என்ன பாவம் செய்தேனம்மா!!!!
சேவலென்ற கோழி கூவவில்லை
காகங்கள் கூடிக் கரையவில்லை
கட்டிடங்களுக்கு இடையே
கதகதப்போடு கிளம்பத்துடித்த
சூரியனுக்கு முன்பே
கிளம்பிவிட்டாள்
அதிகாலையில் அவசரமாய்
குளித்த தலையில் ஈரம் சொட்ட
குளிரில் தேகம் நனைந்து வாட்ட
ஒருபுறம் தோளில் கிடந்த
குழந்தை தூங்கி வழிய
மறுபுறம் கிடந்த
கைப்பை வரிந்து சரிய
பணத்துக்காக குழந்தைகளைப்
பார்த்துக்கொள்ளும் பெண்ணிடம்
கையில் கொடுக்கும் வேளை
பதறிக் கதறியது பிஞ்சு குழந்தை
பால்வடியும் முகம்கண்டும்
பதறவில்லை பாவை
பொசு பொசுக்கண்ணங்களில்
கண்ணீர் வழிய
கைகளை காட்டி அன்னையை
அணைக்க முயல
எட்டி நீட்டிய விரல்கள்
இவள் கூந்தலை இழுக்க
இருந்தும் ஈயாடவில்லை
தாயவள் முகத்தில்
எவ்வித தவிப்புமில்லை
முதுகை மட்டும்
தட்டிக்கொடுத்து விட்டு
முகம் திருப்பி வேகமாக
நடை நடந்து
அவசரமாக ஓடி ஏறினாள்
ஆபீஸ் கார் கதவை
திறந்துக்கொண்டு
இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை
அசதி வரும்வரை......
காலத்தின் கோலமிதுவோ!
காசுபணம் செய்யும் மாயமிதுவோ!!
[டிஸ்கி டெய்லி காலங்காத்தால நம்ம பையன ஸ்கூலுக்கு அனுப்ப பஸ்ல ஏத்த போறாம, அப்போ இப்பால அப்பால இதப்போல நெறய பாக்குறோமா அதால வந்த வின இந்த கவித, இருந்தாலும் மனசு கேக்கல அதேன்ன்ன்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இக்கால யதார்த்தத்தை அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள் மலிக்கா.
பதிலளிநீக்குமுகம் திருப்பி வேகமாக நடக்கையில் வரும் கண்ணீரை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டுதான் அந்தத் தாயும் செல்வாள்.
நிகழ் கால குழந்தைகளின் வலியினை மிக அழகாக பதிவு செய்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்காவுக்கு....
பதிலளிநீக்கு//“சேவலென்ற கோழி கூவவில்லை
காகங்கள் கூடிக் கரையவில்லை
கட்டிடங்களுக்கு இடையே
கதகதப்போடு கிளம்பத்துடித்த
சூரியனுக்கு முன்பே
கிளம்பிவிட்டாள்
அதிகாலையில் அவசரமாய்//
துவக்கமே
மிகமிக வேகமாய்....
அழகான இயற்கையை
இயற்கையான வரிகளுடன்......
அடுத்தடுத்து paraவில்
'அவசர அவசரமாய்' ஓடும்
பாசமறியா - குழந்தையின்
நேசமறியா.......
'பண அடிமை'களை ....
தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.....
//"இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை
அசதி வரும்வரை......//
இவ்வரிகளில்.....
கவிதையைப் படைப்பவன்.....
கவிதையோடு கலந்துவிடுவான்....
இது உண்மைதான்....
ஆனால்...
அநியாயத்துக்கு
"இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்" என்ற வரிகள் மூலம்
அக்குழந்தையாய் மாறியது...........
இதயத்தை தொட்ட வரிகள்....
கடைசியாய்.....
"//காலத்தின் கோலமிதுவோ!
காசுபணம் செய்யும் மாயமிதுவோ!!//
என்ற வரிகள் மூலம்....
இச்சமூகத்தில் நடமாடும்
இதுபோன்ற பெண்களுக்கு......
சரியான சவுக்கடியான வரிகள்...
அதுவும்...
ஓர் பெண்மணியாய் இருந்து எழுதிய
இக்கவிதைக்கும்
சமூக அவலத்தை சாடியமைக்கும்.....
சமூக அக்கறைக்கும்.....
மனந்திறந்த பாராட்டுக்கள்...!
மனமார்ந்த வாழ்த்துக்கள்........!
தங்கள் இந்த கவிதையின் கருவில்
நான் ஏற்கனவே "சுகமான சுமைகள்..." எனும் தலைப்பில்
கவிதை ஒன்றை எழுதியுள்ளேன்.
அதனை தங்கள் fontல் keyin செய்து
தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்... விரைவில்...
நட்புடன்...
காஞ்சி முரளி...........
//இரவு கிடைத்த அரவணைப்பு
பதிலளிநீக்குஇனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை //
வரிகள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து படித்தேன்....
/kavisiva கூறியது...
பதிலளிநீக்குஇக்கால யதார்த்தத்தை அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள் மலிக்கா. /
முதல் வருகைக்கும் அழகான கருதுக்கும் மிக்க நன்றி கவி.தொடர்ந்து தாங்களை வரவேற்கிறேன்..
/முகம் திருப்பி வேகமாக நடக்கையில் வரும் கண்ணீரை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டுதான் அந்தத் தாயும் செல்வாள்/
அக்காட்சிமட்டும் எனக்கு கானக்கிடைக்கவில்லையே கவி. ஓகோ உள்ளுக்குள் சரிதான் இருக்கும்.
ஒருபாடு குழந்தைகள் வளர்ந்தபின்புகூட இதுபோன்று விட்டுச்செல்லலாம் இல்லையா?
மிக்க நன்றி கவி..
/சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்குநிகழ் கால குழந்தைகளின் வலியினை மிக அழகாக பதிவு செய்து விட்டீர்கள்/
கண்முன்னே கட்சிகளைகாணும்போது என்னையுமறியாமல் இதுபோன்று
கொ[த்தி]ட்டிவிடுகிறேன் பரோட்டா..
மிக்க நன்றி..
நிதர்சனமான உண்மை மலிக்கா . நல்ல பதிவு
பதிலளிநீக்குஇவ்வரிகளில்.....
பதிலளிநீக்குகவிதையைப் படைப்பவன்.....
கவிதையோடு கலந்துவிடுவான்....
இது உண்மைதான்....
ஆனால்...
அநியாயத்துக்கு
"இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்" என்ற வரிகள் மூலம்
அக்குழந்தையாய் மாறியது...........
இதயத்தை தொட்ட வரிகள்....//
ஆமாம் முரளி அப்படியே அக்குழந்தையாய்மாறி நினைத்துப்பார்த்தேன்.
நானும் குழந்தையாய், இன்றுவரை என் அன்னையில் அரவணைப்பிலும்.
இன்னும் சொல்லப்போனால் நான் ஊருக்கு போய்விட்டால் இன்றளவும் அன்னையில் கைகளாலேயே சோறு ஊட்டி சாப்பிடும் மகள் நான் என்பதில் பெருமிதம் எனக்கு..
/கடைசியாய்.....
"//காலத்தின் கோலமிதுவோ!
காசுபணம் செய்யும் மாயமிதுவோ!!//
என்ற வரிகள் மூலம்....
இச்சமூகத்தில் நடமாடும்
இதுபோன்ற பெண்களுக்கு......
சரியான சவுக்கடியான வரிகள்...
அதுவும்...
ஓர் பெண்மணியாய் இருந்து எழுதிய
இக்கவிதைக்கும்
சமூக அவலத்தை சாடியமைக்கும்.....
சமூக அக்கறைக்கும்.....
மனந்திறந்த பாராட்டுக்கள்...!
மனமார்ந்த வாழ்த்துக்கள்........!//
காலச்சூழல் என்றபோதும் கடமைகளை அப்பப்ப அதனதன் நேரத்தில் செய்வதே சாலச்சிறந்தது. குழந்தைப்பருவம் போனால்திரும்பாது. அதுகுழந்தைக்கும் சரி நமக்கும் சரி..
//தங்கள் இந்த கவிதையின் கருவில்
நான் ஏற்கனவே "சுகமான சுமைகள்..." எனும் தலைப்பில்
கவிதை ஒன்றை எழுதியுள்ளேன்.
அதனை தங்கள் fontல் keyin செய்து
தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்... விரைவில்...
நட்புடன்...
காஞ்சி முரளி...........//
எதிர்ப்பார்க்கிறேன் எதிர்ப்பார்க்கிறேன் அனுப்பிவையுங்கள்.
அன்பான அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி முரளி...
துவக்கமே
பதிலளிநீக்குமிகமிக வேகமாய்....
அழகான இயற்கையை
இயற்கையான வரிகளுடன்......//
இயர்கையை இயற்க்கையாய்
வர்ணிக்க மிக விருப்பம்..
/அடுத்தடுத்து paraவில்
'அவசர அவசரமாய்' ஓடும்
பாசமறியா - குழந்தையின்
நேசமறியா.......
'பண அடிமை'களை ....
தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.....//
பாசத்தையும் நேசத்தையும் அறிந்தும் அறியாமல்.அவசரயுகத்தில் பணத்தின்பிடியில் சிக்கித்தவிக்கும் பலரின் நிலமை படுமோசம்.
பணத்தேவை அதிக்கரிக்கிறதோ இல்லையோ அதிக்கப்படுத்திக்கொள்ள நினைப்போரே அவதிக்குள்ளாகிறார்கள்.
என்பதே உண்மை இல்லையா? முரளி..
'அவசர அவசரமாய்'
ஓடும்
பாசமறியா - குழந்தையின்
நேசமறியா.......
'பண அடிமை'கள்
வரிகள் அழகாய் கோத்துள்ளிர்கள்.முரளி
Sangkavi கூறியது...
பதிலளிநீக்கு//இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை //
/வரிகள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து படித்தேன்....//
ரசித்து ரசித்து படித்த ரசனைக்கே ஒரு பெரிய நன்றி.சங்கவி
sarusriraj கூறியது...
பதிலளிநீக்குநிதர்சனமான உண்மை மலிக்கா . நல்ல பதிவு..//
உண்மைகள் சிலசமயம்
வலிகிறது சாரூக்கா மிக்கநன்றி
Truth is bitter.
பதிலளிநீக்குகாலத்தின் கோலமிதுவோ!
பதிலளிநீக்குகாசுபணம் செய்யும் மாயமிதுவோ!!
...... :-( bitter truth.
தாய் அன்புக்கு நிகர் எதுவும் உண்டோ?.. அருமையான கவிதை.
பதிலளிநீக்குஒரு தாய்மையின் வலி ....இந்த பரந்த உலகின் அவசரம் ......நன்றாக வரைந்திருகிறீர்கள் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஒரு குழந்தையின் பார்வையில் கவிதை
பதிலளிநீக்குஇக்கால நிதர்சணம் ...
குழந்தையாய் இருந்து படித்ததில் மனசு கனத்தது மலிக்கா, இது காலம் செய்யும் கோலம் அல்ல கொடுமை. நன்றி.
பதிலளிநீக்குகைக்குழந்தைகளின் கண்ணீர்.
பதிலளிநீக்குகாலம் இழுக்கும் இழுப்பிற்கு ஓடும் தாய்மார். வருத்தம் தரும் வலிகள்.
//பால்வடியும் முகம்கண்டும்
பதிலளிநீக்குபதறவில்லை பாவை//
பதறாமல் எப்படி இருப்பாள்? நீங்கள் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்த்தால் அதைக் கவனிக்கவில்லை போல!!
இப்படி விட்டுவிட்டுப் போகுமளவு அவளுக்கும் என்ன நிர்பந்தமோ!!
Chitra கூறியது...
பதிலளிநீக்குகாலத்தின் கோலமிதுவோ!
காசுபணம் செய்யும் மாயமிதுவோ!!
...... :-( bitter truth.
Chitra கூறியது...
Truth is bitter...//
மிக்க நன்றி சித்ராமேடம்..
ஹுஸைனம்மா கூறியது...
பதிலளிநீக்கு//பால்வடியும் முகம்கண்டும்
பதறவில்லை பாவை//
பதறாமல் எப்படி இருப்பாள்? நீங்கள் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்த்தால் அதைக் கவனிக்கவில்லை போல!!//
கவனித்ததினால் ஏற்பட்ட பாதிப்புதான் இக்கவியே!
//இப்படி விட்டுவிட்டுப் போகுமளவு அவளுக்கும் என்ன நிர்பந்தமோ!!//
நிர்பந்தங்கள் அனைவருக்குமே ஏதோ ஒருவகையில் இருக்குதான் ஹுசைன்னம்மா.
இதுபோன்ற நிர்பந்தங்கள்.நிர்பந்தங்கள் என்ற போர்வையில் நிறைய நிறைய இங்கே காண்கிறோம். உண்மைதானே?
எனக்குத்தெரிந்து தேவைகள் குறைந்து ஒரு ஆளின் வருமானமே நிறைந்து இருக்கும்போது, பச்சிளங்குழந்தைகளை விட்டுவிட்டு சம்பாதிக்கபோகிறவர்கள் நிறைய பார்த்ததினால்தானம்மா இதையே எழுதினேன்..
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
பதிலளிநீக்குதாய் அன்புக்கு நிகர் எதுவும் உண்டோ?.. அருமையான கவிதை//
இல்லவேயில்லை நிகரில்லை.
மிக்க நன்றி ஸ்டார்ஜன்..
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குகுழந்தையாய் இருந்து படித்ததில் மனசு கனத்தது மலிக்கா, இது காலம் செய்யும் கோலம் அல்ல கொடுமை. நன்றி.
நிச்சயம் கொடுமையென யாருக்கு தெரிகிறது திவாகர்சார். எல்லாம் வேககாலத்தில் விளிம்பில்..
உண்மையச்சொன்னாலும் ஏத்துக்கமாட்டேங்கிறாங்கப்பா..
மிக்க நன்றி சார்..
/நிலாமதி கூறியது...
பதிலளிநீக்குஒரு தாய்மையின் வலி ....இந்த பரந்த உலகின் அவசரம் ......நன்றாக வரைந்திருகிறீர்கள் பாராட்டுக்கள்/
பாராட்டுக்களுக்கு மிகுந்த சந்தோஷம் நிலாமதி..மிக்க நன்றி
/நட்புடன் ஜமால் கூறியது...
பதிலளிநீக்குஒரு குழந்தையின் பார்வையில் கவிதை
இக்கால நிதர்சணம் //
அவசரகாலத்தின் உண்மை இல்லையா ஜமால்காக்கா..மிக்கநன்றி
/ராமலக்ஷ்மி கூறியது...
பதிலளிநீக்குகைக்குழந்தைகளின் கண்ணீர்.
காலம் இழுக்கும் இழுப்பிற்கு ஓடும் தாய்மார். வருத்தம் தரும் வலி..
இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஓடினால் ஒடிந்துவிடமாட்டோமா..கண்ணீரும் வலியும் காலத்தின் கைகளில்
என்று சொல்லி தப்பிக்கிறோமோ என்று தோன்றுகிறது..
மிக்க நன்றி ராமுமேடம்..
குழந்தையைப் பற்றி பரிதாபத்தை ஏற்படுத்தியதோடு,
பதிலளிநீக்குஅந்தத் தாயின் வேதனையையும் பச்சாதாபத்தோடு
உணர முடிகிறது கவிதையில்.
கவிதையை படித்து முடித்ததும் புகைப்படத்தில் அழும் குழந்தையின் மனநிலையில் நான்...
பதிலளிநீக்குதாய்ப்பாசத்தின் வலி குழந்தையிடமிருந்து நமக்கு ஏக்கமாய் படருது மலிக்கா
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்கா உங்களை ஒரு தொடர் இடுகை எழுத அழைத்து இருக்கேன் வந்து என்னோட பதிவைப்பாருங்க
ஆம் மலிக்கா (நீரோடை) இன்று இதுபோல் எத்தனை குழந்தைகள் ஏக்கத்தில்...
பதிலளிநீக்குஇன்று நானும் ஒரு குழந்தையின் ஏக்கக்கவிதை எழுதியுள்ளேன். (http://skvishal09.blogspot.com) முடிந்தால் பார்க்கவும்.
//"இரவு கிடைத்த அரவணைப்பு
பதிலளிநீக்குஇனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை
அசதி வரும்வரை......//
அருமையோ அருமை..................
நீங்களும் நானும் ஒரு விசயத்தில் ஒத்து போகிறோம், ஊருக்கு சென்றால் அம்மாவின் கையில் வாங்கி சாப்பிடுவது.
பதிலளிநீக்குஒவ்வொரு வரிகளும் அருமை,
முக்கியமாக
//இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை
அசதி வரும்வரை......//
இந்த பதிவை படித்தவுடன், IT துறையில் வேலை பார்க்கும் சில அம்மாக்களைத்தான் ஞாபகம் வந்தது. சென்னையில் வேலை செய்யும் போது நிறைய பார்த்ததுண்டு
//இரவு கிடைத்த அரவணைப்பு
பதிலளிநீக்குஇனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை
அசதி வரும்வரை......//
அக்கா நன்றாக இருக்குக்கா கவிதை.அந்த படத்தில் இருக்கும் குட்டி பாப்பா அழுவதைபார்த்தால் பாவமா இருக்கு.அக்கா அங்கிருந்து விலகிச்செல்லும் தாயின் மனநிலையில் ஒரு கவியை எழுதி விடுங்கோ.என் குழந்தைக்கு அந்த நிலையே வராது ஏன்னா நான்தான் வீட்டுலயே இருக்கேனே.நான் வேலை தேடுற அழகைப்பார்த்து என் ஹஸ் சொல்லிட்டார் உனக்கு ஜென்மத்துக்கும் வேலை கிடைக்காதுன்னு..அவரின் சாபம் வரமாக என் குழந்தைக்கு கிடைத்துவிட்டது)