இந்தபதிவ எழுத அழைத்த அக்பருக்கும் பல்சுவை நிஜாமுதீன் அண்ணாவுக்கும் மிக்க நன்றி,
என்ன கத சொல்லுறதுன்னு யோசிச்சப்ப மண்டையில எதுவுமே தோனல.
இப்புடி தோன்றும் அங்கே ஏதாவது இருந்தாத்தானேன்னு. நம்ம ஹுசைன்னமா கேக்குறதுபோல தெரியுது.
இருந்தாலும் புதுசா ஒரு கத சொல்லுறேன் கேளுங்க
படிச்சிட்டு இது புதுசான்னு கேட்டவங்களுக்கு.
மங்குனி அமைச்சரிடம் சொல்லி மங்குனி சீடி அனுப்பிவைக்கப்படும்..
ஒரு ஊர்ல கிரேண்மா கிரேண்மா ஒரு பாட்டி இருந்தாங்களாம்
[அச்சோ கிரேண்மான்னாலே பாட்டிதானே சும்மா இடையில் கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது ஓகே.]
அவங்க எப்போது வடைசுடுவாங்களாம்[ஜலீக்கா விதவித சுடுவது போலவல்ல] வடை சுட்டு போரடிச்சிபோச்சின்னு அன்னிக்கி ரெஸ்ட் எடுத்தாங்களாம், அப்போ அங்கே வந்த வெள்ள காக்காவுக்கு அதர்ச்சியா போச்சாம் அச்சோ இந்த கிரேண்மா இன்னக்கி வடை சுடலையேன்னு.
பசிதாங்காமுடியாத வெள்ளக்காக்கா எப்படியும் இன்னிக்கி ஓசியில[என்னவோ எப்போதும் காசுகொடுத்து துண்ணுரதுபோல] வடை திங்கனுமேன்னு வெ வெ வே ந்னு கத்திக்கிட்டே[என்ன காக்கா
கா கான்னுல்ல கத்தும் அச்சொ இது வெள்ள காக்கான்னு சொன்னேனே] பறந்து திரிஞ்சிசும் ஒன்னும் கிடைக்கலையாம் அப்படியே வந்துகிட்டு இருக்கும்போது
திருட்டு நகையெல்லாம் வாங்கும் பிளாக்[கருப்பு] சேட்டு கடைபக்கம் பறக்கும்போது கடையிக்குள்ளே சேட்டுக்கு முன்னாடி ஒரு சில்வர் தட்டுல வட்டமா இருந்த தங்கக்காயின பார்த்த வெள்ளக்காக்காவுக்கு ஆகா வடையிருக்கே!
அதுவும் வித்தியாசமா ஹோலில்லாமயிருக்கே!
கடைக்குள் இருப்பதால் வடை இப்படிஈ மொய்காம மின்னுதோ எப்படியிருந்தாலும் சரி இத எடுத்து சாப்பிடனும் அப்பதான் இன்னக்கியுள்ள பசிபோகுமுன்னு நெனச்சிகிட்டே
எதிர்தமாதரி உள்ள மரத்துல நின்னுகிட்டே[எப்படி உக்கார முடியும் அதாலா? முடியும் நீ பாக்கலனா விடு விடு] கண்கானிச்சிகிட்டே இருந்திச்சாம் அப்போன்னு பாத்து சேட்டு போட்டிருந்த தொப்பி சரிந்துவிழ அத எடுக்க குனிஞ்சப்ப வெள்ள காக்கா காயின அபேஷ் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடுச்சாம்
அச்சோ என் காயின் தங்கக்காயின் புடிங்கன்னு சேட்டு காக்கா பின்னாலேயே கத்திக்கிட்டு ஓட,
காக்கா பறந்துவந்து கிரேண்மா வீட்டுமேல உக்காந்து வாயில் இருந்த வடையின்னு நெனச்ச காயின கையில் //ச்சே// காலில் பிடிச்சிக்கிட்டு.
கிரேண்மா கிரேண்மா நீயும் சுடுவியே வடையின்னு சொல்லி ஒரு வீணாப்போன வடைய அதில வேற ஓட்டைய போட்டு மாவையும் ஆட்டயபோட்டுடுவ,
இதபாத்தியா மினுமினுன்னு சும்மா சோக்கா மின்னுது இதுதான் வடையின்னு சொன்னப்பத்தான்
அதஉத்துப் பார்த்த கிரேண்மாவுக்கு ஆகா இது
அதுவாச்சேன்னு மனசுக்குள்ளே தந்திரம் ஓட,
வெள்ள காக்கா
வெள்ள காக்கா அது வடையில்லப்பா உனக்கு அது சாப்பிடமுடியாது நாவேறவடை தர்றேன் இதை எனக்குதான்னு கேக்க
ஆங் அஸ்கு புஸ்கு
நானே கஸ்டப்பட்டு அலஞ்சி உழச்சி இத கொண்டு வந்திருக்கேன் இதபோயி கேக்குறியே! எனக்கு பசிக்கிது நான் சாப்பிடனுமுன்னு நீ போன்னு சொல்லி சாப்பிடப்போகும்போது
கிரேண்மா சொல்லிச்சாம் காக்கா காக்கா
நீ வெள்ளயா இருக்குறதால ரொம்ப அழகாயிருக்க அதனால கண்ணுபட்டுவிடும் இந்தா மொதல்ல இந்த கருப்புச்சட்டைய போடு இல்லன்னா மத்த காக்காவெல்லாம் உம்மேல பொறாமப்படுமுன்னு சொல்லிச்சாம்
உடனே காக்காக்கு மனசுக்குள்ளே மத்தாப்புபூத்திச்சாம், மத்தக் காக்கயவிட நாமா ரொம்ப அழகாயிருக்கோமாம் அதுவும் வெள்ளையாவேறயிருக்கோமாம் சரிதான் கண்ணுபட்டுட்டா கருத்துபோயிடுவோமுன்னு நெனச்சிக்கிட்டே
காலிலுள்ள தங்கக்காயினையும் பாத்திச்சாம் கிரேண்மாவையும் பாத்திச்சாம்
அப்ப கிரேண்மா சொல்லிச்சாம்
வெள்ள காக்கா வெள்ளக்காக்கா நா சுடும் வடையப்போல இந்த வடைய நீ பிச்சி சாப்பிட முடியாது கொடு நான் உரலுல இடுச்சு தாறேன்
அதுக்குள்ளே இந்த கருப்புச்சட்டையபோடுன்னு சொன்னதும்
ஆகா இது நல்ல ஐடியாவாயிருக்கேன்னு,
கிரேண்மா கிழவி நீ ரொம்ப நல்லவுகளா இருக்கீயே!
சரி இந்தா நல்லா இடிச்சுதான்னு தொப்புன்னு கீழேபோட்டுச்சாம் வெள்ளகாக்கா தங்காயின
ஓடிவந்த கிரேண்மா தங்காயின எடுத்துகிட்டு பக்கத்தில் கிடந்த கரிக்கட்டை எடுத்து இந்தா காக்கா சூ சூ ஓடிப்போயிடு இல்லேன்னா வடை சுடும் அடுப்பில வச்சி உன்னச்சுட்டுடுவேன்னு சொன்னதும்
வெள்ளக்காக்கா அச்சோ கிழவி நம்மை ஏமாத்திவிட்டதேன்னு சொல்லி
மல்லாக்க பறந்துபோச்சாம்...
//டிஸ்கி //அய்யோடா இதுக்குபேரு கதையா?
கதச்சொல்லச்சொன்னா கதவிட்டுகிட்டிட்டு இருக்கியே!
எத்தனை தபா இந்தகதய கேட்டிருப்போம். இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம் அப்படின்னு நெனச்சீங்கன்னா. அதுக்கு நான் பொறுப்பல்ல
பச்சக்கொய்ந்தயபோய் கத சொல்லுன்னு சொன்ன இந்தமாதரிதான் சொல்லும். வெவெவ்வே
சின்னப்புள்ளயபோய் கத சொல்ல சொன்ன நம்ம அக்பருக்கும். நிஜாமுதீன் அண்ணாவுக்கும் அடியகொடுப்பீகளோ அவார்ட கொடுப்பீகளோ எது கொடுத்தாலும் அவங்களுக்கு கொடுங்க. கருத்தையும் ஓட்டையும் மட்டும் எனக்கு கொடுங்க! எப்புடி
ஆகாமொத்தத்தில் என்றைக்கு சொன்னாலும் கத கததான் அந்த கதையில் மாற்றம் வரனுமுன்னா மனிதனிடம் முதலில் மாற்றம் வரனும் என்ன நான்சொன்னது சரிதானே!
ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவங்க இருப்பாங்க இல்லையா
நீங்க ஏமாறுறவங்களா? ஏம்மாத்துறவங்களா?
இல்லையின்னா அந்த ரெண்டு பேரையும் திருத்துற நல்லவங்களா.?
இல்லை யார் எக்கேடு கெட்டும் போகட்டும் நமக்கென்னன்னு போறவங்களா?
நீங்களே முடிவெடுங்க! எதுவாக இருக்கோனுமுன்னு.
நான் எப்போதும் ஏமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கப்பா ...
அப்பாடா கதைகேட்டு முடிச்சவங்க களைச்சி போயிருப்பீங்க, அதனால இந்தாங்க இதுல எதுவேணுமோ கலக்கிகுடிசிட்டு தெம்பா போங்க ஏமாத்தவோ ஏமாறவோ!
என்ன செய்ய ஏமாற்றக்கூடாதேன்னு வீட்டில் இருக்கிறதவச்சி போட்டோ எடுத்துப்போட்டா
இல்லாதத கேட்டு ஏமாறுகிறேன்னு நிக்கிறவுகள என்னச்செய்ய
பேபின்னு நெனப்பு இந்த ஜெய்லானி அண்ணாவுக்கு அதான் இன்னமும் அமுஸ்பிரே கேட்குது..
அட நம்ம நாடோடி ஸ்டீபனின் ரகசியம் இந்த பூஸ்ட் டிலா
இல்லாதத இருக்கிறதா போட்டுட்டேன் எடுத்துக்குடிச்சிட்டு
ஏமாறுங்க! ஏமாறுங்க!
இதுக்கெமேல யாரும் கதை சொல்லனுமுன்னு தோனிச்சின்னா
ஸ்டாட் மியூசிக்.. தொடர்ந்து கொல்லலாம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
என்னா சேட்டை,
பதிலளிநீக்குஆனா கத ஜோக்காகீது!!
//அப்பாடா கதைகேட்டு முடிச்சவங்க களைச்சி போயிருப்பீங்க, அதனால இந்தாங்க இதுல எதுவேணுமோ கலக்கிகுடிசிட்டு தெம்பா போங்க//
பதிலளிநீக்குஇதுல அமுல்ஸ்பிரே இல்லையே ??
வடை சுட்ட கதை அருமை.
பதிலளிநீக்குஎத்தனை முறை கேட்டாலும் நாங்க திருந்த மாட்டோம். ஏன்னா எங்களை ரொம்ப நல்லவங்கன்னு சொல்லியிருக்காங்க.
அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு நன்றி மலிக்கா.
கடைசியில காபி பொடியை கண்ணுல காட்டி நீங்களும் ஏமாத்திட்டிங்களே. :)
அதுல எனக்கு பிடித்த பூஸ்ட் இல்ல... அப்ப நீங்க என்னை ஏமாற்றிவிட்டீர்கள்......
பதிலளிநீக்குகதை ரொம்ப ஜூப்பரு, அதை விட கிரான்மா படம் ரொம்ப ரொம்ப ஜூப்பரு..
பதிலளிநீக்குஎனக்கு காஃபி போதும். ஜெய்லானிக்கு அமுல்ஸ்ரே வேனுமா என்ன உங்க காது கொசு ஸ்ப்ரேன்னு விழுதா?
கருப்பு காக்கா ககான்னு கத்தும்னா வெள்ளை காக்கா வெகான்னு தானே கத்தனும்?
பதிலளிநீக்கு;)
இப்ப எனக்கு வடைய நினைவு படுத்திட்டீங்க.. நானும் ரொம்ப நாளா நினைக்குறேன் இன்ஷா அல்லாஹ் இன்னைக்கு எப்படியாச்சும் செஞ்சிட வேண்டியது தான்!ஹிஹி.. ஒழுங்கா வரலன்டா நீங்க தான் பொறுப்பு ஆமா
@@@Jaleela --//எனக்கு காஃபி போதும். ஜெய்லானிக்கு அமுல்ஸ்ரே வேனுமா என்ன உங்க காது கொசு ஸ்ப்ரேன்னு விழுதா?///
பதிலளிநீக்குஅக்கோவ்!! மங்கு இல்லாத குறைய தீத்துட்டீங்க!!!!!இன்னும் பூஸார்தான் பாக்கி
//சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்குஎன்னா சேட்டை,
ஆனா கத ஜோக்காகீது!!//
எல்லாம் உங்கிட்ட கத்துகிட்டதுதான் பாரோட்டா. எங்கே இன்னும் பரோட்டா பார்சல வரலை நீங்கூட ஏமாத்திட்டீங்களே!
சோக்கா நன்றிங்கோ
அக்பர் கூறியது...
பதிலளிநீக்குவடை சுட்ட கதை அருமை.
எத்தனை முறை கேட்டாலும் நாங்க திருந்த மாட்டோம். ஏன்னா எங்களை ரொம்ப நல்லவங்கன்னு சொல்லியிருக்காங்க.//
யாருப்பா அது இப்படியெல்லாம் ஒரு அபாண்டத்தை சொல்லுறது.
சொல்லுறவங்களின் கண்ணைப்பாருங்கோ பக்கத்தில் நிக்கும் ஆளுமேல இருக்கும் அப்பாடா நம்மாள முடிஞ்சது..
//அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு நன்றி மலிக்கா.//
ஏன் இப்புடி எத்தனநாளு கொலவெறி.
காக்கா கத கேக்க..
//கடைசியில காபி பொடியை கண்ணுல காட்டி நீங்களும் ஏமாத்திட்டிங்களே. :)//
காக்காக்கு காப்பிப்பொடி புடிக்காதோ.
கப்புச்சினா குடிங்கோ.
மிக்க நன்றி அக்பர் கதசொல்ல வச்சதுக்கு..
வட கதை நல்லா இருக்கு ... தெம்பா ஒரு கப் காபி குடிச்சுகிட்டு படிச்சுட்டேன்.
பதிலளிநீக்குகதையினை கேட்டு...காப்பியும் குடிச்சாச்சு...நன்றி
பதிலளிநீக்குகுற்றம் செய்தவர்களை விட செய்ய தூண்டியவர்களுக்கே தண்டனை. அந்த வகைல இந்த தொடர் பதிவுக்கு இவிகள அழைச்சவங்களுக்கு இந்த நாட்டமையோட தீர்ப்பு என்னன்னா தினமும் என்னோட ப்ளாக்ல கொறஞ்சது பத்து கமெண்ட் ஆச்சும் போடணும்.... ஆமா சொல்லிபுட்டேன்
பதிலளிநீக்கு(எப்படிங்க மலிக்கா இப்படிலாம்.... முடியல... முடியல...)
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு//அப்பாடா கதைகேட்டு முடிச்சவங்க களைச்சி போயிருப்பீங்க, அதனால இந்தாங்க இதுல எதுவேணுமோ கலக்கிகுடிசிட்டு தெம்பா போங்க//
இதுல அமுல்ஸ்பிரே இல்லையே //
நல்லா கண்ணிமையை சற்று விளக்கிப்பார்த்தால் இப்போ தெரியுமே அமுல்ஸ்பிரே டின்.
அப்படியே சாப்பிடுங்க. அமுல்பேபியாட்டமல்ல
அமுல்தாத்தாவாகிடுவீங்க.
/நாடோடி கூறியது...
பதிலளிநீக்குஅதுல எனக்கு பிடித்த பூஸ்ட் இல்ல... அப்ப நீங்க என்னை ஏமாற்றிவிட்டீர்கள்//
என்ன ஸ்டீபன் நான் ஏமாற்றுவேனா
உங்க ரகசியம் தெரியாமா காப்பாத்தினேன் சொல்லச்சொல்லிட்டீங்க,,,,,
போட்டாச்சி எடுதுக்குடிங்க..
J/aleela கூறியது...
பதிலளிநீக்குகதை ரொம்ப ஜூப்பரு, அதை விட கிரான்மா படம் ரொம்ப ரொம்ப ஜூப்பரு..
எனக்கு காஃபி போதும். ஜெய்லானிக்கு அமுல்ஸ்ரே வேனுமா என்ன உங்க காது கொசு ஸ்ப்ரேன்னு விழுதா?//
அக்கோவ் பாவமுக்கா ஜெய்லானி இப்படி அமுல்ஸ்பிரே கேட்டதுக்கு கொசு ஸ்பிரே கொடுக்கச்சொல்லுறீக!!!!!!!
அதெல்லாம் பப்ளீக்கிலா கொடுப்பாக
எதுவானாலும் கனகச்சிதமா முடிச்சிடனும் . சீக்கிரெட் லீக் ஆகாமல் பாத்துக்கோங்க..
கிரேண்மா வுக்கு மிக நன்றி அச்சோ
இதையும் போட்டுகொடுத்துடப்போறாக உங்ககிட்ட
நான் பேக் மாட்டிகிற கிரேண்மாவச்சொன்னேக்கா..[சும்மா சும்மா]
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல , எவ்ளோ பெரிய பதிவு
பதிலளிநீக்குநாஸியா கூறியது...
பதிலளிநீக்குகருப்பு காக்கா ககான்னு கத்தும்னா வெள்ளை காக்கா வெகான்னு தானே கத்தனும்?
;)
இப்ப எனக்கு வடைய நினைவு படுத்திட்டீங்க.. நானும் ரொம்ப நாளா நினைக்குறேன் இன்ஷா அல்லாஹ் இன்னைக்கு எப்படியாச்சும் செஞ்சிட வேண்டியது தான்!ஹிஹி.. ஒழுங்கா வரலன்டா நீங்க தான் பொறுப்பு ஆமா//
கவலைப்படாதே குழந்தாய் வடை ஒழுங்காக வர வரம்தருகிறேன்.
அப்படியும் வரவில்லையா. வரத்தை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்..
கூடிய விரைவில் வடையோடு விஜயம் செய்கிறேன். என்ன வேண்டுமோ கேளுதாயி. குழந்தைக்கு இல்லாததா?..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு@@@Jaleela --//எனக்கு காஃபி போதும். ஜெய்லானிக்கு அமுல்ஸ்ரே வேனுமா என்ன உங்க காது கொசு ஸ்ப்ரேன்னு விழுதா?///
அக்கோவ்!! மங்கு இல்லாத குறைய தீத்துட்டீங்க!!!!!இன்னும் பூஸார்தான் பாக்கி//
பூஸாரக்காட்டியே அல்லாரும் பயமுருத்துறீங்களே யாரு அந்த பூச்சாண்டி.
மங்கு வருவார் வெகுவிரைவில். அமைச்சரே மணியடித்தும் வராததின் காரணம் என்னவோ..சீக்கிரம் வாருமைய்ய என்ன அமைச்சர் நீர். மணிகேட்டதும் முண்டியடிக்கொண்டு ஓடிவரவேண்டாமா?
மங்குனி அமைச்சர் கூறியது...
பதிலளிநீக்குஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல , எவ்ளோ பெரிய பதிவு..//
என்ன மங்குனி ஆயுசு ஐயாயிரம் உங்களுக்கு.
இப்பதான் எழுதிட்டுவந்தா இங்கே கமெண்ட் இப்படி வந்தும் ஓடினா எப்புடி ..
அட இது புது கதையா இருக்கே..
பதிலளிநீக்குமணி: ஏப்புள்ள செண்பகம்.. இங்க பாத்தியாப்புள்ள கதை சொல்ற மலிக்காவ. இது புது கதையாவுல்ல இருக்கு.. ஆனா பாரு கடைசியில வச்சதுபாரு ஆப்பு.. காக்காட்ட இருந்து தங்ககாயினை அபேஸ் பண்ணிருச்சே..
பதிலளிநீக்குசெண்பகம்: அட ஆமா மச்சான்.. அக்கா பொழச்சிருவாக.. எம்பூட்டு உசார் பாத்திங்களா மச்சான்..
மலிக்கா அக்கா புதுகதை சொல்றீக.. நாங்கல்லாம் பழைய கதை சொன்னாத்தான் ஏத்துக்குவோம். இது செல்லாது செல்லாது..
பதிலளிநீக்குஉங்க வீட்டுக்கு வந்தா எனக்கு ஹார்லிக்ஸ்தான் வேணும். இங்க இல்லையே.. :))
நானுந்தான் கேட்டேன்; அக்பருந்தான் கேட்டாரு.
பதிலளிநீக்குஆனா, இந்த வடை ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்பக் காரம்.
நான் போயி, பெரியண்ணன், சின்னத்தம்பிக்கு
தீர்ப்பு கொடுத்த நாட்டாமைக்கிட்ட பிராது
கொடுக்கலாம்னு இருக்கேன். துணைக்கு
யாராவது வரீகளா?
கவிஞரே, நீங்க நல்ல கதைஞரேதான்; நான்
இன்னைக்கித்தான் அதை வெளங்கிக்கிட்டேன்.
யாக்கொவ்வ்வ்...என்னமா கதை சொல்லிபுடீக...எனக்கு மவ்த்தா போன அத்தமா,,, நன்னிமா எல்லாம்...பேராண்டி ன்னு என்னைய கூப்பிடுறது கண்ணுக்கு அப்டியே தெரியுது... ''நான் வரமாட்டேன் வரமாட்டேன்...''என் இந்த கொலைவெறி...ஆவ்வ்வ்வவ்...
பதிலளிநீக்குகதையின் தன்மை என்று ஒன்று. கதை சொல்லும் விதம் என்று ஒன்று. நீங்கள் சொல்லிய விதம், கலக்கல்!
பதிலளிநீக்குமலிக்கா, நல்ல பதிவு, இப்படி எல்லாம் கதை சொன்னா நாங்க, நீங்க ரெண்டு பேரும் பார்க்கில் சாப்பிட்ட கொழுக்கட்டையில் பங்கு கேக்க மாட்டேம்னு நினைப்பா?
பதிலளிநீக்குநாங்க எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க,எப்படி நீங்க மட்டும் காக்கா மாதிரி கொழுக்கட்டையைத் தனியாக சாப்பிடுவீர்கள். இது போல நானும் ஒரு கதை போடலாம்ன்னு இருக்கேன். நன்றி மலிக்கா. (காக்காய் படத்தை சுட்டுப் போகின்றேன். )
கதை சூப்பர்.அதை விட நீங்க குடிக்கறதுக்கு கொடுத்தது அதை விட சூப்பர்.வெயிலுக்கு எற்ற கூல்ட்ரிங் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குநல்ல கதையா இருக்கே..!!
பதிலளிநீக்குரொம்ப சாரி மேடம் , என் ப்ளாக் பாருங்க உங்களுக்கு என்னான்னு தெரியும்
பதிலளிநீக்குகதை சூப்பர். சிரிப்பூட்டகூடிய உங்களுடைய எழுத்துக்கள் அருமை...
பதிலளிநீக்குநீங்க எங்கள் ஊருக்கு அருகிலா?
கவிஞராச்சே, கறபனைக்குக் கேக்கணுமா? மாடர்ன் காக்கா-வடை கதை நல்லாருக்கு!!
பதிலளிநீக்குஹுஸ்....
பதிலளிநீக்குஇப்பவே கண்ணக் கட்டுதே......
ஏன்ங்க........... நல்லாத்தானே போயிட்டேருந்தது....... ஏன்ங்க இப்படி....
ஆனாலும்....
////வடை திங்கனுமேன்னு வெ வெ வே ந்னு கத்திக்கிட்டே[என்ன காக்கா
கா கான்னுல்ல கத்தும் அச்சொ இது வெள்ள காக்கான்னு சொன்னேனே]////
இது புதுசு...
நான் போயிட்டு அப்புறமா வாறங்கோ............!
நட்புடன்....
காஞ்சி முரளி...........
கலக்கல் காமெடி ..... எல்லாரையும் நல்லா கலாய்க்கிறீங்க .....!!! கதைய விட நீங்க சொன்ன விதம்தான் அசத்தல்..... விதவிதமா உபசரிச்சதுக்கு நன்றிகள்!!!
பதிலளிநீக்குsarusriraj கூறியது...
பதிலளிநீக்குவட கதை நல்லா இருக்கு ... தெம்பா ஒரு கப் காபி குடிச்சுகிட்டு படிச்சுட்டேன்.
மிக்க நன்றி சாரூக்கா
/Geetha Achal கூறியது...
கதையினை கேட்டு...காப்பியும் குடிச்சாச்சு//
மிக்க நன்றி கீத்து,,,
//அப்பாவி தங்கமணி கூறியது...
குற்றம் செய்தவர்களை விட செய்ய தூண்டியவர்களுக்கே தண்டனை. அந்த வகைல இந்த தொடர் பதிவுக்கு இவிகள அழைச்சவங்களுக்கு இந்த நாட்டமையோட தீர்ப்பு என்னன்னா தினமும் என்னோட ப்ளாக்ல கொறஞ்சது பத்து கமெண்ட் ஆச்சும் போடணும்.... ஆமா சொல்லிபுட்டேன்
(எப்படிங்க மலிக்கா இப்படிலாம்.... முடியல... முடியல...)
//
அம்மாடியோ இவ்ளோ பெரிய தண்டனையா. இறைவா காப்பாத்து.
அப்படித்தாங்க அப்பாவி...
முடியும் முடியனும் ஓகே..ஹி ஹிஹி ஹி.
சுசி கூறியது...
பதிலளிநீக்குஅட இது புது கதையா இருக்கே.//
அட அப்புடியா சொல்லவேயில்லையே யாரும் மிக்க நன்றி சுசி.
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
மணி: ஏப்புள்ள செண்பகம்.. இங்க பாத்தியாப்புள்ள கதை சொல்ற மலிக்காவ. இது புது கதையாவுல்ல இருக்கு.. ஆனா பாரு கடைசியில வச்சதுபாரு ஆப்பு.. காக்காட்ட இருந்து தங்ககாயினை அபேஸ் பண்ணிருச்சே..
செண்பகம்: அட ஆமா மச்சான்.. அக்கா பொழச்சிருவாக.. எம்பூட்டு உசார் பாத்திங்களா மச்சான்..//
ஆகா கருதமச்சானும் செவத்தமச்சியும் நல்லாவுல்ல கதசொல்லுதீகக.
தங்கமுலாம் பூசினாலே விடமட்டோம்
தங்ககாயினுல விடுவோமா..
//..மின்மினி கூறியது...
மலிக்கா அக்கா புதுகதை சொல்றீக.. நாங்கல்லாம் பழைய கதை சொன்னாத்தான் ஏத்துக்குவோம். இது செல்லாது செல்லாது..
உங்க வீட்டுக்கு வந்தா எனக்கு ஹார்லிக்ஸ்தான் வேணும். இங்க இல்லையே.. :))
செல்லாதா அப்போ அடுத்த தபா பழியகத சொல்லிடவேண்டியதுதான்.
//
ஹார்லிக்ஸ்மட்டும்பொதும மைலோ வும் வேணுமா.
NIZAMUDEEN கூறியது...
பதிலளிநீக்குநானுந்தான் கேட்டேன்; அக்பருந்தான் கேட்டாரு.
ஆனா, இந்த வடை ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்பக் காரம்.
நான் போயி, பெரியண்ணன், சின்னத்தம்பிக்கு
தீர்ப்பு கொடுத்த நாட்டாமைக்கிட்ட பிராது
கொடுக்கலாம்னு இருக்கேன். துணைக்கு
யாராவது வரீகளா?
கவிஞரே, நீங்க நல்ல கதைஞரேதான்; நான்
இன்னைக்கித்தான் அதை வெளங்கிக்கிட்டேன்.//
அச்சோ வெளங்கிடுச்சாண்ணா.
அப்ப கத தகிறியமா சொல்லலாம்.
மிக்க சந்தோஷமுண்ணா..
/seemangani கூறியது...
யாக்கொவ்வ்வ்...என்னமா கதை சொல்லிபுடீக...எனக்கு மவ்த்தா போன அத்தமா,,, நன்னிமா எல்லாம்...பேராண்டி ன்னு என்னைய கூப்பிடுறது கண்ணுக்கு அப்டியே தெரியுது... ''நான் வரமாட்டேன் வரமாட்டேன்...''என் இந்த கொலைவெறி...ஆவ்வ்வ்வவ்...//
கூப்பிடுதாகளா. ரெண்டுகண்ணிலும் தெரியுதா கனி கூப்பிடுறது.
அப்படிய்ல்லாம் சொல்லக்கூடாது போய்தான் ஆகனும் இல்லன்னா இதப்போல கதச்சொல்லி போகவச்சிருவோமுல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
/Chitra கூறியது...
கதையின் தன்மை என்று ஒன்று. கதை சொல்லும் விதம் என்று ஒன்று. நீங்கள் சொல்லிய விதம், கலக்கல்!
//
கலக்கிட்டோமா அப்பாடா மேடமே சொல்லிட்டாங்க அப்ப டபூள் ஓகே..
நன்றி மேடம்..
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குமலிக்கா, நல்ல பதிவு, இப்படி எல்லாம் கதை சொன்னா நாங்க, நீங்க ரெண்டு பேரும் பார்க்கில் சாப்பிட்ட கொழுக்கட்டையில் பங்கு கேக்க மாட்டேம்னு நினைப்பா?
நாங்க எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க,எப்படி நீங்க மட்டும் காக்கா மாதிரி கொழுக்கட்டையைத் தனியாக சாப்பிடுவீர்கள். இது போல நானும் ஒரு கதை போடலாம்ன்னு இருக்கேன். நன்றி மலிக்கா. (காக்காய் படத்தை சுட்டுப் போகின்றேன். )//
கொழுக்கட்டைமேல எல்லாருக்கும் ஒருகண்ணாப்போசி அதான் கண்ணுப்பட்டுப்போசிங்கங்கோ.
அதுசரி காக்காவே சுட்டாச்சா. ஏன்சாமி
அவுகளா நீங்க,சுடவரும்போது டால்டாடின் மாட்டியிருந்தீகளா, அச்சோ அந்த கண்கொள்ளகட்சிய பாக்கமுடியாமப்போச்சே...
/ஸாதிகா கூறியது...
கதை சூப்பர்.அதை விட நீங்க குடிக்கறதுக்கு கொடுத்தது அதை விட சூப்பர்.வெயிலுக்கு எற்ற கூல்ட்ரிங் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்.
வீட்டுக்கு வாங்கக்கா சில்லுன்னு ஒரு கூல்ரிங்ஸ் தாரேன்.மிக்க நன்றிக்கா
பாலமுருகன் கூறியது...
நல்ல கதையா இருக்கே//
நல்லாயிருந்துச்சில்ல நன்றி பாலா
அஹமது இர்ஷாத் கூறியது...
பதிலளிநீக்குகதை சூப்பர். சிரிப்பூட்டகூடிய உங்களுடைய எழுத்துக்கள் அருமை...
நீங்க எங்கள் ஊருக்கு அருகிலா?//
மிக்க நன்றி இர்ஷாத்.
ஆமா நீங்க எந்த ஊரு?
/ஹுஸைனம்மா கூறியது...
கவிஞராச்சே, கறபனைக்குக் கேக்கணுமா? மாடர்ன் காக்கா-வடை கதை நல்லாருக்கு!!//
ஹைய்யா ஹுசைன்னம்மாவே சொல்லியாச்சி கதை சூப்பர்ன்னு. நன்றி ஹுஸைனம்மா..
Kanchi Murali கூறியது...
பதிலளிநீக்குஹுஸ்....
இப்பவே கண்ணக் கட்டுதே......
ஏன்ங்க........... நல்லாத்தானே போயிட்டேருந்தது....... ஏன்ங்க இப்படி....//
நல்லாவே போயிட்டுயிருந்தா எப்புடி அதான் இப்புடியும்..
ஆனாலும்....
////வடை திங்கனுமேன்னு வெ வெ வே ந்னு கத்திக்கிட்டே[என்ன காக்கா
கா கான்னுல்ல கத்தும் அச்சொ இது வெள்ள காக்கான்னு சொன்னேனே]////
இது புதுசு...//
புதுசு முரளி புதுசு.
நன்றி முரளி.
நான் போயிட்டு அப்புறமா வாறங்கோ............!
நட்புடன்....
காஞ்சி முரளி...........//
வாங்க வாங்க..
மிக்க நன்றி நன்றி முரளி..
www.bogy.in கூறியது...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in//
வாழ்த்துகலூக்கு அனபான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நன்றி.. மிக்க நன்றி நன்றி
கவிதன் கூறியது...
பதிலளிநீக்குகலக்கல் காமெடி ..... எல்லாரையும் நல்லா கலாய்க்கிறீங்க .....!!! கதைய விட நீங்க சொன்ன விதம்தான் அசத்தல்..... விதவிதமா உபசரிச்சதுக்கு நன்றிகள்!!!//
அச்சோ அச்சோ என்ன கவிதன் காமெடி கீமெடி பண்ணலையே!
[சும்மா சொன்னேன்]
அசத்தலான கருத்துக்கு அன்பான நன்றி கவிதன்..