நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எனக்கும் வலியிருக்கு!


செந்தாழும் பூவும்
சின்னப் பாம்போடு ஆட

வண்ண ரோசாப் பூவும்
சின்னப்பொண்ணோடு கூட

முல்லைப் பூவும்
முகம் மலர்ந்து சிரிக்க

மொட்டவிழ்ந்த மல்லிகையோ
மஞ்சத்தில் மகிழ

செவ்வந்திப் பூவுக்கோ
மூங்கில் காற்றின் வழியே

முஹாரி ராகம் கேட்டபோது
சிணுங்கிச் சிணுங்கியழுதது 

செத்த மனிதருக்காக
செக்கச்சிவந்த என்னை

சித்தரவதை
செய்யப் போகிறார்களேயென்று!

பாவம் அதற்குத்தெரியவில்லை
பணக்கார பிணத்துக்கும்

பலவித மலர்களும் 
பாடாய் படுமென்று!!!!

[டிஸ்கி இரவு டீவியில் பார்த்த ஒரு  காட்சியால்
பிறந்தது இக்கவி ஹா ஹா
 மலரின் மனம் விம்மி அழுததாய் தோன்றியது அதான் ஹி ஹி ஹி
என்னக்கொடுமப்பா இது அப்படின்னுதானே சொல்லுறீங்க]]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

28 கருத்துகள்:

 1. ம்ம்....அந்த பூவோட கோணத்தில்
  பாத்து இருக்கீங்க...........
  நல்லா இருக்கு கவிஞரே.

  பதிலளிநீக்கு
 2. //பாவம் அதற்குத்தெரியவில்லை
  பணக்கார பிணத்துக்கும்

  பலவித மலர்களும்
  பாடாய் படுமென்று!!!!//
  WoW.......... Arumai.....
  nalla sinthanai.

  பதிலளிநீக்கு
 3. மீண்டும் முரளி....

  ///மூங்கிலின் காற்றிலின் வழியே///

  மூங்கிலின் காற்றின் வழியே
  இல்லை
  மூங்கினுள் காற்றின் வழியே

  இது சரியோ...

  இல்லை தங்கள் வரிகள் சரியோ...

  நட்புடன்....
  காஞ்சி முரளி.......

  பதிலளிநீக்கு
 4. //முல்லைப் பூவும்
  முகம் மலர்ந்து சிரிக்க//

  உங்கள் கவிதையை
  பார்த்து நாங்கள் ரசிக்க!
  நல்லா இருங்குங்க!வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. //மலரின் மனம் விம்மி அழுததாய் தோன்றியது அதான் ஹி ஹி ஹி//

  அட....அட.....ச்சொ..ச்சொ...

  பதிலளிநீக்கு
 6. //என்னக்கொடுமப்பா இது அப்படின்னுதானே சொல்லுறீங்க]]//

  ஆமான்னு சொன்னா பூவு கோவிச்சுக்கும். ஹா...ஹா...( எந்த பூவுன்னு சொல்லலியே!!)

  பதிலளிநீக்கு
 7. முதலில்...

  மலருக்கு
  மணம் மட்டுமே உண்டென்று எண்ணாமல்
  மனதொன்றும் உண்டென்று - கண்ட
  மலிக்காவுக்கு என் வணக்கங்கள்.....

  "உயிர்களிடத்தில் அன்பு வை' என்பது
  உலகத்திலுள்ள அனைத்து மதங்களின்
  உயிர்ப்பான உபதேசம்...

  ஆனால்....

  மலர்களுக்கும்
  உயிருண்டு - அவ்
  உயிருக்குள் மனமொன்று
  உண்டென்று
  உணர்த்திய - இக்கவிதையை
  படைத்தமைக்கு - என்
  பாராட்டுக்கள்.......


  செந்தாழம்பூ, ரோசாப்பூ, முல்லைப்பூ, மல்லிப்பூ இப்படி எல்லா பூக்களும் மனிதர்களின் மகிழ்ச்சிக்காக....
  ஆனால்
  இச்செவ்வந்திப்பூ மட்டும் துக்கத்திற்க்காக என்று சொல்லிவிட்டு...
  அதன் சோகத்தை கண்டு, அதனை சமாதானப்படுத்த ....
  ஆறுதலாய்....
  *****///பாவம் அதற்குத்தெரியவில்லை
  பணக்கார பிணத்துக்கும்
  பலவித மலர்களும்
  பாடாய் படுமென்று!!!!//////****** என்ற வரிகள்....
  நல்ல ஆழ்ந்து, அனுபவித்து எழுதிய கவிதை....

  பாராட்டுக்கள்....வாழ்த்துக்கள்....

  நட்புடன்...
  காஞ்சி முரளி.....

  பதிலளிநீக்கு
 8. //செவ்வந்திப் பூவுக்கோ
  மூங்கிலின் காற்றிலின் வழியே

  முஹாரி ராகம் கேட்டபோது
  சினுங்கிச்சி சினுங்கியழுதது //

  எப்படிப்பா இப்படியெல்லம். சூப்பர் உனக்குன்னு தோனுதுபார் பூவுக்கும் வண்டும் கற்பனை..அசத்து

  பதிலளிநீக்கு
 9. Kanchi Murali கூறியது...
  மீண்டும் முரளி....

  ///மூங்கிலின் காற்றிலின் வழியே///

  மூங்கிலின் காற்றின் வழியே
  இல்லை
  மூங்கினுள் காற்றின் வழியே

  இது சரியோ...

  இல்லை தங்கள் வரிகள் சரியோ...

  நட்புடன்....
  காஞ்சி முரளி//

  வெகுநேரச்சிந்தனைக்கு பின்தான்.
  சிணுங்கியா சினுங்கியா.அச்சோன்னு சினுங்கி எழுத்திட்டேன்.

  அப்புறம் மூங்கில் காற்றின்.
  அப்படி மாத்திட்டேன்.

  தமிழின் பாடம் மீண்டும்போய் கற்கவேண்டுமென நினைக்கிறேன் நான்..

  பதிலளிநீக்கு
 10. //டிஸ்கி இரவு டீவியில் பார்த்த ஒரு காட்சியால்
  பிறந்தது இக்கவி ஹா ஹா
  மலரின் மனம் விம்மி அழுததாய் தோன்றியது//


  கவிதை எழுதனும் என்ற நெனப்புலேயோ ஒவ்வொரு அசைவையும் பாக்குறீங்கனு நினைக்கிறேன்.
  அதானே கவிஞர்களின் பார்வை தனிதான்

  பதிலளிநீக்கு
 11. "தைவிக மைருஅ"

  கொஞ்சம் வித்தியாசமா யோசிப்போம்ல..........

  பதிலளிநீக்கு
 12. பாவம் அதற்குத்தெரியவில்லை
  பணக்கார பிணத்துக்கும்

  பலவித மலர்களும்
  பாடாய் படுமென்று!!!!


  ......ஒரு பூவின் வலி, உங்களின் பூ போன்ற மனதுக்கு தெரிந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. பூவுக்கும் வாசம் உண்டு. வலியும் உண்டு. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. // சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  ம்ம்....அந்த பூவோட கோணத்தில்
  பாத்து இருக்கீங்க...........
  நல்லா இருக்கு கவிஞரே.//

  ஆமா பரோட்டா பாவந்தானே அதான்
  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 15. //சே.குமார் கூறியது...
  //பாவம் அதற்குத்தெரியவில்லை
  பணக்கார பிணத்துக்கும்

  பலவித மலர்களும்
  பாடாய் படுமென்று!!!!//
  WoW.......... Arumai.....
  nalla sinthanai//

  மிக்க நன்றி சே.குமார்

  பதிலளிநீக்கு
 16. //சே.குமார் கூறியது...
  //பாவம் அதற்குத்தெரியவில்லை
  பணக்கார பிணத்துக்கும்

  பலவித மலர்களும்
  பாடாய் படுமென்று!!!!//
  WoW.......... Arumai.....
  nalla sinthanai//

  மிக்க நன்றி சே.குமார்

  பதிலளிநீக்கு
 17. /Kanchi Murali கூறியது...
  nalla kavithai...

  vazthukkal...

  nanthan 1st okvaa....!

  Kanchi Murali//

  இல்லையே மூன்றாவது தான் ஓகே

  பதிலளிநீக்கு
 18. S Maharajan கூறியது...
  //முல்லைப் பூவும்
  முகம் மலர்ந்து சிரிக்க//

  உங்கள் கவிதையை
  பார்த்து நாங்கள் ரசிக்க!
  நல்லா இருங்குங்க!வாழ்த்துக்கள்.//

  ரசித்து கருத்து தெரிவித்த மகராஜனுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 19. ஜெய்லானி கூறியது...
  //மலரின் மனம் விம்மி அழுததாய் தோன்றியது அதான் ஹி ஹி ஹி//

  அட....அட.....ச்சொ..ச்சொ...

  என்ன ஜெய்லானி என்னாச்சி..


  ஜெய்லானி கூறியது...
  //என்னக்கொடுமப்பா இது அப்படின்னுதானே சொல்லுறீங்க]]//

  ஆமான்னு சொன்னா பூவு கோவிச்சுக்கும். ஹா...ஹா...( எந்த பூவுன்னு சொல்லலியே!!)//

  எந்தப்பூவு எனக்குத்தெரியுமே..

  பதிலளிநீக்கு
 20. www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 21. வித்தியாசமான கற்பனை!

  "பூ பாடும் ராகம்" - கவிதைக்கு எப்படி
  எனது தலைப்பு?

  பதிலளிநீக்கு
 22. oru puuvooda manasu oru poovukkuthan theriyum. super super super

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது