நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வயோதிகத்தின் விளிம்பில்!



16- 3-2010 அன்று
யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது
மிக்கநன்றி யூத்ஃபுல் விகடன்



வளர்ந்து வரும் வயதில்
வம்புசெய்துகொண்டே
இதென்ன இதென்ன
எத்தனை முறை
அதென்ன அதென்ன
எத்தனை முறை


அசராமல் கேட்ட
கேள்விக்கெல்லாம்
அலுத்துக்கொள்ளாமல்
அன்போடு அத்தனைக்கும்
பதிலளித்தேன்


:ஆனால்”


வயோதிகத்தின் வாசம்-என்
வயதைத்தொட்டு நிற்கையில்
இதென்ன இதென்ன
இரண்டாம் முறைக்கேட்டு
முடிக்கவில்லை
முகம் சிவக்க
முனுமுனுத்தாய்


எத்தனை முறை
சொன்னாலும்
புரியாத ஜென்மமென்று!
பளிச்சென்று புரிந்தது
எனக்கு
பிள்ளையின் பாசமின்று!

இதை கிளிக் செய்தால் இந்த கவிதையின் அர்த்தம் புரியும்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

28 கருத்துகள்:

  1. அடடா... பின்னிட்டீங்க...

    யூத்புல் விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. விகடனுக்கு வாழ்த்துகள்!


    காட்சியை அழகா கவிதையாக்கியிருக்கீங்க :)

    பதிலளிநீக்கு
  3. பளிச்சென்று புரிந்தது
    எனக்கு
    பிள்ளையின் பாசமின்று//

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  4. முதலில் யூத்புல் விகடனுக்கு என் நன்றிகள்....!



    கவிஞர் மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்... !

    //////வயோதிகத்தின் வாசம்-என் வயதைத்தொட்டு நிற்கையில்
    இதென்ன இதென்ன இரண்டாம் முறைக்கேட்டு
    முடிக்கவில்லை முகம் சிவக்க முனுமுனுத்தாய்....//////

    இயல்பானாதுதான் இது .........

    ரொம்ப சந்தோசம்....!
    (நீங்கள் என்னை பாராட்டிய வார்த்தைகளாலே உங்களுக்கு பாராட்டுக்கள்)

    மேலும்.... மேலும்...
    வளர்ந்திட வாழ்த்துக்கள்.....

    நட்புடன்...
    காஞ்சி முரளி..............

    பதிலளிநீக்கு
  5. யூத்புல் விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்....மிகவும் அருமை!!

    பதிலளிநீக்கு
  6. நீங்க தந்த வீடியோ லிங்க் கதையை போன வருஷம் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) அல்தாஃபி ஒரு உரையில் சொல்லக்கேட்டிருக்கிரேன். வருத்தமான விஷயந்தான்.
    .
    .
    .
    .
    பதில் சொல்ல தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வெற்றி..!

    பதிலளிநீக்கு
  9. எனக்கு க்ளிக் செய்யாமலே அர்த்தம் புரிந்தது...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நல்ல இயல்பான கவிதை..........
    ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.........
    வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  11. காட்சியும் கவிதையும் மனதை கனக்க செய்கிறது

    வாழ்த்துக்கள் சகோதரி

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

    படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


    மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

    நட்புடன்,

    சே.குமார்.

    பதிலளிநீக்கு
  13. நமக்கெல்லாம் சுட்டு போட்டாகூட இந்த மாதிரி யோசனை வராதுங்க ,


    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  14. எனக்கு என்றோ புரிந்துவிட்டதுமா?
    மனதிற்க்குள் பூட்டிய கசப்பான அனுபவங்கள் மடைதிறந்த வெள்ளமாய் இக்கவிதையை கண்டவுடன்..........

    பதிலளிநீக்கு
  15. அன்னிக்கே பாத்துட்டேன்; இன்னிக்குத்தான் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. மிக அருமை மலிக்கா, இந்த பதிவு குட் பிளாக்கில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பதிவு எல்லாமே என்னை பொருத்த வரை குட் பிளாக் தான்

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

    மிக்க நன்றி அண்ணாமலையாரே!

    மிக்க நன்றி . பாலாஜி

    மிக்க நன்றி ஜமால்காக்கா..

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

    மிக்க நன்றி சைவக்கொத்துப்பரோட்டா..

    மிக்க நன்றி சுபா..

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

    மிக்க நன்றி நட்புடன்
    காஞ்சி முரளி..

    மிக்கநன்றி மேனகாசத்தியா..

    பதிலளிநீக்கு
  20. ஜெய்லானி கூறியது...
    நீங்க தந்த வீடியோ லிங்க் கதையை போன வருஷம் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) அல்தாஃபி ஒரு உரையில் சொல்லக்கேட்டிருக்கிரேன். வருத்தமான விஷயந்தான்.
    .
    .
    .
    .
    பதில் சொல்ல தெரியவில்லை.//

    இந்த வீடியோவை எனக்கு அனுப்பிவைத்த. கவிஞர் பேரவைத்தலைவர் அப்துல் கத்தீம். அவர்களுக்கு நான் நன்றிஐ சொல்லிக்கொள்கிறேன் பார்த்தும் கண்ணீர் என்னையறியாமல் வந்துவிட்டது உடனே எழுதியதுதான் இந்தகவிதை ஜெய்லானி..

    முதுமையின் பயம் மனதை இப்போதே லேசாய் ஆட்கொள்கிறது..

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

    மிக்க நன்றி சித்ராமேடம்..

    மிக்க நன்றி சே.குமார்..

    பதிலளிநீக்கு
  22. // புலவன் புலிகேசி கூறியது...
    எனக்கு க்ளிக் செய்யாமலே அர்த்தம் புரிந்தது...வாழ்த்துக்கள்//

    புரிந்துவிட்டதா..புலியாச்சே.

    மிக்கநன்றி புலவா..

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்..

    மிக்க நன்றி விடிவெள்ளி

    மிக்க நன்றி சகோதரர் விஜய்..

    பதிலளிநீக்கு
  24. மங்குனி அமைச்சர் கூறியது...
    நமக்கெல்லாம் சுட்டு போட்டாகூட இந்த மாதிரி யோசனை வராதுங்க ,//

    மங்குனியை சுடுவதா? வேண்டவே வேண்டாம் அமைசரே அப்படி ஒரு முடிவுக்கெல்லாம் வந்துடாதீங்க.

    அருமையான கவிதை.///

    மிக்க நன்றி அமைச்சரே..

    பதிலளிநீக்கு
  25. /சுப்பு கூறியது...
    எனக்கு என்றோ புரிந்துவிட்டதுமா?
    மனதிற்க்குள் பூட்டிய கசப்பான அனுபவங்கள் மடைதிறந்த வெள்ளமாய் இக்கவிதையை கண்டவுடன்//

    நிறைய இடங்களில் நடப்பதுதான்மா. கண்ணீர் வேண்டாம்
    கவலைவேண்டாம் இறைவன் நல்லதையே தருவான்..

    பதிலளிநீக்கு
  26. /ஹுஸைனம்மா கூறியது...
    அன்னிக்கே பாத்துட்டேன்; இன்னிக்குத்தான் வாழ்த்துகள்/

    ஆகா அன்னிக்கேபார்த்தாச்சி.

    எப்போ சொன்னாலும் வாழ்த்துக்கள் ஏற்றுக்கொள்ளபடும் நன்றி ஹுசைன்னமா

    பதிலளிநீக்கு
  27. /Jaleela கூறியது...
    மிக அருமை மலிக்கா, இந்த பதிவு குட் பிளாக்கில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பதிவு எல்லாமே என்னை பொருத்த வரை குட் பிளாக் தான்/

    அக்காக்கு நிகர் அக்காதான்
    தங்கையை விட்டுக்கொடுக்காத அக்கா
    கூடப்பிறந்த அக்கா இல்லையே என நிறையமுறை வருந்தியதுண்டு.

    மூத்தவராக ஒரு ஆள் இருந்தால் நம்மை கண்டிக்க ஊக்கப்படுத்த என,,,
    இப்போது அதுவும் தரப்பட்டு என் எழுத்துக்களால் இறைவனுக்கே புகழனைத்தும்..

    மிக்க மகிழ்ச்சியக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது