நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்திப்பு தந்த தித்திப்பு.

[அண்ணன் தங்கியிருக்கும் இடத்தில். என்தோழியின் மகள் ஜுல்பியா]

கடந்த வெள்ளியன்று காலை 11 30. லிருந்து படபடப்பு மனதில். 3. 4. வாரங்களாக இதோ இதோ என்று தள்ளிப்போய்கொண்டேயிருந்த சந்திப்பு


இது இன்று நடைபெறப்போகிறது.மனமெல்லாம் மகிழம்பூவின் வாசனையோடு
குட்டிப்போடபூனையாக நடை.11 30. தோழிவீட்டுக்கு வந்துவிட்டேன். அங்கிருந்துகொண்டு போன் செய்தேன். அக்கா இன்றுமாலை சந்திக்கிறோம்.
நான் அங்குவரவா இல்லை நீங்கள் இங்கு வருகிறீர்களா?
அச்சோ போனின் உள்ளே சந்தோஷ மூச்சி சாரலாய் அடித்தது.
என்ன செய்வோம் நான் எங்கு வர.அங்கிருந்த குரல்,
சரிக்கா மாலை 4. 30மணிக்கு ஃப்ரைடே மார்கெட்டுக்கு வாங்க
அங்கே சந்திப்போம் ஓகேபா வந்துவிடுகிறேன்.
உனக்காக தூக்கத்தை தியாகம் பண்ணிவிட்டு என்றார்கள்.

நேரம் நகர்ந்தபாடில்லை தொழுகைமுடிந்து சாப்பிட்டு மணியைபார்த்தால் 2.15..தான்
என்னசெய்வது 4. 30 நல்ல வெயிலாகயிருக்குமே! என்று திரும்ப போன் செய்தேன் அக்கா நான் அண்ணவீட்டுக்கு[பெரியம்மா மகன்] போய்விட்டு 5. 30 வருகிறேன் வரும் போது போன்செய்கிறேன் அப்போது கிளம்பிவந்தால் போதும் சரியா. சரிப்பா வந்துவிடுகிறேன்.

எடு காரை போ கவானிஜ் க்கு. நாங்க இருந்த இடத்திலிருந்து ஒரு 90 . 95 .கிலோமீட்டர் விடு சூட். அண்ணன் தங்கியிருக்கும் இடத்துக்குபோய் ஒட்டகபாலாவது அருந்திவிட்டுவரலாமுன்னு போயாச்சி.நாங்கம் தோழிவீட்டிலும் சேர்ந்து.
அங்குபோய் அண்ணிடமிருந்தெல்லாம் சுருட்டிக்கொண்டு,
 சூடான நேரத்தில் ஒட்டகப்பால் சூடு என்பதால் ஜில்லுன்னு டீ குடிச்சிட்டு.

[இந்த ஒட்டக்கப்பால் குடிக்கத்தான் சென்றோம்]


மணல்மலையில் ஏறிவிட்டு அப்பாடா என இறங்கி அண்ணாவுக்கு டாட்டா காட்டிவிட்டு. திரும்பினால் மணி 5 .50. போன் செய்து அக்கா நீங்க அத்தனை தூரம் ஃப்ரைடே மார்கெட்டுகெல்லாம் வரவேண்டாம் உங்கவீட்டுக்கு மிகபக்கம்தானே லூலூ சென்டர் அங்கே வாங்க அதுவும் நான் அங்கு வந்து நான்மிஸ்கால் அடித்ததும் என்றேன். ஏனென்றால் தனியா அவர்கள்மட்டும் வரனுமே அண்ணாத்தேக்கு வேலையிந்ததால்.

லூலூ போயாச்சி பார்கிங் செய்துகொண்டே போன் செய்தேன் அக்கா இப்ப வாங்கன்னு. நான் வந்துட்டேன் [ஆல்ரெடி அயம் கம்மிங்] உள்ளேதான் நிற்கிறேன் என்றார்கள்.சரி என்னை எப்படித்தெரியும் அவங்களுக்கு [எனக்கு தெரியும் அவங்களை எப்படி இரண்டு நாளைக்குமுன்னாடி போட்டோ அனுப்பினாங்க பார்த்துவிட்டோமுல்ல] அதனால நீங்க என்னை கண்டுபிடிச்சிடுங்கப்பா என்றார்கள்.

என் திட்டம் எந்தோழியை நான்தான் மல்லி என போய் அறிமுகபடுத்திக்கோ என சொல்லி அழைத்துச்சென்றேன் ஆனால் அவள் இடையில் ஹாஸ்பிட்டல்போகனும் என்ற சூழல் அதனால் நானே உள்ளே சென்றேன் மச்சானும் மகளும்கூட.

உள்ளே நுழைந்து அந்தபக்கம் பார்த்துவிட்டு இந்தபக்கம் திரும்பும்போது எதிரே ஒரு ஆள் பெட்ஷீட் டவல் என இருந்ததில் ஒன்றை எடுத்து விரித்து பார்த்துக்கொண்டிருந்தது முகம் நான் போட்டோவில் பார்த்ததுபோல்தான் இருந்தது சற்று வித்தியாசமாய்.

அருகே சென்று லேசாக உரசியதுபோல் நின்றேன் ஆளுக்கு பயம் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் குனிந்தே என்னவோ அதை எடுக்கப்போவதுபோல் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இன்னும் நெருக்கமாக நின்றேன். திரும்பி என்னை பார்க்கும்போது அணைத்துக்கொண்டேன் அக்கா என்று. அப்படியே அக்கா அதர்ச்சியில் பார்கனுமே அந்த கண்கொள்ளாகாட்சியை.

என்னை பேஷ் கவர்செய்தே பார்த்திருந்ததால் நான் பர்தாவில் ஃபேஷ் கவர் செய்து போவேன் என எதிர்பார்திருந்தார்கள் [அவர்களுக்கு ஷாக்கொடுக்க அதை சற்று நீக்கிவைத்திருந்தேன்] சொல்வார்களே பாசம் இடமறியாதுன்னு
அதுபோல அங்கேயே கைகளைபிடித்தபடி சற்று மெளனமும் சிரிப்பும்.

[கொழுக்கட்டையைசாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நினைவுவந்தும் கிளிக்]
 உடனே அக்கா சிறிய பேக் கையில் கொடுத்து இந்தாப்பா உனக்கு பிடித்த கொழுக்கட்டை என தந்தார்கள்.
சரி இங்கே இருந்து பேசமுடியாது லூலூக்கு பின்னால் பார்க் இருக்கு அங்குபோவோமென அங்கு சென்று அமர்ந்தோம் சிறிய மகனாரை அழைத்துவந்திருந்தார்கள்.அப்படியே அம்மாபோல நாந்தான் அண்ணாவை பார்தில்லையில்ல அதான்.

பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்
இடையில் ஹாஸ்பிட்டல் போனதோழி வந்துவிட்டாள். அக்கா கொண்டு வந்திருந்த கொழுகட்டையை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டோம் சர்கரை கொழுகட்டை செம சூப்பர். அதற்கிடையில் எங்க ஊர் தோழிகள் அந்த பார்க்குக்குதான் எப்போதும் வருவார்களாம் அவர்களும் வந்துசேர[ரொம்ப நாள்கழித்துதான் அவர்களையும் பார்த்தேன்] அப்பப்பா சந்தோஷதின் உச்சியில் அப்போது.


என்னவோ பார்க்கே விழாக்கோலம் பூண்டதுபோலிருந்தது. போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.[என்ன நான் கொஞ்சம் குனிந்து நின்றேன். அக்கா சொன்னார்கள் முன்பே தெரிந்திருந்தால்
ஹை ஹீல்ஸ் போட்டு வந்திருப்பேனப்பா] எனக்காக சின்ன பர்ஸ் அக்கா தந்தார்கள் அதை திறக்கும்போதெல்லாம் என் நியாபகம் வரனுமென்று.அதில் 1 திர்கம் காயின்வேறு. அப்போதுபார்த்து என் கவிதை [மாண்பின் ஆட்சி]
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்திற்காக நான் எழுதிய கவிதை.


இனியதிசைகள் புத்தகத்தில் வந்துள்ளது என அண்ணன் வந்து தந்தார்கள். மகிழ்ச்சி பன்மடங்கானது..

 பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை அக்காவின் அத்தான் போன் செய்யும்வரை.மணியைபார்த்தால் 7. 45. அச்சோ நேரமாகிவிட்டது நான் கிளபுகிறேன்பா. என்றார்கள். வாங்கக்கா லூலூவுக்குபோய்விட்டு போகலாமென்றேன் இல்லப்பா நேரமாகிவிட்டகாரணித்தினால் மீண்டும் சந்திப்போம் என்றார்கள் சரியென பிரியமனமில்லாமல் கைகளைகொடுத்தபடி அப்படியே சில மணித்துளிகள்.


விரல்களுக்குள் வீணைமீட்டிய நேசம் விடுபடமுடியாமல் விட்டு விலகியது.
போய்வருகிறேன் எனச்சொல்லியபோதுமனம் கனத்ததுபோலிருந்தது
அதை காட்டிக்கொள்ளாமல் இருவரும் அணைத்துக்கொண்டு சென்றுவருகிறேன் என்று போய்விட்டார்கள். போனபின்னும் நெடுநேரம் அமர்ந்திருந்தோம் மற்றதோழிகள் அவர்கள் அத்தான்கள்.என மணி 10.25 கிளம்பிவிட்டோம் வீடுவந்து சேர 11 மணியாகிவிட்டது.


அதுசரி இவ்ளோ நேரம் படிச்சிகளே நான் யாரை சந்திச்சேன்னு நினைக்கிறீங்க!
அதை தெரிஞ்சிக்கனுமுன்னா இதை கிளிக் பண்ணுங்க

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.
நட்புக்கு பாலமாய் உறவுக்கு வலிமையாய் இதில் உலவும் மனிதர்களின் மனங்கள் உலாவர என் பிராத்தணையும் வேண்டுகோளும்.


உதிர்ந்துவிடும் மலர்களைப்போல் ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பல உள்ளங்களில் வேர்விட்டு உறுதியாய் உதிராமல் வாழ்ந்திடவேண்டும்.
இன்னும் இந்தப்பதிவுலம் எத்தனை எத்தனை மகிழ்சியையும் சந்தோஷங்களையும் தரக்காத்திரிக்கிறதோ!
அதற்காக நானும் காத்திருக்கிறேன்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

60 கருத்துகள்:

 1. //எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி//

  மகிழ்ச்சியாக சொல்லிவிட்டிர்கள்
  //எனக்கு கிடைத்த விருதுவினை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்//
  (http://maarasa.blogspot.com/)

  பதிலளிநீக்கு
 2. நல்ல எஞ்சாய் பண்ணினீங்களா என்னை விட்டுட்டு!! அவ்வ்வ்வ்வ்

  நான் பாவம் தானே! முன்னமே தெரிஞ்சிருந்தா ஐடியா பண்ணிருப்பனே...

  பதிலளிநீக்கு
 3. /விரல்களுக்குள் வீணைமீட்டிய நேசம் விடுபடமுடியாமல் விட்டு விலகியது.
  போய்வருகிறேன் எனச்சொல்லியபோதுமனம் கனத்ததுபோலிருந்தது
  அதை காட்டிக்கொள்ளாமல் இருவரும் அணைத்துக்கொண்டு சென்றுவருகிறேன்/

  அன்பு மகளே!
  உனை நான் காணும் காலம் எப்போது?
  விரைவில் வா என் அன்பை தா.
  நானும் உன்னால் கவிஎழுத கற்றுக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. என்னவோ பார்க்கே விழாக்கோலம் பூண்டதுபோலிருந்தது. போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.[என்ன நான் கொஞ்சம் குனிந்து நின்றேன். அக்கா சொன்னார்கள் முன்பே தெரிந்திருந்தால்
  ஹை ஹீல்ஸ் போட்டு வந்திருப்பேனப்பா] எனக்காக சின்ன பர்ஸ் அக்கா தந்தார்கள் அதை திறக்கும்போதெல்லாம் என் நியாபகம் வரனுமென்று.அதில் 1 திர்கம் காயின்வேறு. அப்போதுபார்த்து என் கவிதை [மாண்பின் ஆட்சி]
  பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்திற்காக நான் எழுதிய கவிதை.
  இனியதிசைகள் புத்தகத்தில் வந்துள்ளது என அண்ணன் வந்து தந்தார்கள். மகிழ்ச்சி பன்மடங்கானது..//

  மிகுந்த மகிழ்ச்சியாய் உணர்வுகள் மலிக்கா.
  இருவரும் சந்திதது நானும் கலந்துகோண்டதுபோலிருக்கு.

  வாழ்த்துக்கள் இனியதிசைகளில் கவிதை வந்தமைக்கு..

  நாமும் காண்போம் காலச்சுழச்சியில்..

  மிக்க நன்றிப்பா

  பதிலளிநீக்கு
 5. suuper super super.

  வாழ்த்துக்கள் மகிழ்ச்சியின் உச்ச்ததில் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 6. கொழக்கட்டை , க்ளூ அது ஒரு வேளை ஆல் இன் ஆலா இருக்குமோ ? . எதுக்கும் இதை போஸ்ட் பண்ணிட்டு பிறகு பாக்கறேன். இன்ஷா அல்லாஹ்.

  பதிலளிநீக்கு
 7. //உதிர்ந்துவிடும் மலர்களைப்போல் ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பல உள்ளங்களில் வேர்விட்டு உறுதியாய் உதிராமல் வாழ்ந்திடவேண்டும்.//

  உண்மையான நட்புக்கு பலம் அதிகம்.

  ( ஆமா ,எனக்கு கொழுக்கட்டை எங்கே?)

  பதிலளிநீக்கு
 8. ஓஹோ!!!
  சமையலரசியும், கவிதாயினியும்
  சந்தித்து இருக்கீங்க, சுவராசியமாய்
  எழுதி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 9. சந்திப்புக்கள் நிறைய சந்தோஷத்தைக்கொடுக்கும்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. வெள்ளிகிழ‌மையை ந‌ல்லா எஞ்சாய் ப‌ண்ணியிருக்கீங்க‌....

  பதிலளிநீக்கு
 11. நல்லா எழுதி இருக்கீங்க..

  நட்பு நிலைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 12. கொழுகட்டை கொழுக்கடை ஏன் வேகலை
  ஜெய்லானி கேட்டதால நான்
  வேகல.
  ஜெய்லானி ஜெய்லானி
  பாவமில்லையா
  பாவம்பாத்தா எநெலம மோசமில்லையா

  கேட்டிச்சா அண்ணாத்தே!
  பாவம் அந்த கொழுகட்டைகூட நீங்க கேட்டீங்கன்னு சீக்கிரம் வேகமாட்டேங்கிறது.

  இருந்தாலும்
  அடிச்சி வேகவச்சி
  அனுப்புகிறோம் பார்சலில்..

  பதிலளிநீக்கு
 13. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.
  நட்புக்கு பாலமாய் உறவுக்கு வலிமையாய் இதில் உலவும் மனிதர்களின் மனங்கள் உலாவர என் பிராத்தணையும் வேண்டுகோளும்.  உண்மையான வரிகள்...

  பதிலளிநீக்கு
 14. /உதிர்ந்துவிடும் மலர்களைப்போல் ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பல உள்ளங்களில் வேர்விட்டு உறுதியாய் உதிராமல் வாழ்ந்திடவேண்டும்.
  இன்னும் இந்தப்பதிவுலம் எத்தனை எத்தனை மகிழ்சியையும் சந்தோஷங்களையும் தரக்காத்திரிக்கிறதோ!
  அதற்காக நானும் காத்திருக்கிறேன்//

  நிச்சியமாக நீங்க சொன்ன வரிகள் உண்மை அதேபோல் நட்பைதான் எதிர்பார்க்கிறேன் என்னாலும்.

  நீங்க தோழியாக்கிடைத்ததில் மகிழ்ச்சி மலிக்கா.
  சென்னையில் நிச்சியம் சந்திப்போம்
  சந்தோஷமாய் சந்தோஷிமகா..

  பதிலளிநீக்கு
 15. உங்கள் நட்பு நீடித்து நிலைக்க இறைவன் அருளட்டும் . அருமையான வர்ணனை
  // சூடான நேரத்தில் ஒட்டகப்பால் சூடு என்பதால் ஜில்லுன்னு டீ குடிச்சிட்டு.//

  அதெப்படி ஜில்லுனு டீ ? கொஞ்சம் விளக்கம்

  பதிலளிநீக்கு
 16. வாவ்..கொழுக்கட்டையுடன் சந்திப்பு.படிக்கவே சந்தோஷமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 17. நல்ல வர்ணனை! நான் அவசியம் சந்திக்கணும்னு நினைக்கிறவர்களில் ஒருவர் ஜலீலா.
  தொடரட்டும் நட்பு! வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 18. உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 19. மலிக்கா ஒரு இனிய மாலை பொழுதில் நாம் சந்தித்தது, ஆகா, சாதாரணமாஅகவே, பழை பிரண்டுமார்களை (தோழிகளை) தேடி தேடி போய் சந்திப்பேன். எல்லோரும் சொல்வார்கள் நீ ஒருத்தி தான் என்றும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பேசுகீறாய் என்பார்கள்.

  எனக்கும் ரொம்ப சந்தோஷம், இதில் ஒன்றும் சொல்லனும் நானும், மலிக்காவும் சேர்ந்து பார்க்க நினைத்தது ஒரு குழந்தைய ஆனால் பார்க்க முடியல‌

  பதிலளிநீக்கு
 20. நீங்க மட்டும் தான் போட்டோவோடு போடுவீங்களா நாங்களும் போடுவோமுல்ல.. வாஙக் போட்டோ எவ்வள்வு ஜூப்பரா இருக்குன்னு வந்து பாருங்கள்,

  பதிலளிநீக்கு
 21. ஜெய்லாணிக்கு சரியாக கொழுக்கட்டை வாசனை அடித்து விட்டடது ஓடோடி வந்துட்டார், ஆனால் நான் பதிவு போட லேட்டாகிவிட்டது..

  பதிலளிநீக்கு
 22. நாஸியா நாங்க முடிவு பண்ணதே , 11 மணிக்கு மேல் தான்.

  பதிலளிநீக்கு
 23. நல்ல வேலை மலிக்கா டப்பா காலியாகும் போது உங்களுக்கு போட்டோ எடுக்கனுமுன்னு தோன்றுச்சே,

  பதிலளிநீக்கு
 24. //எனக்கும் ரொம்ப சந்தோஷம், இதில் ஒன்றும் சொல்லனும் நானும், மலிக்காவும் சேர்ந்து பார்க்க நினைத்தது ஒரு குழந்தைய ஆனால் பார்க்க முடியல‌//

  ஒரு வேளை ’’பிரியாணியா ’’?

  பதிலளிநீக்கு
 25. //LK கூறியது...//அதெப்படி ஜில்லுனு டீ ? கொஞ்சம் விளக்கம்//

  ICE TEA- see this-
  http://3.bp.blogspot.com/_k377yf01wXY/Se3lDj01VZI/AAAAAAAAD7Q/2ozDrg6KBSw/s400/ICE_TEA.jpg

  பதிலளிநீக்கு
 26. ஆ... எனக்கேன் வயிறு இப்படி எரியுதெனத் தெரியேல்லை:):).

  ஜலீலாக்கா கொழுக்கட்டையை மட்டும் சொல்லி பேர்ஸை மறைச்சிட்டா..... ஓடாதீங்க ஜலீலாக்கா அங்கேதான் வாறேன்...

  பதிலளிநீக்கு
 27. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.
  நட்புக்கு பாலமாய் உறவுக்கு வலிமையாய் இதில் உலவும் மனிதர்களின் மனங்கள் உலாவர என் பிராத்தணையும் வேண்டுகோளும்.

  ...... உண்மை.

  பதிவு வாசிக்கும் போது, நாமும் அங்கே இல்லையே என்று ஏங்க வைத்து விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 28. அதிரா நாஙக் கொடுத்தத உரக்க சொல்ல மாட்டோம்,

  உங்களுக்கும் பூஸாருடன் பர்ஸ் உண்டு
  ஜெய்லாணியின் கனிப்பு சரியே.

  செல்வி அக்கா விரைவில் சந்திக்கலாம்.

  பதிலளிநீக்கு
 29. ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் யார், கொழுக்க்கடைய கண்டு பிடிக்க, குழந்தைய கண்டி பிடிக்க ஓடி ஓடி களைத்து விட்டார் அவருக்கு ஒட்டக பாலில் ஒரு ஐஸ் டீ கொடுங்கள்.

  பதிலளிநீக்கு
 30. சந்திப்பையே கவிதை மாதிரி சொல்லி இருக்கிங்க , நல்லா enjoy பண்ணி இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 31. ஹிஹி.. ஜலீலாக்கா நம்ம குழந்தை மனச புரிஞ்சிகிட்ட முதல் ஆளு நீங்க தான்.. ஹிஹி..

  ** ஜெய்லானி பாய், உங்களுக்கு இனி துப்பறியும் ஜெய்லானின்டு பட்டம் குடுக்குறேன்!!*** ஹிஹி

  பதிலளிநீக்கு
 32. ////எங்கோ பிறந்து
  எங்கோ வளர்ந்து
  எங்கோ வாழும் நம்மை.....
  ஒன்றிணைக்கும் பாலமாய்.....
  இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.....

  நட்புக்கு பாலமாய்.....
  உறவுக்கு வலிமையாய்.....இதில்
  உலவும் மனிதர்களின் மனங்கள்
  உலாவர என் பிராத்தனையும் வேண்டுகோளும்....////

  சே...! என்ன வரிகள் மலிக்கா.....

  இது ஓர்
  புத்தம் புதுக்கவிதையாய்......
  புதுப் புனலாய்...
  புது மலராய்....
  ஓர் உரைநடையே அழகான கவிதை என்றால்.... கவிதை.?

  தாங்களும் ஜலீலா அவர்களும் சந்தித்ததும் - அதனால் ஏற்பட்ட தங்கள் மகிழ்ச்சியும், உள்ளத்தின் வெளிப்பாடுகளும், நட்பின் ஆழமும், அவ்வாழத்தினால் ஏற்பட்ட அன்பும், அதன் வெளிப்பாடாய்
  ///அப்பப்பா சந்தோஷதின் உச்சியில் அப்போது... என்னவோ பார்க்கே விழாக்கோலம் பூண்டதுபோலிருந்தது. போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்//// என்ற இந்த வரிகளும்...
  பின்னூட்டமும், கருத்துரைகளும் வழங்க வந்த - வருகின்ற - வந்துகொண்டிருக்கின்ற - வரவிருக்கின்ற நட்புகளாகிய நாங்களே யதார்த்தமாய் அனுபவித்த அனுபவங்களாய்.....

  அதுமட்டுமல்லாமல் இவ்வரிகள் தேன் சாப்பிட்ட நாக்கில், அத்தேனின் சுவை நாவை விட்டகளாலதைப் போல...

  எங்கள் நெஞ்சின் நாக்குகளில் என்றும் இருக்கும்.... இவ்வரிகளின் வார்த்தைகள்...

  அதோடு...
  தங்களின்
  /// எங்கோ பிறந்து.... எங்கோ வளர்ந்து.... எங்கோ வாழும் நம்மை..... ஒன்றிணைக்கும் பாலமாய்.....///
  ///நட்புக்கு பாலமாய்..... உறவுக்கு வலிமையாய்.....இதில் உலவும் மனிதர்களின் மனங்கள்///

  இந்த வைர வரிகளை வடித்த தங்களை என்னவென்று... எப்படி.... பாராட்டுவது... let's wait...!

  பொறுங்கள்... சந்தோஷத்தின் விளிம்பில் இருப்பதால் வார்த்தைகள் வரமாட்டேன்னு ஹைஷாட்டியம் (அடம்) பண்ணுது...

  இந்த வார்த்தைகளையும் - வரிகளையும் எங்கிருந்து பிடித்தீர்கள்...
  நட்பின் அன்பினால் அனைவரையும் ஈர்த்து...

  "எல்லாச் சாலைகளும் ரோம் நகர் நோக்கி" என்பதைப்போல
  எல்லா பின்னூட்டமும், கருத்துரைகளும் "நீரோடை" மட்டுமே நோக்கியா..?
  கொஞ்சம் ஓவராத்தான் போயிடிருக்கீங்க.... (வடிவேலு பாஷையில்)

  இறுதியாய்...
  ////உலாவர என் பிராத்தனையும் வேண்டுகோளும்/// there is மலிக்கா...!

  மொத்தத்தில்...
  இவ்விடுகை "மசுமை மாறா வரிகள்" (பசுமை மாறா காடுகள் வார்த்தைகளை பார்த்து அப்படியே copy) கொண்ட "மறக்கமுடியாத இடுகை" மசுமை = இனிமை (நாங்க கண்டுபிடிச்ச வார்த்தை)

  மிக்க மகிழ்ச்சியுடன்....

  வாழ்த்துக்கள்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 33. மலிக்கா, வெள்ளிக்கிழமை கவானீஜ் வந்தீங்களா ஒட்டகப்பண்ணையைப் பாக்க?

  நான் சனிக்கிழமை காவீஜ் வந்தேனே, மாட்டுப்பண்ணையை பார்வையிட!! :-))))

  பதிலளிநீக்கு
 34. மலிக்கா அவர்களே, நானும் வெள்ளைக்காக்காய் வைத்து பதிவு போட்டுவிட்டேன். படிக்கவும்.
  எனது இனிய மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 35. மல்லிபூ உங்க சந்திப்பு அருமை

  பதிலளிநீக்கு
 36. மல்லிபூ உங்க சந்திப்பு அருமை

  பதிலளிநீக்கு
 37. என்ன மலிக்கா மேடம்...

  நான் எவ்வவளவு கஷ்டப்பட்டு கருத்துரையை type செய்து (13 April) அனுப்பி பத்து நாள் ஆகுது...

  இதுவரை ஒரு தேங்க்ஸ்கூட பதிலாய் காணோம்...

  நானும் தினமும் வந்து பார்த்துட்டு பார்த்துட்டு ஏமாந்து போறேன்...
  இதற்கும், இதன் முன் இடுகையையும் பார்க்கவே இல்லையா... மறந்தேபோச்சா...!

  எனக்கு வருத்தம் என்னவென்றால்... வலைதள நட்பைப் பற்றியும் நட்புக்கு பாலமாய்..... உறவுக்கு வலிமையாய்.....இதில்
  உலவும் மனிதர்களின் மனங்கள் பற்றி பெரிய கருத்துரையிட்டும் பதிலாய் ஒரு வரிகூட காணோமே....! என்பதுதான்....

  நட்புடன்...
  காஞ்சி முரளி..

  பதிலளிநீக்கு
 38. மன்னித்துக்கொள்ளுங்கள் முரளி.
  1 வாரம் லீவ் எடுத்ததால் நிறைய பின்னூட்டங்கலுக்கு பதில் போடமலிருக்கு நாளை அனைத்தையும் போட்டு விடுகிறேன்.

  மீண்டும் சொல்கிறேன் மன்னித்துக்கொள்ளுங்கள்.ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  பதிலளிநீக்கு
 39. என்ன மலிக்கா, காஞ்சி முரளி எவ்வள்வு விளக்க்மா அழகா சொல்லி இருக்கிறார்,கமெண்டு போட இப்படியா லீவு எடுபப்து.

  பதிலளிநீக்கு
 40. இந்த கொழுகட்டை ஜெய்லானியௌம்,தொப்பை ஆனாந்ததாவும் ல்வட்டிட்டு போய் ஒரு வாரமா வைத்து சாப்பிட்டு, மீதிய அமைச்சருக்கு வேற கொடுத்தாச்சு

  பதிலளிநீக்கு
 41. நாஸியா கூறியது...
  நல்ல எஞ்சாய் பண்ணினீங்களா என்னை விட்டுட்டு!! அவ்வ்வ்வ்வ்

  நான் பாவம் தானே! முன்னமே தெரிஞ்சிருந்தா ஐடியா பண்ணிருப்பனே...//

  பாவம்தான் பச்சபுள்ளதான் பிஸீயா இருந்துச்சே அதான்.நன்றி நாஸியா..  S Maharajan கூறியது...
  //எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி//

  மகிழ்ச்சியாக சொல்லிவிட்டிர்கள்
  //எனக்கு கிடைத்த விருதுவினை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்//
  (http://maarasa.blogspot.com/).//

  எடுத்துக்கொண்டேன் மகராஜன் விருதை. மிக்க நன்றி கருத்துக்கும் விருதுக்கும்..

  பதிலளிநீக்கு
 42. சாரதாவிஜயன் கூறியது...
  /விரல்களுக்குள் வீணைமீட்டிய நேசம் விடுபடமுடியாமல் விட்டு விலகியது.
  போய்வருகிறேன் எனச்சொல்லியபோதுமனம் கனத்ததுபோலிருந்தது
  அதை காட்டிக்கொள்ளாமல் இருவரும் அணைத்துக்கொண்டு சென்றுவருகிறேன்/

  அன்பு மகளே!
  உனை நான் காணும் காலம் எப்போது?
  விரைவில் வா என் அன்பை தா.
  நானும் உன்னால் கவிஎழுத கற்றுக்கொண்டேன்.//

  என்ன தவம் செய்தேனோ அன்னையும் தந்தையும் சகோதரர்களும். சகோதரிகளும். தோழிகளும் நல்ல மனக்கொண்ட நட்புகளும்.கிடைக்க என்ன தவம் செய்தேனோ.

  அன்பு அன்னையே தாங்களின் அன்புக்கு முன்னேவேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை.

  நிச்சியம் சந்திப்பேம் ஒருநாளில் அந்நாள் பொன்நாள்..  /malar கூறியது...
  என்னவோ பார்க்கே விழாக்கோலம் பூண்டதுபோலிருந்தது. போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.[என்ன நான் கொஞ்சம் குனிந்து நின்றேன். அக்கா சொன்னார்கள் முன்பே தெரிந்திருந்தால்
  ஹை ஹீல்ஸ் போட்டு வந்திருப்பேனப்பா] எனக்காக சின்ன பர்ஸ் அக்கா தந்தார்கள் அதை திறக்கும்போதெல்லாம் என் நியாபகம் வரனுமென்று.அதில் 1 திர்கம் காயின்வேறு. அப்போதுபார்த்து என் கவிதை [மாண்பின் ஆட்சி]
  பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்திற்காக நான் எழுதிய கவிதை.
  இனியதிசைகள் புத்தகத்தில் வந்துள்ளது என அண்ணன் வந்து தந்தார்கள். மகிழ்ச்சி பன்மடங்கானது..//

  மிகுந்த மகிழ்ச்சியாய் உணர்வுகள் மலிக்கா.
  இருவரும் சந்திதது நானும் கலந்துகோண்டதுபோலிருக்கு.

  வாழ்த்துக்கள் இனியதிசைகளில் கவிதை வந்தமைக்கு..

  நாமும் காண்போம் காலச்சுழச்சியில்..

  மிக்க நன்றிப்பா../

  நிச்சியம் நிச்சியம் காண்போம் மலர்.

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 43. malar கூறியது...
  suuper super super.

  வாழ்த்துக்கள் மகிழ்ச்சியின் உச்ச்ததில் மலிக்கா..

  ஆமாம் மலர் மிக்க நன்றி மலர்மா..

  /ஜெய்லானி கூறியது...
  கொழக்கட்டை , க்ளூ அது ஒரு வேளை ஆல் இன் ஆலா இருக்குமோ ? . எதுக்கும் இதை போஸ்ட் பண்ணிட்டு பிறகு பாக்கறேன். இன்ஷா அல்லாஹ்//

  என்ன ஒரு மூளை கண்டுபிடித்துக்கு பரிசு மூனு கொலுக்கட்டை ஓகே
  ஜெய்லானி..

  பதிலளிநீக்கு
 44. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  ஓஹோ!!!
  சமையலரசியும், கவிதாயினியும்
  சந்தித்து இருக்கீங்க, சுவராசியமாய்
  எழுதி இருக்கீங்க.//

  ஆமாம் சை கொ ப சந்தோஷம் தாங்கல ரொம்ப சந்தோஷம் சை கோ பா. கருத்துக்களூக்கு..

  11 ஏப்ரல், 2010 10:41 am

  அபுஅஃப்ஸர் கூறியது...
  சந்திப்புக்கள் நிறைய சந்தோஷத்தைக்கொடுக்கும்

  வாழ்த்துக்கள்.

  மிக்க நன்றி அபு..

  11 ஏப்ரல், 2010 11:58 am

  நாடோடி கூறியது...
  வெள்ளிகிழ‌மையை ந‌ல்லா எஞ்சாய் ப‌ண்ணியிருக்கீங்க‌......///

  என்னா ஒரு எஞ்சாய் சூப்பர் மறக்கமுடியாதது ஸ்டீபன். மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 45. சுசி கூறியது...
  நல்லா எழுதி இருக்கீங்க..

  நட்பு நிலைக்கட்டும்./

  ஆமீன். இறைவன் அருள்புரிவானாக..

  மிக்க நன்றி சுசி..


  .. மன்னார்குடி கூறியது...
  வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி மன்னார்குடி..

  பதிலளிநீக்கு
 46. ஜாக்கி சேகர் கூறியது...
  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.
  நட்புக்கு பாலமாய் உறவுக்கு வலிமையாய் இதில் உலவும் மனிதர்களின் மனங்கள் உலாவர என் பிராத்தணையும் வேண்டுகோளும்.  உண்மையான வரிகள்...//


  வாங்க வாங்க ஜாக்கி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  சந்தோஷிமகா. கூறியது...
  /உதிர்ந்துவிடும் மலர்களைப்போல் ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பல உள்ளங்களில் வேர்விட்டு உறுதியாய் உதிராமல் வாழ்ந்திடவேண்டும்.
  இன்னும் இந்தப்பதிவுலம் எத்தனை எத்தனை மகிழ்சியையும் சந்தோஷங்களையும் தரக்காத்திரிக்கிறதோ!
  அதற்காக நானும் காத்திருக்கிறேன்//

  நிச்சியமாக நீங்க சொன்ன வரிகள் உண்மை அதேபோல் நட்பைதான் எதிர்பார்க்கிறேன் என்னாலும்.

  நீங்க தோழியாக்கிடைத்ததில் மகிழ்ச்சி மலிக்கா.
  சென்னையில் நிச்சியம் சந்திப்போம்
  சந்தோஷமாய் சந்தோஷிமகா..


  சந்தோஷிமகா நிச்சியம் சந்திப்போம்.
  தாங்களீன் அன்பான கருத்துக்குமிக்க நன்றி. நீங்க தோழியாக்கிடைத்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 47. LK கூறியது...
  உங்கள் நட்பு நீடித்து நிலைக்க இறைவன் அருளட்டும் . அருமையான வர்ணனை.

  தாங்களின் வாக்கு பலிக்கட்டும் எல் கே.

  // சூடான நேரத்தில் ஒட்டகப்பால் சூடு என்பதால் ஜில்லுன்னு டீ குடிச்சிட்டு.//

  அதெப்படி ஜில்லுனு டீ ? கொஞ்சம் விளக்கம்.//

  சூட்டான டீபோட்டு கப்பில் ஊற்றி அதில் ஒரு சிறிய ஐஸ்கட்டி போட்டுகுடித்தால் அதுதான் ஐஸ் டீ.. அப்படித்தானே பதிவர் பெருமக்களே!  //ஸாதிகா கூறியது...
  வாவ்..கொழுக்கட்டையுடன் சந்திப்பு.படிக்கவே சந்தோஷமாக இருந்தது.//

  ஆமாக்கா மிகுந்த மகிழ்ச்சிக்கா..

  பதிலளிநீக்கு
 48. செந்தமிழ் செல்வி கூறியது...
  நல்ல வர்ணனை! நான் அவசியம் சந்திக்கணும்னு நினைக்கிறவர்களில் ஒருவர் ஜலீலா.
  தொடரட்டும் நட்பு! வாழ்த்துக்கள்!!

  //

  வாங்க செல்வியக்கா.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிக்கா..

  மாதேவி கூறியது...
  உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன்.

  மிக்க மகிழ்ச்சி மாதவி...

  11 ஏப்ரல், 2010 3:25 pm

  பதிலளிநீக்கு
 49. Jaleela கூறியது...
  மலிக்கா ஒரு இனிய மாலை பொழுதில் நாம் சந்தித்தது, ஆகா, சாதாரணமாஅகவே, பழை பிரண்டுமார்களை (தோழிகளை) தேடி தேடி போய் சந்திப்பேன். எல்லோரும் சொல்வார்கள் நீ ஒருத்தி தான் என்றும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பேசுகீறாய் என்பார்கள்.

  எனக்கும் ரொம்ப சந்தோஷம், இதில் ஒன்றும் சொல்லனும் நானும், மலிக்காவும் சேர்ந்து பார்க்க நினைத்தது ஒரு குழந்தைய ஆனால் பார்க்க முடியல‌//

  அக்கா தாங்களை சந்தித்தில் எனக்கு மிகுந்த சந்தோஷம். எனக்கு அக்கா கிடையாது அந்த குறைதனைபோக்கிவிட்டீர்கள் தங்கள் அன்பால்...

  ஆமாக்கா குழந்தைதான் பிஸியாக இருந்ததே

  Jaleela கூறியது...
  ஜெய்லாணிக்கு சரியாக கொழுக்கட்டை வாசனை அடித்து விட்டடது ஓடோடி வந்துட்டார், ஆனால் நான் பதிவு போட லேட்டாகிவிட்டது../

  கொலுக்கட்டை கொடுத்துட்டேன் ஜெய்லானிக்கு.

  11 ஏப்ரல், 2010 5:18 pm

  Jaleela கூறியது...
  நீங்க மட்டும் தான் போட்டோவோடு போடுவீங்களா நாங்களும் போடுவோமுல்ல.. வாஙக் போட்டோ எவ்வள்வு ஜூப்பரா இருக்குன்னு வந்து பாருங்கள்,//

  அச்சோ எவ்வளவு அழகா இருந்த்து பார்த்தேன்

  11 ஏப்ரல், 2010 5:19 pm

  பதிலளிநீக்கு
 50. Jaleela கூறியது...
  நல்ல வேலை மலிக்கா டப்பா காலியாகும் போது உங்களுக்கு போட்டோ எடுக்கனுமுன்னு தோன்றுச்சே,//

  ஹி ஹி ஹி ஹி வந்தவர்களுகும் கொடுத்து அசத்திட்டோமுல்ல

  11 ஏப்ரல், 2010 5:20 pm

  Jaleela கூறியது...
  நாஸியா நாங்க முடிவு பண்ணதே , 11 மணிக்கு மேல் தான்.

  11 ஏப்ரல், 2010 5:21 pm

  ஜெய்லானி கூறியது...
  //எனக்கும் ரொம்ப சந்தோஷம், இதில் ஒன்றும் சொல்லனும் நானும், மலிக்காவும் சேர்ந்து பார்க்க நினைத்தது ஒரு குழந்தைய ஆனால் பார்க்க முடியல‌//

  ஒரு வேளை ’’பிரியாணியா..

  அதேதான் கில்லாடி கண்டுபிடிப்பு. வாழ்க ஜேம்ஸ்பாண்டு8

  பதிலளிநீக்கு
 51. ஜெய்லானி கூறியது...
  //LK கூறியது...//அதெப்படி ஜில்லுனு டீ ? கொஞ்சம் விளக்கம்//

  ICE TEA- see this-
  http://3.bp.blogspot.com/_k377yf01wXY/Se3lDj01VZI/AAAAAAAAD7Q/2ozDrg6KBSw/s400/ICE_TEA.jpg//

  என்னா ஒரு விளக்கம் ஜெய்லானினினினினினி

  11 ஏப்ரல், 2010 8:26 pm

  athira கூறியது...
  ஆ... எனக்கேன் வயிறு இப்படி எரியுதெனத் தெரியேல்லை:):).

  ஜலீலாக்கா கொழுக்கட்டையை மட்டும் சொல்லி பேர்ஸை மறைச்சிட்டா..... ஓடாதீங்க ஜலீலாக்கா அங்கேதான் வாறேன்.../

  அதிரா மோர்தரவா கொலுக்கட்டை வயிறு எரியும்போதுதந்தா சரிவராது அதான்.

  நாங்க உண்மையமட்டும் சொல்லுரவுக..ஹா ஹாஹ்

  12 ஏப்ரல், 2010 2:38 am

  பதிலளிநீக்கு
 52. Chitra கூறியது...
  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.
  நட்புக்கு பாலமாய் உறவுக்கு வலிமையாய் இதில் உலவும் மனிதர்களின் மனங்கள் உலாவர என் பிராத்தணையும் வேண்டுகோளும்.

  ...... உண்மை.

  பதிவு வாசிக்கும் போது, நாமும் அங்கே இல்லையே என்று ஏங்க வைத்து விட்டீர்கள்!//

  மிகுந்த மகிழ்ச்சி சித்ராதோழி.

  நட்புகள் சந்திக்கும்போது அதன் ஆனந்தமே தனி அலாதி அதை அனுபவித்ததில் மிக்க சந்தோஷம்.

  மிக்க நன்றி சித்ராமேடம் தோழி

  12 ஏப்ரல், 2010 7:59 am

  Jaleela கூறியது...
  அதிரா நாஙக் கொடுத்தத உரக்க சொல்ல மாட்டோம்,

  உங்களுக்கும் பூஸாருடன் பர்ஸ் உண்டு
  ஜெய்லாணியின் கனிப்பு சரியே.

  செல்வி அக்கா விரைவில் சந்திக்கலாம்.

  12 ஏப்ரல், 2010 8:44 am

  Jaleela கூறியது...
  ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் யார், கொழுக்க்கடைய கண்டு பிடிக்க, குழந்தைய கண்டி பிடிக்க ஓடி ஓடி களைத்து விட்டார் அவருக்கு ஒட்டக பாலில் ஒரு ஐஸ் டீ கொடுங்கள்.//

  அதையும் அப்பவே ஜெய்லானிக்கு அனுப்பிச்சிட்டேன் என்ன ஒன்னு ஒட்டகத்தையே அனுப்பிட்டேன் எப்புடி உங்க தங்கையின் சாமர்த்தியம்.

  பதிலளிநீக்கு
 53. sarusriraj கூறியது...
  சந்திப்பையே கவிதை மாதிரி சொல்லி இருக்கிங்க , நல்லா enjoy பண்ணி இருக்கீங்க..//

  ஆஅமாம் சாருக்கா உங்களை நிச்சியம் பார்ப்பேன் தஞ்சைவந்து...

  12 ஏப்ரல், 2010 11:16 am

  நாஸியா கூறியது...
  ஹிஹி.. ஜலீலாக்கா நம்ம குழந்தை மனச புரிஞ்சிகிட்ட முதல் ஆளு நீங்க தான்.. ஹிஹி..

  ** ஜெய்லானி பாய், உங்களுக்கு இனி துப்பறியும் ஜெய்லானின்டு பட்டம் குடுக்குறேன்..

  அச்சச்சோ குழந்த அழுவுது..
  நாங்க ஜெய்லானிக்கு ஜேம்ஸ்பாண்ட்8 ந்னு பட்டம் கொடுத்துட்டோமே..நாஸியா

  பதிலளிநீக்கு
 54. Kanchi Murali கூறியது...
  ////எங்கோ பிறந்து
  எங்கோ வளர்ந்து
  எங்கோ வாழும் நம்மை.....
  ஒன்றிணைக்கும் பாலமாய்.....
  இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.....

  நட்புக்கு பாலமாய்.....
  உறவுக்கு வலிமையாய்.....இதில்
  உலவும் மனிதர்களின் மனங்கள்
  உலாவர என் பிராத்தனையும் வேண்டுகோளும்....////

  சே...! என்ன வரிகள் மலிக்கா.....

  இது ஓர்
  புத்தம் புதுக்கவிதையாய்......
  புதுப் புனலாய்...
  புது மலராய்....
  ஓர் உரைநடையே அழகான கவிதை என்றால்.... கவிதை.?//

  நட்பில் உண்டாகும் உறவுகளில் பேதங்கள் வருவது குறைவு முரளி.
  நட்பை நான் மிகவும் நேசிப்பவள்.
  அதைவிட நட்பாய் வரும் உறவையும் நேசிப்பவள்.

  நட்பென்னும்போது தானாய் வருகிறது கவிதை..

  //தாங்களும் ஜலீலா அவர்களும் சந்தித்ததும் - அதனால் ஏற்பட்ட தங்கள் மகிழ்ச்சியும், உள்ளத்தின் வெளிப்பாடுகளும், நட்பின் ஆழமும், அவ்வாழத்தினால் ஏற்பட்ட அன்பும், அதன் வெளிப்பாடாய்
  ///அப்பப்பா சந்தோஷதின் உச்சியில் அப்போது... என்னவோ பார்க்கே விழாக்கோலம் பூண்டதுபோலிருந்தது. போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்//// என்ற இந்த வரிகளும்...
  பின்னூட்டமும், கருத்துரைகளும் வழங்க வந்த - வருகின்ற - வந்துகொண்டிருக்கின்ற - வரவிருக்கின்ற நட்புகளாகிய நாங்களே யதார்த்தமாய் அனுபவித்த அனுபவங்களாய்..... //


  அங்கிருந்து அனுபவித்ததுபோல் உணர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

  //அதுமட்டுமல்லாமல் இவ்வரிகள் தேன் சாப்பிட்ட நாக்கில், அத்தேனின் சுவை நாவை விட்டகளாலதைப் போல...

  எங்கள் நெஞ்சின் நாக்குகளில் என்றும் இருக்கும்.... இவ்வரிகளின் வார்த்தைகள்...//

  தேனைவிட சுவைமிகுந்த கருத்துக்களாய் தாங்களின் வரிகள்


  //அதோடு...
  தங்களின்
  /// எங்கோ பிறந்து.... எங்கோ வளர்ந்து.... எங்கோ வாழும் நம்மை..... ஒன்றிணைக்கும் பாலமாய்.....///
  ///நட்புக்கு பாலமாய்..... உறவுக்கு வலிமையாய்.....இதில் உலவும் மனிதர்களின் மனங்கள்///

  இந்த வைர வரிகளை வடித்த தங்களை என்னவென்று... எப்படி.... பாராட்டுவது... let's wait...!

  பொறுங்கள்... சந்தோஷத்தின் விளிம்பில் இருப்பதால் வார்த்தைகள் வரமாட்டேன்னு ஹைஷாட்டியம் (அடம்) பண்ணுது...//

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை முரளி. வார்த்தைகளின் அணிவகுப்பு நட்பென்றதும் அணி அணியாய் வந்து நிற்கிறது.
  நான் வார்த்தை தேடுவதேயில்லை ஒருபோதும். என்னுள் அது நிறைந்து கிடப்பதுபோல் ஓர் உணர்வு.அதனால் வந்து கொட்டிவிடுகிறது.

  //இந்த வார்த்தைகளையும் - வரிகளையும் எங்கிருந்து பிடித்தீர்கள்...
  நட்பின் அன்பினால் அனைவரையும் ஈர்த்து...

  "எல்லாச் சாலைகளும் ரோம் நகர் நோக்கி" என்பதைப்போல
  எல்லா பின்னூட்டமும், கருத்துரைகளும் "நீரோடை" மட்டுமே நோக்கியா..?
  கொஞ்சம் ஓவராத்தான் போயிடிருக்கீங்க.... (வடிவேலு பாஷையில்)//

  எல்லாம் ஆசைதானது யாரைத்தான் விட்டது.

  ஓவராத்தான் போறேனோ அதான் பிரேக் போட்டாச்சி அதானல்தான் ஒரு வாரம் லீவ் ..  /இறுதியாய்...
  ////உலாவர என் பிராத்தனையும் வேண்டுகோளும்/// there is மலிக்கா...!

  மொத்தத்தில்...
  இவ்விடுகை "மசுமை மாறா வரிகள்" (பசுமை மாறா காடுகள் வார்த்தைகளை பார்த்து அப்படியே copy) கொண்ட "மறக்கமுடியாத இடுகை" மசுமை = இனிமை (நாங்க கண்டுபிடிச்ச வார்த்தை)//

  ஆகா தமிழில் புது வார்த்தைகள் கண்டுபிடித்த முரளி வாழ்க வாழ்க

  //மிக்க மகிழ்ச்சியுடன்....

  வாழ்த்துக்கள்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....//

  முரளி இத்தளங்களில் முகம் தெரியாமல் எனக்கு எத்தனையோ நல்லுள்ளங்கள் அன்னையாய் தந்தையாய் தோழியாய் சகோதர சகோதரியாய் நட்ப்பாய் கிடைத்திருக்கிறது அந்த சொந்தங்களை என்றேனும் ஒருநாள் சந்திப்பேன் என்ற நம்பிக்கையும் இருக்கு. அதில் தாங்களும் ஒருவர் நட்பான உறவாய்
  என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமே.

  எல்லா நட்புகளின் உறவுகளின் பந்தங்களை வலிமையாக்கித்தந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு.

  தாங்களின் அன்பான கருத்தாளமிக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி முரளி..

  என்றும்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 55. மிக்க நன்றி..நன்றி...நன்றி....நன்றி...

  நட்புடன்...
  காஞ்சி முரளி

  பதிலளிநீக்கு
 56. ஹுஸைனம்மா கூறியது...
  மலிக்கா, வெள்ளிக்கிழமை கவானீஜ் வந்தீங்களா ஒட்டகப்பண்ணையைப் பாக்க?

  நான் சனிக்கிழமை காவீஜ் வந்தேனே, மாட்டுப்பண்ணையை பார்வையிட!! :-))))//

  ஓகோ அதான் அந்த பக்கம் ஒரே கூட்டமா நின்னாங்களோ.
  முதலாளியம்மா வந்தீங்கன்னு..  /பித்தனின் வாக்கு கூறியது...
  மலிக்கா அவர்களே, நானும் வெள்ளைக்காக்காய் வைத்து பதிவு போட்டுவிட்டேன். படிக்கவும்.
  எனது இனிய மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  நான் சுட்டகாக்காயைவைத்து தாங்கள் சுட்டுகொண்டுபோய். எழுதிய கதை சூப்பர். சுதாகர்சார்..நன்றி...

  14 ஏப்ரல், 2010 9:29 am

  பதிலளிநீக்கு
 57. பாப்பு கூறியது...
  மல்லிபூ உங்க சந்திப்பு அருமை.//  பாப்பு கூறியது...
  மல்லிபூ உங்க சந்திப்பு அருமை
  //

  நம்ம சந்திப்புன்னு சொல்லனும் ஓகே.

  நீயும் வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி பாப்பு..

  பதிலளிநீக்கு
 58. Jaleela கூறியது...
  என்ன மலிக்கா, காஞ்சி முரளி எவ்வள்வு விளக்க்மா அழகா சொல்லி இருக்கிறார்,கமெண்டு போட இப்படியா லீவு எடுபப்து.//


  என்ன செய்வது அக்கா உடம்பு சரியில்லாததால் லீவ்போடவேண்டியாக்கிப்போச்சி...

  Jaleela கூறியது...
  இந்த கொழுகட்டை ஜெய்லானியௌம்,தொப்பை ஆனாந்ததாவும் ல்வட்டிட்டு போய் ஒரு வாரமா வைத்து சாப்பிட்டு, மீதிய அமைச்சருக்கு வேற கொடுத்தாச்சு
  //

  கொடுத்தாச்சா அச்சோ

  பதிலளிநீக்கு
 59. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி! ஜலீலாக்கா ப்ளாக்கில் படித்துவிட்டு அது நீங்களாகதன் இருக்கும் என்று நினைத்தேன். ஏன்னா 'மலிக்கா கேட்ட கொழுக்கட்டை ஞாபகம் வந்தது அதையும் செய்து எடுத்து கொண்டு'- இந்த வார்த்தைய வச்சி கெஸ் பண்ணிக்கிட்டேன் :-) அவங்க தந்த லிங்க் வழியா நான் நினைத்தது கரெக்டா போச்சு :)

  //அருகே சென்று லேசாக உரசியதுபோல் நின்றேன் ஆளுக்கு பயம் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் குனிந்தே என்னவோ அதை எடுக்கப்போவதுபோல் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  இன்னும் நெருக்கமாக நின்றேன். திரும்பி என்னை பார்க்கும்போது அணைத்துக்கொண்டேன் அக்கா என்று//

  ஆஹா.. அருமையான ஆரம்பம்! :) அந்தக் காட்சி கண்முன்னால் ஓடுது மலிக்கா :) சந்தோஷமான சந்திப்புகளையும், நிலையான நட்புகளையும் நம்மனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது