நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மீண்டும் வேண்டுமோ!!!



சாதிகள்
வேண்டாமடிப் பாப்பா
பாரதியார்
சொல்லிச்சென்ற
பாடம்

சாதிகள்
வேண்டுமடிப் பாப்பா
சாதூர்த்தியங்கள் 
சொல்லுகின்ற
சோகம்

சாதி சாதியென்று
போட்டுக்கொண்டான்
சாமர்த்திய
வேலி

சாதிமல்லி
என்று சொல்லி
மலரைக்கூட
பிரித்துவிட்டான்
பாவி

ஆங்காங்கே
முளைக்குது
சாதிகளின்
சங்கம்

சக்கையாக
பிழியப்படுது
தாழ்த்தப்பட்டோரின்
அங்கம்

மனிதம்
மனிதத்தை
இணைத்துக்கொள்ள

மீண்டுமோர்
பாரதியா!
வேண்டும்

பிறப்பு இறப்பு
ஒன்றென்ற
போதும்

மனிதனை
மனிதன்
பிரித்துப் பார்த்தல்
பாவம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

40 கருத்துகள்:

  1. மிகச்சரியாக சொன்னீர்கள்.

    நான்பட்ட கஷ்டங்களை சொல்லிமாலாது.என்ன செய்ய
    படித்தேன் படிக்கிறேன். பார்ப்போம் விடியுதா என

    பதிலளிநீக்கு
  2. நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் வேண்டும்தான்!

    நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
  4. சாதி மட்டுமல்ல. மதமும் தேவையில்லாத ஒன்று தான்.

    பதிலளிநீக்கு
  5. மனிதனை
    மனிதன்
    பிரித்துப் பார்த்தல்
    பாவம்..


    ........சரியா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. பாரதி திரும்ப வேண்டாம்..மனிதனிடம் மனிதம் திரும்பினால் போதும்

    பதிலளிநீக்கு
  7. சகோதரியே உங்களின் கவிதையும் அழகு
    சொன்ன விதமும் அழகு.
    மொத்தத்தில் நீங்கள் எதை எழுதினாலும் நல்லாய்த்தான் இருக்கு
    இறைவன் ஆசி என்றும் கிடைத்து தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. பாரதி வந்தால், அவருக்கு விழா எடுக்க சாதி சங்கங்கள் முட்டி கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  9. ரா. பொன்னம்பலம்21 பிப்ரவரி, 2010 அன்று AM 9:22

    சாதிகள் ஒழிந்திடவேண்டும்
    சமத்துவம் வந்திடவேண்டும்
    மானிடரய் பிறந்த நாமும்
    மானிடத்தை போற்றிட வேண்டும்

    அன்பான சொன்னால் அனைத்துமெடுபடும் என்ற கற்றுதல் உனக்குளுள் மகளே!

    ரா. பொன்னம்பலம்
    ஆசிரியர்

    பதிலளிநீக்கு
  10. ரா. பொன்னம்பலம்21 பிப்ரவரி, 2010 அன்று AM 9:30

    சாதிகள் ஒழிந்திடவேண்டும் சமத்துவம் வந்திடவேண்டும் ... சாதிகள் ஒழிந்திடவேண்டும்
    சமத்துவம் வந்திடவேண்டும்
    மானிடரய் பிறந்த நாமும்
    மானிடத்தை போற்றிக் காத்திட வேண்டும்

    அன்பாகச் சொன்னால் அனைத்தும் எடுபடும் என்ற கற்றுதல் உனக்குள் உண்டு மகளே! வாழ்த்துக்கள்..

    ரா. பொன்னம்பலம்
    ஆசிரியர்

    பதிலளிநீக்கு
  11. நிச்சயம் வேண்டும் மனிதம்.
    மனிததைதொலைத்து மனிதனர்களி தேடும் மனங்களாக மாறிவருகிறது மனிதப்பிறவிகள்..

    அழகிய கருத்துள்ள கவிதை மிக நன்று..

    பாரத்திப்பிரியர்.
    பாரதிகுமார்

    பதிலளிநீக்கு
  12. கவியே....
    யாரோ ஓர் கவிஞர் சொன்னதாக
    அவ்வப்போது மேற்கோள் காட்டியிருக்கிறேன்...
    தங்கள் கவிதைக்கான எனது "கருத்துரை"களிலும்
    தெரிவித்திருக்கிறேன்.
    இன்றுகூட அது இருக்கிறது.....
    "எனது எண்ணங்கள் உனது வரிகளில்" என்பதுதான் அது....

    ஆறு மாதங்களுக்கு முன்
    நான் எழுதிய "மனிதம்" என்ற
    தலைப்பிலான கவிதையில்

    "அன்பும்.. பாசமும்...
    மனிதமும்... மாண்பும்....
    மனிதாபிமானமும்....
    மனிதநேயமும்...
    மரித்துப்போய்......

    காதல் என்ற பெயரில் காமமும்...
    சாதி என்ற பெயரில் வன்முறையும்....
    மதம் என்ற பெயரில் தீவிரவாதமும்...
    கலை என்ற பெயரில் கலாச்சார சீரழிவும்...
    கடவுள் என்ற பெயரில் காமக்களியட்டமும்.....
    அரங்கேறும்போது...
    புனிதமாய்...
    போற்றப்படும்....
    "மனிதம்" ஏதிங்கே...?"
    இந்த என் எண்ணங்கள் அல்லது வரிகள்...
    தங்கள் கவிதையில் பார்த்தபோது........

    பல்லாயிரம் மைல்களுக்கப்பால்
    இருக்கும் தாங்கள் இன்று வடித்த கவிதையில்
    "மனிதம்
    மனிதத்தை
    இணைத்துக்கொள்ள" என்ற வரிகள்
    எனது எண்ணங்கள்.........
    வியந்து போனேன்....

    மேலும்...
    "மீண்டும் வேண்டுமோ" என்ற
    இக்கவிதை முழுதும்...
    சாதியாளருக்கு
    சரியான
    சவுக்கடி...
    சாட்டையடி....
    இனியாவது
    திருந்துமா
    சாதியென்ற "மதம் பிடித்த யானைகள்" ....

    மிகச் சிறப்பான
    சமூக அக்கறையுள்ள கவிதை.....
    மிக்க மகிழ்ச்சி.......

    வாழ்த்துக்கள்.........

    நட்புடன்...
    காஞ்சி முரளி............

    பதிலளிநீக்கு
  13. மனிதம் போற்றுவோம், அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. காஞ்சி முரளி
    தாங்களின்
    கருத்துக்களைக் கண்டு வியந்துபோகிறேன்

    சில சமங்களில்
    மனிதர்களுக்குள் உள்ள ஒற்றுமைகளை
    எண்ணி
    மகிழ்ந்து போகிறேன்.

    நீங்கள் கவிதை எழுதுவீங்களா?
    உங்கள் கவிகளை எதில் பார்க்கலாம்
    உங்களுக்கு பிளாக் எதுவும் இருக்கா?

    தாங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் ஊக்கமளிப்பவைகளாக இருக்கின்றன.

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. மனிதம் மறந்த மனிதர்களுக்கு ஜாதி மதம் பிடிச்சிருக்கு

    நல்லா சொல்லியிருக்கீங்க ...

    பதிலளிநீக்கு
  16. நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  17. sorry!
    நீண்ட (பதில்) கடிதம்.....

    "நீங்கள் கவிதை எழுதுவீங்களா?
    உங்கள் கவிகளை எதில் பார்க்கலாம்
    உங்களுக்கு பிளாக் எதுவும் இருக்கா?" என்ற
    தங்கள் கேள்விக்கு எனது பதில்......

    சுமார் 25 வருடங்களுக்கு முன்
    எனது இளமை காலத்தில்
    கல்லூரி நாட்களில்
    'கவியரசர் கண்ணதாசன்'
    வரிகளால் ஈர்க்கப்பட்டு
    அவர் மறைந்தபோதே
    "கண்ணன் தாசனுக்கு - இக்
    கவிதை தாசனின் இரங்கற்பா" எனும் தலைப்பில் எழுதி,
    என் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரிடம்
    இது சரியா, புதுக் கவிதையாக இருக்கிறதா? எனக் கேட்டு,
    பாராட்டு பெற்ற பின்
    அன்று காதல் கவிதைகள் -
    பின்பு சமூகச் சிந்தனை கவிதைகள் என
    சுமார் 100 கவிதைகளுக்கு மேல்
    எழுதி, "பழைய பனை ஓலை"களாய்
    சேகரித்து வைத்துளேன்.
    காலம் வருமென
    காத்திருக்கின்றேன்.. வெளியிட.....

    இடையில் என் blogger interestல்
    "நாங்களும் கவிதை எழுதுவோமுல்ல
    (இளமை காலத்தில்) -
    இப்போது 'வாழ்கைத் தேடலில்'
    காலங்கள் கடந்து கொண்டிருப்பதால்
    கவிதைகள் படிப்பதோடு சரி!."
    இதுதான் எனது இன்றைய நிலை....

    அலுவலக பணிச் சுமையிலிருந்து
    விடுபட வலையில் தேடியபோது
    தங்கள்
    தெளிந்த "நீரோடை"யில்
    கால் பதித்தேன்...
    பெரும்பாலான
    கருத்துக்கள்,
    கவி வரிகள்,
    எனக்கு உடன்பட்டதாகவும்
    எனக்கு ஏற்புடையதாகவும் -
    சமூகச் சாடலும்
    சமூக அக்கறையும்
    மனிதமும்
    மனிதநேயமும்
    மனிதாபிமானமும்
    இயற்கையாய்
    இருந்ததால்
    தங்கள் "நீரோடை"யில்
    தினமும் கால் பதித்து
    என் கருத்துக்களை
    தெரிவிக்கின்றேன்....

    எனக்கு பிடிக்காத கருத்துக்கள்,
    முரண்பாடான கவிதைகள்
    இருந்தால் அன்று
    எனது கருத்துரைகள் இருக்காது...
    ஏனெனில்
    என் கருத்தை
    யார்மீதும் திணிக்க விரும்புவதில்லை.....

    நட்புடன்......
    காஞ்சி முரளி.......

    பதிலளிநீக்கு
  18. அழகும் அற்புதமும் சேர்ந்த கலவை.

    பதிலளிநீக்கு
  19. மலிக்கா அவர்களுக்கு
    நம்மில் சாதியம் என்பது இந்திய சமூகத்தில்தான் இருக்கிறது என்று இல்லை ... இது உலகம் முழுக்க நிலவி வரும் ஒரு பிரச்சனை...
    பதிவு நன்றாகவே இருந்தது

    பதிலளிநீக்கு
  20. காஞ்சி முரளி அவர்களுக்கு ,
    தங்களது பின்னூட்டம் மிகவும் நன்றாகவே இருந்தது
    தங்களது எண்ணங்களை இந்த

    வளைப்பூவில் பதிவு செய்ய வேண்டும். தங்களது வளைப்பூவின் முகவரியை எனக்கு தெரிவியுங்கள்

    பதிலளிநீக்கு
  21. /சுப்பு கூறியது...
    மிகச்சரியாக சொன்னீர்கள்.

    நான்பட்ட கஷ்டங்களை சொல்லிமாலாது.என்ன செய்ய
    படித்தேன் படிக்கிறேன். பார்ப்போம் விடியுதா என
    /

    நிச்சயம் விடியும் கவலைவேண்டாம் சுப்பு. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

    பதிலளிநீக்கு
  22. அண்ணாமலையான் கூறியது...
    நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்.../

    மிக்கநன்றி அண்ணாமலையாரே..



    ராமலக்ஷ்மி கூறியது...
    மீண்டும் வேண்டும்தான்!

    நல்ல கருத்து.//

    மிக்க நன்றி ராமா மேடம்..

    பதிலளிநீக்கு
  23. குட்டிபிசாசு கூறியது...
    சாதி மட்டுமல்ல. மதமும் தேவையில்லாத ஒன்று தான்..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குட்டிபிசாசே!!!!!!!!!!!!!

    Chitra கூறியது...
    மனிதனை
    மனிதன்
    பிரித்துப் பார்த்தல்
    பாவம்..


    ........சரியா சொல்லி இருக்கீங்க..//

    மிக்க நன்றி சித்ராதோழி

    பதிலளிநீக்கு
  24. புலவன் புலிகேசி கூறியது...
    பாரதி திரும்ப வேண்டாம்..மனிதனிடம் மனிதம் திரும்பினால் போதும்.//

    நிச்சயம் மனிதம் வேண்டும் தோழா திரும்பவேண்டுமென்ற ஆவல்தான்..

    பதிலளிநீக்கு
  25. தியாவின் பேனா கூறியது...
    சகோதரியே உங்களின் கவிதையும் அழகு
    சொன்ன விதமும் அழகு.
    மொத்தத்தில் நீங்கள் எதை எழுதினாலும் நல்லாய்த்தான் இருக்கு
    இறைவன் ஆசி என்றும் கிடைத்து தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..

    சகோதரரே தாங்களின் கவிதைகள் நிறைய எனக்குப்பிடிக்கும்.
    ஒவ்வொருவரிடமும் நிறைய பாடங்கள் கற்கவேண்டும்..

    மிகுந்த சந்தோஷம் தாங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  26. சீக்கிரம் ஒரு புக்கா போடுங்க. எதிர்பார்கிறோம்.

    பதிலளிநீக்கு
  27. அன்பின் சகோதரி

    http://penaamunai.blogspot.com/2010/02/blog-post_21.html

    தாங்களின் ”இனிய பாதையில்” பேனாமுனையில் தேர்வுசெய்துள்ளார்கள் மிகுந்த சந்தோஷம்.

    இன்னும் இன்னும் வளர்ந்து தளைக்க
    இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்களுடன்.

    நட்புடன்
    அன்புச்சாமி

    பதிலளிநீக்கு
  28. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    பாரதி வந்தால், அவருக்கு விழா எடுக்க சாதி சங்கங்கள் முட்டி கொள்ளும்.//

    ஆமால்ல. என்னப்பா செய்வது ?????????

    பதிலளிநீக்கு
  29. ரா. பொன்னம்பலம் கூறியது...
    சாதிகள் ஒழிந்திடவேண்டும் சமத்துவம் வந்திடவேண்டும் ... சாதிகள் ஒழிந்திடவேண்டும்
    சமத்துவம் வந்திடவேண்டும்
    மானிடரய் பிறந்த நாமும்
    மானிடத்தை போற்றிக் காத்திட வேண்டும்

    அன்பாகச் சொன்னால் அனைத்தும் எடுபடும் என்ற கற்றுதல் உனக்குள் உண்டு மகளே! வாழ்த்துக்கள்..

    ரா. பொன்னம்பலம்
    ஆசிரியர்.

    ஆசிரியரின் வருகைக்கும் அழகான கருத்திற்கும் மிக்க நன்றி.
    தங்களைபோன்ற ஆசிரியரே பிள்ளைகளுக்கு பாடம் நடம்போது
    இதுபோன்றவற்றை சொல்லிக்கொடுத்து வழிநடத்த வேண்டுகிறேன்..

    மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே..

    பதிலளிநீக்கு
  30. பாரதிகுமார் கூறியது...
    நிச்சயம் வேண்டும் மனிதம்.
    மனிததைதொலைத்து மனிதனர்களி தேடும் மனங்களாக மாறிவருகிறது மனிதப்பிறவிகள்..

    அழகிய கருத்துள்ள கவிதை மிக நன்று..

    பாரத்திப்பிரியர்.
    பாரதிகுமார்..//


    மிகுந்த வருத்தம்தான் பாரதிக்குமார்.
    இதுபோன்ற மனிதர்கள் என்று மனிதமுள்ளவர்களாக மாறுவார்கள் என்ற எதிர்பார்புடன் நானும்..

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  31. SUFFIX கூறியது...
    மனிதம் போற்றுவோம், அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி ஷபியண்ணா..


    ஹுஸைனம்மா கூறியது...
    :-)))))//

    மிக்க நன்றி ஹுசைன்னம்மா..

    பதிலளிநீக்கு
  32. /நட்புடன் ஜமால் கூறியது...
    மனிதம் மறந்த மனிதர்களுக்கு ஜாதி மதம் பிடிச்சிருக்கு

    நல்லா சொல்லியிருக்கீங்க /

    ஜாதி மதம்பிடிதிருப்பதை எதைக்கொண்டு மாற்றுவது ஜமால்காக்கா...

    /சே.குமார் கூறியது...
    நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி குமார்..

    பதிலளிநீக்கு
  33. /சிம்ம‌பார‌தி கூறியது...
    நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..//

    இந்த வாழ்த்து போதுமா?

    வாங்க பாரதி
    சிம்ம பாரதியை வரவேற்க பாரதியின்
    படைப்புகளை போடவேண்டும் அப்படித்தானே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாரதி..

    பதிலளிநீக்கு
  34. /சுமார் 100 கவிதைகளுக்கு மேல்
    எழுதி, "பழைய பனை ஓலை"களாய்
    சேகரித்து வைத்துளேன்.
    காலம் வருமென
    காத்திருக்கின்றேன்.. வெளியிட/

    நிச்சயம் வெளியிடுங்கள் அப்படியே எனக்கு ஒரு புத்தகம் அனுப்பிவையுங்கள்.
    படைப்புகள் பனை ஓலையாய் இருப்பதைவிட, புத்தகமாக இருந்தால் பொக்கிஷமே. விரைவில் எதிர்பார்க்கிறேன்..

    /எனக்கு பிடிக்காத கருத்துக்கள்,
    முரண்பாடான கவிதைகள்
    இருந்தால் அன்று
    எனது கருத்துரைகள் இருக்காது...
    ஏனெனில்
    என் கருத்தை
    யார்மீதும் திணிக்க விரும்புவதில்லை.....

    நட்புடன்......
    காஞ்சி முரளி......./

    விருப்பு வெருப்பென்பது நம்மைச்சார்ந்தது அதை பிறர்மீது திணிப்பது நாகரீகமற்றதென்பதை தெளிவாய் உணர்ந்துள்ளீர்கள்.

    இருந்தபோதும் இது சரி, இது தவறு,
    என்று மேற்கோள் காட்டுவது மனிதருக்கு மனிதர் செய்யும் சிறு உதவி, தவறாக இருக்கும் பட்சத்தில் அதைதிருத்திக்கொள்ள ஓர் சந்தர்ப்பமாக அமையும் என்பது என்கருத்து..

    பதிலளிநீக்கு
  35. /அலுவலக பணிச் சுமையிலிருந்து
    விடுபட வலையில் தேடியபோது
    தங்கள்
    தெளிந்த "நீரோடை"யில்
    கால் பதித்தேன்...
    பெரும்பாலான
    கருத்துக்கள்,
    கவி வரிகள்,
    எனக்கு உடன்பட்டதாகவும்
    எனக்கு ஏற்புடையதாகவும் -
    சமூகச் சாடலும்
    சமூக அக்கறையும்
    மனிதமும்
    மனிதநேயமும்
    மனிதாபிமானமும்
    இயற்கையாய்
    இருந்ததால்
    தங்கள் "நீரோடை"யில்
    தினமும் கால் பதித்து
    என் கருத்துக்களை
    தெரிவிக்கின்றேன்.//

    இதைவிட வேண்டுமா ஒரு படைப்பாளிக்கு பெருமிதம்.
    என் படைப்புகளால் சிலமனங்களாவது
    நிம்மதி பெறுமெனில் நான் பாக்கியசாலியே!
    தாங்களின் கருத்துக்களிலிருந்தே
    நான் பலபாடங்கள் கற்றுக்கொள்கிறேன்..

    மிக்க நன்றி காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  36. /ஜோதிஜி கூறியது...
    அழகும் அற்புதமும் சேர்ந்த கலவை./

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி..

    பதிலளிநீக்கு
  37. /Bullet மணி கூறியது...
    மலிக்கா அவர்களுக்கு
    நம்மில் சாதியம் என்பது இந்திய சமூகத்தில்தான் இருக்கிறது என்று இல்லை ... இது உலகம் முழுக்க நிலவி வரும் ஒரு பிரச்சனை...
    பதிவு நன்றாகவே இருந்தது/

    உலகலாவிய பிரச்சனையென்றபோதும்,
    நம் மனங்களில் உள்ளது உலகமுழுவதும் உள்ளவர்களுக்கு
    படைப்புகளாச்செல்லும் பட்சத்தில் ஒருசில உள்ளங்களிலாவது சென்றடையாதா? என்கின்ற நப்பாசைதான் மணி..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  38. ஜெய்லானி கூறியது...
    சீக்கிரம் ஒரு புக்கா போடுங்க. எதிர்பார்கிறோம்..//

    யாரை சொல்லுறீங்க என்னையா? முரளியையா?

    முரளியத்தானே நானும் அதைத்தான் சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது