பனிமலையில்
பூபாளம்
கேட்டீர் –அதை
பன்னீர்
புஷ்பங்களாய்
பகிர்ந்தளித்தீர்
பல
காவியங்களைத்
தொகுத்தீர்
பத்தாயிரம்
கவிதைகளுக்கு
மேல்
வடித்தீர்
கல்லாதோர்க்கும்
கவியெழுத
கற்றுக்
கொடுத்தீர்
காவியத்
திலகமென்று
பெயரெடுத்தீர்
முத்
தமிழையும்
மூச்சில்
கொண்டீர்
முதிர்ச்சியிலும்
இளமை
கண்டீர்
பன்னாட்டு
இஸ்லாமிய
இலக்கிய
கழகம்
தந்தீர்
பசுமை
கொஞ்சும்
இனிமையாய்
பல மனங்களில்
நிறைந்தீர்
பிறரை
பாராட்டும்
பண்புகள்
கொண்டீர்
பிறர்
மதிக்கும்
மனிதராய்
உயர்ந்தீர்
வெண்பாக்கள்
கவிதைகள்
புனைந்தீர்-அதில்
வெற்றி
வரிகளையும்
விதைத்தீர்
வரிகளுக்கும்
விளக்கம்
கொடுத்தீர்
வைர
வரிகளையும்
கற்றுக்
கொடுத்தீர்
அற்புதக்
கவியெழுதும்
காவியமே!
அன்பு
மனங்கொண்ட
மனிதநேயமே!
ஆசிகள்
அள்ளித்
தந்திடுங்கள்
ஆண்டவனின்
அருளோடு
வாழ்ந்திடுங்கள்...
இக்கவிதை. இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தலைவர்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிறுவனர். காவியத்திலகம். திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
அவர்களுக்காக நான் எழுதிய சிறு கவிதை.
வளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.
இன்று துபையிலிருந்து தன்தாயகம் செல்லும் அவர்களுக்கு
இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக!
இக்கவிதையை பார்த்தும் தற்போது மெயிலில் பதிலளித்திருந்தார்கள்
இதோ அது
மகளே!
கவிதை படித்தேன்
களிப்புற்றேன்.
நன்றியொடு
வாழ்த்துக்கள்
நவின்றேன்.
இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்
மீண்டும் சந்திப்போம்.
--வாப்பா--
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அன்பு மகளே! உனக்கு கவியெழுத கற்றா தரனும். கவிஞருக்கே கவியெழுத்தும் உனப்பார்த்து பெருமைப்படுகிறேன்
பதிலளிநீக்குஅழகான வரிகள் கோத்துள்ளாய் மிக அருமை வாழ்த்துக்கள்
மிக மிக அருமை வரிகளுக்கும் ஒளிகள் நிறைந்துயிருக்கிறன பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநட்புடன்
தும்பை.கோபி
வளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.
பதிலளிநீக்கு..........உங்களுக்கும் உங்கள் கவிதை குருவுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
ஊருக்குப் போறாங்களோ இன்னிக்கு. கவிதையில் நீங்கள் அவர்களின்மீது வைத்திருக்கும் மதிப்பு தெரிகிறது.
பதிலளிநீக்குநல்லா இருக்கு.
பதிலளிநீக்கு//பத்தாயிரம்
பதிலளிநீக்குகவிதைகளுக்கு
மேல்
வடித்தீர்///
கவிதைக்கு முன்னே
கவிதை எழுதி இக்
கவியுலகத்தில் மற்றுமோர்
கவி(தாயிணி)!நாளை
சரித்திரம்
சரிசமமாய் சொல்லும்
கவிதை படித்தேன்
பதிலளிநீக்குகளிப்புற்றேன்
நன்றி.
romba nalla irukku malikka
பதிலளிநீக்குஒரு
பதிலளிநீக்குமலையை
சிறு
குன்று
புகழ்கிறது
அருமையான கவிதை மகளே!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
முத்தமிழையும் மூச்சில் கொண்டீர்
முதிர்ச்சியிலும் இளமை கண்டீர்
என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.
உங்கள் திறமை மேலும் மெருகேற இறையை இறைஞ்சுகிறேன்.
ஷேக் சிந்தா மதார்
சகோதரி திருமதி மலிக்கா அவர்களே
பதிலளிநீக்குதீர் தீர் என முடித்தீர்
காவியத்திலகத்திற்கோர்
அற்புதமான கவிதை வடித்தீர்
நற்கவிகளை மேலும் படைப்பீர்
என் வாழ்த்துக்களைப் பிடிப்பீர்
With best regards
Kamal
Dubai United Arab Emirates
Mob: 050 8444097
சிந்தா மதாரா இவர்
பதிலளிநீக்குஇல்லை
கவிதை சிந்தும் மதார்
அன்பைச் சிந்தும் மதார்
With best regards
Kamal
Photo Super!
பதிலளிநீக்குCongratulations!
Keep it up!
கொட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் கொட்டுப்பட வேண்டும் என்பார்கள் ஆனால் கொட்டியது மோதிரக் கை அல்ல
பதிலளிநீக்குதிருநபி காவியம்படைத்த காவியக் கை
அதனால் எல்லாவல்ல இறைவனின் அருளால் இன்னும் மென்மேலும் சிறந்து வளர்ந்து வருவீர்கள்.இன்ஷா அல்லாஹ்.
//சிந்தா மதாரா இவர்
பதிலளிநீக்குஇல்லை
கவிதை சிந்தும் மதார்
அன்பைச் சிந்தும் மதார்//
அன்பை சிந்தும் மதார் அல்ல மதர்.
மிக மிக அருமை
பதிலளிநீக்குஅருமை வரிகள் மலிக்கா
பதிலளிநீக்குYou are very very lucky girl.
பதிலளிநீக்குமனம்
பதிலளிநீக்குமகிழ்ந்தேன்.
வியந்தேன்.
நெகிழ்ந்தேன்.
தங்கச்சி!
பிரியமுடன்
திருச்சி சையது.
எளிய நடையில் கவியழகு மிகுந்த வாழ்த்து மடல்கள்.
பதிலளிநீக்குkavikke kavithai punaiyum maka kaviyaka irukkireekal.vazthukal sakothari.
பதிலளிநீக்குவசிஷ்டனுக்கு
பதிலளிநீக்குஏகலைவன் (மலிக்காவின்)
குரு காணிக்கை
சரியா.............
வாழ்த்துக்கள்......
நட்புடன்............
காஞ்சி முரளி................
'''இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக'''
பதிலளிநீக்குநல்ல துவா...