எனக்குப்பிடித்த பத்து பெண்கள் [தொடரோ தொடர்]
என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தேனக்காவிற்கு நன்றிகள் பல.
நமக்கு உலக அறிவு பத்தாதுங்க அதை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்
[ஹூம் இன்னமும் வளர்ந்தபாடில்லை]
நிபந்தனைகளை நான் சற்று தளர்த்திக்கொள்கிறேன் அடிக்க வர்ரவங்க ஆட்டோவில் வந்தாலும் சரி ரயிலில் வந்தாலும் சரி.இல்லன்னா ஏரோபிளேனுல் வந்தாலும் சரி. ஹா ஹா [அடிவாங்கப்போறது நானில்லையே]
நிபந்தனைகள் :-
1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...
பாத்திமாபீவி.[முன்னாள் தமிழக கவர்னர்]
இவர் முதல் பெண் நீதிபதியாக சுப்ரின்கோர்ட்டில்
பணிபுரிந்தவர்.
கவர்னராகவும். மனிதஉரிமை கமிஷனில் உறுப்பினராக இருந்தவர்
அன்னை தெரெஸா..[அவர்கள்]
அனைத்து குழைந்தைகளுக்கும் அன்னையாக ஒருதாயால் முடியாது. ஏதோ ஒருவிதத்தில் முகம் சுளிக்கநேரிடும். ஆனால் அனைவருக்கும் அன்னையாக வாழமுடியும் என வாழந்துக்காடிய அன்னை.இவங்களைப்போல் நற்குணத்தை நாமளும் உண்டாக்கிக்கொள்ளனும்..
பாத்திமா [ரலியல்லாஹ்] அவர்கள்
இவர்கள் நபிகள் நாயகத்தின் திருமகளார். ஒருபெண்மணி எப்படி வாழவேண்டும் என்ற பாதையை வழி வகுத்துத்தந்தவர்கள்.
தாய் தந்தை அவர்களுக்கு சிறந்த மகளாக. கணவர் [அலி ரலியல்லாஹ்] அவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனைவியாக. மகன்கள் ஹசன். ஹுசைனாருக்கு சிறந்த தாயாக விளங்கியவர்கள். மரணிக்கும்போதும் கணவரின் மார்பில் உயிர்நீத்தவர்கள்.
ஒரு நல்லவரை நேரில்பார்த்து அவர்களைபோல் வாழ்வதைபோல். அவர்கள் இப்படி நல்லவர்களாக தூயவர்களாக வாழ்ந்தார்கள் அதுபோல் வாழவேண்டும் என சொல்லக்கேட்டு வாழ்வதிலும் மிக சிறப்பு உள்ளது. இவர்களை மிகவும் பிடிக்கும்..
கவிஞர்.கனிமொழி.[அவர்கள்]எழுத்தாளர். கவிஞர். இந்திய பாராளுமன்ற இரு அவைகளில் ஒன்றான "மாநிலங்களவை உறுப்பினர்" (Member of Parliament (Rajya Sabha). எம்.பி. இவரின் நடை. உடை பாவனை. எளிமை. பேச்சு. அத்தனையும் பிடிக்கும் [இங்கு துபை வந்திருந்தபோது எவ்வளவு எளிமை நேரில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்] இவரின் கவிகளும் மிகப்பிடிக்கும்.
வி சாந்தா. [அவர்கள்]
அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன்.
இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை
அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.
அருணாராய்.[அவர்கள்]
இவர் ஒரு சமூகசேவகி.இந்தியன் அட்மினிஷேசனில் சிவில் சர்வன்டாக பணிபுரிந்தவர். ஏழைகளுக்காக குரல்கொடுத்தவர்.
சி என் ஜானகி..[அவர்கள்]
இவர். இருகால்களையும் போலியோவினால் இழந்தும். நீச்சல் துறையில் சாதனைப்படைத்தவர்
லத்திக்கா சரன்.[அவர்கள்]
சென்னை மாநகர காவல்துறை முதல் பெண் ஆணையர்
அதோடு தற்போது, தமிழ்நாடு காவல்துறை முதல் பெண் இயக்குனர் (D.G.P)
வனிதா [ஜெனட்] [அவர்கள்]
இவர் பெங்களூரைச்சேர்ந்தவர். துபை வந்துதான் இவரைத்தெரியும். [தமிழ் படிக்கத்தெரியாட்டியும் பேசத்தெரியும்] அன்புத்தங்கையாகவே ஆனவர். பாசத்தையும் அன்பையும் இவரிடம் நிறைய கடன்வாங்கனும். இவரைப்போலவே இவர்கணவரும்.. [துபையில் இன்னும் நிறைய இருக்கு ஆனா ரூல்ஸ மீறக்கூடாதுன்னு விட்டுட்டேன் ஓகே]
பத்தாவதாக நான். [அன்புடன் மலிக்கா]
என்னது முறைக்கிறீங்க. [சொந்தங்களையும் உறவுகளையும் சொல்லகூடாதுன்னுதான் கண்டிஷன். நான் என் மச்சானுக்குதான் சொந்தம் உறவெல்லாம் சரியா] அதனால என்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை எனக்கு பிடித்ததாலதான் மற்றவங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப்பிடிக்கிறது. குழப்புறேனா அதானே வேணும் ஹா ஹ ஹா
பெண்களில் வெரும் பத்துபேரைமட்டும்தானா????????? இன்னும் நிறையச்சொல்லலாம் ஆனா அல்லாரும் அவங்களுக்கு பிடிச்சவங்களை சொல்லி பத்துக்கு பத்து பத்துலச்சத்துக்குமேலன்னு ஆகிட்டதால இதுபோதும்..[இதில் பிழைகளிருந்தாலும் தவறுகளிருந்தாலும் பொருந்திக்கொள்ளவும்]
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தேனக்கா ரொம்ப தேங்ஸ் என்ன இப்படி பொழம்பவிட்டதுக்கு.
நான் பொழம்பினமாதரி பொழம்பாம தெளிவா எழுதுற ஒரு நாளுபேரயாவது கூப்பிடுவோமா!
வாங்கங்கையா,, வாங்கம்மா...
ஜலீலாக்கா
நிலாமதியின் பக்கங்கள்
பித்தனின் வாக்கு
ஜெய்லானி
அப்பாடா நம்ம வேலை முடிஞ்சிரிச்சி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பத்தாவது நபர் நல்ல சாய்ஸ்
பதிலளிநீக்குஅப்புறம் கனிமொழி எனக்கு உடன்பாடு இல்லை
வாழ்த்துக்கள்
விஜய்
அப்ப நல்ல சாய்ஸ்தானா நான்.
பதிலளிநீக்குமுதல் வெற்றி முற்றும் வெற்றி என்ற நம்முடைய பழமொழிக்கு[இது நாமா உருவாக்கிகிட்டது]
சகோதரரே சொல்லிட்டார் பின்ன அப்பீலேது.. நன்றி சகோதரர் விஜய் அவர்களே!
பத்தாவது நல்ல சாய்ஸ்
பதிலளிநீக்குஉன் தேர்வுகள் அருமை.மொத்ததில் பாசத்தையும் அன்பையும் விரும்புகிறவள் நீ சரிதானேமா.
பதிலளிநீக்குதங்கையாக ஆனவள் கொடுதுவைத்தவள்
மிகவும் நல்ல பதிவு.பெண்களை பெருமைபடுத்துவோம்.
பதிலளிநீக்குஎன்னக்கு பிடித்த பத்துபேர்.
1 .திருமதி .இந்திரா காந்தி
௨.பேராசிரயர்.Wangari மத்தாய் , கென்யா
௩.டாக்டர்.சாந்தா,சென்னை
௪.திருமதி .சந்திரிகா குமாரதுங்க ,ஸ்ரீ லங்கா
௪ .திருமதி.சரோஜா தேவி ,மூத்த திரை கலைஞர்
௬.மதர் .அம்ரிதனந்தமயி
௭.அருட்சகோதரி(டாக்டர்) Jesme-Kerala
௮.ஆங் சண் ஸூ கி , பர்மா
௯.2nd. Lt.மாலதி ,தமிழ் ஈழ விடுதலை புலிகள்
௧.வேலு நாச்சியார்
இவர்கள் அனைவரும் அவர்களது துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்கள்.போராடியவர்கள் . போராட்ட வரலாறு படைத்தவர்கள்.
uma ,trivandrum
மிகவும் நல்ல பதிவு.பெண்களை பெருமைபடுத்துவோம்.
பதிலளிநீக்குஎன்னக்கு பிடித்த பத்துபேர்.
1 .திருமதி .இந்திரா காந்தி
௨.பேராசிரயர் . Wangari மத்தாய் , கென்யா
௩.டாக்டர் . சாந்தா .சென்னை
௪.திருமதி .சந்திரிகா குமாரதுங்க ,ஸ்ரீ லங்கா
௪ .திருமதி.சரோஜா தேவி ,மூத்த திரை கலைஞர்
௬.மதர் .அம்ரிதனந்தமயி
௭.அருட்சகோதரி(டாக்டர்).Jesme,KERALA
௮.ஆங் சண் ஸூ கி , பர்மா
௯.2nd. Lt.மாலதி ,தமிழ் ஈழ விடுதலை புலிகள்
௧.வேலு நாச்சியார்
இவர்கள் அனைவரும் அவர்களது துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்கள்.போராடியவர்கள் .போராட்ட வரலாறு படைத்தவர்கள்.
UMA ,Trivandrum
எஸ்கேப் ஆகலாம்னு பார்தால் இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே !!. ஓகே இரண்டு நாளில் பாத்துடுவோம்ல....
பதிலளிநீக்குஅருமையான தேர்வு.. நீங்க குறிப்பிட்ட அனைவரும் எனக்கும் பிடிக்கும்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா
தங்கள் குறிப்பிட்ட பத்து பேரில் பெருபாலானவர்களை படித்து அறிந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர்களில் 10வது நபர் 'நீரோடை' மூலம் அறிமுகம்.... நல்ல தேர்வு....
'முதலில் உன்னை நீ அறிந்தால்தான், உலகம் அறியும்...
உன்னை நீ உயர்த்திக்கொண்டல்தான்
உலகம் உயர்த்திக் கொண்டாடும்" என்ற யாரோ சொன்ன வைர வரிகளின்படி (ஹி.. ஹி... ஹி... எனதுதான்)....
தங்கள் 10வது நபராக தேர்ந்தெடுத்துக்கொண்டது தப்பேயில்லை...... வாழ்த்துக்கள்....!
மேலும்... இப்பத்துபேரில்
//கனிமொழி.
எழுத்தாளர். கவிஞர். சட்டமற்ற உறுப்பினர். இவரின் நடை. உடை பாவனை. எளிமை. பேச்சு. அத்தனையும் பிடிக்கும் [இங்கு துபை வந்திருந்தபோது எவ்வளவு எளிமை நேரில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்] இவரின் கவிகளும் மிகப்பிடிக்கும்.//
இவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்............
தாங்கள் சொன்னபடி ஓர் எம்.பி.யாக இருந்தாலும் -
ஓர் உலகத் தமிழர்களின் ஒப்பில்லா தலைவரும் - சிறந்த எழுத்தாளரும் - சிறந்த சமூகநீதி சிந்தனையாளரும் - சிறந்த கவிஞரும் - சிறந்த உரைநடை ஆசிரியரும் - நான் அறிந்த வரையில் 'உலகத்தின் தலைசிறந்த உழைப்பாளியும்' - சிறந்த பாடலாசிரியரும் - சிறந்த வசனகர்த்தாவும் - தமிழகத்தின்மாபெரும் முன்னேற்றத்திற்கு அடிகோலியவரும் - முத்தமிழில் அறிஞர் பெருமகனும் - தமிழக வரலாற்றின் பக்கங்களில் ஓர் அத்தியாமாய் இருந்தவரும், இருப்பவரும், இருக்கப்போவருமான ஓர் மாபெரும் வரலாற்றுத் தலைவரின் - முதலமைச்சரின் மகள் என்று, எங்கும் சொல்லாமல், மிகவும் எளிமையாய் - அனைவரிடமும் சகஜமாய் பழகும் - பெண் அடிமை ஒழியவும் - தமிழ்க் கலை, கலாச்சார அழிவிலிருந்து அவற்றை காப்பற்றி 'சங்கமம்' விழாவினை நடத்தி கலை, கலாச்சாரத்தை காப்பாற்றி வரும் கவிஞர் கனிமொழி,எம்.பி., அவர்களை தாங்கள் தேர்ந்தெடுத்தது மிகச் சரியான தேர்வே....!
அதோடு...
விஜய் சொல்லிய கருத்தில் "//அப்புறம் கனிமொழி எனக்கு உடன்பாடு இல்லை"// என்ற வரிகளில் உடன்பாடில்லை...
அடுத்து...
வி சாந்தா.
அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன்.
இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை
அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.//
இவர்களையும் நேரில் சந்தித்திருக்கிறேன்.... என் உறவினரின் சிகிச்சைக்காக.....
தன் வாழ்நாட்களையே கேன்சர் நோயாளிகளுக்காக தன்னை
அர்ப்பணித்துக்கொண்டவர்...... இவர் நோயாளிகளை அணுகும் விதம் மிகவும் ஆறுதலாய்.... அன்பாய்..... அந்த அன்பிலே அந்நோய் குணமாகிவிடும்.. அத்தகு மனிதர்.... வி சாந்தா அம்மையார் அவர்களை தாங்கள் தேர்ந்தெடுத்ததும் மிகச் சரியான தேர்வே....!
கடைசியாய்....
10வது நபர் 'அன்புடன் மலிக்கா' தேர்வு சிறந்த தேர்வு...
காரணம்...
கருத்துரையில் தங்கள் பதிலிலிருந்து சில....
//என் படைப்புகளில் பிழைகளிருப்பின்
அல்லது
எழ் எழுத்துக்களில் பிழைகளிருப்பின்
நிச்சயம் சுட்டிக்காட்டுங்கள்.
அப்போதுதான் என் தவறு எனக்கேதெரியும்.//
//இருந்தபோதும் இது சரி, இது தவறு,
என்று மேற்கோள் காட்டுவது மனிதருக்கு மனிதர் செய்யும் சிறு உதவி, தவறாக இருக்கும் பட்சத்தில் அதைதிருத்திக்கொள்ள ஓர் சந்தர்ப்பமாக அமையும் என்பது என்கருத்து..//
//மற்றவர்களை தட்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமெண்று என்றுமே நான் எண்ணியதில்லை..//
//நம் சமூகம் நம்கண்முன்னே சீரழியும்போது அதை கண்டு மனம் பொருக்கமுடிவதில்லை..
வாய்வலித்தாலும் சொல்வதை சொல்லிவிடுவோம்.//
இவற்றுக்காகவே....
தங்கள் நீரோடையின்
நல்ல வாசகனாய்.... விமர்சகனாய் என் வோட்டும் உங்களுக்கே...!
வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி...........
நம்மை நாமே விரும்பனும்
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க.
உங்கள் தெரிவுகளில் சிலது சொல்லாம்
இருப்பினும் நலம்.
அம்முனி நீங்க பலே கில்லாடிதான் சூப்பர்...
பதிலளிநீக்குநல்ல தேர்வுகள் (கனிமொழி தவிர)
பதிலளிநீக்குசகோதரர் காஞ்சி முரளிக்கு தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் பதவியே தரலாம். இந்த அளவிற்கு புகழ் பாட அவர்கள் கட்சியில் கூட ஆள் இல்லை.
ஸ்வாமி
//என்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை எனக்கு பிடித்ததாலதான் மற்றவங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப்பிடிக்கிறது.//
பதிலளிநீக்குஅது பாயிண்ட்.
தேர்வுகள் அருமை.
சுவாமிக்கு நன்றி...!
பதிலளிநீக்குசாந்தா அம்மையாரைப்பற்றி நான் சொன்னதற்கு..? ......!
என் கருத்துக்கள் என்றும் யாரையும் சார்ந்தல்ல...
"உண்மையை உள்ளபடி ஊருக்குரைப்பதுதான்".....
இதில்...! விருப்பு வெறுப்பின்றி......
நட்புடன்....
காஞ்சி முரளி.......
ஊனம் மனசில் இல்லாமலிருந்தால் போது உடலில் இருந்தால் இதுகுறையில்லை என நிரூபித்திருக்கும் பெண்மனி நிச்சியம் பாராட்டவேண்டும்.
பதிலளிநீக்குஆஹா என்னையும் கோத்து விட்டுட்டீங்களா? ம்ம் பிடித்த பெண்கள் தானே நிறைய பேர் இருக்க்காங்க போட்டுட்டா போச்சு
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் பெண்களும் சூப்பர்.
அந்த பத்தாவது நபர் ஒரு கவிஞர்தானே.
பதிலளிநீக்குபத்து பெண்களும் நல்ல தெரிவுகள்
பதிலளிநீக்குDifferent approach. :-)
பதிலளிநீக்குகூப்பிட்டுவிட்டு சும்மா இருந்தா போதுமா ?? அப்படியே என் வீட்டையும் கொஞ்ஜம் பாருங்க!!!
பதிலளிநீக்குhttp://kjailani.blogspot.com/2010/03/blog-post_14.html
பத்து கொஞ்சம் இடிக்குதே...
பதிலளிநீக்குHello Friend, Hope everything is fine.
பதிலளிநீக்குI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்குபத்து கொஞ்சம் இடிக்குதே..
என்ன இடிக்குது புலி முறமா?
ஆகா நான் ஏற்கனவே படிச்சேன், ஆனா பின்னூட்டம் போட மறந்துட்டேன். மன்னிக்கவும். அழைப்பை ஏற்றுக் கொண்டு பதிவு போட்டுவிட்டேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்குநல்ல செலக்ஷன், உங்களுக்கு பிடித்த அந்த பத்து பேரில் அன்னை தெரசா, பாத்திமா[ரலியல்லாஹு அன்ஹா]மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பதிலளிநீக்குநல்ல தேர்வுகள். தன்னையும் நேசித்தால்தான் வாழ்வு சிறக்கும். உண்மை!!
பதிலளிநீக்குதிருமதி.சாந்தா, திருமதி. ஜானகி அவர்களைப் பற்றி இப்பத்தான் தெரிந்துகொண்டேன். மேலும் விவரங்கள் கிடைக்கும் தளங்கள் தந்திருக்கலாம்.
அரசியல் சார்பு அல்லாமல் பார்த்தால், கனிமொழி எளிமையானவர்தான்.
நல்ல தேர்வு. அதுவும் பத்தாவது நபர் மிகவும் நல்ல தேர்வு. அருமையான இலக்கியவாதி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல தெரிவு
பதிலளிநீக்குவாசித்தேன்
அறிந்துகொண்டேன்...
நம்மை நமக்குப் பிடிக்கணும்னு சொல்லி பத்துக்கு பத்து மார்க்கு வாங்கிட்டே மலிக்கா அருமை மா
பதிலளிநீக்குயாதவன் கூறியது...
பதிலளிநீக்குபத்தாவது நல்ல சாய்ஸ்..
மிக்க நன்றி யாதவன். எங்கே ரொம்பநாளா அளைக்காணோம்..
சாரதாவிஜயன் கூறியது...
உன் தேர்வுகள் அருமை.மொத்ததில் பாசத்தையும் அன்பையும் விரும்புகிறவள் நீ சரிதானேமா.
தங்கையாக ஆனவள் கொடுதுவைத்தவள்..//
ரொம்ப சந்தோஷம்மா. நீங்க கிடைக்கவும் கொடுதுதான் வைத்திருக்கவேண்டும் இல்லயாமா..
/ஸ்வாமி ஓம்சைக்கிள் கூறியது...
பதிலளிநீக்குநல்ல தேர்வுகள் (கனிமொழி தவிர)
சகோதரர் காஞ்சி முரளிக்கு தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் பதவியே தரலாம். இந்த அளவிற்கு புகழ் பாட அவர்கள் கட்சியில் கூட ஆள் இல்லை.
ஸ்வாமி//
வருக வருக ஸ்வாமிஜி. முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
இந்த இடுகை தனக்குபிடித்த பத்து பெண்களை அடையளமிடச்சொன்னதினால்.
ஆதலால் எனதனாலோ ஒன்றால் எனக்கு பிடித்த [இதில் அரசியல், குடும்பம், தனிப்பட்டகுணநலன்கள், என எதுவுமே நமக்கு தெரியாது தெரியவும் வேண்டாம்.]பெயர்களை சொல்லியுள்ளேன். எனக்கு பிடித்தவர்களை மற்றவர்களுக்கும் பிடித்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. அவரவர்களுக்கு எது! யார்?பிடிக்குமோ அதுவே அவரவர்விருப்பம் இல்லையா ஸ்வாமிகளே!
இதில் ஏதேனும் மனவருந்தும்படி எழுதியிருந்தால பொருந்திக்கொள்ளவும்...