நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலைக்காக!


அடி
வியப்பெண்ணே
உன்னையுமா
விட்டுவைக்கவில்லை

உலகம்

ஓவியத்தில்கூட

ஒளிவு மறைவு
வேண்டாமென்கிறது

ஒட்டுத்துணி

கலைக்காகத்தானே

என்று
கலைந்தெறிப்படுகிறது

கன்னியமான ஆடை

அசந்துபோய் பார்க்கிறது
அற்ப உலகம்
ஆதாம் ஏவாளின்

அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால

கலையழகியை

ஆண்டவன் 
கொடுத்த

அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக

காவுகொள்ளப்படுகிறது
கொடுக்கப்படுகிறது
கற்பும் மானமும்
காற்றில் பறக்க....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

28 கருத்துகள்:

 1. மல்லிக்கா...சுருக்கமாய்
  அழகான கவிதையில் உங்கள் ஆதங்கம்.மாறுமா !

  பதிலளிநீக்கு
 2. //ஆண்டவன் கொடுத்த
  அற்புதபெண்ணழகு
  கலைகளுக்காக
  காவுகொள்ளபடுகிறது
  கற்பும் மானமும்
  காற்றில் பறக்க....// அழகிய வரிகள் அக்கா

  பதிலளிநீக்கு
 3. மலிக்காவின் எண்ண‌த்தின் எதிரொலியோ இக்கவிதை?அருமை!!

  பதிலளிநீக்கு
 4. சரியான பார்வை...
  தொடர்ந்து எதிர்பார்கிறேன்..

  பதிலளிநீக்கு
 5. ஓவியங்களை கண்டதும், கருத்து மிக்க கவிதை பிரளயம். அருமை.

  பதிலளிநீக்கு
 6. ஆதங்க வெளிப்பாடாய் ஒரு அருமைக் கவிதை. பெண்களின் நிலை ஓவியத்தில் கலைநயமிருந்தாலும் பார்க்கும் கண்ணால் கொச்சைப் படுத்தப் படுகிறது.

  பதிலளிநீக்கு
 7. "ஆண்டவன் கொடுத்த
  அற்புதபெண்ணழகு
  கலைகளுக்காக
  காவுகொள்ளபடுகிறது
  கற்பும் மானமும்
  காற்றில் பறக்க...."

  கலைகளுக்காக
  காவு
  'கொள்ளப்படுகிறதா' அல்லது
  கொடுக்கப்படுகிறதா
  இதில் எந்த வார்த்தை சரி!

  பெண்ணினத்தின் துதுவராய்
  தங்கள் வரிகளை
  அப்படியே
  ஆமோதிக்கிறேன்.... மலிக்கா

  வாழ்த்துக்கள்.....

  நட்புடன்..........
  காஞ்சி முரளி................

  பதிலளிநீக்கு
 8. நல்ல கவிதை. அற்புதம் மலிக்கா. இது குறித்து நான் ஒரு கருத்து சொல்ல நினைக்கின்றேன். ஆனால் உங்கள் இடுகையில் சொன்னால் அது தேவை இல்லாத பிரச்சனைகளில் கொண்டு விடும் ஆதலால் சொல்லவில்லை. கலை என்ற பெயரில் கொலை செய்கின்றார்கள். அது மனிதர்களின் மன உணர்வுகளைக் கூட. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. /சே.குமார் கூறியது...
  நல்ல கவிதை/

  மிக்க நன்றி குமார் சார்..

  பதிலளிநீக்கு
 10. /கோமதி அரசு கூறியது...
  அருமையான ஆதங்க கவிதை/

  வாங்க கோமதி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. /ஹேமா கூறியது...
  மல்லிக்கா...சுருக்கமாய்
  அழகான கவிதையில் உங்கள் ஆதங்கம்.மாறுமா !/

  மாறனும் என்றுதான் ஆசை.
  மிக்க நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 12. S.A. நவாஸுதீன் கூறியது...
  ரொம்ப நல்லா இருக்கு./

  மிக்க நன்றி நவாஸண்ணா..

  / Mrs.Faizakader கூறியது...
  //ஆண்டவன் கொடுத்த
  அற்புதபெண்ணழகு
  கலைகளுக்காக
  காவுகொள்ளபடுகிறது
  கற்பும் மானமும்
  காற்றில் பறக்க....// அழகிய வரிகள் அக்கா./

  மிக்க நன்றி பாயிஜா..

  பதிலளிநீக்கு
 13. /ஸாதிகா கூறியது...
  மலிக்காவின் எண்ண‌த்தின் எதிரொலியோ இக்கவிதை?அருமை!!/

  ஆமாக்கா எதிரொலிக்கிறது எங்காவது கேட்கட்டுமேன்னுதான்க்கா.. நன்றிக்கா

  பதிலளிநீக்கு
 14. /தர்மா கூறியது...
  சரியான பார்வை...
  தொடர்ந்து எதிர்பார்கிறேன்../

  உங்கள் எதிர்ப்பார்ப்பதுபோல் முடிந்தவரை
  எழுதுகிறேன்.
  முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,..
  sarusriraj கூறியது...
  very nice malikka fromt page very nice./

  நன்றி சாரூக்கா...

  பதிலளிநீக்கு
 15. /அண்ணாமலையான் கூறியது...
  புரிய வேண்டியவங்களூக்கு புரிஞ்சா சரி//

  புரிந்திடனும்.. மிக்க நன்றி அண்ணாமலையாரே..

  பதிலளிநீக்கு
 16. / Madurai Saravanan கூறியது...
  nalla karuththu . kavithai karpu paripokavillai , varikal kaparrukirathu/

  மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி சரவணா..

  பதிலளிநீக்கு
 17. / Chitra கூறியது...
  ஓவியங்களை கண்டதும், கருத்து மிக்க கவிதை பிரளயம். அருமை/

  மிக்க மகிழ்ச்சி சித்ரா டீச்சர்.

  பதிலளிநீக்கு
 18. /புலவன் புலிகேசி கூறியது...
  ஆதங்க வெளிப்பாடாய் ஒரு அருமைக் கவிதை. பெண்களின் நிலை ஓவியத்தில் கலைநயமிருந்தாலும் பார்க்கும் கண்ணால் கொச்சைப் படுத்தப் படுகிறது.

  அரைகுறை நிர்வாணம்கூட கலையா புலி.
  காலம் அப்படிபோய்க்கொண்டிருக்கிறது என்னசெய்ய சரியா நண்பா..

  பதிலளிநீக்கு
 19. Kanchi Murali கூறியது...
  "ஆண்டவன் கொடுத்த
  அற்புதபெண்ணழகு
  கலைகளுக்காக
  காவுகொள்ளபடுகிறது
  கற்பும் மானமும்
  காற்றில் பறக்க...."

  கலைகளுக்காக
  காவு
  'கொள்ளப்படுகிறதா' அல்லது
  கொடுக்கப்படுகிறதா
  இதில் எந்த வார்த்தை சரி!

  பெண்ணினத்தின் துதுவராய்
  தங்கள் வரிகளை
  அப்படியே
  ஆமோதிக்கிறேன்.... மலிக்கா

  வாழ்த்துக்கள்.....

  நட்புடன்..........
  காஞ்சி முரளி................/


  கலைகளுக்காக
  காவு
  கொள்ளப்படுகிறது / தானாகவும்
  கொடுக்கப்படுகிறது/பிறருக்காவும்

  இரண்டுமே சரிதான் முரளி
  இப்போது இரண்டையுமே கவிதையில் இணைத்துவிட்டேன்.

  தாங்களின் நட்புக்கு மிகுந்தமகிழ்ச்சி
  மிக்கநன்றி..

  பதிலளிநீக்கு
 20. /பித்தனின் வாக்கு கூறியது...
  நல்ல கவிதை. அற்புதம் மலிக்கா. இது குறித்து நான் ஒரு கருத்து சொல்ல நினைக்கின்றேன். ஆனால் உங்கள் இடுகையில் சொன்னால் அது தேவை இல்லாத பிரச்சனைகளில் கொண்டு விடும் ஆதலால் சொல்லவில்லை. கலை என்ற பெயரில் கொலை செய்கின்றார்கள். அது மனிதர்களின் மன உணர்வுகளைக் கூட. நன்றி/

  திவாகர்சார் /கலை என்ற பெயரில் கொலை செய்கின்றார்கள். அது மனிதர்களின் மன உணர்வுகளைக் கூட/ இதுமிகச்சரி. இதைசொன்னால்தான் கலையை ரசிக்கதெரியாதவர்கள் என்று சொல்லிவிடுவார்கள் இல்லையா சார்
  நீங்கள் பிறரின் மனதை நோகடிக்காதவர்போல் தெரிகிறது .

  தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 21. நன்றி மலிக்கா!

  எனக்கு சரியாகப்பட்டதால்
  என் கருத்தை/வரியை
  எடுத்து சொன்னேன்...
  தங்கள் மீது திணிக்கவில்லை............

  ஆனால்
  எளியனாகிய
  என் வரியினையும்
  தங்கள் கவிதையில்
  சேர்ப்பதற்கு
  வானளவிற்கு
  விசால மனம் வேண்டும்............
  இந்நற்பண்பு ஒன்றே
  உங்களை வானளவிற்கு உயர்த்தும்........

  மேலும்... மேலும்...
  வளர வாழ்த்துக்கள்............

  நட்புடன்..........
  காஞ்சி முரளி.............

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது