நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவனமாக இரு!


கண்கள் இணைய
காதலால்
கைகள் இறுக
கடற்கரையெங்கும்
கால்கள் அலைய

தொலைப்பேசியின்
தொடர்போடு
தெருவெல்லாம்
திரிந்து
தியேட்டரின்
மூலையில்
தொடங்கும்

அத்துமீறும்
அதிகாரம்
சிலசமயம்
அரியணையிட்டு
வயிற்றில்
அடங்க

வேறு
வழியற்று
வீட்டைவிட்டு
வெளியேற

கையிருப்பு
இருந்தவரை
காலம் கனிய
மிச்சமில்லாமல்
மொத்தமும்
கரைய

இறுகிய
கைகள்
இறுக்கத்தை
தளர்த்த

இணைத்த
விழிகளோ
இணைந்த
விழிகளை
விட்டு
விலகிச்சொல்ல

மன்றாடிக்
கேட்டும்
கும்மாளமிட்ட
காதல்
கொஞ்சமும்
மசியமறுப்பதால்

மரணத்தைதேடும்
மனங்கள்
சிலசமயம்
மானத்தை
தொலைக்கும்
உடல்கள்

பெற்றோரின்
பேச்சைமீறி
படிதாண்டும்
பிள்ளைகளே!

காதலென்ற
பெயரில்
களிப்பாட்டம்
நடத்தும்
காலமிது

காதல்
வென்றபோதும்
காதலர்கள்
தோற்கும்
மாயமது

கலங்கிடும்
முன்னே
கவனமாயிரு
கண்ணே!
காதலென்ற
காதலே!

கலங்கியப்
பின்னே
கவலைப்பட்டு
ஆவதொன்று-
மில்லை

அன்புள்ள
பெண்ணே
அதேபோல்
ஆணே!!!!!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

30 கருத்துகள்:

 1. அல்லாரும் கவனமா இருங்கப்பா..நன்றி மலிக்கா

  பதிலளிநீக்கு
 2. நிஜத்தை நிறையபேர் ஏற்றுக்கொள்வதில்லை மலிக்கா
  எதைச்சொன்னாலும் பாழுங்கிணற்றில் விழுவேன் என அடம்பிடிக்கும் மக்களை என்ன செய்ய சோல்லிக்கொண்டேயிப்போம் சொல் காதில் ஏறும்வரை

  அறிவுடை நம்பி..

  பதிலளிநீக்கு
 3. காதல் மலிவாகிவிட்டது கால்கிலோ என்ன விலை

  பெயர் சொல்லவா வேண்டாமா

  சரி சொல்லிடுரேன்
  காதலில் தோற்தவன்

  பதிலளிநீக்கு
 4. "மரணத்தைதேடும்
  மனங்கள்
  சிலசமயம்
  மானத்தை
  தொலைக்கும்
  உடல்கள்.....

  பெற்றோரின்
  பேச்சைமீறி
  படிதாண்டும்
  பிள்ளைகளே!"


  தன் குழந்தைக்கு
  எது கிடைத்தால்
  எதிர்காலம் சிறக்கும்
  என்பதை பெற்றோர் அறிவர்
  அதனை மீறும்
  இன்றைய
  இளைய தலைமுறைக்கு
  இவ்வரிகளே
  சாட்டையடி...........

  தங்களின் இக்கவிதையில்
  சமூக அக்கறை...
  சமூகச் சாடல்......
  மிகவும் வெளிப்படாய்
  தெரிகிறது......

  மிக்க மகிழ்ச்சி....

  வாழ்த்துக்கள்.......

  நட்புடன்.....
  காஞ்சி முரளி

  பதிலளிநீக்கு
 5. //பெற்றோரின்
  பேச்சைமீறி
  படிதாண்டும்
  பிள்ளைகளே!

  காதலென்ற
  பெயரில்
  களிப்பாட்டம்
  நடத்தும்
  காலமிது //

  காதலிக்கும் நண்பர்களே..கவனமாக காதலை கொண்டாடுங்கள்.. ஆசை வார்தையில் மயங்கிவிடாதிர்கள்..

  பதிலளிநீக்கு
 6. //இறுகிய
  கைகள்
  இறுக்கத்தை
  தளர்த்த//


  வரிகள் நிதர்சனத்தை படம் பிடித்து காண்பிக்கறது, அழகிய அறிவுறுத்தல்.

  பதிலளிநீக்கு
 7. தொலைப்பேசியின்
  தொடர்போடு
  தெருவெல்லாம்
  திறிந்து (திரிந்து)
  தியேட்டரின்
  மூளையில் (மூலையில்)
  தொடங்கும்.......

  sorry....
  mistakes...
  corrected with (......)

  natpudan.......
  Kanchi Murali

  பதிலளிநீக்கு
 8. இன்றைய காதலின் நிலையைத் தெளிவாச் சொல்லிருக்கீங்க மலிக்கா.

  //காதல்
  வென்றபோதும்
  காதலர்கள்
  தோற்கும்
  மாயமது//

  பதிலளிநீக்கு
 9. சரியான நெத்தியடி கலக்கிட்டீங்க மலிக்கா. என்னைபோன்றவர்களுக்கு எத்தனைச்சொன்னாலும் கேட்கமாட்டேங்குதே புத்தியும் மனசும்.

  அடிபட்டும் மீண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  அங்கேயே அசிங்கப்பட்டுக்கொண்டேஏஏஏஏஏஏஏஏ. சே என்ன வாழ்க்கையென்றுயிருக்கு.

  உபதேசத்திற்கு மிக்க நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 10. இதுதான் இன்றைய நிஜம்.

  அழகா சொல்லியிருக்கீங்க மலிக்கா.

  இறுகிய
  கைகள்
  இறுக்கத்தை
  தளர்த்த

  இணைத்த
  விழிகளோ
  இணைந்த
  விழிகளை
  விட்டு
  விலகிச்சொல்ல

  அருமை மலிக்கா!

  பதிலளிநீக்கு
 11. அருமை அருமை மல்லிக்கா.
  ஒவ்வொரு பந்தியிலயும் அழகா சொல்லியிருக்கீங்க.
  கேட்டுக்குவாங்களா !

  பதிலளிநீக்கு
 12. கலங்கியப்
  பின்னே
  கவலைப்பட்டு
  ஆவதொன்று-
  மில்லை


  ...........Good message! கவிதை, காலத்துக்கேற்ற அறிவுரையுடன்.

  பதிலளிநீக்கு
 13. inayaththil kathalar thinaththai aka oko endru anaivarum thookki kodadum intha thinaththil kathalin unmai nilaiyai sattai adiyaai solli irukkireerkal.vazthukal sakothari.

  பதிலளிநீக்கு
 14. எல்லாரும் காதல வாழ்த்தி எழுதுற நேரத்துல நீங்க ஒரு அளுதாங்க கொஞ்சம் புள்ளங்க உஷாரா
  இருக்குற மாதிரி எழுதி இருக்கீங்க...ரொம்ப நல்ல எச்சரிக்கை...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. பாடம் புகட்டும் அருமையான வரிகள்!!நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. அன்பு உள்ளங்களுக்கு. கணினி பிராப்ளமாக இருப்பதால் உடனுக்குடன் பதில் போடமுடியவில்லை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்..

  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 17. காதலிக்காத மனிதனும் இல்லை. காதலிக்காதவன் மனிதனே இல்லை.
  காதல் என்பது இயற்கையாய் எப்படியோ மனதிற்குள் புகுந்து விடுகின்றது.
  காதல் தவறென்று சொல்லலாகாது. ஆனால் கவனமாய் இரு என்று சொல்லலாம். அதை ஆழமாக அழகாக உ(ரை)ரக்க சொல்லியிருப்பது மிக அருமை...


  இவன்,
  தஞ்சை.வாசன்

  பதிலளிநீக்கு
 18. கேட்டுக்க வேண்டிய கவிதை... பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 19. /sorry....
  mistakes...
  corrected with (......)

  natpudan.......
  Kanchi Murali/

  கேட்கவேண்டியது நான். இருந்தாலும் கேட்கப்போவதில்லை நட்புக்குள் அதெல்லாம் வேண்டாமென நினைக்கிறேன்.

  எனக்கு மிகுந்த மகிழ்சியாக இருக்கு ஏந்தெரியுமா?

  என்படைப்புகளை மேலோட்டமாக படித்துவிட்டு கருத்துக்கள் சொல்வதைவிட
  உற்றுகவனித்து அதில் ஒளிந்திருக்கும்
  பிழைகளை எனக்கு உணர்துவதில்தான் ஆனந்தம்.

  அவசரத்தில் சில நேரம்
  தட்டச்சில் சிலநேரம்
  அறிந்து சிலநேரம்
  அறியாமல் சிலநேரமென
  எழுத்துப்பிழைகள்
  என்னையறியாமல் வந்துவிடுகிறது

  அதை உணர்த்தும்போது உணர்வுக்குவருகிறேன். என் படைப்புகளில் பிழைகளிருப்பின்
  அல்லது
  எழ் எழுத்துக்களில் பிழைகளிருப்பின்
  நிச்சயம் சுட்டிக்காட்டுங்கள்.
  அப்போதுதான் என் தவறு எனக்கேதெரியும்.

  மிகுந்த மகிழ்ச்சி முரளி. நீங்க பெரியவங்களா? சிறியவங்களா?
  பெயர்சொல்லி அழைப்பது சரியா?

  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 20. அன்பு சோதரி........
  அன்புடன் மலிக்கா........

  "கலைகளுக்காக" எனும்

  தலைப்பிலான தங்கள் கவிதையின் கருத்துரையில்

  நான் சிறு கருத்துப் பிழையினைச்

  சுட்டிக்காட்டியபோது

  பின்வரும் கருத்தை தெரிவித்திருந்தேன்...

  அது....  "நன்றி மலிக்கா!

  எனக்கு சரியாகப்பட்டதால்

  என் கருத்தை/வரியை

  எடுத்து சொன்னேன்...

  தங்கள் மீது திணிக்கவில்லை............  ஆனால்

  எளியனாகிய

  என் வரியினையும்

  தங்கள் கவிதையில்

  சேர்ப்பதற்கு

  வானளவிற்கு

  விசால மனம் வேண்டும்............

  இந்நற்பண்பு ஒன்றே

  உங்களை வானளவிற்கு உயர்த்தும்........" என்று  ஆனால் இன்று

  தங்கள் கருத்துரையில்.....  "அவசரத்தில் சில நேரம்
  தட்டச்சில் சிலநேரம்
  அறிந்து சிலநேரம்
  அறியாமல் சிலநேரமென
  எழுத்துப்பிழைகள்
  என்னையறியாமல் வந்துவிடுகிறது

  அதை உணர்த்தும்போது உணர்வுக்குவருகிறேன்.

  என் படைப்புகளில் பிழைகளிருப்பின்
  அல்லது
  எழ் எழுத்துக்களில் பிழைகளிருப்பின்
  நிச்சயம் சுட்டிக்காட்டுங்கள்.
  அப்போதுதான் என் தவறு எனக்கேதெரியும்" என்று

  குறிப்பிட்டிருகிறீர்கள்..........  இதைத்தான்.......

  "இந்நற்பண்பு" என்று அன்றே குறிப்பிட்டிருந்தேன்....

  இப்பண்பு எல்லோருக்கும் இருப்பதில்லை.....

  மிகச்சிலருக்கு மட்டுமே.....

  அதில் ஒருவர் நீங்கள்........

  இப்பண்பே உங்களை வானளவிற்கு உயர்த்தும்... .  அடுத்த தங்கள் கேள்விக்கு பதில்.....  நட்புடன்.....

  என நான் குறிப்பிடுவதால்

  என்னை பெயரிட்டே அழைக்கலாம்.........  வாழ்த்துக்கள்.......  நட்புடன்.....

  காஞ்சி முரளி..........

  பதிலளிநீக்கு
 21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 22. நட்பான முரளி அவர்களுக்கு.

  சந்தோஷம் தங்களின் கருத்துக்கள் கண்டு நெகிழ்ந்துபோகிறேன்...

  நேரம் கிடைக்கும்போது.
  ”இனிய பாதையில்” என்ற என்னுடைய இன்னொரு தளத்தையும் பார்வையிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 23. எல்லா வரிகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.பிரமாதம்.
  சொல்ல வார்த்தைகளே இல்லை.அத்தனையும் உண்மைகளே.
  காலத்தோடே நகர்த்தியிருக்கிறீங்க.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. எல்லா வரிகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.பிரமாதம்.
  சொல்ல வார்த்தைகளே இல்லை.அத்தனையும் உண்மைகளே.
  காலத்தோடே நகர்த்தியிருக்கிறீங்க.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது