நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முடியாததை முடிக்கும்!


பட்டாம்பூச்சியாகி
பொன்வானில் பறந்ததும்

காற்றோடு கைகோத்து
கொஞ்சி குழாவியதும்

நிலவோடு நிலவாகி
நீந்தி நீந்தி நடந்ததும்

நட்சத்திரத்தை கோத்தெடுத்து
நகைசெய்துபோட்டதும்

மேகத்தின் பஞ்செடுத்து
மெத்தையாக்கிக்கொண்டதும்

வானவில்லை வரச்சொல்லி
வண்ணங்களை வாங்கியதும்

வண்ணமிகு மலர்களிடம்
வம்புபண்ணி விளையாடியதும்

கடலலைகள் துள்ளிவரக்
கால்களோடு கட்டிப்போட்டதும்

தண்ணீரை தரையில்கொட்டி
கிள்ளிவிட்டு ரசித்ததும்

அந்தரத்தில் ஊஞ்சல்கட்டி
ஆடி ஆடிப்பார்த்ததும்

இன்னும்

இயலாத அத்தனையும்
இயலவைத்துக்காட்டிடும்

முடியாதவற்றையும்
முடியவைத்துக்காட்டிடும்

பொல்லாத கற்பனை
பொய்யுரைக்கும் கற்பனை....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

33 கருத்துகள்:

  1. அருமையான நெகிழவைக்கும் ஒரு கவிதை..

    பதிலளிநீக்கு
  2. //பொல்லாத கற்பனை
    பொய்யுறைக்கும் கற்பனை...//

    நல்ல கற்பனை
    நயமான கற்பனை

    கண்னை நம்ப வைக்கும் கற்பனை
    கடைசியில் கழுத்தை அறுக்கும் கற்பனை

    பதிலளிநீக்கு
  3. கற்பனையான
    அழகிய வரிகளால்
    அலங்காரமாய்
    கவி வரிகளை எழுதி...
    இறுதியாய்...
    //பொல்லாத கற்பனை
    பொய்யுறைக்கும் கற்பனை..../// ............யா....?

    நிஜங்களைவிட
    நிழல்கள் - கற்பனைகள்
    அழகாய்த்தானிருக்கும்...

    உங்கள் 'கற்பனையை'
    இந்தளவிற்கு பழி வாங்கக்கூடாது கவியே....

    கற்பனைவளம் இல்லாவிடில் உலகமே இயங்கா....

    எதுகை மோனையுடன்
    அழகான கவிதை...

    வாழ்த்துக்கள்..

    நட்புடன்....
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  4. ஜெய்லானி கூறியது...
    //பொல்லாத கற்பனை
    பொய்யுறைக்கும் கற்பனை...//

    நல்ல கற்பனை
    நயமான கற்பனை..

    மிக்க நன்றி ஜெலானி

    //கண்னை நம்ப வைக்கும் கற்பனை
    கடைசியில் கழுத்தை அறுக்கும் கற்பனை..//

    கழுத்தையறுக்கும் கற்பனை இது தோனலையே எனக்கு.

    ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா என்னிடம் மட்டும் சொல்லுங்க ஜெய்லானி. கண்னை நம்ப வைத்து கடைசியில் கழுத்தை அறுத்த கற்பனை எது யார் என்று?????????..

    பதிலளிநீக்கு
  5. / Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    அருமையான நெகிழவைக்கும் ஒரு கவிதை..
    //

    மிகுந்த மகிழ்ச்சி ஸ்டார்ஜன். மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  6. தெளிவா சொல்லிட்டீங்க

    பொய்யுறைக்கும் கற்பனை ...

    பதிலளிநீக்கு
  7. Kanchi Murali கூறியது...
    கற்பனையான
    அழகிய வரிகளால்
    அலங்காரமாய்
    கவி வரிகளை எழுதி...
    இறுதியாய்...
    //பொல்லாத கற்பனை
    பொய்யுறைக்கும் கற்பனை..../// ............யா....?//

    பொய்யுரைப்பது தவறென்றபோதும் அத்தவறை கவிக்கா செய்வது சரியா? எனக்குள் நானே கேட்டுக்கொள்ளும்கேள்வி


    //நிஜங்களைவிட
    நிழல்கள் - கற்பனைகள்
    அழகாய்த்தானிருக்கும்...//

    பொய் மட்டுமே அழகாய் வடிவமைக்க வரும் ஒரு மெய்.//


    /உங்கள் 'கற்பனையை'
    இந்தளவிற்கு பழி வாங்கக்கூடாது கவியே..../

    பழிவாங்குவதென்று வந்துவிட்டபின் கற்பனையையும் விட்டுவைக்கக்கூடாது
    என்பதாலோ என்னவோ ஹ ஹா ஹா..

    //கற்பனைவளம் இல்லாவிடில் உலகமே இயங்கா....//

    கற்பனைகளிலேயே கோட்டைகட்டி வாழ்பவன் அது இடிந்தாலும் நஷ்டப்படுவதில்லை.

    ஆனால்?

    நிஜத்தில் முயற்சிசெய்யாமலே கற்பனையில் காலத்தை கழிப்பதால் லாபமுண்டோ??
    ஆனாலும்,,,,,,

    கற்பனை வளம் கவிதைக்கு வேண்டும்தான்...


    //எதுகை மோனையுடன்
    அழகான கவிதை...

    வாழ்த்துக்கள்..

    நட்புடன்....
    காஞ்சி முரளி....//

    வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் மிக்கமகிழ்ச்சி..

    நட்புடன் முரளி...

    பதிலளிநீக்கு
  8. பொல்லாத கற்பனை
    பொய்யுரைக்கும் கற்பனை....


    ........கற்பனை குறித்த அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  9. /இன்னும்

    இயலாத அத்தனையும்
    இயலவைத்துக்காட்டிடும்

    முடியாதவற்றையும்
    முடியவைத்துக்காட்டிடும்//

    அதனாலதானே கவிஞர்களே கலக்குறீங்க..
    கற்பனையே வற்றிபோய்விட்டால் என்ன செய்வீங்க கவித எழுவீங்களா?????

    சும்மாதான் கேட்டேன் இருந்தாலும் முடியுமான்னு சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  10. //நட்புடன் ஜமால் கூறியது...
    தெளிவா சொல்லிட்டீங்க

    பொய்யுறைக்கும் கற்பனை//

    உண்மையைச்சொன்னேன் ஹா ஹா ஹா. சரிதானே ஜமால்காக்கா..

    பதிலளிநீக்கு
  11. Chitra கூறியது...
    பொல்லாத கற்பனை
    பொய்யுரைக்கும் கற்பனை....


    ........கற்பனை குறித்த அருமையான கவிதை.//

    நன்றி சித்ராமேடம்.. உங்களுக்குதெரியாததா டீச்சர்

    பதிலளிநீக்கு
  12. //வானவில்லை வரச்சொல்லி
    வண்ணங்களை வாங்கியதும்//
    //நட்சத்திரத்தை கோத்தெடுத்து
    நகைசெய்துபோட்டதும்//


    நல்ல கற்பனை
    மெய்யான கற்பனை
    இது பொய் இல்லாத கற்பனை...

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா கூறியது...
    /இன்னும்

    இயலாத அத்தனையும்
    இயலவைத்துக்காட்டிடும்

    முடியாதவற்றையும்
    முடியவைத்துக்காட்டிடும்//

    //அதனாலதானே கவிஞர்களே கலக்குறீங்க..//

    கலகுறமா சந்தோஷம்தான்..


    //கற்பனையே வற்றிபோய்விட்டால் என்ன செய்வீங்க கவித எழுவீங்களா?????//

    கற்பனையில்லாமலே எழுதமுடியுங்க உண்மையையும் எதார்த்தத்தையும் எள்ளளவும் கற்பனைகலக்காமல் எழுதமுடியுமே1

    //சும்மாதான் கேட்டேன் இருந்தாலும் முடியுமான்னு சொல்லுங்க//

    சும்மாக்கேட்டாலும் சரி ஒருபவுன் காசுகொடுத்தாலும் சரி . பதில் சொல்லிடுவோமுல்ல..

    யாருங்கங்கோ நீங்க கொஞ்சம் பேரச்சொல்லுங்க அதுக்கும் விளக்கம் சொல்லுமுடியதான்ன்னு பாப்போம் ஹாஹாஹாஆஆஆஆஅ

    பதிலளிநீக்கு
  14. நல்ல அழகான வரிகள். மல்லிகா அக்காவுக்கு எனது உணர்வு பூர்வமான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. S Maharajan கூறியது...
    //வானவில்லை வரச்சொல்லி
    வண்ணங்களை வாங்கியதும்//
    //நட்சத்திரத்தை கோத்தெடுத்து
    நகைசெய்துபோட்டதும்//


    நல்ல கற்பனை
    மெய்யான கற்பனை
    இது பொய் இல்லாத கற்பனை//

    நிஜமான நிஜம்
    கலப்படமில்லாதபொய்
    இல்லயா மகராஜன்.

    நன்றி மகராஜன்

    பதிலளிநீக்கு
  16. ரவிசாந் கூறியது...
    நல்ல அழகான வரிகள். மல்லிகா அக்காவுக்கு எனது உணர்வு பூர்வமான வாழ்த்துக்கள்//

    வாங்க ரவி தம்பி.. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி,..

    பதிலளிநீக்கு
  17. சகோதரி,
    இதோ உங்கள் பக்கம் வந்தேன்.

    அவ்வப்போது உங்கள் பதிவுகளைப் படிப்பதுண்டு.

    இந்தக் குறிப்பிட்ட கவிதை என்னுடைய ஒரு பழைய கவிதையை (பள்ளிக்கூடத்தில் படித்தபோது எழுதியது) நினைவூட்டியது:

    'மேகப்பஞ்சுகளில் மெத்தைகள்'
    கைகழுவ கடல்'
    ...

    ....

    கற்பனையைத் தாண்டியும்
    கவிஞனின் உரிமைப் பொருட்கள்'

    என்ற சில வரிகள் மட்டும் நினைவிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  18. இப்னு ஹம்துன் கூறியது...
    சகோதரி,
    இதோ உங்கள் பக்கம் வந்தேன்.

    அவ்வப்போது உங்கள் பதிவுகளைப் படிப்பதுண்டு.

    இந்தக் குறிப்பிட்ட கவிதை என்னுடைய ஒரு பழைய கவிதையை (பள்ளிக்கூடத்தில் படித்தபோது எழுதியது) நினைவூட்டியது:

    'மேகப்பஞ்சுகளில் மெத்தைகள்'
    கைகழுவ கடல்'/
    கற்பனையைத் தாண்டியும்
    கவிஞனின் உரிமைப் பொருட்கள்'

    என்ற சில வரிகள் மட்டும் நினைவிருக்கின்றன..

    வருக வருக இப்னு. தங்கள் வரவு நல்வரவாகட்டும்..

    ஆக கவிஞர்களின் சிந்தனைகளும் கற்பனைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்துதான் இருக்கு சில சில முரண்பாடுகளைத்தவிர..

    வருகைக்கும் அன்பான கருதிற்க்கும் மிக்க நன்றி..தொடர்ந்துவாருங்கள்..

    பதிலளிநீக்கு
  19. பொல்லாத கற்பனை
    பொய்யுரைக்கும் கற்பனை....


    supper supper.........
    very very sweet poem........

    பதிலளிநீக்கு
  20. 'கண்ணுக்கு மை அழகு;
    கவிதைக்கு பொய் அழகு'
    -இது ஒரு பாடலின் வரி.
    தங்கள் கற்பனைக் கவிதை
    மெய்யாகவே அழகுதான்!

    பதிலளிநீக்கு
  21. நல்ல கற்பனை. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. கWபனைக் குதிரையை ஓடவிட்டால் இப்படித்தான் நடக்கும்...

    பதிலளிநீக்கு
  23. //கடலலைகள் துள்ளிவரக்
    கால்களோடு கட்டிப்போட்டதும்

    தண்ணீரை தரையில்கொட்டி
    கிள்ளிவிட்டு ரசித்ததும்

    அந்தரத்தில் ஊஞ்சல்கட்டி
    ஆடி ஆடிப்பார்த்ததும்//

    என்ன ஒரு கற்பனை சூப்பர்மா.
    இருந்தாலும் பொய்யில்லாஆஆஆஆஆஆஆ

    பதிலளிநீக்கு
  24. // vidivelli கூறியது...
    பொல்லாத கற்பனை
    பொய்யுரைக்கும் கற்பனை....


    supper supper.........
    very very sweet poem........//

    மிக்க நன்றி விடிவெள்ளி

    பதிலளிநீக்கு
  25. /வினோத்கெளதம் கூறியது...
    வார்த்தை ஜாலங்கள் அருமை../

    ஜாலங்களில் மின்னுது பொய்

    நன்றி வினோத்..

    பதிலளிநீக்கு
  26. /NIZAMUDEEN கூறியது...
    'கண்ணுக்கு மை அழகு;
    கவிதைக்கு பொய் அழகு'
    -இது ஒரு பாடலின் வரி.
    தங்கள் கற்பனைக் கவிதை
    மெய்யாகவே அழகுதான்!/

    பொய்யே அழகுதான் உண்மை தெரியும்வரை இல்லையாண்ணா..

    மிகுந்த மகிழ்ச்சி நிஜாமண்ணா..

    பதிலளிநீக்கு
  27. /Madurai Saravanan கூறியது...
    நல்ல கற்பனை. கவிதை அருமை. வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி சரவணா...

    பதிலளிநீக்கு
  28. /புலவன் புலிகேசி கூறியது...
    கWபனைக் குதிரையை ஓடவிட்டால் இப்படித்தான் நடக்கும்...//

    ஓடுமா நடக்குமா புரியும்படி சொல்லுங்க புலி..

    பதிலளிநீக்கு
  29. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    ஆனாலும் சுகமான கற்பனை, அருமை/

    ஆனாலும் அழகான கருத்துரை நன்றி பரோட்டா..

    பதிலளிநீக்கு
  30. சித்திமா கூறியது...
    //கடலலைகள் துள்ளிவரக்
    கால்களோடு கட்டிப்போட்டதும்

    தண்ணீரை தரையில்கொட்டி
    கிள்ளிவிட்டு ரசித்ததும்

    அந்தரத்தில் ஊஞ்சல்கட்டி
    ஆடி ஆடிப்பார்த்ததும்//

    என்ன ஒரு கற்பனை சூப்பர்மா.
    இருந்தாலும் பொய்யில்லாஆஆஆஆஆஆஆ/

    இல்லாட்டியும் இது பொய்தான்
    ஹா ஹா சித்திமா

    பதிலளிநீக்கு
  31. அடடா...அருமையான கற்பனை!! நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது