே!///
மேலைநாட்டவர் நம்மிடமிருந்து... தமிழனிடமிருந்து...'ஒருவனுக்கு ஒருத்தி", "பிறன் மனையாள் நோக்கேல் ", "இளைஞர், இளைஞ்சியர் ஒழுக்கநெறி" போன்ற சமுதாய நல்லொழுக்கங்களை கற்றுக்கொண்டு.. வாழ முயன்று வருகிறான்... ஆனால்... இங்கிருக்கும் "சிலதுகள்" மரித்த பிண்டங்களாய் உலா வந்துகொண்டிருக்கின்றன... சமுதாய சீரழிவை உண்டாக்கிட...
///வாழ நினைக்குமா வரையரையோடு... வரும் தலைமுறையாவது... வாழ்ந்திட நினைத்தால்... வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...///
மீண்டும் சொல்கிறேன்.... இவர்கள்... கண்ணிருந்தும் குருடர்கள்... காதிருந்தும் செவிடர்கள்...
இவர்களிடம் 'வரைமுறை', 'நல்லொழுக்கம்' என்ற சங்கு ஊதுவதினால் எப்பயனும் இல்லை..
இவர்கள்......
உயிரோடு உலவும் பிணங்கள்...
இதுகளுக்கா... இந்த அறிவுரை...?
இறுதியாய்.. டிஸ்கியில்
///ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும் தன் அத்துமீறிம் ஆசைக்கு இடக்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர் திலங்களாய் உலா வருகிறது///
தங்கள் மேற்சொன்ன வரிகளை படிக்கும்போது என் சிறிய மற்றும் இளமை வயதுகளில்.... இந்து ஆச்சாரியாரும், முஸ்லீம்மத என் நண்பரின் தந்தையாரும், கிறிஸ்தவமத போதகரும்.... தங்கள்தங்கள் மதத்தின் வேத நூல்களில் சொன்னவைதான் நடக்கிறது... நடக்கும் போலிருக்கிறது... எல்லா மதத்தின் கருத்தும் ஓர் கருத்தாய்... "மனிதன் தன்நெறியின்... தர்மத்தின்... நீதியின்... நேர்மையின்.. ஒழுக்கத்தின்... ஆகிய இந்நெறிமுறைகளின் எல்லையை மீறும்போது உலகம் அழியும்" என்ற அனைத்துமத வேதங்களின் வாக்கு உண்மையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை...
மொத்தமாய்...
தங்கள் "நீரோடை"யின் தொடர் வாசகனாய்... விமர்சகனாய்... இருப்பதில் பெருமை கொள்கிறேன்... காரணம்... தாங்கள் வடிக்கும் கவிதைகள் . காதல்கவிதை மட்டுமேயல்லாமல்... இச்சமுதாயம் - இக்கலாச்சாரம் சீரழியாமல்... சீர்பெறவேண்டும் எனும் நோக்கில் தங்கள் மனதில் தவறென்றுபட்டால் அதனை எவ்வித தயக்கமுமின்றி... உடன் கவிதையாலே சாடல்... சாட்டியடி...
ஆனால்... ஓர் பெண்மணியாய் தாங்கள் இருந்தும் "கலாச்சாரம் காலடியில்" எனும் இக்கவிதையில் ஓர் பெண்ணே தவறினைச் செய்திருந்தாலும்... அதனை நியாயப்படுத்தாமல்.. சாட்டையால் சாடிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... அதோடு இன்னொருவரையும் பாராட்ட வேண்டும்... இந்தளவிற்கு தங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்துவரும் தங்கள் மச்சானுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்..
மிக... மிக... அருமையான சமூக அக்கறையுடன்... எதுகைமோனையுடன்... வார்த்தைஜாலங்களால் வடித்த... அழகான... மிகச் சிறந்த கவிதை...
மலிக்கா... என்னமப்போங்க.. கவிதையால் கலக்குறீங்க...
வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி...
எந்த உலகத்தில இருக்கீங்க நீங்க , இதையெல்லாம் தவறு இல்லை என்று சொன்ன $%^&# நடிகைக்கு எம் எல் ஸி பதவி காத்து இருக்கு தமிழ் நாட்டில . மொதல்ல இதுகளை..@#$% %$#@#......@#@$#%$$#...
பதிலளிநீக்குஅறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக( அல் குர்ஆன் 87:9)
பதிலளிநீக்கு(இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.( அல் குர்ஆன் 87:10 )
துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான் .( அல் குர்ஆன் 87:11 )
//நான்கு சுவற்றுக்குள்
பதிலளிநீக்குநடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்! //
நல்ல சவுக்கடி வார்த்தைகளில் வார்த்து வந்த கவிதை இது சுபெர்ர்...
உங்கள் கோபம் கவிதைகளில்..... அருமையாய் எழுதியிருக்கீங்க....
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குஎந்த உலகத்தில இருக்கீங்க நீங்க , இதையெல்லாம் தவறு இல்லை என்று சொன்ன $%^&# நடிகைக்கு எம் எல் ஸி பதவி காத்து இருக்கு தமிழ் நாட்டில . மொதல்ல இதுகளை..@#$% %$#@#......@#@$#%$$#...//
சரிதான் மலிக்கா ஜெய்லானி சொல்வது. எந்த உலகில் இருக்கீங்க கலாச்சாரமாவது இவர்களுக்கு மண்ணாங்கட்டியாவது.
சகட்டுமேனிக்கு மேனியை காட்டித்திறியும் இவர்களுக்கு மானம் வெக்கம் இருந்தால் இப்படெயெல்லாம் செய்வார்களா?
அடுதவர்கள் பார்வைகாளாக முத்தம் கொடுப்பது கட்டிப்பிடிப்பது தற்போதைய பேஷன்.எலவெடுத்த நாசம்.
அழியும்காலம் வெகு தொலைவில்யில்லை கடவுளே காப்பாத்து கழிசடைகளின் கன்ராவித்தனத்திலிருந்து..
அருமையான கவிதை உங்களைபாராட்ட எனக்கு வார்த்தைவரலை,
வாழ்க வளமுடன்..
மிக... மிக... அருமையான சமூக அக்கறையுடன்... எதுகைமோனையுடன்... வார்த்தைஜாலங்களால் வடித்த... அழகான... மிகச் சிறந்த கவிதை...
பதிலளிநீக்குபதிவுக்கு ஏத்த அருமையான படம் மேடம் , செருப்பால அடிச்சா மாதிரி சொல்லிருக்கிங்க
பதிலளிநீக்குenga entha ulagathila irukeenga. ippalam marriage pannikama living togethernu vala vendiyathu. veetla kalyanam panrapa piriyarathuthan fashion. pasanga mattum illa ponnuungalum kettu poitanga :(
பதிலளிநீக்குகாலம் மாறுகிறதோ, இல்லை மனிதர்கள் மாறி விட்டார்களோ? உங்களின் ஆதங்கமும் ஏமாற்றமும் கோபமும் கவிதையில் நன்கு புரிகிறது.
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்
பதிலளிநீக்குஇது நல்லயிருக்கு.அருமை.
பதிலளிநீக்குLK கூறியது...
பதிலளிநீக்குஇது போன்று பல இடங்களில் நடக்கின்றன. இதை உணர வேண்டிய நபர்கள் உணர்வரா? சில காலம் முன்பு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த ஒரு விவாதத்தின் பொழுது இவ்வாறு பொது இடங்களில் நடப்பது தவறு இல்லை என்று நிறைய பேர் பேசினார்கள் .:(
உங்கள் கோபம் உங்கள் வரிகளில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது..//
ஆமாம் எல் கே நானும்பார்த்தேன் அந்நிகழ்ச்சியை.
அதான் சொல்கிறேனே! மனிதன் ஆதிகாலத்தைநோக்கி மீண்டும் பயணித்துவிட்டான். அறிவிருந்தும்..
இராமனுஜம்.. கூறியது...
பதிலளிநீக்குகண்கள்கூசிட மனமும் வெறுத்திட
காட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!//
நானும் நிறைய இடங்களில் இதுபோல் பார்த்திருக்கேன்மா. இதுகளை யார்சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள்.
இப்போதெல்லாம் இதற்க்கு ஊக்கம் கொடுப்பதுபோல் தாய் தந்தையேரே சிறியவய்திலிருந்தே மார்டன் டிரஸ் மார்டன் வாழ்க்கையினு தயராக்கி சீரழிக்கிறாங்க.
என்னச்சொல்ல கண்றாவிய. வாத்தியாரா இருந்தும் பிரம்பிருந்தும் அடிக்கமுடியாத சூழ்நிலை இதுபோன்ற ஜென்மங்களை.
எனக்கும் கோபம் இதைபோல் தெறிக்கிறது நீங்க எழுத்தீட்டிங்கம்மா சபாஷ் சபாஷ் சபாஷ்..//
வாங்க அய்யா வாங்க.
உங்களைப்போன்ற ஆசிரியர்களாலே சிலவிசங்களை கண்டிக்கமுடியாத நிலையென்னும்போது .
நாங்கள் என்ன செய்ய சொல்லுங்கள்..
கோபம் வரக்கூடாதுனு நினைத்தாலும் கொதிப்படைவத்துவிடும் இதுபோன்ற விசயங்களைக்காணும்போது நம்மீறிவந்துவிடுகிறது.
மிக்க நன்றிஅய்யா தாங்களின் வருகைக்கும் இயலாமையை வெளீப்படுத்தும் கருத்துக்கும்..
S Maharajan கூறியது...
பதிலளிநீக்கு//வாழ நினைக்குமா வரையரையோடு
வரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்//
தெரியலையே!
உங்க ரௌத்திரத்தை கவிதையில்
பார்த்தேன்.//
தெரியலையே என்ற வருத்ததுடந்தான் இதை எழுதினேன் மஹராஜன்,,
அந்த இடத்திலேயே ரௌத்திரத்திறம் வந்து பயனில்லையென்பதுதான் ஆதங்கம்..
ஹுஸைனம்மா கூறியது...
பதிலளிநீக்குபடங்கள் சூப்பர்!! உங்களுக்கெல்லாம் மட்டும் எப்படித்தான் இப்படி சழ்கு படங்கள் கிடைக்குதோ!!
கவிதை - எப்பவும்போல!!//
எல்லாம் கூகிள்கொடுக்கும் பரிசுதான்..
நன்றி ஹுஸைனம்மா...
சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்கும்ம்.....புரிய வேண்டியவர்களுக்கு
புரிந்தால் சரி.//
புரிந்துடுமா?
புரிந்தால் நல்லதே!!!!!!!!
நட்புடன் ஜமால் கூறியது...
பதிலளிநீக்குகோபம் நியாயமே!
இன்னும் இன்னும் சீரழிவை நோக்கியே செல்கிறது கலாச்சரம் என்ற பேரிலும் ..//
ஆமாம் ஜமால்காக்கா. அழிவைநோக்கியே பயணிக்க ஆரம்பித்துவிட்டது.
இறைவன்தான் காப்பற்றனும் நம்தலைமுறையாவது..
அண்ணாமலை..!! கூறியது...
பதிலளிநீக்குசரியான கேள்விகள்!
நம்மவர் கலாச்சாரத்தை மேலை நாட்டார் போற்ற முனைய..
நம்மவர்கள் அவர்களைப் பின்தொடர முற்படுவது வேதனைக்குரியது..//
வேதனையிலும் வேதனை அக்கரைக்கு இக்கரை பச்சையென கதைமாறிவிட்டது.
நன்றி அண்ணாமலை..
செல்வி கூறியது...
பதிலளிநீக்குஇது போன்று பல இடங்களில் நடக்கின்றன. இதை உணர வேண்டிய நபர்கள் உணர்வரா? சில காலம் முன்பு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த ஒரு விவாதத்தின் பொழுது இவ்வாறு பொது இடங்களில் நடப்பது தவறு இல்லை என்று நிறைய பேர் பேசினார்கள் .:(
உங்கள் கோபம் உங்கள் வரிகளில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது.//
இதையேதான் நானும் சொல்கிறேன்.
உலகம் போகிரபோக்கில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..
மிக அழகாய் கருத்தாய் எழுதியிருக்கீங்க..//
வாங்க செல்வி பொண்ணு எப்படியிருக்கா.
பெண்ணை இக்காலத்தில் வளர்தெடுப்பது மனதில் ஒருவித பயத்தையே ஏற்படுத்துகிறது இல்லையாக்கா..மிக்க நன்றிக்கா..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்கு///நாகரீகமது முற்றிப்போயிட நாற்றமெடுக்கும் கோலம்!///
'நாகரீகம்' என்ற
பொய்முகங்களை
முகமூடியாய்
முகத்தில் அணிந்துகொண்டு
உலாவரும்
உன்மத்தர்கள்...
இதுவா... நம் முன்னோர்கள் கற்றுத்தந்த நாகரீகம்...
ஒழுக்கமுடன் வாழ்வதற்கு பெயர்தான் 'நாகரீகம்'...//
நாம்தான் அடித்துக்கொள்ளவேண்டும் கலாச்சாரம் கலாச்சாரமென்று.
அவர்களுக்கு அதுவெல்லாம் பழைய பஞ்சாங்கம்..
///நான்கு சுவற்றுக்குள்..... நடக்கவேண்டிய... நடப்புகளெல்லாம்... நாலு கால்களைவிட மோசமாக... நடந்தேறுதே
பதிலளிநீக்குநட்ட நடுரோட்டிலெல்லாம்!///
மிருகமாய் இருந்த மனிதன்.. கற்கால, உலோகக்கால, இதிகாசக்காலம் என பலப்பல நாகரிகக் காலங்களைக் கடந்து... பரிபூரண மனிதனானான்...... நாகரீகத்தின் விளைவால். உள்ளத்தாலும், உடலாலும் மனிதனாய் வாழ்ந்தான்...
இன்றோ... சிலதுகளால் [என்னைப் பொறுத்த வரையில் மனிதர்களாய் மதிப்பதில்லை... அதனால்தான் சிலர் என்று சொல்லமால் "சிலதுகள்" என்கிறேன்] மீண்டும் மிருகமாய்... மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறோமா என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளனர்... //
நிச்சியமாக முரளி.
மீண்டும் ஆதிகாலத்தை நோக்கிய பயணத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாகரீகம்.
அறிவிருந்து அதை அடகு இல்லையில்லை அழித்துவிட்டு தாந்தோன்றித்தனத்தோடு தன்னையினைத்துக்கொள்ள கிளம்பிவிட்டவர்களை.
நம்முடை சிறு செய்தியால் ஒன்று செய்யமுடியாது என்று உணர்கிறேன்..
இங்கே வந்து பாருங்கள்... உலகத்திற்கே பண்பாட்டையும், நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் கற்றுத்தந்த 'தமிழினம்'... இன்றோ தரம் தாழ்ந்து.. தறிக்கெட்டு.. வார்த்தைகளால் வடிக்கமுடியாத அலங்கோலங்களை...நித்தமும்... நித்தமும்... நாளொரு மேனியும்... பொழுதொரு வண்ணமுமாய்... இங்கே வந்து பாருங்கள்...
பதிலளிநீக்குஇச்சமுதாயச் சீரழிவை... கலாச்சாரச் சீர்கேட்டினை...//
எங்கு நோக்கினும் இதே நிலை தறுதலைகளின் தட்டுகெட்ட நிலை
தலைகால்புரியாத ஆட்டத்தோடு ஆங்காங்கே வீற்றிருக்கிறது ஆசனங்களில்லாமல்..
//என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...
"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...
சாலைகளில்...
பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு
சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....
காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."
கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்....
இதுபோன்ற 'சிலதுகளின்' நடவடிக்கையினால் தமிழ்ச் சமுதாயத்தின் பேரும், புகழும், பெருமையும் "கப்பலேறிப்போகிறது".//
அதுவும் நிச்சயமாகதான்
நடக்கபோகிறது.
கேட்டால் நவநாகரீகமென்பார்கள்.
தனிமனித சுதந்திரமென்பார்கள்.
பேஷனென்பார்கள்.
நம்மை அறிவிலி என்பார்கள்.
இதுபோன்ற கலாச்சாரத்தில் நம்மை இணைத்துக்கொள்ளாமல் நாம் ஒதுங்கிக்கொள்வது நல்லது. இருந்தாலும் நம்மினம் இப்படி சீரழியுதே நம் கண்முன்னே என மனம்தான் கிடந்து அடித்துக்கொள்கிறது..
sorry ...!
தொடரும்..../
தொடரட்டும்.
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குPART - II
//கண்கள்கூசிட மனமும் வெறுத்திட... காட்சிகளின் அவலம்.... அதை சொல்லக் கூசிட... வார்த்தை தடுத்தும்... தெறிக்கிறதே கோபம்!///
//படிக்கும் வயதிலே பால்யதவறுகள்... செய்யத்துடிக்கும் பருவம்.........பொருத்திடுமா நெஞ்சம்!/////
இதுபோன்ற 'சிலதுகளின்' நடவடிக்கையினால் பீச்சுக்கோ, பார்க்குக்கோ, தியேட்டருக்கோ இது போன்ற பொதுஇடங்களுக்கு குடும்பத்துடன் செல்லமுடியாத சூழ்நிலை... நாங்கள் வருவதை பார்த்து... எழுவதுகூட கிடையாது... ஏதோ ஜந்துக்களைப் போல நம்மை ஏளனமாய் பார்த்து, அவர்கள் வேலையை தொடர்வார்கள்... அப்போது நினைத்துக் கொள்வேன்.. இவர்களுக்கு இந்த ஜனநாயக நாடு ஒத்துவராது... அரபி நாடுகளைப்போல கொடூரச் சட்டங்கள் கொண்டுவந்தால்தான் திருந்துவார்கள் என எனக்குள்ளே எண்ணிக்கொள்வேன்... //
அது எப்படி எழுவார்கள்.
அவர்கள் நினைத்தை முடிக்க வேண்டுமே!
அங்கே ஒழுக்கம் இருந்தால்
தானே தன்தலைகுனியும். இல்லாதவர்களிடம் எதிர்பார்ப்பது நம் தவறல்லவா!
அதுபோன்ற சட்டங்கள் வந்தால் தவறு செய்ய என்ன! நினைக்கவே மனம் உடன்படுமா? அதை சொன்னால் மனித உரிமை மீறல் என்று சொல்வார்கள்.
மனமில்லாத மனிதர்கள் என்பார்கள்.
இரக்கமற்ற அரக்கர்களென்பார்கள்.
//'ஜொள்ளுமன்னர்கள்'... இது அவர்களின் தனிமனித சுதந்திரம் என்று சொல்லலாம்... சமுதாயத்தின்மீது அக்கறை.. ஏன்..! தன் வீட்டின்மீது அக்கறை உள்ள எந்த ஓர் 'மனிதன்' என்பவன் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டான்.//
ஜொள்ளுவிடுபர்களுக்கு அன்றைய குளுகுளுகட்சி இலவசமாக கிடைக்கும்போது விடுவார்களா!
சமூக அக்கரை என்பதெல்லாம் எல்லாரிடமும் எதிர்பார்பதும் நம் குற்றமே!
// மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்... மேம்பட நினைக்க-இங்கே... மோசமானதே மேலநாட்டைவிட... மேதாவிகளின் போக்கே!///
மேலைநாட்டவர் நம்மிடமிருந்து... தமிழனிடமிருந்து...'ஒருவனுக்கு ஒருத்தி", "பிறன் மனையாள் நோக்கேல் ", "இளைஞர், இளைஞ்சியர் ஒழுக்கநெறி" போன்ற சமுதாய நல்லொழுக்கங்களை கற்றுக்கொண்டு.. வாழ முயன்று வருகிறான்... ஆனால்... இங்கிருக்கும் "சிலதுகள்" மரித்த பிண்டங்களாய் உலா வந்துகொண்டிருக்கின்றன... சமுதாய சீரழிவை உண்டாக்கிட...//
கணவன் மனையியென்றபோதும் பிறர் நோக்கும்போது இணைந்திருக்கும் கைகள்கூட தானே விலக்கிக்கொள்ளும்.
இது மனஒழுக்கத்தில் ஊரிப்போனவர்களுக்கு.
அதற்காக பிறர்பார்க்கும்போது கட்டிகொண்டுபோவது ஒழுக்கமற்றவர்களல்ல என்பதல்ல!
அதை தமிழமக்கள் செய்வதற்க்கு கூசுவார்கள் என்பதுதான்.
அதெல்லாம் அந்தகாலமென்கிறீர்களா!!!!
///வாழ நினைக்குமா வரையரையோடு... வரும் தலைமுறையாவது... வாழ்ந்திட நினைத்தால்... வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...///
பதிலளிநீக்குமீண்டும் சொல்கிறேன்.... இவர்கள்... கண்ணிருந்தும் குருடர்கள்... காதிருந்தும் செவிடர்கள்...
இவர்களிடம் 'வரைமுறை', 'நல்லொழுக்கம்' என்ற சங்கு ஊதுவதினால் எப்பயனும் இல்லை..
இவர்கள்......
உயிரோடு உலவும் பிணங்கள்...
இதுகளுக்கா... இந்த அறிவுரை...? //
எப்படியிருப்பவர்களென்றாலும் சொல்லுவரைச் சொல்வோம்.
எடுத்துக்கொண்டால் நல்லது அவர்களுக்கு எடுத்துக்கொள்ளாவிட்டால்.
அதனால் நஸ்டமடைபவர்கள் நாமல்ல..
தீமையை தடுக்க முயற்ச்சிக்கவேண்டும் இல்லையெனில் தீமைகளிருந்து விலகியிருக்க வேண்டும். இரண்டையும் செய்வோம்.சில நேரங்களில்..
//இறுதியாய்.. டிஸ்கியில்
///ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும் தன் அத்துமீறிம் ஆசைக்கு இடக்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர் திலங்களாய் உலா வருகிறது///
தங்கள் மேற்சொன்ன வரிகளை படிக்கும்போது என் சிறிய மற்றும் இளமை வயதுகளில்.... இந்து ஆச்சாரியாரும், முஸ்லீம்மத என் நண்பரின் தந்தையாரும், கிறிஸ்தவமத போதகரும்.... தங்கள்தங்கள் மதத்தின் வேத நூல்களில் சொன்னவைதான் நடக்கிறது... நடக்கும் போலிருக்கிறது... எல்லா மதத்தின் கருத்தும் ஓர் கருத்தாய்... "மனிதன் தன்நெறியின்... தர்மத்தின்... நீதியின்... நேர்மையின்.. ஒழுக்கத்தின்... ஆகிய இந்நெறிமுறைகளின் எல்லையை மீறும்போது உலகம் அழியும்" என்ற அனைத்துமத வேதங்களின் வாக்கு உண்மையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை... //
எத்தனை உத்தம போதகர்கள் வந்தபோதும். எத்தனை வேதங்கள் வந்துபோதும். திருந்தும் சமூதாயம் மட்டுமே திருந்தும்
சீரழியும் சமூதாயத்துக்கு நிச்சயம் வேதனையுண்டு ஈருலகிலும்..
//மொத்தமாய்...
தங்கள் "நீரோடை"யின் தொடர் வாசகனாய்... விமர்சகனாய்... இருப்பதில் பெருமை கொள்கிறேன்... காரணம்... தாங்கள் வடிக்கும் கவிதைகள் . காதல்கவிதை மட்டுமேயல்லாமல்... இச்சமுதாயம் - இக்கலாச்சாரம் சீரழியாமல்... சீர்பெறவேண்டும் எனும் நோக்கில் தங்கள் மனதில் தவறென்றுபட்டால் அதனை எவ்வித தயக்கமுமின்றி... உடன் கவிதையாலே சாடல்... சாட்டியடி...//
இதில் தயக்கமெதற்க்கு முரளி.
தவறுகள் கண்ணெதிரில் நடக்கும்போது அதை சூசகமாக கண்டிக்கவேண்டும் இல்லையெனில்
நேருக்கு நேர் கண்டித்திடவேண்டும்.
பலமுறை சொல்லியும் புரியாமல் நடிக்கும்
இதுபோன்ற சிலதுகளுக்கு பாவபுண்ணியமெல்லாம் பார்க்கக்கூடாது.
//ஆனால்... ஓர் பெண்மணியாய் தாங்கள் இருந்தும் "கலாச்சாரம் காலடியில்" எனும் இக்கவிதையில் ஓர் பெண்ணே தவறினைச் செய்திருந்தாலும்... அதனை நியாயப்படுத்தாமல்.. சாட்டையால் சாடிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... அதோடு இன்னொருவரையும் பாராட்ட வேண்டும்... இந்தளவிற்கு தங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்துவரும் தங்கள் மச்சானுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்..//
இதில் ஆணென்ன பெண்ணென்ன.
தவறுகள் தவறுதானே!
இவர்கள் செய்தால் தவறு தவறில்லையென்றாகிவிடுமா?
ஒழுக்கத்தைமீறி
அடுத்தவர்களையும் பாவத்தின்பக்கம் இழுக்கும் இதுபோன்றபெண்கள்தான் அதிகமாக நரகில் நுழைவார்கள் என்று
குர் ஆனிலும் ஹதீஸ்களிலும் கேட்டும் படித்தும் உள்ளேன்.
என் அன்புமச்சானுக்கும் பாராட்டுக்களை வழங்கிய முரளிக்கு மிக்க நன்றி.
அவர்களின் ஊக்கம் நிச்சயம் பலமடங்கு எனக்கு..எத்தனை முறை சொன்னாலும் நான் கொடுத்துவைத்தவள்தான்..
//மிக... மிக... அருமையான சமூக அக்கறையுடன்... எதுகைமோனையுடன்... வார்த்தைஜாலங்களால் வடித்த... அழகான... மிகச் சிறந்த கவிதை...
மலிக்கா... என்னமப்போங்க.. கவிதையால் கலக்குறீங்க...
வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி...//
என கவிதைக்கு இத்தனை அருமையாக ஒவ்வொரு வரிக்கும் விளக்கங்கள் கொடுத்து தாங்களின் மனதுல் உள்ளவற்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய தாங்களுக்கு என்மனமார்ந்த்த நன்றிகள் பல பல.
உலகத்திலுள்ள எல்லாரும் இதே எண்ணங்களுடன் இருந்தால் எப்படியிருக்கும்.
ஆசைதான் அதுவும் இயலாத ஆசை.
இல்லையா முரளி....
நன்றி நன்றி நன்றி..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குஎந்த உலகத்தில இருக்கீங்க நீங்க , இதையெல்லாம் தவறு இல்லை என்று சொன்ன $%^&# நடிகைக்கு எம் எல் ஸி பதவி காத்து இருக்கு தமிழ் நாட்டில . மொதல்ல இதுகளை..@#$% %$#@#......@#@$#%$$#...//
அதானே தெரியலையே ஜெய்லானி. அதுதான் புரியாமல் புலம்புகிறேன் இல்லையா!
என்ன ஒரு கொடுமை பார்த்தீகளா. இதைத்தான் கொடுமை என்று சொல்லனுமோ..
நாடு நன்றாக இருக்க முதலில் நாட்டிலிருக்கும் மனிதர்கள் நல்லவர்களானாத்தானே!
புலம்ப விட்டுடுத்துகளே புண்ணியவான்கள். சாரி சாரி புழுதிவான்கள்..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குஅறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக( அல் குர்ஆன் 87:9)
(இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.( அல் குர்ஆன் 87:10 )
துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான் .( அல் குர்ஆன் 87:11 )//
நிச்சியமாக, அழகிய அறிவுரையுள்ள குர் ஆன் வசனம் நன்றி ஜெல்யானி..
seemangani கூறியது...
//நான்கு சுவற்றுக்குள்
நடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்! //
நல்ல சவுக்கடி வார்த்தைகளில் வார்த்து வந்த கவிதை இது சுபெர்ர்..//
என்னத்த அடிச்சி சொல்லி என்ன பண்ண நடப்பது நடந்துக்கொண்டுதானே இருக்கு கனி.நன்றிமா
நாடோடி கூறியது...
பதிலளிநீக்குஉங்கள் கோபம் கவிதைகளில்..... அருமையாய் எழுதியிருக்கீங்க....//
மிக்கநன்றி ஸ்டீபன்..
//கீதா கூறியது...
ஜெய்லானி கூறியது...
எந்த உலகத்தில இருக்கீங்க நீங்க , இதையெல்லாம் தவறு இல்லை என்று சொன்ன $%^&# நடிகைக்கு எம் எல் ஸி பதவி காத்து இருக்கு தமிழ் நாட்டில . மொதல்ல இதுகளை..@#$% %$#@#......@#@$#%$$#...//
சரிதான் மலிக்கா ஜெய்லானி சொல்வது. எந்த உலகில் இருக்கீங்க கலாச்சாரமாவது இவர்களுக்கு மண்ணாங்கட்டியாவது.
சகட்டுமேனிக்கு மேனியை காட்டித்திறியும் இவர்களுக்கு மானம் வெக்கம் இருந்தால் இப்படெயெல்லாம் செய்வார்களா?
அடுதவர்கள் பார்வைகாளாக முத்தம் கொடுப்பது கட்டிப்பிடிப்பது தற்போதைய பேஷன்.எலவெடுத்த நாசம்.
அழியும்காலம் வெகு தொலைவில்யில்லை கடவுளே காப்பாத்து கழிசடைகளின் கன்ராவித்தனத்திலிருந்து..
அருமையான கவிதை உங்களைபாராட்ட எனக்கு வார்த்தைவரலை,
வாழ்க வளமுடன்..//
வாங்க கீதா தாங்களீன் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நிச்சியம் காப்பத்துவார்.
மிக்க நன்றி..
மங்குனி அமைச்சர் கூறியது...
பதிலளிநீக்குபதிவுக்கு ஏத்த அருமையான படம் மேடம் , செருப்பால அடிச்சா மாதிரி சொல்லிருக்கிங்க.//
வாங்க அமைச்சரே! அமைச்சராக இருந்து என்ன பயன். இதுபோன்ற அட்டூளியங்களுக்கு தனி தண்டனைவைத்து தீப்பளிக்கக்கூடாதா?
மிகுந்த மகிழ்ச்சி கருத்துக்கு மிக்க நன்றி
/LK கூறியது...
enga entha ulagathila irukeenga. ippalam marriage pannikama living togethernu vala vendiyathu. veetla kalyanam panrapa piriyarathuthan fashion. pasanga mattum illa ponnuungalum kettu poitanga :(//
ஆமாம் இருவருமே கெட்டு குட்டியச்சுவராகிட்டு வாராங்க பேஷனென்ற போர்வையில்.
நாந்தான் காலமாறி பொறந்துட்டேனோ கார்த்திக்.
கருத்துக்கு மிக்க நன்றி எல் கே..
Chitra கூறியது...
பதிலளிநீக்குகாலம் மாறுகிறதோ, இல்லை மனிதர்கள் மாறி விட்டார்களோ? உங்களின் ஆதங்கமும் ஏமாற்றமும் கோபமும் கவிதையில் நன்கு புரிகிறது.//
மாற்றம் இந்த வகையிலா மாறனும் இறைவா!
தொடர்கருத்துக்கு மிக்க நன்றி சித்ராமேடம்..
/மின்மினி கூறியது...
உண்மையான வரிகள்..
மிக்க நன்றி மின்மினி..
/மோகனா கூறியது...
இது நல்லயிருக்கு.அருமை.//
மிக்க நன்றி மோகனா..
உணர்வின் பிரதிபலிக்கும் உண்மையான வரிகளை கொண்ட கவிதை.
பதிலளிநீக்குsameepathil oru rail payanathil naanum intha karumathai paarthu tholaithen. athai irand varungala thoongal cellphonil padam eduthathu athaivida kodumai. enna kodumai malliga sister.
பதிலளிநீக்கு