நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நாங்கள் நாங்களில்லை!





இது நாங்களென்று நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல

அந்த அழகான சந்திப்பின் அன்பு மனம்
ஆலினார் ஜலீலாக்கா தான்


ஹி ஹி ஹி ஹா ஹா

என்ன ஜலீலாக்கா பயந்துட்டீங்களா. 
போட்டோவை போட்டுவிட்டேன்னு.
இது நாமா?








சிந்திக்க சில வரிகள்
கெடுதலிலும் நன்மைகளை செய்தல் சிறந்தது
அந்த நன்மையைவிட கெடுதல் தன்னை விடுதல் உயர்ந்தது

மெளனமாக இருப்பதைவிட பேச்சு நல்லது
தீயபேச்சைவிட மெளனம் அதை காத்தல் சிறந்தது

தீயவரின் உறவைவிட தனிமை சிறந்தது
அந்த தனிமையிலும் நல்லவரின் உறவு உயர்ந்தது

உறவுகளின் வலுவைவிட நட்பு சிறந்தது
அந்த நட்புக்குள்ளே உறவு அது வருதல் உயர்ந்தது...

அன்புடன் மலிக்கா

12 கருத்துகள்:

  1. ///கெடுதலிலும் நன்மைகளை செய்தல் சிறந்தது
    அந்த நன்மையைவிட கெடுதல் தன்னை விடுதல் உயர்ந்தது///

    நல்ல வரிகள்....

    ////மெளனமாக இருப்பதைவிட பேச்சு நல்லது
    தீயபேச்சைவிட மெளனம் அதை காத்தல் சிறந்தது/////

    தீமையானவற்றைவிட மௌனம் சிறந்ததுதான்....

    ////தீயவரின் உறவைவிட தனிமை சிறந்தது
    அந்த தனிமையிலும் நல்லவரின் உறவு உயர்ந்தது////
    தங்கள் வரிகள் என்னவோ உண்மை...

    ////உறவுகளின் வலுவைவிட நட்பு சிறந்தது
    அந்த நட்புக்குள்ளே உறவு அது வருதல் உயர்ந்தது////

    என்ன வரிகள் மலிக்கா....
    உறவுகளைவிட நட்பு மேலானதுதான்....
    ஆனால்
    அந்நட்பு எதையும் எதிர்பாராத நட்பாகவும்;
    துன்பம் வரும் வெளியில்
    தோள் கொடுக்கும்
    தோழமையான நட்பு மட்டுமே.....
    இவ்வரிகள் என்னை மிகவும் பதித்த வரிகள்...

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்....

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்....
    காஞ்சி முரளி..........

    பதிலளிநீக்கு
  2. //அந்த அழகான சந்திப்பின் அன்பு மனம்
    ஆலினார் ஜலீலாக்கா தான்//


    ஹையா!! சபாஷ் ஜெய்லானி, சரியா கண்டுபிடுச்சிட்டே..பரிசு உனக்குத்தான்..
    ( ரெண்டு கொழுக்கட்டை பார்ஸல் பிளீஸ்..)

    பதிலளிநீக்கு
  3. வரிகளை ரசித்து அது மனதில் பதியவைத்த.
    நட்புடன் முரளிக்கு.
    என் அன்பான நன்றிகள் பல.

    என்றும் அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு
  4. ஜெய்லானி கூறியது...
    //அந்த அழகான சந்திப்பின் அன்பு மனம்
    ஆலினார் ஜலீலாக்கா தான்//


    ஹையா!! சபாஷ் ஜெய்லானி, சரியா கண்டுபிடுச்சிட்டே..பரிசு உனக்குத்தான்..
    ( ரெண்டு கொழுக்கட்டை பார்ஸல் பிளீஸ்..)//

    என்னது கண்டுபிடிச்சீங்களா.
    நைஸா இங்கவந்துபாத்து அங்கபோய் கருதச்சொல்லிட்டு. மீண்டும் இங்க வந்து கண்டுபிடிச்சிட்டேஏஏஏஏஏஏனென்று கும்மாளம் வேறு.

    கொழுக்கட்டை கிடைக்கும் 2 என்ன 20 அனுப்புகிறோம். காக்கா காலில் கொத்தாம கொடுத்திடு காக்கா.எங்க காக்காவுக்கு.[எங்க ஊரில் அண்ணனை காக்கான்னுதான் சொல்லுவோம்..

    பதிலளிநீக்கு
  5. அருமையான சந்திப்பை மிக அருமையாக கவிதைபாடிக்காட்டிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் சந்திப்பை கண்முன்னே காட்ச்சியாவே ஓடவிட்டுடீங்க பர்தா பார்த்து பழகிப்போனதால் நான் கண்டு பிடித்து விட்டேன் ஜலி அக்கா யாரு? மல்லி அக்கா யாருன்னு.எப்பூடி.....

    //மெளனமாக இருப்பதைவிட பேச்சு நல்லது
    தீயபேச்சைவிட மெளனம் அதை காத்தல் சிறந்தது//
    நச் வரிகள்...

    பதிலளிநீக்கு
  7. இது நாங்க இல்லை, நாங்க‌ன்னு நீங்க நினைத்து கொண்டா அதுக்கு நாங்க‌ பொறுப்பில்லை

    பதிலளிநீக்கு
  8. ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் யார், கொழுக்க்கடைய கண்டு பிடிக்க, குழந்தைய கண்டி பிடிக்க ஓடி ஓடி களைத்து விட்டார் அவருக்கு ஒட்டக பாலில் ஒரு ஐஸ் டீ கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. மல்லிகுட்டி உங்க சந்திப்பு ரொம்ப அருமை படிக்க படிக்க ரொம்ப சூப்பர்

    பதிலளிநீக்கு
  10. மல்லிகுட்டி போட்ட சூப்பர்

    பதிலளிநீக்கு
  11. மல்லிபூ உங்க அன்னன் போட்ட டீ நல்ல இருந்தது ஒட்டக பால் கிடைகவில்லை என்ற எக்கம் போயிவிட்டது மல்லிகுடிஉன் எலுத்தால் எங்க மனதை மய்க்கிவிட்டாயி

    பதிலளிநீக்கு
  12. எங்க இது அநியாயமானதா தெரியலங்க...
    Mar 29 கருத்துரைக்கு Apr 11லயா பதில்...!

    சரி...
    ஜெய்லானி மாதிரி நான் ஒன்னும் 'துப்பறியும் புலி" இல்லை...
    நான் கொஞ்சம் டியூப்லைட்தான்.... புதிர் போட்டா என்னால கண்டுபிடிக்க முடியல.. அதனால க்ளிக் செய்து, யார்னு அறிந்தேன்....

    இந்த போட்டோவில் இருவரில் தாங்கள் யார் என்பதை நீங்களே தங்கள் இடுகையில் கூறியுள்ளீர்கள்.... I know....

    நட்புடன்...
    காஞ்சி முரளி.....

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது