காலையும் மாலையும்
கதிரவனே!
காலை கதிரின்
ஒளியாகி
கண்களுக்குள்
குளிர்கின்றாய்!
இருவிழிக்குள்
இறங்கி
இதயத்தை
இழுக்கின்றாய்
மலைச்
சாரலில்
மல்லிகைப்பூ
தொடுக்கின்றாய்
மலையருவியின்
மேல்
மண்டியிடுப்
படுக்கின்றாய்
மாலை
வந்தவுடன்
மெல்ல மெல்ல
மறைகின்றாய்
பள்ளத்தாக்கில்
ஒளிந்துகொண்டு
பதுங்கிப் பதுங்கிப்
பார்கின்றாய்
பாவைகளின்
பார்வைகளுக்கு
பசும்பொன்னாய்
பரவுகின்றாய்
இன்று போய்
நாளை வா
அது உன்
வேலையல்லவா
காலை
மாலை வந்ததும்
சாரளம் வழியே
சரம் சரமாய்
கவிதைகள் தா.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை.
பதிலளிநீக்கு//சாரளம் வழியே
சரம் சரமாய்
கவிதைகள் தா.//
அவ்வாறே தர வாழ்த்துக்கள்!
நன்றாக உள்ளது உங்கள் கவி குட்டி குட்டி வரிகள்
பதிலளிநீக்குநன்றாக உள்ளது உங்கள் கவி குட்டி குட்டி வரிகள்
பதிலளிநீக்குமலைச்
பதிலளிநீக்குசாரலில்
மல்லிகைப்பூ
தொடுக்கின்றாய்
.......very good lines.
சூப்பரா இருக்கு..
பதிலளிநீக்கு//காலை
பதிலளிநீக்குமாலை வந்ததும்
சாரளம் வழியே
சரம் சரமாய்
கவிதைகள் தா.//
இப்படித்தான் தினமும் தருகிறீர்களா?
அருமை அருமை
பதிலளிநீக்குஇதய(த்)தை
பதிலளிநீக்குமண்டியி(ட்) டுப்
ப(ள்ள)த்தா(க்)கில்
மேற்சொன்ன வார்த்தைகளில்
(within brackets)
சின்ன சின்ன spelling mistakes...
மற்றபடி
குளிர்கின்றாய்!....
இழுக்கின்றாய்.......
தொடுக்கின்றாய்......
படுக்கின்றாய்.....
மறைகின்றாய்......
பார்கின்றாய்.......
பரவுகின்றாய்..........
வரிகளின் முடிவில் நன்றாய்........
வாழ்த்துக்கள்.....
நட்புடன்.....
காஞ்சி முரளி.............
அட ஆதவனுக்கே கவிதையா, அழகுதான் :))
பதிலளிநீக்குஉதிக்கும் சூரியனைச் சொல்றீங்களா, அல்லது உதயசூரியனைச் சொல்றீங்களா? பயப்படாதீங்க, சும்மாதான்.. ;-)
பதிலளிநீக்கு//பல்லத்தாங்கில்//
பள்ளத்தாக்கில்??
super/ malai saaralil mallaikai thotukkiraai/mika arumaiyaaka thotuththu ulleerkal.
பதிலளிநீக்கு