[அது சரி பதின்ம வயதுன்னா என்னங்கங்கங்கொ]
நமக்கு கல்லூரி வாழ்க்கையெல்லாம் கிடையாதுங்கோ பள்ளிக்கூடமே முடியலைங்கோ.
[13 வயதோட அல்லாம் க்ளோஸ்] நல்லது பள்ளிக்கூடமாவது போனியா இல்லையா. அதத்தானே சொல்லப்போறேன்
ஒரு ஊர்ல ஒரு ராஜாவும் ராணியுமாம் அவங்களுக்கு. அச்சோ அந்தகாலத்துக்கதையான்னு ஓடிடாதீங்க நில்லுங்க நில்லுங்க.
அந்தகால நினைவுகள் நெஞ்சுக்குள் புடம்போட்ட தங்கமாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது மறக்கமுடியுமா? மறக்கதான் இயலுமா!
ராஜகுமாரிமாதிரி பிறந்து. வளரும் சமயதில் பெங்களூரில் என்
2, 1/2 வயதிலேயே எல் கே ஜியும். யுகே ஜியும். அடுத்தடுத்து தந்தை வியாபார சம்பந்தமாக வேறு வேறு ஊராக செல்ல.
[அம்மாவின் அம்மா] உம்மமாவிடம் வளரவிடப்பட்டேன். ஒன்றிலிருந்து நான்காம் வகுப்புவரை பள்ளியின் அனுபவமே தனிதான் இதையெல்லாம் மறந்தா??????
பள்ளித்தோழியானவர்கலெல்லாம். என்னைவிட 2.3 வயது பெரியவர்களே! [நாமதான் இன்னும் பச்சப்புள்ளையே]
நாங்கள் தோழியான கதை மிக சுவாரசியம். ஆளுக்கு ஆள் காசு சேர்த்து கடலைமிட்டாயும். இலந்தைவடையும் வாங்கி மொகழமரத்தின்கீழ் அமர்ந்து
நான். தாஜ்மா. மர்ஜுனா. சாந்தி. நான்குபேரும் தோழிபோட்டுக்கொண்டோம்.
அதில் மூவரும் இன்றுவரை தோழியாகவேயிருக்கிறோம். [சாந்தியைத்தவிர.
அவள்மட்டும் வேறு ஊர் போய்விட்டதாக கேள்வி.]சாந்தியின் தம்பி மாரிமுத்தும் அவளும் ஒரேகிளாசில் படிப்பார்கள் .
ஒருநாள் சாந்தி வரவில்லை கேட்டால் பெரியபொண்ணு ஆயிட்டா எனசொன்னதும் நாங்கமூவரும் சேர்ந்து வீட்டில் சொல்லாமல். பள்ளிக்கூடம்போவதாகசொல்லிவிட்டு
பள்ளிக்கு வருவதுபோல் வந்து சேர்த்து வைத்திருந்த காசில். கிளாஸ்கோ பிஸ்கட் 4 பாக்கட் வாங்கிக்கொண்டு அவள் வீட்டுக்குச்சென்று விட்டோம்
அவள் வீட்டுக்கும் எங்கவீட்டுக்கும் சுமார் 2 கிலோமீட்டர்.
அதுவும் தோப்புக்குள் நாங்கலெல்லாம் யார் துணையுமில்லாமல் தோப்புக்கு போகமாட்டோம். ஆனால் தோழியென்றதும் அதெல்லாம் மறந்துபோச்சி.
அங்கேபோனதும் அவங்க அம்மாவும் அப்பாவும். ஏன்கண்ணுங்க இவ்வளதூரம் வந்தீங்க அம்மா அப்பாக்கு தெரிந்தா அடிப்பாங்க. இந்தமோரக்குடிச்சிட்டு வாங்க கொண்டுபோய்விட்டுவிடுகிறேன் என்றார். மூவரும் மாடுமாதிரி தலையை ஆட்டிய அப்போதுதான் பயம் உள்ளுக்குள் கிளம்பியது. இன்னக்கி அடி அடிதான்னு. ஆனாலும் சாந்தியை பார்த்துட்டோம் மூன்றுநாள் பார்க்கமல் என்னவோபோலிருந்தது இப்போது சரியாகிவிட்டது.
நாங்க நினைத்தபோல் பொண்ணாட்டாமெல்லாம் ஜோடிச்சி இல்லை. ஒரு உலக்கையைபோட்டு ஓரமாக உக்கார்ந்து இருந்தாள் உம்மென்று.ஒன்றும்புரியாமல் சீக்கிரம் பள்ளிக்கூடம் வந்திடுடி என்று சொன்னதோடு கிளம்பிவிட்டோம் சாந்தியின் அப்பாக்கூட.
நல்லபிள்ளைகளாட்டம் வீட்டுக்கு போயாச்சி ஒன்றும் நடக்கலை பயந்ததுபோல் என்றிருக்க. இரண்டுநாள்கழித்து நம்ம ஆம்பள பசங்க [எப்பாடி ரொம்ப பொல்லாதவங்க] வீட்டுள போட்டு கொடுத்திருக்காங்க. அப்பன்னுபாத்து நான் எங்க தெரு பசங்களோட குளத்தில் குளிக்கப்போகும்போது ஒரு திருமணமான அக்கா அதோ அந்த நடுச்சுவற்றை யார் முதலில் தொடுவதென போட்டிக்கு வருகிறாயா என்றார்கள். விடுவோமா[யாரு நம்ம அஞ்சாத அஞ்சலியாச்சே]
சரின்னு இருவரும் ஒருசேர போய் தொட அதில் ஆமை அமர்ந்திருப்பது அறியாமல் நாந்தான் பஸ்ட் என ஓங்கி அடித்தபோது ஏதோ வள வளன்னுகையில் என்னான்னு பார்த்தா ஆஆஆஆமை அல்லாவேன்னு கத்தியபடி போனவேகத்தில் திரும்பி கரையேறியபோதுதான் பார்கிறேன் உம்மம்மா வேப்பங்குச்சியை எடுத்துக்கொண்டு அடியே நில்லுடின்னு துரத்தியதேபார்க்கனும் இப்போது நினைத்தாலும் ஓடுவதுபோலிருக்கும்.
4. வகுப்பு ஆண்டுவிழாவில். கையிறுதாண்டுதல்.முதல் 12 போட்டி நடைப்பெற்றது. மலிக்காவும் ஹபிலாபானுவுதான் அனைத்திலும் முதன்மை.
ஒவ்வொரு பரிசுக்கு கூப்பிடும்போதும் என் அக்கா[பெரியம்மா மகள்]
மாப்பிள்ளை எந்தலையில் ஒரு செல்லக்குட்டு குட்டி போகச்சொல்லுவார்.
அன்று வாங்கிய பரிசுப்பொருகள் மனதைவிட்டு நீங்கமால் இன்றும் அதிலுள்ள
சில்வர் பிளேட் என்பெயர்போட்டும். ஒரு ஹீரோபேனா. முதல் ரேங்கிற்கு தந்ததும். இன்னமும்.[பேனா எழுதாது இப்போது ஹி ஹி ஹி]
9. வயதில் எனக்கு நிச்சியம் செய்தார்கள் அதாவது பால்குடமுன்னு எங்கஊரில் சொல்லுவோம். என்ன சிரிப்புன்னா[அச்சோ அச்சோ இதவிடவா வேணும் அச்சோ] என் பால்குடத்துக்கு நானே பால்குடம் தூக்கிப்போனதுதான் மாமாவீட்டு வாசல்வந்ததும் நான் பக்கத்துவீட்டுக்கு ஓடிட்டேன் மற்றவர்கள் மாமாவீட்டுக்குபோய் நல்ல பரோட்டாவும் கறி துண்ணுட்டு வந்தாங்க எனக்கும் வந்தது. சாப்பிடப்போகும் சமயத்தில் எனது பெரியமாமியார் பொண்ணு உன்னை ஒரு போட்டோ எடுக்கனும் எழுந்து நில்லு என்றது
நின்றுகொண்டிருக்கும் சமயம் பக்கத்து அறையிலிருந்து மச்சான் வந்து டக்குன்னு ஒட்டிக்கொண்டு நிற்க[அவுக ரூமில் ஒளிந்திருந்தது தெரியாம பேக்கோ மாதிரி எழுந்து நின்னேன்] போட்டோ எடுத்ததும் எனக்கு ஒரே அழுகை ஏனென்று தெரியவில்லை இன்றுவரையும்.[எதுக்கும் மச்சாங்கிட்ட கேட்டு சொல்லுறேன்ன்ன்ன்ன்]
5 ஆம் வகுப்பு போக ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது. வந்தது படிப்புக்கு ஆப்பு. என் தந்தை அவங்க ஊருக்கு என்னை அழைந்துவந்துவிடச்சொல்லி உத்தரவிட. அம்மாவும் வந்து அதிரைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். படிக்கிறேன் என்று சொன்னபோது அங்குபோய் படிக்கலாம் என்றார்கள். சரியென்றுபோய்விட்டேன். ஆனால் அங்குபோய் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. பெரியபடிப்பு படிச்சாச்சி என மதரஸாவில் சேர்த்துவிட்டார்கள்.
மதரஸா வாழ்க்கை மிகபிடித்துப்போனது. அதுவும் பள்ளிக்கூடம்போலதான் அங்கேயும் 2 ½. 3 வருடந்தான் அதிலேயே நல்லவிசங்கள் கற்றுக்கொள்ள எனக்குகிடைத்த நல்லதொரு வாய்ப்பு
அங்கேயும் ஒரு தோழி அவள் நைமா எங்க தெருதான் அவளும் சொந்தமும்கூட எனக்காக பள்ளிப்படிபை நிறுத்திவிட்டு [7 கிளாஸுன்னு நினைக்கிறேன்] என்கூட அவளும் மதரஸாக்கு வந்துசேர்ந்திட்டா [இப்போது சொல்லுவா உன்னாலதாண்டி படிக்கலைன்னு]என்னைவிட பெரியவள் என்றபோதும் எனக்கு உயிர்தோழியாகிவிட்டாள்.
அம்மடியோ நாங்க அடிக்காத அட்டகாசங்களே இல்லையெனும் அளவுக்கு இருவரும் ஒருவராகிவிட்டோம். மதரஸாவில்கூட எங்களிருக்கும் ஒரே பெயர்தான் மலிக்காநைமா. நைமாமலிக்கா மதரஸாவில் வெளியூர் வெளிநாட்டு தோழிங்க நிறைய எனக்கு நட்புவட்டாரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசு அதில் மலையாள சேச்சி ரஸிதாக்காக்கிட்ட அப்[ப]பிடிச்ச மளையாளம் இப்ப ரொம்ப தெளிவா.] என்ன எல்லாருக்கும் செல்லப்பிள்ளையா அப்படின்னா எல்லாரவிட சின்னபொண்ணா நாங்கதான் எல்லாருக்கும் ஹெல்புவேற [அதாவது நைஸாக வெளியிலிருந்து திண்பண்டங்கள் அது இதுன்னு வாங்கிக்கொடுக்கிறது வேறொன்னுமில்லை]
ஒருநாள் இருவரும் மதரஸாவிற்குநடந்து வரும்போது ஒருவீட்டில் மாதுளைபழம் நிறைய தொங்கிக்கொண்டிருந்தது. உடனே இருவருக்கும் மண்டைக்குள் சாக். அவள் சொன்னாள் நான் வெளியில் நின்று யாரும் வருகிறர்களான்னு பாத்துகிறேன் நீபோய்பறி என்று சரின்னு அங்கேகிடந்த பெரிய மண்பானையின்மீது ஏறிபறிக்கலாமென்று ஏறினேனா! எட்டிப்பறித்தேனா! கையில் மாதுளையுடன் பானை உடைய விழுந்தேனே பார்க்கனும் முட்டுக்கையில் ரத்தம், சரிடி துடைச்சிக்கோ அதைதான்னு வாங்கி தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்
சிதறியது தாவணிக்குள்ளேயே அப்படியே எடுத்து சாப்பிட்டுக்கொண்டே மதரஸாபோய் சேர்ந்தோம். மதியம் வரும் கலகம் தெரியாமல்.மாதுளைவீட்டு அம்மனி ஆங்காத்து வீசுதே பொங்காத்து வீசுதேன்னு மதரஸாக்குள் வந்து, ரெண்டு குட்டிகள் எங்கவீட்டில் மாதுளையை பறிச்சிவிட்டாங்க. அதுபோயிட்டுபோவுது.
மண்பானையை உடைத்துவிட்டாங்களே. எங்கே அவங்க காட்டுங்கன்னு நிக்கிறாங்க. மாட்டுவோமா மெதுவா நகர்ந்து வாசலுக்கு வந்து விட்டோம் ஒரே ஓட்டம் மூச்சிரைக்க வீட்டு வாசலில்தான் வந்து நின்னோம் அம்மாடியோ..
மாட்டியிருந்தோம் அதோகதிதான்.
இருவரும் சேர்ந்து எங்கள் உஸ்தாது எங்களுக்கும் சொந்தம்தான்.
சரிபா அக்கான்னு. அவங்களை ஒரு நாள் உளுச்செய்வதற்கு [தொழுகைக்காக] பாத்ரூம் போயிருக்கும்போது குட்டி பூனையை தூக்கி பாத்ரூம் கதவின்மேல்வழியே போட்டுட்டேன் பக்கத்தில் போடுடி போடுடி நைமா. அலறிக்கொண்டு வெளியெ வந்த அக்கா கையில் மாட்டினேன் செம சாத்து முதுகில் அப்பவும் நைமா எஸ்கேப் மாடியது மல்லிதான் பாவம் சின்னப்புள்ளைய என்னென்னப் பாடுபடுத்திட்டாங்க [ஹூம் ஹூம் அழுதுபார்கிறேன்]
அப்புறம் நிறைய நிறைய இருக்கு ஆனா உங்களை போரடிக்க விரும்பல போனபோகுது இப்பவே கண்ணக்கட்டியிருக்கும் வடிவேலு பாசையில் நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு அதேன் நிப்பாட்டிக்கிறேன்.
இந்ததொடர எழுத அழைத்து ஒருமாதம் ஆகிறதுன்னு நினைக்கிறேன் நான் நாஸியா பிளாக் போகாமல் இருந்ததால் தெரியவில்லை.
பார்ததும் எழுதியாச்சி
அச்சோ அறுத்துட்டே நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுன்னு எத்தன தடவ சொல்லுறது.
சரி சரி
இதை மேலும் அறுக்க நான் அழைப்பது.
புதுமுகம், மின்மினி
சமையல் மேதை மேனகா சத்தியா
சமையல் கலக்கல் கீதா ஆச்சல்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
hiyooo....!
பதிலளிநீக்குnatpudan...
Kanchi Murali
innum niraiya eludhirukkalamla? part 2, part 3 nu kalyanam varaikkum podungakkaaaaaaaaa
பதிலளிநீக்கும்ம்ம்.....நகைச்சுவையாக
பதிலளிநீக்குசொல்லி விட்டீர்கள்,
நன்று.
அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள். சின்னவயசு ஞாபகங்களை இப்போ நினைச்சி பார்த்தா அதுல கிடைக்கிறசுகம் வேறெதுலயும் கிடையாது. அருமையாக நல்ல இன்ரஸ்டிங்கா இருந்தது உங்க ஸ்டோரி. இதுல என்னைவேற மாட்டிவிட்டுடீங்களே அக்கா.. இனிமேதான் கொசுவத்திய சுத்தவைக்கணும்.
பதிலளிநீக்குநன்றி மலிக்கா அக்கா.. நானும் என்பங்குக்கு விரைவில எழுதுறேன்.
மச்சான் கொடுத்துவைத்தவர் அக்கா.. உங்களை மனைவியாக அடைந்ததற்கு..
பதிலளிநீக்கு//பெரிய மண்பானையின்மீது ஏறிபறிக்கலாமென்று ஏறினேனா எட்டிப்பறித்தேனா கையில் மாதுளையுடன் பானை உடைய விழுந்தேனேபார்க்கனும் முட்டுக்கையில் ரத்தம், சரிடி துடைச்சிக்கோ அதைதான்னு வாங்கி தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்//
பதிலளிநீக்குஎன்ன ஒரு வில்லங்கத்தனம். பாவம் பச்சக்கொயஞ்தய அழுவவிட்டுடு ..
சுவாரசியம் மலிக்கா சூப்பராக சொல்லியிருக்கீங்க. பழை நினைவுகு நானும்போகிறேன்
நல்ல நகைசுவையாக சொல்லி இருகிறிர்கள்
பதிலளிநீக்கு.நகைச்சுவை
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மறுபடியும் தொடர்பதிவா???
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையா சொல்லிருக்கிங்க.என்னையும் இதுல மாட்டிவிட்டீங்க...நன்றி மலிக்கா.விரைவில் தொடர்கிறேன்..
நகைப்பூட்டுகிறது உங்கள் ஆக்கம்.
பதிலளிநீக்குhttp://bluehillstree.blogspot.com
///என் பால்குடத்துக்கு நானே பால்குடம் தூக்கிப்போனதுதான் மாமாவீட்டு வாசல்வந்ததும் நான் பக்கத்துவீட்டுக்கு ஓடிட்டேன் ///ஒரே சிரிப்பு போங்க.ஏங்க மலிக்கா உங்கள் பால்குடத்தை நீங்களே சுமக்கின்றவரை உங்க அம்மா பார்க்கலியா?அப்போ உங்கள் உமம்மா வேபங்குச்சியை எடுக்கலியா?
பதிலளிநீக்கு'நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை.... என்றும் அது கலைவதில்லை... எண்ணங்களும் மறைவதில்லை..." என்ற வைர வரிகளின்படியும்........
பதிலளிநீக்குபால்யப் பருவத்தில் - பள்ளிப் பருவத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் பசுமரத்தாணி போல என்றும் நெஞ்சை விட்டு நீங்காது என்பதற்கும் இந்த இடுகையே சாட்சி.....
மலிக்கா மேடத்துக்கு திடீரென்று " ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே " என்ற பாடல் நினைவு வரக் காரணம் என்னவோ...!
மொத்தத்தில்.... எங்களையும் பால்ய - பள்ளிப் பருவத்திற்கு Rewind பண்ணி பார்க்கச் சொல்றீங்க...
ரைட்டு....
ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.... ஓர் கிராமத்திலோ, ஓர் நகரத்திலோ பிறந்தவனுக்குத்தான் இந்த Rewind மற்றும் ஓர் பாடலில் வருமே "வெயிலோடு விளையாடி.... வெயிலோடு உறவாடி... பசி வந்தா குருவி முட்டை... சகதிதான் நம்ம சட்ட..." இதெல்லாம் மாநகரத்தில் பிறந்தவனுக்கு இதெல்லாம் கிடையாது... கிடைக்காது...
குறிப்பா... இந்தக்கால குழந்தைகளுக்கு இப்பசுமையான நினைவலைகள் கிடைக்காது... காரணம், பாடச்சுமை - indoor games - TV - Vedio games இப்படி இக்காலக் குழந்தைகள் பழக்கப்படுவதால் இந்த இப்பசுமையான நினைவலைகள் கிடைக்காது என்கிறேன்... சரியா?
ஆமா... நடுவுல....
"ஆங்காத்து வீசுதே பொங்காத்து வீசுதேன்னு" ..... அப்படீன்னா... என்னங்க அர்த்தம்.... உங்க ஊரு பாஷையா.....
இந்த இடுகை "பசுமையான நினைவுகளே.... " என கவியரசின் பாடலை பாடத் தோன்றுது..
வாழ்த்துக்கள்....
நட்புடன்... .
காஞ்சி முரளி.......
அருமையான நினைவுகள்.
பதிலளிநீக்குசின்னவயசு ஞாபகங்கள் இப்போ நினைச்சாலும் நல்ல ஜாலியா இருக்கும்.
பதிலளிநீக்குநல்ல பகிர்தல் மலிக்கா.. நல்ல விறுவிறுப்பா சென்றது உங்க பள்ளி நினைவுகள்.
அச்சோ அறுத்துட்டே நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுன்னு எத்தன தடவ சொல்லுறது.
பதிலளிநீக்கு...நல்ல அறுவடை! ஹா,ஹா,ஹா.....
/5 ஆம் வகுப்பு போக ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது. வந்தது படிப்புக்கு ஆப்பு.//
பதிலளிநீக்குவந்துரிச்சா உங்களுக்கும் ஆப்பு.
சூப்பர் ஸ்டோரி அழகாக எழுதியிருக்கீங்க சின்னவயசுக்கே போனதுபோல் இருக்கு..
கொஞ்சம் கூட தோய்வு இல்லாம கதை விறுவிறுப்பா போகும் போது. இண்டர் வெல் விட்டுடீங்களே. பூனைகுட்டி மேட்டர் ரியல் ஜோக். மொத்தம் படம் 15ரீல்ல ஒன்னுதான் முடிஞ்சி இருக்கு மீதி 14 எப்ப வரும்.
பதிலளிநீக்கு’’அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
பதிலளிநீக்குஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உலா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,’’
இந்த பாட்டுதான் நினைவுக்கு வருது.
ஹையா...உள்ளே வந்துட்டேன்...எப்பூடி...
பதிலளிநீக்குஇனிமேல் நாங்களும் ஒழுங்கா ஆஜர் ஆய்டுவோம்லே...
உங்கள் பதிவு நவரச விருந்து இத்துக்குமேல என்ன சொல்ல...இப்டியே சின்னபுள்ளையா இருக்க இறைவனை வேண்டுகிறேன்...வாழ்த்துகள்...
ஹையா...உள்ளே வந்துட்டேன்...எப்பூடி...
பதிலளிநீக்குஇனிமேல் நாங்களும் ஒழுங்கா ஆஜர் ஆய்டுவோம்லே...
உங்கள் பதிவு நவரச விருந்து இத்துக்குமேல என்ன சொல்ல...இப்டியே சின்னபுள்ளையா இருக்க இறைவனை வேண்டுகிறேன்...வாழ்த்துகள்...
நல்லாருக்கு.
பதிலளிநீக்குநான் இது வரை கேள்விப்படாத மரம், 'மொகழமரம்'.
அது என்னவென்று சொல்லுங்களேன்.
நல்லாருக்கு.
பதிலளிநீக்குஇதுவரை கேள்விப்படாத மரம், 'மொகழமரம்'.
அது என்னவென்று கூறுங்களேன்.
மாதுளைவீட்டு அம்மனி ஆங்காத்து வீசுதே பொங்காத்து வீசுதேன்னு மதரஸாக்குள் வந்து, ரெண்டு குட்டிகள் எங்கவீட்டில் மாதுளையை பறிச்சிவிட்டாங்க. அதுபோயிட்டுபோவுது.
பதிலளிநீக்குமண்பானையை உடைத்துவிட்டாங்களே. எங்கே அவங்க காட்டுங்கன்னு நிக்கிறாங்க. மாட்டுவோமா மெதுவா நகர்ந்து வாசலுக்கு வந்து விட்டோம் ஒரே ஓட்டம் மூச்சிரைக்க வீட்டு வாசலில்தான் வந்து நின்னோம் அம்மாடியோ..
மாட்டியிருந்தோம் அதோகதிதான்..//
அருமை அருமை மிக அழகாக பழைய நினைவுகளூக்கே கூட்டிகிட்டு போயிட்டீங்கக்கா.
நானும் வெள்நாடுவந்து இதெல்லாம் மிஸ்பண்ணிட்டேன்.நான்மாங்க அடித்து மாட்டினேன் நீங்க மாதுளையா/
அச்சோ நீங்க அடிவாங்கல ஆனா நான் நல்லகட்டினாங்க டின் முதுகில்.
சூப்பர் சூப்பர் எனகுக நல்லாபிடிச்சிருக்கு.
அம்மு குட்டி. ராசல்கையிமா
Kanchi Murali கூறியது...
பதிலளிநீக்குhiyooo....!
natpudan...
Kanchi Murali..//
என்னாச்சி முரளி கண்ணகட்டிடுத்தா
நாஸியா கூறியது...
பதிலளிநீக்குinnum niraiya eludhirukkalamla? part 2, part 3 nu kalyanam varaikkum podungakkaaaaaaaaa
//
இது நல்ல ஐடியாவாயிருக்கே நாஸீயா.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிற அம்மணி வாழ்க!
சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்கும்ம்ம்.....நகைச்சுவையாக
சொல்லி விட்டீர்கள்,
நன்று.//
ஆக என் கூத்து நகைச்சுவை
சூத்தாகிவிட்டது இல்லையா பரோட்டா.
நன்றிங்கோ
மின்மினி கூறியது...
பதிலளிநீக்குஅருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள். சின்னவயசு ஞாபகங்களை இப்போ நினைச்சி பார்த்தா அதுல கிடைக்கிறசுகம் வேறெதுலயும் கிடையாது. அருமையாக நல்ல இன்ரஸ்டிங்கா இருந்தது உங்க ஸ்டோரி. இதுல என்னைவேற மாட்டிவிட்டுடீங்களே அக்கா.. இனிமேதான் கொசுவத்திய சுத்தவைக்கணும்.//
நிச்சியமாக மின்மினி அந்தகாலமே தனிசுகந்தான்
//நன்றி மலிக்கா அக்கா.. நானும் என்பங்குக்கு விரைவில எழுதுறேன்.//
நல்லா சுத்தவிடனும் புகையை அக்கம் பக்க காது கண்ணூக்குளெல்லாம் போறமாதிரி ஓகே அக்கா பேரக்கெடுத்துடாம...
/மின்மினி கூறியது...
பதிலளிநீக்குமச்சான் கொடுத்துவைத்தவர் அக்கா.. உங்களை மனைவியாக அடைந்ததற்கு//
அப்ப நான் ஹூ ஹூம் ஹூம் உம்மா உம்மா.
மிக்க நன்றி. சொல்லப்போனா நாந்தான் கொடுத்துவைத்தவள் மின்மினி மச்சான் கிடைச்சதுக்கு,,
சரிடி துடைச்சிக்கோ அதைதான்னு வாங்கி தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்//
பதிலளிநீக்குஎன்ன ஒரு வில்லங்கத்தனம். பாவம் பச்சக்கொயஞ்தய அழுவவிட்டுடு ..
சுவாரசியம் மலிக்கா சூப்பராக சொல்லியிருக்கீங்க. பழை நினைவுகு நானும்போகிறேன்//
வில்லங்கம்மா ஆத்தாடி வில்லங்கத்திலும் வில்லங்கம். பாவம்
மல்லிதான் இல்ல சுப்பு.
போயாச்சா அந்தகாலத்துக்கு கண்டிவ் கண்டிவ்.நான் டிஸ்டப் பண்ணல.
மிக்க நன்றி சுப்பு
சரிடி துடைச்சிக்கோ அதைதான்னு வாங்கி தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்//
பதிலளிநீக்குஎன்ன ஒரு வில்லங்கத்தனம். பாவம் பச்சக்கொயஞ்தய அழுவவிட்டுடு ..
சுவாரசியம் மலிக்கா சூப்பராக சொல்லியிருக்கீங்க. பழை நினைவுகு நானும்போகிறேன்//
வில்லங்கம்மா ஆத்தாடி வில்லங்கத்திலும் வில்லங்கம். பாவம்
மல்லிதான் இல்ல சுப்பு.
போயாச்சா அந்தகாலத்துக்கு கண்டிவ் கண்டிவ்.நான் டிஸ்டப் பண்ணல.
மிக்க நன்றி சுப்பு
தொடரும் நினைவலைகள் நல்லா இருக்கு. நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா பதின்ம வயது என்பது பதிமூன்றில் தொடங்கி, பதினெட்டில் முடிவது, தமிழில் சொல்லிப்பாருங்கள். பதி என ஆராம்பிப்பதுதான் பதின்ம வயது அதாவது டீன் ஏஜ் சீரியல். நீங்க சொல்லியிருப்பது எல்லாம் பன்னிரண்டு வயது வரை வருவது. இருந்தாலும் நல்ல அனுபவங்கள் படிக்க அருமை. பகிர்வுக்கு நன்றி மலிக்கா.
பதிலளிநீக்கு//பெரிய மண்பானையின்மீது ஏறிபறிக்கலாமென்று ஏறினேனா! //
பதிலளிநீக்குதோல்விய கண்டு துவன்டு விடகூடாது , மறுபடியும் அடுத்த மண் பானமேல ஏறி ட்ரை பன்னனும்
//அச்சோ அறுத்துட்டே நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுன்னு எத்தன தடவ சொல்லுறது.//
அப்புறம் உங்க பதிவுலே இதுதான் பெஸ்ட் லைன்
பழைய நினைவுகள் அருமையிலும் அருமை.அட்காசமாக எழுதியிருக்கீங்க மலிக்கா..
பதிலளிநீக்கு2 - 3 தடவை படித்து விட்டேன். ரொம்ப பிடிச்சது.
பதிலளிநீக்கு//சரின்னு இருவரும் ஒருசேர போய் தொட அதில் ஆமை அமர்ந்திருப்பது அறியாமல் நாந்தான் பஸ்ட் என ஓங்கி அடித்தபோது ஏதோ வள வளன்னுகையில் என்னான்னு பார்த்தா ஆஆஆஆமை அல்லாவேன்னு கத்தியபடி போனவேகத்தில் திரும்பி கரையேறியபோதுதான் பார்கிறேன் உம்மம்மா வேப்பங்குச்சியை எடுத்துக்கொண்டு அடியே நில்லுடின்னு துரத்தியதேபார்க்கனும் இப்போது நினைத்தாலும் ஓடுவதுபோலிருக்கும்.//
மிகவும் ரசித்துச் சிரித்தேன்.
செந்தில்குமாரின்
பதிலளிநீக்குவணக்கங்கள் அக்கா...
சில்வர் பிளேட் என்பெயர்போட்டும். ஒரு ஹீரோபேனா. முதல் ரேங்கிற்கு தந்ததும். இன்னமும்.[பேனா எழுதாது இப்போது ஹி ஹி ஹி]
அருமையான எழுத்துகள் தோய்வு இல்லாமல் நான் ஏமாந்து போனேன் விரைவாக முடிந்துபோனது நினைத்து
பதின்ம வயது நகைச்சுவையா அள்ளி தெளித்துபுட்டீஙக்.
பதிலளிநீக்குஎனக்கும் நாஸியா அழைப்பு கொடுத்து இன்னும் போடல.
உஸ்தாபிக்கு புனை உள்ளே விட்டு இப்படி எல்லாம் வேறய ஆட்டமா?
இதே போல் முன்பு மர்லி குச்சி விட்ட்டாஙக் ந்னு சொன்னாஙக் அதுக்க்கே சிரித்து கொன்டு இருந்தேன், பூனையா எபப்ப்பா பாய்ஞ்சுடுமே///
S Maharajan கூறியது...
பதிலளிநீக்குநல்ல நகைசுவையாக சொல்லி இருகிறிர்கள்..
மிக்க நன்றி மகராஜன்
karthik கூறியது...
பதிலளிநீக்கு.நகைச்சுவை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//
மிக்க நன்றி கார்த்திக்
/Mrs.Menagasathia கூறியது...
மறுபடியும் தொடர்பதிவா???//
அதுக்குதானே தொடரோ தொடருன்னு வச்சிருக்கோம்
//நல்ல நகைச்சுவையா சொல்லிருக்கிங்க.என்னையும் இதுல மாட்டிவிட்டீங்க...நன்றி மலிக்கா.விரைவில் தொடர்கிறேன்..//
நல்ல தொடருங்க யாம்பெற்ற இன்பம் இந்த வைகமும் பெறட்டும்..
மிக்க நன்றி மேனகா,,
ஸாதிகா கூறியது...
பதிலளிநீக்கு///என் பால்குடத்துக்கு நானே பால்குடம் தூக்கிப்போனதுதான் மாமாவீட்டு வாசல்வந்ததும் நான் பக்கத்துவீட்டுக்கு ஓடிட்டேன் ///ஒரே சிரிப்பு போங்க.ஏங்க மலிக்கா உங்கள் பால்குடத்தை நீங்களே சுமக்கின்றவரை உங்க அம்மா பார்க்கலியா?அப்போ உங்கள் உமம்மா வேபங்குச்சியை எடுக்கலியா..//
இல்லையே ஸாதிக்காக்கா தூக்கிவிட்டதே உம்மம்மாதானே. சின்னக்குட்டிதானே அதனால் கொண்டுவந்து கொடுத்துட்டு ஓடிடு என்றது.
ஆசை யாரை விட்டது அதான் முதன் முதலில் இடுப்பில் தூக்கிய குடம்[என் உம்மம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்கக்கா இப்போ எங்களோடு இல்லை. அவங்க செய்து தரும் சாப்பாடுக்கே தனி ருசிதான் என்னை கண்ணுக்குள் வைத்து பாத்துகிட்டாங்க
இரக்கும் தருவாய் வரை என் பெயரைமட்டுமே உச்சரிக்கும்படியாகன்னா பாத்துக்கோங்க எப்படி என்மேல் உயிராயிருந்தாங்கன்னு.
நினைவுகள் ததும்புது கண்ணீர்வழியே.
மிக்க நன்றிக்கா
/அஹமது இர்ஷாத் கூறியது...
பதிலளிநீக்குநகைப்பூட்டுகிறது உங்கள் ஆக்கம்.
http://bluehillstree.blogspot.com
//
மிக்க
நன்றி இர்ஷாத்
Kanchi Murali கூறியது...
பதிலளிநீக்கு'நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை.... என்றும் அது கலைவதில்லை... எண்ணங்களும் மறைவதில்லை..." என்ற வைர வரிகளின்படியும்........
பால்யப் பருவத்தில் - பள்ளிப் பருவத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் பசுமரத்தாணி போல என்றும் நெஞ்சை விட்டு நீங்காது என்பதற்கும் இந்த இடுகையே சாட்சி.....
மலிக்கா மேடத்துக்கு திடீரென்று " ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே " என்ற பாடல் நினைவு வரக் காரணம் என்னவோ...!//
அதுவா முரளி நம்ம நாஸியா எட்டுக்காலில் நின்னாக பதின்ம தொடர் எழுதுங்கன்னு. அவுகளுக்கு தெரியாது இப்படி நான்
பச்சகொயந்தக்கதை எழுதுவேன்னு.
/மொத்தத்தில்.... எங்களையும் பால்ய - பள்ளிப் பருவத்திற்கு Rewind பண்ணி பார்க்கச் சொல்றீங்க... //
எல்லாரும் ஆட்டோகிராப்புக்கு போங்கன்னுதான் போயிட்டீங்களா
/ரைட்டு....
ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.... ஓர் கிராமத்திலோ, ஓர் நகரத்திலோ பிறந்தவனுக்குத்தான் இந்த Rewind மற்றும் ஓர் பாடலில் வருமே "வெயிலோடு விளையாடி.... வெயிலோடு உறவாடி... பசி வந்தா குருவி முட்டை... சகதிதான் நம்ம சட்ட..." இதெல்லாம் மாநகரத்தில் பிறந்தவனுக்கு இதெல்லாம் கிடையாது... கிடைக்காது...
குறிப்பா... இந்தக்கால குழந்தைகளுக்கு இப்பசுமையான நினைவலைகள் கிடைக்காது... காரணம், பாடச்சுமை - indoor games - TV - Vedio games இப்படி இக்காலக் குழந்தைகள் பழக்கப்படுவதால் இந்த இப்பசுமையான நினைவலைகள் கிடைக்காது என்கிறேன்... சரியா? //
நிச்சியமாக இதோ தற்போது என் மகனார் கம்பூட்டரில்தான் வாழ்க்கை சுருக்கப்பட்டுவிட்டது அவர்களுக்கு நான்கு சுவற்றுக்குள்.
எல்லாமே கணினிமயமாக்கப்படதால்
கடந்தகாலம் அவர்களுக்கில்லை அழகிய நாட்களை எண்ணிபார்க்க வரும்காலங்களில் நேரமிருக்காது என்பதற்காவோ என்னவோ..
/ஆமா... நடுவுல....
"ஆங்காத்து வீசுதே பொங்காத்து வீசுதேன்னு" ..... அப்படீன்னா... என்னங்க அர்த்தம்.... உங்க ஊரு பாஷையா.....//
ஓ அது சூசகமா பேய்போலன்னு சொல்லாம சொல்லுறது ஹி ஹி
/இந்த இடுகை "பசுமையான நினைவுகளே.... " என கவியரசின் பாடலை பாடத் தோன்றுது..
வாழ்த்துக்கள்....
நட்புடன்... .
காஞ்சி முரளி.......//
மிக்க நன்றிமுரளி.
பசுமையான என் நினைவுகளை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளவைத்த
நாஸியாவுக்கும் தாங்களுக்கும் மிக்கநன்றி.
மாதேவி கூறியது...
பதிலளிநீக்குஅருமையான நினைவுகள்./
மிக்க நன்றி மாதவி
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
சின்னவயசு ஞாபகங்கள் இப்போ நினைச்சாலும் நல்ல ஜாலியா இருக்கும். //
ஜாலியோ ஜாலிதான்
நல்ல பகிர்தல் மலிக்கா.. நல்ல விறுவிறுப்பா சென்றது உங்க பள்ளி நினைவுகள்..//
மகிழ்ச்சி கலந்த நன்றி ஷேக்..
Chitra கூறியது...
பதிலளிநீக்குஅச்சோ அறுத்துட்டே நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுன்னு எத்தன தடவ சொல்லுறது.
...நல்ல அறுவடை! ஹா,ஹா,ஹா.....//
என்கதைக்கேட்டு இப்படியா சிரிக்கிறது.
அப்பாடா என்னாலையும் உங்களைப்போல் சிரிக்கவைக்கமுடிகிறதே அதுபோதும்..
//பெயரில்லா கூறியது...
/5 ஆம் வகுப்பு போக ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது. வந்தது படிப்புக்கு ஆப்பு.//
வந்துரிச்சா உங்களுக்கும் ஆப்பு.//
அப்ப எல்லாருக்கும் அப்படித்தான் ஆனா இப்ப நிலைம மாறிடுச்சிங்கோ. எல்லாம் வெளுத்து வாங்குது படிப்புல
/சூப்பர் ஸ்டோரி அழகாக எழுதியிருக்கீங்க சின்னவயசுக்கே போனதுபோல் இருக்கு..
//
ரொம்ப நன்றிங்க பெயரச்சொல்லலையே ஹூம்
//ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குகொஞ்சம் கூட தோய்வு இல்லாம கதை விறுவிறுப்பா போகும் போது. இண்டர் வெல் விட்டுடீங்களே. பூனைகுட்டி மேட்டர் ரியல் ஜோக். மொத்தம் படம் 15ரீல்ல ஒன்னுதான் முடிஞ்சி இருக்கு மீதி 14 எப்ப வரும்/
ஏன்சாமி. இப்பவே அறுத்துட்டேன்னு நிப்பாட்ட்ட்ட்ட்டுன்னு அல்லாரும் சொல்லுறாங்க நீங்கமட்டும் இப்படி சொல்லுதேளே.என்ன தங்கமான மனசு[அப்படிதான் சொல்லிக்கனும் அப்பத்தான் ஜெய்லானிக்கு ஜல்ப்பு பிடிக்கும்]
பூனைக்குட்டி குட்டிதான் ஆனா அடிதான் பெரிசு ரொம்ப நாள் வலிச்சது தெரியுமா..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு’’அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உலா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,’’
இந்த பாட்டுதான் நினைவுக்கு வருது.//
பொற்காலத்துக்கே போய்ட்டதுபோல் தெரியுது. அதில் இருக்கும் ராஜ்கிரன் நீங்கதானா. தோளில் தொங்கியிருப்பாங்களே இல்ல இல்ல ஏறி மிதித்து இருப்பாங்களே..
அது ஒரு பொற்காலம் இல்லையா ஜெய்லானி..
seemangani கூறியது...
பதிலளிநீக்குஹையா...உள்ளே வந்துட்டேன்...எப்பூடி...
இனிமேல் நாங்களும் ஒழுங்கா ஆஜர் ஆய்டுவோம்லே...
உங்கள் பதிவு நவரச விருந்து இத்துக்குமேல என்ன சொல்ல...இப்டியே சின்னபுள்ளையா இருக்க இறைவனை வேண்டுகிறேன்...வாழ்த்துகள்//
வந்தாச்சா வந்தாச்சா வாங்க வாங்க
ஆஜர் ஆகலைன்னா ஆலினார் ஜலிக்காட்ட சொல்லி அரஸ்பண்ணச்சொல்லிடுவோமுல்ல.
வேண்டுனீங்களே ஒரு வேண்டுதல் அது அது பலிக்கட்டும் ஆமீன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி மாங்கனி அச்சோ சீமாங்கனி..
/பாலமுருகன் கூறியது...
பதிலளிநீக்குநல்லாருக்கு.
நான் இது வரை கேள்விப்படாத மரம், 'மொகழமரம்'.
அது என்னவென்று சொல்லுங்களேன்./
மகிழம்பூ கேள்விப்பட்டதுண்டா பாலா
எங்க ஊரில் இந்த மரம் நிறைய இருக்கு இதன் பழம் சாப்பிட்டால் தொண்டையை சற்று பிடித்து இழுக்கும் ஆனாலும் ருசியாக இருக்கும் மஞ்சம் சிவந்த மஞ்சள் நிறங்களில் பழமிருக்கும் இப்பூ
சூரியகாந்திபோல் ஆனா ரொம்ப சின்னதா வெள்ளை வெளேரென்று நல்ல மணத்துடன் இருக்கும்.
நாங்க மொகழமரம் முகழம்பூ என்றுதான் சொல்லுவோம் வேறு பெயர் உண்டான்னு தெரியலையே பாலா. தெரிந்த வங்க விளக்குங்கோ..
நல்ல பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்க கொசுவர்த்தி ரொம்ப நல்லா இருந்தது வாசமா , மருந்து நெடி இல்லாமல்
பதிலளிநீக்கு//நின்றுகொண்டிருக்கும் சமயம் பக்கத்து அறையிலிருந்து மச்சான் வந்து டக்குன்னு ஒட்டிக்கொண்டு நிற்க[அவுக ரூமில் ஒளிந்திருந்தது தெரியாம பேக்கோ மாதிரி எழுந்து நின்னேன்] போட்டோ எடுத்ததும் எனக்கு ஒரே அழுகை ஏனென்று தெரியவில்லை//
பதிலளிநீக்குஅப்போவே பயந்தது இன்னும் தொடருதா??? ஆஆஆவ்வ்வ்வ்வ்
//தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்
சிதறியது தாவணிக்குள்ளேயே அப்படியே எடுத்து சாப்பிட்டுக்கொண்டே மதரஸாபோய் சேர்ந்தோம்//
இது மட்டுமா எத்தன வீட்டுலே மாங்கா, கொய்யா காணாப்போச்சுனு சொல்லலியே
//அலறிக்கொண்டு வெளியெ வந்த அக்கா கையில் மாட்டினேன் செம சாத்து //
கை அச்சு இருக்கா இல்லியா?
நல்ல பகிர்வு..
தெருவுலே உலா வருவது மாதிரி இருந்தது இந்த பதிவை படிக்கும்போது...மீண்டும் கிடைக்குமா????
என் குழந்தைகளுக்கெல்லாம் இந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பேயில்லை...
//நின்றுகொண்டிருக்கும் சமயம் பக்கத்து அறையிலிருந்து மச்சான் வந்து டக்குன்னு ஒட்டிக்கொண்டு நிற்க[அவுக ரூமில் ஒளிந்திருந்தது தெரியாம பேக்கோ மாதிரி எழுந்து நின்னேன்] போட்டோ எடுத்ததும் எனக்கு ஒரே அழுகை ஏனென்று தெரியவில்லை//
பதிலளிநீக்குஅப்போவே பயந்தது இன்னும் தொடருதா??? ஆஆஆவ்வ்வ்வ்வ்
//தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்
சிதறியது தாவணிக்குள்ளேயே அப்படியே எடுத்து சாப்பிட்டுக்கொண்டே மதரஸாபோய் சேர்ந்தோம்//
இது மட்டுமா எத்தன வீட்டுலே மாங்கா, கொய்யா காணாப்போச்சுனு சொல்லலியே
//அலறிக்கொண்டு வெளியெ வந்த அக்கா கையில் மாட்டினேன் செம சாத்து //
கை அச்சு இருக்கா இல்லியா?
நல்ல பகிர்வு..
தெருவுலே உலா வருவது மாதிரி இருந்தது இந்த பதிவை படிக்கும்போது...மீண்டும் கிடைக்குமா????
என் குழந்தைகளுக்கெல்லாம் இந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பேயில்லை...
நல்ல கதையை(?!) அழகாக எழுதியிருக்கீங்க சின்னவயசுக்கே போனதுபோல் இருக்கு..
பதிலளிநீக்குஅம்முகுட்டி. கூறியது...
பதிலளிநீக்குமாதுளைவீட்டு அம்மனி ஆங்காத்து வீசுதே பொங்காத்து வீசுதேன்னு மதரஸாக்குள் வந்து, ரெண்டு குட்டிகள் எங்கவீட்டில் மாதுளையை பறிச்சிவிட்டாங்க. அதுபோயிட்டுபோவுது.
மண்பானையை உடைத்துவிட்டாங்களே. எங்கே அவங்க காட்டுங்கன்னு நிக்கிறாங்க. மாட்டுவோமா மெதுவா நகர்ந்து வாசலுக்கு வந்து விட்டோம் ஒரே ஓட்டம் மூச்சிரைக்க வீட்டு வாசலில்தான் வந்து நின்னோம் அம்மாடியோ..
மாட்டியிருந்தோம் அதோகதிதான்..//
அருமை அருமை மிக அழகாக பழைய நினைவுகளூக்கே கூட்டிகிட்டு போயிட்டீங்கக்கா.
நானும் வெள்நாடுவந்து இதெல்லாம் மிஸ்பண்ணிட்டேன்.நான்மாங்க அடித்து மாட்டினேன் நீங்க மாதுளையா/
அச்சோ நீங்க அடிவாங்கல ஆனா நான் நல்லகட்டினாங்க டின் முதுகில்.
சூப்பர் சூப்பர் எனகுக நல்லாபிடிச்சிருக்கு.
அம்மு குட்டி. ராசல்கையிமா
//
பழைய நினைவுகளூக்கு எல்லாருமே சிக்குன்டு கிடக்க எனக்கு வாய்பளித்த நாஸியாவுக்கே நன்றியு.
மிக்க நன்றி அம்மு. எப்ப இந்தபக்கம் விசிட் அடிப்பீங்க
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குதொடரும் நினைவலைகள் நல்லா இருக்கு. நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா பதின்ம வயது என்பது பதிமூன்றில் தொடங்கி, பதினெட்டில் முடிவது, தமிழில் சொல்லிப்பாருங்கள். பதி என ஆராம்பிப்பதுதான் பதின்ம வயது அதாவது டீன் ஏஜ் சீரியல். நீங்க சொல்லியிருப்பது எல்லாம் பன்னிரண்டு வயது வரை வருவது. இருந்தாலும் நல்ல அனுபவங்கள் படிக்க அருமை. பகிர்வுக்கு நன்றி மலிக்கா..
என்ன பித்தன் சார். வச்சிக்கிடா வஞ்சனை செய்கிறோம் என்ன செய்ய 1 லிருந்து 12 வரைதான் எனக்கு சின்னவயது டீனேஜ் எல்லாமே!
பதினெட்டு வயதிலெல்லாம் 6 வயதுகுழந்தை. அதால அதப்போய் சொல்லமுடியுமா டீன் ஏஜின்னு அதனாலதான் உள்ளதெல்லாம் புட்டுஇங்கே வச்சிட்டோமுல்ல.
மிக்க நன்றி சுதாகர்சார்..
மங்குனி அமைச்சர் கூறியது...
பதிலளிநீக்கு//பெரிய மண்பானையின்மீது ஏறிபறிக்கலாமென்று ஏறினேனா! //
தோல்விய கண்டு துவன்டு விடகூடாது , மறுபடியும் அடுத்த மண் பானமேல ஏறி ட்ரை பன்னனும்.//
எப்ப இப்பவா என்ன ஒரு லொள்ளு.
இருந்தாலும் ஏறிடுவோமுல்ல இப்பவும்..
//அச்சோ அறுத்துட்டே நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுன்னு எத்தன தடவ சொல்லுறது.//
அப்புறம் உங்க பதிவுலே இதுதான் பெஸ்ட் லைன்//
இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன்.
நன்றி முந்தினி அமைச்சரே!
பிரோஷா அப்ஷர் கூறியது...
பழைய நினைவுகள் அருமையிலும் அருமை.அட்காசமாக எழுதியிருக்கீங்க..மலிக்கா..//
மிக்க நன்றி பிரோஷா
1 ஏப்ரல், 2010 9:41 am
செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்குசெந்தில்குமாரின்
வணக்கங்கள் அக்கா...
சில்வர் பிளேட் என்பெயர்போட்டும். ஒரு ஹீரோபேனா. முதல் ரேங்கிற்கு தந்ததும். இன்னமும்.[பேனா எழுதாது இப்போது ஹி ஹி ஹி]
அருமையான எழுத்துகள் தோய்வு இல்லாமல் நான் ஏமாந்து போனேன் விரைவாக முடிந்துபோனது நினைத்து.//
மிகுந்த சந்தோஷமும் மிக்க மகிழ்ச்சியும் செந்தில் தாங்களின் வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி செந்தில்
தொடர்ந்து வாருங்கள்..
Deepa கூறியது...
பதிலளிநீக்கு2 - 3 தடவை படித்து விட்டேன். ரொம்ப பிடிச்சது.
//சரின்னு இருவரும் ஒருசேர போய் தொட அதில் ஆமை அமர்ந்திருப்பது அறியாமல் நாந்தான் பஸ்ட் என ஓங்கி அடித்தபோது ஏதோ வள வளன்னுகையில் என்னான்னு பார்த்தா ஆஆஆஆமை அல்லாவேன்னு கத்தியபடி போனவேகத்தில் திரும்பி கரையேறியபோதுதான் பார்கிறேன் உம்மம்மா வேப்பங்குச்சியை எடுத்துக்கொண்டு அடியே நில்லுடின்னு துரத்தியதேபார்க்கனும் இப்போது நினைத்தாலும் ஓடுவதுபோலிருக்கும்.//
மிகவும் ரசித்துச் சிரித்தேன்.//
ரசித்து 2. 3. தடவையும் படித்து சிரித்தமைக்கு மிக்க நன்றி தீபிகா..
தொடர்ந்து வாருங்கள்..
Jaleela கூறியது...
பதிலளிநீக்குபதின்ம வயது நகைச்சுவையா அள்ளி தெளித்துபுட்டீஙக்.
எனக்கும் நாஸியா அழைப்பு கொடுத்து இன்னும் போடல.
உஸ்தாபிக்கு புனை உள்ளே விட்டு இப்படி எல்லாம் வேறய ஆட்டமா?
இதே போல் முன்பு மர்லி குச்சி விட்ட்டாஙக் ந்னு சொன்னாஙக் அதுக்க்கே சிரித்து கொன்டு இருந்தேன், பூனையா எபப்ப்பா பாய்ஞ்சுடுமே///
சந்தோஷம் ஜலீக்கா. பிராண்டிடிச்சி பூனை அதுமட்டுமா இன்னும் என்னல்லாமோ செய்து வாங்காத அடியா இதெல்லாம் அந்த வயசுல சாதாரணமப்பா இல்லக்கா..
சசிகுமார் கூறியது...
பதிலளிநீக்குநல்ல பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சசி..
/sarusriraj கூறியது...
உங்க கொசுவர்த்தி ரொம்ப நல்லா இருந்தது வாசமா , மருந்து நெடி இல்லாமல்/
ஹை வாசமா இருந்ததா நன்றிக்கா..
அபுஅஃப்ஸர் கூறியது...
பதிலளிநீக்கு//நின்றுகொண்டிருக்கும் சமயம் பக்கத்து அறையிலிருந்து மச்சான் வந்து டக்குன்னு ஒட்டிக்கொண்டு நிற்க[அவுக ரூமில் ஒளிந்திருந்தது தெரியாம பேக்கோ மாதிரி எழுந்து நின்னேன்] போட்டோ எடுத்ததும் எனக்கு ஒரே அழுகை ஏனென்று தெரியவில்லை//
அப்போவே பயந்தது இன்னும் தொடருதா??? ஆஆஆவ்வ்வ்வ்வ்
//தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்
சிதறியது தாவணிக்குள்ளேயே அப்படியே எடுத்து சாப்பிட்டுக்கொண்டே மதரஸாபோய் சேர்ந்தோம்//
இது மட்டுமா எத்தன வீட்டுலே மாங்கா, கொய்யா காணாப்போச்சுனு சொல்லலியே
//அலறிக்கொண்டு வெளியெ வந்த அக்கா கையில் மாட்டினேன் செம சாத்து //
கை அச்சு இருக்கா இல்லியா?//
ரொம்ப நாள் இருந்திச்சி இப்பயில்ல
எப்புடி..
//நல்ல பகிர்வு..
தெருவுலே உலா வருவது மாதிரி இருந்தது இந்த பதிவை படிக்கும்போது...மீண்டும் கிடைக்குமா????
என் குழந்தைகளுக்கெல்லாம் இந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பேயில்லை//
ஆமா அபு நிச்சியமாக நம்ம பசங்களுக்கு அந்த கொடுப்பினையெல்லாமில்லை வருத்தாமகத்தானிருக்கிறது லீவில் போகும் 1 மாத்திலும் அங்கே இங்கேன்னு இருக்குதுகளே தவிர இதுபோன்றில்லை..
மிக்க நன்றி அபுஅஃப்ஷர்
சே.குமார் கூறியது...
பதிலளிநீக்குநல்ல கதையை(?!) அழகாக எழுதியிருக்கீங்க சின்னவயசுக்கே போனதுபோல் இருக்கு..//
நீங்களும் போயாச்சா அதுதானே வேணும் இப்படி அடிக்கடி போயிட்டுவாங்க சாரி போயிட்டு வருவோம்
மிக்கநன்றி குமார்...
சலாம் மலிக்கா! நேற்றுவரை முகம் தெரியாமல் தோழியாய் இணையத்தில் நாமிருவரும் பழகி... அதுவும் 'வாங்க.. போங்க..'ங்கிற மரியாதையோட! :-) எதிர்பாராத விதமா இன்று உன்னோடு பேசிய பிறகு அந்த மலைப்பு நீங்காமலே இந்த தலைப்பை தேடியெடுத்து... பதிவ போட்டு 2 1/2 வருஷமானா என்ன... பின்னூட்டமிட்டே ஆகணும்னு வந்துட்டேன் இங்கே :) இந்தப் பதிவ நான் அப்பவே பார்த்திருந்தா வாய் வலிக்க 'வாங்க.. போங்க..'ன்னு சொல்லாம பழைய உரிமையிலேயே சொல்லியிருக்கலாமேபா உன்னை :((
பதிலளிநீக்கு[ஸ்மைலியைப் பார்த்து பயந்துடாதபா... சும்மா டூப்ளிகேட் வருத்தம் இது! ;)))]
ஷரீஃபா மேல பூனைக்குட்டிய பிடிச்சு விட்டியா...? அடப்பாவி..! உன் குசும்புக்கு அளவே இல்லையா? :-) :-) :-) ஷரீஃபாவுக்கு நான் ஒரு டியர் ஃப்ரெண்ட் இருக்கேன்னு நினைப்பிருக்கட்டும்... ஆமா சொல்லிட்டேன்...! ;)
யக்கோவ் அஸ்மாக்கா. சத்தியமா நான் நெனச்சிக்கூட பாக்கலைக்கா. நானும் நீங்களும் மீண்டும் இணைவோமுன்னு. எனக்கு மிகவும் பிடித்தவர்களை என்னிடமே மீண்டும் வந்து சேர்த்த இறைவனுக்கே புகழைத்தும்.. மதரஸாவில் அடித்த லூட்டிகளெல்லாம் அப்பப்பா. அது சரி ஷரீபாக்காவின் டியர் நீங்கன்னு நீங்க சொல்லித்தான் தெரியனுமோ.. ஹா ஹலோ ரஜியாக்கா வந்தா தெரியுமுங்கோ உங்கடியர் ஹி ஹி..
பதிலளிநீக்குரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா மகிழ்ச்சிக்கா..வார்த்தையே வரவில்லை எனக்கு.. ஒரு பதிவே எழுதபோறேன்..